Jump to content

2019 இலங்கை சனாதிபதி தேர்தல் முடிவுகள்


Recommended Posts

  • Replies 317
  • Created
  • Last Reply

இலங்கைத் தமிழர்களுக்குள் கட்சி ரீதியாக பிரிந்தும் – முரண்பட்டும் கிடக்கும் தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு இந்தத் தேர்தல் ஒரு படிப்பினை. சலுகைகளுக்கும் – சுகபோகங்களுக்கும் சோரம் போகாமல், தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒன்றிணைந்து – ஓரணியில் நிற்பது அவசியம் மட்டுமல்ல வரலாற்றுக் கடமையும்கூட. மீறி தனிக் கட்சி நலன்கள்தான் முக்கியம் என்று கருதி ஒன்றிணையவோ – இணைந்து செயற்படவோ மறந்தால் – அல்லது மறுத்தால் அடிமை வாழ்வும் – உரிமைகள் இல்லா வாழ்வும் – நிச்சயம்.

வரலாற்றுக் கடமையை சிறுபான்மை இனம் – தமிழினம் செய்து விட்டது. தமிழினம் ஏற்றிய இந்த சிறு தீயை அணையவிடாது எரிய வைத்து ஒளி கொடுப்பார்களா சிறுபான்மை – தமிழினத் தலைமைகள்…?

-தமிழ்க் குரலுக்காக செவ்வேள் –

Link to comment
Share on other sites

@DrSJaishankar 

முடிந்தால் இவரை பின்தொடருங்கள், தமிழ் மக்களுக்கு விடிவு தரும் விடயங்களை 'லைக்' பண்ணுங்கள்; எதிரான கருத்துக்களுக்கு ஆதாரத்துடன் ஆரோக்கியமாக பண்பாக பதிலளியுங்கள். 

நீங்களும் தமிழ் தலைமையாக மாறலாம் 🙂 

Link to comment
Share on other sites

இந்த நாட்டின் ஆறாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக இருந்தவர் மைத்திரிபால சிறிசேன. மகிந்த ராஜபக்ச ­வோடு போட்டியிட்டு ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றவர் மைத்திரிபால சிறிசேன.

ஜனாதிபதித் தேர்தலில் என்னோடு போட்டி யிட இருக்கின்ற அந்த வீரனை அறிய ஆசைப்படுகிறேன் என மகிந்த ராஜபக்ச ­ கர்ச்சித்த போது அவர் அருகிலேயே நின்றவர் மைத்திரி பால சிறிசேன. மிகுந்த துணிச்சலும் நேர்மையும் அவரிடம் இருந்தன. தமிழ் மக்களின் பிரச்சினை தொடர்பில் நேரிய முறையில் சிந்தித்தவர்.

எனினும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சேர்ந்து கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஓரங்கட்டியது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க யாழ்ப் பாணத்துக்கு வருகின்றபோதெல்லாம் கொழும் பில் இருந்து ஓடிவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய தலைவர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் யாழ்ப்பாண விஜ யத்தின் போதெல்லாம் எட்டவே நின்றனர்.

அதுமட்டுமல்ல ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு பிரதமர் ரணில் செய்த அக்கிரமங்கள், சேர்ந்து பயணிப்போம் என்ற சத்தியத்துக்கு இழைத்த பெரும் துரோகமாகும். மைத்திரிபால சிறிசேனவோடு மட்டும் ரணில் விக்கிரமசிங்கவின் தந்திரம் முடியவில்லை. அது சஜித் பிரேமதாஸவையும் நம்ப வைத்துக் கழுத்தறுத்தது. 

எனவே இத்தகையவரோடு கூட்டு நின்ற நம் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் எப்பேற் பட்டவர்கள் என்பதை இனிமேலாவது நம் தமிழினம் உணர்ந்தாக வேண்டும்.

Ref : வலம்புரி 

Link to comment
Share on other sites

மஹிந்த ராஜபக்ஷ அமைச்சரவை பொறுப்பேற்பு - 2 தமிழர்களுக்கு இடம்; முஸ்லிம்கள் இல்லை

இந்த அமைச்சரவையில் இந்திய வம்சாவளித் தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தி நாடாளுமன்றம் சென்ற ஆறுமுகன் தொண்டமானும், வட மாகாண தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்திய நாடாளுமன்றம் சென்ற டக்ளஸ் தேவானந்தாவும் அமைச்சு பொறுப்புக்களை ஏற்றுள்ளனர்.

புதிய அமைச்சரவையில் முஸ்லிம்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் ஒருவர் கூட இடம்பிடிக்கவில்லை.

Ref : BBC Thamil

 

Link to comment
Share on other sites

On 11/22/2019 at 7:57 AM, ampanai said:

மிகுந்த துணிச்சலும் நேர்மையும் அவரிடம் இருந்தன. தமிழ் மக்களின் பிரச்சினை தொடர்பில் நேரிய முறையில் சிந்தித்தவர்.

எனினும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சேர்ந்து கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஓரங்கட்டியது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க யாழ்ப் பாணத்துக்கு வருகின்றபோதெல்லாம் கொழும் பில் இருந்து ஓடிவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய தலைவர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் யாழ்ப்பாண விஜ யத்தின் போதெல்லாம் எட்டவே நின்றனர்.

அதுமட்டுமல்ல ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு பிரதமர் ரணில் செய்த அக்கிரமங்கள், சேர்ந்து பயணிப்போம் என்ற சத்தியத்துக்கு இழைத்த பெரும் துரோகமாகும்.

சிங்கள-பௌத்த இனவாதி மைத்திரியை செயற்பட சிங்கள-பௌத்த ஓநாய் ரணில் விடவில்லை சிங்கள-பௌத்த ஓநாய் ரணில் செயற்பட இனவாதி மைத்திரி விடவில்லை என்று தமிழர்கள் காரணங்களை கண்டுபிடித்து கூறும் பிற்போக்குநிலை, அடிமைச் சுபாவம்  ஆரோக்கியமானது இல்லை.   

முக்கிய தருணங்களில், தமிழர்களுக்கு தீர்வை வழங்க வேண்டும் என்ற அழுத்தங்கள் அதிகரிக்கின்ற பொழுதிலெல்லாம் சிங்கள-பௌத்த கொலைகார்கள் ஏதாவது ஒரு நாடகத்தை நடத்தி உலக அனுதாபத்தை பெற்று காலத்தை கடத்துவது அவ்வப்போது நடந்து வந்திருக்கிறது.  

ஐ.நா. சபைக்கு சிங்கள-பௌத்த கொலைகார அரசு பொறுப்பான பதிலைக் கூறவேண்டிய நேரேத்தில் தான் மைத்திரி-மகிந்த-ரணில் ஆட்சி கவிழ்ப்புக் கூத்துக்கள் நடந்தன.

