Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறிலங்காவின் இரு பிரதான பெற்றோலிய எரிபொருள் களஞ்சியங்கள் மீது வான்புலிகள்தாக்குதல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Sri Lanka rebels in new air raid

Residents say they heard at least two powerful blasts in Colombo

Tamil Tiger rebels have carried out an air raid on targets in and around Sri Lanka's capital, Colombo.

Two fuel facilities were bombed in what the rebels said was in response to an army strike on their positions.

One gas storage depot was set ablaze, officials said. It is not clear if there were any casualties.

Authorities turned off Colombo's power, as large crowds gathered to watch Sri Lanka play Australia in cricket's World Cup final.

Hours after the attack, Sri Lankan Air Force jets pounded Tiger-held areas in an effort to destroy their aircraft.

During the raid on the capital, government troops fired anti-aircraft guns and cut power to Colombo, its airport and an adjoining army base.

The public had been warned to be on guard after the Tigers unveiled their own "air force" with two deadly aerial bombings in the space of a month.

Anti-aircraft fire

Tiger military spokesman Rasiah Ilanthirayan said that two squadrons of what he called the Tamil Eelam air force took part in the raid late at night.

I heard terrible explosions and I saw red sparks

Josef Penkava

Witness

He said two fuel facilities were bombed, and that the pilots returned safely after the mission.

The authorities said one gas storage facility was set ablaze in the raid, but the fire was quickly brought under control.

A state petroleum building was also hit, though the extent of the damage was not immediately known.

A Sri Lankan government minister later described the raid as failure.

Colombo residents said they heard at least two powerful explosions in the city.

"I heard terrible explosions and I saw red sparks flying upwards from the ground and I heard shooting," Josef Penkava told the BBC News website.

Many residents were watching the Sri Lankan national cricket team play Australia in the World Cup final when the army responded with anti-aircraft guns and the city was blacked out.

"We were watching the match when the lights went off. Within minutes the night sky was brightened with anti-aircraft fire," Shivantha Fernandopulle said.

"After about 30 minutes the firing ceased. After a lull of about an hour there was a second round of firing. A plane could be seen flying westwards towards the Indian Ocean."

There are no reports of damage following the air force raid into Tiger territory.

The BBC's Roland Buerk in Colombo said destroying the Tigers' aircraft and jungle airbases has become the number one priority of the Sri Lankan Air Force.

Shattered truce

In March, the Tigers carried out their first aerial attack on the Colombo air base, killing three air force personnel and injuring 16 other people.

Rebels are believed to have smuggled light aircraft in pieces

The Tigers later released pictures of a plane - a two-seater Czech Zlin light aircraft adapted to carry bombs.

A second aerial bombing, of a northern military complex last Tuesday, killed six soldiers.

Last Thursday, Colombo's airport was shut down and anti-aircraft guns were fired after reports of unidentified aircraft approaching the capital. That incident proved to be a false alarm.

Experts say the Tigers could have as many as five light aircraft, smuggled into the country in pieces to be assembled in jungle bases.

Both the Tigers and the military are, officially, still observing a 2002 ceasefire which has become meaningless in practice.

Violence began to increase after the 2005 election of President Mahinda Rajapakse. Since then about 4,000 people have been killed.

The Tigers are fighting for a Tamil homeland in the north and east of the island.

More than 64,000 people have died since the civil war began in the early 1980s.

--------------------------------------------------------------------------------

http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/6604645.stm

  • Replies 70
  • Views 22k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

மிகமிக சந்தோசமான செய்தி

தந்ததை நாம் வைத்திருப்பதில்லை

திருப்பிக்கொடுக்கும் கைகளைப்பலப்படுத்துவோம்

  • கருத்துக்கள உறவுகள்

இப்பதான் தெரியும் எங்கட சின்னஞ்சிறுசுகள் எப்படி எல்லாம் விமானச்சத்தம் கேட்டு பயந்து ஓடி இருக்குங்கள்.

எப்படி மன ரீதியாக பாதிக்கப்பட்டு இருக்குங்கள் என்று.போர்ச்சன்னதம் கொன்டவங்களுக்கு.

இப்பதான் தெரியும் எங்கட சின்னஞ்சிறுசுகள் எப்படி எல்லாம் விமானச்சத்தம் கேட்டு பயந்து ஓடி இருக்குங்கள்.

எப்படி மன ரீதியாக பாதிக்கப்பட்டு இருக்குங்கள் என்று.போர்ச்சன்னதம் கொன்டவங்களுக்கு.

23 வருடங்களுக்கு முன்னால் ஜூலை கலவரத்தின் நான்காவது நாள் - வியாழக்கிழமை புலிகள் கொழும்பு வந்து விட்டார்கள் என்றவுடன் பெரும்பான்மையினர் காலிவீதியால் வாகனங்களிலும் ஓட்டமாகவும் ஓடியதை பார்த்தவன் நான்.

