Jump to content

உடன்கட்டை ஏறுதலும் இந்துமதமும்


Recommended Posts

பதியப்பட்டது

  உலகின் எல்லா மதங்களும் மூடத்தனத்தையே போதிக்கிறது. எனினும்  இந்து மதம்   மூடத்தனத்தின் மொத்த உருவம் என்பது சாதாரண அறிவுள்ள எவருக்கும் புரிந்துவிடும். ஆனால் சில மடையர்கள் அதில் விஞ்ஞானம் இருக்குது அது இருக்குது இது இருக்குது என்று கூறிதிரிகிறார்கள்.
இந்துமதத்தவர்கள் கணவன் இறந்தால் மனைவியையும் நெருப்பில் கணவனோடு எரிப்பது வழக்கமாக இருந்தது. அது மனிதாபிமானத்திற்கு எதிரானது என்பதால் பிரித்தானியர் அதை தடைசெய்தார்கள்.

இது பற்றி புராணங்களில் என்ன உள்ளது என பார்ப்போம்:
. இந்துமத புராணங்களில் நிகழ்ந்த உடன்கட்டை ஏறுதல்கள் சில:
—-

1.கிருஷ்ணனின் பிணத்தோடு அவனது 8 மனைவிகள், மற்றும் யாதவர்களது மனைவிகள், பாலராமனுடைய மனைவி முதலியோர்:

கிருஷ்ணன் வேடனின் அம்பு குத்திப்பட்டு இறந்துபோனான். அதன்பின் நடந்ததை விஷ்ணுபுராணம் இவ்வாறு சொல்கிறது,

“கேளும் மயித்ரேயரே! அங்கு வந்த அர்ஜுணன் கிருஷ்ணனுடைய உடலை தேடியெடுத்து இறுதிகிரியைகளை செய்வித்தான். அப்போது ருக்மினி உள்ளிட்ட எட்டு மனைவிகளும் கிருஷ்ணனின் உடலோடு நெருப்பினுள் பிரவேசித்தார்கள். ரேவதியும் நெருப்பினுள் நுழைந்தாள். இச்செய்திகளை உக்கிரசேனனும், வாசுதேவனும், தேவகி, ரோஹினியும் கேட்டவுடனே அக்கினியில் பிரவேசித்துவிட்டார்கள். பின்பு அர்ஜுணன் அனைவருக்கும் ஈமகிரியைகளை நடத்திவிட்டு துவாரகையிலிருந்து வச்சிரனையும் கிருஷ்ணனின் பல மனைவிகளையும் (16000 பேர்) , மற்றுமுள்ளவர்களையும் அழைத்துகொண்டு இப்புறம் வந்துவிட்டான்”
(விஷ்ணு புராணம் காண்டம் 5, அத்தியாயம் 38)

இதே நிகழ்வை ஸ்ரீமத்பாகவதம் சொல்லும்போது,

“கிருஷ்ணனுடைய பிரிவினால் மிகவும் வருந்திய அவனது பெற்றோர் தம் உயிரை அந்த இடத்திலேயே விட்டனர். பரீக்சிதரே! யாதவர்களுடைந மனைவிகள் தம் இறந்த கணவர்களை தழுவிக்கொண்டு நெருப்பினுள் பிரவேசித்தார்கள். பாலராமனுடைய மனைவிகள் அவனது உடலை தழுவிக்கொண்டும் வாசுதேவனின் மனைவிகள் அவனுடைய உடலை தழுவிக்கொண்டும் நெருப்பினுள் நுழைந்தார்கள். பிரதியும்னா உள்ளிட்ட ஹரியின் (கிருஷ்ணன்) மறுமகள்களும் தம் கணவர்களின் உடலோடு ப அக்கினியில் பிரவேசித்தார்கள். மேலும் ருக்மிணியும் கிருஷ்ணனை தம் உள்ளத்தில் வைத்திருக்கும் அவனது மனைவியரும் அவனுடைய நெருப்பினுள் நுழைந்தார்கள்”
(ஸ்ரீமத்பாகவதம் 11:31:19-20
காண்டம் 11, அத்தியாயம் 31, வசனம் 19-20)

கிருஷ்ணனோடு அவனது 8 மனைவிகளும், 16100 பேரில் ஒருத்தியான ரோகினியும், அவனது பெற்றோரும் உடன்கட்டை ஏறினார்கள். பாலராமனோடு அவனது மனைவிகள் உடன்கட்டை ஏறினார்கள். கிருஷ்ணனின் மருமகள்கள் அவர்களது கணவர்களோடு உடன்கட்டை ஏறினார்கள். பல யாதவ பெண்களும் தம் கணவர்களோடு உடன்கட்டை ஏறினார்கள்.

-------------
2.உடன்கட்டை ஏறுவது கணவனது மகிழ்ச்சிபடுத்தும் , அவன் பாவியாக இருந்தாலும். அவளுக்கு சிறந்த பாவ விமோசனம் உடன்கட்டை ஏறுதல்:
-------------
“தன் கணவனோடு உடன்கட்டை ஏறுகிற நெருப்பில் நுழைகிற பெண்ணானவள் அவனை மகிழ்ச்சியடை செய்கிறாள் அவன் பிராமணனை கொன்றிருந்தாலும், நன்றிகெட்டவனாக இருந்தாலும், அல்லது பெரும் பாவங்களால் தீட்டுப்பட்டவனாக இருந்தாலும் சரியே! இதுவே பெண்ணுக்கான மிகப்பெரிய பாவ விமோசனம் (பாவமீட்சி) என கற்றவர்கள் அறிவார்கள்”
(கூர்ம புராணம் 2:34:108-109)
------------
3.தன் கணவனோடு உடன்கட்டை ஏறுபவள் சுவர்க்கம் போகிறாளாம்!:
-----------

“சுயகட்டுப்பாட்டையும் தவங்களையும் தன் கணவனின் மரணத்திற்கு பின் மேற்கொள்ளும் விதவைபெண் சுவர்க்கம் போகிறாள்…. இறந்த தன் கணவனோடு உடன்கட்டை ஏறும் விதவை பெண்ணும் சுவர்க்கம் போகிறாள்”
(அக்னி புராணம் 222:19-23)
-----------
4.மாதுரி என்ற பாண்டுவின் மனைவி உடன்கட்டையேறியதால் சத்யலோகம் போனாளாம்!:
---------

“ஒருதடவை மாதுரி முழு இளமையோடும் அழகோடும் தனிமையான இடத்தில் தனித்திருக்கையில் பாண்டு அவளை கண்டு அவளை கட்டிதழுவினான். சாபத்தின் காரணமாக அவன் இறந்துவிட்டான். அவனது ஈமக்கிரியை நடக்கும் போது நெருப்பினுள் பத்தினியான மாதுரி நுழைந்து உடன்கட்டையேறி சதீயாக இறந்தாள்”
(தேவிபாகவதம் 6:25:35-50)

“…பாண்டுவின் ஈமகிரியைகள் கங்கைகரையில் நடப்பதை அறிந்து, மாதுரி தன் இரு மகன்களையும் குந்தியிடம் ஒப்படைத்துவிட்டு சத்யலோகத்திற்கு போவதற்கு தன்கணவனோடு சதீயை (உடன்கட்டை ஏறுதல்) மேற்கொண்டாள்”
(தேவிபாகவதம் 2:6:53-71)

இதே நிகழ்வு மகாபாரதம் ஆதிபர்வம் 1:125,126 மற்றும் 1:95 இல் கூறப்பட்டிள்ளது. 1:126 இல் சொல்லும்போது,
“அவள் உடன்கட்டையேறி தன் உயிரை மாய்த்து , பத்தினி மனைவிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை அவளது கணவனோடு அடைந்தாள்” என்று சொல்கிறது. (மகாபாரதம் ஆதிபர்வம் 1:126)

