Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர்! சம்பந்தனுடன் முக்கிய சந்திப்பு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, குமாரசாமி said:

ஈழத்தமிழருக்கு இனியும் ஏதாவது நல்லது நடக்குமென்று நம்புகின்றீர்களா?

எவன் வந்தாலும் ஒன்றும் நடக்க போவதில்லை ஆனால் ஆனால் அவர்கள் நினைத்தது மட்டும் நடக்கும் 

நான் வாக்கு போடுவதா வேண்டாமா என யோசித்துக்கொண்டிருக்கிறேன் 

  • Replies 115
  • Views 8.4k
  • Created
  • Last Reply

சகல தமிழ் மக்களும் தற்கால அரசியலை புரிந்து, சகலரும்  வாக்களிப்பது நன்று, 

தமிழர் அரசியலில் வெற்றிடம் உருவாகும்பொழுது அதனை நிரப்ப ஒருவர் வருவதும் நன்று, 

சம்பந்தர் தலைமையிலான கூட்டமைப்பு தமிழ் பொதுவேட்ப்பாளர் பற்றி ஆக்கபூர்வமான ஒரு கருத்தையும் தெரிவிக்கவில்லை. அந்த அணுகுமுறை தவறானது என்றால் அது பற்றிய விளக்கத்தை மக்களுக்கு தரவில்லை. 

இப்பொழுது சிவாசிலிங்கம் அவர்களும் பொது வேட்ப்பாளர் என்ற அந்த இடத்தை சரியோ தவறோ நிரப்பி  உள்ளார். 

இதன் மூலம் தமிழ் தேசிய அரசியல் ஒரு ஆரோக்கியமான நிலைக்குள் சென்றுள்ளது என்பது எனது கருத்து. 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ampanai said:

சிவாஜிலிங்கம் அரசியல் அரங்கைப் பொறுத்தவரை ஒரு கோமாளி என்பது என் கருத்து!

மேலும், கோத்தாவை வெல்ல வைக்கிற அல்லது தமிழ் வாக்காளர்களை குழப்பத்திற்குள்ளாக்கி மேலே தனி சொல்வது போல வாக்குப் போடவே யோசிக்க வைக்கிற scorched earth நடைமுறைக்கும் ஆரோக்கியம் என்ற சொல்லுக்கும் ஒரு தொடர்பும் இல்லை என்பது என் கருத்து!  

  • கருத்துக்கள உறவுகள்

1 hour ago, Justin said:

'அவர்' யார் என்பதும் அவர் 'கோமாளியா இல்லையா' என்பதற்கு அப்பால் பார்க்கப்படவேண்டியது, தனியாக ஒரு தமிழர் போட்டியிடுவது என்பது.

மற்றையவர் பெயர்(கள்) தவிர்க்கப்பட்டுள்ளது. சஜித்துக்கோ இல்லை வேறு எவருக்கும் தமிழ் மக்கள் வாக்களிப்பதால் என்ன இலாபம் இந்த முறை ?  எவ்வாறு அது முன்னைய தெரிவுகளில் இருந்து வேறுபடுகின்றது என்ற கருத்து வாக்களிக்கும் மக்களுக்கு தெளிவு எந்த கடசியாலும் படுத்தபடவில்லை.

எனவே ஏற்கனவே ஒரு ஆரோக்கியம் அற்ற நிலையில் தமிழின அரசியல் உள்ளது.  

கோத்தாவை எமது பங்களிப்பு இல்லாமல் இல்லை பங்களிப்புடன் சனாதிபதியானால், இலங்கை நிலை தமிழர் விடையத்தில் நிலைமை மோசமாகி விடும் என பரவலாக நம்பப்படுகின்றது. காரணம், அவரின் முன்னைய தமிழின அழிப்பு நடவடிக்கைகள். அவை நியாயமானைவை. 

இதேவேளை அண்மையில் விக்கி ஐயா அவர்கள் கூறியது போன்று கோத்தா தெரிவானால், சீன ஆதிக்கம் தீவில்  மேலும் புதிய வலுவுடன் தொடரலாம். சீன முதலீடு மற்றும் இராணுவ வாய்ப்புக்கள் தொடரும் வாய்ப்புக்கள் உண்டு. 

இது, இந்திய மற்றும் அமெரிக்க நிலைப்பாட்டில் சில மாற்று நடவடிக்கைகளை ஏற்படுத்த தூண்டும். 

சஜித் வென்றால், ஒரு அமைதியான இனவழிப்பு தொடரும். நிலங்கள் தொடர்ந்தும் அபகரிக்கப்படும், தொழில் வாய்ப்புக்கள் மறுக்கப்படும், அடிமையாக்கல் தொடரும். ஒரே ஆட்சி - வேறு முகம். அமெரிக்காவிற்கும், இந்தியாவிற்கும் மற்றும் சீனாவிற்கும் வெற்றிகரமான பங்களிப்புக்கள் தொடரும். அவர்களும் தமிழின அழிப்பை கண்டும் மௌனமாக இருப்பார்கள்.   

சவேந்திர சில்வா படை தளபதியானதால், ஐநா படையில் இலங்கை படைகள் நிறுத்தப்பட்டுள்ளன. ஆகவே, அவருடன் சேர்ந்த கோத்தா வருவதில் புதிய சர்வதேச முடிச்சுக்கள் ஆவிழ்க்கப்படலாம். சஜித் வந்தால், அவ்வாறான எந்த  ஒரு  பிடியும் இருக்காது. 

இலங்கையை பொறுத்தவரையில், things have to get worse for Tamils and Sinhalese. மகிந்தா அண்ட் கோ ஆட்சியில், நாம் இன்னொரு சர்வாதிகார குடும்ப ஆட்சியை இலங்கையில் காணலாம். இதில் சிங்களவர்கள் அதிகம் பாதிக்கப்படலாம். அங்கும் ஒரு போராட்ட தேவை வரும்.   அது, சில புதிய பாதைகளை திறக்கும். 

அத்துரலிய ரத்ன தேரர் மற்றும் பல பிக்கு அமைப்புகள் கோத்தாவுக்கு தமது ஆதரவை வழங்குவதாக கூறியுள்ளார்கள்.

Edited by Lara

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, குமாரசாமி said:

ஈழத்தமிழருக்கு இனியும் ஏதாவது நல்லது நடக்குமென்று நம்புகின்றீர்களா?

இவ்வளவு அப்பிராணிகளாக நாம் ராஜபக்சேக்களின் வலையில் மீண்டும், மீண்டும் போய் விழுவோமாயின், நிச்சயமாக இல்லை.

4 hours ago, ampanai said:

சகல தமிழ் மக்களும் தற்கால அரசியலை புரிந்து, சகலரும்  வாக்களிப்பது நன்று, 

தமிழர் அரசியலில் வெற்றிடம் உருவாகும்பொழுது அதனை நிரப்ப ஒருவர் வருவதும் நன்று, 

சம்பந்தர் தலைமையிலான கூட்டமைப்பு தமிழ் பொதுவேட்ப்பாளர் பற்றி ஆக்கபூர்வமான ஒரு கருத்தையும் தெரிவிக்கவில்லை. அந்த அணுகுமுறை தவறானது என்றால் அது பற்றிய விளக்கத்தை மக்களுக்கு தரவில்லை. 

இப்பொழுது சிவாசிலிங்கம் அவர்களும் பொது வேட்ப்பாளர் என்ற அந்த இடத்தை சரியோ தவறோ நிரப்பி  உள்ளார். 

இதன் மூலம் தமிழ் தேசிய அரசியல் ஒரு ஆரோக்கியமான நிலைக்குள் சென்றுள்ளது என்பது எனது கருத்து. 