அகதிமுகாமில் இருந்த எங்களிடம் வந்து தன்னை காப்பாற்ரச் சொல்லி மன்றாடின பொலிஸ்காரன்..

அவர்களில் Ranasinghe என்றவர்களை Ran Singhe (ஓடின சிங்கங்கள்)என்று வெளிநாடுகளில் இருந்த அவர்களுடைய ஆட்களே பகிடி பண்ணுவார்களாம்..

அன்று அது வதந்தி.. இன்று அது நிஜம்

:angry:

Edited by Ponniyinselvan

எண்ணைக்குதங்களின் மீதான தமிழீழ வான்படையின் தாக்குதலால் சிறிலங்கா இராணுவத்தின் முதுகெலும்பு முறிக்கப்பட்டுவிட்டது. இதற்கு மகிந்தன் அன்ட் கொம்பனி பத்துப்போட்டு சரிசெய்யுமுன்னர் தமிழீழ விடுதலைப்புலிகள் நினைத்தால் உடனடியாக ஒரு கலக்கு கலக்கலாம். ஏனெனில் எரிபொருள் இல்லாமல் சிறிலங்கா இராணுவத்தால் போரிடமுடியாது.

எண்ணைக்குதங்களின் மீதான தமிழீழ வான்படையின் தாக்குதலால் சிறிலங்கா இராணுவத்தின் முதுகெலும்பு முறிக்கப்பட்டுவிட்டது. இதற்கு மகிந்தன் அன்ட் கொம்பனி பத்துப்போட்டு சரிசெய்யுமுன்னர் தமிழீழ விடுதலைப்புலிகள் நினைத்தால் உடனடியாக ஒரு கலக்கு கலக்கலாம். ஏனெனில் எரிபொருள் இல்லாமல் சிறிலங்கா இராணுவத்தால் போரிடமுடியாது.

மூன்று தாக்குதல்கள் இலக்கு தவறாமல் நடத்தி விட்டு திரும்பியுள்ளார்கள். மிக சந்தோசமான, விடயமும், நாம் பெற்ற அவலத்தை இப்போ அவர்களும் அனுபவிக்கும் நிலையில்.

எல்லாவற்றுக்கும் மேலாக திறம்பட செய்து முடிக்கும் போராளிகளின் திறமை எல்லாவற்றையும் பாராட்ட வார்த்தைகள் இல்லை.

ஆனால் சிவப்பில் காட்டியுள்ள உங்கள் கூற்று அதீதமாக/ மிகையான கூற்று என்றே நினைக்கிறேன். எண்ணேய் குதங்கள் தாக்கப்பட்டது உண்மை. சேதம் விளைந்ததும் உண்மை. அதனால் ஏற்பட்ட உளவியல் தாக்கமும் பெரிது. ஆனால் மிகையான கற்பனைகளை அல்லது கூற்றுகளை சொல்லி சந்தோசப்படுவதால் ஏதுமில்லை.

Edited by KULAKADDAN

கொலண்ணாவல எரிபொருள் குதங்களை பாருங்கள்.

இன்று காலை தமிழீழ விமானங்கள் இந்த குதங்களில் சிலதiயே குண்டு வீசி

தகர்தெறிந்தனர்.

பல சேதங்களுடன் காணப்படுவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இங்கு நடந்த இழப்புக்களை அரசு டூடி மறைப்பதாக செய்தியாளர்கள் தெரிவித்தன.

http://www.freewebs.com/pratheepan14/newsintamil.htm

Edited by vanni mainthan

கிளிநொச்சித் தாக்குதலுக்குப் பதிலடிதான் எண்ணெய்க் குதங்களின் தாக்குதல்: இளந்திரையன்.

கிளிநொச்சியில் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சிறிலங்கா வான்படையினர் நடத்திய வான்தாக்குதலுக்குப் பதில் தாக்குதல்தான் சிறிலங்காவின் எண்ணெய்க் குதங்களின் மீதான தாக்குதல் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஏ.எஃப்.பி. செய்தி நிறுவனத்துக்கு இளந்திரையன் அளித்த நேர்காணலில்,

கிளிநொச்சி பிரதேசத்தில் சிறிலங்கா வான்படையின் இரண்டு ஜெட் வானூர்திகள் குண்டுத் தாக்குதலை நடத்திய பின்னர் சிறிலங்காவின் வான்படை வானூர்திகளுக்கு எரிபொருள் வழங்கக் கூடிய குதங்களை இலக்கு வைத்து தாக்கினோம் என்றார்.

இலக்குகள் மீது தாக்குதல் நடத்திவிட்டு எமது வானூர்திகள் தளத்துக்கு பாதுகாப்பாக திரும்பிவிட்டன என்றும் அவர் கூறினார்.

வான்புலிகளின் தாக்குதலில் முத்துராஜவெல பெற்றோலிய எரிபொருள் நிலையம் மற்றும் எரிவாயு நிரப்பு நிலையம் கடும் சேதங்களுக்கு உள்ளாகியுள்ளது. அங்கு பெரும் வெடிப்புடன் தீ பரவியது. எரிபொருள் எரிவாயு ஆகியன தீப்பற்றி எரிந்தன.