இதன் அடிப்படையில் உடன்கட்டை ஏறுவதால் பத்தினி மனைவிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை அடைந்துகொள்ளலாம் என போதிக்கபடுகிறது
-----------
5.பாகவத புராணம் கூறும் இன்னொரு உடன்கட்டை ஏறுதலும், அதற்கான இஸ்கான் அமைப்பாளர் பிரபுபாத சுவாமியின் விளக்கவுரையும்:
-----------
“அவள் விரகுகளால் பிரகாசிக்கிற நெருப்பை உண்டுபண்ணி, அதன்மீது தன் கணவனின் உடலை வைத்தாள். இது முடிந்தபோது , அவள் கடுமையாக புலம்பி ஒப்பாரிவைத்து தன்னையும் தன் கணவனோடு நெருப்பில் அழித்துகொள்ள தயாரானாள்”
(ஸ்ரீமத்பாகவதம் 4:28:50)
இதற்கு சுவாமி பிரபுபாத கூறும்போது,
“வேத அமைப்பின் நீண்ட வழக்கமானது, ஓர் உண்மையுள்ள மனைவி தன் கணவனோடு இறந்துபோவதாகும். இது சக-மரண என சொல்லப்படும். இந்தியாவில் இந்த முறையானது பிரித்தானியர் வரும்வரை பரவலாக இருந்தது. அந்த காலத்தில், ஒரு மனைவி தன் கணவனோடு சாக விரும்பாவிட்டால், அவளது உறவினர்களால் அவ்வாறு செய்ய வற்புருத்தப்படுவாள். ஆரம்பத்தில் மனைவி விருப்பத்தோடு நெருப்பினுள் நுழைந்தனர். பிரித்தானிய அரசு அந்த நடைமுறையை மனித தன்மையற்றது என கருதி நிருத்தியது. ஆனாலும் ஆரம்பகால இந்திய வரலாற்றில் நாம் காண்கிறோம், மகாராஜா பாண்டு இறந்தபோது அவனுக்கு மனைவிகள் மாதுரி ,குந்தி என இருவர் இருந்தனர். கேள்வி என்னவென்றால் ஒருத்தி சாகவேண்டுமா அல்லது இருவரும் சாகவேண்டுமா என்பதே……. 1936 இல் கூட நாங்கள் கண்டோம் ஒரு பக்தியான மனைவி விருப்பத்தோடு தன் கணவனின் நெருப்பினுள் நுழைந்தாள்.”
(Source: http://vanisource.org/wiki/SB_4.28.50 )
-------------
6.கணவனோடு உடன்கட்டை ஏறினால் அவனோடு சுவர்க்கத்தில் அவனது தலைமுடியின் அளவு வருடங்கள் வாழலாமாம்!
-------------
75. “கணவனின் பின்னால் உடனடியாக இறப்பது பெண்களின் மிக உயர்ந்த பொறுப்பு ஆகும். இதுவே வேதங்களில் கடமையாக்கப்பட்ட பாதை ஆகும்”
77. “தன் கணவனை பின்தொடரும் பெண்ணானவள், ஒரு ஆணுடைய உடலிலுள்ள உரோமங்களின் எண்ணிக்கைபோல மிக அதிகமான வருடங்கள் சுவர்க்கத்தில் அவனோடு இருப்பாள்.அதாவது மூன்றரை கோடி வருடங்கள்”
(பிரம்ம புராணம் 10:75,77)
------------
7. பத்தினி பெண் தன் கணவனோடு உடன்கட்டை ஏறினால், அவள் தன் கணவனை யமதூதர்களிடமிருந்து விடுவிக்கிறாளாம்! சுவர்க்கம் கூட்டி செல்கிறாளாம்!
-----------

இதை சொல்லி ஏமாத்தியே கொலை பண்ணுறாங்க..
ஸ்கந்த புராணம் காண்டம் 3, பிரிவு 2, அத்தியாயம் 53, வசனம் 38-41
(III:II:53:38-41)
“உடன்கட்டை ஏறுவதற்காக தன் கணவனை பின்தொடர்ந்து வீட்டிலிருந்து சுடுகாடுவரை செல்லும் பத்தினி பெண்ணானவள் சந்தேகமின்றி ஒவ்வொரு காலடிக்கும் அஷ்வமேதயாகத்தின் அந்தஸ்தை அடைகிறாள். பாம்பு பிடிப்பவன் பாம்பை அதன் புற்றுலிருந்து மீள எடுப்பதுபோல, பத்தினிபெண்ணானவள் தன் கணவனை யமயமதூதர்களிடமிருந்து மீட்டெடுத்து சுவர்க்கம் போகிறாள். பத்தினிப்பெண்ணை பார்த்து யமதூதர்கள் விரண்டு ஓடுவார்கள்…. ஒரு பத்தினிப்பெண் தன் கணவனோடு விளையாடி சுவர்க்க இன்பங்களை தன் கணவனோடு பல கோடி வருடங்கள் அனுபவிப்பாள்..”

இப்படி பல வசனங்கள் அப்பெண்கள் உடன்கட்டை ஏறுவதை தூண்டிவிடுகிறது
இதை நம்பி ஏமாறுவோர் நரகமே!!!
பிரிட்டிஷ்காரன் வரலைனா இவங்க பெண்கள் யாரும் எஞ்சியிருக்க மாட்டார்கள்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கதைகளும் காலங்களும் மாறிக்கொண்டிருக்கும் இக்காலத்தில் பழைய புண்ணை மீண்டும் மீண்டும் கிளறிக்கொண்டிருப்பது ஒரு வித வக்கிர புத்தியாகும்.
இந்தியாவில் நடக்கும் எல்லாவற்றையும் ஆராய வெளிக்கிட்டால் இந்த யுகம் தாங்காது.

Posted
8 minutes ago, குமாரசாமி said:

கதைகளும் காலங்களும் மாறிக்கொண்டிருக்கும் இக்காலத்தில் பழைய புண்ணை மீண்டும் மீண்டும் கிளறிக்கொண்டிருப்பது ஒரு வித வக்கிர புத்தியாகும்.
இந்தியாவில் நடக்கும் எல்லாவற்றையும் ஆராய வெளிக்கிட்டால் இந்த யுகம் தாங்காது.

என்னுடைய கேள்வி யாழ்நிர்வாகம் ஏன் இந்த திரியை மூடவில்லை .......?? கிறிஸ்த்தவ மதத்தை பற்றியோ அல்லது இஸ்லாமிய மதத்தை பற்றியோ இப்படியான அவதூறுகளை பரப்பினால் அதை நிர்வாகம்  நீக்காமல் இருக்குமா?.

 

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
13 minutes ago, Dash said:

என்னுடைய கேள்வி யாழ்நிர்வாகம் ஏன் இந்த திரியை மூடவில்லை .......?? கிறிஸ்த்தவ மதத்தை பற்றியோ அல்லது இஸ்லாமிய மதத்தை பற்றியோ இப்படியான அவதூறுகளை பரப்பினால் அதை நிர்வாகம்  நீக்காமல் இருக்குமா?.

 

 

 

 

விட்டுத்தள்ளுங்கள், கோடரிக்காம்புகள் ஒருபோதும் கோடரியை வெட்டுவதில்லை, அதனுடைய இலக்கு எல்லாம் மரத்தை நோக்கித்தான்.....!  

Posted
8 hours ago, tulpen said:

இந்துமதத்தவர்கள் கணவன் இறந்தால் மனைவியையும் நெருப்பில் கணவனோடு எரிப்பது வழக்கமாக இருந்தது. அது மனிதாபிமானத்திற்கு எதிரானது என்பதால் பிரித்தானியர் அதை தடைசெய்தார்கள்.

உடன்கட்டை ஏறுதல்/ஏற்றுதல் சரியான செயல் என நான் கூறவில்லை.

ஆனால் விதவையான அனைவரும் உடன்கட்டையேறியிருக்கவில்லை. இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களில் சில சில பகுதிகளில் இப்பழக்கம் சிலரிடையே இருந்தது. ஏனைய பகுதிகளில் மிக குறைவாகவே இடம்பெற்றது.

பிரித்தானியா உட்பட பல நாடுகள் witch hunting என்ற பெயரில் பலரை தீயில் எரித்ததும், தூக்கில் போட்டதுமான வரலாறு உண்டு. அதனுடன் ஒப்பிடுகையில் உடன்கட்டை ஏறி இறந்த மக்கள் மிக மிக குறைவு. 

