Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளம் மொட்டுக்கள் சருகாகிய கோர தினம் செஞ்சோலை படுகொலை!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Senjolai-4-720x450.jpg

இளம் மொட்டுக்கள் சருகாகிய கோர தினம் செஞ்சோலை படுகொலை!

யுத்தம் நிறைவடைந்து 10 வருடங்கள் கடந்த போதிலும் யுத்தத்தினால் ஏற்பட்ட வடுக்கள் தமிழர்கள் மனதில் ஆறாத ரணமாகவே உள்ளன.

யுத்தத்தின்போது எத்துனையோ தாக்குதல்கள் தமிழர்கள் மீது அரங்கேற்றப்பட்டிருந்தன. அவற்றுள் செஞ்சோலை சிறுவர் இல்லத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தற்போதும் நெஞ்சை பிசைகின்ற நிகழ்வாக மக்களின் மனங்களில் ஆழப் பதிந்திருக்கின்றன.

ஆம், கடந்த 2006ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14ஆம் திகதி இதேபோன்றதொரு நாளில், முல்லைத்தீவு மாவட்டத்தில் வள்ளிபுனம் பகுதியில் உள்ள செஞ்சோலை சிறுவர் இல்ல வளாகம் மீது இலங்கை விமானப் படையின் நான்கு அதிவேக யுத்தவிமானங்கள் மிலேச்சத்தனமாக வீசிய 16 குண்டுகள் 61 பாடசாலை மாணவிகளின் உயிர்களை பறித்தது. அத்துடன், 129இற்கும் அதிகமான மாணவிகள் அவயவங்களை இழக்கச் செய்தது.

இந்த கொடூரமான சம்பவம் இடம்பெற்ற நாள் தற்போதும் நம் கண்முன்னே காட்சியளிக்கின்றன. அன்றைய தினம்… கொல்லப்பட்டவர்களில் சிலரது உடல்கள் சிதறியபடி ஆங்காங்கே காணப்பட்டன. காயமடைந்தவர்களில் பலர் அவயவங்களை இழந்தனர். பூவாக மலரவிருந்த இளம் மொட்டுக்கள் சருகாகின.

காயமடைந்தவர்கள் முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு, தர்மபுரம், கிளிநொச்சி ஆகிய பொது வைத்தியசாலைகளிலும் தனியார் வைத்தியசாலைகளிலும் உடனடியாக அனுமதிக்கப்பட்டனர்.

தமது பிள்ளைகள் தங்கியிருந்த பகுதி மீது குண்டுத் தாக்குதல்கள் இடம்பெற்றதை அறிந்த பெற்றோர், சொல்லொனாத் துயரத்துடன் செஞ்சோலை வளாகத்தை சூழ்ந்திருந்தனர்.

கொல்லப்பட்டவர்களில் தமது பிள்ளைகளும் உள்ளனரா என்ற ஏக்கத்துடன் இறந்து கிடந்த மாணவிகளைத் தேடிய குடும்பத்தினர் கொல்லப்பட்டவர்கள் தமது பிள்ளைகள்தான் என தெரிந்ததும் கதறிய கதறல்கள் எழுத்திலடங்காதவை.

இந்த சம்பவம் இடம்பெற்று இன்றுடன் 13 வருடங்கள் ஆகிவிட்டன. இந்த தாக்குதல்களுக்கு சர்வதேசங்கள் கண்டனம் தெரிவித்திருந்தன. இருந்தபோதிலும் தமிழர்களுக்கு எதிரான இவ்வாறான தாக்குதல்கள் இடம்பெற்று காலங்கள் கழிகிறதே ஒழிய நீதி கிடைக்கவில்லையென்பதே மக்களின் குற்றச்சாட்டாக உள்ளது.

ஆண்டுகள் 13ஆன போதிலும் அன்றைய கொடூர தாக்குதல்களும் கோரமான உயிரிழப்புகளும் எம் மனக்கண் முன்னே தற்போதும் ஆறாத சுவடுகளாய் பதிந்துள்ளன.

எனினும் அன்று பாதிக்கப்பட்டவர்கள், அவயவங்களை இழந்த சிறுமிகள் அவர்களின் நிலைமை தற்போதும் கேள்விக்குறியாகவே உள்ளதென்பது மறுக்கப்பட முடியாத உண்மையே..

http://athavannews.com/இளம்-மொட்டுக்கள்-சருகாகி/

  • கருத்துக்கள உறவுகள்

செஞ்சோலை படுகொலை ஒரு மோசமான தினம்.....அரும்புகளுக்கு  ஆழ்ந்த இரங்கல்கள்......!

