Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

10 டொலர் அல்லது 1000 ரூபாவால் ஒன்றால் எமக்கான சினிமா ஒன்றை கண்டடையலாம்..

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் ம.தி. சுதா,

உங்கள் திரைப்பட தயாரிப்பு திட்டத்திற்கு எமது உள்நாட்டு, வெளிநாட்டு தமிழ் ஊடகங்கள் எப்படியான ஆதரவை இதுவரை தந்துள்ளன?

அண்மைக்காலமாக யூரியூப் தளத்தில் மிகவும் தரமான பல்வேறு நகைச்சுவை மற்றும் பொதுவிடயங்கள் பற்றிய வீடியோக்களை இலங்கையில் உள்ளவர்கள் தயாரித்து வெளியீடு செய்கின்றார்கள். சிமார்ட் போன் வருகை உள்ளூர் மக்களின் திறமைகளை வெளியில் கொண்டு செல்வதற்கு நல்லதோர் தளத்தை கொடுத்து உள்ளது. இவர்களுக்கு நாம் ஆதரவு கொடுத்தாலே பல முன்னேற்றங்களை காணமுடியும் என நான் நினைக்கின்றேன்.

இருபத்து நான்கு சொச்சம் உங்களைப்போன்ற பல சினிமா தயாரிப்பு கலைஞர்கள் உள்ளார்கள் என தெரிவித்தீர்கள். எல்லாரையும் இணைத்து ஏதாவது அமைப்பு உள்ளதா? இது அனைவரினதும் பொதுவான நலன்களை கவனிக்கவும், தயாரிப்பு, வெளியீடுகளை இலகுபடுத்தவும் எதிர்காலத்தில் உதவலாம்.

  • 2 months later...
  • Replies 73
  • Views 12.6k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

அன்பு உறவுகளுக்கு நன்றியும் வணக்கமும்.
எனது திரைப்பட முயற்சியின் வரலாற்றுப் பதிவில் இணைந்து கொண்ட அனைத்து யாழ்கள உறவுகளுக்கும் வணக்கம்.

திரைப்படம் தற்போது விருது விழாக்களில் கலந்து கொண்டு விருதுகளையும் பெற்றுக் கொண்டிருக்கின்றது.

தங்களது முதலீட்டுக்குரிய பற்றுச்சீட்டுக்கள் அனுப்பி வைத்திருந்தேன். அவை கிடைக்காத யாராவது இருந்தால் தயவு செய்து என்னைத் தொடர்பு கொள்ளும்படி அன்போடு வேண்டி நிற்கின்றேன்.

நன்றிச் செதுக்கலுடன்

அன்புச் சகோதரன் மதிசுதா

  • தொடங்கியவர்
On 19/9/2021 at 01:18, நியாயத்தை கதைப்போம் said:

வணக்கம் ம.தி. சுதா,

உங்கள் திரைப்பட தயாரிப்பு திட்டத்திற்கு எமது உள்நாட்டு, வெளிநாட்டு தமிழ் ஊடகங்கள் எப்படியான ஆதரவை இதுவரை தந்துள்ளன?

அண்மைக்காலமாக யூரியூப் தளத்தில் மிகவும் தரமான பல்வேறு நகைச்சுவை மற்றும் பொதுவிடயங்கள் பற்றிய வீடியோக்களை இலங்கையில் உள்ளவர்கள் தயாரித்து வெளியீடு செய்கின்றார்கள். சிமார்ட் போன் வருகை உள்ளூர் மக்களின் திறமைகளை வெளியில் கொண்டு செல்வதற்கு நல்லதோர் தளத்தை கொடுத்து உள்ளது. இவர்களுக்கு நாம் ஆதரவு கொடுத்தாலே பல முன்னேற்றங்களை காணமுடியும் என நான் நினைக்கின்றேன்.

இருபத்து நான்கு சொச்சம் உங்களைப்போன்ற பல சினிமா தயாரிப்பு கலைஞர்கள் உள்ளார்கள் என தெரிவித்தீர்கள். எல்லாரையும் இணைத்து ஏதாவது அமைப்பு உள்ளதா? இது அனைவரினதும் பொதுவான நலன்களை கவனிக்கவும், தயாரிப்பு, வெளியீடுகளை இலகுபடுத்தவும் எதிர்காலத்தில் உதவலாம்.