அமெரிக்கா, பிரித்தானியா போன்ற நாடுகள் இக்காலத்திலும் ஏனைய நாடுகளுக்குள் புகுந்து மக்களை கொன்று குவிக்கும் நிலையில் அவர்களை மனிதாபிமானவர்கள் என நினைக்கும் சிலரும் உள்ளார்கள் தான். 😀

  • கருத்துக்கள உறவுகள்
Posted

VENMURASU_EPI-_140.jpg

 

குடிலுக்குள் நுழைந்ததும் மாத்ரி “அக்கா” என மெல்லிய குரலில் அழைத்தாள். குந்தியை அக்குரல் காரணமின்றி நடுங்கச்செய்தது. “நான் மணக்கோலம்பூண்டு எரிசெயலுக்குச் செல்ல வேண்டும்” என்றாள். குந்தியின் உடல் சிலிர்த்தது. பின்னால் நின்றிருந்த சேடியர் உடல்களிலும் ஓர் அசைவெழுந்து அணிகளும் உடைகளும் ஒலித்தன. குந்தி தன் உலர்ந்த உதடுகளை நாவால் ஈரப்படுத்தியபடி ஏதோ சொல்ல வாயெடுத்தாள். கண்களால் அவளை விலக்கி “நான் அவருடன் செல்வதே முறை. முன்பு நிமித்திகர் உடலில் வந்த கிந்தமர் சொன்ன வரிகளை இப்போது புரிந்துகொள்கிறேன். அவருடன் சென்று அவர் விண்நுழையும் வாயில்களை நான்தான் திறந்துகொடுக்கவேண்டும்” என்றாள் மாத்ரி.

“அவருடன் அரியணை அமர்ந்தவள் நான். அரசமுறைப்படி சிதையேறவேண்டியவளும் நானே” என்று குந்தி சொன்னாள். “அரசர் எங்கு சென்றாலும் தொடர்ந்து செல்லவேண்டும் என்ற உறுதியை எடுத்துக்கொண்டு அவர் கைகளைப்பற்றியவள் நான்.” ஆனால் மாத்ரி திடமான குரலில் “நீங்கள் இல்லையேல் நமது மைந்தர்கள் உரிய முறையில் வளரமுடியாது அக்கா. வரப்போகும் நாட்களில் அவர்களுக்குரிய அனைத்தையும் நீங்கள்தான் பெற்றுத்தரவேண்டும். அரசரும் நானும் ஆற்றவேண்டியவற்றையும் சேர்த்து ஆற்றும் வல்லமை உங்களுக்கு உண்டு. என்னுடைய மைந்தர்களை நான் உங்களிடம் ஒப்படைக்கிறேன். அவர்கள் என்றும் தங்கள் தமையன்களுக்கு பிரியமானவர்களாக இருப்பார்கள். அன்னையில்லாததை அவர்கள் ஒருகணமும் உணரப்போவதுமில்லை” என்றாள்.

தன்னுடைய சொற்களனைத்தும் மாத்ரியிடம் வீணாகிவிடும் என்று குந்தி உணர்ந்தாள். “வேண்டாம் தங்கையே. அரசருடன் அரசியர் சிதையேறவேண்டுமென்று எந்த நெறிநூலும் வகுத்துரைக்கவில்லை. அது போரில் இறந்த அரசர்களின் மனைவியரின் வழக்கம் மட்டும்தான். நான் காஸ்யபரிடமே கேட்டுச்சொல்கிறேன்” என்று சொல்லி அனகையை நோக்கித்திரும்பினாள். மாத்ரி “அதை நானும் அறிவேன் அக்கா. நான் நூல்நெறி கருதி இம்முடிவை எடுக்கவில்லை” என்றாள். “உனக்கு பெருந்தோள்கொண்டவனாகிய தமையன் இருக்கிறான். இரு அழகிய மைந்தர்கள் இருக்கிறார்கள். நீ உன் விழிகளால் அவர்களின் வெற்றியையும் புகழையும் பார்க்கவேண்டுமென்று அவர்கள் விரும்புவார்கள்…” என்றாள் குந்தி.

“நான் என் முடிவை எடுத்துவிட்டேன் அக்கா. இவ்வுலகிலிருந்து செல்லும் ஒவ்வொருவரும் முடிக்கப்படாதவையும் அடையப்படாதவையுமான பல்லாயிரம் முனைகளை அப்படியே விட்டுவிட்டு அறுத்துக்கொண்டுதான் செல்கிறார்கள். எவர் சென்றாலும் வாழ்க்கை மாறிவிடுவதுமில்லை.” குந்தி அவளுடைய முகத்தையே நோக்கினாள். அவள் அதுவரை அறிந்த மாத்ரி அல்ல அங்கிருப்பது என்று தோன்றியது. உடலென்னும் உறைக்குள் மனிதர்கள் மெல்லமெல்ல மாறிவிடுவதை அவள் கண்டிருக்கிறாள். அப்போது அறியாத தெய்வமொன்று சன்னதம் கொண்டு வந்து நிற்பதைக் கண்டதுபோலிருந்தது.

அதை உணர்ந்ததுமே அவள் எடுத்திருக்கும் முடிவை முன்னோக்கிச்சென்று கண்முன் நிகழ்வாகக் கண்டுவிட்டது அவள் அகம். உடல் அதிர “இல்லை, நான் ஒப்புக்கொள்ளப் போவதில்லை. என் ஒப்புதல் ஒருபோதும் இதற்கில்லை” என்று கூவினாள். “அக்கா, உங்கள் ஒப்புதலின்றி நான் சிதையேறமுடியாது. ஆனால் நான் மேலும் உயிர்வாழமாட்டேன் என்று மட்டும் உணருங்கள்” என்றாள் மாத்ரி. அவள் குரல் உணர்ச்சியேதுமில்லாமல் ஓர் அறிவிப்புபோலவே ஒலித்தது.

“நீ சொல்வதென்ன என்று உணர்ந்துகொள் தங்கையே. நீ எனக்கு வாழ்க்கை முழுவதும் தீராத பெரும்பழியையும் துயரத்தையும் அளித்துவிட்டுச் செல்கிறாய்…” என்று சொன்னதுமே குந்தி அக்கணம் வரை தடுத்துவைத்திருந்த உணர்வுகளை மீறவிட்டாள். அவள் கைகளைப்பிடித்து தன் நெஞ்சோடு சேர்த்துக்கொண்டு “மாத்ரி, நீ அரண்மனைக்கு வந்த நாட்களில் ஒருமுறை என் கைகளைப்பற்றிக்கொண்டு என்னிடம் அடைக்கலம் புகுவதாகச் சொன்னாய். அன்றுமுதல் இக்கணம் வரை நீ எனக்கு சபத்னி அல்ல, மகள். உன்னை நான் எப்படி அதற்கு அனுப்புவேன்? அதன்பின் நான் எப்படி வாழ்வேன்?” என்றபோது மேலும் பேசமுடியாமல் கண்ணீர் வழிந்தது. அவளை அப்படியே இழுத்து தன் உடலுடன் சேர்த்து இறுக அணைத்தாள். உடல்நடுங்க கைகள் பதற அவளை நெரித்தே கொன்றுவிடுவதுபோல இறுக்கி “மாட்டேன்… நீ என்னைவிட்டுச்செல்ல நான் ஒப்பமாட்டேன்” என்றாள்.

“அக்கா, நான் சொல்வதைக்கேளுங்கள்… நான் உங்களிடம் மட்டும் பேசவேண்டும்” என்றாள் மாத்ரி மூச்சடைக்க. குந்தி அவளை விட்டுவிட்டு விலகி அப்படியே பின்னகர்ந்து மஞ்சத்தில் அமர்ந்து தன் முகத்தை மூடிக்கொண்டாள். வெம்மையான கண்ணீர் தன் கைவிரல்களை மீறி வழிவதை அறிந்தாள். நெடுநாளைக்குப்பின் தன் கண்ணீரை தானே அறிவதை அவள் அகம் உணர்ந்தது. அந்தத் துயரிலும் அவளை அவளே கண்காணித்துக்கொண்டிருப்பதை அறிந்தபோது அவள் கண்ணீர் குறைந்தது. தன் மேலாடையால் முகத்தைத் துடைத்தாள்.

சேடியர் விலகியதும் மாத்ரி தரையில் அமர்ந்து அவளுடைய மடியில் தன் கைகளை வைத்து ஏறிட்டுப்பார்த்தாள். “அக்கா, அரசருடன் நான் சென்றேயாகவேண்டும். எனக்கு வேறுவழியே இல்லை” என்றாள். தெளிந்த விழிகளுடன் தடுமாறாத குரலில் “அவர் தன் காமத்தை முழுமைசெய்யவில்லை. நான் செல்லாமல் அவர் சென்றால் அவருக்கு நீத்தாருலகு இல்லை. வாழ்வுக்கும் மரணத்துக்கும் நடுவே இருக்கும் வெளியில் ஊழிக்காலம் வரை அவர் தவிக்கவேண்டும். அதை நான் எப்படி ஒப்புக்கொள்வேன்? இது என் கடமை…” என்றாள்.

