Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒரே பாதை என்ற திட்டத்தை இலங்கையில் நடைமுறைப்படுத்த சீனா எதிர்பார்ப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஒரே பாதை என்ற திட்டத்தை இலங்கையில் நடைமுறைப்படுத்த சீனா எதிர்பார்ப்பு

 In இலங்கை      November 19, 2019 4:56 am GMT      0 Comments      1082      by : Dhackshala

china-sri-lanka-flags.jpg

சீன நாட்டின் ஜனாதிபதி ஷி – ஜின்பிங் இலங்கையின் புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

புதிய ஜனாதிபதியுடன் இணைந்து இரண்டு நாடுகளுக்கிடையேயான நடைமுறையான உடன்படிக்கைகள் மூலம் சிறந்த பெறுபேற்றை பெற்றுகொள்ள எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் சீனாவின் ஒரே நோக்கம், ஒரே பாதை என்ற உயர்ரக செயற்திட்டத்தை இலங்கையில் நடைமுறைப்படுத்த எதிர்பார்த்துள்ளதாகவும் சீன ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

http://athavannews.com/ஒரே-நோக்கம்-ஒரே-பாதை-என்ற/

  • Replies 133
  • Views 11.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

சமீபத்தில், வேறு திரிகளில், சீனா பல்வேறு துறைகளில், விடயங்களில் இருந்து, கிந்தியாவின்சிங்களத்தின் மீதான அழுங்கு  பிடியால், வெளியேற்றப்ட்டிருப்பதாக சொல்லி இருந்தேன்.

சீனாவின் இந்த உத்தியோக பூர்வ அறிக்கையில் இருந்து, அதன் யதார்த்தத்தை உய்த்தறியலாம். 

35 minutes ago, Kadancha said:

சமீபத்தில், வேறு திரிகளில், சீனா பல்வேறு துறைகளில், விடயங்களில் இருந்து, கிந்தியாவின்சிங்களத்தின் மீதான அழுங்கு  பிடியால், வெளியேற்றப்ட்டிருப்பதாக சொல்லி இருந்தேன்.

சீனாவின் இந்த உத்தியோக பூர்வ அறிக்கையில் இருந்து, அதன் யதார்த்தத்தை உய்த்தறியலாம். 

சமீபத்தில் தான் கொழும்பு துறைமுக நகரத்தின் ஒரு பகுதியை சீன நிறுவனத்துக்கு 99 வருட குத்தகைக்கு கொடுத்தார்கள். 😀

சீனா அமெரிக்க சார்பு கோத்தபாய ஜனாதிபதியாக வந்துள்ளதால் கருத்து தெரிவித்துள்ளது. அவ்வளவு தான்.

இது முழு அறிக்கை.

EJtE2f4U0AASGls?format=jpg&name=medium

Edited by Lara

7 hours ago, ஏராளன் said:

ஒரே பாதை என்ற திட்டத்தை இலங்கையில் நடைமுறைப்படுத்த சீனா எதிர்பார்ப்பு

திருகோணமலை டு கொழும்புக்கு ஒரே பாதையோ?

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Lara said:

சீனா அமெரிக்க சார்பு கோத்தபாய ஜனாதிபதியாக வந்துள்ளதால் கருத்து தெரிவித்துள்ளது. அவ்வளவு தான்.

இது முழு அறிக்கை.

வேறு, உள் மற்றும் மற்ற வெளியார் தலையீட்டால் பிரச்சனைகள் சீனா - சொறி சிங்களத்திக்கிடையே இருக்கிறது.

அந்த பிரச்னைகள் தெரியாவிட்டாலும், மிகவும் அந்நியோன்னியமான உறவை கொண்ட, சமீபத்தில் port city பேரத்தை முடித்த பின்ணணியில், ஆங்கிலத்தில் நீங்கள் இணைத்த  அறிக்கையை, சுமுகமான உறவின் புரிதலை மட்டும் மனதில் நிறுத்தி, மீண்டும் வாசித்துப் பாருங்கள், ராஜதந்திர மொழி புரிதல் மற்றும்  பிரோயகம் தெரிந்திருந்தால் இன்னும் இலகு . ஆகக் குறைந்தது உறவுகள் திருப்திகரமாக இல்லை என்பதை காட்டும்.      

Edited by Kadancha
add info.

