Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாகிஸ்தான், சீனா பிடித்து வைத்துள்ள ஆக்ரமிப்பு காஷ்மீரையும் மீட்போம்,.. மக்களவையில் அமித்ஷா ஆவேச அறிவிப்பு,.. எதிர்க்கட்சிகள் சரமாரி கேள்வியால் பரபரப்பு

Featured Replies

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியலமைப்பு சட்டப்பிரிவு 370ஐ நீக்கும் தீர்மானம் மற்றும் காஷ்மீரை 2 யூனியன் பிரதேசமாக பிரிக்கும் மசோதா மக்களவையில் நேற்று நிறைவேறியது. மசோதா மீதான விவாதத்தின் போது எதிர்க்கட்சிகளின் சரமாரி கேள்விகளுக்கு பதிலளித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ‘பாகிஸ்தான், சீனா பிடியில் உள்ள ஆக்ரமிப்பு காஷ்மீரையும் உயிரை கொடுத்தாவது மீட்போம்’ என சூளூரைத்தார். காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370ஐ நீக்கியும், ஜம்மு காஷ்மீர், லடாக் என 2 யூனியன் பிரதேசமாக இம்மாநிலத்தை பிரிப்பதற்கான உத்தரவை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பிறப்பித்தார். இதைத் தொடர்ந்து, சட்டப்பிரிவு 370ஐ நீக்குவதற்கான தீர்மானமும், காஷ்மீர் மறுவரையறை சட்ட மசோதாவையும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று முன்தினம் மாநிலங்களவையில் தாக்கல் செய்தார். மத்திய அரசு மிக ரகசியமாக வைத்திருந்த இந்த நடவடிக்கையை எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்தன.

ஆனாலும், மாநிலங்களவையில் மசோதா நிறைவேற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து மக்களவையிலும் சட்டப்பிரிவு 370ஐ நீக்கும் தீர்மானத்தையும், மறுவரையறை சட்ட மசோதாவையும் அமித்ஷா தாக்கல் செய்தார். இதன் மீதான விவாதம் நேற்று நடந்தது.  மசோதாவுக்கு பகுஜன் சமாஜ், தெலுங்கு தேசம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், பிஜூ ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தந்தன. பாஜ கூட்டணியில் உள்ள ஐக்கிய ஜனதா தளமும், திரிணாமுல் காங்கிரசும் விவாதத்தில் பங்கேற்காமல் வெளிநடப்பு செய்தன. காங்கிரஸ், திமுக, தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், மத்திய பாஜ அரசின் நடவடிக்கைகளை கண்டித்து சரமாரி கேள்விகளை எழுப்பின. காங்கிரசின் அவைத் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பேசுகையில், ‘‘இதை உள்நாட்டு விவகாரம் என கூறுகிறீர்கள். ஆனால், 1948ம் ஆண்டு முதல் இவ்விவகாரத்தை ஐநா கண்காணித்து வருகிறது.

அதுதவிர, சிம்லா ஒப்பந்தம், லாகூர் பிரகடனம் போன்றவை மேற்கொள்ளப்பட்டு உள்ளன. எனவே, இது உள்நாட்டு விவகாரமா, சர்வதேச விவகாரமா என்பதை விளக்குங்கள்,’’ என்றார். இதற்கு பதிலளித்த அமித்ஷா, ‘‘காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்த ஒரு பகுதி. அதில் எந்த சந்தேகமும் இல்லை. எப்போதுமே நான் ஜம்மு காஷ்மீர் என கூறும் போது, பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீர் மற்றும் அக்சாய் சினா (சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதி) சேர்த்துதான் குறிப்பிடுவேன். இவ்விரு பகுதிகளும் காஷ்மீரின் எல்லைக்குஉட்பட்டதே. அதை மீட்க நாங்கள் உயிரையும் கொடுப்போம்.

காஷ்மீர் விவகாரத்தை ஐநா தான் தீர்க்க வேண்டுமென காங்கிரஸ் கருதுகிறதா?,’’ என்றார்.இதற்கு எதிர்ப்பு தெரிவித்த காங்கிரஸ் உறுப்பினர்கள், ‘‘ஏன் மிகவும் ஆவேசமாக பேசுகிறீர்கள்,’’ என்றனர். அதற்கு அமித்ஷா, ‘‘பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி அல்ல என நீங்கள் நினைப்பதைப் பார்த்துதான் ஆவேசமடைகிறேன்,’’ என்றார்.

