Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அதிரவைக்கும் உளவுத்துறை - ‘‘இந்திய அரசுக்கு புலிகளின் பிளாக்மெயில்...!’’

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அதிரவைக்கும் உளவுத்துறை

‘‘இந்திய அரசுக்கு புலிகளின் பிளாக்மெயில்...!’’

விடுதலைப்புலிகளை 'போராளிகள்' என்றும் 'பயங்கரவாதிகள்' என்றும் இருவேறு கண் கொண்டு பார்ப்பவர்கள் இருக்கிறார்கள்.

இலங்கையில் இருக்கும் சக தமிழர்களின் விடுதலைக்காகப் பாடுபடுகிற அமைப்பாகவே இந்த இயக்கத்தை முழுக்க முழுக்க தமிழக மக்கள் பார்த்துக் கொண்டிருந்த காலம் ஒன்று உண்டு. பத்மநாபாவும் அவரது இயக்கத்தவர்களும் சென்னையில் படுகொலை செய்யப் பட்ட சம்பவத்துக்குப் பிறகுதான், புலிகளை லேசான பயக்கண் கொண்டு தமிழகம் பார்க்க ஆரம்பித்தது. அடுத்து, ராஜீவ் படுகொலையின்போது ஒட்டுமொத்த இந்தியாவுமே துடித்துப்போனது. புலிகள் மீது அச்சத்தோடு வெறுப்பும் அதிகமானது.

ராஜீவ் படுகொலையின் துயர நினைவுகள் மெதுவாகப் பின்னோக்கிப் போக ஆரம்பித்தபோது, இலங்கையில் தமிழர் களை கூட்டம் கூட்டமாக இலங்கை ராணுவம் கொன்று குவிப்பது தொடர்ந்தது. அப்போது, மறுபடியும் புலிகளைப் பற்றி Ôதமிழர்களின் உயிர்ப் பாதுகாப்புக்கு கேடயமாக இருப்பவர்கள்Õ என்ற பார்வை திரும்பியது.

இந்த கலவையான கருத்து காரணமாகவே தமிழக அரசியலிலும்கூட புலி ஆதரவு,எதிர்ப்பு என்று இரு பார்வை களுக்கும் இடம் கிடைத்து வந்தது.

ஆனால், கடந்த சில நாட்களுக்கு முன் வயிற்றுப் பிழைப்புக்காக கடலுக்குள் சென்ற தமிழக மீனவர்களை விடுதலைப்புலிகளே சுட்டுக் கொன்றனர் என்று வெளியான செய்தியும், இன்னும் சில மீனவர்களை புலிகள் பணயக் கைதிகளாகப் பிடித்து தங்கள் வசம் வைத்திருக்கின்ற னர் என்று பரவிய தகவலும் புலிகள் பற்றிய கடுமையான பார்வையை மறுபடியும் அதிகரித்திருக்கிறது.

விடுதலைப்புலிகள் விஷயத்தில் தி.மு.க&வின் நிலைப்பாடு என்ன என்பதிலும் தொடர்ந்து குழப்பமான நிலைதான் இருந்து வந்தது. அதிலும் இப்போது பெரும் மாற்றம்! சந்தேகத்துக்கு அப்பாற்பட்ட அளவுக்கு புலிகளுக்கு எதிரான நிலைப்பாட்டை தி.மு.க. அரசு தற்போது எடுக்க ஆரம்பித்துள்ளது.

"கடலில் மீன் பிடிக்கச் சென்ற மீனவர்களை 'மரியா' என்று எழுதப்பட்ட படகில் வந்த புலிகள்தான் சுட்டுக் கொன்றனர். அந்தப் புலிகளில் சிலரைக் கைது செய்து 'க்யூ' பிராஞ்ச் விசாரித்தபோது... கொலை செய்ததை அவர்களே ஒப்புக் கொண்டனர். இந்தப் புலிகள் வசம் உள்ள சாட்டிலைட் போன்கள் மூலம் புலிகளின் முகாமுக்கே தொடர்பு கொண்டு பேச வைத்தபோது, அங்கே தமிழகத்தைச் சேர்ந்த இன்னும் சில மீனவர்கள் சிறைபட்டுக் கிடப்பதும் உறுதி செய்யப்பட்டது" என்று கூறுகிறது தமிழக போலீஸின் அறிக்கை.

புலிகள் இயக்கமோ, தாங்கள் சுட்டுக் கொன்றதை மறுப்பதோடு, மீனவர்களைப் பிடித்திருப்பது இலங்கை ராணுவம்தான் என்றும் மறுப்பறிக்கை கொடுத்திருக்கிறது.

உண்மைதான் என்ன?

புலி ஆதரவு - எதிர்ப்பு அணிகள், தமிழக-மத்திய அரசுகளின் புலனாய்வுத் துறைகள் ஆகிய வட்டாரங்களில் துருவித் துருவி விசாரித்தபோது தெரியவரும் தகவல்கள் இங்கே தொகுக்கப்படுகிறது.

முதலில், தமிழக உளவுத் துறை வட்டாரம் சொல்வதைப் பார்ப்போம்.

"இலங்கை மற்றும் இந்தியக் கடல் எல்லைகளுக்கு வெளியே பெரிய கப்பல்கள் வந்து நிற்பதும், அவற்றி லிருந்து ஆயுதங்களை சிறிய-பெரிய படகுகளில் மாற்றி எடுத்துக் கொண்டுபோய் ரகசியமாகத் தங்கள் முகாமில் சேர்ப்பதும் புலிகளின் வழக்கம். இப்படி ஆயுதங்களைச் சுமந்து வரும்போது, இலங்கைக் கடல் ராணுவத் துக்கு சந்தேகம் வராத வண்ணம், அந்தப் படகுகளில் உள்ளே ஆயுதங்களும் வெளியே மீன்களுமாக நிரப்பி வருவார்கள்.

இந்த சமயங்களில் தமிழக மீனவர்கள் தென்பட்டால் அவர்களிடம் மிகப் பக்குவமாகவே நடந்து கொள் வார்கள். பல சமயங்களில், தங்கள் வசம் உள்ள மீன்களைக் கூட கொடுத்துவிட்டுச் செல்வார்கள். தமிழ்ச் சகோதரர் களுக்கான அன்புப் பரிசாகவும், அவர்கள் தங்கள் நடமாட்டத்தை இலங்கை-இந்திய ராணுவங்களுக்குக் காட்டிக் கொடுத்துவிடாமல் இருப்பதற்குமான 'அன்பளிப் பாகவும்'தான் இப்படி மீன்களைத் தருவார்கள்.