இந்த நாடகத்துக்குள் விழுந்தடித்து குள்ளநரி ரணிலுக்கு முண்டு கொடுத்த சம்மந்தன்-சுமந்திரன் கூட்டில் இயங்கும் கூத்தமைப்பு மூடர்கள் சிங்கள-பௌத்த கொலைகார அரசின் மீது அதிகரித்துவந்த சர்வதேச நெருக்கடியை குறைப்பதற்கு பெரும் உதவி செய்தனர். கூத்தின் முடிவில் சிங்கள-பௌத்த கொலைகாரர்களான ரணிலும் - கோட்டாபயவும் அலரிமாளிகையில் சந்தித்து சிரித்து மகிழ்ந்திருந்தனர்.

மைத்திரி-ரணிலின் சிங்கள-பௌத்த பயங்கரவாத அரசு அமைந்த காலத்தில் ஐ.நா. சபையில் இந்தப் பயங்கரவாதிகளுக்கு தமிழர் பிரச்சனைகளை தீர்க்க கால அவகாசம் கொடுக்க வேண்டும் என்று ஓடியோடி குத்திமுறிந்த சொதப்பல் சுமந்திரன் சிங்கள-பௌத்த பயங்கரவாத அரசு பயங்கரவாதிகளின் மீதான அழுத்தத்தை குறைக்கவே உதவினார்.

சம்மந்தனும் போர்க்குற்றவாளிக் கும்பல்களில் ஒன்றான இந்திய அரச  கொலைகாரர்கள் எதிர்நோக்கிய ஆபத்தை அகற்ற திக்கித்திக்கி உழைத்தாரே தவிர பாதிக்கப்பட்ட தமிழர்களின் நலன்களைப் பற்றி சிறிதும் அக்கறை எடுக்கவில்லை.

எனவே அதே அடிமைச் சேவக மனநிலையுடன் சிங்கள-பௌத்த இனவாதி மைத்திரியை செயற்பட சிங்கள-பௌத்த ஓநாய் ரணில் விடவில்லை சிங்கள-பௌத்த ஓநாய் ரணில் செயற்பட இனவாதி மைத்திரி விடவில்லை என்று தமிழர்கள் காரணங்களை கண்டுபிடித்து கூறும் பிற்போக்குநிலை ஆரோக்கியமானது இல்லை.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் வந்து, ஒரு கிழமை ஆகின்றது. 
அதனை... ஊர் புதின, செய்தியில்...
"பின்" பண்ணி விட்டவருக்கு, நன்றிகள்.

விவாதங்களை... நடத்த, வேறு பகுதி  இருக்கும் போது,
ஏன்... இந்த, விளையாட்டு.

Link to comment
Share on other sites

இம்முறை ஜனாதிபதி தேர்தலிலேயே குறைந்த செல்லுபடியற்ற வாக்குப்பதிவு

(ஆர்.யசி)

கடந்த கால ஜனாதிபதி தேர்தல்களுடன் ஒப்பிடுகையில் நடைபெற்று முடிந்த 2019 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி தேர்தலிலேயே ஆகக் குறைந்த செல்லுபடியற்ற வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

இம்முறை ஜனாதிபதி தேர்தலில் 35 வேட்பாளர்களைக் கொண்ட தேர்தலாக அமைந்த காரணத்தினால் வாக்குச் சீட்டு 26 அங்குலம் நீளம் கொண்டதாக காணப்பட்ட நிலையில் மக்கள் அதிக சிரமங்களை சந்திக்க நேரிடும் என ஆரம்பத்தில் கூறப்பட்டது. 

எனினும் கடந்த கால ஜனாதிபதி தேர்தல்களுடன் ஒப்பிடுகையில் இம்முறை தேர்தலிலேயே ஆகக்குறைந்த செல்லுபடியற்ற வாக்கு வீதம் பதிவாகியுள்ளது. 

இம்முறை ஜனாதிபதி தேர்தலில் 13,387, 951 பேர் தேர்தலில் வாக்களித்திருந்தார்கள். இவர்களின் வெறுமனே 135,252 வாக்குகள் மட்டுமே செல்லுபடியற்ற வாக்குகளாக பதிவாகியது. வாக்களிப்பு வீதத்தின் அடிப்படையில் நோக்குகையில் இது வெறுமனே 0.85 வீதமாகும். 

https://www.virakesari.lk/article/69614

Link to comment
Share on other sites

காலத்தை வீணடிப்பது முறையல்ல!

ஜனாதிபதித் தேர்தல் முடிவு வெளியாகி இன்றுடன் ஒன்பது தினங்களாகின்றன. இத்தேர்தல் தொடர்பான பரபரப்புகள் அனைத்தும் இப்போது ஓய்ந்து விட்டன.

நாட்டு மக்களின் அமோக ஆதரவுடன் ஜனாதிபதியாகப் பதவியேற்றிருக்கிறார் கோட்டாபய ராஜபக்ஷ. இவ்வெற்றி குறித்து எதிர்மறையான விமர்சனங்களை முன்வைப்பதற்கு முற்றாகவே இடமில்லை. ஜனாதிபதித் தேர்தலில் வாக்களித்த மக்களில் 52.25 சதவீதத்தினர் அளித்துள்ள ஜனநாயகத் தீர்ப்பு இது. அதாவது 13,60,026 மேலதிக வாக்குகளைப் பெற்று இத்தேர்தலில் வெற்றியீட்டியுள்ளார் கோட்டாபய ராஜபக்ஷ.

நடந்து முடிந்த தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிரணியாக நின்ற அரசியல் கட்சிகளின் தலைவர்களே இவ்வெற்றி குறித்து மலைத்துப் போய் நிற்கிறார்கள். அவரது வெற்றியை மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டு வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளனர்.

அவர்கள் மாத்திரமன்றி, உலக நாடுகளின் தலைவர்களும் இந்த மகத்தான வெற்றி தொடர்பாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்கள். இலங்கையில் சுயாதீனமாக செயற்படக் கூடிய தேர்தல்கள் ஆணைக்குழு நியமிக்கப்பட்டதன் பின்னர் நீதியாகவும், சுதந்திரமாகவும், எதுவித அச்சுறுத்தலுக்கும் இடமின்றி நடத்தப்பட்ட இத்தேர்தலில், கோட்டாபய ராஜபக்ஷ ஈட்டியிருக்கும் வெற்றியை நாட்டு மக்களின் நம்பிக்கையின் வெளிப்பாடு என்றுதான் உலக நாடுகள் பாராட்டுகின்றன.