மன்னிக்கவும் அம்பனை,

நேற்றுவரை மூச்சுதிணறால் அவதி பட்டுக்கொண்டிருந்த நோயாளி, இன்று மூச்சே விடாமல் படுத்துவிட்டார். ஒரு வழியாக மூச்சுத்திணறல் நின்று விட்டதன் மூலம் நோயாளி ஆரோக்கியமாக உள்ளார், என்பது போல இருக்கிறது உங்கள் கருத்து.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தனிக்காட்டு ராஜா said:

எவன் வந்தாலும் ஒன்றும் நடக்க போவதில்லை ஆனால் ஆனால் அவர்கள் நினைத்தது மட்டும் நடக்கும் 

நான் வாக்கு போடுவதா வேண்டாமா என யோசித்துக்கொண்டிருக்கிறேன் 

இந்த மனநிலைக்கு தமிழர்களை தள்ளுவது, சிவாஜிக்கு போட வைப்பது இவைதான் கோட்ட தரப்பின் முக்கிய இலக்கு. முஸ்லீம்களின் கொட்டத்தை அடக்க கோட்டவே சரியான ஆள் என்பது கிழக்கில் பாவிக்கப்படப்போகும் இன்னொரு யுக்தி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, தனிக்காட்டு ராஜா said:

எவன் வந்தாலும் ஒன்றும் நடக்க போவதில்லை ஆனால் ஆனால் அவர்கள் நினைத்தது மட்டும் நடக்கும் 

நான் வாக்கு போடுவதா வேண்டாமா என யோசித்துக்கொண்டிருக்கிறேன் 

கோத்தாவை ஆதரியுங்கள்......வாக்களியுங்கள்.
அவர் குடும்பம் தான் சிறிலங்காவின் பயங்கரவாதிகளை பூண்டோடு அழித்தவர்கள்.
அந்த நன்றிக்கடனுக்காவது கோத்தாவுக்கு வாக்களிக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, ampanai said:

கோத்தாவை எமது பங்களிப்பு இல்லாமல் இல்லை பங்களிப்புடன் சனாதிபதியானால், இலங்கை நிலை தமிழர் விடையத்தில் நிலைமை மோசமாகி விடும் என பரவலாக நம்பப்படுகின்றது. காரணம், அவரின் முன்னைய தமிழின அழிப்பு நடவடிக்கைகள். அவை நியாயமானைவை. 

இதேவேளை அண்மையில் விக்கி ஐயா அவர்கள் கூறியது போன்று கோத்தா தெரிவானால், சீன ஆதிக்கம் தீவில்  மேலும் புதிய வலுவுடன் தொடரலாம். சீன முதலீடு மற்றும் இராணுவ வாய்ப்புக்கள் தொடரும் வாய்ப்புக்கள் உண்டு. 

இது, இந்திய மற்றும் அமெரிக்க நிலைப்பாட்டில் சில மாற்று நடவடிக்கைகளை ஏற்படுத்த தூண்டும். 

சஜித் வென்றால், ஒரு அமைதியான இனவழிப்பு தொடரும். நிலங்கள் தொடர்ந்தும் அபகரிக்கப்படும், தொழில் வாய்ப்புக்கள் மறுக்கப்படும், அடிமையாக்கல் தொடரும். ஒரே ஆட்சி - வேறு முகம். அமெரிக்காவிற்கும், இந்தியாவிற்கும் மற்றும் சீனாவிற்கும் வெற்றிகரமான பங்களிப்புக்கள் தொடரும். அவர்களும் தமிழின அழிப்பை கண்டும் மௌனமாக இருப்பார்கள்.   

சவேந்திர சில்வா படை தளபதியானதால், ஐநா படையில் இலங்கை படைகள் நிறுத்தப்பட்டுள்ளன. ஆகவே, அவருடன் சேர்ந்த கோத்தா வருவதில் புதிய சர்வதேச முடிச்சுக்கள் ஆவிழ்க்கப்படலாம். சஜித் வந்தால், அவ்வாறான எந்த  ஒரு  பிடியும் இருக்காது. 

இலங்கையை பொறுத்தவரையில், things have to get worse for Tamils and Sinhalese. மகிந்தா அண்ட் கோ ஆட்சியில், நாம் இன்னொரு சர்வாதிகார குடும்ப ஆட்சியை இலங்கையில் காணலாம். இதில் சிங்களவர்கள் அதிகம் பாதிக்கப்படலாம். அங்கும் ஒரு போராட்ட தேவை வரும்.   அது, சில புதிய பாதைகளை திறக்கும். 

அம்பனையின் மீது தனிப்பட்டு ஒரு கோபமும் இல்லை.

ஆனால் இந்த மாதிரி சிந்தனை உடையவர்களின் ஆலோசனைதான், 2005 கிட்டத்தட்ட சமவலுவில் இருந்த தமிழர் தரப்பை, ஒரே ஒரு தவறான முடிவு மூலம் 4 வருடங்களில் நிர்மூலமாக்கியது, என்பதை நினைக்கும் போது, அதே சிந்தனையை மீளவும், மீளவும் எம்மக்கள் மீது திணிப்பவர்கள் மீது கடும் சினம் எழுகிறது.

மகிந்த வெண்டால் புதிய கதவு திறக்கும் என்றீர்கள். மாவிலாறையும் மூடி, எம் போராட்டத்தின் அத்தனை கதவுகளையும் ஒவ்வொன்றாக மூடி அடித்து நொறுக்கினார்கள்.

அதே ஆட்கள் இப்போ வருகிறார்கள்- கோட்டா வென்றால், சீனா சேரும், யூஎஸ் சீறும் புதிய கதவுகள் திறக்கும் என்கிறீர்கள்.

ஐயா புண்ணியவான்களே,

பிரபாகரனாலேயே வெல்ல முடியாத சுழியர்கள் மகிந்தவும் கோட்டவும். அவர்கள் வந்து சம்பந்தனும், சிவாஜியும் அவர்களை மீறி எமக்கு நல்லதொரு தீர்வை வெல்லுவார்கள் என்பது வெறும் பகற்கனவு.

இந்த கனவுக்காக எம்மக்களை அவர்களின் சகவாழ்வை, வெளிநாட்டில் இருந்த படி பாழாக்காதீர்கள். 🙏🏾

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 hours ago, goshan_che said:

பிரபாகரனாலேயே வெல்ல முடியாத சுழியர்கள் மகிந்தவும் கோட்டவும். அவர்கள் வந்து சம்பந்தனும், சிவாஜியும் அவர்களை மீறி எமக்கு நல்லதொரு தீர்வை வெல்லுவார்கள் என்பது வெறும் பகற்கனவு.

ராஜீவ் காந்தியை போடாமல் விட்டிருந்தால் முள்லிவாய்க்கால் அழிவு வந்திருக்காது.சிறிலங்கா பிரச்சனையும் சுமுகமாக முடிந்திருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, குமாரசாமி said:

 ராஜீவ் காந்தியை போடாமல் விட்டிருந்தால் முள்லிவாய்க்கால் அழிவு வந்திருக்காது.சிறிலங்கா பிரச்சனையும் சுமுகமாக முடிந்திருக்கும்.

குமாரசாமி தயவுசெய்து திரியை திசை திருப்பாதீர்கள். நீங்கள் திருப்பினாலும், நான் திரும்புவதாக இல்லை. 

நீங்கள் பழைய கறள் தீர்க்கும் இடம் இது இல்லை அண்ணர். இது பிரபாகரன் பற்றியதோ, புலிகள் பற்றியதோ அல்ல. 

அன்றும் இன்றும், சர்வதேசம் வெட்டும், புடுங்கும் என்பதை நம்பி கொள்கை வகுப்பவர்களை பற்றியது.

நன்றி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 minute ago, goshan_che said:

குமாரசாமி தயவுசெய்து திரியை திசை திருப்பாதீர்கள். நீங்கள் திருப்பினாலும், நான் திரும்புவதாக இல்லை. 

நீங்கள் பழைய கறள் தீர்க்கும் இடம் இது இல்லை அண்ணர். இது பிரபாகரன் பற்றியதோ, புலிகள் பற்றியதோ அல்ல. 

அன்றும் இன்றும், சர்வதேசம் வெட்டும், புடுங்கும் என்பதை நம்பி கொள்கை வகுப்பவர்களை பற்றியது.

நன்றி.

