Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையில் பிரஜை ஒருவருக்கு 530,000 ரூபாய் கடன் சுமை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் பிரஜை ஒருவருக்கு தற்போது 530,000 ரூபாய் கடன் இருப்பதாக முன்னாள் கணக்காய்வாளர் நாயகம் காமினி விஜயசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கையின் பிரஜை ஒருவர் வெளிநாடுகளுக்கு செலுத்த வேண்டிய அல்லது படு கடன் என சொல்லப்பட கூடிய அளவில் ஒருவருக்கு 530,000 ரூபாய் கடன் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

பொலன்னறுவையில் இடம்பெற்ற சந்திப்பொன்றிலேயே அவர் இதனை கூறியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்த நிலைமை மிகவும் பாரதூரமானது.

பிறந்த குழந்தை ஒன்றுக்கு 530,000 ரூபாய் கடன் என்று சொல்லப்படுகின்ற நிலையில் இலங்கையின் பொருளாதாரம் எந்த அளவிற்கு பாதிக்கப்பட்டுள்ளது என்பதை உணர வேண்டும்.

இந்த நிலைமைக்கு கடந்த 35 வருடங்களாக ஆட்சியில் இருக்கின்ற அரசாங்கங்களே பொறுப்பு கூற வேண்டும்.

இலங்கையின் பொருளாதாரம் மிகவும் மந்த கதியில் சென்று கொண்டிருப்பதனையும், அது கட்டியெழுப்பப்பட வேண்டிய தேவை இருப்பதனையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில், ஏற்கனவே காமினி விஜயசிங்க எதிர்காலத்தில் ஐக்கிய தேசிய கட்சி அல்லது ஜே.வி.பியினருடன இணைந்து அரசியலில் ஈடுப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://www.tamilwin.com/economy/01/219829?ref=home-latest

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, பெருமாள் said:

இந்த நிலைமை மிகவும் பாரதூரமானது.

பிறந்த குழந்தை ஒன்றுக்கு 530,000 ரூபாய் கடன் என்று சொல்லப்படுகின்ற நிலையில் இலங்கையின் பொருளாதாரம் எந்த அளவிற்கு பாதிக்கப்பட்டுள்ளது என்பதை உணர வேண்டும்.

இந்த நிலைமைக்கு கடந்த 35 வருடங்களாக ஆட்சியில் இருக்கின்ற அரசாங்கங்களே பொறுப்பு கூற வேண்டும்.

இலங்கையின் பொருளாதாரம் மிகவும் மந்த கதியில் சென்று கொண்டிருப்பதனையும், அது கட்டியெழுப்பப்பட வேண்டிய தேவை இருப்பதனையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதை நீங்கள் உணர்ந்ததாகவே தெரியவில்லையே ...
தின்ன வழியில்லாமல் பிச்சையெடுத்தாலும்  எப்போதும் எவனோடாவது மோதி கடிபட்டுக்கொண்டிருக்க வேண்டும். இது போதாது இன்னும் இருக்கு . இலங்கை மாதான முத்தாக்கள் ரொட்டிக்காக விபச்சாரம் செய்கிறார்கள் என்ற நிலைமை வராமல் இருக்க புத்த பிரானிடம் வேண்டிக்கொள்ளுங்கள் 

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் பொருளாதரம் மந்த கதியிம் போகின்றது.
அதற்காக இப்படியான கடன்களால்தான் மக்கள் பிச்சை எடுக்கின்றார்கள் என்பது தவறானது. இப்படியான புள்ளி விபரங்களை தவறாக புரிந்து கொள்ள கூடாது

அமெரிக்கா கூட கடன்பட்டுள்ளது அங்கு ஒவ்வொரு அமெரிக்கனும் கடன்பட்டவனாகவே இருப்பான்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, colomban said:

இலங்கையின் பொருளாதரம் மந்த கதியிம் போகின்றது.
அதற்காக இப்படியான கடன்களால்தான் மக்கள் பிச்சை எடுக்கின்றார்கள் என்பது தவறானது. இப்படியான புள்ளி விபரங்களை தவறாக புரிந்து கொள்ள கூடாது

அமெரிக்கா கூட கடன்பட்டுள்ளது அங்கு ஒவ்வொரு அமெரிக்கனும் கடன்பட்டவனாகவே இருப்பான்

அமெரிக்காவும் சொறி லங்காவும் ஒன்றா பாஸ் ? அவர்களின் gdp 19 ட்ரில்லியன்களுக்கு மேல் சொறிலங்கா வெறும் 80 பில்லியன் மட்டுமே .