உடனே காங்கிரஸ் எம்பி மணீஷ் திவாரி, ‘‘நேரு மேற்கொண்ட முயற்சியால்தான் ஜம்மு காஷ்மீர், ஜூனகாத், ஐதராபாத் ஆகியவை இந்தியாவின் ஒரு அங்கமாக இருக்கின்றன,’’ என்றார். அதற்கு அமித்ஷா, ‘‘இதுவே நீங்கள் சர்தார் வல்லபாய் படேலின் பங்களிப்பை உதாசீனப்படுத்துகிறீர்கள் என்பதற்கு ஓர் உதாரணம். காஷ்மீர் தீர்மானத்தை கொண்டு வருவதில் இருந்து எங்களை யாராலும் தடுத்த நிறுத்த முடியாது,’’ என்றார். தேசியவாத காங்கிரஸ் எம்பி சுப்ரியா சுலே பேசுகையில், ‘‘கடந்த 2 தினங்களுக்கு முன் பேசிய காஷ்மீர் கவர்னர், ‘நாங்கள் சட்டப்பிரிவு 370ஐ நீக்க மாட்டோம்’ என உறுதி அளித்து நாட்டை தவறாக வழிநடத்தி உள்ளார்,’’ என்றார். தேசிய மாநாட்டு கட்சி எம்பி ஹஸ்னைன் மசூதி பேசுகையில், ‘‘உங்களின் இந்த நடைமுறையை, வரலாறு ஒருபோதும் மன்னிக்காது,’’ என்றார். அதே சமயம், தேசிய மாநாட்டு கட்சி எம்பி.யும், காஷ்மீரின் முன்னாள் முதல்வருமான பரூக் அப்துல்லா அவைக்கு வராததும் குறித்தும் எதிர்க்கட்சியினர் பல்வேறு சந்தேகங்களை கிளப்பினர்.

இறுதியில் எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு அமித்ஷா பதிலளித்து பேசியதாவது: சட்டப்பிரிவு 370ஐ நீக்கும் தைரியமான முடிவை பிரதமர் மோடி எடுத்துள்ளார். இந்த சிறப்பு அந்தஸ்தானது அரசியலமைப்பில் மிகப்பெரிய பாகுபாட்டை ஏற்படுத்தி வந்தது. சிறுபான்மையினர், பெண்கள், மக்கள் நலனுக்கு எதிராக இருந்தது காஷ்மீரில் கடந்த 1989ம் ஆண்டு முதல் தீவிரவாதத்தால் 41,500 பேர் பலியாகி உள்ளனர். அங்கு தீவிரவாதத்தை முற்றிலும் ஒடுக்க முடியாததற்கு காரணம் இந்த சட்டப்பிரிவு 370ம், 35ஏ.வும் தான். சிறப்பு அந்தஸ்தால், ஜம்மு காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்த ஒரு பகுதியா என்பதிலேயே சந்தேகம் இருந்து வந்தது. இனி அந்த சந்தேகம் களையப்படும். காஷ்மீர் விவகாரம் தொடர்பாக, ஹூரியத் (பிரிவினைவாத) தலைவர்களிடம் எந்த ஆலோசனையும் நடத்த நாங்கள் விரும்பவில்லை. ஆனால், காஷ்மீர் மக்களுடன் பேச தயாராக இருக்கிறோம். அரசின் இந்த முடிவு வரலாற்றுப் பிழை அல்ல. வரலாற்றில் நடந்த பிழையை சரிசெய்யும் நடவடிக்கை. இது சரியான முடிவா இல்லையா என்பதை வரலாறு தீர்மானிக்கும்.

அதே சமயம் காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பியதும், மீண்டும் மாநில அந்தஸ்து வழங்குவதில் எங்களுக்கு எந்த தயக்கமும் இல்லை.  சில வடகிழக்கு மாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 371ஐ நீக்கும் எந்த உள்நோக்கமும் இந்த அரசுக்கு இல்லை என்பதையும் தெளிவுபடுத்த விரும்புகிறேன். இனி பாகிஸ்தான், சீனாவிடம் உள்ள ஆக்ரமிப்பு காஷ்மீரையும் மீட்கும் முயற்சிகளை இந்தியா மேற்கொள்ளும். இவ்வாறு அவர் பேசினார்.

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=516234

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, ampanai said:

இனி பாகிஸ்தான், சீனாவிடம் உள்ள ஆக்ரமிப்பு காஷ்மீரையும் மீட்கும் முயற்சிகளை இந்தியா மேற்கொள்ளும். இவ்வாறு அவர் பேசினார்.