  • கருத்துக்கள உறவுகள்

செஞ்சோலைப் பிஞ்சுகளுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.!!

1 hour ago, தமிழ் சிறி said:

இந்த சம்பவம் இடம்பெற்று இன்றுடன் 13 வருடங்கள் ஆகிவிட்டன. இந்த தாக்குதல்களுக்கு சர்வதேசங்கள் கண்டனம் தெரிவித்திருந்தன. இருந்தபோதிலும் தமிழர்களுக்கு எதிரான இவ்வாறான தாக்குதல்கள் இடம்பெற்று காலங்கள் கழிகிறதே ஒழிய நீதி கிடைக்கவில்லையென்பதே மக்களின் குற்றச்சாட்டாக உள்ளது.

சிங்களவர் ஆட்சியில் கருணையை எதிர்பார்க்க முடியாது. எதிர்பார்ப்பது கானல் நீரைக் கண்டு தாகம்தீர்க்க ஓடும் மான்களுக்கு இணையானது.

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அஞ்சலிகள்...இச் சிறுவர்களது மரணத்திற்கு நேரடியாய் சிங்கள ஆமி./அரசு காரணமாயிருந்தாலும் , வலுக் கட்டாயப்படுத்தி பயிற்சிக்கு என்று ஒழுங்கு படுத்திய புலிகளுக்கும், அதை இணையங்களில் விளம்பரப்படுத்தி அப்பட்டமாய் அது நடக்கும் இடத்தை காட்டிக் கொடுத்த  புலி வால் இணையங்களுக்கும் என் கண்டனங்கள் 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ரதி said:

அன்றும் இன்றும் 10 வருடங்கள்தான்..... எவ்வளவு மாற்றங்கள்.!!!! 😲 

On 1/8/2009 at 2:20 PM, ரதி said:

புலிகள் கூட கேள்வி கேட்பவர்களை தடுப்பவர்கள் இல்லை.புலிகள் மக்களூக்கு பேச்சு சுதந்திரம்,கருத்து சுதந்திரம் கொடுப்பவர்கள் ஆனால் இங்கு புலிக்கு ஆதரவு கொடுப்போர் என்றூ கூறீக் கொள்பவர்களீன் தொல்லை தான் தாங்க முடியாது உள்ளது.புலிகள் படங்களையோ,செய்தியோ வெளீயிடும் போது தங்களூக்கு சாதகமானவற்றேயே வெளீயிடுவார்கள்.அவர்களூக்கு தெரியும் எதை,எங்கு,எப்போது வெளீயிட வேண்டும் என்றூ.தேசியத்திற்கு எதிரானவர்களை கூட நல்ல கருத்துக்களை கூறீ அவர்களை மாற்ற வேண்டும்.அதை விடுத்து அவர்களை அவமதிக்கும் செயல்களை நிறூத்த வேண்டும்.100 ற்றூக்கு 60% மக்கள் புலிகளூக்கும்,ஈழத்திற்கும் உதவி செய்து கொண்டு தான் இருக்கிறார்கள்.அதை 100ற்றூக்கு100% நாங்கள் தான் மாற்ற வேண்டும்.இது தொடர்பான உங்கள் ஆக்க பூர்வமான கருத்துகளை எதிர் பார்க்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

16 , 17 வ‌ய‌து சிறுமிக‌ல‌ யார் ப‌யிற்ச்சிக்கு அழைத்து சென்ற‌து /

க‌ற்ப‌னை உல‌கில் வாழும் ம‌னித‌ர்க‌ளை என்ன‌ என்று சொல்லுவ‌து /

அந்த‌ பிள்ளைக‌ள் பிற‌ந்த‌ ஆண்டுக‌ளை வ‌டிவாய் பார்க்க‌வும் , அந்த‌ பிஞ்சு முக‌ங்க‌ள் போர் க‌ள‌ம் நோக்கி போர‌ வ‌ய‌தா /

என்ன‌ எழுதுறோம் என்று கூட‌ தெரியாமா எப்ப‌வும் புலி வாந்தி எடுப்ப‌தே ஒரு சில‌ருக்கு வேலையாய் போச்சு / 

6 hours ago, suvy said:

செஞ்சோலை படுகொலை ஒரு மோசமான தினம்.....அரும்புகளுக்கு  ஆழ்ந்த இரங்கல்கள்......!

அந்த‌ நாள் ப‌ல‌ரின் ம‌ன‌தில் வ‌லி ஏற்ப‌ட்ட‌ நாள் சுவி அண்ணா 😓 /
 
  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, தமிழ் சிறி said:

இளம் மொட்டுக்கள் சருகாகிய கோர தினம் செஞ்சோலை படுகொலை!