  • கருத்துக்கள உறவுகள்

விஜய் தமிழன் படத்தில் நாட்டின் மொத்த கடனை அடைக்க தன் பங்காக ஒரு ரூபாய் தருவார்..பிறகு எல்லோரும் அதையே பாலோ செய்வினம்.. அப்படி செய்தால் அரசியல்வாதிகள் விட்டது  பீடை என்டு சந்தோஷபடுவினம் அல்லோ..👍

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, பெருமாள் said:

பொருளாதார வளர்ச்சியில் அமெரிக்காவும் சிறிலங்காவும் மட்டுமல்ல, எந்த வளர்ந்த நாடும் சிறிலங்காவுடன் ஓப்பிடப் பட முடியாதது! ஆனால், 19 ட்ரில்லியன் மொத்த உற்பத்தி கொண்ட அமெரிக்காவின் சனத்தொகை 300 மில்லியனுக்கும் அதிகம். 80 பில்லியன் மொத்த உற்பத்தி கொண்ட சிறிலங்காவின் சனத்தொகை 21 மில்லியன் மட்டுமே! எனவே தான் GDP per capita என்ற அளவீடு மொத்த உற்பத்தியை விட பொருத்தமான ஒப்பீட்டு அளவீடாக இருக்கிறது. GDP per capita இன் படி, அமெரிக்கா ~அறுபதாயிரம் டொலர்கள், சிறிலங்கா 5000 டொலர்கள். வாழ்க்கைச் செலவைப் பார்க்கும் போது சிறிலங்காவில் வாழ்வோர் அமெரிக்கர்களை விட நன்றாக இருக்க வேண்டும்! 
 
  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

விஜய் தமிழன் படத்தில் நாட்டின் மொத்த கடனை அடைக்க தன் பங்காக ஒரு ரூபாய் தருவார்..பிறகு எல்லோரும் அதையே பாலோ செய்வினம்.. அப்படி செய்தால் அரசியல்வாதிகள் விட்டது  பீடை என்டு சந்தோஷபடுவினம் அல்லோ..👍

நீங்கள் ஒத்தை ரூபாவாக கொடுக்க அதையும் ஆட்டையைப் போட்டுவடுவார்களே?
ஒத்தை ரூபா பலர் போட அதுவே பெரிய தொகையாக மாற அடித்த மனம் கேட்காது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Justin said:

அறுபதாயிரம் டொலர்கள், சிறிலங்கா 5000 டொலர்கள். வாழ்க்கைச் செலவைப் பார்க்கும் போது சிறிலங்காவில் வாழ்வோர் அமெரிக்கர்களை விட நன்றாக இருக்க வேண்டும்! 
 
வாங்கிய கடனை அடைக்க வழியில்லாமல் துறைமுகம் களை மற்றைய நாடுகளுக்கு அமரிக்கர்கள் தாரை வார்ப்பது வழக்கமா ? வாங்கிய கடனின் வட்டியை கட்டுவதுக்கு மேலும் கடன்படுவது உண்டா அங்கும் ?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

வாங்கிய கடனை அடைக்க வழியில்லாமல் துறைமுகம் களை மற்றைய நாடுகளுக்கு அமரிக்கர்கள் தாரை வார்ப்பது வழக்கமா ? வாங்கிய கடனின் வட்டியை கட்டுவதுக்கு மேலும் கடன்படுவது உண்டா அங்கும் ?