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=516234

இது மட்டும் நடக்கட்டும் இந்தியா வல்லரசு என்று ஒத்துக்கொள்ளலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ampanai said:

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியலமைப்பு சட்டப்பிரிவு 370ஐ நீக்கும் தீர்மானம் மற்றும் காஷ்மீரை 2 யூனியன் பிரதேசமாக பிரிக்கும் மசோதா மக்களவையில் நேற்று நிறைவேறியது. மசோதா மீதான விவாதத்தின் போது எதிர்க்கட்சிகளின் சரமாரி கேள்விகளுக்கு பதிலளித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ‘பாகிஸ்தான், சீனா பிடியில் உள்ள ஆக்ரமிப்பு காஷ்மீரையும் உயிரை கொடுத்தாவது மீட்போம்’ என சூளூரைத்தார். காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370ஐ நீக்கியும், ஜம்மு காஷ்மீர், லடாக் என 2 யூனியன் பிரதேசமாக இம்மாநிலத்தை பிரிப்பதற்கான உத்தரவை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பிறப்பித்தார். இதைத் தொடர்ந்து, சட்டப்பிரிவு 370ஐ நீக்குவதற்கான தீர்மானமும், காஷ்மீர் மறுவரையறை சட்ட மசோதாவையும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று முன்தினம் மாநிலங்களவையில் தாக்கல் செய்தார். மத்திய அரசு மிக ரகசியமாக வைத்திருந்த இந்த நடவடிக்கையை எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்தன.

ஆனாலும், மாநிலங்களவையில் மசோதா நிறைவேற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து மக்களவையிலும் சட்டப்பிரிவு 370ஐ நீக்கும் தீர்மானத்தையும், மறுவரையறை சட்ட மசோதாவையும் அமித்ஷா தாக்கல் செய்தார். இதன் மீதான விவாதம் நேற்று நடந்தது.  மசோதாவுக்கு பகுஜன் சமாஜ், தெலுங்கு தேசம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், பிஜூ ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தந்தன. பாஜ கூட்டணியில் உள்ள ஐக்கிய ஜனதா தளமும், திரிணாமுல் காங்கிரசும் விவாதத்தில் பங்கேற்காமல் வெளிநடப்பு செய்தன. காங்கிரஸ், திமுக, தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், மத்திய பாஜ அரசின் நடவடிக்கைகளை கண்டித்து சரமாரி கேள்விகளை எழுப்பின. காங்கிரசின் அவைத் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பேசுகையில், ‘‘இதை உள்நாட்டு விவகாரம் என கூறுகிறீர்கள். ஆனால், 1948ம் ஆண்டு முதல் இவ்விவகாரத்தை ஐநா கண்காணித்து வருகிறது.

அதுதவிர, சிம்லா ஒப்பந்தம், லாகூர் பிரகடனம் போன்றவை மேற்கொள்ளப்பட்டு உள்ளன. எனவே, இது உள்நாட்டு விவகாரமா, சர்வதேச விவகாரமா என்பதை விளக்குங்கள்,’’ என்றார். இதற்கு பதிலளித்த அமித்ஷா, ‘‘காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்த ஒரு பகுதி. அதில் எந்த சந்தேகமும் இல்லை. எப்போதுமே நான் ஜம்மு காஷ்மீர் என கூறும் போது, பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீர் மற்றும் அக்சாய் சினா (சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதி) சேர்த்துதான் குறிப்பிடுவேன். இவ்விரு பகுதிகளும் காஷ்மீரின் எல்லைக்குஉட்பட்டதே. அதை மீட்க நாங்கள் உயிரையும் கொடுப்போம்.

காஷ்மீர் விவகாரத்தை ஐநா தான் தீர்க்க வேண்டுமென காங்கிரஸ் கருதுகிறதா?,’’ என்றார்.இதற்கு எதிர்ப்பு தெரிவித்த காங்கிரஸ் உறுப்பினர்கள், ‘‘ஏன் மிகவும் ஆவேசமாக பேசுகிறீர்கள்,’’ என்றனர். அதற்கு அமித்ஷா, ‘‘பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி அல்ல என நீங்கள் நினைப்பதைப் பார்த்துதான் ஆவேசமடைகிறேன்,’’ என்றார்.

உடனே காங்கிரஸ் எம்பி மணீஷ் திவாரி, ‘‘நேரு மேற்கொண்ட முயற்சியால்தான் ஜம்மு காஷ்மீர், ஜூனகாத், ஐதராபாத் ஆகியவை இந்தியாவின் ஒரு அங்கமாக இருக்கின்றன,’’ என்றார். அதற்கு அமித்ஷா, ‘‘இதுவே நீங்கள் சர்தார் வல்லபாய் படேலின் பங்களிப்பை உதாசீனப்படுத்துகிறீர்கள் என்பதற்கு ஓர் உதாரணம். காஷ்மீர் தீர்மானத்தை கொண்டு வருவதில் இருந்து எங்களை யாராலும் தடுத்த நிறுத்த முடியாது,’’ என்றார். தேசியவாத காங்கிரஸ் எம்பி சுப்ரியா சுலே பேசுகையில், ‘‘கடந்த 2 தினங்களுக்கு முன் பேசிய காஷ்மீர் கவர்னர், ‘நாங்கள் சட்டப்பிரிவு 370ஐ நீக்க மாட்டோம்’ என உறுதி அளித்து நாட்டை தவறாக வழிநடத்தி உள்ளார்,’’ என்றார். தேசிய மாநாட்டு கட்சி எம்பி ஹஸ்னைன் மசூதி பேசுகையில், ‘‘உங்களின் இந்த நடைமுறையை, வரலாறு ஒருபோதும் மன்னிக்காது,’’ என்றார். அதே சமயம், தேசிய மாநாட்டு கட்சி எம்பி.யும், காஷ்மீரின் முன்னாள் முதல்வருமான பரூக் அப்துல்லா அவைக்கு வராததும் குறித்தும் எதிர்க்கட்சியினர் பல்வேறு சந்தேகங்களை கிளப்பினர்.

