Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கன்னியா விவகாரம் ; நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Featured Replies

திருகோணமலை சர்சைக்குரிய கன்னியா தொடர்பாக மேல்நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்த ஐந்து  இடைக்காலத்தடை உத்தரவுக்கோரிக்கையில் நான்கை மேல் நீதிமன்றம் ஏற்று அதற்கான தடையுத்தரவை இன்று பிறப்பித்தது.

kanniyta.jpg

இதனடிப்படையில் பல ஆயிரமாம் ஆண்டுகளாக இந்து மக்கள் வழிபட்டு வந்த வழிபாட்டுரிமை மற்றும் பிதிர்கடன் நடவடிக்கைகளுக்கு எந்தத் தடையும் தொல்பொருள் திணைக்களம் வழங்கமுடியாது எனவும்  அறிவிக்கப்பட்டுள்ளது.

 பிள்ளையார் ஆலயம் இருந்தாக குறிக்கப்பட்ட இடத்தில் ஆலயத்தை மீள அமைப்பதற்கு தொல்பொருள் திணைக்களம் விதிக்கப்பட்டிருக்கும் தடையை நீக்கி அவ்விடத்தில் ஆலயம் கட்ட அனுமதிக்க வேண்டும் என்கின்ற கோரிகையை தவிர மேலும் சமர்ப்பிக்கப்பட்ட நான்கு கோரிக்கைளையும் மேல்நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளம்செழியன் ஏற்றுக்கொண்டு குறித்த பிரதேசத்தின் காணி உரிமையாளரான மாரியம்மன் ஆலய முகாமையளாரினால் முன்வைக்கப்பட்ட தடையுத்தரவு கோரிக்கைகளுக்கு  ஆதரவாக நீதிமன்றம் இவ்வுத்தரவை வழங்கியுள்ளது.

திருகோணமலை மாகாண மேல்நீதிமன்றத்திற்குள்ள கிழக்கு மாகாண காணி தொடர்பான எழுத்தாணைக்கமைய இந்நடவடிக்கையை நீதிமன்றம் எடுத்துள்ளது. இன்றைய இந்த நீதிமன்ற நடவடிக்கையில் பாராளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் வழக்காளியான ஆலய முகாமையாளர் தரப்பில் ஆஜாராகியிருந்தார்.

இதற்கிணங்க இந்துக்களின் மத நடவடிக்கைளுக்கு எவரும் எந்தத் தடையும் ஏற்படத்தமுடியாது என சட்டத்தரணி சுமந்திரன் குறிப்பிட்டார்.

https://www.virakesari.lk/article/60930

 

இந்துக்கள் தமது பூர்வீக நிலத்தை அனுபவிக்க வழி அமைக்கப்பட்டுள்ளது - எம்.ஏ.சுமந்திரன்

கன்னியா வெந்நீருற்று பகுதியை மீள பூர்விக மக்களிடம் கையளிக்குமாறு திருகோணமலை நீதி மன்ற கட்டித் தொகுதியில் அமைந்துள்ள கிழக்கு மாகாண மேல் நீதி மன்றத்திலே மிக முக்கியமான நான்கு விடயங்களுக்கு நீதி மன்றம் தடையுத்தரவை வழங்கி இந்துக்கள் தமது பூர்வீக நிலத்தை அவர்கள் அனுபவிக்க வழி அமைக்கப்பட்டுள்ளது. என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் சிரேஸ்ட சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

 

மாகாண மேல் நீதி மன்றத்தில் தடையுத்தரவை பெற்றதன் பின் நீதி மன்ற முன்றலில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த எம்.ஏ.சுமந்திரன் இவ்வாறு தெரிவித்தார்.

 

suma.jpg

நீண்டகாலமாக நிலவி வந்த கன்னியா வெந்நிருற்று ஆதனத்தின் பிரச்சினைக்கு தீர்வு கிட்டப்பட்டுள்ளது. இந்த ஆதனங்கள் திருகோணமலை மாரியம்மன் ஆலயத்திற்கு சொந்தமான ஆதனங்கள் அதனுடைய நம்பிக்கைப் பொறுப்பளராக உள்ள கோகிலவாணி ரமனி அம்மா உள்ளார். எனவே அவர்தான் இன்று வழக்கைகின் மனுதாரராக நீதி மன்றத்திற்கு கொண்டு வந்து வெந்நிருற்று பகுதி மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் பல்லாயிரம் ஆண்டுகளாக இந்து மக்கள் செய்து வந்த கிரிகைகளை தற்போது தொல்பொருள் திணைக்களம் தடுக்கின்றது என்ற முறைப்பாட்டை வைத்திருக்கின்றார்.