ஜனாதிபதித் தேர்தலை நாம் கடந்து வந்து விட்டோம். நாட்டை கடந்த சுமார் ஐந்து வருடங்களாக ஆட்சி செய்து வந்த ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி மீது பெரும்பான்மையான மக்கள் நம்பிக்கையை இழந்து விட்டார்களென்பதை ஜனாதிபதித் தேர்தல் முடிவு மிகத் தெளிவாகவே எடுத்துக்காட்டி விட்டது.

எனவே மக்கள் ஆதரவை இழந்த அந்த அரசு தொடர்ந்தும் அதிகாரத்தில் இருப்பதற்கு இயலாது. அந்த அரசாங்கத்தில் பதவி வகித்த அமைச்சர்கள் ஒவ்வொருவராகப் பதவி விலகியதையடுத்து, பிரதமராகவிருந்த ரணில் விக்கிரமசிங்கவும் தனது பதவியைத் துறந்து அலரி மாளிகையை விட்டு வெளியேறினார்.

இந்நிலையில் நாட்டின் ஆட்சி நிர்வாகத்தை உடனடியாகப் பொறுப்பேற்கும் வகையில் மஹிந்த ராஜபக்ஷவைப் பிரதமராகக் கொண்ட இடைக்கால அரசாங்கமொன்று பதவியேற்றுள்ளது. நீண்ட கால அரசியல் அனுபவம் கொண்ட மூத்த அரசியல் தலைவர் ஒருவர் பிரதமராகியிருக்கின்றார். பிரதமர் பதவியை இதற்கு முன்னரும் வகித்த அனுபவம் கொண்டவர் மஹிந்த.

இலங்கையின் அரசியலில் இனிமேல் அடுத்த கட்டப் பரபரப்பு பாராளுமன்றத்துக்கான பொதுத் தேர்தல்!

ஜனாதிபதித் தேர்தலின் பெறுபேற்றைப் பார்க்கின்ற போது, நடைபெறவிருக்கும் பாராளுமன்றப் பொதுத் தேர்தலின் முடிவு எவ்வாறாக அமையுமென்பதை முன்கூட்டியே எதிர்வு கூறி விட முடியும். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியே ஆட்சியைக் கைப்பற்றப் போகின்றது. பெரமுனவின் தலைவரான மஹிந்த ராஜபக்ஷவே பொதுத் தேர்தலுக்குப் பின்னரும் பிரதமர் பதவியை வகிக்கப் போகின்றார்.

நாட்டின் மொத்த குடிமக்கள் தொகையில் சுமார் எழுபது சதவீதத்தைக் கொண்டுள்ள பெரும்பான்மை மக்கள் மத்தியில் பொதுஜன பெரமுன மாத்திரமன்றி, ராஜபக்ஷ குடும்பத்தினரும் கொண்டுள்ள அமோகமான செல்வாக்கையும் ஆதரவையும் பார்க்கின்ற போது, பொதுத் தேர்தலின் முடிவை இப்போதே எதிர்வு கூறுவது கடினமான விடயமல்ல.

கடந்த ஐந்து வருட காலமாக நாட்டை ஆட்சி செய்த அரசாங்கத்தின் திராணியற்ற நிர்வாகத்தையும், ஆளுமையின்மையும் பார்த்து சலிப்படைந்த மக்கள், எதிர்வரும் பொதுத் தேர்தலில் எவ்வாறான தீர்மானத்துக்குப் வரப் போகிறார்களென்பதை இலகுவாகவே இப்போது ஊகித்து விட முடியும்.

 
 

நாட்டின் தேசிய பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கும், பொருளாதார அபிவிருத்தியை துரித கதியில் முன்கொண்டு செல்வதற்கும் கோட்டாபய ராஜபக்ஷ மீது அதீத நம்பிக்கை வைத்து வாக்களித்த மக்கள்,எதிர்வரும் பொதுத் தேர்தலிலும் அவர் சார்ந்த கட்சியையே மீண்டும் ஆதரிப்பர் என்பதுதான் உண்மை.

தென்னிலங்கையின் அரசியல் நிலைவரம் இவ்வாறிருக்கையில், ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ வெற்றியீட்டியதன் பின்னர் வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் அரசியல் இனிமேல் எந்தத் திசையை நோக்கி நகரப் போகின்றது என்பதுதான் இன்றுள்ள பிரதான வினா!

தமிழ் அரசியல் கட்சிகள் தமது வழமையான பாணியில், சாத்தியமற்ற அரசியல் தீர்வை முன்வைத்து மேலும் ஐந்து வருடங்களுக்கு காலத்தை வீணடிக்கப் போகின்றனவா?

இல்லையேல், கடந்த நாற்பது வருட காலத்துக்கு மேலாக யுத்தப் பாதிப்பினால் நலிவடைந்து போயுள்ள வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றுவதற்கு இனிமேலாவது உருப்படியான செயல் திட்டங்களில் இறங்கப் போகின்றனவா?

இவ்விரண்டுமே வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் மத்தியில் இன்று எழுந்துள்ள பிரதான கேள்விகள்!

தமிழ் மக்களின் அரசியல் தலைமைகளால் இன்னுமே புரிந்து கொள்ளப்படாத முக்கிய விடயமொன்றும் இங்கு உள்ளது.

வடக்குத் தமிழர்களின் பிரச்சினைகளும், கிழக்குத் தமிழர்களின் பிரச்சினைகளும் வேறுபட்டவை. இந்த யதார்த்தத்தை தமிழர் தலைமைகள் புரிந்து கொள்ளத் தவறியதன் காரணமாகவே தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக அரசியல் சக்திகளும்,சமூகநல அமைப்புகளும் கிழக்கில் வெகுண்டெழுந்தன என்பதை இனிமேலாவது அக்கட்சியின் புரிந்து கொள்வது அவசியம்.

வடக்கில் உள்ள தமிழ் அரசியல் தலைமைகளைப் பொறுத்தவரை, அவர்கள் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வை மாத்திரம் இலக்கு வைத்தபடிதான் அரசியலை நகர்த்திக் கொண்டிருக்கிறார்கள். தங்களால் முன்வைக்கப்படுகின்ற தீர்வு யோசனையானது சாத்தியமாகக் கூடியதா என்பதையிட்டு அவர்கள் பொருட்படுத்தியதாகவும் தெரியவில்லை.

வடக்கின் அரசியல் நகர்வு இவ்வாறு சென்று கொண்டிருக்கையில், கிழக்கிலோ தமிழ் மக்களின் இருப்பு ஆபத்தின் விளிம்பில் வந்திருப்பதை தமிழ்த் தலைமைகள் கண்டு கொள்ளத் தவறி விட்டன.