இந்தியாவின் அதிருப்தியையும் மீறி, சீனாவுடன் சிங்களம் 'ஒரே பாதை'யில் பயணிப்பதது தமிழர்களுக்கு நன்மை பயக்கும் என பார்க்கலாம்.

1 hour ago, Kadancha said:

வேறு, உள் மற்றும் மற்ற வெளியார் தலையீட்டால் பிரச்சனைகள் சீனா - சொறி சிங்களத்திக்கிடையே இருக்கிறது.

அந்த பிரச்னைகள் தெரியாவிட்டாலும், மிகவும் அந்நியோன்னியமான உறவை கொண்ட, சமீபத்தில் port city பேரத்தை முடித்த பின்ணணியில், ஆங்கிலத்தில் நீங்கள் இணைத்த  அறிக்கையை, சுமுகமான உறவின் புரிதலை மட்டும் மனதில் நிறுத்தி, மீண்டும் வாசித்துப் பாருங்கள், ராஜதந்திர மொழி புரிதல் மற்றும்  பிரோயகம் தெரிந்திருந்தால் இன்னும் இலகு . ஆகக் குறைந்தது உறவுகள் திருப்திகரமாக இல்லை என்பதை காட்டும்.      

எனக்கு நடப்பது அனைத்தும் தெரியும். உங்களுக்கு தான் சரியாக தெரியாது.

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, Lara said:

எனக்கு நடப்பது அனைத்தும் தெரியும். உங்களுக்கு தான் சரியாக தெரியாது.

வெளியிடப்படும் செய்திகள், அறிக்கைகள்,  அப்படி உங்களுக்கு தெரிந்தும், சீனாவின் அறிக்கை வழமையான வாழ்த்து என்பது உங்கள் புரிதல்.

அப்படியே இருக்கட்டும்.

#1 : தென்கிழக்கு ஆசிய கடல் எல்லையை பொறுத்தவரையிலும் பிரிக்கப்பட முடியாத இறைமை என்னும் அடிப்படையில் சீனாவின் தொடர்ச்சியான ஆதிக்கமே 80% ஆன கடல் பிராந்தியம் சீனாவுக்கு சொந்தமானது

#2: ஐக்கிய அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு அடுத்ததாக பொருளாதார வல்லரசாகவும், ஆசியாவின் இராணுவ வல்லரசாகவும் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபையில் நிரந்தர அங்கத்துவமும் பெற்றது சீனா

#3: இந்தியாவின் விஷயத்தில், சீனா எல்லை பிரச்சினையைத் தீர்ப்பதற்கான அரசியல் அளவுருக்கள் 2005ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடப்பட்ட போதிலும், சீனா தொடர்ச்சியாக தனது எல்லை மீள்நிர்ணயத்தை இந்தியாவின் அருணாச்சல பிரதேசத்தை உள்ளடங்கலாக விரிவுபடுத்தியமையைத் தொடர்ந்து இரண்டு நாடுகளுக்கும் இடையிலான எல்லை தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் முடிவுக்கு வந்திருந்தது

12 minutes ago, Kadancha said:

வெளியிடப்படும் செய்திகள், அறிக்கைகள்,  அப்படி உங்களுக்கு தெரிந்தும், சீனாவின் அறிக்கை வழமையான வாழ்த்து என்பது உங்கள் புரிதல்.

அப்படியே இருக்கட்டும்.

சீனா, அமெரிக்க சார்பு கோத்தபாய ஜனாதிபதியாக வந்துள்ளதால் “Belt and road initiative” பற்றி கருத்து தெரிவித்துள்ளது என்பது நான் கூற வந்தது.

அதை “சீனாவின் வழமையான வாழ்த்து” என நான் புரிந்து கொண்டிருப்பதாக நீங்கள் விளங்கிக் கொண்டால் அதற்கு நான் பொறுப்பல்ல.

  • கருத்துக்கள உறவுகள்

.. இலங்கைய அப்படியே வெட்டி எடுத்து சீனாவுக்கு பக்கத்தில் வைக்கலாம்..☺️

hqdefault.jpg

8 hours ago, Kadancha said:

கிந்தியாவின் சிங்களத்தின் மீதான அழுங்கு  பிடியால்

ஹிந்தியாக்கு அழுக்கு பிடி தானே தெரியும்னு நினைச்சன். அழுங்கு பிடி எப்ப கற்றுக்கொண்டார்கள்?