இது சம்மந்தமான எழுத்தாணை வழங்குகின்ற அதிகாரம் மாகாண மேல் நீதி மன்றத்திற்கு கொடுக்கப்பட்டுள்ளது. காணி தொடர்பான அதிகாரங்கள் கிழக்கு மாகாண சபைக்கு கொடுக்கப்பட்டிருக்கின்ற படியால் காணி தொடர்பாக எவரையும் கட்டுப்படுத்துகின்ற அதிகாரம் கொண்ட எழுத்தானைகளை நீதி மன்றம் வழங்க முடியும். எனவே கிழக்கு மாகாண நீதி மன்றம் இன்று 22ம் திகதி திருகோணமலை அமர்விலே எமது எழுத்தனை மனுவை பரிசீலித்து நீதி மன்ற நியாயத்திட்டத்திற்கு உட்பட்ட விடயம் கருதி இந்த வழக்கு தொடர்பாக எதிர் மனுதாரருக்கு நாங்கள் கொடுத்த அறிவித்தல்கள் அவர்களுக்கு முறையே சேர்ப்பிக்கப்பட்டது. என்பதை உறுதி செய்து நாங்கள் கேட்டுக் கொண்ட இடைக்கால தடை உத்தரவு ஐந்தில் நான்கை நீதி மன்றம் வழங்கியுள்ளது.

இதில் ஒரு இடைக்கால தடையுத்தரவு பிள்ளையார் ஆலயத்தை மீள கட்டுவதை எவரும் தடுக்கக் கூடாது என்று கேட்டிருந்தோம் அதனை நீதி மன்றம் வழங்க வில்லை. அது சம்மந்தமாக தொல் பொருள் திணைக்களம் வரத்தமானி அறிவித்தல் ஒன்றினை விடுத்துள்ளது. எனவே வழக்கின் இடையில் அல்லது வழக்கின் இறுதியில் இது தொடர்பாக இரு தரப்பினையும் விசாரித்து தீர்ப்பு வழங்குவதாக மன்று கூறியுள்ளது.

எனினும் மிக அவசரமான  மற்றைய நான்கு விடயங்களுக்கும் நீதி மன்றத்தால் தடையுத்தரவு வழங்கப்பட்டள்ளது.

இவற்றில் முதலாவதாக பிள்ளையார் ஆலயம் இருந்த இடத்தில் விகாரை அமைப்பதை உடனடியாக நிறுத்துமாறு நீதி மன்ற தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும்  இந்த பிரதேசத்திற்கு பக்தர்கள் செல்வதைத் தடுக்கக் கூடாது, அடுத்தாக  ஆலயத்திற்கும் இப்பிரதேசத்திற்கும் செல்பவர்களிடம் டிக்கட் விற்று  பணம் பெறக் கூடாது என்றும் சுதந்திரமாக இந்து மக்கள் சென்று வர வேண்டும் என்றும் அதனை அவரும் தடுக்கக் கூடாது என்றும் இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 அடுத்தாக இந்த ஆதனங்களுக்கு நம்பிக்கைப் பொறுப்பாளராக உள்ள கோகிலவாணி ரமனி அம்மா அவர்களும் அவர்களின் முகவர்களும் இந்த பிரதேசத்தை நிர்வகிப்பதில் எவரும் தடுக்கக் கூடாது என்றும் நான்காவதாக மிகுதிப் பிரதேசத்தை அதாவது பிள்ளையார் ஆலயம், வெந்நீருற்று உள்ள இடத்தை தவிர்ந்த ஏனைய பிரதேசங்களை புனரமைப்பு செய்வதையும் எவரும் தடுக்கக் கூடாது என்றும் நான்கு இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

242.jpg

நீதி மன்ற கட்டளைகளையும் நீதி மன்ற பதிவாளர் ஊடாக அனுப்புகின்ற அறிவித்தலையும் எதிர்மனுதாரர் இருவருக்கும் அனுப்பி அவர்கள் இருவரையும் எதிர்வரும் ஓகஸ்ட் 29ம் திகதி சமூகமளிக்குமாறு அழைப்பானையும் அனுப்பப்பட்டுள்ளது.