இறுதியில் எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு அமித்ஷா பதிலளித்து பேசியதாவது: சட்டப்பிரிவு 370ஐ நீக்கும் தைரியமான முடிவை பிரதமர் மோடி எடுத்துள்ளார். இந்த சிறப்பு அந்தஸ்தானது அரசியலமைப்பில் மிகப்பெரிய பாகுபாட்டை ஏற்படுத்தி வந்தது. சிறுபான்மையினர், பெண்கள், மக்கள் நலனுக்கு எதிராக இருந்தது காஷ்மீரில் கடந்த 1989ம் ஆண்டு முதல் தீவிரவாதத்தால் 41,500 பேர் பலியாகி உள்ளனர். அங்கு தீவிரவாதத்தை முற்றிலும் ஒடுக்க முடியாததற்கு காரணம் இந்த சட்டப்பிரிவு 370ம், 35ஏ.வும் தான். சிறப்பு அந்தஸ்தால், ஜம்மு காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்த ஒரு பகுதியா என்பதிலேயே சந்தேகம் இருந்து வந்தது. இனி அந்த சந்தேகம் களையப்படும். காஷ்மீர் விவகாரம் தொடர்பாக, ஹூரியத் (பிரிவினைவாத) தலைவர்களிடம் எந்த ஆலோசனையும் நடத்த நாங்கள் விரும்பவில்லை. ஆனால், காஷ்மீர் மக்களுடன் பேச தயாராக இருக்கிறோம். அரசின் இந்த முடிவு வரலாற்றுப் பிழை அல்ல. வரலாற்றில் நடந்த பிழையை சரிசெய்யும் நடவடிக்கை. இது சரியான முடிவா இல்லையா என்பதை வரலாறு தீர்மானிக்கும்.

அதே சமயம் காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பியதும், மீண்டும் மாநில அந்தஸ்து வழங்குவதில் எங்களுக்கு எந்த தயக்கமும் இல்லை சில வடகிழக்கு மாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 371ஐ நீக்கும் எந்த உள்நோக்கமும் இந்த அரசுக்கு இல்லை என்பதையும் தெளிவுபடுத்த விரும்புகிறேன். இனி பாகிஸ்தான், சீனாவிடம் உள்ள ஆக்ரமிப்பு காஷ்மீரையும் மீட்கும் முயற்சிகளை இந்தியா மேற்கொள்ளும். இவ்வாறு அவர் பேசினார்.

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=516234

காஸ்மீருக்கு என்றால் தக்காளி சட்னியா?
ஈழத்தமிழருக்கும் இதுதான் நடக்கும் ... இப்போது ஏதும் கண்துடைப்புக்கு 
தந்தாலும் பின்னாளில் பறித்து கொள்வார்கள்.
வல்லவன் வாழ்வான் என்பதுதான் சரித்திரம். 

பொருளாதார ரீதியாக பெரு விருட்ஷமாக இலங்கையில் வளர 
கூடிய அனைத்தும் தமிழருக்கு கனிந்து இருக்கிறது .... இப்படி ஒரு சூழல் 
பின் வருமா என தெரியவில்லை ... இதை எப்படி பயன் படுத்துவோம் என்றுதான் 
தெரியவில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Maruthankerny said:

பொருளாதார ரீதியாக பெரு விருட்ஷமாக இலங்கையில் வளர 
கூடிய அனைத்தும் தமிழருக்கு கனிந்து இருக்கிறது .... இப்படி ஒரு சூழல் 
பின் வருமா என தெரியவில்லை

?

எதை வைத்து சொல்கிறீர்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Maruthankerny said:

காஸ்மீருக்கு என்றால் தக்காளி சட்னியா?
ஈழத்தமிழருக்கும் இதுதான் நடக்கும் ... இப்போது ஏதும் கண்துடைப்புக்கு 
தந்தாலும் பின்னாளில் பறித்து கொள்வார்கள்.
வல்லவன் வாழ்வான் என்பதுதான் சரித்திரம். 

பொருளாதார ரீதியாக பெரு விருட்ஷமாக இலங்கையில் வளர 
கூடிய அனைத்தும் தமிழருக்கு கனிந்து இருக்கிறது .... இப்படி ஒரு சூழல் 
பின் வருமா என தெரியவில்லை ... இதை எப்படி பயன் படுத்துவோம் என்றுதான் 
தெரியவில்லை. 

