Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நீங்கள் நோய்களை தீர்ப்பதென்றால் வைத்தியசாலைகளை மூடி விடலாமா?: மதம் மாற்ற முயன்ற குழுவை விரட்டிய இளைஞர்கள்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பொன்னாலை மற்றும் கல்விளான் கிராமங்களில் மதம் பரப்பும் நோக்கத்துடன் சுவிசேசக் கூட்டம் நடத்துவதற்கு முற்பட்ட கிறிஸ்தவ சபை ஒன்றின் உறுப்பினர்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டனர். இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை இச்சம்பவம் இடம்பெற்றது.

பொன்னாலையில், கிறிஸ்தவ மக்கள் எவரும் வசிக்காத இடத்தில், தனியார் காணி ஒன்றில் இசை நிகழ்வுடன் கூடிய கூட்டம் ஒன்றை நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. வெளி இடத்தில் இருந்து பேருந்து ஒன்றிலும் மோட்டார் சைக்கிள்களிலுமாக நூற்றுக்கணக்கானோர் கொண்டுவரப்பட்டு இறக்கப்பட்டனர்.

இதை அவதானித்து அங்கு சென்ற அவ்வூர் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் இருவர், யார் அனுமதி வழங்கியது என அப்பகுதி மக்களைக் கேட்டபோது அவர்கள், தாங்களாகவே இவர்கள் வந்து இங்கு கூட்டம் நடத்துகின்றார்கள் என்றனர்.

67553201_2484902468232742_70312353919947எதற்காகக் கூட்டம் நடத்துகிறீர்கள் என வந்தவர்களிடம் கேட்டபோது, நோய், பிணிகளில் இருந்து மக்களை விடுவிப்பதற்கான நிகழ்வு எனப் பதிலளித்தனர். அப்படியாயின் வைத்தியசாலைகளை மூடிவிட்டு நீங்களே ஜெபியுங்கள் என ஆத்திரத்துடன் கூறிய அவ் இளைஞர்கள் உடனடியாக இந்த இடத்தில் இருந்து வெளியேறுங்கள் என அவர்களை எச்சரித்தனர்.

பொன்னாலை பூர்வீகமாக சைவப் பூமி. இங்கு மதம் பரப்பும் செயற்பாடுகளில் ஈடுபட்டால் விளைவுகள் விபரீதமாக முடியும் என ஊரவர்களுடன் இணைந்து அவர்களைக் கடுமையாக எச்சரித்தனர். உடனடியாக இந்த இடத்தை விட்டு வெளியேறுங்கள் எனக் கூறி பலவந்தமாக அவர்களை வெளியேற்றினர்.

குறித்த கூட்டத்தினருக்கு தலைமை தாங்கி வந்த பாதிரியார், காலையில் தூக்கத்தால் எழும்பும்போது ‘இயேசுவே எனக் கூறியவாறு எழும்புங்கள்’ என தங்களை அறிவுறுத்தினார் என அங்கிருந்த சிறுவர்கள் தெரிவித்தனர்.

67319134_2484902308232758_18916668531602 பொன்னாலையில் இருந்து வெளியேற்றப்பட்ட குறித்த அல்லேலூயாக் கும்பல் அடுத்த கிராமமான கல்விளானில் கூட்டத்தை நடத்திக்கொண்டிருந்தனர். அந்தப் பகுதியைச் சேர்ந்த சனசமூக நிலையத்தின் பிரதிநிதிகள் அங்கு சென்று அவர்களைப் பலவந்தமாக வெளியேற்றினர்.

http://www.pagetamil.com/66122/?fbclid=IwAR3gQ09TR8Zd1D_b4T7D364t4A9C8MboOyaiatihfBGqj4KvjcTAEHTasFc

  • கருத்துக்கள உறவுகள்

தரமான சம்பவம். இருக்கிற பிரச்சினைக்குள்....   அரியண்டம் தாங்க முடியவில்லை.

18 hours ago, பெருமாள் said:

குறித்த கூட்டத்தினருக்கு தலைமை தாங்கி வந்த பாதிரியார், காலையில் தூக்கத்தால் எழும்பும்போது ‘இயேசுவே எனக் கூறியவாறு எழும்புங்கள்’ என தங்களை அறிவுறுத்தினார் என அங்கிருந்த சிறுவர்கள் தெரிவித்தனர்.

சிறுவர்களை இப்படி ஏமாத்துவது மிக மிக கொடுமையான விஷயம்.
இவர்கள் சஹ்ரான் போன்ற ஒரு பயங்கரவாதக் கும்பலா இருக்கும்.
இவங்களை எல்லாம் சிறைகளில் தள்ளனும்!

ஏன் சிறுவர் காலைல அந்த பெயரை சொல்லணும்?
அது ஆர் அந்த ஏசு?
அப்படி ஒராள் இருந்தார் என்றதுக்கு என்ன ஆதாரம் இருக்கு?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, Rajesh said:


அது ஆர் அந்த ஏசு?
அப்படி ஒராள் இருந்தார் என்றதுக்கு என்ன ஆதாரம் இருக்கு?

மூண்டு ஆணி பிடிங்க முடியாதவர் எப்படி கடவுள் ஆனார் என்று புரியவில்லை .

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, பெருமாள் said:

மூண்டு ஆணி பிடிங்க முடியாதவர் எப்படி கடவுள் ஆனார் என்று புரியவில்லை .

அநேகர் எதிர்த்து வலியுறுத்தும் ஒரு கருத்து தான் இந்த "மதம் மாற்றம்", "தேவையற்ற மத பிரச்சாரம்".
எமது சைவ தொண்டு அமைப்புகள், கோயில்கள் சரியான படி மக்களை அரவணைத்து எங்கள் சைவ, தமிழ் பாரம்பரியங்களை நிலைநிறுத்தினாலேயே இந்த சபைகளுக்கும், மிஷனரிகளுக்கும் கிராக்கி இருக்காது.

எது எப்படியோ, இங்கே யேசுநாதரையும் அவர் போதனைகளையும் இழித்து கருத்தாடுவது முறையல்ல.
தனிப்பட்ட ஒரு கூட்டத்து செயல்களை கண்டியுங்கள். அதுவே சரியானது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Sasi_varnam said:

அநேகர் எதிர்த்து வலியுறுத்தும் ஒரு கருத்து தான் இந்த "மதம் மாற்றம்", "தேவையற்ற மத பிரச்சாரம்".
எமது சைவ தொண்டு அமைப்புகள், கோயில்கள் சரியான படி மக்களை அரவணைத்து எங்கள் சைவ, தமிழ் பாரம்பரியங்களை நிலைநிறுத்தினாலேயே இந்த சபைகளுக்கும், மிஷனரிகளுக்கும் கிராக்கி இருக்காது.

எது எப்படியோ, இங்கே யேசுநாதரையும் அவர் போதனைகளையும் இழித்து கருத்தாடுவது முறையல்ல.
தனிப்பட்ட ஒரு கூட்டத்து செயல்களை கண்டியுங்கள். அதுவே சரியானது.

மன்னித்துகொள்ளுங்கள் சசி வர்ணம் எதோ ஒரு வேகத்தில் அப்படி எழுதிவிட்டன் . மனிசனாய் பிறந்து சாமி ஆகிவிட்டம் என்பவர்கள் எல்லாம் பிராடு கூட்டம் என்பது என் முடிவு .

மற்றவர்களை மதம் மாற்றும் கோஷ்டிகளுக்கு உண்மையில் கடவுள் நம்பிக்கை இல்லை. பணத்துக்காக தான் மதம் மாற்றுபவர்கள். அதிலும் பலர் ஏற்கனவே மதம் மாறியவர்கள்.

வெளிநாடுகளிலும் வேலை எடுத்து தருகிறோம், பண உதவி செய்கிறோம் என்று கூறி மதம் மாற்றி விட்டு அவர்களை கொண்டே வேறு பலரையும் மதம் மாற்றுவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, பெருமாள் said:

மன்னித்துகொள்ளுங்கள் சசி வர்ணம் எதோ ஒரு வேகத்தில் அப்படி எழுதிவிட்டன் . மனிசனாய் பிறந்து சாமி ஆகிவிட்டம் என்பவர்கள் எல்லாம் பிராடு கூட்டம் என்பது என் முடிவு .

சாமிகள் மட்டுமல்ல நாடுகளை ஆளும் ஆசாமிகளும் பிராடு கூட்டம்தான். பிராடுகள் ஒன்றை ஒன்று கட்டியணைத்து குத்தாட்டம் போடுகின்றன. இது மனிதர் வாழும் யுகமல்ல, மனிதமிருகங்கள் வாழும் யுகம்.

10 hours ago, தமிழ் சிறி said:

எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்சவுக்கு “World Icon Award” என்ற சர்வதேச விருது வழங்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு வருடமும் இந்தியாவினால் வல்லுநர்களுக்காக “World Icon Award” விருது வழங்கப்படுகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

பல வளர்ந்த நாடுகளில் இருக்கும் வெள்ளையர்கள் கூட மதம் மாறி இருக்கின்றார்கள். இவர்கள் பணத்திற்காகவா, வேலைக்காகவா தெரியவில்லை.

இப்படி விரட்டியடிப்பது தவறானது. 

1 hour ago, colomban said:

பல வளர்ந்த நாடுகளில் இருக்கும் வெள்ளையர்கள் கூட மதம் மாறி இருக்கின்றார்கள். இவர்கள் பணத்திற்காகவா, வேலைக்காகவா தெரியவில்லை.

இப்படி விரட்டியடிப்பது தவறானது

 

உண்மைதான் 

இப்படி விரட்டி அடிக்காமல் செருப்பால் இரண்டு அடியாவது அடித்து விரட்டி இருக்க வேண்டும் இந்த கள்ளர் கூட்டத்தை.