இது பழைய கறள் இல்லை...ஊர் உலகத்தில் பரவலாக  விவாதிக்கப்படும் விவாதப்பொருள்.
யாழ்களத்தில் நல்லதுக்கு காலமில்லை என்பதால் மாற்றுக்கருத்துக்களுக்கே மாற வேண்டியுளது.
நீங்களே கொஞ்சம் சிந்தித்து பாருங்கள்.

28 minutes ago, goshan_che said:

முஸ்லீம்களின் கொட்டத்தை அடக்க கோட்டவே சரியான ஆள் என்பது கிழக்கில் பாவிக்கப்படப்போகும் இன்னொரு யுக்தி.

அதை நம்பி கோத்தாவுக்கு யாரும் ஆதரவளிக்க நினைத்தால் கோத்தா பள்ளிவாசலுக்கு சென்று முஸ்லிம்களை சந்தித்திருக்கும் இப் படங்களையும் பார்க்கட்டும். 😀

EGBooyvU0AAWuwT?format=jpg&name=large

EGBooykUUAUkhH7?format=jpg&name=large

EGBooynU0AA0xxf?format=jpg&name=large

EGBooymVUAIZDi3?format=jpg&name=large

  • கருத்துக்கள உறவுகள்
Just now, குமாரசாமி said:

இது பழைய கறள் இல்லை...ஊர் உலகத்தில் பரவலாக  விவாதிக்கப்படும் விவாதப்பொருள்.
யாழ்களத்தில் நல்லதுக்கு காலமில்லை என்பதால் மாற்றுக்கருத்துக்களுக்கே மாற வேண்டியுளது.
நீங்களே கொஞ்சம் சிந்தித்து பாருங்கள்.

பழைய கறள் இல்லை என்றால் சந்தோசம்.

ஆனால் 2009 ற்கு முன் நடந்த எந்த சம்பவத்தின் பின் விழைவும் இப்போ எம் மக்களின் அரசியலை பாதிப்பதில்லை. அது 83 தாக்குதலோ, 1991 ராஜீவ் கொலையோ அல்லது 2005 பகிஸ்கரிப்பு முடிவோ. 

அந்த முடிவுகளால் வந்த எதிர் வினைகள் 2009உடன் முடிவுக்கு வந்து விட்டன.

இங்கே நாம் யாரும் மோடியை போட்டுத்தள்ளுவதின் சாதக பாதகங்களை ஆராயவில்லை.

ஆகவே 1991 இல் ராஜீவை கொண்டதால் ஏற்பட்ட பின்விழைவு என்ன என இப்போ ஆராயவதில் ஒரு பலனுமில்லை.

2005 இல் நடந்தை பற்றிய ஆராய்சி கூட தேவையில்லை. ஆனால் அதில் இருந்து பாடமும் படிக்க மாட்டோம் என அடம்பிடிப்பதுதான் வேதனையானது.

Those who fail to learn from history are bound to repeat it.

4 minutes ago, Lara said:

அதை நம்பி கோத்தாவுக்கு யாரும் ஆதரவளிக்க நினைத்தால் கோத்தா பள்ளிவாசலுக்கு சென்று முஸ்லிம்களை சந்தித்திருக்கும் இப் படங்களையும் பார்க்கட்டும். 😀

EGBooyvU0AAWuwT?format=jpg&name=large

EGBooykUUAUkhH7?format=jpg&name=large

EGBooynU0AA0xxf?format=jpg&name=large

EGBooymVUAIZDi3?format=jpg&name=large

பொட்டு, பொன்னாடை சகிதம் மசூதிக்கு போயிருகிறார். இதுவல்லவோ இன ஐக்கியம்.😂

31 minutes ago, goshan_che said:

ஆகவே 1991 இல் ராஜீவை கொண்டதால் ஏற்பட்ட பின்விழைவு என்ன என இப்போ ஆராயவதில் ஒரு பலனுமில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, Lara said:

இது திரிக்கு சம்பந்தம் இல்லாதவிடயம் ஆகவே சுருக்கமாக பதிலிடுகிறேன்.

1. நீங்கள் மேலே இணைத்த நிலைப்பாடு புலிகளின் 1991-2002 காலப்பகுதியின் நிலைப்பாடு.

2. இதை புலிகளே 2002 ஊடக சந்திப்பில் எடுத்தாளவில்லை. மாறாக, ராஜீவ் காந்தியின் கொலைக்கு நீங்கள் பொறுப்பேற்கிறீகளா என்ற கேள்விக்கு, “இது 10 வருடங்களின் முன் நடந்த துன்பியல் சம்பவம், இதை பற்றி நாம் மேலும் பேச விரும்பவில்லை” என்பதே பிரபாகரன் சொன்ன வார்த்தைகள்.

3. நீங்கள் ஒரு கொலையை செய்தீர்களா என உங்களை ஒருவர் நேரடியாக கேட்கும் போது, செய்யாவிட்டால் நீங்கள் இல்லை என ஒற்றை வரியில் பதில் சொல்வீர்களா? இல்லையா? செய்யாவிடின் நாம் யாருமே இல்லை என ஒற்றை வரியில் பதில் சொல்லுவோம்.

4. அப்போ புலிகள் ஏன் அப்படிச் சொல்லவில்லை?  அவர்கள் மறுக்க முடியாதளவுக்கு இந்தியா ஆதாரங்களை வைத்திருந்தது. ஆகவே தொடர்ந்தும் இதை மறுத்து இந்திய அரசை கோவப்படுத்த வேண்டாம் என நினைத்தனர். அதேவேளை, பொதுவெளியில் ஆம் என ஒத்துக் கொண்டால் - அது இந்திய அரசை, அது விரும்பாமலே கூட இலங்கையில் நேரடியாக தலையிட வைத்து விடவும் கூடும். எனவே முழுக்க முழுக்க இந்திய அரசை சாந்தப்படுத்தும் நோக்கில் மறுக்கவும் செய்யாமல், நேரடியாக ஏற்கவும் செய்யாமல் ஒரு பதிலை வழங்கினார் பிரபா.

5. இந்த வீடியோவை பாருங்கள்- இந்த கேள்வி வரும் என முதலே ஊகித்து பிரபா-பாலா அண்ணை இருவரும் இந்த பதிலை தயார் செய்து வைத்தே இருந்திருக்கிறார்கள். பாலா “துன்பியல் சம்பவம்” என்ற சொல்லை தானாகவே சொல்லுவதன் மூலம்- தாம் முன்பே தீர்மானித்த, சொல்ல வேண்டிய பதிலை பிரபாவுக்கு நினைவு படுத்துகிறார்.

6. என்னை பொறுத்தவரை இந்த கேள்வியை, 2002இல் இருந்த சூழ்நிலையில் முடிந்தளவுக்கு ராஜதந்திரமாகவே பாலா கையாண்டார் எனவே நான் நினைகிறேன்.

அரசியலில் நிரந்தர எதிரி இல்லை. பாதைகளை மாற்றலாம், மாற்றவும் வேண்டும். இலக்கை மாற்றாமல் பாத்துக்கொண்டால் சரி. 

தங்கள் மீது அணு குண்டு போட் டார்கள் என்பதற்காக ஜப்பான் அமெரிக்க பணத்தை மறுக்கவில்லை. இல்லை, மிகப்பெரிய இராணுவத்தை அங்கே நிற்பாட்டி வைக்க அனுமதித்து உள்ளது. 

நாசிகள் வாழ்ந்தார்கள் என்பதற்காக இன்று புகலிடம் தேடி உலக மக்கள் செல்லாமல் இல்லை. 

மகிந்தா அண்ட் கோ வை நம்புவதா இல்லை ஐதேக கூட்டத்தை  நம்புவதா என்பதே மக்கள் முன்னால் உள்ள கேள்வி. 

இரண்டு பக்கமும் தமிழின அழிப்பது தொடரும்.  மகிந்த அண்ட் கோ வென்றால் அது ஐ.தே.க. பாதையை விட வித்தியாசமாக இருக்கும். ( தெரிந்த கொலைகாரன், தெரியாத கொலைகாரனை விட பரவாயில்லை)  

There are no permanent enemies in politics only permanent interests.