அதனைத் தொடர்ந்து புலிகளின் வானூர்திகள் கொழும்புக்கு வந்துவிட்டதாக ஏற்பட்ட அச்சத்தால் கொழும்பில் இன்று அதிகாலை 1.45 மணிமுதல் 3 மணிவரை மின்சாரம் முற்றாக துண்டிக்கப்பட்டு இருளாக்கப்பட்டது.

பல விடுதிகளில் சிறிலங்காவுக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையேயான உலகக் கிண்ண துடுப்பாட்டப் போட்டி, அகன்ற திரைகளில் ஒளிபரப்பப்பட்டுக் கொண்டிருந்தன. அவை அனைத்தும் நிறுத்தப்பட்டுவிட்டன.

"தொடக்கத்தில் தீ விபத்துத்தான் என்று நினைத்தோம். மிகவும் துயரமாக இருந்தது" என்று கொழும்பு ரக்பி கிளப்பில் நண்பர்களுடன் கேளிக்கை விருந்தில் கலந்து கொண்ட சைதூன் பின் அகமெட் தெரிவித்தார்.

விடுதி ஒன்றில் துடுப்பாட்டப் போட்டியை பார்த்துக் கொண்டிருந்த காமினி எட்வர்ட் கூறுகையில், எங்களை அமைதியாக இருக்குமாறு விடுதி நிர்வாகத்தினர் கேட்டுக் கொண்டனர். தொடர்ச்சியான துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்களை கேட்ட எங்களுக்கு என்ன நடந்தது என்றே தெரியவில்லை" என்றார்.

புலிகளின் வானூர்திகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவதாக நினைத்து சிறிலங்கா இராணுவத்தினர் நடத்திய கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் படுகாயமடைந்ததாக கொழும்பு மருத்துவர்கள் கூறியதாகவும் ஏ.எஃ.ப்.பி. நிறுவனம் தெரிவித்துள்ளது

-Puthinam-

Edited by யாழ்வினோ

விதுரனின் செவ்வி

http://www.tamilnaatham.com/interviews20070119.html

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்காப் படையினரின் வான் எதிர்ப்பினால் 8 பொதுமக்கள் காயம்

கொழும்பில் தமிழீழ வான்படையினருக்கு எதிராக சிறிலங்காப் படையினர் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடத்திய வான் எதிர்ப்பு நடவடிக்கைகளில் 8 பொதுமக்கள் காயமடைந்துள்ளதுடன் பல வீடுகளும் சேதமடைந்துள்ளன.

காயமடைந்து கொழும்பு தெற்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் வெள்ளவத்தை, பெர்னாண்டோ வீதியைச் சேர்ந்த தம்பையா ஐயர் தர்மபாலன் (வயது 50) தெரிவித்துள்ளதாவது:

உலகக்கோப்பை கிண்ண துடுப்பாட்டப் போட்டியை தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்தேன்.

அப்போது 1.30 மணி இருக்கும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. பலத்த குண்டுச் சத்தங்கள் கேட்டன, கடுமையான இருளில் ஏதோ ஒரு பொருள் எனது மார்பை தாக்கியது.

மேலும் சில பொருட்கள் கூரையில் விழும் சத்தங்களை கேட்டேன். அப்போது நான் பீதியுள்றேன். அதிகளவு குருதி வெளியேறுவதாக உணர்ந்த போது மயங்கி விழுந்து விட்டேன். மருத்துவமனையில் இருக்கும் போது தான் இன்று காலை நான் கண்விழித்தேன் என்றார்.

களுபோவில மருத்துவமனையின் விபத்துப் பிரிவு பகுதியில் இருந்து வெள்ளவத்தை ஹவ்லொக் வீதியைச் சேர்ந்த கமலாதேவி (வயது 45) தெரிவித்ததாவது:

வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தேன், மின்குழிழ் வெடித்துச் சிதறியதுடன், மின்சாரமும் தடைப்பட்டது. எனது காலின் மேற்பகுதியில் வலியை உணர்ந்தேன். அந்தப் பகுதியை தொட்டபோது அதிகளவு குருதி வெளியேறுவதனை உணர்ந்தேன். உடனடியாக எனது கணவர் கதவைத் திறந்த போது எல்லா பக்கங்களில் இருந்தும் துப்பாக்கிச் சத்தங்களை கேட்டேன் என்றார்.

வெள்ளவத்தை நெல்சன் வீதியைச் சேர்ந்த பாத்திமா நிஸ்லின் அமீன் (வயது 27) என்பவரும் தனது வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த சமயம் கூரைப்பகுதியை ஊடறுத்து வந்த பெருளொன்றினால் காயமடைந்தார்.