3 hours ago, Kadancha said:

அந்த பிரச்னைகள் தெரியாவிட்டாலும், மிகவும் அந்நியோன்னியமான உறவை கொண்ட, சமீபத்தில் port city பேரத்தை முடித்த பின்ணணியில், ஆங்கிலத்தில் நீங்கள் இணைத்த  அறிக்கையை, சுமுகமான உறவின் புரிதலை மட்டும் மனதில் நிறுத்தி, மீண்டும் வாசித்துப் பாருங்கள், ராஜதந்திர மொழி புரிதல் மற்றும்  பிரோயகம் தெரிந்திருந்தால் இன்னும் இலகு . ஆகக் குறைந்தது உறவுகள் திருப்திகரமாக இல்லை என்பதை காட்டும்.      

Port City பேரம் 2014 மகிந்த செய்து கொண்ட உடன்படிக்கையிலேயே உள்ளது. 20 ஹெக்டேயரை சீன நிறுவனத்துக்கு உரித்தாகவும் மிகுதியை 99 வருட குத்தகைக்கு கொடுப்பதாகவும். (எதிர்காலத்தில் கொடுப்பது பற்றி)

2016 இல் மைத்திரி சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி 20 ஹெக்டேயரை உரித்தாக வழங்குவதில்லை, முழுவதையும் 99 வருட குத்தகைக்கு வழங்குவதாக முடிவெடுத்தார்கள். இன்னும் சில பரிந்துரைகளும் இடம் பெற்றன. அப்பரிந்துரைகளுக்கமைய இப்பொழுது 269 ஹக்டேயரில் 116 ஹெக்டேயரை சீன நிறுவனத்துக்கு 99 வருட குத்தகைக்கு கொடுத்துள்ளார்கள். இலங்கையிடம் தான் உரித்து உள்ளது.

Port City விடயத்தில் இந்தியா சமீபத்தில் எதையும் சாதிக்கவில்லை.  எனவே சும்மா தொட்டதற்கெல்லாம் Port City ஐ உதாரணமாக காட்டுவதை நிறுத்துங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ampanai said:

இந்தியாவின் அதிருப்தியையும் மீறி, சீனாவுடன் சிங்களம் 'ஒரே பாதை'யில் பயணிப்பதது தமிழர்களுக்கு நன்மை பயக்கும் என பார்க்கலாம்.

இவ்வாறான எதிர்பார்ப்பு  மற்றும்  முயற்சிகளினூடாக  நாம்  அடைந்தது

ஏமாற்றமும் முதுகில்  குத்துதல்களும்

இழப்புக்களுமே....

நான் நினைக்கவில்லை  இனி  தமிழினம்  இதன்பால் நம்பிக்கை  கொள்ளும்  என்று.😥

Edited by விசுகு

2 hours ago, ampanai said:

இந்தியாவின் அதிருப்தியையும் மீறி, சீனாவுடன் சிங்களம் 'ஒரே பாதை'யில் பயணிப்பதது தமிழர்களுக்கு நன்மை பயக்கும் என பார்க்கலாம்.

கோத்தபாயவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் அம்பாந்தோட்டை துறைமுகத்தை 99 வருட குத்தகைக்கு கொடுத்ததை மீள்பரிசீலனை செய்வேன் என கூறியிருந்தார் என வாசித்தேன். 

இது வெறும் தேர்தல் வாக்குறுதியா அல்லது அமெரிக்க ஆதரவு கோத்தபாய அதை செய்வாரா என பார்ப்பம். 🙂

இலங்கை சீனா பக்கம் சென்றாலும் தமிழர்களுக்கு நன்மை எதுவும் கிடைக்காது.

Edited by Lara

12 minutes ago, விசுகு said:

இவ்வாறான எதிர்பார்ப்பு  மற்றும்  முயற்சிகளினூடாக  நாம்  அடைந்தது

ஏமாற்றமும் முதுகில்  குத்துதல்களும்

அழப்புக்களுமே....

நான் நினைக்கவில்லை  இனி  தமிழினம்  இதன்பால் நம்பிக்கை  கொள்ளும்  என்று.😥

நாம் இந்த விடயத்தில் எதை முயற்சித்தோம் என தெரியவில்லை. முயற்சிக்கும் அளவிகிற்கு எம்மிடம் அரசியல் தலைமையும் இல்லை என்றே நம்புகின்றேன்.