இதுவே வழக்கமாகிப் போன பிறகு, சில சமயங்களில் தமிழக மீனவர்கள் கடலில் புலிகள் எதிர்ப்படும்போது உரிமையோடு மீன்களைக் கேட்டு வாங்குவது உண்டு. அப் படித்தான், 'மரியா' படகில் வந்த புலிகளை மறித்துக் கேட்டிருக்கிறார்கள். அன்றைக்குப் பார்த்து ஆயுதங்களைக் கொண்டு போய்ச் சேர்க்கிற அவசரத்திலும் பதற்றத்திலும் புலிகள் இருக்க... தமிழக மீனவர் களோ அந்தப் படகை நெருங்கி, அதை தங்கள் படகோடு சேர்த்துப் பிணைத்துவிட்டு... அதற் குள் இறங்கி 'மீன் இருக்கிறதா, இல்லையா' என்று மறைப்புகளையெல் லாம் தள்ளிவிட்டுத் துழாவிப் பார்த்தி ருக்கிறார்கள்.

அதுவரை பார்க்காத பயங்கர ஆயுதங்கள் அதில் இருக்கவும், அதுபற்றி மீண்டும் மீண்டும் கேள்வி கேட்டு மீனவர்கள் துளைத்தெடுத்ததோடு, அந்த ஆயுதங்களை யெல்லாம் கையிலெடுத்து தங்கள் படகுக்கு மாற்ற முயற்சிக்க... தங்களின் அடுத்தகட்ட தளபதி ஒருவரை சாட்டிலைட் போனில் தொடர்பு கொண்டு சிக்கலைச் சொல்லியிருக்கிறார்கள் புலிகள். 'ராணுவத்தின் பார்வை படுவதற்குள் என்ன செய்தாவது பத்திரமாக கரைக்கு வந்து சேருங்கள்' என்று உத்தரவு வர... அதைத் தொடர்ந்தே தமிழக மீனவர்களை சுட்டுக் கொன்று விட்டுப் பறந்தார்கள் புலிகள்! தகவல் கிடைத்ததுமே கடலோர காவல் படை, 'மரியா' படகைக் குறிவைத்தது. அடுத்த சில நாட்களிலேயே அதே படகில் சென்று கொண்டிருந்த ஆறு புலிகளையும் பிடித்து எங்களிடம் விசாரணைக்காக ஒப்படைத்துள்ளது.

மிகக் கடுமையாக விசாரித்தபோதுதான், தங்கள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் தமிழக மீனவர்களை சுட்டுக் கொன்றது தவிர... அதற்கு முன்பே இதுபோல சிக்கல் உண்டாக்கிய சில மீனவர்களை தாங்கள் கடத்திச் சென்று ரகசிய முகாமில் அடைத்து வைத்திருப்பதையும் இந்த ஆறு புலிகளும் சொன்னார்கள்.

கடந்த சில மாதங்களாகவே தமிழக கடலோரப் பகுதியில் முகாமிட்டுள்ள மத்திய உளவுப் பிரிவினர், அங்கு வாழும் மீனவர்களிடம் தொடர்ந்து பேசி வருகிறார்கள். Ôவிடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக ஒருபோதும் செயல்படக்கூடாது. அது ஒட்டுமொத்த தேசத்தின் பாது காப்புக்கே ஆபத்தாக முடிந்துவிடும். இனிமேல், அவர்களின் நடமாட்டம் தெரிந்தால் எங்களுக்கு உடனே தகவல் கொடுங்கள்Õ என்று திரும்பத் திரும்பச் சொல்லி, பல மீனவர்களை தங்களின் 'இன்ஃபார்மர்'களாக மாற்றிவிட்டார்கள்.

புலிகளின் படகு நடமாட்டம் கடலில் எங்கு தென்பட்டாலும் அது குறித்து அதிகாரிகளுக்கு மீனவர்கள் சொல்லுவதும், உடனே அந்தத் தகவலை இலங்கை ராணுவத்துக்கு மத்திய உளவுத் துறை அனுப்பு வதும், அந்நாட்டு ராணுவம் விரைந்து போய் அந்தப் பகுதி யில் காவல் நின்று புலிகளைத் துரத்துவதும் கடந்த சில மாதங் களாக தொடர்ந்து நடக்கத் தொடங்கிவிட்டது. மீனவர் களின் இந்த மாற்றத்தைப் புலிகளும் அறிந்துகொண்டு விட் டார்கள். இதனால், இதுவரை தமிழக மீனவர்கள் மீது பரிவு காட்டி வந்ததை நிறுத்திக் கொண்டு, கடந்த சில காலமாகவே லேசான எரிச்சலோடு பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள் புலிகள். இந் நிலையில்தான் கொலையும் கடத்தலும் நடந்திருக்கிறதுÕÕ என்று சொல்கிறது தமிழக உளவு வட்டாரம்.

மத்திய உளவுப் பிரிவினர் அதிர்ச்சியோடு நம்மிடம் பகிர்ந்து கொண்டது -

"வான்வழித் தாக்குதல் என்ற புதிய தலைவலியை இலங்கைக்கு ஏற்படுத்தி இருக்கும் புலிகள், மிக விரைவில் வரலாறு காணாத வகையில் ஒரு மாபெரும் தாக்குதலை நடத்தி இலங்கை அரசை நிலைகுலையச் செய்யத் தயாராகி வருகிறார்கள். அதற்கென்றே மிக சக்தி வாய்ந்த ஆயுதங் களை வரவழைத்திருக்கிறார்கள். அந்த ஆயுதங்களைத் தாங்கி வந்த கப்பல் சர்வதேச கடல் எல்லையில் நின்றிருக்கிறது. தற்போது உஷாராகிவிட்ட இலங்கை அரசு, அந்தக் கப்பலை மொத்தமாக சிறை பிடிக்க அமெரிக்கா வின் உதவியை நாடியுள்ளது. இன்னொருபுறம், இந்திய அரசிடமும் இது பற்றி தகவல் அனுப்பி ஆலோ சனை கேட்டுள்ளது.

இலங்கை விவகாரத் தில் அமெரிக்காவின் தலையீட்டை இந்திய அரசு விரும்பவில்லை. எனவே, இந்திய அரசு முந்திக் கொண்டு ஆயுதக் கப்பலை மடக் கிப் பிடிக்க இலங்கைக்கு உதவி செய்யக்கூடும் என்பதே புலிகளின் அச்சம். இந்தியாவிலிருந்து அப்படி எந்த உதவியும் வரக்கூடாது என்று அரசியல் ரீதியாக பல்வேறு குரல்களை கொடுக்க வைத்து தோற்றுவிட்ட அவர்கள், இந்திய மீனவர்களை பணயக் கைதிகளாகக் கடத்திக் கொண்டு போய் மறைமுகமாக இந்திய அரசை பிளாக்மெயில் செய்கிறார்கள். சிலரை சுட்டுக் கொன்றதும்கூட, Ôஎங்கள் போராட்டத்துக்கு தடை வந்தால் தமிழ்நாட்டையோ இந்திய அரசையோ பகைத்துக் கொள்ளவும் நாங்கள் தயங்க மாட்டோம். இதனால், இந்திய மண்ணில் எங்களுக்கு ஆதரவே கிடைக்காமல் போனாலும் பரவாயில்லைÕ என்று காட்டுவதற்காகத்தான்!" என்பதே மத்திய உளவுத் துறை சொல்லும் தகவல்.