குந்தி தன் நடுங்கும் கரங்களால் மார்பைப் பற்றிக்கொண்டு பொருளில்லாமல் பார்த்தாள். “நான் அவருடன் எரிந்த மறுகணமே அவரை என்னுடன் இணைய முடியாமல் தடுத்த இந்த இரு வீண்உடல்களையும் துறந்துவிடுவோம். அதன்பின் எங்களுக்குத் தடைகள் இல்லை. எங்களை வாழ்த்துங்கள் அக்கா.” குந்தி தன் கைகளை அவள் தலைமேல் வைத்தாள். கண்ணீர் வழிந்துகொண்டே இருக்க விம்மலுடன் ஏதோ சொல்லவந்தாள். “வாழ்த்துங்கள்” என்றாள் மாத்ரி. கம்மிய குரலில் “எனக்காகக் காத்திரு, நானும் வந்துவிடுகிறேன்” என்றாள் குந்தி. பின்னர் குனிந்து மாத்ரியை அள்ளி அணைத்துக்கொண்டாள்.

 

https://m.jeyamohan.in/54445#.XU6vdyXTVR4

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ருல்பன்,  இந்தியாவின்.... வட  மாநிலத்ததை விட, தென் மாநிலத்தவர்கள் புத்திசாலிகள் என்பதை, 
இப்போதும் நாம்... அவர்களின் செயல்களியிருந்து பார்க்கக் கூடியதாக உள்ளது.

இலங்கையில்...   உடன் கட்டை  ஏறிய ஒரு  செய்தியையும், 
நான்,  இதுவரை... கேள்விப்  பட்டதில்லை.

எங்கோ,  யாரோ... முட்டாள்  தனமான செயல்களை... செய்வதை, 
பொதுவான இந்து / சைவ  நடை முறையாக காண்பிப்பது  சரியல்ல.
நாம்... எமது, நாட்டுக்கு உகந்தது எது, ஒவ்வாதது எது என்றே... சிந்திப்பது நல்லது.

அப்படி... இருந்திருந்தால்,  எனது பாட்டா செத்து, பத்து வருசத்துக்கு பிறகு எடுத்த,   
பாட்டியின் 110 வருசத்துக்கு முந்தின... புகைப்படம் எனக்கு கிடைத்து இருக்காது.

பிற்குறிப்பு: கமெரா கண்டு பிடித்து 150 வருடங்கள் மட்டும் தான் ஆகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

உடன்கட்டை ஏறுதல், பால்யவயதுத் திருமணம் போன்றன எல்லாம் சட்டரீதியாக தடைசெய்யப்பட்டு வழக்கொழிந்துபோன சம்பிரதாயங்கள். இவற்றை சுயமாக சிந்திக்கும் எவரும் நியாயப்படுத்தப்போவதில்லை. எனவே இவற்றைப் பற்றி விவாதிப்பது நேர விரயம் என்றுதான் கருதுகின்றேன்.

தற்போதைய உடனடிப் பிரச்சினைகளாக வறுமைப்பட்ட, vulnerable ஆன தமிழர்களை இஸ்லாம், ஜெகோவாவின் சாட்சிகள் போன்ற மதமாற்றங்களும், தமிழர்களின் பூர்வீகக் கிராமங்கள் முஸ்லிம்களாலும் சிங்களவர்களாலும் அபகரிக்கப்படுவதும்,  தமிழர்களை இன ரீதியாகவும், மத ரீதியாகவும், பண்பாட்டு ரீதியாகவும் ஒடுக்கப்படுவதாகத்தான் பார்க்கின்றேன். இவற்றினைத் தடுக்க தமிழர்கள் தமது அடையாளங்கள் என்று கருதுபவற்றை முன்னிறுத்தத்தான் வேண்டும். அதற்காக தீ மிதிப்பதையும், ஆயிரம் தேங்காய்கள் உடைத்து தேர் இழுப்பதையும், தூக்குக்காவடி எடுப்பதையும் நியாயப்படுத்தவில்லை. இன்னும் புதுப்பிக்க பல விடயங்கள் உள்ளன. உதாரணமாக தாழ்த்தப்பட்டவர்கள் என்று கூறி சமூகத்தின் ஒரு பகுதியினரை உள்ளே அனுமதிக்காத கோவில்கள் சில இப்போதும் உள்ளன. இவற்றுக்கான தீர்வுகள் காணப்படவேண்டும்.

 

Posted
10 hours ago, tulpen said:

  உலகின் எல்லா மதங்களும் மூடத்தனத்தையே போதிக்கிறது. எனினும்  இந்து மதம்   மூடத்தனத்தின் மொத்த உருவம் என்பது சாதாரண அறிவுள்ள எவருக்கும் புரிந்துவிடும். ஆனால் சில மடையர்கள் அதில் விஞ்ஞானம் இருக்குது அது இருக்குது இது இருக்குது என்று கூறிதிரிகிறார்கள்.

மற்றைய மதங்களின் மூடததன்மையையும் பட்டியல் இடுங்கள். அப்பொழுது தானே நாங்கள் எது மூடத்தனத்தின் மொத்த உருவம் இந்து மதமா இல்லையா என அறிவு பூர்வமாக ஆராய்ந்து கூறலாம். 

Posted
41 minutes ago, கிருபன் said:

உடன்கட்டை ஏறுதல், பால்யவயதுத் திருமணம் போன்றன எல்லாம் சட்டரீதியாக தடைசெய்யப்பட்டு வழக்கொழிந்துபோன சம்பிரதாயங்கள். இவற்றை சுயமாக சிந்திக்கும் எவரும் நியாயப்படுத்தப்போவதில்லை. எனவே இவற்றைப் பற்றி விவாதிப்பது நேர விரயம் என்றுதான் கருதுகின்றேன்.

தற்போதைய உடனடிப் பிரச்சினைகளாக வறுமைப்பட்ட, vulnerable ஆன தமிழர்களை இஸ்லாம், ஜெகோவாவின் சாட்சிகள் போன்ற மதமாற்றங்களும், தமிழர்களின் பூர்வீகக் கிராமங்கள் முஸ்லிம்களாலும் சிங்களவர்களாலும் அபகரிக்கப்படுவதும்,  தமிழர்களை இன ரீதியாகவும், மத ரீதியாகவும், பண்பாட்டு ரீதியாகவும் ஒடுக்கப்படுவதாகத்தான் பார்க்கின்றேன். இவற்றினைத் தடுக்க தமிழர்கள் தமது அடையாளங்கள் என்று கருதுபவற்றை முன்னிறுத்தத்தான் வேண்டும். அதற்காக தீ மிதிப்பதையும், ஆயிரம் தேங்காய்கள் உடைத்து தேர் இழுப்பதையும், தூக்குக்காவடி எடுப்பதையும் நியாயப்படுத்தவில்லை. இன்னும் புதுப்பிக்க பல விடயங்கள் உள்ளன. உதாரணமாக தாழ்த்தப்பட்டவர்கள் என்று கூறி சமூகத்தின் ஒரு பகுதியினரை உள்ளே அனுமதிக்காத கோவில்கள் சில இப்போதும் உள்ளன. இவற்றுக்கான தீர்வுகள் காணப்படவேண்டும்.

 

கிருபன் நீங்கள் சுட்டிக்காட்டிய விடயம் உண்மையானது. காலாவதியான விடயங்களை விவாதிப்பது நேரவிரயமே என்பதை ஏற்றுக்கொள்ளுகிறேன். ஆனால் தற்போது நடைமுறையில் கடைப்பிடிக்கப்படும் மூடத்தனங்களை சுட்டிக்காட்டும் போது அவற்றிற்கு வக்காலத்து  வாங்குவதற்காக எமது முன்னோர் செய்தவை எல்லாம் நூறுவீதம் நியாயமானது என்றும் அவை கடைப்பிடிக்கப்பட வேண்டியவை என்றும் சிலர் வீண் பிடிவாதம் புரியும் போது சில பழைய விடயங்களை சுட்டிக்காட்டி முன்னோர்கள் செயல் எல்லாம் நியாயமானது இல்லை. மனித பண்பாட்டு வளர்சியில் அறிவுக்கு ஒவ்வாத முன்னோர்களின்  பழக்கங்கள்  தூக்கி எறியப்பட வேண்டியவை என்பதை வலியுறுத்துவதற்காகவே அதனை இணைத்தேன். 