மொட்டுக்கள் மலராமலேயே கருகிப் போய்விட்டது.

இறக்கும் வரை மறக்கவோ மன்னிக்கவோ முடியாத சம்பவம்.

இந்தக் குழந்தைகள் எமது மனங்களில் மட்டுமல்ல எதிரிகளின் மனங்களிலும் நிச்சயம் வாழ்வார்கள்.

சிங்கள தளங்களுடன் தொடர்புள்ளவர்கள் சிங்களம் எழுதக் கூடயவர்கள் தயவு செய்து இந்த நிகழ்வை படங்களுடன் அவர்களுக்கு புரியும் வண்ணம் எழுதுமாறு கும்பிட்டுக் கேட்டுக் கொள்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, ஈழப்பிரியன் said:

என‌து மாமா ந‌ல்லா சிங்க‌ள‌ம் க‌தைப்பார் , ஆனால் அவ‌ரால் சிங்க‌ள‌ம் எழுத‌ தெரியுமோ என்று தெரியாது ,

இந்த‌ மேட்ட‌ர‌ இல‌ங்கை காசுக்கு 2000 ரூபாய் ஓட‌ முடிச்சிட்டு போக‌லாம் , கொழும்பில் சிங்க‌ள‌ பெடிய‌ங்க‌ளுட‌ன் ப‌டிக்கும் த‌மிழ் பெடிய‌ங்க‌ளை தொட‌ர்வு கொண்டா ஒரு வார‌த்துக்க‌ செய்து த‌ருவாங்க‌ள் ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா 👏

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, பையன்26 said:

பையா
நடந்த எத்தனையோ விடயங்கள் அப்பாவி சிங்கள மக்களுக்கு தெரியாது.ஆனபடியால் இது போன்ற சம்பவங்களை நினைவு கூரும் போது இயன்றளவு பொதுமக்களுக்கு போய்ச் சேரும்படி செய்ய வேண்டும்.
நன்றி பையா.

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ஈழப்பிரியன் said:

பையா
நடந்த எத்தனையோ விடயங்கள் அப்பாவி சிங்கள மக்களுக்கு தெரியாது.ஆனபடியால் இது போன்ற சம்பவங்களை நினைவு கூரும் போது இயன்றளவு பொதுமக்களுக்கு போய்ச் சேரும்படி செய்ய வேண்டும்.
நன்றி பையா.

உண்மை அண்ணா /

இப்ப‌டியான‌ ப‌ர‌ப்புரையை முக‌ நூல் ம‌ற்றும் யூடுப் ஊடாக‌ சிங்க‌ள‌ ம‌க்க‌ள் பார்க்கும் ப‌டி செய்ய‌லாம் /

நோட்டிஸ் அடிச்சு சிங்க‌ள‌ தேச‌த்தில் ஒட்டுவ‌து கொஞ்ச‌ம் சிர‌ம‌ம் , முக‌ நூல் யூடுப் தான் சிற‌ந்த‌து என்று என‌க்கு தோனு ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா 👏 /

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

  சிங்கள பேரினவாதத்தால்  பலியாக்கப்பட்ட சிறார்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.

1 hour ago, பையன்26 said:

உண்மை அண்ணா /

இப்ப‌டியான‌ ப‌ர‌ப்புரையை முக‌ நூல் ம‌ற்றும் யூடுப் ஊடாக‌ சிங்க‌ள‌ ம‌க்க‌ள் பார்க்கும் ப‌டி செய்ய‌லாம் /

நோட்டிஸ் அடிச்சு சிங்க‌ள‌ தேச‌த்தில் ஒட்டுவ‌து கொஞ்ச‌ம் சிர‌ம‌ம் , முக‌ நூல் யூடுப் தான் சிற‌ந்த‌து என்று என‌க்கு தோனு ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா 👏 /

பையா,

சிங்களவர்களில் அனேகமானோருக்கு உண்மை தெரியும். கொல்லப்பட்டது தமிழ் மக்கள் என்பதால் அவர்களுக்கு மகிழ்ச்சியே தவிர அனுதாபம் வரப் போவதில்லை. அப்படி அனுதாபம் கொள்கின்ற சிங்கள மக்களும் உண்டுதான். ஆனால் அது 10 வீதத்துக்கும் குறைவானது.