மருது வாசிக்க நல்லாத் தான் இருக்கு.
ஆனாலும் அடி நுனி எதுவுமே புரியலை.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Kadancha said:

?

எதை வைத்து சொல்கிறீர்கள்?

3 hours ago, ஈழப்பிரியன் said:

மருது வாசிக்க நல்லாத் தான் இருக்கு.
ஆனாலும் அடி நுனி எதுவுமே புரியலை.

வெளிநாடுகளில் இருக்கும் ஒவ்வரு ஈழத்தமிழரும் 
ஒரு முதலீட்டு நிறுவனத்தை நிறுவி  ஒவ்வரு நாட்டிலும் கிளைகள் தொடங்கி 
ஒவ்வருவரும் மாதம் $150- $300 வரை முதலீடு செய்தால் ...
10 வருடத்தில் இலங்கையின் 30-40 வீதமான பொருளாதாரத்தை கட்டு படுத்தலாம்.
வெறும் $10 டொலர் மாதம் மாதம் தானம் செய்தால் 
பசி உடை வீடு இன்றி ஒரு ஈழ தமிழனும் இல்லை என்று ஆக்கலாம். 
இந்த பணம் முதலீட்டு லாபத்துடன் திரும்பி வரும்.
இலங்கையில் மட்டுமே முதலீடு செய்ய வேண்டும் என்று இல்லை 
எங்கு எல்லாம் லாபம் சாத்தியமோ அங்கு எல்லாம் செய்ய முடியும்.
ஈழ தமிழரின் சிறு சிறு வியாபார நிறுவனங்களை விரிவாக்கலாம்.
ஊரில் விவசாயத்தை ஊக்குவித்து நேரடி மரக்கறி இறக்குமதியை செய்யலாம். 
நாம் பொருளாதார ரீதியாக முன்னேற வேண்டும் ... இதுதான் கல்வியில் முன்னேற வாய்ப்பு தரும். 

இப்படி ஒரு காலம் பின் நாட்களில் கணியப்போவது இல்லை.
நாம் எதையாவது உருப்படியாக செய்தால்தான் அடுத்த தலைமுறை 
அதை பின்தொடரும். நாம் குடுமி சண்டை செய்து கொண்டு இருந்தால் 
அடுத்த தலைமுறை தள்ளி நிற்கவே பார்க்கும். 

பெருளாதார வளர்ச்சி 
முதலீடு சம்மந்தமாக ஈழத்தமிழரிடம் போதிய அறிவில்லை 
அடுத்தவனுக்கு பகடை காட்டும் கிணத்து தவளைகள் போல் 
வாழ்வதால் சக்திக்கு மீறி ஆடம்பர கார்கள் வாங்குவது 
சாமத்திய வீடு காலியான வீடு 50வது பிறந்த நாள் என்று 
கஸ்ரபட்டு உழைத்த காசை வீணடிக்கும் ஒரு நாதாரி கூட்டமாக 
அகதியாக ஏற்றுக்கொண்ட நாட்டு மக்கள் சிரிக்கும்படி 
கோமாளிகளாக திரிகிறார்கள்.

யாழில் கல்வியில் திளைத்த தமிழர்கள் 
அருமையான சந்தர்ப்பம் கிடைத்தும் இன்று அதிகம் போதையில் 
திளைக்கும் கூட்டமாக ஆகி இருக்கிறார்கள். 

  • தொடங்கியவர்
11 minutes ago, Maruthankerny said:

இப்படி ஒரு காலம் பின் நாட்களில் கணியப்போவது இல்லை.
நாம் எதையாவது உருப்படியாக செய்தால்தான் அடுத்த தலைமுறை 
அதை பின்தொடரும். நாம் குடுமி சண்டை செய்து கொண்டு இருந்தால் 
அடுத்த தலைமுறை தள்ளி நிற்கவே பார்க்கும். 

நல்ல விடயம், கருத்து.

இதற்கு எப்படி உருவம் கொடுக்கலாம்?
சின்னதாக ஆரம்பிக்கப்படல் வேண்டும் என எண்ணுகிறேன்.
உதவுவர்களுக்கும் அங்கு இணைபவர்களுக்கும் நம்பகத்தன்மையை உருவாக்கல் வேண்டும்.
அத்துடன் சிங்கள அரசுடன் இணைந்தும் தான் செயல்பட வேண்டி வரும். வேறு சிக்கல்களும் வரலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

மருதர் சொன்னது போல முதலாவது ஆடம்பர செலவுகளை குறைத்தாலே முதல் கிடைக்கும், முதலீடு லாபங்கள் அடுத்த கட்டம்.

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, ampanai said:

நல்ல விடயம், கருத்து.