தமிழ் அரசியல் தலைமைகள் இனிமேலும் கற்பனாவாதத்தில் காலத்தை விரயப்படுத்திக் கொண்டிருப்பது முறையல்ல. புதிய ஆட்சியாளர்களுடன் நல்லிணக்கத்தை வலுப்படுத்தியபடி தமிழ் மக்களின் நீண்ட கால அவலங்களைத் தீர்த்து வைப்பதற்கு அவர்கள் முன்வருவதே புத்திசாலித்தனம்!

https://www.thinakaran.lk/2019/11/25/ஆசிரியர்-தலைப்பு/44332/காலத்தை-வீணடிப்பது-முறையல்ல

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Lara said:

 

ஆனாலும் ரணில்தலைவர் பதவியில் இருந்து விட்டுக் கொடுக்க இன்னும் தயாரில்லை.

Link to comment
Share on other sites

மாவீரர் தின நிகழ்­வுகள் வடக்கு, கிழக்குப் பிர­தே­சங்­களின் பல இடங்­க­ளிலும் உணர்­வெ­ழுச்­சி­யுடன் பரந்த அளவில் நடை­பெற்­றி­ருக்­கின்­றன. முன்­னெப்­போதும் இல்­லாத அளவில் என்று குறிப்­பி­டத்­தக்க வகையில் மக்கள் இந்த நிகழ்­வு­களில் கலந்து கொண்டு, அர­சியல் விடு­த­லைக்­கான போராட்­டத்தில் தமது உயிர்­களை ஈகம் செய்த மாவீ­ரர்­களை அவர்கள் கசிந்­து­ருகிக் கண்ணீர் பெருக்கி நினைவு கூர்ந்­துள்­ளார்கள்.

கடந்த வரு­டங்­களைப் போலல்­லாமல், இந்த வருட நிகழ்வு முக்­கி­யத்­துவம் பெற்­றி­ருக்­கின்­றது. கண்ணீர் உகத்த கவ­லைக்­கு­ரிய உணர்வு பூர்வ நிகழ்­வாக அல்­லாமல், அதற்கும் அப்பால் அர­சியல் ரீதி­யான ஓர் உணர்வை வெளிப்­ப­டுத்­திய அடை­யா­ள­மா­கவும் அது நிகழ்ந்­துள்­ளது.

 

மாவீரர் தின நிகழ்­வுகள் தமிழ் மக்கள் வாழும் சர்­வ­தேச நாடுகள் எங்கும் நடை­பெற்­றுள்­ளன. இருப்­பினும், தாய­கமா­கிய இலங்­கையின் வடக்கு, கிழக்குப் பிர­தே­சங்­களில் இடம்­பெற்ற  நினை­வு­கூரல் நிகழ்­வுகள் அவற்றில் இருந்து வேறு­பட்­டி­ருக்­கின்­றன. அவைகள் தனித்­து­வ­மா­னவை.  தனித்­தன்மை கொண்­ட­வை­யா­கவும் அமைந்­தி­ருக்­கின்­றன.

போர்க்­குற்­றங்கள் சுமத்­தப்­பட்டு, நீதி விசா­ரணை கோரப்­பட்ட நிலையில் ஜனா­தி­பதி தேர்­தலில் குற்றம் சுமத்­தப்­பட்­ட­வரே மிகப் பெரும்­பான்மை பலத்­துடன் ஜனா­தி­ப­தி­யாகத் தெரிவு செய்­யப்­பட்­டுள்ள ஒரு பின்­ன­ணியில் இந்த மாவீரர் தின நிகழ்வு உணர்வு பூர்­வ­மா­கவும், அர­சியல் முக்­கி­யத்­துவம் மிக்­க­தா­கவும் நடந்­தே­றி­யுள்­ளது.

பி.மாணிக்­க­வா­சகம்

Link to comment
Share on other sites

மாவீரர் நாள் ; உறுதிப்படுத்தப்பட்ட உரிமை

அழுத்­தங்கள், கெடு­பி­டிகள் இருந்த போதும், வடக்கு, கிழக்கில் மாவீரர் நாள் நிகழ்­வுகள், பெரும்­பாலும் தடை­யின்றி நடந்­தே­றி­யி­ருக்­கின்­றன.

ஆட்சி மாற்­றத்­துக்குப் பின்னர், கேள்­விக்­கு­றி­யாக இருந்த பல  விட­யங்­களில், மாவீரர் நாள் நிகழ்­வு­க­ளுக்கு அனு­மதி அளிக்­கப்­ப­டுமா என்­பதும், ஒன்று.

மாவீரர்களை நினைவுகூர அனுமதிக்கப்பட்டதால் எங்கும் சட்டம் ஒழுங்கு மீறப்படவோ, வன்முறைகள் நிகழவோ இல்லை. அதிகபட்சம் ஒரு மணி நேரம்  அமைதியான நினைவு கூரலுடன் மக்கள் கலைந்து செல்கின்றனர்.

இவ்வாறான நிலையில், மாவீரர் நினைவுகூரல் போன்ற தமிழ் மக்களின் உணர்வுகளையும் மதிக்கின்ற வகையில் அவர்களையும் அனுசரித்துச் செல்வது, நிலையான அமைதியை ஏற்படுத்தும் அதன் இலக்கை இன்னும் இலகுபடுத்தும் என்பதில் சந்தேகமில்லை.