பெரும்பாலானவர்கள் உலோகத் துண்டுகள் மற்றும் கண்ணாடித் துண்டுகளினால் காயப்பட்டுள்ளதாக கொழும்பு தெற்கு மருத்துவமனையின் விபத்துப் பிரிவுப் பணிப்பாளர் மருத்துவர் கே.டி.அத்தப்பத்து தெரிவித்துள்ளார்.

இதனிடையே காயமடைந்த பாத்திமாவின் வீட்டில் இருந்து 0.50 கலிபர் துப்பாக்கிச் சன்னம் ஒன்றை தாம் கண்டெடுத்ததாக வெள்ளவத்தை காவல்நிலைய பொறுப்பதிகாரியான மங்கள தெகிதெனிய தெரிவித்தார்.

-புதினம்

சிறீலங்கா வான்படையினரின் வான்எதிர்ப்புத் தாக்குதலால் பல வீடுகள் சேதம்.

நேற்று சிறீலங்கா வான்படையினர் தமிழீழம் வான் படையின் தாக்குதலுக்கு அஞ்சி கொழும்பு நகரின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில் இருந்து ஆகாயத்தை நோக்கி றேசர் குண்டுத் தாக்குதல்களையும், பரா வெளிச்சக்கூண்டுகளையும் வானை நோக்கி ஏவியிருந்தன.

இந்த தாக்குதல் பல வீடுகளை சேதப்படுத்தியுள்ளதாகவும் எட்டு பொதுமக்கள் காயமடைந்துள்ளதாகவும் தெரியவருகிறது. இதன்போது 50 அகவையுடைய பெர்னாண்டோ வீதியில் வசித்து வந்த தம்பையா ஐயர் தர்மபாலன் என்பவரும் 45 அகவையுடைய ஹவலக் வீதியை சேர்ந்த கமலா தேவி என்பவரும் 27 அகவையுடைய நெல்சன் வீதியை சேர்ந்த பாத்திமா நிஸ்லின் அமீன் ஆகியோரும் காயமடைந்துள்ளதாகவும் தெரியவருகிறது.

-Pathivu-

Edited by யாழ்வினோ

எரிபொருள், எரிவாயு மையங்கள் மீதான

குண்டுவீச்சால் கொழும்பில் பதற்ற நிலை

புலிகளின் வான் தாக்குதல்களை

முறியழக்க படைகள் முழு உஷார் நிலை

கொழும்பு, ஏப்ரல் 30

விடுதலைப்புலிகள் மூன்றாவது தடவையாக நேற்று அதிகாலைவேளை நடத்திய வான் தாக்குதல் காரணமாக கொழும்பு நகரம் பெரும் அல்லோல கல்லோலப்படநேர்ந்தது.

தலைநகரில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களான எரிபொருள் மற்றும் எரிவாயுக் குதங்கள் அமைந்துள்ள பிரதேசங்களை இலக்கு வைத்தே புலிகள் இந்த வான் தாக்குதலை நடத்தியுள்ளனர்.

முத்துராஜ வெலவில் அமைந்துள்ள எல்.ஜி. எரிவாயுக் குதங்கள், கொலன்னாவையில் உள்ள எரிபொருள் சுத்திகரிப்பு மற்றும் சேமிப்பு குதங்கள் மீதே குண்டுகள் வீசப்பட்டிருக்கின்றன. எனினும், இந்த இரு மையங்களிலும் பெரிய அளவிலான அழிவுகள் ஏற்படவில்லை என்று விமானப்படை கூறுகின்றது.

தங்களின் இரண்டு விமானங்கள் இத் தாக்குதல்களை நடத்திவிட்டுப் பத்திரமாக தளத்துக்கு திரும்பின என்று விடுதலைப்புலிகளின் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்தார்.

முத்துராஜ வலையிலும், கொலன்னாவையிலும் உள்ள இரண்டு எண்ணெய் சேமிப்பு மையங்களும் அரசுப் படைகளுக்கான எரிபொருள்களை வழங்கி வந்தன என்றும் அவர் தெரிவித்தார்.

புலிகளின் இரண்டு விமானங்கள் இத்தாக்குதலில் ஈடுபடுத்தப்பட்டன. புலிகளின் விமானங்களை விரட்டுவதற்காக படையினர் மேற்கொண்ட வான் பாதுகாப்பு நடவடிக்கை காரணமாக கொழும்பு நகரம் சிலமணி நேரம் அதிர்ந்தது. வானை நோக்கி ஏவப்பட்ட குண்டுகளால் வான் பிரதேசம் எங்கும் ஒளி வெள்ளமாக காட்சி தந்தது. கொழும்பையும் அதனை அண்டிய பிரதேசங்களிலும் நேற்று விடிகாலை 1.30 மணி யளவில் மின்சாரம் நிறுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து பல இடங்களிலும் குண்டுச் சத்தங்கள் பேரிடியாகக்கேட்டன. கடந்த வியாழக்கிழமைபோன்று தற்காப்பு நடவடிக்கையாக வான் எதிர்ப்புத் தாக்கு தல்கள் பல இடங்களிலும் நடத்தப்பட்டன. அதனால் எங்கும் குண்டுச் சத்தங்கள் இடியோசை போன்று தொடர்ந்து அமளியாகக் கேட்டுக் கொண்டிருந்தன.