மேலும் அவசரமாக இன்னுமொரு கோரிக்கையையும் முன் வைத்தோம். அதாவது இந்த வெந்நீருற்றுக்களிலே தான் இறந்த தங்களுடைய மூதாதைகளுக்கான பிதுர் கடன்களை இந்து சமயத்தவர் செய்வது வழக்கம் அதிலேயும் விசேடமாக ஆடி ஆமாவாசையன்று இதனை அணைவரும் மேற்கொள்வது வழக்கம் எதிர்வரும் 31ம் திகத இந்த ஆடி அமாவாசை தினம் ஆதலால் இந்து பக்தர்கள் அங்கு செல்வதை தடுப்பார்கள் அப்படி தடுக்கக் கூடாது என்ற தடையுத்தரவு தற்போது கிடைக்கப் பெற்றுள்ளது. எனவே எந்த தடையும் இல்லாது இந்துக்கள் ஆடி அமாவாசை தினத்தில் தங்களது கிரிகைகளை  மேற் கொள்ள முடியும் . என்றார்

முழு இந்து மக்களுக்குமாக கோகிலவாணி ரமனி அம்மையார் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார். அவருக்கும் அனைத்து மக்கள் சார்பிலும் நன்றி சொல்ல நாம் கடமைப்பட்டுள்ளோம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/60935

 

சொறிலங்காவின் நீதிமன்றில் வேறுவழிகளின்றி வழக்கை தாக்கல் செய்தவர்களுக்கும் வாதாடிய சுமந்திரனுக்கும் வாழ்த்துக்கள், நன்றிகள்!

இந்த இடைக்கால தீர்ப்புகளையும் கடந்து நிரந்தர தீர்வுவரை இவங்க எல்லாரும் சளைக்காது பயணிக்க வேண்டும்!

அங்க புத்த பிக்குகளால் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட கட்டடங்கள் அத்தனையும் அகற்றபட வேண்டும்.

இறுதியாக 2 வருடங்களுக்கு முன்னர் சென்றிருந்த போது சிங்களக் காடையர்கள் டிக்கெட் வாங்கும்படி கட்டாயப்படுத்திய போது அவர்களோடு முரண்டுபிடித்து உள்ளே சென்றிருந்தோம்.

சுமந்திரன் உருப்படியா ஒரு வேலை செய்யத் தொடங்கிருக்கார்.
பாதில விட்டுட்டு ஓடாம இருக்கோணும்.

  • தொடங்கியவர்

இந்த செய்தி கூறி நிற்கும் ஒரு உண்மை : தமிழர் தரப்பால் ஒரு சட்ட அமைப்பு நிறுவப்படல் வேண்டும்.

அது கட்சி சார்பு அற்றதாக, மக்களுக்காக செயல்படல் வேண்டும்.

அது மக்களால் தரப்படும் நிதியில் இயங்கவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

நீதிமன்றத் தீர்ப்பு நிலைக்கும் என்று நம்பவில்லை. அது வேறொரு வடிவில்வந்து இந்தத் தீர்ப்பபை தகர்த்துச் சிங்களம் கன்னியாவை முழுமையாகக் கைப்பற்றும்.

சிங்கள-பௌத்த பயங்கரவாத இயந்திரத்தின் நீதித்துறை எப்பொழுதுமே தமிழினத்துக்கு எதிராகவே இயங்கிவந்துள்ளது.

அவ்வப்போது அதில் தப்பித்தவறி ஓரிரு நடுநிலைவாதிகள் இருந்துவந்தாலும் 99.99% தமிழினத்துக்கு நீதியான தீர்வுகள் கிடைத்ததாக இன்றுவரை சரித்திரத்தித்தில் இல்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 7/22/2019 at 3:01 PM, Rajesh said:

சுமந்திரன் உருப்படியா ஒரு வேலை செய்யத் தொடங்கிருக்கார்.
பாதில விட்டுட்டு ஓடாம இருக்கோணும்.

என்னது உருப்படியான வேலையா? போகப்போகும் தெரியும் பாருங்கோ.
சுகம் வரும் ஆள் தப்பாது. 🤣

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.