இதற்கு எப்படி உருவம் கொடுக்கலாம்?
சின்னதாக ஆரம்பிக்கப்படல் வேண்டும் என எண்ணுகிறேன்.
உதவுவர்களுக்கும் அங்கு இணைபவர்களுக்கும் நம்பகத்தன்மையை உருவாக்கல் வேண்டும்.
அத்துடன் சிங்கள அரசுடன் இணைந்தும் தான் செயல்பட வேண்டி வரும். வேறு சிக்கல்களும் வரலாம்.

உண்மைதான் அம்பனை 
நாம் துரோகத்தால் அழிந்தவர்கள் 
நம்பக தன்மையை எப்படி உருவாக்குவது 
அதி எப்படி பாதுக்காப்பது என்பது மிகவும் முக்கியம் 

எனது தனி பட்ட கருத்து 
அனுபவம் குறைவு என்றாலும் தலைமை பொறுப்புக்களை 
நாம் அடுத்த இளைய சமூகத்திடம் கொடுப்பதே நன்று 
நாம் ஆலோசர்களாக இருக்கலாம் ..... அதுவும் ஆபத்துதான் காரணம் 
நாம் ஏற்கனவே  இயக்கங்கள்  சாதிகள்  ஊர்கள் என்று சண்டை போட்டவர்கள் 
எமது புத்திக்குள் அது எப்படியும் எங்கோ ஒரு மூலையில் இருந்துகொண்டே இருக்கும்.
ஆதலால் எமது ஆலோசைனைகளில் அந்த தாக்கம் நிற்சயம் இருக்கும். 

  • தொடங்கியவர்
1 hour ago, Maruthankerny said:

அனுபவம் குறைவு என்றாலும் தலைமை பொறுப்புக்களை 
நாம் அடுத்த இளைய சமூகத்திடம் கொடுப்பதே நன்று 
நாம் ஆலோசர்களாக இருக்கலாம் ..... அதுவும் ஆபத்துதான் காரணம் 

உண்மை. இதை ஜாக் மா வும் (அலிபாபா, சீனா) கூறி இருந்தார்.
 
கீழ்வரும் பட்டியல் ஒன்று தேவை :
- என்னென்ன துறைகளில் எமது மக்களுக்கு தேவைகள் உண்டு
- என்னென்ன துறைகளில் துறை சார் வல்லுநர்கள் உள்ளார்கள்
- என்னென்ன துறைகளில் அதிக இலாபம் சம்பாதிக்கலாம்

பலாலியில் திறக்கப்பட இருக்கும் விமான நிலையம் தாய்த்தமிழகத்துடனும் இதர இந்திய மாநிலங்களுடனும் ஒரு புதிய பொருளாதார கதவை திறக்கும். இதில் கல்வி, மருத்துவம், உல்லாசத்துறை, விவசாயம் போன்ற துறைகளில் தமிழர் தாயகம் முன்னேற வேண்டும்.  

15 hours ago, Maruthankerny said:

சில வடகிழக்கு மாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 371ஐ நீக்கும் எந்த உள்நோக்கமும் இந்த அரசுக்கு இல்லை என்பதையும் தெளிவுபடுத்த விரும்புகிறேன். 

15 hours ago, Maruthankerny said:

காஸ்மீருக்கு என்றால் தக்காளி சட்னியா?
ஈழத்தமிழருக்கும் இதுதான் நடக்கும் ... இப்போது ஏதும் கண்துடைப்புக்கு 
தந்தாலும் பின்னாளில் பறித்து கொள்வார்கள்.
வல்லவன் வாழ்வான் என்பதுதான் சரித்திரம். 

அதில் கூறப்படும் வடகிழக்கு மாநிலங்கள் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள், இலங்கையின் வடகிழக்கு மாகாணங்களல்ல. 

ஈழத்தமிழர்களுக்கு ஏதும் தர வேண்டிய அவசியம் இந்தியாவுக்கு இல்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Lara said:

அதில் கூறப்படும் வடகிழக்கு மாநிலங்கள் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள், இலங்கையின் வடகிழக்கு மாகாணங்களல்ல. 

ஈழத்தமிழர்களுக்கு ஏதும் தர வேண்டிய அவசியம் இந்தியாவுக்கு இல்லை. 

இதுக்குள்ளே நீங்க வேற பகிடி விட்டுக்கொண்டு 

அது தெரிந்துதான் எழுதினேன்  ஆசாம் நாகலாந்து மிசோரம் போன்ற இடங்களில்தான் 
இந்த 371 இருக்கிறது.

நான் எழுதியது அவர்கள் தவுருவதை வைத்து அல்ல 
அப்படி தந்தால் கூட வைத்து பாதுகாக்க கூடிய ஒரு நிலை 
எம்மிடம் இல்லை என்பதும் ..... பின்னாளில் இப்படி அவர்கள் 
அதையும் புடுங்கி கொள்வார்கள் என்பதையும்தான். 