சுமார் 30 நிமிடநேரமாக இடைவெளி இன்றி நாலா பக்கங்களிலும் பேரிடியான சத்தங்கள் கேட்டதால் என்ன செய்வதென்று அறி யாது திகிலடைந்து போயினர். மின்சாரம் மீண்டும் அதிகாலை 2.30 மணிக்கு வந்த பின்னரும் மக்களுடைய பதற்றம் தணியவில்லை.

அம்புலன்ஸ் வண்டிகளும் தீயணைப்பு வண்டிகளும் அங்குமிங்கு மாக ஓடித்திரிந்ததால் எதுவும் நடக்கலாம் என்ற எதிர்பார்ப்பில் மக்கள் பதற்றத்துடன் கண் விழித்திருந்தனர்.

மீண்டும் அதிகாலை 3 மணிக்கு மின்சாரம் நிறுத்தப்பட்டது. செய்தி அச்சுக்கு நாலா திசைகளிலும் லேசர் குண்டுகள் ஏவப்படும் சத்தம் சகல பகுதிகளையும் மீண்டும் மீண்டும் அதிரவைத்துகொண்டிருந்தன.

கொழும்பில் தாக்குதல் நடத்தும் நோக்குடன் சந்தேகத்துக்குரிய விமானம் வருவதாகத் தகவல் கிடைத்ததை அடுத்தே முக்கிய கேந்திர நிலையங்களின் தற்காப்புத் தாக்குதல் கள் மேற்கொள்ளப்பட்டன.

கொழும்பு இராணுவத் தலைமையம், ஜனாதிபதி மாளிகை, அலரி மாளிகை, இரத் மலானை விமான நிலையம், கொழும்பு துறைமுகம், களனி திஸ்ஸ மின் உற்பத்தி நிலையம், கொழும்பு துறைமுகப்பகுதிகளில் இருந்து தற்பாதுகாப்புக்காக லேசர் குண்டுகள் தீர்க்கப்பட்டன.

முப்படைகளும் கூட்டாக நடத்திய இந்த வான்பாதுகாப்புத் தாக்குதல்களில் சிக்கி பொதுமக்கள் சிலர் காயமடைய நேர்ந்துள்ளது. காயங்களுக்கு இலக்கான ஐவர் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். படைச்சிப்பாய்கள் மூவரும் காயமடைய நேர்ந்தது என்று கூறப்படுகிறது.

கட்டுநாயகக்õ விமான நிலையத்திலும் வான் பாதுகாப்பு சாதனங்கள் இயக்கப்பட்டன. விமான நிலைய நடவடிக்கைகள் இடை நிறுத்தப்பட்டு பயணிகள் பாதுகாப்பான பகுதிக்கு நகர்த்தப்பட்டனர். விமான நிலையத்தை நோக்கி வந்த விமானங்கள் வானில் வைத்தே சென்னைக்கு திசை திருப்பப்பட்டன. பின்னர் நேற்றுக்காலையிலேயே விமான நிலைய செயற்பாடுகள் வழமைக்கு திரும்பின.

விடுதலைப்புலிகளின் இரவு நேர வான் தாக்குதல்கள் தொடர்ந்து இடம்பெறலாம் என்று எதிர்பார்கக்ப்படுவதால் கொழும்பிலும் நாடு முழுவதும் முப்படையினரும் முழு உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சியில் கிபிர் தாக்குதல்

கொழும்பில் தற்காப்புத் தாக்குதல்கள் நடந்து 15 நிமிட நேரத்தில் கிளிநொச்சியில் இரணைமடுப் பகுதியில் கிபிர் தாக்குதல் நடத்தியுள்ள தாகத் தெரியவந்தது.

விடுதலைப் புலிகளின் விமான ஓடுதளத்தை இலக்குவைத்து இத் தாக்குதல் நடத்தப்பட்டன என்று விமானப்படை தெரிவித்தது. (ஐ)

உதயன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Colombo in dark following airstrike alarm

[TamilNet, Saturday, 28 April 2007, 20:11 GMT]

Power supply was cut off in Colombo at 1:15 a.m. when the city was watching the Cricket world cup final match. Sri Lanka Air Force personnel opened fire on the air.

Details are not available at the moment.

Meanwhile, at least two Sri Lanka Air Force bombers had dropped bombs in Visuvamadu area in Vanni at 1:15 a.m. Casualty details were not available.

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=22020

கொழும்பில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாவும் துறைமுகத்தை அண்டிய பகுதிகளில் வேட்டுக்கள் தீர்க்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது. உண்மை நிலை தெரியவில்லை.

வச்சாங்கய்யா ஆப்பு...!!!!

சிங்கமூஞ்சி ஓநாயை

ஓடவிட்டு மிதிக்கணும்...