ஆனால், எமக்கு சந்தர்ப்பங்கள் கிடைத்தால் அதை அடையக்கூடிய தலைமையை உருவாக்கவேண்டும். 

21 minutes ago, Lara said:

Port City பேரம் 2014 மகிந்த செய்து கொண்ட உடன்படிக்கையிலேயே உள்ளது. 20 ஹெக்டேயரை சீன நிறுவனத்துக்கு உரித்தாகவும் மிகுதியை 99 வருட குத்தகைக்கு கொடுப்பதாகவும். (எதிர்காலத்தில் கொடுப்பது பற்றி)

2016 இல் மைத்திரி சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி 20 ஹெக்டேயரை உரித்தாக வழங்குவதில்லை, முழுவதையும் 99 வருட குத்தகைக்கு வழங்குவதாக முடிவெடுத்தார்கள். இன்னும் சில பரிந்துரைகளும் இடம் பெற்றன. அப்பரிந்துரைகளுக்கமைய இப்பொழுது 269 ஹக்டேயரில் 116 ஹெக்டேயரை சீன நிறுவனத்துக்கு 99 வருட குத்தகைக்கு கொடுத்துள்ளார்கள். இலங்கையிடம் தான் உரித்து உள்ளது.

Port City விடயத்தில் இந்தியா சமீபத்தில் எதையும் சாதிக்கவில்லை.  எனவே சும்மா தொட்டதற்கெல்லாம் Port City ஐ உதாரணமாக காட்டுவதை நிறுத்துங்கள்.

ம்ம்ம். இதான் நடந்தது!

சீன குடுத்த காசை எண்ணின மகிந்தவின் மொட்டுக்கூட்டம் 20 ஹெக்டேயரை சீன அரச நிறுவனத்துக்கு உரித்தாக குடுக்கிறதை பற்றி கவலைப்படலை. ஆனா, சர்வதேச சட்டங்களுக்கு அமைய தீவா உள்ள அந்த 20 ஹெக்டேயரை சார்ந்த 100 கடல் மைல்களுக்கு சீனா உரித்து கொண்டாடும் நிலை உருவாக்கலாம் என்று அமெரிக்கா, யப்பான் பயமுறுத்த சொறிலங்கா விழிச்சு கொண்டு குத்தகைக்கு மட்டுமே கொடுத்திருக்கு. அதுக்கு ஈடாக தெற்கில மேலும் பல நூறு ஏக்கர்களை குத்தகையா சொறிலங்கா சீனாக்கு கொடுத்திருக்கு.

இப்பிடித் தான் நடந்ததாக கேள்விப்பட்டதாக ஞாபகம்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Lara said:

எனவே சும்மா தொட்டதற்கெல்லாம் Port City ஐ உதாரணமாக காட்டுவதை நிறுத்துங்கள்.

நீங்கள் தான் முதலில் port city ஐ மேற்கோள் காட்டி, ஓர் கருத்தை வைத்தீர்கள்.

எனவே, அப்படிப்பட்ட உறவிலும், சீனா திருப்தி இல்லை என்பதை சொல்லவே port city ஐ உதரணமாக எடுத்தேன். 

2 hours ago, Lara said:

Port City விடயத்தில் இந்தியா சமீபத்தில் எதையும் சாதிக்கவில்லை.

அது நீங்கள் அறிந்த வரையிலும்.

2 hours ago, Lara said:

Port City பேரம் 2014 மகிந்த செய்து கொண்ட உடன்படிக்கையிலேயே உள்ளது. 20 ஹெக்டேயரை சீன நிறுவனத்துக்கு உரித்தாகவும் மிகுதியை 99 வருட குத்தகைக்கு கொடுப்பதாகவும். (எதிர்காலத்தில் கொடுப்பது பற்றி)

உடன்படிகைகள், யதார்த்தத்தை தீர்மானிப்பதில்லை. அதுவும், உலகின் 2ம் பொருளாதார வல்லரசோடு, அதுவும் எதிர் காலத்தில் (அந்த நேரத்தில்) மகிந்த குடும்பத்தின் பல (அரச) பேரங்களை வசதிப்படுத்தப்போகும் வல்லரசோடு. மற்றும், அந்த வல்லரசிடம் இருந்து பெறப்பட்ட உத்தியோகபூர்வ கடன்கள் சொறி சிங்களத்தின் இறைமையை முற்றிலுமாக பிடுங்கிய நிலையிலும், காங்கிரஸ் கிந்திய அரசாங்கம் கையகலாத நிலையிலும்.