பணயக் கைதிகளாக உள்ள மீனவர்களை பத்திரமாக விடுவிக்கும் வகையில், ஆயுதக் கப்பல் விவகாரத்திலிருந்து பின்வாங்குவதா, வேண்டாமா என்பதுதான் மத்திய அரசின் தற்போதைய ஒரே சிந்தனை..!

பின்னணியில் புலிகளுடன் பேரம் நடத்தி, அந்த மீனவர்களை மீட்டுக் கொண்டு வருதற்கு ஒரு பக்கம் முயற்சிகளைச் செய்து கொண்டே... இலங்கை அரசின் வருத்தத்துக்கும் ஆளாகா மல் இருப்பதற்கான வழிமுறை களை மத்திய அரசு யோசித்து வருவதாகச் சொல்லப்படு கிறது.

இலங்கை ராணுவம் போலவே, விடுதலைப் புலிகளும் தமிழக மீனவர்களை சுட்டுப் பிணமாக அனுப்ப ஆரம்பித்தால் தமிழ்நாட்டில் ஏற்படும் கொந்தளிப்பை எப்படி சமாளிப்பது என்பதுதான் தற்போதைய தமிழக அரசின் கவலை..!

இதுவரை இலங்கை ராணுவத்தால் சுட்டுக் கொல்லப் பட்ட மீனவர்கள் குடும்பத்துக்கு அளிக்கப்பட்ட நிவாரணத் தொகை இம்முறை அதிகம். ஐந்து லட்ச ரூபாயை தமிழக அரசு அறிவித்திருப்பதே, கொந்தளிப்புகளை தவிர்ப் பதற்கான முதல் நடவடிக்கை என்று சொல்லப்படுகிறது.

புலிகள் திட்டமிடும் வரலாறு காணாத தாக்குதலைத் தடுப்பதற்கு இந்தியாவின் உதவியை நாடுவதா அல்லது அமெரிக்காவிடம் போய் நிற்பதா என்பது இலங்கை அரசின் கவலை..!

'தமிழக மீனவர்களை புலிகள் சுட்டுக் கொன்றார்கள் என்ற செய்திக்குப் பின், அந்த இயக்கத்தின் மீது தமிழக மக்களுக்கு எந்தப் பற்றும் இருக்காது. தி.மு.க. அரசை கவலைப்படாமல் இருக்கச் சொல்லுங்கள். தயங்காமல் வெளிப்படையாகவே எங்களுக்கு உதவி செய்யுங்கள்Õ என்று இலங்கையிலிருந்து டெல்லிக்கு வேண்டுகோள் வைக்கப்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

சரி, புலி ஆதரவுப் பிரமுகர் கள் என்ன சொல்கிறார்கள்?

"சுட்டதும், கடத்தியதும் சத்தியமாகப் புலிகளே அல்ல! அப்பாவி தமிழ் உயிர்களைப் பணயமாக வைத்து பயங்கரமான ஒரு நாடகத்தை அரங்கேற்றி, பழியை புலிகள் தலையில் போட்டு, தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் அவர்கள் மீது உள்ள அபிமானத்தை முற்றிலுமாக சிதைத்துவிட்டு, அதன் பிறகு இலங்கை ராணுவத்துக்கு வெளிப்படையாக எல்லா உதவிகளையும் செய்வதற்கான ஏற்பாடுகள்தான் இப்போது அரங்கேறும் காட்சிகள்" என்பதே இவர்கள் வாதம்.

இந்திய தேசத்தின் நலன் மீது அக்கறை கொண்டவர்களுக்கு முக்கியமான கவலையே -

இலங்கை விவகாரத்தில் இந்தியா உதவுகிறதோ இல்லையோ... தப்பித் தவறியும் அமெரிக்காவை அங்கே கால் பதிக்க அனுமதித்துவிடக் கூடாது என்பதுதான்! ஈராக், ஆப்கானிஸ்தான் என்று வன்முறையை அடக்கும் போர்வையோடு அமெரிக்கா கால்வைத்த இடங்களிலும், அவற்றின் அண்டை நாடுகளிலும் ஏற்பட்ட பூகம்பங்கள்தான் இந்த நலம் விரும்பிகளின் தூக்கத்தைக் கெடுத்துக் கொண்டிருக்கிறது!

கடத்தியது யார்?

எஸ்.எம்.எஸ்.சர்வே....

‘காணாமல் போயிருக்கும் இந்திய மீனவர்களைக் கடத்திச் சென்றது இலங்கை ராணுவமா? அல்லது விடுதலைப் புலிகளின் கடல்புலி அமைப்பினரா?’ என்று கருத்து கேட்டு வாசகர்களுக்கு எஸ்.எம்.எஸ். மூலம் கேள்வி அனுப்பியிருந்தோம். எஸ்.எம்.எஸ் சென்று சேர்ந்த நொடியில் விறுவிறுவென பதில்களை டைப் செய்து அனுப்பினார்கள் வாசகர்கள். இதில் கலந்து கொண்ட ஏராளமான வாசகர்கள் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகவே நமக்கு பதில் அனுப்பி இருந்தார்கள். ஒருசிலரின் கருத்து மட்டும் இலங்கை ராணுவத்துக்கு ஆதரவாக இருந்தது. தேர்ந்தெடுக்கப்பட்ட சில கருத்துக்கள் மட்டும் இங்கே...

கடல்புலிகள் இதுபோன்ற முட்டாள்தனமான செயலை ஒருபோதும் செய்யவே மாட்டார்கள்.

-& ஜோ

இது கண்டிப்பாக விடுதலைப்புலிகள் வேலைதான். இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையே பிரச்னை உரு வாக்குவதற்காக இப்படி திட்டமிட்டு செய்திருக்கலாம்.

- சி.பி.செந்தில்குமார்

இலங்கை கடற்படையினர் மட்டும்தான் இப்படிப்பட்ட வேலைகளில் ஈடுபடுவார்கள். புலிகள் மீதான மரியாதையை குறைப்பதற்காக திட்டமிட்டு செய்யப்பட்ட சதியாகத்தான் இதனைப் பார்க்க வேண்டும்.

- எம்.சக்தி

சுட்டுக் கொல்வதும், கடத்துவதும் இலங்கை ராணுவத் தின் விளையாட்டு. விடுதலைப்புலிகளை இதில் தேவையில்லாமல் இழுக்க வேண்டாம்.

- பி.ஷிபி

தமிழக மக்களின் ஆதரவை இழக்க புலிகள் ஒரு போதும் விரும்ப மாட்டார்கள். உண்மையில் இது ஒரு பெரிய அரசியல் விளையாட்டுதான்.

- நிம்ஸ்

யாரால் கடத்தப்பட்டிருந் தால் என்ன, அவர்கள் உடனே நாடு திரும்ப வேண்டும். அது தான் பிரச்னை. அதற்காக பிரார்த்தனை செய்வோம்!