யாழ்.ஆயரின் உரை வரலாற்றில் பதிவிடப்படும்

தமிழ் மக்கள் ஒருபோதும் மதத்தால் பிளவுபட்டிருந்தவர்கள் அல்ல. தமிழ் மக்களிடம் இருக்கக்கூடிய மதங்கள் அவர்களிடையே பேதங்களை ஏற்படுத்தவில்லை.
 
தவிர, விடுதலைப் புலிகளும் மதசார்பு என்பதற்கு இம்மியும் இடம் கொடுக்காமல் இருந்தனர்.
 
 அப்போதெல்லாம் மதங்கள் தமிழினத்தை வலுப்படுத்தினவேயன்றி பிளவுபடுத்த வில்லை.
 
ஆனால் இன்றைய நிலைமை வேறுவிதமாக உள்ளது. தமிழ் இனத்தைப் பிளவுபடுத்துகின்ற இலக்கை நோக்காகக் கொண்டு மதவாதம் முன்வைக்கப்படுகிறது. 
 
இந்த முன்வைப்பு மன்னாரில் இருந்து ஆரம்பித்துள்ளது. மன்னாரில் ஆரம்பித்த மத பேதமைக்கு இன்னமும் தீர்வு காணமுடியாமல் உள்ளது.
 
மன்னாரில் இருக்கக்கூடிய அரச நிர்வாகம் ஒரு மதத்தலைவரின் கட்டுப்பாட்டில் இருப்ப தாகக் கூறப்படுகிறது எனும்போது, இதற்குப் பின்னால் எத்தனை கோடி ரூபாய்கள் சுழற்சிப்பட்டிருக்கும் என்பதை ஊகிக்க முடியும்.
 
இதுதவிர, மன்னார் திருக்கேதீச்சரவளைவை அமைப்பதற்கு அனுமதி வழங்கிய மன்னார் பிரதேச சபை மீண்டும் அதனை இரத்துச் செய்திருக்கிறது.
 
முஸ்லிம் இனம் சார்ந்தவரே அந்தப் பிரதேச சபையின் தவிசாளராக இருக்கிறார்.
 
 திருக்கேதீச்சர வளைவை அமைப்பதற்கு அனுமதி கொடுத்த பின்னர் அதனை இரத்துச் செய்யும்படி மன்னார் ஆயர் கூறினார் என்பதற்காக அனுமதியை இரத்துச் செய்வது  என் றால் இஃது ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதத்தை விட பயங்கரமானதாகும்.
 
சட்டதிட்டங்களுக்கு அமைய அனுமதி வழங்கப்பட்ட பின்னர் மன்னார் ஆயர் கூறி விட்டார் என்பதற்காக அந்த அனுமதியை இரத்துச் செய்வதெனும்போது இதற்குப் பின்னால் இருக்கக்கூடிய எழுதப்படாத உடன்படிக்கை, ஒப்பந்தங்கள் எவ்வளவு வலுவாக இருக்கும் என்பதை சாமானியர்களும் புரிந்து கொள்வர்.
 
எனவே இது விடயங்களில் கவனம் செலுத்தப்படாவிட்டால் மன்னாரில் இருக்கக் கூடிய இந்து மக்களை இலக்கு வைத்துக் குண்டுத் தாக்குதல்கள் இடம்பெறலாம் என அனுமானிக்க வேண்டிய நிலைமை இன்றைய சூழ்நிலையில் உள்ளது.
 
இவை ஒருபுறமிருக்க, நானாக இருந்தால் திருக்கேதீச்சர வளைவை அமைக்க அனு மதித்திருப்பேன் என யாழ்ப்பாண மறை மாவட்ட ஆயர் மேதகு ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை கூறியுள்ளார்.
 
அவர் கூறியது தொடர்பில் சைவ - கத்தோலிக்க மக்கள் ஆச்சரியமடையமாட்டார்கள்.
ஏனெனில் யாழ்ப்பாண மறைமாவட்ட ஆயரின் சிந்தனை தமிழினத்தின் ஒற்றுமை என்பதுதான்.
 
எனவே சமயத்தால் தமிழினம் பேதப்படுவதை அவர் ஒருபோதும் விரும்பவில்லை. அத னால் தான் திருக்கேதீச்சர வளைவை அமைப்பது தொடர்பில் தான் எதிர்வாதம் புரியமாட்டேன் எனக் கூறியுள்ளார்.
 
உண்மையில் திருக்கேதீச்சர வளைவு என்பது ஒரு பெரும் விடயமல்ல. அது சாதாரணமானது.
 
ஆனால் அதனை எதிர்த்தபோது நிலைமை பூதாகரமாகிவிட நம் தமிழினம் தடக்குப்படுகிறது. 
 
இந்த நிலைமையை மாற்றி தமிழ் மக்களின் ஒற்றுமையை ஏற்படுத்துவதற்காக யாழ்.ஆயர் மேதகு ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை அப்போதும் இப்போதும் கூறியவை நிச்சயம் வரலாற்றுப் பதிவில் இடம்பெறும்.
 

அன்றும் பல மதம் இருந்ததே அதையும் தாண்டி அன்பு இருந்ததே !

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.