மிக்க நன்றிகள்

நான் தனியே தான் விளம்பரப் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதால் முழுமையாக ஊடகங்களை அணுக முடியவில்லை. சிலர் மட்டும் தாமாகவே செய்தி சேகரித்து பிரசுரிக்கின்றார்கள்.
இங்கு சரியான அமைப்புக்கள் கட்டமைக்கப்படவில்லை. அது உடனே உருவாகும் என்பதில் எனக்கு நம்பிக்கையும் இல்லை. காரணம் அவற்றுக்கான பக்குவநிலையை ஒருமிக்க எல்லோரும் அடைய வேண்டும்.

  • 1 year later...
  • கருத்துக்கள உறவுகள்

வெந்து தணிந்தது காடு - இலங்கை திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் தணிக்கைச் சான்றிதழ் பெறப்பட்டு வரும் மாசி மாதம் 5, 6ம் திகதிகளில் சிறப்புக்காட்சிகள் ராஜா தியேட்டரிலும் 7ந் திகதி பருத்தித்துறை SS தியேட்டரிலும் வெளியிடப்படவுள்ளது என அறிய முடிந்தது. 

சாதாரண காட்சிகள் மாசி 10ந் திகதியிலிருந்து காண்பிக்கப்படும் என ஒரு துண்டுப்பிரசுரம் எனக்கு கிடைத்தது. 

நான் நினைக்கிறேன் மதிசுதாவின் முகப்புத்தகத்தில் இது பற்றி மேலும் அறியலாம் என வாசித்த நினைவு.

Edited by பிரபா சிதம்பரநாதன்
வசனம் சேர்க்கப்பட்டது

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

வெந்து தணிந்தது காடு - இலங்கை திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் தணிக்கைச் சான்றிதழ் பெறப்பட்டு வரும் மாசி மாதம் 5, 6ம் திகதிகளில் சிறப்புக்காட்சிகள் ராஜா தியேட்டரிலும் 7ந் திகதி பருத்தித்துறை SS தியேட்டரிலும் வெளியிடப்படவுள்ளது என அறிய முடிந்தது. 

சாதாரண காட்சிகள் மாசி 10ந் திகதியிலிருந்து காண்பிக்கப்படும் என ஒரு துண்டுப்பிரசுரம் எனக்கு கிடைத்தது. 

நான் நினைக்கிறேன் மதிசுதாவின் முகப்புத்தகத்தில் இது பற்றி மேலும் அறியலாம் என வாசித்த நினைவு.

தவிர்க்க முடியாத சில காரணங்களால் ஒரு வாரம் முற்கூட்டியே வெளியிடுகின்றோம்.
வரும் ஞாயிறு (29.01.2023) மதியம் ஒரு மணிக்கு காட்சி ஆரம்பிக்கப்படும்.
சிறப்புக்காட்சியாக மட்டுப்படுத்தப்பட்ட ஒரே ஒரு காட்சி தான் என்பதால் பார்க்க விரும்புபவர் முற்பதிவு செய்யுங்கள்.
Peut être une image de texte qui dit ’16 நாடுகளில் எங்கட கதை சொன்ன உங்கடதிரைப்படத்தின் திரையிடல் காலமும் நேரமும் குறிப்பிட்ட நாளில் மட்டும் திரையிடப்படும் வெந்த தணந்தத காடு VIP Shows ராஜா யாழ்ப்பாணம்) யாழ்ப்பாணம் (February) SS (பருத்தித்துறை) Jàn 29- 01.00PM 07 Feb 04- 06.00PM 03.00PM பாலா (சாவககச்சேரி) Feb11 04.00PM Feb 10- 03.00PM 05.00PM Feb 11 Feb 11 09.00AM 04.00PM 05.00PM Feb 12 09.00AM 04.00PM February 10.00AM வவுனியா கொழும்பு திருகோணமலை கல்முனை மட்டக்களப்பு 03.00PM VIP 1000/- Ordinary 600/- 12 18 25 26 26 04.00PM 10.00AM 04.00PM March நுவரெலியா மன் மன்னார் னார் 04 03.00PM 05 04.00PM தொடர்புகளுக்கு -077 348 1379 077 582 4512 முன்பதிவு செய்து சிரமத்தை தவிர்ப்போம்’
 
  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, விசுகு said:
 
திகதி மாற்றப்பட்ட தகவலை தந்தமைக்கு நன்றி விசுகு அண்ணா.. 