எம்மிடம் ஒரு ஆளுமை இருந்தால் மட்டுமே பேரம் பேச முடியும் 

எங்களிடம் எங்கே மாநிலம் இருக்கு?
மாகாணம் தான் உண்டு. 

33 minutes ago, Maruthankerny said:

நீங்கள் கூற வந்தது எனக்கு புரிந்தது.

யாரோ முன்னர் எழுதியிருந்தார் இந்தியா இலங்கையின் வடகிழக்கு மாகாணங்களை தனது மாநிலமாக்கலாம் என்று. அது தான் சும்மா அவ்வாறு ஒரு கருத்து பதிந்தேன். 😊

Edited by Lara

  • கருத்துக்கள உறவுகள்

ஜம்மு மேட்டரை முடித்த கையோடு தமிழகம் விரையும் அமித்ஷா...! 11 ஆம் தேதி காத்திருக்கும் டிவிஸ்ட்...!

image.jpg

ஜம்முகாஷ்மீர் சிறப்பு ஆந்தஸ்த்தை நீக்கிய கையோடு மத்திய அமைச்சர் அமித்ஷா தமிழகம் வருகைதர உள்ளார், இது தமிழக மக்களிடையே ஒரு எதிர்பார்ப்பை கிளப்பி உள்ளது.

கடந்த 70 ஆண்டுகளாக ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்த்து வழங்கி வந்த சட்டப்பிரிவு 370 ஐ நீக்கியதுடன், அதை பாராளுமன்றத்தில் சட்டமாகவும் மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது, இது சர்வதேச அளவில் பெரும் சலசலப்பையும் ஏற்படுத்திஉள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கையை திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளதுடன். ஜம்முவுக்கு வந்த நிலைமை நாளை தமிழகத்துக்கும் வராது என்பது என்ன நிச்சயம் என்று கேள்வி எழுப்பி  மத்திய அரசை சாடி வருகின்றனர்.

இந்த நிலையில் மத்திய அமைச்சர் அமித்ஷா வரும் 11 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை தமிழகம் வர உள்ளார் , அவரின் வருகை தமிழக அரசியல் மற்றும் பொது மக்கள் மத்தியில் பெரும்  எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது, துணை குடியரசுத்தலைவர் வெங்கையா நாயுடு அவர்கள் எழுதிய புத்தக வெளியீட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கில் வரும் 11 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது

அதில் கலந்து கொண்டு புத்தகத்தை வெளியிட வருகை தருகிறார் என்றும், அந்த நிகழ்ச்சிக்கு பின்னர் பாஜக கட்சி நிர்வாகிகளை சந்திக்க திட்டமிட்டுள்ளார் எனவும் தகவல்கள் கூறுகின்றன

எல்லா மாநிலங்களிலும் வெற்றி கொடி நாட்டிவரும் பாஜகவால் தமிழகத்தில் பெயரளவிற்கு கூட காலுன்ற முடியவில்லையே என்ற சோக நெருப்பு  பாஜகவின் முன்னணி தலைவர்கள் நெஞ்சில் கனன்று கொண்டுதான் இருக்கிறது என்பதை அனைவரும் அறிவர், அப்படி உள்ள நிலையில் அமித்ஷா ஒரு மாநிலத்திற்கு அடிக்கடி வருகிறார் என்றால் அம்மாநிலத்தை அவரின் டார்கெட் லிஸ்ட்டில் வைத்துள்ளார் என்று அர்த்தம் என்று அமித்ஷாவை அறிந்தவர்கள் சொல்லும் தகவலாக இருக்கிறது. தமிழகத்தை என்ன செய்ய உத்தேசம் அமித் ஷா ஜீ...

https://tamil.asianetnews.com/politics/amitsha-planned-to-coming-tamilnadu-on-11th-julay-august-2019-pvx89b

  • தொடங்கியவர்

Aksai Chin | சீன ஆக்ரமிப்பு காஷ்மீர்

  • கருத்துக்கள உறவுகள்
Quote

‘பாகிஸ்தான், சீனா பிடியில் உள்ள ஆக்ரமிப்பு காஷ்மீரையும் உயிரை கொடுத்தாவது மீட்போம்’ என சூளூரைத்தார்.

இந்தியாவின் முதுகு வலிக்கு சரியான நிவாரணம் கிடைக்கும். 😂

  • கருத்துக்கள உறவுகள்

அடடே.. ஜம்மு காஷ்மீர் மாநில முதல் துணை நிலை ஆளுநராக போவது யார் தெரியுமா.?

vijay-kumar-ips3-1565430463.jpg

ஸ்ரீநகர்: தமிழகத்தை சேர்ந்த விஜயகுமார் ஐபிஎஸ், காஷ்மீர் துணை நிலை ஆளுனராக பொறுப்பேற்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.1975ம் ஆண்டு தமிழ்நாடு ஐபிஎஸ் அதிகாரியான விஜயகுமார், தென்மண்டல ஐஜியாக பதவி வகித்தபோது, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம் பகுதிகளில் உச்சத்தில் இருந்த ஜாதி கலவரங்களை கட்டுக்குள் கொண்டுவந்ததில் முக்கிய பங்காற்றினார்.