-ரவி

மாற்றமே இல்லை. இது எல்.டி.டி.இ&யின் வேலை தான். எல்லாத்தையும் செய்து விட்டு, கடைசியில் இதனை யும் ஒரு துன்பியல் சம்பவம் என்பார்கள்.

- பி.ஸ்ரீனிவாசன்

இந்த மாதிரி ரகசியமாக ஆள் கடத்தலில் ஈடுபடுவதெல்லாம் இலங்கை ராணுவத்துக்கு கைவந்த கலைதான். அப்பத்தானே புலிகள் மீது பழிபோட முடியும்?

- சரவணன்

இலங்கை ராணுவத்தின் ஆதரவுடன் ஏன் கருணா குரூப் இந்த செயலை செய்திருக்கக் கூடாது?

p5il2.jpg

- எஸ்.முரளி

தமிழக டி.ஜி.பி. சொல்லும் தகவலை ஏன் சந்தேகப்பட வேண்டும்? கண்டிப்பாக புலிகள்தான் இந்த காரியத்தை செய் திருப்பார்கள்.

- வி.நாராயணன்

கச்சத்தீவை மீட்காதவரை இதுபோன்ற சர்ச்சைகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்.

- என்.சஹா

நன்றி - விகடன்

Edited by கறுப்பி

இந்தச் செய்தியின் மூலம் எது?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒ...............பதிய மறந்துவிட்டேன்.

விகடன் எண்டு பதிந்துவிட்டேன்.

நன்றி.

அட கருமமே, விகடனும் இப்ப இப்படி எழுதுகின்றதா? :o:(

அட கருமமே, விகடனும் இப்ப இப்படி எழுதுகின்றதா? :o:(

விகடன் ஒளித்திரை மூலமும், இணையத்தின் மூலமும் ஈழத்தமிழரையும், தன் அச்சிதழ்கள் மூலம் தமிழகத்தமிழர்களிடமும் நக்கி பிழைக்கும் விகடன்கள் இப்படித்தான் எழுதுவார்கள். :angry:

இப்போது மருத்துவர் அய்யாவும் வெளிப்படையாய் 'மீனவர்களை கொன்றது புலிகள் அல்ல' என்று அண்ணன் வைகோவைத்தொடர்ந்து, சகோதரர் திருமாவளவனைத்தொடர்ந்து பேச ஆரம்பித்துவிட்டார். தமிழக மக்கள் ஒருப்போதும் நம்பாத பொய் அது .

அவர்களுக்கு சொல்லிக்கொள்வது எல்லாம் ஒன்றுதான்

" அடேய் அவர்கள் எங்கள் சகோதரர்கள்' எமக்காய் தன்னுயிர் தருவர் அன்றி உயிர் பறிக்க ஒரு நாளும் கனவிலும் நினைக்கமாட்டர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை விவகாரத் தில் அமெரிக்காவின் தலையீட்டை இந்திய அரசு விரும்பவில்லை. எனவே, இந்திய அரசு முந்திக் கொண்டு ஆயுதக் கப்பலை மடக் கிப் பிடிக்க இலங்கைக்கு உதவி செய்யக்கூடும் என்பதே புலிகளின் அச்சம். இந்தியாவிலிருந்து அப்படி எந்த உதவியும் வரக்கூடாது என்று அரசியல் ரீதியாக பல்வேறு குரல்களை கொடுக்க வைத்து தோற்றுவிட்ட அவர்கள், இந்திய மீனவர்களை பணயக் கைதிகளாகக் கடத்திக் கொண்டு போய் மறைமுகமாக இந்திய அரசை பிளாக்மெயில் செய்கிறார்கள். சிலரை சுட்டுக் கொன்றதும்கூட, Ôஎங்கள் போராட்டத்துக்கு தடை வந்தால் தமிழ்நாட்டையோ இந்திய அரசையோ பகைத்துக் கொள்ளவும் நாங்கள் தயங்க மாட்டோம். இதனால், இந்திய மண்ணில் எங்களுக்கு ஆதரவே கிடைக்காமல் போனாலும் பரவாயில்லைÕ என்று காட்டுவதற்காகத்தான்!" என்பதே மத்திய உளவுத் துறை சொல்லும் தகவல்.

கிட்டு அண்ணாவை நடுக்கடலில் கடத்திக் கொண்டு போனபோது, போராட்டத்துக்கு தீங்கு வந்தது தான். தடை வந்தது தான். அப்போது இந்தியாவைப் பகைத்துப் புலிகள் நடவடிக்கை எடுத்தார்களா? இல்லையே!

புலிகளின் கப்பல்கள் வந்தபோது சிறிலங்கா அரசுக்கு தகவல் கொடுத்தும், புலிகளின் படகுகளை இந்திய கடற்படை தாக்கியபோதும், புலிகள் ஒரு துப்பாகி வேட்டுக் கூட அவர்களுக்கு எதிராகப் பாவிக்கவில்லையே. அப்படியான நிலையில் பல போராளிகளை இழந்தபோதும், இந்தியாவைப் பகைக்க கூடாது என்பதற்கும், தமிழக மக்களை வருத்தக் கூடாது என்பதற்காகவும் பல போராளிகளைத் தியாகம் செய்ய வேண்டியதாக இருந்தது.

இந்திய இராணுவத்தோட போர், அது சார்ந்த சம்பவங்கள் தவிர, வேறு எச்சந்தர்ப்பத்திலும், புலிகள் இந்தியாவைப் பகைக்க நடந்து கொள்ளவில்லை. இந்திய மீனவர்கள் மீதான கொலை மறுப்புக்கு கூட, இலங்கையரசைச் சாடியிருக்கின்றார்களே தவிர, இந்தியாவையோ, அல்லது முகர்ஜியையோ தாக்கிப் பேசவில்லை. ஏனென்றால் இந்தியாவைக் குற்றவாளியாகக் காட்டக் கூடாது என்பதற்காகவே.

ஆனால், தமிழக மக்கள் எம் மீது அன்பு வைத்தால், தமிழகம் பிரிந்து போகும் என்று உப்புச்சப்பிலாத ஒரு விடயத்தை வைத்துக் கொண்டு, எமக்கிடையிலான உறவினைப் பிரிக்கப் பலர் சதி செய்து கொண்டிருக்கின்றனர் என்பதை மட்டும் புரிந்து கொள்ள முடிகின்றது.

புலிகள் குறித்து மதிப்பாகக் கதைப்பது போலக் கதைத்து, ஆனால் இவ்விடயத்தில் குற்றவாளியாகக் காட்டி, தங்களுக்கு சதித்திட்டத்தில் பங்களிப்பில்லை என்பது போல முகர்ஜி கதை வசனம் எழுதுகின்றார். ஆனால் என்றைக்கும் தமிழக மீனவர்கள் எம் உறவுகள் தான். அவர்களுக்குப் பட்ட நன்றிக்கடனுக்கு எம்மை இழந்து அவர்களைக் காப்பாற்றுவது தான் மேலானது.

.

முதலில், தமிழக உளவுத் துறை வட்டாரம் சொல்வதைப் பார்ப்போம்.