போலி புனைவுகளால் உருவான மகாவம்ச கோட்பாடுகளுக்கூடாகத்தான் சிங்கள மக்கள் ஏனைய சிறுபான்மை தேசிய இனங்களை அணுகுவார்கள். அப்படியான அணுகு முறையில் தமிழ் மக்களின் சாவு என்பது வரவேற்பிற்குதியதாகத்தான் இருக்கும். 2009 காலப்பகுதியில் எம் பெண்களை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி மார்பை அறுத்து எறிந்த வீடியோக் காட்சிகளைக் கூட கொழும்பு பல்கலைக்கழகத்தில் படித்த சிங்கள மாணவர்கள் தமக்கிடையே பகிர்ந்து மகிழ்ந்த சம்பவங்கள் கூட உள்ளன. சனல் 4 இல் காட்டப்பட்ட காட்சிகளை விட குரூரமான காட்சிகளை தமக்குள் பகிர்ந்து ரசித்து இருந்தனர்.

சிங்கள மக்களின் இந்த மனப்பான்மையைக் கூட புரிந்து கொள்ள முடியும். ஆனால் இதற்கும் புலிகளை காரணம் காட்டும் தமிழர்கள் சிலரது மனப்பான்மையைத் தான் புரிந்து கொள்ள முடிவதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, நிழலி said:

நீங்க‌ள் சொல்வ‌தும் ச‌ரி தான் , 2009ம் ஆண்டு அவ‌ங்க‌ள் வெடி கொழுத்தி எல்லாம்  கொண்டாடின‌வ‌ங்க‌ள் / 

ஒரு சில‌ சிங்க‌ள‌ ம‌க்க‌ள் ந‌ல்ல‌து இருக்குதுங்க‌ள் / நூற்றுக்கு 90வித‌ சிங்க‌ள‌வ‌ருக்கு த‌மிழ‌ர‌ பிடிக்காது , 

த‌மிழ‌ர்க‌ளின் அழிவில் ம‌கிழ‌ கூடிய‌ சிங்க‌ள‌வர்க‌ள் தான் அதிக‌ம் 

  • கருத்துக்கள உறவுகள்

20190814-183550.png

  • கருத்துக்கள உறவுகள்

மாபெரும் த‌லைவ‌ர் சிறுமிக‌ளுட‌ன்  செஞ்சோலையை திற‌ந்து வைத்த‌ போது எடுத்த‌ புகைப் ப‌ட‌ம் 🙏

20190814-185945.png

Edited by பையன்26

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, தமிழ் சிறி said:

Senjolai-4-720x450.jpg

இளம் மொட்டுக்கள் சருகாகிய கோர தினம் செஞ்சோலை படுகொலை!

யுத்தம் நிறைவடைந்து 10 வருடங்கள் கடந்த போதிலும் யுத்தத்தினால் ஏற்பட்ட வடுக்கள் தமிழர்கள் மனதில் ஆறாத ரணமாகவே உள்ளன.

யுத்தத்தின்போது எத்துனையோ தாக்குதல்கள் தமிழர்கள் மீது அரங்கேற்றப்பட்டிருந்தன. அவற்றுள் செஞ்சோலை சிறுவர் இல்லத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தற்போதும் நெஞ்சை பிசைகின்ற நிகழ்வாக மக்களின் மனங்களில் ஆழப் பதிந்திருக்கின்றன.

ஆம், கடந்த 2006ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14ஆம் திகதி இதேபோன்றதொரு நாளில், முல்லைத்தீவு மாவட்டத்தில் வள்ளிபுனம் பகுதியில் உள்ள செஞ்சோலை சிறுவர் இல்ல வளாகம் மீது இலங்கை விமானப் படையின் நான்கு அதிவேக யுத்தவிமானங்கள் மிலேச்சத்தனமாக வீசிய 16 குண்டுகள் 61 பாடசாலை மாணவிகளின் உயிர்களை பறித்தது. அத்துடன், 129இற்கும் அதிகமான மாணவிகள் அவயவங்களை இழக்கச் செய்தது.

இந்த கொடூரமான சம்பவம் இடம்பெற்ற நாள் தற்போதும் நம் கண்முன்னே காட்சியளிக்கின்றன. அன்றைய தினம்… கொல்லப்பட்டவர்களில் சிலரது உடல்கள் சிதறியபடி ஆங்காங்கே காணப்பட்டன. காயமடைந்தவர்களில் பலர் அவயவங்களை இழந்தனர். பூவாக மலரவிருந்த இளம் மொட்டுக்கள் சருகாகின.

காயமடைந்தவர்கள் முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு, தர்மபுரம், கிளிநொச்சி ஆகிய பொது வைத்தியசாலைகளிலும் தனியார் வைத்தியசாலைகளிலும் உடனடியாக அனுமதிக்கப்பட்டனர்.