இதிலென்ன ஆச்சரியம் இருக்கிறது 
சொந்த நாட்டு மக்களை ஒடுக்க எத்தனை பேருடனும் விபச்சாரம் செய்யத் தயார் எனும் பரந்த நோக்கம் கொண்டவர்கள் தான் சிங்களவர்கள் 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இங்கு சிங்களவனே இறங்கி வந்து தீர்வை தந்தாலும் எங்கடையில் கொஞ்சம் சிங்களவனுக்கு தொண்டு செய்வம் என்று ஒத்தைக்காலில் நிக்குதுகள் இப்படியானதுகள் இருக்கும் மட்டும் சிலோனில் தமிழனுக்கு விடிவு வராது என்பதுக்கு இந்த திரியே சாட்சி பாருங்க சிங்களவன்தான் இவ்வளவு கடனாளியாகி விட்டம் என்று அழுகிறான் ஆனால் புனுகு பூசுவது நம்ம ஆட்கள் தான் எங்கை போய் இப்படி டிசைனை வரம் வாங்கி வந்திருக்கினம் என்று விளங்கவில்லை .

  • கருத்துக்கள உறவுகள்

7 hours ago, பெருமாள் said:

பெருமாள் அண்ணை, நாய்க்கு எங்கை அடிபட்டாலும் காலை மட்டும் தூக்குவது போல, உங்களுக்கு ஒரு பொருளியல் உண்மை சிறிலங்காவுக்குச் சாதகமாக இருப்பதைச் சுட்டிக் காட்டினாலும் அது சிங்கள வக்காலத்தாகத் தெரிவது ஆச்சரியமில்லை! இது தேசிக்காய் வியாதியின் ஒரு சின்ன அறிகுறி மட்டுமே! அதுக்கு மருந்தை நீங்களே தேட வேண்டும், உங்கள் நோய்க்காக மற்றவர் மேல் காரணமில்லாமல் பாய்வது சரியில்லை!

சிறி லங்காவின் பொருளாதார மந்த நிலையை  அமெரிக்காவினதுடன் மட்டுமல்ல, எந்த வளர்ந்த நாட்டுடனும் ஒப்பிட முடியாதென என எழுதியிருக்கிறேனே? ஒரு பொருளியல் அடிப்படை அறிவு இல்லை என்பது பரவாயில்லை, தமிழ் வாசிப்பும் கிரகிப்பும் கூட உங்களுக்குப் பிரச்சினையா? பிறகேன் ஐயா உங்களுக்கெல்லாம் தமிழ் தேசியமும் தமிழ் ஈழ ஆசையும்? 😎

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Justin said:

எங்களுக்கு படிப்பறிவு இல்லிதானுங்கோ ஆனால் உங்களுக்கு வாசிச்சு நாங்க கேட்ட கேள்விக்கு விடை கிடையாது அதை தாண்டி இங்கால வந்து உங்கடை சுத்துமாத்து சுமத்திரனை போல் சவுடால் அடிக்க எப்படி முடியுது என்று விளங்க வில்லை ?

மேலும் கடன்படனும் என்றால் பிழையான தரவை காண்பித்து இருப்பார்கள் .

  • கருத்துக்கள உறவுகள்

16 hours ago, பெருமாள் said:

வாங்கிய கடனை அடைக்க வழியில்லாமல் துறைமுகம் களை மற்றைய நாடுகளுக்கு அமரிக்கர்கள் தாரை வார்ப்பது வழக்கமா ? வாங்கிய கடனின் வட்டியை கட்டுவதுக்கு மேலும் கடன்படுவது உண்டா அங்கும் ?

அண்ணை, இதுக்கு எனக்குப் பதில் தெரியாதென்று நம்புவது உங்களுக்குக் குதூகலம் தந்தால் நம்புங்கள்! நான் ஏன் உங்கள் மகிழ்ச்சியைக் கெடுப்பான்? ஆனால் கீழே மீளவும் கோடு காட்டியிருக்கும் கருத்து, எனது பதில் என்னவென்று deduce பண்ணும் அளவுக்கு கலிபர் உள்ள ஆட்களுக்கு மட்டும்! நீங்கள் உங்கள் மூளையைக் கஷ்டப் படுத்தாதீர்கள்!😎