இதில் முதல் வாக்கியத்தை மட்டும் வைத்து இந்த சொற்றொடர் சொல்லும் கருத்தை பிழையாக விளங்கக் கூடாது.

அரசியலில் நிரந்தர எதிரிகள் இல்லை, நிரந்தர (சுய) நலன்கள் மட்டுமே.

இங்கேயும் கோட்ட எம் எதிரி அவரை தோற்கடியுங்கள் என நான் எழுதவில்லை. அவர் வெல்வதால் நம் நலன் எப்படி பாதிப்படையும் என்பதை வைத்தே என் கருத்து அமைகிறது.

1. ஜப்பான், அமேரிக்காவை அரவணைக்க, தன் ஆசியப் பேரரசு கொள்கையை விலையாக கொடுத்தது. அதே போல் நாமும் எம் கெளரவமான தீர்வு எனும் கொள்கையை விலையாக கொடுக்க சம்மதம் என்றால் கோட்டவுடன் இணையலாம். இதைதான் டக்ளஸ் செய்கிறார், பிறகு தனியாக நாம் ஏன் மினெக்கெடுவான்.

2. நாஜிகள் இல்லாத, கடும் நாஜி எதிர்பு சட்டங்கள் உள்ள ஜேர்மனிக்குத்தான் அகதிகள் போகிறார்கள். இதற்கும் 2005-2015 இல் இருந்த அதே ராஜபட்ச குடும்ப உறுப்பினர்களுக்கு வோட்டு போடுங்கள் என சொல்வதற்கும் பாரிய வேறுபாடுண்டு.

On 10/3/2019 at 9:41 AM, போல் said:

தமிழ் மக்கள் பேரவை இந்த கலந்துரையாடல்களை முன்னெடுத்தது. இன்று, இரா.சம்பந்தனை சந்திக்க தமிழ் மக்கள் பேரவை கோரிக்கை விடுத்திருந்தது. எனினும், தமிழ் மக்கள் பேரவையை சந்திக்க தான் விரும்பவில்லையென இரா.சம்பந்தன் குறிப்பிட்டு அந்த சந்திப்பை தவிர்த்து விட்டார்.

பொதுவாக தாயகத்தில் கல்வி முறை என்பது, எழுதப்பட்ட கோட்பாட்டினை கற்றுத்தருவது, இதில், மாணவன் வித்தியாசமாக கேள்வி கேட்டால், மாணவரை ஆசிரியர் தண்டிக்கவும் செய்வார். இது இன்னும் பாடசாலையில் மாறவில்லை. புலம்பெயர் தேசங்களில் கல்வி கற்கும் எமது அடுத்த தலைமுறையினர் மாற்றி யோசிக்கும்பொழுது, அவர்கள் ஆசிரியார்களால் பாராட்டப்படுகின்றனர், ஊக்குவிற்கப்படுகின்றனர். இவர்களே, அந்த நாடுகள் பொருளாதார, அரசியல் வல்லமை பெற வைக்கும் நாளைய சிற்பிகள் ஆகின்றனர். 

தாயக அரசியலிலும் மாற்றம் என்பதை மக்கள் விரும்புவதில்லை. அவ்வாறு மாற்றங்களை விரும்பாது வாக்களித்து ஏமாந்தர்வர்கள் வரலாற்றில் அதிகம். காரணம், மாற்றம் ஒன்று தான் மாறாதது. 

ஒபாமா தனது செயலார்களை வேலைக்கு அமர்த்தும் நேர்முகத்தேர்வில் அந்த துறை சார்ந்த கொள்கை கேள்விகளை கேட்பாராம். அதில், தன்னுடன் உடன்படாதவர்களையே தெரிந்து எடுத்தாராம். ஏன்? என வினவியபொழுது. என்னுடன் கொள்கையில் என்றும் இணங்கினால், நாம் தோற்றுப்போகும் நிலை வரலாம் என்றாராம். 

ஆகவே, மாற்றி யோசி என்பதை மாற்றம் என்பதற்காகவே தூக்கி எறியாமல், அதை அலசும் தலைமைகள் வெற்றி  காணும். வரலாற்றில் இடம் பிடிக்கும். 

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, ampanai said:

large.659606E2-C057-4590-9478-154A39B1217C.jpeg.26b8bd2a681545c1dfbf5ac2688420ba.jpeg

8 hours ago, goshan_che said:

இது திரிக்கு சம்பந்தம் இல்லாதவிடயம் ஆகவே சுருக்கமாக பதிலிடுகிறேன்.

1. நீங்கள் மேலே இணைத்த நிலைப்பாடு புலிகளின் 1991-2002 காலப்பகுதியின் நிலைப்பாடு.

2. இதை புலிகளே 2002 ஊடக சந்திப்பில் எடுத்தாளவில்லை. மாறாக, ராஜீவ் காந்தியின் கொலைக்கு நீங்கள் பொறுப்பேற்கிறீகளா என்ற கேள்விக்கு, “இது 10 வருடங்களின் முன் நடந்த துன்பியல் சம்பவம், இதை பற்றி நாம் மேலும் பேச விரும்பவில்லை” என்பதே பிரபாகரன் சொன்ன வார்த்தைகள்.

3. நீங்கள் ஒரு கொலையை செய்தீர்களா என உங்களை ஒருவர் நேரடியாக கேட்கும் போது, செய்யாவிட்டால் நீங்கள் இல்லை என ஒற்றை வரியில் பதில் சொல்வீர்களா? இல்லையா? செய்யாவிடின் நாம் யாருமே இல்லை என ஒற்றை வரியில் பதில் சொல்லுவோம்.

4. அப்போ புலிகள் ஏன் அப்படிச் சொல்லவில்லை?  அவர்கள் மறுக்க முடியாதளவுக்கு இந்தியா ஆதாரங்களை வைத்திருந்தது. ஆகவே தொடர்ந்தும் இதை மறுத்து இந்திய அரசை கோவப்படுத்த வேண்டாம் என நினைத்தனர். அதேவேளை, பொதுவெளியில் ஆம் என ஒத்துக் கொண்டால் - அது இந்திய அரசை, அது விரும்பாமலே கூட இலங்கையில் நேரடியாக தலையிட வைத்து விடவும் கூடும். எனவே முழுக்க முழுக்க இந்திய அரசை சாந்தப்படுத்தும் நோக்கில் மறுக்கவும் செய்யாமல், நேரடியாக ஏற்கவும் செய்யாமல் ஒரு பதிலை வழங்கினார் பிரபா.

5. இந்த வீடியோவை பாருங்கள்- இந்த கேள்வி வரும் என முதலே ஊகித்து பிரபா-பாலா அண்ணை இருவரும் இந்த பதிலை தயார் செய்து வைத்தே இருந்திருக்கிறார்கள். பாலா “துன்பியல் சம்பவம்” என்ற சொல்லை தானாகவே சொல்லுவதன் மூலம்- தாம் முன்பே தீர்மானித்த, சொல்ல வேண்டிய பதிலை பிரபாவுக்கு நினைவு படுத்துகிறார்.

6. என்னை பொறுத்தவரை இந்த கேள்வியை, 2002இல் இருந்த சூழ்நிலையில் முடிந்தளவுக்கு ராஜதந்திரமாகவே பாலா கையாண்டார் எனவே நான் நினைகிறேன்.

கோஷான்,

ராஜீவ் காந்தி கொலையை தாம் செய்யவில்லை என தலைவர் பிரபாகரன் 1991 செப்ரெம்பர் 1 ஆம் திகதி bbc நிரூபர் Chris Morris க்கு வழங்கிய செவ்வியிலேயே கூறியிருந்தார்.

Morris: Now I know you have denied any involvement in the accusation of Rajiv Gandhi. But the Indian investigators are convinced that you are responsible.

Pirabhakaran: Our movement is not in anyway involved in the killing of Mr. Rajiv Gandhi. So far this accusation has not been corroborated. It is true that the government of India has been engaged in a massive disinformation campaign against our movement, based on this false accusation.