"இலங்கை மற்றும் இந்தியக் கடல் எல்லைகளுக்கு வெளியே பெரிய கப்பல்கள் வந்து நிற்பதும், அவற்றி லிருந்து ஆயுதங்களை சிறிய-பெரிய படகுகளில் மாற்றி எடுத்துக் கொண்டுபோய் ரகசியமாகத் தங்கள் முகாமில் சேர்ப்பதும் புலிகளின் வழக்கம். இப்படி ஆயுதங்களைச் சுமந்து வரும்போது, இலங்கைக் கடல் ராணுவத் துக்கு சந்தேகம் வராத வண்ணம், அந்தப் படகுகளில் உள்ளே ஆயுதங்களும் வெளியே மீன்களுமாக நிரப்பி வருவார்கள்.

இந்த சமயங்களில் தமிழக மீனவர்கள் தென்பட்டால் அவர்களிடம் மிகப் பக்குவமாகவே நடந்து கொள் வார்கள். பல சமயங்களில், தங்கள் வசம் உள்ள மீன்களைக் கூட கொடுத்துவிட்டுச் செல்வார்கள். தமிழ்ச் சகோதரர் களுக்கான அன்புப் பரிசாகவும், அவர்கள் தங்கள் நடமாட்டத்தை இலங்கை-இந்திய ராணுவங்களுக்குக் காட்டிக் கொடுத்துவிடாமல் இருப்பதற்குமான 'அன்பளிப் பாகவும்'தான் இப்படி மீன்களைத் தருவார்கள்.

இதுவே வழக்கமாகிப் போன பிறகு, சில சமயங்களில் தமிழக மீனவர்கள் கடலில் புலிகள் எதிர்ப்படும்போது உரிமையோடு மீன்களைக் கேட்டு வாங்குவது உண்டு. அப் படித்தான், 'மரியா' படகில் வந்த புலிகளை மறித்துக் கேட்டிருக்கிறார்கள். அன்றைக்குப் பார்த்து ஆயுதங்களைக் கொண்டு போய்ச் சேர்க்கிற அவசரத்திலும் பதற்றத்திலும் புலிகள் இருக்க... தமிழக மீனவர் களோ அந்தப் படகை நெருங்கி, அதை தங்கள் படகோடு சேர்த்துப் பிணைத்துவிட்டு... அதற் குள் இறங்கி 'மீன் இருக்கிறதா, இல்லையா' என்று மறைப்புகளையெல் லாம் தள்ளிவிட்டுத் துழாவிப் பார்த்தி ருக்கிறார்கள்.

அதுவரை பார்க்காத பயங்கர ஆயுதங்கள் அதில் இருக்கவும், அதுபற்றி மீண்டும் மீண்டும் கேள்வி கேட்டு மீனவர்கள் துளைத்தெடுத்ததோடு, அந்த ஆயுதங்களை யெல்லாம் கையிலெடுத்து தங்கள் படகுக்கு மாற்ற முயற்சிக்க... தங்களின் அடுத்தகட்ட தளபதி ஒருவரை சாட்டிலைட் போனில் தொடர்பு கொண்டு சிக்கலைச் சொல்லியிருக்கிறார்கள் புலிகள். 'ராணுவத்தின் பார்வை படுவதற்குள் என்ன செய்தாவது பத்திரமாக கரைக்கு வந்து சேருங்கள்' என்று உத்தரவு வர... அதைத் தொடர்ந்தே தமிழக மீனவர்களை சுட்டுக் கொன்று விட்டுப் பறந்தார்கள் புலிகள்! தகவல் கிடைத்ததுமே கடலோர காவல் படை, 'மரியா' படகைக் குறிவைத்தது. அடுத்த சில நாட்களிலேயே அதே படகில் சென்று கொண்டிருந்த ஆறு புலிகளையும் பிடித்து எங்களிடம் விசாரணைக்காக ஒப்படைத்துள்ளது.

தமிழக உளவுப்படை என்னமா கதை திரைக்கதை வசனம் அமைக்கிறார்கள்

தமிழ் சினிமாவுக்கு போனால் சூப்பர் சூப்பர் ஹிட் மசாலா படமெல்லாம் எடுக்கலாம் :angry: :angry:

புலிகலுக்கும் தமிழக மீனவ சமுகத்துக்கும் இருக்கும் பிணைப்பு இன்று நேற்றல்ல சம்பந்தப்பட்டவர்கள் உண்மையை அறிவர்

அப்பாவித் தமிழக மீனவ சகோதரர்களை நினைக்க ரொம்ப கவலையாய் இருக்கிறது. ஆனால் இந்திய அரசும் அதன் புலநாய்வு எடுபிடிகளும் உலகதில் + அயல் நாடுகளில் செய்யும் அழும்புகளுக்கும், காட்டுமிராண்டித்தனத்துக்கு

Edited by mathuka

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

- உளவுத்துறையின் நாடகம் அருமையாக அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த நாடகம் வெளிவருவதற்கு முன்னமே இலங்கைக்கு பெருந்தொகையான ஆயுதத் தளபாடங்களை வழங்கியிருந்தது இந்திய மத்திய அரசு.

ஒரு திட்டமிப்பட்ட செயற்திட்டத்துடன் இயங்கும் இவ்வமைப்புகளுக்கு தமிழக அரசுச் சூழலும், தமிழக மக்களின் புலிகள் தொடர்பான ஆதரவுத்தளம் தடையாகவுள்ளன. இதைச் சிதைப்பதென்பதே இவ்வாறான கதையாடலுக்கான நோக்காகலாம்.

- இதற்கமைவாக பிரச்சாரம் பெரிய அளவில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன் நம்பகத்தன்மை இன்னும் குறைவாக இருப்பதுதான் இவர்களுக்குக் கிடைத்த முதற்தோல்வி.

- எண்பதுகளில் மாலை தீவு நாடகமெழுதி அரங்கேற்றியவர்கள். எல்லாம் அம்பலமானபோது வெட்கப்பட்டவர்கள் யார்.

- எண்பதுகளில் ஈழத்து இளைஞர்களுக்கு உத்தரப்பிரதேச மலை உச்சியில் கொரில்லா பயிற்சி கொடுத்த போது களவெடுக்கணும், கொள்ளை அடிக்கணும், பிற்பொக்கற் அடிக்கணும், கற்பழிக்கணும்... எனவாக உயரதிகாரிகளால் கற்பித்தவர்கள் அல்வா இவர்கள். முகர்சிகள் இப்படியான பயிற்சியிலிருந்து பட்டம் பெற்று வந்தவர்கள்தானே. இப்படியான அதிகாரிகளின் செயற்பாடு குஜராத் மானிலத்தில் நாறிப்போய்கிடக்கிறது.

- தமிழக மக்களுக்கும் ஈழத் தமிழருக்குமிடையிலான தார்மீக உறவைச் சிதைத்தலென்பதே இதிலுள்ள உள்நோக்கு என்பது தெளிவு. இதை உணர்ந்து ஆவன செய்யவேண்டியதுதான் நமது கடமை.