".....சிறி லங்காவின் பொருளாதார மந்த நிலையை  அமெரிக்காவினதுடன் மட்டுமல்ல, எந்த வளர்ந்த நாட்டுடனும் ஒப்பிட முடியாதென என எழுதியிருக்கிறேனே? "

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Justin said:

உங்களை சார்ந்தவர்களும் அரசியலில் கிழே விழும்போது சுமத்திரன் கூட்டம் ஒரு வார்த்தை சொல்லுவார் "நான் அப்பவே சொல்லியிட்டன் " என்று ஒரு பைல் கட்டை தூக்கி காட்டுவார் அதுபோலத்தான் உங்கள் பதில் 

லங்கா கடன் தொகை பற்றி வரும் திரிகளில் அமரிக்காவும் கடன் வேண்டுது என்று சிம்பிளா அந்த திரிகளில் நீங்கள் சொல்வது உண்டு சிங்களமே அழுவுது மீள முடியாத கடன் பொறிக்குள் மாட்டியிட்டம் என்று யாதார்த்தை எழுதினால் உங்களுக்கு சுமத்திர வாதம்  நாங்க 6 என்றால் உங்களுக்கு 9 நாங்கள் 9 சொன்னால் உங்களுக்கு 6 அதுதான் சுமத்திர வாதம் .

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, பெருமாள் said:

கடன் சுமை, தனிநபர் வருமானம், பணவீக்கம், மொத்த உற்பத்தி, இவையெல்லாம் நீங்கள் நினைப்பது போல இலக்கத்தை மட்டும் பார்த்து தீர்மானிக்கும் விடயம் இல்லையென்றே கொழும்பான் சொன்னது, நானும் ஆமோதிப்பது. அப்படி ஒரு குறிகாட்டியை மட்டும் வைத்துக் கொண்டு ஒரு நாட்டின் பொருளியல் நிலையைத் தீர்மானிக்க முடியும் என்பதற்கு உங்களிடம் ஆதாரங்கள் தரவுகள் இருந்தால் இங்கே குறிப்பிடுங்கள், எல்லாரும் ஏதாவது கற்றுக் கொள்ளலாம்! இதில் ஏன் சுமந்திர வாதம் அது இது என்று தொடர்பேயற்ற கதைகள்?

உண்மையைச் சொன்னால் நாம் சிங்களவனுக்கு ஆதராவாகி விடுவோமா? தேசிக்காய்கள் வந்து வானம் நாவல் கலரென்றால், அதை மறுப்பவர் சிங்கள விசுவாசியாகி விடுவாரா? "அடடா நாவல் கலரு தேன்!" என்று முதுகு சொறிபவர் தமிழ்தேசியராகி விடுவாரா? என்ன மொக்கைக் கருத்தையா இது?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Justin said:

அறிவாளி கூட்டம் ஐயா நீங்கள் உங்களுக்கு படிப்பிச்ச வாத்தியார்கள் உங்களுக்கு படிபிச்சு விட்டு பாடசாலை வாசல் தாண்ட முதலே உங்கடை விதண்டாவாத அறிவினால மாரடைப்பு வந்து நேரே மேல் உலகம்  அல்லது தெறிச்சு ஓடியிருப்பினம் அல்லது வாத்தியார் தொழிலையே மறந்து இருப்பினம் .

On 7/8/2019 at 11:26 AM, பெருமாள் said:

இலங்கையில் பிரஜை ஒருவருக்கு தற்போது 530,000 ரூபாய் கடன் இருப்பதாக முன்னாள் கணக்காய்வாளர் நாயகம் காமினி விஜயசிங்க தெரிவித்துள்ளார்.

ராஜபக்ச பயங்கரவாதக் கும்பல் கொள்ளையடித்த சொத்துக்களை மீட்டால் இந்த தொகை பாதியாகக் குறையும்!

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, பெருமாள் said:

அறிவாளி கூட்டம் ஐயா நீங்கள் உங்களுக்கு படிப்பிச்ச வாத்தியார்கள் உங்களுக்கு படிபிச்சு விட்டு பாடசாலை வாசல் தாண்ட முதலே உங்கடை விதண்டாவாத அறிவினால மாரடைப்பு வந்து நேரே மேல் உலகம்  அல்லது தெறிச்சு ஓடியிருப்பினம் அல்லது வாத்தியார் தொழிலையே மறந்து இருப்பினம் .