லண்டனிலிருந்து கிட்டு அவர்களும் புலிகள் இக்கொலையை செய்யவில்லை என கூறியிருந்தார்.

புலிகள் தாம் ஒரு கொலையை செய்தால் தாம் செய்தோம் என உரிமை கோருபவர்கள். அப்படியிருக்க தாம் கொல்லவில்லை என அவர்களே கூறும் போது தமிழர்கள் ஏன் சுப்ரமணியன் சுவாமி போட்ட பழியை தூக்கிப்பிடிக்க வேண்டும்?

நீங்கள் இணைத்த வீடியோவில் கேட்கப்படும் கேள்வி பிற்காலத்தில் கேட்கப்பட்ட போது புலிகள் மேல் போடப்பட்ட பழி அவர்கள் மேல் பெரும் தாக்கம் செலுத்திய நிலையில் அதிலிருந்து வெளிவர அரசியல் ஆலோசகர் என்ற ரீதியில் அன்ரன் பாலசிங்கம் அவர்கள் இப்படியான வரியை ஒரு ராஜதந்திரமாக பயன்படுத்த நினைத்து அதை பிரபாகரனுக்கு கூறியுள்ளாரே தவிர அதிலும் “துன்பியல் சம்பவம்” என கூறுவது தாம் கொலை செய்தோம் என கூறுவதாக அர்த்தம் கொள்ளப்பட முடியாது.

என்னைப் பொறுத்தவரை,

CIA, Mossad, RAW, மற்றும் இந்திய உள்நாட்டு அரசியலுக்காக ராஜீவ் காந்தி கொல்லப்பட்டு புலிகள் மேல் பழிபோடப்பட்டது.

ராஜீவ் காந்தி தான் கொல்லப்பட சற்று முன் New York Times க்கு வழங்கிய செவ்வியில் கூட வெளிசக்திகள் பற்றி கூறி, அவர் CIA ஐ குறிப்பிடுகிறாரா என கேட்க அவர் நகைத்தார் என உள்ளது.

சந்திரசுவாமி CIA, Mossad உடன் நெருங்கிய தொடர்பிலிருந்தவர். அதே நேரம் TELO காரருடனும் தொடர்பில் இருந்தவர்.

ஒன்றில் TELO இலிருந்தவர்களை பயன்படுத்தி ராஜீவை கொலை செய்திருக்கலாம். அல்லது TELO இலிருந்தவர்களை நம்ப வைத்து அவ் இடத்திற்கு வரவழைத்து விட்டு தாமே குண்டை வெடிக்க வைத்து ராஜீவை கொன்று விட்டு அவர்களில் பழி போட்டிருக்கலாம். இரண்டிலும் இதை திட்டமிட்டவர்கள் புலிகள் இல்லை.

Edited by Lara

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Lara said:

கோஷான்,

ராஜீவ் காந்தி கொலையை தாம் செய்யவில்லை என தலைவர் பிரபாகரன் 1991 செப்ரெம்பர் 1 ஆம் திகதி bbc நிரூபர் Chris Morris க்கு வழங்கிய செவ்வியிலேயே கூறியிருந்தார்.

Morris: Now I know you have denied any involvement in the accusation of Rajiv Gandhi. But the Indian investigators are convinced that you are responsible.

Pirabhakaran: Our movement is not in anyway involved in the killing of Mr. Rajiv Gandhi. So far this accusation has not been corroborated. It is true that the government of India has been engaged in a massive disinformation campaign against our movement, based on this false accusation.

லண்டனிலிருந்து கிட்டு அவர்களும் புலிகள் இக்கொலையை செய்யவில்லை என கூறியிருந்தார்.

புலிகள் தாம் ஒரு கொலையை செய்தால் தாம் செய்தோம் என உரிமை கோருபவர்கள். அப்படியிருக்க தாம் கொல்லவில்லை என அவர்களே கூறும் போது தமிழர்கள் ஏன் சுப்ரமணியன் சுவாமி போட்ட பழியை தூக்கிப்பிடிக்க வேண்டும்?

நீங்கள் இணைத்த வீடியோவில் கேட்கப்படும் கேள்வி பிற்காலத்தில் கேட்கப்பட்ட போது புலிகள் மேல் போடப்பட்ட பழி அவர்கள் மேல் பெரும் தாக்கம் செலுத்திய நிலையில் அதிலிருந்து வெளிவர அரசியல் ஆலோசகர் என்ற ரீதியில் அன்ரன் பாலசிங்கம் அவர்கள் இப்படியான வரியை ஒரு ராஜதந்திரமாக பயன்படுத்த நினைத்து அதை பிரபாகரனுக்கு கூறியுள்ளாரே தவிர அதிலும் “துன்பியல் சம்பவம்” என கூறுவது தாம் கொலை செய்தோம் என கூறுவதாக அர்த்தம் கொள்ளப்பட முடியாது.

என்னைப் பொறுத்தவரை,

CIA, Mossad, RAW, மற்றும் இந்திய உள்நாட்டு அரசியலுக்காக ராஜீவ் காந்தி கொல்லப்பட்டு புலிகள் மேல் பழிபோடப்பட்டது.

ராஜீவ் காந்தி தான் கொல்லப்பட சற்று முன் New York Times க்கு வழங்கிய செவ்வியில் கூட வெளிசக்திகள் பற்றி கூறி, அவர் CIA ஐ குறிப்பிடுகிறாரா என கேட்க அவர் நகைத்தார்.

சந்திரசுவாமி CIA, Mossad உடன் நெருங்கிய தொடர்பிலிருந்தவர். அதே நேரம் TELO காரருடனும் தொடர்பில் இருந்தவர்.

ஒன்றில் TELO இலிருந்தவர்களை பயன்படுத்தி ராஜீவை கொலை செய்திருக்கலாம். அல்லது TELO இலிருந்தவர்களை நம்ப வைத்து அவ் இடத்திற்கு வரவழைத்து விட்டு தாமே குண்டை வெடிக்க வைத்து ராஜீவை கொன்று விட்டு அவர்களில் பழி போட்டிருக்கலாம். இரண்டிலும் இதை திட்டமிட்டவர்கள் புலிகள் இல்லை.

புலிகள் ஏன் முதலில் மறுத்தார்கள்? இதை செய்யும் போது பாலசிங்கம் உட்பட பலருக்கு இதை செய்யப்போகிறார்கள் என்பது தெரியாது. 1991 இல் மிகவும் குறுகிய ஒரு வட்டத்துக்கு மட்டும் தெரிந்த ரகசியம் இது.

வேலையை முடிப்பது, யார் எனத் தெரியாமல் இந்தியா திகைக்கும் போது. நாம் இல்லை எனச் சொல்லிவிடுவது. இதுதான் திட்டம்.

ஆனால் நீங்கள் மேலே சொன்ன பேர்வழிகள் சதிக்குள், சதிதீட்டினார்கள். வேலையை இவர்களை கொண்டு முடிப்பது, பின்னர் இவர்களை தக்க ஆதாரத்துடன் மாட்டிவிட்டு, தாம் தப்பிவிடுவது. ஈற்றில் இப்படியே நடந்தது. அதனால்தான் வழமைக்கு மாறாக, ஒவ்வொரு கட்டத்திலும் ஆதாரங்கள் இந்த வழக்கில் வேணும் என்றே மாட்டும் வகையில் விடப்பட்டது.

87 ற்கு பின் டெலோவில் இருந்ததெல்லாம் காடைக்கூட்டம். அவர்களாவது இப்படி ஒரு துணிகரத்தை செய்வதாவது. தவிரவும் குப்பி அடிக்கும் அளவுக்கெல்லாம் டெலோவில் ஒரு ஆள் கூட இருந்ததில்லை. 

91 காலப்பகுதியில் இதை மறுத்துவிடலாம், யாரும் கண்டு பிடிக்க மாட்டர்கள் என நினைத்து பகிரங்கமாக மறுத்த புலிகள். 2002 இல் இனி மறுப்பதால் பயனில்லை. உலகம் மேலும் எம்மை பொய்யர்களாகவே பார்க்கும் என்ற புரிதலுக்கு வந்துவிட்டார்கள்.