அப்படியாயின் பிடிபட்ட மரியா படகில் இருந்தவர்கள் இந்தியாவையும் இலங்கையையும் சேர்ந்த தமிழர்கள் என்றும் அதில் இந்தியத் தமிழர் உடனடியாகவும் இலங்கைத் தமிழர் விசாரணையின் பின்னும் விடுதலை செய்யப்பட்டனர் என்று முந்திய செய்திகளில் அவர்களின் பெயர்கள்கூட குறிப்பிட்டிருந்தார்களே. அதெல்லாம் புருடாவா !! இந்தக் கதை தொடரத்தான் போகிறதா !!

இந்த கயவர்களுடன் தமிழ்நாடு அரசும் சேர்ந்தது கவலை அளிக்கும் விடயமே.

தன் கையால் தன் கண்ணையே குத்திகொள்கிறர்கள்.

"அரசனை நம்பி புருசனை கொல்கிறார்கள்"

ஒரு காலத்தில் தமிழுக்காக தலை கொடுத்த தலைவன்

இன்று மத்திய அரசிற்காக தமிழையும்,.............கொடுத்தான்!!!!!

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பொய்யை மறைக்க ஒன்பது பொய்யைச்சொல்லி கடைசியாக ஒரு கட்டுக்கதையோட முடிச்சிருக்கிறாங்கள். தமிழக மீனவர்களிட்ட புலிஎதிர்ப்பு உணர்வை உண்டாக்கக் கடைசியாக எடுத்திருக்கிற மூளைசாhலித்தனமான கட்டுக்கதைதான் இது. ஒரு பொய்யை நூறுதரம் சொல்லி அதைப் பலரையும் நம்பவைக்கிற கோயபல்ஸ் தந்திரம் இது. இந்தியப் புலனாய்வில முந்திச் சாதாரண இன்ரெலிஜன்ட்தான் இருந்தது. இப்ப கொஞ்சம் கிறியேற்றிவ் இன்ரெலி

ஜெண்டும் சேர்ந்திருக்குது. சுஜாதா, ஜெயகாந்தன் போல லெவலுக்கு புனைகதை எழுத்தாளர்கள் உள்வாங்கபட்டிருக்கிறார்கள். பாவம் இவர்களிட்ட உள்ள ஒரே ஒரு

மூலதனம் இந்தியதேசிய நலன் எண்டிற தமிழுணர்வுர்வை எளிதில் வாங்க முடியாத செல்லாக்காசுதான். எவ்வளவு தூரம் போகப்போகிறார்கள் பார்ப்போம். எந்தக் கொம்பனுடைய தூரப்பார்வைக்கும் காலம் பதில் சொல்லும்தானே. நேர்மையையும் சத்தியத்தையும் இவர்களால் அசைக்கவேமுடியாது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தியாவுக்கு றோ ஒரு சிரங்கு

இது வரை எந்த அண்டை நாட்டுடன் உறவை நல்ல நிலையில் வைத்திருக்கிறது.

ஒரு சிறிய நாடான மாலை தீ வைக்கூட நாகரீக மற்ற முறயில் வழிக்குக் கொண்டு வர நினைத்தது பின்பு எல்லா நரிவேலைகளும் அம்பலத்துக்கு வந்தது.

இப்போது அடுத்த நரிவேலை தொடக்கி வைக்கப் பட்டுள்ளது அதுதான் மீனவரைப் பணயமாய் இதுகூட றோ சிங்களத்துக்கு காது கடித்து சொல்லப் பட்டு சிங்களத்தால் செய்யப் படுவதாக இருக்கலாம்.

இதை கலைஞ்ஞரே ஏற்றுக் கொள்கிறாரே என நாம் வாயைப் பிளக்கத் தேவை இல்லை,

கட்சிக் கொள்கைகளை முற்றாக முழுகியவர் ஜே ஆனால் கலைஞ்ஞர் அப்படி வெளியால் காட்டாமல் தனக்குள் முழுக்குப் போட்டவர்.

எங்கே கட்சிக் கொள்கைகளில் பிடிப்பைக் காட்டுவதற்க்காக சிலவேளைகளில் நடிக்க வேண்டி இருந்திருக்கிறது அவளவுதான்.

ஈழத்தமிழரில் உள்ள அன்பை விட அரசியல் ஆயுளில் தான் பாசம் அதிகம் என்பதை பல வருடங்கள் முன்பே காட்டி வைத்து விட்டார்.

புலிகள் தன்னுயிருக்கும் குறிவைத்து விட்டார்கள் என்று அறிக்கை விட்டு தன் அரசியல் குத்துக் கரணங்களில் எம் இனத்தின் வாழ்வாதாரத்தையும் பலிக்கடா ஆக்கி இருந்தவர்.

எனவே இவர் ஒரு மதில் மேல்பூனை

அரசியல் தந்திரங்களில் பழுத்த ஒரு பதவி வெறி.

எஸ்.எம்.எஸ் சென்று சேர்ந்த நொடியில் விறுவிறுவென பதில்களை டைப் செய்து அனுப்பினார்கள் வாசகர்கள். இதில் கலந்து கொண்ட ஏராளமான வாசகர்கள் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகவே நமக்கு பதில் அனுப்பி இருந்தார்கள். ஒருசிலரின் கருத்து மட்டும் இலங்கை ராணுவத்துக்கு ஆதரவாக இருந்தது.

68% சதவீதம் பேர் புலிகள் மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் கவனித்தீர்களா.......... இந்த நாடகத்தை தமிழ் மக்கள் நம்பவில்லை என்பதையே இது காட்டுகிறது....தமிழகத்தில் உண்மையான தமிழர்கள் 75% க்கும் குறைவே ........ தமிழகத்தில் புலி ஆதரவே இல்லை என்று கூறும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் இதற்கு என்ன சொல்லப்போகிறார்கள்???

நான் சவால் விடுகிறேன் தமிழகத்தில் கீழ்க்கண்ட கேல்விகளை க்கொண்டு கருத்துக்கணிப்பு நடத்தட்டும் பார்க்கலாம்...

1) நீங்கள் தமிழீழ தனியரசு அமைவதை ஆதரிக்கிறீர்களா?

2) நீங்கள் விடுதலைப்புலிகளே ஈழத்தமிழரின் காவலர் என்பதை ஏற்றுக்கொள்வீர்களா?

3) புலிகள் மீதான தடையை உடனடியாக விலக்க வேண்டுமா?

4)இந்தியா புலிகளுக்கு உதவ வேண்டுமா?

இப்படி கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டால் முடிவில் தெரியும் தமிழகம் யார் பக்கம் என்பது!!!!!

Edited by வேலவன்

கலைஞர் தன் கடைசி காலத்தில் நல்ல தலைவனாக சாகமுடியாவிட்டாலும் நல்ல தமிழனாகவாவது சாக முயல வேண்டும்!!!.