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துகள் இயக்குனர் மதிசுதா.

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, விசுகு said:

திரையரங்கிற்கு வந்த படம் காண்பிக்கப்பட்ட பின்பே எதுவும் நிச்சயம். அதுவரை தடங்கல்கள் வந்து கொண்டுதான் இருக்கும் போலுள்ளது. 

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

திரையரங்கிற்கு வந்த படம் காண்பிக்கப்பட்ட பின்பே எதுவும் நிச்சயம். அதுவரை தடங்கல்கள் வந்து கொண்டுதான் இருக்கும் போலுள்ளது. 

படத்தின் கதை மற்றும் காட்சிகள்  அவ்வாறு  என்று  நினைக்கின்றேன்?

  • கருத்துக்கள உறவுகள்

'வெந்துதணிந்தது காடு" திரைப்படத்தில் நடித்தவர்களின், பார்த்தவர்களின் அபிப்பராயம்.👋

Edited by யாயினி

  • கருத்துக்கள உறவுகள்
On 30/1/2023 at 02:41, யாயினி said:

'வெந்துதணிந்தது காடு" திரைப்படத்தில் நடித்தவர்களின், பார்த்தவர்களின் அபிப்பராயம்.👋

சிட்னிக்கு திரும்பிவிட்டமையால் பார்க்க முடியாமல் போனது கவலைதான்.. வெளிநாடுகளில் திரையிடும் வாய்ப்புகள் உள்ளதா தெரியவில்லை

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள்........!   💐

  • தொடங்கியவர்

அனைவருக்கும் உளப்பூர்வ நன்றிகள்....

வெளிநாடுகளிலும் ஈழத்தின் வெந்து தணிந்தது காடு திரைப்படம் வெளியிடுவதற்குரிய ஆயத்த வேலைகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன... தாயக மக்கள் கொண்டாடிக் கொண்டிருக்கும் அவர்களது கதையை உலகின் மூலைகளுக்கும் கொண்டு செல்ல உதவுங்கள்.

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 23/4/2023 at 04:34, ம.தி.சுதா said:

அனைவருக்கும் உளப்பூர்வ நன்றிகள்....

வெளிநாடுகளிலும் ஈழத்தின் வெந்து தணிந்தது காடு திரைப்படம் வெளியிடுவதற்குரிய ஆயத்த வேலைகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன... தாயக மக்கள் கொண்டாடிக் கொண்டிருக்கும் அவர்களது கதையை உலகின் மூலைகளுக்கும் கொண்டு செல்ல உதவுங்கள்.

இந்த படத்தின் காப்புரிமை யாருக்கு உள்ளது? மக்கள் பார்வைக்கு செல்லவேண்டியது கட்டாயம் என்றால் யூரியூப்பில் தரவேற்றலாமே.

  • கருத்துக்கள உறவுகள்
On 17/5/2023 at 04:58, நியாயத்தை கதைப்போம் said:

இந்த படத்தின் காப்புரிமை யாருக்கு உள்ளது? மக்கள் பார்வைக்கு செல்லவேண்டியது கட்டாயம் என்றால் யூரியூப்பில் தரவேற்றலாமே.

இலவசமாகப் பார்க்கவேண்டுமென்றால் புரவலர்கள் படைப்புக்கான செலவையும், வெளியிட ஏற்படும் செலவையும், கலைஞர்களின் உழைப்புக்கான ஊதியத்தையும் கொடுக்கவேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, கிருபன் said:

இலவசமாகப் பார்க்கவேண்டுமென்றால் புரவலர்கள் படைப்புக்கான செலவையும், வெளியிட ஏற்படும் செலவையும், கலைஞர்களின் உழைப்புக்கான ஊதியத்தையும் கொடுக்கவேண்டும். 

சரி இதற்கு என்ன பரிகாரம் தீர்வு உள்ளது என கூறுங்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
On 29/1/2023 at 16:41, யாயினி said:

'வெந்துதணிந்தது காடு" திரைப்படத்தில் நடித்தவர்களின், பார்த்தவர்களின் அபிப்பராயம்

இணைப்புக்கு நன்றி. படைப்பாளர்களுக்குப் பாராட்டுகள். 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நியாயத்தை கதைப்போம் said:

சரி இதற்கு என்ன பரிகாரம் தீர்வு உள்ளது என கூறுங்கள். 