சந்தனக் கடத்தல் மன்னன், வீரப்பன் தேடுதல் வேட்டையின்போது, இவரது தலைமையிலான அதிரடிப்படையினர்தான் வீரப்பனை சுட்டுக் கொன்றனர். இதனால் நாடு முழுக்க புகழ் பெற்றவர் விஜயகுமார்.2010 ல் சத்தீஸ்கரில் உள்ள டன்டேவாடாவில் நடந்த நக்சலைட் தாக்குதலில் 75 சிஆர்பிஎஃப் வீரர்கள் கொல்லப்பட்டனர்.

இதையடுத்து விஜயகுமார் சிஆர்பிஎஃப் இயக்குநர் ஜெனரலாக (டிஜி) நியமிக்கப்பட்டார். இதன் பின்னர் இப்பகுதியில் நக்சலைட் நடவடிக்கைகள் பெரிதும் குறைத்து ஒடுக்கப்பட்டன.தற்போது, விஜயகுமார் ஜம்மு காஷ்மீர் ஆளுனர் சத்யபால் மாலிக்கின் ஆலோசகராக இருக்கிறார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை ஜம்மு காஷ்மீர், லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக மத்திய அரசு பிரித்திருக்கிறது. அக்டோபர் 31ம் தேதி முதல் இரு யூனியன் பிரதேசங்களும் செயல்பட ஆரம்பிக்கும்.அதில், ஜம்மு காஷ்மீர் முதல் துணை நிலை ஆளுநராக விஜயகுமார் நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதேபோல பீகாரை சேர்ந்த 1974ம் ஆண்டு கேரளா பேட்ஜ் ஐபிஎஸ் அதிகாரி தினேஷ்வர் ஷர்மா பெயரும் இதே பதவிக்கான போட்டியில் உள்ளது.மத்திய உளவுப் பிரிவின் முன்னாள் தலைவர் இவர். காஷ்மீர் குறித்த ரகசிய தகவல்களை அரசுக்கு தெரிவிக்கும் பொறுப்பில்தான் இப்போதும் உள்ளார்.

வனப்பகுதிகளில் நக்சல் நடவடிக்கைகளை கண்டறிவது, ஒடுக்குவது போன்றவற்றில் திறமையானவர் விஜயகுமார் என்பதால், அவருக்குதான், ஜம்மு காஷ்மீரின் முதல் துணை நிலை ஆளுநர் பதவி கிடைக்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.

https://tamil.oneindia.com/news/india/vijay-kumar-ips-may-become-the-first-lieutenant-governor-of-jammu-and-kashmir-359749.html

  • கருத்துக்கள உறவுகள்

முதல்ல ஊச்ச்சா போறதுக்கு குஜராத்திலே ஒழுங்கா ஒரு பாத்ரூம் கட்டுங்கள் 
பிறகு போருக்கு போறத பற்றி யோசிக்கலாம் 

  • கருத்துக்கள உறவுகள்
On 8/8/2019 at 4:44 PM, புரட்சிகர தமிழ்தேசியன் said:

ஜம்மு மேட்டரை முடித்த கையோடு தமிழகம் விரையும் அமித்ஷா...! 11 ஆம் தேதி காத்திருக்கும் டிவிஸ்ட்...!

image.jpg

roflphotos-dot-com-photo-comments-20190527172140.jpg

roflphotos-dot-com-photo-comments-20190612214725.jpg

roflphotos-dot-com-photo-comments-20190529164640.jpg

roflphotos-dot-com-photo-comments-20190529112257.jpg

"நண்டு,   கொழுத்தால்.... வளையில்  தங்காது"  என்று சொல்வார்கள்.
இந்திய நண்டு கொளுத்து... விட்டது.  🤣
இனியென்ன.....  அயல்நாடுகள் எல்லாத்துக்கும்.... 
நித்தமும்.... சோறும், கறியும் தான்.  🦊

டிஸ்கி:   வாங்க மச்சான், வாங்க....  சீனா, ஸ்ரீலங்கா,  அமெரிக்கா, பாகிஸ்தான், ஆஃப்கானின்ஸ்தான், வங்காளதேசம்,.... 🤠

டிஸ்கிக்கு டிஸ்கி:  (வி)டுபட்ட   சொந்தங்களான.... நேபாளம், திபேத், அந்தமான்  போன்ற பங்காளிகளும்,  விருந்துக்கு...  வந்து,  மொய்  எழுதலாம்.  :grin:

இப்படிக்கு...
ஹீ..ந்தியா. 🤑

Edited by தமிழ் சிறி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.