புறநானூற்று வீரம் பற்றி முரசொலியில் கடிதம் எழுதினால் போதாது. எவரின் அச்சுறுத்தலுக்கும் விலை போகாத தமிழ் வீரம் ஒரு கொஞ்சமாவது இருக்கவேண்டும்.

தன் பதவியை காப்பாற்றிக்கொள்ள கட்டபொம்மனை காட்டிக்கொடுத்த தொண்டைமானும் எட்டப்பனும் உயிருடன் திரும்பி வந்து அறிக்கை விட்டது போல் இருக்கிறது மீனவர் கொலைகள் பற்றிய கலைஞரின் அறிக்கை.

நரிவாலுக்கும் புலிவாலுக்கும் வித்தியாசம் தெரியாதா?! இந்த குறளோவிய குரவருக்கு. கலைஞர் அவர்களே இன்னும் எத்தனை வருடம் உயிர்கூட்டை சுமப்பீர்கள்? கடைசி காலத்தில் உங்களை வாழ வைத்த தமிழுக்கும் தமிழருக்கும் நீங்கள் செய்யும் கைமாறு வீண்பழி சுமத்துவதும் விடுதலையை காட்டி கொடுப்பதும் தானா?

எங்கோ பொறுக்கிய போக்கிரிகளை உங்கள் சன் தொல்லைகாட்சியில் காட்டி இவர்கள் தான் கைது செய்யப்பட்ட கடல் புலிகள் என்றால் நம்புவதற்கு தமிழர்கள் என்ன அத்தனை வடிகட்டிய முட்டாள்களா? முயல் பிடிக்கும் நாயை முகத்தை பார்த்தால் தெரியாதா? புலிகள் போல் நடிக்கவாவது தெரிந்த போக்கிரிகள் யாரும் உங்கள் உளவுத்துறைக்கும் தொலைக்காட்சிக்கும் கிடைக்கவில்லையா?

இராஜராஜனும், மனுநீதிசோழனும், கரிகாற் பெருவளத்தானும் ஆட்சி செய்த தமிழ் மண்ணில்,

ஆடிப்பிழைக்க வந்த ஆரணங்குகளும், அரசியலையே பிழைப்பாக்கி கொண்ட ஆசாமிகளும் ஆட்சிபீடத்தில் இருப்பது தொடர்ந்தால் மெல்லத்தமிழ் இனி சாகத்தான் செய்யும்.

இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்

இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்

Edited by vettri-vel

கிட்டு அண்ணாவை நடுக்கடலில் கடத்திக் கொண்டு போனபோது, போராட்டத்துக்கு தீங்கு வந்தது தான். தடை வந்தது தான். அப்போது இந்தியாவைப் பகைத்துப் புலிகள் நடவடிக்கை எடுத்தார்களா? இல்லையே!

கிட்டு இந்த கடற்ப்படையை பார்த்ததும் அவர் வந்த கப்பலை தீவைத்து அவரே இறந்துவிட்டார், அவர் உயிரோடு பிடி பட்டு இருந்தால் அவர் இன்னேறம் தண்டனை முடிந்து வெளியில் வந்து இருக்கலாம்

  • கருத்துக்கள உறவுகள்

கிட்டு இந்த கடற்ப்படையை பார்த்ததும் அவர் வந்த கப்பலை தீவைத்து அவரே இறந்துவிட்டார், அவர் உயிரோடு பிடி பட்டு இருந்தால் அவர் இன்னேறம் தண்டனை முடிந்து வெளியில் வந்து இருக்கலாம்

தண்டனை பெறும் அளவிற்கு கிட்டண்ணா என்ன தப்புச் செய்தார்? என்னவோ தண்டனைக் காலம் என்று எழுதுகின்றீர்கள். சர்வதேசக் கடலில் வைத்துக் கடத்திக் கொண்டு போனதே இந்தியக் கடற்படை தான். எனவே தப்புச் செய்தவர்கள் அவர்கள் தான். தண்டனையை அவர்களுக்குக் கொடுத்திருக்க வேண்டும்.

ஆனாலும் கிட்டண்ணா தன்னைக் கடத்திக் கொண்டு போகின்றார்கள் என்று தெரிந்தவுடன், தன்னைத் தானே தீயிற்க்கு ஆகுதியாக்கி வீரச்சாவடைந்து கொண்டார்.

கிட்டு இந்த கடற்ப்படையை பார்த்ததும் அவர் வந்த கப்பலை தீவைத்து அவரே இறந்துவிட்டார், அவர் உயிரோடு பிடி பட்டு இருந்தால் அவர் இன்னேறம் தண்டனை முடிந்து வெளியில் வந்து இருக்கலாம்

யாருக்கு யார் தண்டனை கொடுப்பது? தண்டனை அனுபவிக்கும் அளவுக்கு கிட்டு மாமா என்ன தப்பு செய்தார்? ஒரு தாயகத்தின் பிறப்புக்காக தன் உயிரையே மனமுவந்து தானமாக்கிய ஒரு உன்னதமான போராளியை கேவலம் ஒரு கூலிக்கு மாரடிக்கும் கூட்டம் கைது செய்து தண்டனை கொடுப்பத? அது முடியுமா?

கிட்டு இந்த கடற்ப்படையை பார்த்ததும் அவர் வந்த கப்பலை தீவைத்து அவரே இறந்துவிட்டார், அவர் உயிரோடு பிடி பட்டு இருந்தால் அவர் இன்னேறம் தண்டனை முடிந்து வெளியில் வந்து இருக்கலாம்

ஆமாம் கட்டபொம்மன் கூட பிரிட்டிஷாருக்கு வால்பிடிக்க பழகிக்கொண்டு தூக்கில் தொங்குவதை தவிர்த்திருக்கலாம். வேலு நாச்சியாரும், மருது சகோதரர்களும் கூட பேசாமல் ஆங்கிலேயருக்கு ஆமாம் சாமி போட்டு விட்டு ஆங்கிலேய பாஸ்போர்ட் பெற்று லண்டனில் செட்டில் ஆகி இருக்கலாம். பாவம் இவர்கள் எல்லோரும் கொஞ்சம் மானம் ரோசத்தோடு பிறந்து விட்டார்கள். என்ன செய்வது?

பசித்தாலும் புல்லை தின்னாத புலிகளும் உண்டு. எதை சாப்பிட்டால் என்ன வயிறு நிறைந்தால் போதும் என்று நினைக்கும் பன்றிகளும் உண்டு. இது தான் இயற்கையின் வினோதம். கிடைப்பதை எல்லாம் தின்று கொழுத்து பன்றி போல வாழ புலிக்கு இயற்கையாகவே முடிவதில்லை. என்ன செய்வது? ஒரு புலி பன்றியாய் வாழ்வதை விட புலியாய் சாவதை தான் விரும்பும்.

கடற்புலிகளின் ஆயுத பரிமாற்றத்திற்கு உதவி செய்பவர்களே தமிழக மீனவர் களும் தான்.