வாய் கிழிந்த மகிந்தாவின்

வாலை இழுத்து நறுக்கணும்..

அப்புமூஞ்சி உப்புமாவை..

துப்புகெட வைக்கணும்- வாய்

சப்பும் பிள்ளை விரலை எடுத்து

வானத்திலே காட்டணும்..

கொழும்பில் 3 எரிபொருள் களஞ்சியங்கள் மீது அதிகாலையில் வான் புலிகள் குண்டு வீச்சு

படையினரின் பதில் தாக்குதலால் மாநகர் அதிர்ந்தது

கொழும்பு நகரிலும் அதன் புறநகர் பகுதியிலுமுள்ள எரிபொருள் களஞ்சியங்கள் மூன்றின் மீது விடுதலைப் புலிகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வான் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

அதியுயர் பாதுகாப்பு வலயங்களுக்குள்ளிருக்கும் கொலன்னாவை பிரதான எரிபொருள் களஞ்சியசாலை தொகுதியும், கெரவலபிட்டிய முத்துராஜவெல எரிபொருள் களஞ்சியத் தொகுதி மற்றும் அங்குள்ள ஷெல் காஸ் லங்கா நிறுவன காஸ் எரிவாயு களஞ்சிய நிலையங்கள் மீதே அடுத்தடுத்து இந்த வான் தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன.

முத்துராஜவெல எரிபொருள் களஞ்சியத் தொகுதியிலுள்ள ஷெல் காஸ் லங்கா எரிவாயுக் (காஸ்) களஞ்சியத்தின் தண்ணீர் தாங்கி, மாடிக்கட்டிடம் மற்றும் நீர் குழாய்கள் ஆகியவற்றுக்கு சிறிதளவு சேதங்கள் ஏற்பட்டுள்ளன.

இதே பகுதியின் மறுபுறத்திலுள்ள இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபன எண்ணெய்க் களஞ்சியத் தொகுதி தாக்குதலுக்குள்ளான போதும் அங்கும் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லையென அதிகாரிகள் கூறுகின்றனர்.

கொலன்னாவை பிரதான எரிபொருள் களஞ்சியத் தொகுதி மீது வான்புலிகள் குண்டுத்தாக்குதலை நடத்திய போதும் இலக்குத் தவறிவிட்டதாக விமானப் படைப் பேச்சாளர் குறூப் கப்டன் அஜந்த டி சில்வா தெரிவித்தார்.

அதிகாலை 1.30 மணிக்கும் 2.10 மணிக்கும் இடைப்பட்ட 40 நிமிட இடைவெளிக்குள்ளேயே மேற்படி மூன்று தாக்குதல்களும் இடம்பெற்றுள்ளன.

மொத்தம் நான்கு குண்டுகள் போடப்பட்டுள்ளன. கொலன்னாவை பகுதியில் போடப்பட்ட இரு குண்டுகளும் எண்ணெக் களஞ்சியத் தொகுதிக்கு வெளியே வீழ்ந்த போதும் வெடிக்கவில்லை.

ஏனைய இரண்டு குண்டுகளும் முத்துராஜவெல ஷெல் காஸ் எரிவாயுக் களஞ்சியத்திலும் பெற்றோலிய களஞ்சியத்திலும் வீழ்ந்து வெடித்து சேதங்களை ஏற்படுத்தியுள்ளன.

முத்துராஜவெல எரிபொருள் களஞ்சியத் தொகுதியில் வீழ்ந்த குண்டுகள் வெடித்து அங்கு பாரிய தீப்பிளம்புகள் தோன்றி பெரும் புகை மண்டலம் ஏற்பட்டது. தீயணைக்கும் படையினர் உடனடியாக பல வாகனங்களில் அங்கு விரைந்து சென்று தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

இச் சம்பவங்களின் பின்னர் அங்கு கணினித் தொகுதிகள் முற்றாக செயலிழந்துள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன உப தலைவர் மெத்சிறி விஜேவர்தன தெரிவித்தார்.

அதிகாலை 1.20 மணியளவில் கட்டுநாயக்கா விமானப் படைத் தளத்தின் ராடார் கருவியில் இனம் தெரியாத விமானமொன்று வானில் பறப்பது தெரிந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து கொழும்பு பெரும்பாகப் பிரதேசம் முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

சரியாக 1.45 மணியளவில் கொழும்பிலுள்ள முக்கிய கேந்திர மையங்களான கொழும்பு துறைமுகம், கொலன்னாவை எரிபொருள் களஞ்சியம், களனி திஸ்ஸ அனல் மின் நிலையம், இரத்மலானை விமான நிலையம், இராணுவ தலைமையகம் முகத்துவாரம் இராணுவ முகாம் கரையோர பாதுகாப்பு நிலைகளிலிருந்தெல்லாம் ஒரே நேரத்தில் ஆகாயத்தை நோக்கி கடும் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. கொழும்பு மாநகரே அதிரும் வகையில் எங்கும் தாக்குதல் ஒலிகள் கேட்டதுடன் லேசர் குண்டுகளும் வானை நோக்கி ஏவப்பட்டன. இதனால் வான்பரப்பு முழுவதும், வாணவேடிக்கை போன்று லேசர் குண்டுகள் பாய்ந்தன.