- சுபத்ரா

https://www.virakesari.lk/article/70229

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • KKR vs PBKS: பேர்ஸ்டோ விஸ்வரூபம், வெலவெலத்துப் போன கொல்கத்தா - பஞ்சாபின் வரலாற்று சேஸிங் பட மூலாதாரம்,SPORTZPICS கட்டுரை தகவல் எழுதியவர், போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் 2024 ஐபிஎல் சீசனில் ஒரு அணி 250 ரன்களுக்கு மேல் அடித்தாலும் அது பாதுகாப்பில்லாத ஸ்கோர் என்பது நேற்றைய பஞ்சாப் - கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் தெரிந்துவிட்டது. 'என்ன அடி... என்ன மாதிரியான ஷாட்கள்...' என்று ரசிகர்களைப் பிரமிக்க வைத்த ஆட்டம் நேற்று நடந்தது. களத்தில் நீயா-நானா பார்த்துவிடலாம் என்ற ரீதியில் கொல்கத்தா அணி வீரர்களும், பஞ்சாப் வீரர்களும் மோதினர். இரு அணி பேட்டர்களின் பேட்டில் இருந்து சிக்ஸர்களும், பவுண்டரிகளும் பறந்தவாறு இருந்தன. கொல்கத்தாவில் நேற்று நடந்த இந்த ஆட்டத்தில் மட்டும் 37 பவுண்டரிகள், 42 சிக்ஸர்கள், 523 ரன்கள் சேர்க்கப்பட்டன. ஏறக்குறைய 10 ஓவர்களை ரசிகர்கள் வானத்தைப் பார்த்தவாறு அமர்ந்திருந்திருக்கும் அளவுக்கு பந்துகள் சிக்ஸருக்கும், பவுண்டரிக்கும் பறந்தவாறு இருந்தன. இதுவரை ஐபிஎல் டி20 தொடரில், டி20 போட்டிகளில் சேஸிங் செய்ய முடியாத ஸ்கோரை அடைந்து, பஞ்சாப் கிங்ஸ் அணி புதிய வரலாறு படைத்துள்ளது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 42வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது பஞ்சாப் கிங்ஸ். முதலில் பேட் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 261 ரன்கள் சேர்த்தது. 262 ரன்கள் என்னும் கடின இலக்கைத் துரத்திய பஞ்சாப் கிங்ஸ் அணி 2 விக்கெட் இழப்புக்கு 262 ரன்கள் சேர்த்து, 8 விக்கெட் வித்தியாசத்தில் 8 பந்துகள் மீதமிருக்கையில் வென்றது.   வரலாற்று சேஸிங் பட மூலாதாரம்,SPORTZPICS ஐபிஎல் டி20 போட்டியில், உலக டி20 வரலாற்றில் இதுவரை எந்த அணியும் 261 ரன்களை சேஸிங் செய்தது இல்லை. ஆனால், அதையும் 8 பந்துகள் மீதமிருக்கும்போது சேஸிங் செய்து பஞ்சாப் கிங்ஸ் டி20 கிரிக்கெட்டிலும், ஐபிஎல் டி20 லீக்கிலும் புதிய வரலாற்றையும், சாதனையையும் படைத்துள்ளது. கொல்கத்தா அணி 6 விக்கெட்டுகளை இழந்து சேர்த்த ஸ்கோரை பஞ்சாப் அணி 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து சேஸிங் செய்து சவால்விட்டது. பஞ்சாப் கிங்ஸ் பேட்டர்கள் பேர்ஸ்டோ, சஷாங் இருவரும் நேற்று இருந்த ஃபார்முக்கு 285 ரன்களைக்கூட சேஸிங் செய்திருப்பார்கள். இருவரும் மதம்பிடித்த யானை போல் பேட்டால் கொல்கத்தா பந்துவீச்சாளர்களை வதம் செய்தனர். சவாலாக மாறும் பஞ்சாப் இந்த வெற்றியால் பஞ்சாப் கிங்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் பெரிதாக முன்னேற்றம் ஏதும் அடையவில்லை என்றாலும், பஞ்சாப் கிங்ஸ் அணியின் வெற்றி, மற்ற அணிகளுக்கு அச்சத்தைத் தரும். அடுத்து வரும் போட்டிகளில் பஞ்சாப் அணி தொடர் வெற்றி பெற்றால், ப்ளே ஆஃப் சுற்று இன்னும் கடும் போட்டி நிறைந்ததாக மாறிவிடும். பஞ்சாப் கிங்ஸ் அணி வெற்றியால் 9 போட்டிகளில் 3 வெற்றி, 6 தோல்வி என 6 புள்ளிகளுடன் 8வது இடத்தில் இருக்கிறது. நிகர ரன்ரேட் மைனஸ் 0.187 என்ற ரீதியில் இருக்கிறது. அடுத்தடுத்த போட்டிகளில் பஞ்சாப் அணி பெறும் வெற்றி, புள்ளிப் பட்டியலில் பெரிய மாற்றத்தைக் கொண்டு வரக்கூடும். கொல்கத்தா அணி இந்தத் தோல்வியால் 2வது இடத்திலிருந்து சரியவில்லை. ஆனால் அந்த அணியின் நிகர ரன்ரேட் சரிந்துவிட்டது. இதற்கு முன் ஒரு புள்ளிக்கு மேல் நிகர ரன்ரேட் வைத்திருந்த கொல்கத்தா இந்தத் தோல்வியால் 0.972 ஆகக் குறைந்துவிட்டது. கொல்கத்தா அணி 8 போட்டிகளில் 5 வெற்றி, 3 தோல்வி என 10 புள்ளிகளுடன் 2வது இடத்தில் நீடிக்கிறது.   பேர்ஸ்டோ விஸ்வரூபம் பட மூலாதாரம்,SPORTZPICS பஞ்சாப் கிங்ஸ் அணி இதுவரை சந்தித்த 9 போட்டிகளிலும் பேர்ஸ்டோ ஒரு போட்டியில்கூட அரைசதம் அடிக்காமல் இருந்ததால், இந்த சீசன் அவருக்கு மோசமாக அமைந்துவிட்டதாக விமர்சனங்கள் எழுந்தன. ஆனால், நேற்று நிதானமாகத் தொடங்கிய பேர்ஸ்டோ, அதன்பின் கோடை இடி முழக்கம்போல் அடிக்கத் தொடங்கினார். பேர்ஸ்டோ பேட்டிலிருந்து தெறித்த பந்துகள் பெரும்பாலும் சிக்ஸர்களாகவும், பவுண்டரிகளாகவும் பறந்தன. மிரட்டலாக பேட் செய்த பேர்ஸ்டோ 45 பந்துகளில் சதம் அடித்து, 108 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்து ஆட்டநாயகன் விருது வென்றார். பேர்ஸ்டோ கணக்கில் மட்டும் 9 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகள் அடங்கும். ஐபிஎல் டி20 தொடரில் பேர்ஸ்டோ அடித்த 2வது சதம் இது. மூன்று பார்ட்னர்ஷிப்பில் முடிந்த ஆட்டம் அதேபோல பேர்ஸ்டோவுக்கு நெம்புகோலாக இருந்தது தொடக்க பேட்டர் பிரப்சிம்ரன் சிங். இவரின் அதிரடி ஆட்டத்தால் உற்சாகம் பெற்ற பேர்ஸ்டோ வெளுத்து வாங்கத் தொடங்கினார். பிரப்சிம்ரன் சிங் 20 பந்துகளில் 54 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இவரின் கணக்கில் 5 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகள் அடங்கும். அதேபோல சஷாங் சிங் 28 பந்துகளில் 68 ரன்கள் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இவரின் கணக்கில் 8 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள் அடங்கும். ஐபிஎல் ஏலத்தில் தவறிப்போய் வேறு சஷாங் சிங்கை எடுத்துவிட்டோமே என்று கவலைப்பட்ட பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு, தற்போது சஷாங் சிங் பெரிய சொத்தாக, முத்தாக மாறிவிட்டார். இந்த 3 பேட்டர்களும் சேர்ந்துதான் கொல்கத்தா அணி சேர்த்த இமாலய ஸ்கோரை எளிதாக சேஸிங் செய்து வெற்றி பெற்றனர். பிரப்சிம்ரன் சிங்-பேர்ஸ்டோ ஜோடி முதல் விக்கெட்டுக்கு 93 ரன்கள் பார்ட்னர்ஷிப், ரூஸோ-பேர்ஸ்டோ 2வது விக்கெட்டுக்கு 85 ரன்கள் பார்ட்னர்ஷிப், சஷாங் சிங்-பேர்ஸ்டோ 3வது விக்கெட்டுக்கு 84 ரன்கள் பார்ட்னர்ஷிப் என மொத்தமே 3 பார்ட்னர்ஷிப்பில் ஆட்டத்தை முடித்துவிட்டனர்.   நேற்றைய ஆட்டத்தில் படைக்கப்பட்ட சாதனைகள் பட மூலாதாரம்,SPORTZPICS கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் கொல்கத்தா அணிக்கு எதிராக 262 ரன்களை பஞ்சாப் கிங்ஸ் சேஸிங் செய்தது டி20 வரலாற்றிலும், ஐபிஎல் டி20 வரலாற்றில் மிக அதிகபட்சம். இதற்கு முன் டி20 கிரிக்கெட்டில் 259 ரன்களை தென் ஆப்பிரிக்கா சேஸிங் செய்ததே அதிகபட்சமாக இருந்தது. ஐபிஎல் தொடரில் 224 ரன்களை ராஜஸ்தான் ராயல்ஸ் சேஸிங் செய்ததுதான் அதிகபட்சமாக இருந்தது, அந்த ரன்களைவிட 38 ரன்கள் கூடுதலாக சேஸிங் செய்துள்ளது. இந்த ஆட்டத்தில் மட்டும் 42 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டன. டி20 போட்டிகளில் அடிக்கப்பட்ட அதிகபட்ச சிக்ஸர்கள் இதுவாகும். இதற்கு முன் கடந்த மாதம் மும்பை-சன்ரைசர்ஸ் அணிகளுக்கு இடையேயும், கடந்த வாரம் ஆர்சிபி, சன்ரைசர்ஸ் இடையே 38 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டதுதான் அதிகபட்சமாக இருந்தது. அது நேற்றைய ஆட்டத்தில் முறியடிக்கப்பட்டது. சேஸிங்கில் பஞ்சாப் கிங்ஸ் அணி 24 சிக்ஸர்களை நேற்று விளாசியது. இது டி20 கிரிக்கெட்டில் ஒரு அணி அடித்த 2வது அதிகபட்ச சிக்ஸர்களாகும். ஐபிஎல் வரலாற்றில் சேஸிங் செய்யும் அணி அடித்த அதிகபட்ச சிக்ஸர்கள் என்ற பெருமையை பஞ்சாப் பெற்றது. இதற்கு முன் ஆர்சிபி, டெல்லி கேபிடல்ஸுக்கு எதிராக சன்ரைசர்ஸ் 22 சிக்ஸர்கள் அடித்ததே அதிகபட்சமாக இருந்தது. இந்த ஆட்டத்தில் மட்டும் 523 ரன்கள் சேர்க்கப்பட்டன. இதன் மூலம் டி20 போட்டிகளில் இரு அணிகள் சேர்ந்து சேர்க்கப்பட்ட 2வது அதிகபட்ச ஸ்கோர் இது. கடந்த வாரம் ஆர்சிபி, சன்ரைசர்ஸ் அணிகள் சேர்ந்து 549 ரன்கள் சேர்த்தன. கொல்கத்தா, பஞ்சாப் அணிகளில் 4 தொடக்க ஆட்டக்காரர்கள் பில்சால்ட்(75), சுனில் நரேன்(71), பிரப்சிம்ரன் சிங்(54), ஜானி பேர்ஸ்டோ(108) ஆகியோர் அரைசதம் அடித்தனர். ஐபிஎல் வரலாற்றில் இரு அணிகளின் தொடக்க ஆட்டக்காரர்கள் 50 ரன்களுக்கு மேல் குவித்தது இதுதான் முதல்முறை. டி20 போட்டியில் இது 11வது முறை. 4 தொடக்க ஆட்டக்காரர்களும் சேர்ந்து 308 ரன்கள் சேர்க்கப்பட்டது ஐபிஎல் வரலாற்றில் முதல்முறை. இந்த ஆட்டத்தில் 5 பேட்டர்கள் 200 ஸ்ட்ரைக் ரேட்டுக்கு மேல் வைத்து அரைசதம் அடித்ததும் ஐபிஎல் வரலாற்றில் முதல்முறை. சால்ட்(25பந்துகள்), நரைன்(23பந்துகள்), பிரப்சிம்ரன்(18), பேர்ஸ்டோ(23), சஷாங் சிங்(23) ஆகியோர் குறைந்த பந்துகளில் அரைசதம் அடித்து ஸ்ட்ரைக் ரேட்டை 200க்கு மேல் வைத்திருந்தனர். டி20 போட்டிகளில் 200க்கும் மேற்பட்ட ரன்களை பஞ்சாப் கிங்ஸ் அணி 7வது முறையாக வெற்றிகரமாக சேஸிங் செய்துள்ளது. இதுதான் டி20 போட்டிகளில் ஒரு அணியின் அதிகபட்ச சேஸிங். மும்பை இந்தியன்ஸ், இந்தியா, ஆஸ்திரலேியா, குவெட்டா கிளாடியேட்டர்ஸ் ஆகிய அணிகள் 5 முறை மட்டுமே 200 ரன்களுக்கு மேல் சேஸிங் செய்துள்ளன.   