அங்கிருந்துதான் எமக்கு தேவையான சில மருந்துப் பொருட்கள் கூட வருகின்றன.

அப்படையான ஒரு சூழலில்

இவை எல்லாம் ஒரு கட்டுக்கதை. சூசை அண்னாவை மீறி அங்கு ஒன்றும் கடலில் நடந்து விடபோவதில்ல்லை...

றோ செய்யும் பெரும் நாடகம். தி.மு.க தன்னை காப்பாற்ற தமிழனையே விற்க தயாராகி விட்டார்கள்

கிட்டண்ணா சரணடைந்திருந்தால் இதில் விட பெரிய ஒப்புதல் வாக்குமூலமல்ல ஆப்பே அடித்திருப்பார்கள்கொஞ்சமாவ

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் சொல்கிறார்கள்..

'ராணுவத்தின் பார்வை படுவதற்குள் என்ன செய்தாவது பத்திரமாக கரைக்கு வந்து சேருங்கள்' என்று உத்தரவு வர... அதைத் தொடர்ந்தே தமிழக மீனவர்களை சுட்டுக் கொன்று விட்டுப் பறந்தார்கள் புலிகள்!

பிறகு சொல்கிறார்கள்..

சிலரை சுட்டுக் கொன்றதும்கூட, Ôஎங்கள் போராட்டத்துக்கு தடை வந்தால் தமிழ்நாட்டையோ இந்திய அரசையோ பகைத்துக் கொள்ளவும் நாங்கள் தயங்க மாட்டோம். இதனால், இந்திய மண்ணில் எங்களுக்கு ஆதரவே கிடைக்காமல் போனாலும் பரவாயில்லைÕ என்று காட்டுவதற்காகத்தான்!" என்பதே மத்திய உளவுத் துறை சொல்லும் தகவல்.

இந்த இரு கூற்றுக்களும் ஒன்றுடன் ஒன்று பொருந்தவில்லையே? முதல் கூற்றின்படி அந்த நேரத்தில் புலிகள் சுடும் முடிவை எடுத்திருக்கிறார்கள். இரண்டாவதின்படி இது ஒரு திட்டமிட்ட செயல். யாருக்கு காதில பூ வைக்கிறீங்க?

:unsure::lol:

  • கருத்துக்கள உறவுகள்

இது இந்துசமுத்திரத்தில் அமைந்திருக்கும் நாடுகள்

சர்வதேச கடல் எல்லைகள் என்பனவற்றை ஒரு போதும் ஒரு வரைபடத்திலும் பார்த்திராதவர்களுக்கு சொல்லும் கதை. இப்படியான முட்டாள்கள்தான் தமிழக தமிழர்கள் என றோ மீண்டும் மீண்டும் நம்பித்தான் கதை கதைவிடுகின்றது. தொடர்ந்தும் தமிழக தமிழர்கள் முட்டாள்களாக இருக்க மாட்டார்கள் என்பது எனது எதிர்பார்ப்பு!

கடற்புலிகளின் படகுகளின் வேகம்.

மீன்பிடி படகுகளின் வேகம் என்ன என்பதை தெரிந்து கொண்டால் மட்டுமே சர்வதேச கடலில் இருந்து வந்து கொண்டிருக்கும் புலிகளின் கலன்கள் மீனவரின் படகை சந்திக்க முடியுமா என்பது துலங்கும். இது புலிகள் இன்னமும் கட்டுமரங்களில்தான் ஆயுதங்களை கடத்துகின்றார்கள் என்றுதான் சொல்ல வருகின்றார்கள். மக்களை நொந்து கொள்வதிற்கில்லை தமிழகத்தில் உண்மைக்காகவோ தமிழுக்காகவோ மக்கழுக்காகவோ உழைக்கும் ஒரு பத்திரிகை இன்றளவில் இல்லை.

பத்திரிகைகளிலும் றோ காரர்கள்தான் செய்திகளை தயாரித்து இதை பிரசுரியுங்கள் என கொடுக்கிறார்கள். இதுவே நாட்டிற்கு பாதுகாப்பானது என்றும் கூறும்போது அவர்கள் என்ன செய்வார்கள்?

அது தவிர்த்து இந்த சர்வே எல்லாம் புலிகளுக்கு எங்கே ஆதரவு இருக்கின்றது என்பதை அறிந்து அவர்களையும் வலை விரிக்கவே செய்கிறார்கள்.

இதில் 68 வீதம் பேர் புலிகள் இல்லையென சொல்லியிருப்பது அவர்களை கோபமூட்டியிருக்கும் இப்போது அவர்கள் டில்லியில் அதைப்பற்றித்தான் சிந்தித்து கொண்டிருப்பார்கள். வெகுவிரைவில் புலிகள் தமிழக மீனவரை கொலை செய்வது போன்று ஒரு டைரக்டரை வைத்து படமெடுப்பார்கள். தமிழகத்தில் சினிமா மூலம் புகுத்துவது இலகு.

என்னதான் நடக்கும் நடக்கட்டுமே!

எத்தனை நி;ர்ப்பந்தங்கள் ஏற்பட்டாலும் தர்மம் தலைசாயமாட்டது.

இது விடுதலைப்புலிகளின் வேதமந்திரம்.

எஸ்.எம்.எஸ் சென்று சேர்ந்த நொடியில் விறுவிறுவென பதில்களை டைப் செய்து அனுப்பினார்கள் வாசகர்கள். இதில் கலந்து கொண்ட ஏராளமான வாசகர்கள் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகவே நமக்கு பதில் அனுப்பி இருந்தார்கள். ஒருசிலரின் கருத்து மட்டும் இலங்கை ராணுவத்துக்கு ஆதரவாக இருந்தது.

68% சதவீதம் பேர் புலிகள் மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் கவனித்தீர்களா.......... இந்த நாடகத்தை தமிழ் மக்கள் நம்பவில்லை என்பதையே இது காட்டுகிறது....தமிழகத்தில் உண்மையான தமிழர்கள் 75% க்கும் குறைவே ........ தமிழகத்தில் புலி ஆதரவே இல்லை என்று கூறும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் இதற்கு என்ன சொல்லப்போகிறார்கள்???

நான் சவால் விடுகிறேன் தமிழகத்தில் கீழ்க்கண்ட கேல்விகளை க்கொண்டு கருத்துக்கணிப்பு நடத்தட்டும் பார்க்கலாம்...

1) நீங்கள் தமிழீழ தனியரசு அமைவதை ஆதரிக்கிறீர்களா?

2) நீங்கள் விடுதலைப்புலிகளே ஈழத்தமிழரின் காவலர் என்பதை ஏற்றுக்கொள்வீர்களா?

3) புலிகள் மீதான தடையை உடனடியாக விலக்க வேண்டுமா?

4)இந்தியா புலிகளுக்கு உதவ வேண்டுமா?

இப்படி கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டால் முடிவில் தெரியும் தமிழகம் யார் பக்கம் என்பது!!!!!

சரியாக சொல்கிரீர்கள் வேலவன்.

எனது பதிலும் ஆம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.