இதன்போது களனி திஸ்ஸ அனல் மின் நிலையத்தின் காவல் கடமையிலிருந்த இராணுவத்தினரும் அதிகாரிகளுமாக ஐவர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஆனால், தாக்குதல் இலக்குகளில் கடமையாற்றியவர்களுக்கோ அப் பிரதேச மக்களுக்கோ எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லையென குறிப்பிட்ட பகுதிகளுக்கான பொலிஸார் தெரிவித்தனர்.

புலிகளின் விமானங்கள் கொழும்பில் குண்டுகளை வீச முன்னர் துண்டிக்கப்பட்ட மின்சார விநியோகம் அதிகாலை 2.45 மணிவரை மீண்டும் விநியோகிக்கப்படாததால் கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகள் இருளில் மூழ்கியிருந்தன.

இந்த இடைவெளிக்குள் 20 நிமிடங்கள் வானை நோக்கி சுடப்பட்ட போது அது வாணவேடிக்கை போன்று காட்சியளித்தது.

வெடியோசைகள் முழு நகரத்தையும் அதிரவைத்து மக்களை அச்சத்தில் ஆழ்த்தியது. மக்கள் அச்சமடைந்த நிலையில் பாதுகாப்புத் தேடியோடினர். கொழும்பு மாநகரமே அல்லோலகல்லோலப்பட்டது.

இதேவேளை, கட்டுநாயக்கா விமான நிலைய செயற்பாடுகள் உடனடியாக இடைநிறுத்தப்பட்டன. அங்கு வந்த பயணிகள் விமானங்கள் சென்னைக்கு திசை திருப்பப்பட்டன. கட்டுநாயக்கா விமான நிலையத்தில் பயணிகள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர்.

வீதிகளில் சென்று கொண்டிருந்த வாகனங்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு போக்குவரத்து தடை ஏற்படுத்தப்பட்டது.

கொழும்பு துறைமுகத்திலிருந்து கடற்படையினர் நடத்திய துப்பாக்கி பிரயோகம் காரணமாக துறைமுக அயலில் வசிப்பவர்கள் வீடு வாசல்களை விட்டு உடனடியாக பாதுகாப்பு தேடி ஓடினர். வெடிச்சத்தங்கள் ஓய்ந்து நீண்ட நேரத்தின் பின் மின் விநியோகம் வழமைக்கு திரும்பியது.

இதேநேரம் மீண்டும் அதிகாலை 3.15 மணியளவில் இரண்டாவது தடவையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதுடன் படையினர் வானத்தை நோக்கி சரமாரியாக சுட்டுத்தள்ளினர். இதனால் கொழும்பு நகர் மீண்டும் அதிர்ந்தது.

அதிகாலை 3.45 மணியளவில் இந்தச் சத்தமும் ஓய்ந்து மீண்டும் மின் விநியோகம் நடைபெற்றது. கொழும்பில் தாக்குதல்களை மேற்கொள்ள வந்த புலிகளின் திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது. படையினரின் வான் பாதுகாப்பு தன்னியக்க தாக்குதல் கருவிகள் மூலம் பதில் தாக்குதலை நடத்தவே இலக்கை தவறவிட்டு புலிகளின் விமானங்கள் தப்பிச் சென்றுள்ளதாக படைத் தரப்பு தெரிவித்தது.

இச்சம்பவம் தொடர்பாக விமானப் படையினர் பூரண விசாரணையொன்றை நடத்தவுள்ளனர். தேடுதல்களும் பதில் தாக்குதல் நடவடிக்கையும் தொடர்வதாக விமானப் படையினர் தெரிவித்தனர்.

தினக்குரல்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கொழும்பு புறநகர் பகுதியில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை அமைந்த பகுதியில் இந்தியன் ஓயில் கோப்ரேசனின் சொந்தமான எண்ணெய் சேமிப்பு தாங்கிகள் பல உள்ளன. இந்த விமானதாக்குதலில் அவைகள் பாதிக்கப்பட்டு இருந்தால் மூன்றாவது விமான தாக்குதல் சில புதிய சிக்கல்களை உருவாக வாய்ப்புகள் உள்ளன. கன்னியாகுமரி மீனவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டது, 12 மீனவர்கள் காணாமல் போனது போன்ற விடயங்கள் குறித்தும் இந்திய மத்திய அரசு அமைச்சர் இளங்கோவன் புலிகளுக்கு எதிராக காட்டமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும் தேவை ஏற்படின் மத்திய அரசு நேரடித் தலையீடு செய்யவேண்டும் என்றும் கூறியுள்ளார்.