3 hours ago, Lara said:

சீனா, அமெரிக்க சார்பு கோத்தபாய ஜனாதிபதியாக வந்துள்ளதால்

இதை யார் சொன்னார்கள்? அமெரிக்கா? கோத்தா?

இது உங்களின் தனிப்பட்ட  அனுமானம் மற்றும் கருத்தை,  ஆணித்தரமான தகவலாக சொல்கிறீர்கள்.

சஜித் எவரின் வேட்பாளர்?

ஆகக்  குறைந்தது, ராய்ட்டர்ஸ் பிரசுரித்து இருந்தது, கோத்தா சீன சார்பு வேட்பாளர் என்று.

கோதா தன் வாயாலேயே சொல்லி இருந்தார் சீனாவை வெளியேற்றியது தவறு என்று சாரப்பட. ரம்புக்வெல, மேலே ஓர் படி சென்று சீனாவை மீண்டும் உள் அழைப்போம் என்றும் சொல்லி இருந்தார்.  

இருவரும் அமெரிக்கா வேடர்பாளர்கள் என்று ஓர் கருத்து உலாவியது என்பதுவும் உண்மை.
 
உங்களின் கோத்தா அமெரிக்கா வேட்பாளர் என்பது, ஓர் கறுப்பு-வெள்ளையான கருத்து என்பது எனது கருத்தும், மற்றும் மருதங்கேணியின் கருத்தும்.   

MCC கொடைடையின் ஓர் முக்கியமான நோக்கம் ராஜபக்சேக்களின் கைகளை கட்டுவது, அதன் மூலம் சீனாவின் கைகளை கட்டுவது என்பது உங்களுக்கு தெரியுமா?

தாமரைக் கோபுரம், இன்னும் சொறி சிங்களத்தின் கைகளுக்கு வரவில்லை என்பதும், காரணமும் உங்களுக்கு தெரியுமா?

எனவே, மற்றவர்களின் கருத்தையோ அல்லது அறிந்தது என்று சொல்வதையே மற்ற வாசகர்கள் பார்வைக்கும், துணிபுக்கும் விட்டு விடுங்கள்.

Status Of Force Agreement SOFA The other irritant in US-Lanka relations could be the US anxiety to get Colombo to move forward on the Millennium Challenge Corporation’s projects which have already been approved by the Lankan cabinet. While Gotabaya might take the US$ 480 million MCC project forward by getting it parliamentary approval, he would be most reluctant to sign the Status of Forces Agreement (SOFA), which, in its new avatar, would turn Lanka into a US military base.

But given the American fear that the Chinese might use Hambantota harbor as a naval base sooner or later, exploiting the 99 year lease they enjoy, the Americans are unlikely to give up on SOFA.

மகிந்த ஆட்சி போன்று கோத்தாவும் சீனாவுடன் அதிகரித்த உறவை பேணுவார் என இந்தியாவும் அமெரிக்காவும் எண்ணி காய்களை நகர்த்தவேண்டிய நிலை. 

9 hours ago, Kadancha said:

நீங்கள் தான் முதலில் port city ஐ மேற்கோள் காட்டி, ஓர் கருத்தை வைத்தீர்கள்.

எனவே, அப்படிப்பட்ட உறவிலும், சீனா திருப்தி இல்லை என்பதை சொல்லவே port city ஐ உதரணமாக எடுத்தேன்.

நான் சரியான உதாரணமாக Port City பற்றி சுட்டிக்காட்டினேன்.

நீங்கள் தான் தவறான உதாரணமாக அதை பயன்படுத்தினீர்கள். இந்தியா Port City விடயத்தில் எதையும் சாதிக்கவில்லை.

18 hours ago, Kadancha said:

இதை யார் சொன்னார்கள்? அமெரிக்கா? கோத்தா?

இது உங்களின் தனிப்பட்ட  அனுமானம் மற்றும் கருத்தை,  ஆணித்தரமான தகவலாக சொல்கிறீர்கள்.