எனவேதான் 2002 அந்த பதில் சொல்லப்பட்டது. 

சம்பவங்களை வைத்து நான் புரிந்து கொள்வது இதைத்தான். உங்கள் புரிதல் வேறுவிதமானது. பிரபாகரன் இனி உயிர்த்து வந்து உண்மையை சொல்லாதவரை, இதில் எது சரி என்றவாதம் நீண்டுகொண்டே போகும்.

தவிர இதை அலசுவதில் இப்போ யாருக்கும் எந்த பயனுமில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

IMG-0665.jpg

இந்த வீரச்சாவு தான் லாராவிற்கான பதில்

கடலில் கலந்த….. டேவிட்.

தமிழீழத்தின் திசைகளில் மோதும் காற்றில் கலந்துவிட்ட தென்றல்.

விடுதலைப் போராட்டத்தின் பல்வேறு பரிமாணங்களையும் தன்காலத்திலேயே நேரடியாகக் கண்ட மிகச் சில போராளிகளில் ஒருவன்.

தமிழீழத்தின் விடுதலைப் போராட்டம் , எல்லாக் காலங்களிலும் , கடல் பிரயாணங்களை முதன்மைப் படுத்துவதாக அமைந்தது. எத்திசையும் கடலால் சூழப்பட்ட எம்தாயகத்தின் , தாக்கமுள்ள நகர்வுகள் கடல் மூலமே மேற்கொள்ளப்பட்டுள்ளன. எமது விடுதலைப் போராட்டத்தில் , கடல் பயணங்கள் பிடித்திருந்த இடத்தின் , அதே அளவு இடத்தை , எமது கடல் சரித்திரத்தில் டேவிட் பிடித்திருந்தான்.

அவனது இளமையிலேயே கடல் அவனை அழைத்தது. அவது குடும்பநிலை அவனை கடலுக்கு அனுப்பியது.

” இயக்கம் கடலிலும் பிரயாணம் செய்ய வேண்டிவரும் ” என்ரகாலம் போய் , ” இயக்கத்தின் பியானம் கடலில்தான் ” என்று வந்துவிட்ட 83ல் , இயக்கத்திற்க்காய் கடலில் இறங்கினான்.

தமிழீழத்தின் ஒவ்வொரு கரையிலும் கால் பதித்தான். நீண்ட பெரும் கடற்பரப்பு , கடற்பரப்பில் புள்ளியாய் நகரும் படகு , படகினைப் போல் பலமடங்கு விரிந்து , எழுந்து , விழுங்கவரும் அலைகள். சமுத்திர ராட்சதனின் அலைவாய் மூடமுதல் , விரைந்து , தத்திப்பாய்ந்து வெளியேறி , திரும்பிப்பார்க்கும் லாவசம். திரும்பிப்பார்வை நேரே நோக்க அடுத்த பெரும் அலை.

படகினை பலமடங்கு வேகத்துடன் துரத்தி உமிழும் பீரங்கிவாய்கள். அவற்றின் பல்முக நகர்வுகளிலும் தப்பி , தத்திச் செல்லும் வேகம். பின்னால் வரும் எதிரியின் கை அதிகமாய் நெருங்கின் , நின்று – நிதானித்து இயந்திரத்துப்பாக்கியை இயக்க ஆணையிடும் உறுதி , அந்தக் கணத்தில் எதிரி அடையும் அதிர்ட்சி டேவிட்டை பல தடவைகள் கரை சேர்த்துள்ளது.

அவனது கடல் பயணங்கள் மெய்சிலிர்க்கும் பல அனுபவங்களைக் கொண்டது. அவனது ஆசான்களும் , நல்ல நண்பர்களும் கடலிலேயே கலந்து விட்டனர். அப்போதெல்லாம் கூட , அவன் கடலில் நிலைத்துநின்றான். அவனது தப்பியோடும் லாவகமும் , தேவையின் பொது எதிர்த்து நின்று எதிர்கொள்ளும் நெஞ்சுறுதியுமே அவனை நிற்கவைத்தது.

இன்று இயக்கத்தின் வசமுள்ள பெருமளவு ஆயுதங்களுக்கு டேவிட்டைத் தெரியும்.

ஆம்…! அவை எமது கைகளுக்கு கிடைப்பதற்கு கிடையில் டேவிட் இருந்திருப்பான்.

அனேகமாக எப்போதுமே நாம் கரையில் காணும் டேவிட்டைக் கடலில் சந்திக்கமுடியாது. ஒருங்கிணைந்த சிந்தையுடன் , தன்னை நம்பி படகில் ஏறிய ” நீந்தத் தெரியாத சுமைகளுக்கு ” உத்தரவிடும் டேவிட் , கடுமையான வசைகளால் ஓட்டிமாரை கட்டுப்படுத்தும் மாலுமி. கடலில் டேவிட்டை , டேவிட்டாகப் பார்ப்பது கடினம்.

எப்போதாவது மிக அபூர்வமாக , சீரான , நேவியில்லாத , ஒதுக்குப்புறக்கடலில் , நல்ல நிலவும் சேர்ந்தால் அவனது படகு நிற்கும். இயந்திரச் சத்தத்தை மேவி அவன் குரல் ஒலிக்கும், ” கடல் மேல் பிறக்கவைத்தான்…. ” அவனது குரல் இனிய சங்கீதம் இல்லைத்தான் , ஆனாலும் அவன் பாடினால் நின்று , நிதானித்துக் கேட்கவைக்கும் வசீகரம். அந்த வசீகரம் அவனது குரலுக்கா…? அல்லது அவன் பாடும் பாடல்களுக்கா…?

அவனது குரலில் ; பாடல் கம்பீரம் பெறுவதும் தெரியும். அந்தக் குரலுக்கு , அவன் தெரிவு செய்யும் பாடல்களை விட , வேறுபாடல் எடுபடாதென்பதும் புரியும்.

அவனைத் தெரிந்த , அவனுடைய பழகாத எல்லோராலும் கூறப்படும் , எண்ணப்படும் , எண்ண வடிவங்களுக்கு அபபர்ப்பட்ட போராளி. அநேக போராளிகளைப் போல் அவனுக்கும் ” பழஞ்சோறு குழைத்துக்கையில கொடுக்கும் அம்மா “ ” ஆமியின் வெடி கேட்டும் சிறுபற்றை சரசரக்காமல் தேத்தண்ணி செம்புடன் அண்ணனை , அண்ணனின் தோழர்களை தேடும் தங்கைகள். “ வீட்டின் நிலையை எண்ணுவதா ? நாடா ? என்ற கேள்விக்கு எப்போதுமே குழப்பமிலாத பதிலைத் தன்வசம் வைத்திருந்த போராளி. மிக நெருக்கமான நண்பர்களிடம் மட்டும் ” தங்கச்சியவை ” என்று கூறிக் கண்கலங்கும் அண்ணன்.

எப்பேற்பட்ட வேலையாக இருந்தாலும் அவ் வேலையின் முக்கியத்துவம் விளங்கவைக்கப்பட்டால் , அந்த வேலையை செய்து முடிக்கும்வரை அவன் ஓய்வதும் அபூர்வம். அவனது நினைவுகள் மீட்டப்படும் பொது திரும்பத்திரும்ப அவனது அக்குணநலனே எவருக்கும் முன்னிற்கும்.

தமிழீழத்தின் கடற்பரப்பில் மட்டுமல்ல , தமிழீழத்தின் தரைப்போர் வாழ்க்கையிலும் அவன் சாத்த்தவை அதிகம். அதிலும் வடமராட்சியில் நடைபெற்ற அநேகமான சண்டைகளில் அவனது சுவடுகள் பதிந்திருந்தன.

இந்திய இராணுவத்திற்கு முந்தைய போர்வாழ்வில் , ஒப்பரேஷன் லிபறேசனுக்கு முன்பும் பின்பும் வடமராட்சியில் அவன் பங்கு அதிகம்.
ஒப்பரேஷன் லிபறேசனுகென ஆமி புறப்பட்டதிலிருந்து , நெல்லியடி முகாமிற்குள் மில்லர் புகுந்தது வரை அவன் ஓயவில்லை.