Posted
https://assets.roar.media/assets/hvZIRFPTW4roOsiv_DuX6MC7VAAA0fYa.jpg

தமிழர் வரலாற்றில் உடன்கட்டை (சதி) மற்றும் நவகண்டம்

பாரதவர்ஷம் பல்வேறு நம்பிக்கைகளும் சம்பிரதாயங்களும் நிறைந்த மண். ஐரோப்பிய காலனித்துவத்தின் விளைவால் அவற்றில் பல வழக்கிழந்து போயின. கானகத்தீயில் விருட்சங்களுடன் சேர்ந்து விஷ நாகங்களும் எரிவது போல, சில மூடத்துவங்களும் அழிந்தது மகிழ்ச்சிக்குரியது. அவற்றுள் ஒன்று சுயமாக உயிரை தியாகம் செய்யும் முறை. இந்தியவரலாற்றை நோக்குங்கால் இவ்வாறான இரு பிரதான உயிர்த்தியாக முறைகள் பழக்கத்தில் இருந்தன. ஒன்று சதி (உடன்கட்டை), மற்றொன்று நவகண்டம் (அறிகண்டம்).

சதி (உடன்கட்டை ஏறுதல்)

கணவன் இறந்த பின்பு மனைவியும் இணைந்து கணவனுடன் சிதையில் ஏறி, அத்தீயில் தன்னை தானே அழித்துக்கொள்வது சதி முறைமை எனப்பட்டது. இந்த சதி முறைமையானது இந்துமத புராணங்களில் இருந்து பெறப்பட்டுள்ளது. தக்ஷனின் மகளான சதி தேவி தனது தந்தையின் யாகத்தில் தன் கணவனுக்கு ஏற்பட்ட அவமானம் தாளாது அக்னிக்கு தன்னை இறையாக்கிக்கொண்டாள். இதன் தாக்கமாகவே சதி எனும் பெயருடன் உடன்கட்டை ஏறும் வழமை கைக்கொள்ளப்பட்டது. மேலும் சமஸ்கிருத சொல்லான सती (sati) எனும் சொல்லின் பொருள் நல்ல மனைவி என்பதாகும். எனவே நல்லதொரு மனைவியின் அடையாளமாக இந்த உடன்கட்டை ஏறும் வழமை பிற்காலத்தில் மாற்றப்பட்டிருக்க வேண்டும்.

தமிழ் இலக்கிய குறிப்புகளின் பிரகாரம், பாண்டியன் மாதேவியால் பாடப்பட்ட புறநானூறு பாடல் ஒன்றில் அரசனுடன், அரசியும் உடன்கட்டை ஏறிய குறிப்பு உள்ளது. அதன் படி பூதப்பாண்டியன் தேவி நாட்டின் அமைச்சர்கள் அனைவரினதும் ஆலோசனையையும் தவிர்த்து அரசனுடன் உடன்கட்டை ஏறியுள்ளாள். இங்ஙனமே மஹாபாரதத்தில் மஹாராஜா பாண்டுவின் இறப்புக்கு பின்னர், இளைய அரசி மாத்ரி உடன்கட்டை ஏறினாள், ஆனால் முதல் அரசி குந்தி அவ்வாறு செய்யவில்லை. சோழ சாம்ராஜ்யத்தின் முக்கிய அரசரான ராஜராஜரின் தாயான வானவன்மாதேவியும், ராஜேந்திர சோழரின் மனைவி வீரமாதேவியும் தங்கள் கணவர்களின் இறப்பினால் முழுமனதுடன் உடன்கட்டை ஏறினார்கள். இதன் மூலம் ஆரம்பகாலத்தில் சதி முறைமையானது முழுக்க முழுக்க பெண்களின் தன்னிச்சையான முடிவாகவே அமைந்தது தெளிவுற தெரிகிறது. பெண்கள் தம் கணவனின் மீது கொண்ட அதீத அன்பின் விளைவால் இத்தகைய பழக்கத்தை கைக்கொண்டனர். எனினும் பின்பு இம்முறைமையானது கௌரவத்தின் சின்னமாக மாற்றப்பட்டு, கணவனை இழக்கும் அத்தனை பெண்கள் மீதும் திணிக்கப்பட்டது.

UG9871BW63pIAU7b_maxresdefault.jpg?fit=c
பட உதவி : commons.wikimedia.org

சதிமுறைமையில் உயிரை துறக்கும் பெண்களின் ஞாபகச்சின்னமாக சதிகல் நடுவது வழக்கமாய் இருந்தது. இந்தியாவின் பல பகுதிகளில் காணக்கூடிய இந்த சதிகற்கள் ராஜஸ்தானில் மாத்திரம் மிகையாக கிடைக்கப்பட்டுள்ளது. இவை பெரும்பாலும் 11ம் நூற்றாண்டு காலப்பகுதியை சேர்ந்தவை. ஆர்தர் கோக் பர்னல் மற்றும் ஹென்றி யூள் ஆகியோரின் கருத்துப்படி சதி முறையானது முற்கால வோல்கா நதிக்கரை ரஷ்யர்களிடமும், தென்கிழக்கு ஐரோப்பிய பழங்குடிகளான Thracians இடமும், டோங்கா மற்றும் பிஜி தீவு பழங்குடியினரிடமும் காணப்பட்டது. டியோடோர்ஸ் எனும் வரலாற்று ஆசிரியரின் நூலின் படி கி.மு 1ம் நூற்றாண்டில் அலெக்சாண்டரின் படைவீரன் ஒருவனின் இறப்புக்கு பின்னர் அவனின் இருமனைவியரில் ஒருத்தி உடன்கட்டை ஏறியதாக குறிப்பு உள்ளது.

Newsletter

Subscribe to our newsletter and stay updated.

சதிமுறைக்கு இணையாக பலப்பெண்கள் கூட்டாக தீயில் விழுந்து உயிரை துறக்கும் முறை ஜஉஹர் (jauhar) எனப்பட்டது. இந்த பழக்கமானது ராஜஸ்தான் மற்றும் மத்தியபிரதேசம் ஆகிய ராஜபுத்திர ஆட்சி நிலவிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டது. 14ம் நூற்றாண்டுகளில் ராஜபுத்திர அரசுகள் இஸ்லாமிய படைகளுடன் போர் புரிய ஆரம்பித்த காலத்திலேயே இது வளர்ச்சிகண்டது. போரில் ராஜபுத்திர படைகள் தோல்வியடைந்து எதிரிகள் கோட்டைக்குள் நுழைவார்கள் எனக்கருதும் சமயங்களில் பெண்கள் தங்களின் மானத்தையும், கற்பையும் பாதுகாக்கும் நோக்கில் ஒன்றாக இணைந்து பெரிய அக்னி குண்டத்தில் விழுந்து உயிரை மாய்த்துக்கொள்வார்கள். இந்த பழக்கமானது இஸ்லாமிய-ராஜபுத்திர போர்களின் போது மட்டுமே கைகொள்ளப்பட்டதே தவிர இந்து-ராஜபுத்திர போர்களின் போது நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே ஜஉஹர் (jauhar) முறையானது இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்களிடம் பெண்கள் தங்களின் கற்பை பாதுகாக்க மேற்கொண்ட நடவடிக்கை என தெளிவாக தெரிகிறது. 2018 இல் வெளியான பத்மாவத் எனும் திரைப்படம் ஜஉஹர் முறையை சிறப்பாக வெளிப்படுத்தி காட்டியுள்ளது.

XlseqxvSGpi0ClcV_1_deepika_padmaavat_jau
பத்மாவத் படத்தின் காட்சி
பட உதவி : www.idiva.com

ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சி இந்தியாவில் நிலைகொண்ட பிறகே சதிமுறைக்கு எதிரான குரல்கள் ஒலிக்க ஆரம்பித்தன. 1815இல் இருந்து 1818 வரையான காலப்பகுதியில் வங்காள மாநிலத்தில் மாத்திரம் சதி முறையால் இறந்தவர்களின் எண்ணிக்கை 387 இல் இருந்து 839 ஆக அதிகரித்தமை குறிப்பிட வேண்டிய விடயம். உடன்கட்டை ஏறும் இந்த மூடப்பழக்கத்தை வேரறுக்க கிறிஸ்தவ மறைபரப்பாளரான வில்லியம் கேரி என்பவரும், பிராமண இந்து சீர்திருத்தவாதி இராஜாராம் மோகன் ராய் முதலியோரும் அயராது பாடுபட்டு, 1829 இல் சதி முறையானது சட்டவிரோதம் என மாநில அளவிலான சட்டத்தை கொண்டுவர செய்தனர். 1861 இல் விக்டோரியா மகாராணியின் ஆணைப்படி இந்தியா முழுவதும் சதி முறை ஒழிக்கப்பட்டது. நேபாளத்தில் 1920 முதல் சதி முறைமை ஒழிக்கப்பட்டது. இந்திய சதி (உடன்கட்டை ஏறல்) தடுப்பு சட்டத்தின் படி, சதி முறைமையை ஆதரித்தல், பின்பற்றுதல், பிரபல்யம் செய்தல் ஆகிய அனைத்துமே தண்டனைக்குரிய குற்றங்களாக்கப்பட்டன. இருப்பினும் இன்னும் மின்சாரம் தொடாத சின்னஞ்சிறு கிராமங்களில் மடைமையின் பிரதிபலிப்பாக சதி ஏறும் சிதைகள் எரிந்துகொண்டுள்ளன.