பந்துவீச்சாளர்கள் பாவம் பட மூலாதாரம்,SPORTZPICS கொல்கத்தா ஈடன் கார்டன் போன்ற பேட்டர்களுக்காகவே வடிவமைக்கப்பட்ட, சொர்க்கபுரி ஆடுகளத்தில் பந்துவீச்சாளர்கள் நிலைமை படுமோசமாகும். இந்த ஆட்டத்தில் இரு அணிகளைச் சேர்ந்த பந்துவீச்சாளர்களும் துவைத்து எடுக்கப்பட்டனர். இரு அணிகளிலும் சுனில் நரைன், ராகுல் சாஹர் இருவர்தான் ஒற்றை இலக்கத்தில் ரன்ரேட்டை வைத்திருந்தனர். மற்ற வகையில் இரு அணிகளின் அனைத்து பந்துவீச்சாளர்களும் ஓவருக்கு சராசரியாக 15 ரன்களை வாரி வழங்கினர். இதுபோன்ற பேட்டர்களுக்கு மட்டும் சாதகமான ஆடுகளத்தில் பந்துவீச்சாளர்கள் நிராயுதபாணியாக மாற்றப்படுகிறார்கள். குறிப்பாக ரஸல், ரபாடா, அங்குல் ராய், சாம்கரன், ஹர்சல் படேல், வருண், ஹர்சித் ராணா, சமீரா ஆகியோர் வீசிய ஒவ்வொரு ஓவரிலும் சராசரியாக 17 ரன்கள் விளாசப்பட்டன. டி20 போட்டி "ரசிகர்களின் ரசிப்புத்தன்மையை அதிகப்படுத்துவதற்காக சிக்ஸர்கள், பவுண்டரிகள் அதிகம் கிடைக்க வேண்டும் என்பதற்காக பேட்டர்களுக்கு மட்டும் உதவும் விக்கெட்டாக மாற்றுவது ஆட்டத்தை ஒருதரப்பாகவே கொண்டு செல்லும். இதில் பந்துவீச்சாளர்களின் பணி, அவர்களுக்கான அறம், மரியாதை அறவே இல்லாமல் போகும்," என்ற விமர்சனம் ஒருபுறம் இதனால் முன்வைக்கப்படுகிறது. பேட்டர்களுக்கும், பந்துவீச்சாளர்களுக்கும் சமவாய்ப்பு வழங்கும் விதத்தில் ஆடுகளம் அமைக்கப்பட்டால்தான் ஆட்டம் சுவாரஸ்யமாகச் செல்லும். பேட்டர்களுக்கான விக்கெட்டாக மாற்றப்படும்போது, பந்துவீச்சாளர்கள் நம்பிக்கை உடைக்கப்படும், பந்துவீச்சாளர்கள் நம்பிக்கை இழந்து அடுத்தடுத்த போட்டிகளில் அவர்களின் திறமை பாதிக்கப்படும். எதிர்காலத்தில் இளம் தலைமுறைகள்கூட பேட்டர்களாக மாற விரும்புவார்களே தவிர பந்துவீச்சாளர்கள் மீது வெறுப்பு உண்டாகிவிடும். இதுபோன்ற பேட்டர்களுக்கான விக்கெட் என்பது வீடியோ கேம் பார்த்த உணர்வுதான் ரசிகர்களுக்கு ஏற்படும்.   கொல்கத்தா என்ன செய்யப் போகிறது? பட மூலாதாரம்,SPORTZPICS கொல்கத்தா அணியில் தொடக்க ஆட்டக்காரர்ள் பில்சால்ட்(75), சுனில் நரேன்(71) இருவரும் அருமையான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்து 138 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அடுத்து வந்த பேட்டர்கள் வெங்கடேஷ் (39), ரஸல்(24), ஸ்ரேயாஸ்(28) என கேமியோ ஆடி உயிரைக் கொடுத்து 261 ரன்கள் சேர்த்தனர். பெரும்பாலும், 120 பந்துகளைக் கொண்ட டி20 போட்டியில் 262 ரன்களை சேஸிங் செய்வது என்பது மிகக்கடினமானது என்று பார்க்கப்பட்டது. 261 ரன்களை அடித்துவிட்டோம் வெற்றி உறுதி என்ற மனநிலையுடன் இருந்த கொல்கத்தா அணிக்கு நேற்றைய சேஸிங் சம்மட்டி அடியாக இறங்கியுள்ளது. 261 ரன்கள் என்பதே மிகப்பெரிய ஸ்கோர் இதையே சேஸிங் செய்துவிட்டதால், எந்த ஸ்கோர் பாதுகாப்பானது என ஆய்வு செய்ய வேண்டிய நிலையில் இருக்கிறது. அது மட்டுமல்லாமல் 160 ரன்கள் அடித்து ஐபிஎல் தொடரில் டிபெண்ட் செய்யும் அணிகள் இருக்கும் நிலையில் 261 ரன்கள் சேர்த்தும் கொல்கத்தா அணியால் டிபெண்ட் செய்ய முடியவில்லை என்பது அந்த அணியின் பந்துவீச்சு மீதும், திறன் மீது பெரிய கேள்வியை எழுப்புகிறது. பஞ்சாப் அணியை 261 ரன்களை சேஸிங் செய்ய அனுமதித்த பந்துவீச்சாளர்கள் மீது குறை சொல்வதா, அல்லது பேட்டர்களுக்கான விக்கெட்டாக மாற்றியதைக் குறை சொல்வதா என ஆய்வு செய்ய வேண்டிய நிலையில் கொல்கத்தா நிர்வாகம் இருக்கிறது. ஆனால், 261 ரன்களைக்கூட டிபெண்ட் செய்ய முடியாவிட்டால், நிச்சயமாக பந்துவீச்சில் பெரிய சிக்கல் ஏதோ இருக்கிறது என்பது மட்டும் தெரிகிறது. இந்த ஆட்டத்தில் பஞ்சாப் பேட்டர்களை சிந்திக்க வைக்கும் அளவுக்கு, நெருக்கடி தரும் அளவுக்கு கொல்கத்தா பந்துவீச்சு இல்லை என்பதுதான் நிதர்சனம். இரு ஓவர்களில் நெருக்கடியாக பந்துவீசியிருந்தால் ஆட்டம் மாறியிருக்கும். இந்த ஆட்டத்தில் கொல்கத்தா அணியின் வேகப்பந்துவீச்சாளர்கள் ஒருவர்கூட யார்க்கர் வீசவில்லை, ஸ்லோபால் பவுன்ஸர், ஷார்ட்பால் அதிகம் வீசவில்லை. பந்துவீச்சில் வேரியேஷன் என்பதே பெரிதாக இல்லாமல் பேட்டர்களின் பேட்டை நோக்கியே பந்து வீசப்பட்டது பேட்டர்களின் பணியை இன்னும் எளிதாக்கியது. ஆதலால், கொல்கத்தா அணி நிர்வாகம் பந்துவீச்சு குறித்து ஆய்வு செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.   ‘அறியப்படாத ஹீரோ’ சஷாங் சிங் பட மூலாதாரம்,SPORTZPICS சஷாங் சிங், அஷுடோஷ் சர்மா இருவரும் இந்த சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்குக் கிடைத்த இரு சொத்துகள் என்று கூறலாம். பஞ்சாப் அணி கடந்த சில போட்டிகளில் வெற்றிவரை வந்து தோல்வி அடைந்த ஆட்டங்களில் ஆட்டத்தை ஒற்றை பேட்டராக இழுத்து வந்தவர் சஷாங் சிங். ஐபிஎல் ஏலத்தில் கொல்கத்தாவை சேர்ந்த சஷாங் சிங்கை வாங்குவதற்குப் பதிலாக இந்த சஷாங் சிங்கை ரூ.20 லட்சத்துக்கு வாங்கிவிட்டோமே என்ற கவலையில் இருந்தது. ஆனால், சஷாங் சிங் ஆட்டம் என்பது அவரின் விலையான ரூ.20 லட்சத்துக்கும் அதிகமானது என்பதை பஞ்சாப் கிங்ஸ் நிர்வாகம் புரிந்து கொண்டுள்ளது. பிகாரை சேர்ந்த சஷாங் சிங், சத்தீஸ்கர், மும்பை, புதுச்சேரி அணிகளுக்குக்கூட ரஞ்சி கோப்பையில் விளையாடியுள்ளார். தனது திறமையை அங்கீகரிக்க ஒரு ஆட்டம் கிடைக்காதா என்று ஏங்கியவர் சஷாங் சிங். மும்பை, சத்தீஸ்கர் கிரிக்கெட் வட்டாரங்கள் அறிந்திருந்த சஷாங் சிங்கை இந்தியா முழுவதும் யாரும் இதற்கு முன் அறியவில்லை. ஆனால் கடந்த சில போட்டிகளாக சஷாங் சிங் அடிக்கும் அடி, ஆட்டத்தின் திறமை, உலக கிரிக்கெட்டை திரும்பப் பார்க்க வைத்துள்ளது. டி20 உலகக் கோப்பையில் மேற்கிந்தியத் தீவுகளுக்காக விளையாட முடியுமா என்று கேட்கும் அளவுக்கு சஷாங் சிங் ஆட்டம் பேசப்பட்டு வருகிறது. பட மூலாதாரம்,SPORTZPICS பஞ்சாப் அணியில் வழக்கமாக 6வது வரிசையில் களமிறங்கும் சஷாங் சிங், நேற்று முதல்முறையாக 4வது வீரராகக் களமிறங்கினார். களமிறங்கி 3 பந்துகளைச் சந்தித்த நிலையில் வருண் பந்தவீச்சில் சஷாங் சிக்ஸர் பறக்கவிட்டார். ஒரு கட்டத்தில் பஞ்சாப் அணி வெற்றி என்பது சவாலாக இருந்த நிலையில் சஷாங் சிங் களமிறங்கிய பின் அது இலகுவானது. சமீரா ஓவரில் ஸ்வாட், ஸ்கூப், புல் ஷாட் என 3 விதங்களில் சஷாங் சிங் சிக்ஸர் விளாசி, வெற்றியை எளிதாக்கினார். அது மட்டுமல்லாமல் ஹர்சித் ராணா, ராமன்தீப் ஓவரிலும் சிக்ஸர்களை வெளுத்து வாங்கினார் சஷாங் சிங். 23 பந்துகளில் அரைசதத்தை சஷாங் அடைந்து 68 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இவரின் கணக்கில் மட்டும் 8 சிக்ஸர்கள் அடங்கும். பேஸ்பால் ஆட்டமா? பஞ்சாப் சிங்ஸ் கேப்டன் சாம் கரன் வெற்றிக்குப் பின் கூறுகையில், “இந்த வெற்றி மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது, முக்கியமானவெற்றி. கிரிக்கெட் பேஸ்பாலாக மாறிவிட்டதா என எனக்குத் தோன்றியது. கடந்த சில போட்டிகளில் வெற்றிவரை வந்து தவறவிட்டது கடினமாக இருந்தது. நாங்கள் ஸ்கோரை பார்க்கவில்லை, வெற்றியை மட்டும்தான் பார்த்தோம். பேர்ஸ்டோ மீண்டும் ஃபார்முக்கு வந்திருப்பது அருமை. இந்த சீசனில் நாங்கள் கண்டறிந்த சிறந்த வீரர் சஷாங் சிங். அவருக்கான பணியை இன்றும் சிறப்பாகச் செய்தார். கொல்கத்தாவில் கிடைத்த பெரிய வெற்றியை நாங்கள் ரசிக்கிறோம்,” என்று தெரிவித்தார். https://www.bbc.com/tamil/articles/ckdq2ygdqpdo
    • இலங்கை சனாதிபதி தேர்தலுக்கும், இந்தியா தேர்தலுக்கும் வித்தியாசமிருக்கிறது. இந்தியா தேர்தலில் ஒருவருக்கே வாக்களிக்க முடியும். இலங்கை சனாதிபதி தேர்தலில் ஒருவருக்கு மட்டும் அல்லது 1,2,3 விருப்ப வாக்குகள் வாக்களிக்கலாம். 50% வித வாக்குக்கு மேல் ஒருவருக்கும் வாக்குகள் கிடைக்காத பட்சத்தில்  இறுதியாக வந்தவரை நீக்கிவிட்டு அவருக்கு வாக்களித்தவர்களின் 2 வது வாக்குகள்  சேர்க்கப்படும். 50% இன்னும் வராவிட்டால் இரூப்பவர்களில் கடைசியாக இருப்பரை நீக்கிவிட்டு அவருக்கு வாக்களித்தவர்களின் 2 வது வாக்குகளை சேர்த்து பார்ப்பார்கள். இப்படியே கடைசியாக மிஞ்சும் இருவரில் 50% க்கு மேல் வருபவர் தெரிவு செய்யப்படுவார். ஆனால் இதுவரை நடந்த தேர்தல்களில் முதலாவது வாக்குகலிலேயே வேட்பாளர் ஒருவர் 50%க்கு வாக்குகளை பெற்று ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டிருக்கிறார். இலங்கையில்  பலர் இம்முறையை கண்டு கொள்வதில்லை. சிவாஜிலிங்கத்துக்கு முதல் வாக்குகளையும் இரண்டாவது மூன்றாவது வாக்குகளில் பொன்சேகாவுக்கும் வாக்களித்திருக்கலாம். அவுஸ்திரேலியா தேர்தல்களிலும் 1,2,3,4 என்று வாக்களிக்கலாம். ஆனால் இங்கு பல தமிழர்கள் தொழில்கட்சிஅல்லது லிபரல் கட்சிக்கே முதலாவது வாக்காகவாக்களிக்கிறார்கள்.  ஆனால் நான் 2009 இல் எமக்காக அதிகளவு குரல் குடுத்த பசுமைக்கட்சிக்கே முதலாவது வாக்கை வழங்கி 2 வதாக பெரிய கட்சியான லிபரல் அல்லது தொழில்கட்சிக்கு வாக்களிப்பதுண்டு.
    • இதுவரை போட்டியில் கலந்துகொண்டவர்கள்  1) goshan_che 2)பாலபத்ர ஓணாண்டி 3)புரட்சிகர தமிழ்த்தேசியன் 4)சுவி 5)நிழலி 6)கிருபன் 7)ஈழப்பிரியன் 8)தமிழ்சிறி 9)கந்தையா57 10)வாத்தியார்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.