இந்திய இராணுவ யுத்தம் ஆரம்பித்த காலத்தில் தமிழ்நாட்டில் தங்கியிருந்தவன். யுத்தம் ஆரம்பித்து , கொழுந்துவிட்ட நேரத்தில் தள்ளியிருக்கமுடியாமல் , ஒரு கட்டுமரத்தில் வந்து சேர்ந்தான். இந்திய ஆக்கிரமிப்புக் காலத்தில் வடமராட்சியில் இயக்கத்தை உயிர்த்துடிப்புடன் வைத்திருந்ததில் , அவன் ப[அங்கு மிகப் பெரியது.

அனேகமாக இயக்கத்தின் எல்லாத் துறைகளிலும் தனது முத்திரையைப் பதித்தவன். அரசியல் ? அவன் அரசியல் வித்தகன் இல்லைத்தான் எனினும் , தான் ஏந்திய துப்பாக்கி எதற்காக என்பதில் குழப்பமில்லாதவன். மக்களுடன் பழகும் போதினில் அந்த மக்களில் ஒருவனாக நின்று சிந்திக்கத் தெரிந்தவன்.

எல்லாத் தலைமறைவுக்கால வாழ்க்கையிலும் , மக்களால் பாதுகாக்கப்பட்டவன். டேவிட் நின்றால் ஆமி பார்த்துச் சொல்வதற்க்கென ஒரு முதியோர் படையே திரளும்.

அவன் உலவும் ஊர்களில் சிறுகுழந்தைக்கும் அறிமுகமாகிவிடும் முகராசி. சிறுவர்களை ஒரு தடவை சந்தித்தால் , மறுதடவை சந்திக்கும்போது அவர்களை பெயர் சொல்லி அழைக்கும் நட்புணர்வு அல்லது அவர்கள் வெட்கத்தில் முகம் சிவக்க இவன் ஒரு பெயர் வைத்திருப்பான். சிறுவர்கள் என்றல்ல எவருடனுமே நட்பைப் பேணுவதில் தனித்துவமானவன் , பழைய நண்பர்களை மீண்டும் சந்திப்பதில் தனிமையான ஆர்வமுள்ளவன்.

எப்போதோ ஒருமுறை ” வண்டி விடப்பட்ட கரையில் “ லாம்பு வெளிட்சத்தில் சாப்பாடு கொடுத்தவரை யாழ்ப்பாணத்தில் கண்டு ” என்னைத் தெரியேல்லையே , கலுவன் கேணியில றால் கரியோட புட்டு சாப்பிட்டனாங்கள் எல்லே ” என்று கேட்டு அசத்துவான்.

பழைய நண்பர்கள் ஒன்றாகச் சேர்ந்தால் , மறந்துவிட்ட திரும்பக் கிடைக்காத நினைவுகளை மீட்டுவது டேவிட்தான். இவனது நட்பைப் பேணும் பண்பால் பலராலும் விரும்பபட்டவன். சிலவேளைகளில் வேலை நேரங்களிலும் ” நட்பைப் பேணப்போய் ” வாங்கிக்கட்டிக் கொண்டு தலையைச் சொறிவான்.

இயக்கம் மிக அரிதாகச் சந்தித்த ” எல்லா வேலைகளிலும் வல்லுனர்களாக விளங்கக்கூடிய ” சிலரில் டேவிட் ஒருவன். ஆனால் கடல் என்பது ” பெரிய கடலாக ” இருந்தது. அதில் இயக்கத்தின் கடற்பிரிவு மிகச்சிறியதாக இருந்ததால் அவனால் காதலி விட்டுவிட்டு வரமுடியவில்லை. அவனது குறைந்த பாடசாலைக் கல்வியின் போதும்கூட பெரிய திட்டமிடல் திறன் இருந்தது. அது புரிந்தவர்கள் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது.

அவனது எதிர்பார்ப்புகளுக்கெல்லாம் அவனுக்கு களம் கிடைக்கவில்லை. கடல் அவனை மறித்துவைத்திருந்தது.

ஒரு மிக முக்கிய கடற்பயணம் , தவை பெரியது , டேவிட் தேவையான ஒழுங்குகளை வழமைபோல் சரிபார்க்கிறான். கடல் தெரிந்தவர்கள் கடலில் ஓடத்தயங்கும் காலநிலை , ஆனாலும் பிரயாணம் அவசியமானதாகவும் , ஒத்திவைக்க முடியாததாகவும் இருந்தது.

கடலைத் தவிர எல்லாமே வழமைபோலத்தான். வழமையான தடபுடல் ,ம் வேகமான பிக்கப்….. , பெரிய நம்பிக்கை விதையை நெஞ்சில் விதைத்துவிட்டு டேவிட் ஆயத்தமாகிறான். வழமையாக ஓடித்திரியும் நேவியையும் காணவில்லை. எல்லாமே நம்பிக்கையுடன் இருக்கிறது. வண்டி புறப்படும் , அதுவும் டேவிட் நேரில் புறப்படும் காரணம் சொல்லப்படாவிட்டாலும் , வழமைபோலவே ஊகித்துக் கொண்டு வழியனுப்புகிறார்கள். டேவிட்டை அன்புடன் வளர்த்துப் பாதுகாத்த மக்கள் – அவனுடன் மிக அன்பாகப் பழகியவர்களில் நல்லாய்க் கடல் தெரிந்தவர்கள் அன்று கரைக்கு வரவேயில்லை…..

படகு நீரில் இறங்கியது ” குழந்தைப்பிள்ளையைக் கையிலே பிடித்துக் கூட்டிச் செல்லும் வாஞ்சையுடன் “ இரு கரையிலும் ஆட்கள் வரிசையாய் நின்று , படகினை கடலுக்குள் இழுத்துச் செல்கிறார்கள். இடுப்பளவு தண்ணீரில் இறங்கிய பின்னர் , அணியத்தில் நின்ற அரி தடியால் ஊன்ற படகு தள்ளாடி , நகர , அண்ணார்ந்து நின்ற இயந்திரவால்கள் தண்ணீரில் குளிக்க , எல்லாம் வழமைபோலவே.

” நல்லாய் செவிச்போட்ட இயந்திரம் ஒரு இழுவையில் ஸ்ராட் வர “ இருட்டில் நின்ற தோழர்களும் , மக்களும் வண்டியில் நின்றவர்களுக்கு ” தெரியாது என்று தெரிந்தும் ” கையை உயர்த்தி மேல அசைகிறார்கள். வண்டியில் நின்றவர்களும் கையசைத்திருப்பார்கள்….?

ஒரு இயந்தியம் கொஞ்சத்தூரம் ஓடிப்போய் நின்று தயாராகையில் , ” துணியில் பொத்தி ரோச்லைட் அடிப்பதும் ” தெரிகிறது.

அல்பா , அல்பா…..

என்னமாதிரி….?

பிரச்சினையில்லை குதிரைக்கு சாப்பாடு கொடுக்கினம்…..

கரிகாலனின் பதில் வோக்கியில் கேட்கிறது.

பின் ஒவ்வொரு இயந்திரமாக சத்தமிட படகு நகராமலேயே இயந்திர சத்தம் அதிகரித்து குறைந்தது , மிக அதிகரித்து , தணிவது கேட்கிறது.

படகு வழமைபோல் வலப்புறமாய் வட்டமிட்டு , நிழலாய் நகர்கிறது. ” எப்போதும் போல் , ‘ தேவையும் கடலும் தவிர ‘ மற்ற எல்லாம் வழமைபோல் ”

நீரைக்கிழித்து , வெண்நுரை கிளப்ப , அலையில் எழும்பிப்பாய்ந்தது….. படகு புறப்பட்டுவிட்டது. அதிகரித்த சத்தமும். கரையில் கூடிய கூட்டமும் , சிறிது சிறிதாய் மறைய, கடல் தெரியாதவர்களின் திருப்திப் பெருமூச்சுடன் “ கலந்தபோது , ” வண்டி வெளிகிட்டு விட்டது. ”

இயந்திர சத்தம் கரைவடஹ்ர்க்கு முன்னரே கரையிலுள்ள வோக்கி.