கொழும்பு புறநகர் பகுதியில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை அமைந்த பகுதியில் இந்தியன் ஓயில் கோப்ரேசனின் சொந்தமான எண்ணெய் சேமிப்பு தாங்கிகள் பல உள்ளன

அங்கே இந்தியத் தொழிலாளர்கள்தான் அனேகமானோர் வேலை செய்கிறார்கள் , ஆனால் அவற்றில் பல முத்தையா முரளிதரனுக்கு சொந்தமானது :icon_idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அங்கே இந்தியத் தொழிலாளர்கள்தான் அனேகமானோர் வேலை செய்கிறார்கள் , ஆனால் அவற்றில் பல முத்தையா முரளிதரனுக்கு சொந்தமானது :blink:

இன்று தமிழக தமிழ், ஆங்கில பத்திரிகைகளில் வந்த செய்தியையே மேலே குறிப்பிட்டேன்.

இன்று தமிழக தமிழ், ஆங்கில பத்திரிகைகளில் வந்த செய்தியையே மேலே குறிப்பிட்டேன்.

இந்திய தொழிலாலர்கள் வேலை செய்கின்றனர் என்பது 100% சரி ஆனால் அது முத்தையா முரளிதரனுக்கு சொந்தமானவை

  • கருத்துக்கள உறவுகள்

வான் புலிகள் பற்றி.. புலிகள் பற்றி... பெருமிதம் சொல்லும் பிபிசி..!

Tamil Tigers unveil latest tactic

Whatever you may think of their goals and methods, Sri Lanka's Tamil Tigers have always been innovative.

_42734121_zlin_aircraft416.gif

http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/6496381.stm

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கொழும்பு புறநகர் பகுதியில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை அமைந்த பகுதியில் இந்தியன் ஓயில் கோப்ரேசனின் சொந்தமான எண்ணெய் சேமிப்பு தாங்கிகள் பல உள்ளன. இந்த விமானதாக்குதலில் அவைகள் பாதிக்கப்பட்டு இருந்தால் மூன்றாவது விமான தாக்குதல் சில புதிய சிக்கல்களை உருவாக வாய்ப்புகள் உள்ளன. கன்னியாகுமரி மீனவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டது, 12 மீனவர்கள் காணாமல் போனது போன்ற விடயங்கள் குறித்தும் இந்திய மத்திய அரசு அமைச்சர் இளங்கோவன் புலிகளுக்கு எதிராக காட்டமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும் தேவை ஏற்படின் மத்திய அரசு நேரடித் தலையீடு செய்யவேண்டும் என்றும் கூறியுள்ளார்.

அண்ணன் எப்ப சாவான் திண்ணை எப்ப காலியாகும் என்ற பாணியில் காத்திருக்கும் பிராமணியவாதத்தின் பத்திரிக்கைத் தர்மத்துக்கு புலிகளுக்கு பூச்சாண்டிகாட்டி எழுதும் படைப்புக்களுக்கு இதுதான் புதுத் துவக்கமா?

புலிகளின்மேல் கொண்ட வெறுப்பின் அடிப்படைக் காரணமே பெரியார் கருத்துக்களின் உரத்தில் வளர்ந்து நிற்கும் பெருவிருட்சம் இந்த போராட்டம் என்பதே.

தம் சாவுகளாலேயே தம் எதிரியை சாகடிக்கின்ற புலிகள். இந்தியப் படை பகையாக நுளைந்துவிட்டால் தன்சாவோடு அவர்களையும் உள்ளெடுக்காது அவர்களுக்கு வாழ்வுப்பிச்சை கொடுத்து விட்டு தான் மட்டும் சாவுக்குள் இறங்கும் அந்த உயரிய உள்ளங்களின் மேல் இத்தகைய பழி கொட்டுதல் புலிவெறி என்ற பித்தத்தில் அல்லாமல் வேறு எப்படி இருக்கும்.

ஈழப் போராட்டத்தின் தலைமை தம் கைப் பொம்மையாய் இருக்கவேண்டும் என்பதற்க்காக, எத்தனை புல்லுருவி பயங்கர வாத அமைப்புக்களை இந்திய மத்தியால் ஈழத்தில் உருவாக்கப் பட்டது.

இபொழுது கூட கருணா என்ற கருங்காலியின்கை கை நனைக்கும் இரத்தத்துக்கு றோவின் பிராந்திய அதிகாரப் பசியே காரணம் என்பது அனைவரும் அறிந்ததே!!

அவர்களின் நயவஞ்சகத்தனம் எல்லையை மீறும் போது அவர்களை சிலுவை சுமப்பிக்க வைக்க ஒருகாலம் எமக்கும் வரும்.

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளின் விமானம் வந்த பாதையை டெய்லி மிரர்காரர் கண்டுபிடித்திருக்கினம்

http://www.dailymirror.lk/2007/05/04/opinion/02.asp

அது மட்டுமா, தேசியத்தலைவர் வெலி ஒயா வில் நின்றதையும் கண்டு பிடித்து விட்டார்களாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.