தமது பிள்ளைகள் தங்கியிருந்த பகுதி மீது குண்டுத் தாக்குதல்கள் இடம்பெற்றதை அறிந்த பெற்றோர், சொல்லொனாத் துயரத்துடன் செஞ்சோலை வளாகத்தை சூழ்ந்திருந்தனர்.

கொல்லப்பட்டவர்களில் தமது பிள்ளைகளும் உள்ளனரா என்ற ஏக்கத்துடன் இறந்து கிடந்த மாணவிகளைத் தேடிய குடும்பத்தினர் கொல்லப்பட்டவர்கள் தமது பிள்ளைகள்தான் என தெரிந்ததும் கதறிய கதறல்கள் எழுத்திலடங்காதவை.

இந்த சம்பவம் இடம்பெற்று இன்றுடன் 13 வருடங்கள் ஆகிவிட்டன. இந்த தாக்குதல்களுக்கு சர்வதேசங்கள் கண்டனம் தெரிவித்திருந்தன. இருந்தபோதிலும் தமிழர்களுக்கு எதிரான இவ்வாறான தாக்குதல்கள் இடம்பெற்று காலங்கள் கழிகிறதே ஒழிய நீதி கிடைக்கவில்லையென்பதே மக்களின் குற்றச்சாட்டாக உள்ளது.

ஆண்டுகள் 13ஆன போதிலும் அன்றைய கொடூர தாக்குதல்களும் கோரமான உயிரிழப்புகளும் எம் மனக்கண் முன்னே தற்போதும் ஆறாத சுவடுகளாய் பதிந்துள்ளன.

எனினும் அன்று பாதிக்கப்பட்டவர்கள், அவயவங்களை இழந்த சிறுமிகள் அவர்களின் நிலைமை தற்போதும் கேள்விக்குறியாகவே உள்ளதென்பது மறுக்கப்பட முடியாத உண்மையே..

http://athavannews.com/இளம்-மொட்டுக்கள்-சருகாகி/

63 மாணவிகள் உயிரிழந்து இருந்தார்கள் 
இதில் 61 என்று இருக்கிறது 

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Maruthankerny said:

63 மாணவிகள் உயிரிழந்து இருந்தார்கள் 
இதில் 61 என்று இருக்கிறது 

எழுதும் போது சிறு பிழை விட்டிட்டின‌ம் போல‌ /
 
  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Paanch said:

அன்றும் இன்றும் 10 வருடங்கள்தான்..... எவ்வளவு மாற்றங்கள்.!!!! 😲 

ஒரு மாற்றமும் இல்லை ஐயா ...இன்னும் அதே ரதி தான் ...உண்மை தெரிந்த பல பேர் இன்னும் இருக்கினம்...பூனை கண்ணை மூடிட்டு உலகம் இருட்டாயிருக்குது என்ட கதை தான் ...தாங்கள் உண்மையை சொன்னால் சர்வதேசத்திற்கு தெரிந்திடும் அல்லது தங்களை துரோகியாக்கி விடுவார்கள் என்று எல்லாத்துக்கும் ஆமாம் போட்டு கொண்டு இருக்கினம் அல்லது அமைதியாய் இருக்கினம் ...ஏன் இப்படியான படுகொலைகளை கூட சர்வதேசம் கண்டு கொள்ளவில்லை என்று தேடுங்கோ...உண்மை விளங்கும் 

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, ரதி said:

உங்களுக்கு தெரிந்த உண்மைகளை தொகுத்து ஏன் நீங்கள் ஒரு புத்தகம் எழுத கூடாது?
இப்போது இருப்பவர்கள் வாசிக்காது போனாலும் 
எதிர்கால சந்ததிகள் வாசித்து பயன்பெறும் இல்லையா?

உண்மைகள் ஓரிடத்தில் ஒதுங்கி இருப்பதாலும் ...
மற்றவர்கள் அறியாமல் இருக்கலாம் அல்லவா? 

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Maruthankerny said:

உங்களுக்கு தெரிந்த உண்மைகளை தொகுத்து ஏன் நீங்கள் ஒரு புத்தகம் எழுத கூடாது?
இப்போது இருப்பவர்கள் வாசிக்காது போனாலும் 
எதிர்கால சந்ததிகள் வாசித்து பயன்பெறும் இல்லையா?

உண்மைகள் ஓரிடத்தில் ஒதுங்கி இருப்பதாலும் ...
மற்றவர்கள் அறியாமல் இருக்கலாம் அல்லவா? 

நீங்கள் பதிப்பிட நிதியுதவி செய்தீர்கள் என்றால் நான் தயார் 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.