படைப்பாளிகள் சோர்வடையாமல் இன்னும் ஒரு தயாரிப்பை மேற்கொள்ளும் அளவிற்கு crowd funding அல்லது sponsor கொடுக்கவேண்டும். படைப்பாளியின் சுதந்திரத்தில் தலையிடாமல் இருக்கவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, கிருபன் said:

படைப்பாளிகள் சோர்வடையாமல் இன்னும் ஒரு தயாரிப்பை மேற்கொள்ளும் அளவிற்கு crowd funding அல்லது sponsor கொடுக்கவேண்டும். படைப்பாளியின் சுதந்திரத்தில் தலையிடாமல் இருக்கவேண்டும்.

முன்பு இந்திய தமிழ் சினிமா படங்கள் இலங்கைக்கு வரும்போது விடுதலைப்புலிகள் கட்டுப்பாட்டு பகுதியினுள் அவை திரையிடப்பட முன்னர் அவை ஒவ்வொன்றும் புலனாய்வு பிரிவு பொறுப்பாளர் பொட்டு அம்மான் பார்வையிட்டு தணிக்கை செய்தபின்னரே மக்கள் பார்வைக்கு விடப்படும் என கேள்விப்பட்டேன். இப்போது இலங்கையில் உருவாக்கப்படும் ஒரு திரைப்படத்தை வெளிநாட்டில் காண்பிப்பதற்கு வெளிநாட்டில் உள்ள சிலர் முண்டாசு கட்டிக்கொண்டு தடையாக முன்னால் நிற்பதை பார்க்க சிரிப்பதா அழுவதா தெரியவில்லை. இவர்கள் தாங்களும் பொட்டு அம்மான் என்று நினைக்கின்றார்களோ. 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நியாயத்தை கதைப்போம் said:

முன்பு இந்திய தமிழ் சினிமா படங்கள் இலங்கைக்கு வரும்போது விடுதலைப்புலிகள் கட்டுப்பாட்டு பகுதியினுள் அவை திரையிடப்பட முன்னர் அவை ஒவ்வொன்றும் புலனாய்வு பிரிவு பொறுப்பாளர் பொட்டு அம்மான் பார்வையிட்டு தணிக்கை செய்தபின்னரே மக்கள் பார்வைக்கு விடப்படும் என கேள்விப்பட்டேன். இப்போது இலங்கையில் உருவாக்கப்படும் ஒரு திரைப்படத்தை வெளிநாட்டில் காண்பிப்பதற்கு வெளிநாட்டில் உள்ள சிலர் முண்டாசு கட்டிக்கொண்டு தடையாக முன்னால் நிற்பதை பார்க்க சிரிப்பதா அழுவதா தெரியவில்லை. இவர்கள் தாங்களும் பொட்டு அம்மான் என்று நினைக்கின்றார்களோ. 

யாரோ உங்களுக்கு அவிச்சு விட்டுள்ளார்கள்.

அம்மானுக்கு வேற வேலை இருந்திருக்காது.

ஒவ்வொரு துறைக்கும் பொறுப்பாளர்கள் அவர்களின் கீழ் வேலை செய்ய போராளிகள் என கட்டமைப்பு. 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, MEERA said:

யாரோ உங்களுக்கு அவிச்சு விட்டுள்ளார்கள்.

அம்மானுக்கு வேற வேலை இருந்திருக்காது.

ஒவ்வொரு துறைக்கும் பொறுப்பாளர்கள் அவர்களின் கீழ் வேலை செய்ய போராளிகள் என கட்டமைப்பு. 

உங்களுக்கு தெரியாத ஒரு விடயம் இன்னொருவருக்கு தெரிந்தால் அதற்கு பெயர் அவிப்பதா? 😄 சரி நான் அவிந்துள்ளேன் என்றே எடுத்துக்கொள்வோம். 😉

இப்போது விடயத்துக்கு வருவோம். 

நீங்கள் மதிசுதாவின் வெந்து தணிந்தது காடு பார்ப்பீர்களா? இதுபற்றிய உங்கள் நிலைப்பாடு என்ன?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.