பெருமாள் அண்ணை, எனக்குப் படிப்பிச்ச ஆசிரியர்களில் பலர் இன்னும் உயிரோடிருக்கீனம் என்று சொன்னால் நம்பவா போகிறீர்கள்?

உங்களுக்கு என்ன பிரச்சினை? ஒரு ரெக்னிகல் விடயத்தை ஒருவர் சுட்டிக் காட்டும் போது ஆராய்ந்து  ஏற்றுக் கொள்ளும் அல்லது ஆதாரங்கள் தந்து மறுதலிக்கும் பண்பில்லாமல் படிப்பு, ஆசிரியர் எண்டு அலட்டிக் கொண்டிருக்கிறீர்கள்! நான் உங்களுக்குப் படிப்பித்த ஆசிரியர்களை மட்டுமல்ல, உங்கள் படிப்பைக் கூட இழுத்துப் பேசப் போவதில்லை! யார் எவ்வளவு ஊற்றினாலும் பாத்திரம் ஓட்டையாய் இருந்தால் விளைவு பூச்சியம் என்பதை முதலாம் வகுப்பிலேயே கற்றுக் கொண்டு விட்டேன்! 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Justin said:

குழப்பதின் மறுபெயர்தான் உங்கள் பெயராக்கும் .

  • கருத்துக்கள உறவுகள்
Just now, பெருமாள் said:

குழப்பதின் மறுபெயர்தான் உங்கள் பெயராக்கும் .

சரி, தேசிய கடன் சுமை மட்டும் கொண்டு பொருளியல் நிலையைக் கணித்திருக்கும் ஒரு நாட்டை உதாரணம் தந்து குழப்பம் தீருங்கள்! தெளிவாக இருக்கிறீர்கள் அல்லவா?

  • கருத்துக்கள உறவுகள்

இது பெருமாள் அண்ணைக்கல்ல, அவர் தெளிவாகத் தான் இருக்கிறார்! ஏனையோர் தேசிய கடன்சுமை- மொத்த உற்பத்தி விகிதத்தின் பயன்பாடு பற்றி அறிந்து கொள்ள வாசிக்கலாம்!

https://www.thebalance.com/what-is-the-debt-to-gdp-ratio-1978993

இதுவும் பெருமாள் அண்ணைக்கல்ல! இந்த உலகவங்கி இணையத்தில் 2014 வரையான தேசிய கடன் சுமை மொத்த உற்பத்தி விகிதம் அனேகமான நாடுகளுக்கு என்ன என்று அறிந்து கொள்ளலாம் (சிங்கப்பூரைக் கவனியுங்கள்!)

https://data.worldbank.org/indicator/GC.DOD.TOTL.GD.ZS?view=chart

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Justin said:

இப்படி நாங்களும் நாலு லிங்க் என்ன நூறு லிங்க் இங்கு போட முடியும் விளக்கம் முக்கியம் பாஸ் .

எனக்கு போடாவிட்டாலும் பின்னுக்கு வருபவர்களுக்கு விளக்கம் தேவை அவர்கள் உங்களை தப்பாக நினைக்க கூடாது பாருங்க .

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, பெருமாள் said:

இப்படி நாங்களும் நாலு லிங்க் என்ன நூறு லிங்க் இங்கு போட முடியும் விளக்கம் முக்கியம் பாஸ் .

எனக்கு போடாவிட்டாலும் பின்னுக்கு வருபவர்களுக்கு விளக்கம் தேவை அவர்கள் உங்களை தப்பாக நினைக்க கூடாது பாருங்க .

விளக்கத்திற்குத் தான் அண்ணை இணைப்புப் போட்டிருக்கு! "லிங்கை அழுத்தி உள்ளே போய் வாசிக்கவும்" என்று வழிமுறை உங்களுக்குத் தேவையானால் போட்டு விடுவா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.