நவகண்டம்

தற்கொலையானது பாவமாகவும், கோழைத்தனமாகவும் கண்ணோக்கப்படும் நவீன தமிழர்கள் நம்மில் பலர் அறியாத ஒரு விடயம் நவகண்டம் எனப்படும் அறிகண்டம். சதி எனப்படும் உடன்கட்டை ஏறும் முறைமையை போலவே தன்னுயிரை தானே அழித்துக்கொள்ளும் இந்தப்பழக்கமும் பெருமைக்கும், போற்றுதலுக்கும் உரியதாக பார்க்கப்பட்ட ஒரு காலமும் இருந்தது. தன் கழுத்தை தானே அறுத்துக்கொண்டு மாய்வதற்கு நவகண்டம் என பெயருண்டு.  

‘தன் உயிரை தானே மாய்த்துக்கொள்வதில் என்ன விந்தை உள்ளது? இதுவும் தற்கொலை தானே? அதென்ன கழுத்தை அறுத்துக்கொண்டு சாவது, இறப்பதற்கு வேறு வழியே கிடைக்கவில்லையா?’

என பல கேள்விகள் நவகண்டம் குறித்து செவியுறும் முதல் கணத்தில் அனைவருக்கும் தோன்றக்கூடும். அதற்கான காரணங்களையும், விளக்கங்களையும் காண்போம்.

நவ + கண்டம் என்பதே நவகண்டம் எனப்படுகிறது. நவ என்பது நம் உடலிலுள்ள ஒன்பது துவாரங்களை குறிப்பதாகும். இந்த ஒன்பது துவாரங்களின் நரம்பு முடிச்சுகளும் நம் கழுத்தின் பின்புறத்தில் முள்ளந்தண்டு வடத்தில் அமைத்துள்ளது, உடலின் ஒன்பது துவாரங்களையும் ஒரே தருணத்தில் செயலிழக்க செய்வது உயிர் துறப்பதற்கான வழிகளில் ஒன்று. எனவே இந்த முக்கிய நரம்புமுடிச்சை கொண்ட கழுத்தை (கண்டத்தை) தன் கையால் தானே துண்டம் செய்வது நவகண்டம் எனப்படுகிறது. ஒரே வீசில் தன் தலை உடலில் இருந்து அறுத்து வீசுவதால் அறிகண்டம் எனவும் கூறப்படும். இந்த வழமை பழங்கால தென்னகம் முழுவதும் பரவலாக இருந்து வந்துள்ளது. சங்க இலக்கியங்களின் படி கொற்றவைக்கு முன்பாக தன் வேண்டுதலுக்காக கழுத்தை அறுத்துக்கொண்டு மாய்ந்துபோனோரை பற்றிய குறிப்புகள் உள்ளன.

XJq46JtWfHrbzSuP_kkkudavarai32.jpg?fit=c
பட உதவி 
  www.jeyamohan.in

நவகண்டம் செய்யப்பட்டதற்கான வரலாற்று குறிப்புகள்

  • நவகண்டம் அளிக்கப்படுவதற்கான பிரதான நோக்கமாக அமைவது போர் வெற்றி. தன்னாட்டு அரசன் தன்னைக்காட்டிலும் வலிமை மிக்க ஒரு எதிரியை செருக்களத்தில் சந்திக்கவிருக்கும் சமயத்தில், தெய்வத்தின் அருளை நாடி தன்னுடைய நாடும், அரசனும் வெற்றி பெற வேண்டுமென வீரர்களில் ஒருவன் தானாக முன்வந்து போர்த்தெய்வமாகிய கொற்றவையின் முன்னிலையில் நவகண்டம் அளிப்பது வழமை. கலிங்கத்துபரணி நூலில் சோழ அரசின் வெற்றிக்காக தன்னை நவகண்டம் இட்டுக்கொண்ட வீரன் குறித்து கூறப்படுகிறது.
  • அரசன் நோயுற்று அல்லது மோசமான போர்காயங்களுக்கு உள்ளாகி உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கும் நேரங்களில், அரசனின் அணுக்கர்களில் ஒருவன் அரசனின் உடல் தேற்றம் காண வேண்டும் என இறைவனை வேண்டி நவகண்டம் அளிப்பார்கள்.
  • மரணதண்டனை பெறவிருக்கும் குற்றவாளி ஒருவன், மரணதண்டனைக்கு பதிலாக அரசனின் அனுமதியுடன் நவகண்டம் அளிக்கலாம். இதன் மூலம் போர்வீரர்கள் அடையும் வீரகதியை அடையலாம் என நம்பப்பட்டது.
  • நோயினால் இறப்பை எதிர்நோக்கி இருக்கும் போர்மறவன், வீரர்களுக்கு உரிய முறையில் மரணமடைய நவகண்டம் இட்டுக்கொள்ளலாம்.
  • போர்க்காயத்தாலோ, நோயினாலோ ஒருவன் இறப்பின் விளிம்பில் நிற்க அவன் செய்து முடிக்க வேண்டிய கடமைகள் எஞ்சியிருக்குமானால் தன் உயிர் சிறிது காலம் நிலைக்க வேண்டுமென வேண்டிக்கொள்வான். அவ்வேண்டுதல் நிறைவுறும் பட்சத்தில், குறித்தகடமைகளை முடித்துவிட்டு நவகண்டம் இட்டு உயிர்துறப்பதும் உண்டு.
  • பெரும் அவமானத்தை தாங்காது உயிர் துறக்கவிளையும் நபர், வீரகதி அடைய வேண்டும் என விழைந்தால் நவகண்டம் இட்டுக்கொள்ளலாம்.
  • தற்கால முக்கிய புள்ளிகளுக்கு வழங்கப்படும் ’கருப்புப்பூனை’ பாதுகாப்புக்கு இணையாக பழந்தமிழ் அரசர்களான பாண்டியர்களுக்கு தென்னவன் ஆபத்துதவி என்றும், சோழர்களுக்கு வேளக்காரப்படை  என்றும் இருவகை படைப்பிரிவுகள் பணியாற்றின. இவர்கள் தங்கள் அலட்சியாதலோ அல்லது தங்களை மீறிய பிறகாரணியாலோ மன்னன் உயிருக்கு ஆபத்து விளையுமானால் துர்க்கைக்கு முன்னால் தங்களை அறிகண்டம் கொடுத்து பலியிடுவதாக சபதம் மேற்கொண்டவர்கள்.
  • பிற்காலங்களில் கோயில் கட்டுமானம் குறையின்றி நடக்கவும், வறட்சி முதலியவை நீங்கவும் நவகண்டம் இடும் பழக்கம் உருவானது.