அல்பா…… அல்பா….. என அழைத்தது.

” தண்ணியடிக்குது தானே வோக்கியை அது தான் லோக் ரியூப்பிலை வைத்திட்டினம் போல ” எனக் கூறிவிட்டு , முயற்சியைக் கைவிடும் போதும் கூட , இயந்திர சத்தம் கேட்டுக்கொண்டுதானிருக்கிறது.

நேரம் கரைய , முகாமுக்குத் திரும்ப நினைக்கும் வேளையில் , துரத்து முகாம் வோக்கியில் ஒரு அவசர அழைப்பு. ” வோக்கியில் அல்பா தொடர்பெடுத்து….. ”

” என்னவாம் “…..

” கிளியரில்லை , சரியாக விளங்கேல்லை பிறபோ…… பிறபோ…… என்று அவியல் கூப்பிட்டமாதிரியிருந்தது…..

” சொல்லு “….

” போட்வெடித்திட்டு , வண்டி அனுப்புங்கோ , ஏன்டா மாதிரிக் கிடந்தது. அவையளின்ர கிளியரில்லை , ஒண்டும் விளங்கேல்லை “……

” ஆர் கதைச்சது…..”

” டேவிட் அண்ணை மாதிரித்தான் கிடந்தது , ஒண்டும் விளங்கேல்லை ….. ”

அடுத்த படகினை ஆயத்தம் செய்தவேளை , இயந்திரம் எடுக்க பிக்க[ விரைந்த வேளை , உறுதியற்ற வோக்கிச் செய்தியை நம்புவதா , இல்லையா என்று யோசித்தவேளை , நேரம் நகர்ந்து கொண்டிருந்தது. அலை விரித்துக் கொண்டிருந்தது.

” சன்னதம் கொண்டு நின்றது கடல். தேடபோகும் படகினை , தேடப்போகவென மர்ரபடகை , தயாராக வைக்கக் , வைக்கும் கடல்…!

நேரம் செல்லச்செல்ல ” வேக்கிச் செய்தி பிரமையோ ? “ எனநினைக்க வைக்கும் , வெறுமையுடன் காத்திருக்கும் வேளையில் , தேடப்போன படகின் வோக்கி அழைக்கிறது.

அரியைக்கண்டிட்டம் , தூரத்தின் இன்னொமொரு ஆள் தெரியுது….

என்னமாதிரி….. என்னமாதிரி என்ற வோக்கிக்கு பதில் சொல்லாமல் தேடும் படகு கரைநோக்கி வர. ” படகில் அரியுடன் ரட்ணா ”

” என்ன நடந்தது ? ”

” போட பிரிஞ்சிட்டுது , நடுவாலை முறிஞ்சு அணியம்தனிய , கடயார்தனிய ரெண்டாகப் போச்சு ”

” மற்றாக்கள் என்ன மாதிரி ? டேவிட் அண்ணை என்ன மாதிரி ? ”

” இருட்டுக்குள் எல்லோரையும் கூபிட்டு டேவிட் அண்ணை ஒன்றாக்கினவர் , எல்லோரையும் நீந்தச்சொல்லிவிட்டுப்போட்டு , அவர் கரிகாலனைக் கூப்பிட்டு தன்னட்டை எடுத்தவர்.

முழுவிடயங்களையும் சொல்லமுடியாது அறியும் – ரட்னாவும் மயங்கிவிட்டார்கள்.

மீட்க்கப்பட்ட இருவரும் உப்பு நீரால் உதடுகள் வெடித்து. , முகம் புண்ணாக்கி , ” கோலம் கெட்டுப்போய் ” இருந்தார்கள்,

படகுகள் போயின , வந்தன. செய்தி கேள்விப்பட்ட சனமெல்லாம் கரைமுழுக்கக் கூடி நின்று தேடினர். படகுகளின் தேடுதலுக்கு மேலாக , டேவிட்டின் திறமையில் எல்லோரும் நம்பிக்கை கொண்டிருந்தனர்.

” முதலும் இரண்டு நாள் கடலுக்கு கிடந்தது , வந்து சேர்ந்தவன் தானே ”

” மன்னாரிலை ஒருக்கா இரண்டு பொம்பிளைப் பிள்ளையளைத் , தனியக் கொண்டுவந்து சேர்த்தவனெல்லெ…”

டேவிட்டின் நீச்சல் திறமையில் எலோருக்கும் நம்பிக்கை இருந்தது.

” உந்த மட்டு மட்டு நீச்சல் பொடியல் வந்து சேர்ந்திட்டாங்களாம் டேவிட் ஏன் வரமாட்டான் ? ”

எல்லோரும் நம்பிக்கையுடன் காத்திருந்த போதும் , அறி வைத்தியசாலியில் கூறிக்கொண்டிருந்தான். ” எங்களை நீந்தச்சொல்லிப்போட்டு கரிகாலனைத் தான் , இழுத்துக் கொண்டு நீண்டவர் ”

படகில் சென்றவர்களில் ” கடலுடன் கொஞ்சமும் பரிச்சயம் இல்லாத , நீச்சல் தெரியாதவன் ” கரிகாலன் மட்டும் தான்.

எல்லோரும் நம்பிக்கையுடன் இருந்த போதும் , அரியையும் – ரட்னாவையும் தவிர வேறு எவரும் வரவில்லை…..

கரிகாலன் வரவில்லை…..

டேவிட்டும் வரவில்லை …..

டேவிட் பங்குகொண்ட தாக்குதல்கள்…

* 1985ம் ஆண்டு மன்னார் போலிஸ் நிலையத்தாக்குதல் நடைபெற்றபோது , தாக்குதற் குழுவை படகில் ஏற்றி மறுகரைக்கு ( மன்னார் தீவுக்குள் ) கொண்டு சேர்க்கும் கடற்புலிகள் குழுவின் உதவிப்பொறுப்பாளராக இருந்தார். படகில் சென்று பாதுகாப்பாக இறங்குவதே தாக்குதலின் முதல் வெற்றி எனக் கருதப்பட்டது. இத்தாக்குதல் முடிந்த பின்பு அப்போதைய மன்னார்த் தளபதி லெப் கேணல் விக்ரர் அவர்களார் டேவிட் பாராட்டப்பட்டார்.

* 1987ம் ஆண்டில் ஆனையிறவு முகாமிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி சிறிலங்கா இராணுவம் முன்னேற முயன்றபோது கிட்டு அண்ணா தலைமைதாங்கிய தாக்குதலின் பொது வீரமரணமடைந்த லெப் அங்கிளின் குழுவில் ஒருவராக சண்டை செய்து தோளில் காயமடைந்தார்.

* 1987ம் ஆண்டு யாழ் தொலைத்தொடர்பு நிலையத்தாக்குதலில் ( 8 இராணுவத்தினரைக் கைது செய்தபோது ) ” 50 கலிபர் ” குழு ஒன்றுடன் சென்று சண்டையில் ஈடுபட்டார்.

* 1989க் ஆண்டு நெல்லியடியில் இந்திய இராணுவக் காவலரண் மீதான தாக்குதலின் போது அத்தாகுதற் குழுவின் இரண்டாவது பொறுப்பாளராகச் சென்றார்.

* 1990ம் ஆண்டு வடமராட்சிக் கடலில் சிறிலங்காக் கடற்படையின் தாய்க்கப்பல் மீது நடாத்தப்பட்ட கரும்புலித் தாக்குதல் ( கடற்கரும்புலிகள் : மேஜர் காந்தரூபன் – கப்டன் வினோத் – கப்டன் கொலின்ஸ் ) நடவடிக்கையினை தலைமை தாங்கியவர் இவரே.

ச . பொட்டு
( புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் – தமிழீழ விடுதலைப்புலிகள். )

விடுதலைப்புலிகள் இதழ் ( ஐப்பசி – கார்த்திகை : 1991 )

Edited by MEERA

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.