நவகண்டம் அளிக்கப்படுவது ஒரு விழாவைபோல கொண்டாடப்பட்டது. ஊரின் நலனுக்காக உயிர் துறக்க முன்வந்த நபரை வாழும் தெய்வமாக கருதி ஊர்  மக்கள் மரியாதை செய்வார்கள். தினம் ஒரு குடும்பமென ஒவ்வொரு அந்நபர் விரும்பும் உணவினை செய்து படையல் இடுவார்கள். அவரின் தேவைகள், ஆசைகள் அனைத்தும் நிவர்த்தி செய்யப்படும். நவகண்டதுக்கான நாள் வந்தவுடன் ஊரு மத்தியில் குறித்த பலியாள் நிறுத்தப்படுவார். ஊர் மக்கள் அவரை சுற்றி நிற்க, மஞ்சள் நீரால் நீராட்டப்படுவார். பலியாள் மார்பில் கவசமும், இடையில் வாழும் அணிந்து ஊர்மக்கள் நடுவே நின்றிருக்க பெண்கள் குலவையிட பறைகளும், முழவுகளும் உச்சஸ்தாயியில் வாசிக்கப்படும். அந்நபர் தன் கையால் தன்னுச்சி மயிரை இழுத்து கழுத்தை இறுக்கிக்கொள்வார். வலது கரத்தில் வாளை எடுத்து கழுத்தை அறுக்க ஆரம்பிப்பார். சுயநினைவு இருக்கும் வரை தொடரும் இந்த வாளின் விளையாட்டு, பலியாளின் குருதியால் அதன் விடாய் அடங்கும் வரை நிகழ்த்திவிட்டு அமைதி கொள்ளும். இத்தனை காலமும் தம்மோடு வாழ்ந்து, தமக்காக உயிர் நீத்தவனின் பாதத்தை அனைவரும் தொட்டு வணங்குவர். வீரகதி அடைந்தவனுக்காக ஒரு துளி விழிநீரும் சிந்தமாட்டார்கள். உயிர்நீத்தவன் ஊருக்கு காவல் தெய்வமாவன். அவர் உயிர்நீக்க நவகண்டம் அளித்த அதே வடிவில் சிலைவடிக்கப்பட்டு நடுகல்லாக நிறுவப்படும். 2010 வெளியான ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் இக்காட்சி பதிவு செய்யப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மஹாபாரதத்தில் பாண்டவர் தரப்பு வெற்றி அடைய வேண்டி பீஷ்மரை வெல்வதற்காக களபலியாக அர்ஜுனனின் மகன் அரவானை பலியிட்டது நாமறிந்த முதல் நவகண்டம் ஆகும். அரவான் முழு மனதுடன் முன்வந்து தன்னை பலியாக இட்டுக்கொண்டான். அதற்கு முன் அவன் விரும்பியவாறே திருமணமும் செய்து கொண்டான். அரவானின் தியாகத்தை புகழ்ந்து இன்றளவும் தென்கிழக்கு ஆசியா, வடத்தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அரவானின் வெட்டுண்ட தலையின் சிலைகள் வணக்கத்துக்கு உரியதாக நோக்கப்படுகிறது. இதற்கு இணையான கதைகள் ராஜஸ்தானில், நேபாளத்திலும் வெவ்வேறு பெயர்களுடன் கூறப்பட்டு வருகிறது. சீக்கிய மரபிலும் நவகண்டம் அளிக்கும் முறைகள் காணப்பட்டது.

இவ்வாறு மனிதர்கள் தாமே முன்வந்து பலியிட்டுக்கொள்ளும் முறைகள் உலகின் பல்வேறு பகுதிகளில் காணப்பட்டது. பண்டைய எகிப்தின் களிமண் பட்டயம் ஒன்றில் ஒருவன்தன் முன்னே நிற்கும் மனிதனின் நெஞ்சில் கத்தியை பாய்ச்சி பலியிடும் காட்சி அச்சிடப்பட்டுள்ளது. இதை ஒத்து சிந்துவெளி முத்திரை சிலவற்றில் இரு வீரர்கள் இறைவனுக்கு முன்னாள் ஒருவரை ஒருவர் வெட்டிக்கொள்ளும் காட்சி வரையப்பட்டுள்ளது. மேலும் பெரிய மிருகத்தின் மீது அமர்ந்த பெண் தெய்வத்திற்கு மனித தலையை பலியிடுமாறு வரையப்பட்ட முத்திரையும் கிடைத்துள்ளது.

ஆண்கள் மட்டுமே நவகண்டம் அளிப்பதாக நினைக்கப்பட்டு வந்த போதிலும் பெண்கள் நவகண்டம் அளிக்கும் வகையிலான நடுகற்களும் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இங்ஙனம் ஊரின் நன்மைக்காக தங்களை பலியிடும் தியாகிகள் தமிழகம் எங்கும் காணப்பட்டுள்ளனர் என்பதற்கு ஆதாரமாக தாராமங்களம், சேலம், தஞ்சை ஆகிய இடங்களில் நவகண்ட நடுகற்கள் கிடைத்துள்ளன. எனினும் இந்த கொடூர பலியிடல் முறைமையானது பிற்காலத்தில் வழக்கொழிந்து போனது. நம்முன்னோர் எத்தகைய கொடிய வலிகளையும் தாங்கி தம் சமூகத்தை காத்த பொதுநலவாதிகளாக இருந்தமையை குறிக்கும் இந்த நடுகற்சிலைகளை பேணி நம் சந்ததியினருக்கு கையளிப்பதே நம் கடமையாகும்.

தமிழகத்தில் நவகண்ட சிலைகள் கிடைத்துள்ள இடங்கள்.

  1. தஞ்சாவூர் - சோழமன்னனின் வெற்றிக்காக.
  2. மகாபலிபுரம் காளியின் ஐந்தாவது ரதம்.
  3. மதுரை மாடபுரம் மாரியம்மன் கோயில் - சித்திர சரிதனும் வல்லபனும்.
  4. தெங்கரை கிராமம்.
  5. மல்லல், இளையான்குடி - அரசனின் நலம் வேண்டி காளி தேவிக்கு இடப்பட்ட நவகண்டம்.
  6. சாதிப்பட்டு(பண்ருட்டி அருகில்) - அதிராஜமங்கல்யபுரத்தின் ஆட்சியாளருக்காக.
  7. குன்றக்குடி கோவில் - துர்கைக்கான நவகண்ட சிலை.
  8. மன்னர்க்கோட்டை - தன் ஆசானின் நலனுக்காக.
  9. திருப்பரங்குன்றம் - ஆலயத்தை அந்நிய படைகளிடம் இருந்து காக்கும் பொருட்டு  மேற்கொண்ட நவகண்டம்.
  10. திருவாசி மாற்றுறைவரதீசுவரர் கோயில்
  11. திருமுக்கூடலூர் அனலாடீசுவரர் கோயில்
  12. மடப்புரம் காளி கோயில் (மதுரையில் இருந்து 18 இல், வைகை நதியின் வடக்குகரை)
  13. திருபூவனம் (திருபுவனம்,வைகை நதி தென்கரை) புதூர் - நவகண்டம் அளிக்கும் இளைஞன்
  14. பழனி, பெரியநாயகி அம்மான் கோயில்.

நவகண்டத்தின் நாயகியாக பழந்தமிழர் போற்றி வணங்கிய போர்த்தெய்வமான கொற்றவை குறித்த சிறு பதிவு வருமாறு,

கொற்றவை

பாலை நிலத்தின் தெய்வமாகிய கொற்றவை எயினர்களாலும் வெட்டுவர்களாலும் வணங்கப்பட்டதாக பழந்தமிழ் இலக்கியங்களான அகத்தியம்,தொல்காப்பியம்,பதினெண் கீழ்க்கணக்கு,சிலப்பதிகாரம் முதலியவற்றில் குறிப்புகள் உள்ளன. கொற்றவை காட்டில் வசிக்கும் மறவர்களான கள்வர்களுக்கும் குலதெய்வமாக அறியப்படுகிறாள். நக்கீரரின் திருமுருகாற்றுப்படை நூலில் முருகனை ‘கொற்றவைச்சிறுவ பழையோள் புழவி’ என விழிக்கிறார். இதனால் பழந்தமிழரின் தெய்வமாக கொற்றவை பலகாலமாக வணங்கப்பட்டது தெளிவாகிறது.

8TyCLXXrmaqlgmQ5_u.jpg?fit=clip&w=700
பட உதவி :www.jeyamohan.in

‘சிங்கக்கொடியும் பசுங்கிளியும் ஏந்தியவள், கலைமான் ஊர்தி கொண்டவள், பேய்களை படையாக பெற்றவள், ஒளியோடு வெற்றிமிக்க சூலப்படையை உயர்த்தியவள், புழுக்களும் குருதியும் நிணமும் குடலும் நிறைந்த மண்டையோட்டை கையில் ஏந்தி நிற்பவள் என கொற்றவையின் வடிவம் குறித்து புறப்பொருள் வெண்பாமாலையில் கூறப்படுகிறது. எனினும் சிலப்பதிகாரமோ ‘வெண்ணிற பாம்பை ஒத்த பொன்னிழையால் கட்டப்பட்ட நீண்ட சடைமுடியும், அதில் பூப்போல வெண்ணிற காட்டுப்பன்றியின் பல்லும், கழுத்தில் புலிநகத்தாலியும், இடையில் புலித்தோலும் அணிந்தவள். கையில் வில்லினை ஏந்தி கலைமான் மீது ஏறிநிற்பவள்’ என விளக்குகிறது.

கிளி, காட்டுக்கோழி, மயில், கிழங்கு போன்றன படைக்கப்படுவது வழக்கம். மேலும் கொட்டும் பறை, கொம்பு, குழல் ஆகியவற்றின் இசையோடு உலா கொண்டு செல்லப்படுபவள் கொற்றவை. சிலப்பதிகாரமானது கொற்றவையானவள் உமையில் இருந்து வேறுபட்டவள் எனவும், இருவரும் வெவ்வேறு தெய்வங்கள் எனவும் உறுதியாக கூறுகிறது. எனினும் பிற்காலத்தில் சமஸ்கிருத தாக்கத்தினால் இந்த பழந்தமிழ் தெய்வமானவள் உமையின் அம்சம் என்றும், திருமாலின் தங்கை என்றும் ஆழைக்கப்பட்டு, கையில் சங்கு சக்கரத்துடன் நிறுத்தப்பட்டாள்.

இன்றளவும் கொற்றவை வழிபாடு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது. மாமல்லபுரம். பொன்செய், திருணனிப்பள்ளி, மறங்கியூர், போளூர் ஆகிய இடங்களில் கொற்றவை கோயில்கள் காணக்கூடியதாக உள்ளது.

image.png

image.png

https://roar.media/tamil/main/history/history-of-sati-and-navakandam/

Posted
11 hours ago, nunavilan said:

சதிமுறைக்கு இணையாக பலப்பெண்கள் கூட்டாக தீயில் விழுந்து உயிரை துறக்கும் முறை ஜஉஹர் (jauhar) எனப்பட்டது. இந்த பழக்கமானது ராஜஸ்தான் மற்றும் மத்தியபிரதேசம் ஆகிய ராஜபுத்திர ஆட்சி நிலவிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டது. 14ம் நூற்றாண்டுகளில் ராஜபுத்திர அரசுகள் இஸ்லாமிய படைகளுடன் போர் புரிய ஆரம்பித்த காலத்திலேயே இது வளர்ச்சிகண்டது. போரில் ராஜபுத்திர படைகள் தோல்வியடைந்து எதிரிகள் கோட்டைக்குள் நுழைவார்கள் எனக்கருதும் சமயங்களில் பெண்கள் தங்களின் மானத்தையும், கற்பையும் பாதுகாக்கும் நோக்கில் ஒன்றாக இணைந்து பெரிய அக்னி குண்டத்தில் விழுந்து உயிரை மாய்த்துக்கொள்வார்கள். இந்த பழக்கமானது இஸ்லாமிய-ராஜபுத்திர போர்களின் போது மட்டுமே கைகொள்ளப்பட்டதே தவிர இந்து-ராஜபுத்திர போர்களின் போது நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே ஜஉஹர் (jauhar) முறையானது இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்களிடம் பெண்கள் தங்களின் கற்பை பாதுகாக்க மேற்கொண்ட நடவடிக்கை என தெளிவாக தெரிகிறது. 2018 இல் வெளியான பத்மாவத் எனும் திரைப்படம் ஜஉஹர் முறையை சிறப்பாக வெளிப்படுத்தி காட்டியுள்ளது.

இந்தியாவில் பல கலாச்சாரத்தை கொண்ட மக்கள் வாழ்கிறார்கள். ராஜபுத்திர பெண்கள் இப்படியான கூட்டாக தீயில் விழுபவர்கள் என்பதற்காக அதை அனைத்து இந்துக்களின் தலையிலும் கட்டக்கூடாது.

பத்மாவத் என்ற திரைப்படம் மாலிக் முகமது ஜெய்சி என்பவரால் 1540 இல் எழுதப்பட்ட கவிதை காவியத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட படம். (அதையும் பல திரிபுகளுடன் எடுத்துள்ளார்கள்).

பத்மாவதி (பத்மினி) singhal kingdom (அது இலங்கையாம்) ஐ சேர்ந்த இளவரசி என கூறப்படுகிறது. அவர் சிங்களவர் என்று பொதுவிலும், சிலர் அவர் இலங்கையில் வசித்த ராஜபுத்திர இளவரசியாக இருக்கலாம் எனவும் கூறுகிறார்கள். 😀 (பின் சித்தூருக்கு சென்றவர்).

இவர் ஒரு கற்பனை பாத்திரம் என கூறுகிறார்கள். அப்படியொருவர் இருந்ததற்கான ஆதாரங்கள் இல்லையாம். அவருக்காக தான் போர் நடந்தது என்பதற்கான ஆதாரமும் இல்லையாம். ஆனால் பலர் அதை உண்மையான வரலாறாக கருதுகிறார்கள். 😎

 

Posted
10 hours ago, nunavilan said:

நவகண்டம் அளிக்கப்படுவதற்கான பிரதான நோக்கமாக அமைவது போர் வெற்றி. தன்னாட்டு அரசன் தன்னைக்காட்டிலும் வலிமை மிக்க ஒரு எதிரியை செருக்களத்தில் சந்திக்கவிருக்கும் சமயத்தில், தெய்வத்தின் அருளை நாடி தன்னுடைய நாடும், அரசனும் வெற்றி பெற வேண்டுமென வீரர்களில் ஒருவன் தானாக முன்வந்து போர்த்தெய்வமாகிய கொற்றவையின் முன்னிலையில் நவகண்டம் அளிப்பது வழமை. கலிங்கத்துபரணி நூலில் சோழ அரசின் வெற்றிக்காக தன்னை நவகண்டம் இட்டுக்கொண்ட வீரன் குறித்து கூறப்படுகிறது.

இப்படியாக தனது கழுத்தை தானே அறுத்து/வேறு ஒருவர் மூலம் அறுத்து sacrifice செய்யும் பழக்கம் வெளிநாடுகளிலும் இருந்தது. அதேபோல் மிருக பலியிடுதலும் இருந்தது.

இது Vikings தொடரில் வரும் அப்படியான ஒரு காட்சி. வயது குறைந்தோர் பார்க்காதீர்கள்.

 

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • எலோன் மஸ்கின் நிலத்தடி குகை வழித்தடத்திட்டங்கள்(TBM) சில அவுஸ்ரேலியாவிலும் உள்ளது, இது தவிர இணைய வசதி, புதிப்பிக்கப்படக்கூடிய சக்தி திட்டங்களும் உள்ளன.
    • இலங்கை அரசு மீன் வள இழப்ப்ற்கு நட்ட ஈடு கோர முடியாதா? இலங்கை மீனவர்களின் மீன் பிடி உபகரணங்களை அழித்ததிற்கும், தவறான மீன் பிடி முறைகளை பாவித்து மீன் பிடிக்கின்றமையால் நீண்டகால அடிப்படையில் ஏற்பட்டும் மீன் வள இழப்பிற்கும். அப்படியே இந்தியாவிடமும் எல்லை தாண்டிய மீனவர்களை கடந்த காலத்தில் கொன்ற இலங்கை அரசிடம் பாதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பம் சார்பாக நட்ட ஈடு கோரி இந்தியாவில் வழ்க்கு தொடுக்கவும் வேண்டும்.  
    • அறிதலுக்காக மட்டும்.    அதிக விபரிப்புடன்.  எலன் மஸ்க்   
    • அப்ப இதை உங்கள் முந்திய கருத்தில் சொல்லவில்லை? சிலை வைத்தற்காக அல்ல, விகாரை கட்டியதற்கு எதிராகவே கருணாகரம் குரல் எழுப்புகிறார் என்று சொல்லாமல்… சிலை எப்பவோ வைத்தாயிற்றாம் எண்டதோடு மீதி உண்மையை முழுங்கியது நீங்கள். இப்போ என்னை விதண்டாவாதி என்கிறீர்கள். பிகு சிலையோ, அதைசுற்றி சின்ன கோவிலோ இரெண்டும்  எதிர்க்கப்பட வேண்டியதே. முன்பு சிலை வைத்துவிட்டார்கள் என்பதால் இப்போ கோவில் கட்டுவதை எதிர்க்காமல் விட முடியாது. இங்கே மீதி உண்மையை (இப்போ கட்டப்படுவது கோவில்) நீங்கள் எழுதாமல்….ஏதோ இரு வருடம் முதல் நடந்த விடயத்தை இப்போ எதிர்க்கிறார்கள் என்பது போல் எழுதியது கபடத்தனமானதில்லையா?
    • உங்களுக்கு குசும்பு அதிகரித்துவிட்டது, அவர் இனப்பிரச்சினைக்கு (பொருளாதார பிரச்சினை) தீர்வு கூறுகிறார்.
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.