சஜித் எவரின் வேட்பாளர்?

ஆகக்  குறைந்தது, ராய்ட்டர்ஸ் பிரசுரித்து இருந்தது, கோத்தா சீன சார்பு வேட்பாளர் என்று.

கோதா தன் வாயாலேயே சொல்லி இருந்தார் சீனாவை வெளியேற்றியது தவறு என்று சாரப்பட. ரம்புக்வெல, மேலே ஓர் படி சென்று சீனாவை மீண்டும் உள் அழைப்போம் என்றும் சொல்லி இருந்தார்.  

இருவரும் அமெரிக்கா வேடர்பாளர்கள் என்று ஓர் கருத்து உலாவியது என்பதுவும் உண்மை.
 
உங்களின் கோத்தா அமெரிக்கா வேட்பாளர் என்பது, ஓர் கறுப்பு-வெள்ளையான கருத்து என்பது எனது கருத்தும், மற்றும் மருதங்கேணியின் கருத்தும்.   

MCC கொடைடையின் ஓர் முக்கியமான நோக்கம் ராஜபக்சேக்களின் கைகளை கட்டுவது, அதன் மூலம் சீனாவின் கைகளை கட்டுவது என்பது உங்களுக்கு தெரியுமா?

தாமரைக் கோபுரம், இன்னும் சொறி சிங்களத்தின் கைகளுக்கு வரவில்லை என்பதும், காரணமும் உங்களுக்கு தெரியுமா?

எனவே, மற்றவர்களின் கருத்தையோ அல்லது அறிந்தது என்று சொல்வதையே மற்ற வாசகர்கள் பார்வைக்கும், துணிபுக்கும் விட்டு விடுங்கள்.

அரசியல் அறிவு என்பது தாமாக வளர்த்துக்கொள்வது. அதை விளங்கிக்கொள்ளக் கூடியவர்களுக்கே விளங்கப்படுத்தலாம்.

உங்களுக்கு விளங்கிக்கொள்ளும் தன்மை இருந்தால் இந்த திரி உங்களுக்கு உதவலாம்.

https://yarl.com/forum3/topic/234083-ஆட்டத்தை-அடியோடு-மாற்றி-விட்ட-214/

கெஹெலிய ரம்புக்வெல தமது அரசு ஆட்சிக்கு வந்தால் அமெரிக்காவுடனான MCC, SOFA உடன்படிக்கைகளை பரிசீலனை செய்து இரு நாட்டுக்கும் நன்மை பயக்குமானால் கையெழுத்திடுவோம் எனவும் கூறினார்.

மகிந்த ஆட்சியின் போது மகிந்த தான் MCC கொடையை தமக்கு தரும்படி அமெரிக்காவை கேட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கோத்தபாய சீனாவை முற்றாக வெளியேற்றுவார் என நான் கூறவில்லை. அமெரிக்காவோ இந்தியாவோ வழங்காத பணத்தை சீனா வழங்கும் போது சீனாவிடம் பணம் வாங்கி அபிவிருத்திகளை செய்வார்கள்.

சீனா ஏற்கனவே உள்ளே தான் உள்ளது. 2015 மைத்திரி ஜனாதிபதியாக வந்ததும் சீன அபிவிருத்திகளை நிறுத்தினார். பின் தானே ஒவ்வொன்றாக முன்னெடுக்க தொடங்கினார். 

தாமரைக் கோபுரம் இன்னும் இலங்கையின் கைகளில் தான் உள்ளது. அபிவிருத்தி முழுமையாகாத நிலையில் அது திறந்து வைக்கப்பட்டது. அபிவிருத்தி தொடர்கிறது. மைத்திரி தாம் கடனை திருப்பி செலுத்திக்கொண்டிருக்கிறோம் என கூறியிருந்தார்.

Edited by Lara

1962 conflict with China significantly damaged India's standing at world stage: S Jaishankar

Nov 14, 2019, 08.35 PM IST

  1. India's position at world stage seemed assured but the 1962 conflict with China significantly damaged the country's standing, External Affairs Minister S Jaishankar said on Thursday.
  2. "If the world is different (today), we need to think, talk and engage accordingly. Falling back is unlikely to help," he said, adding "purposeful pursuit of national interest is shifting global dynamics." 

https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/1962-conflict-with-china-significantly-damaged-indias-standing-at-world-stage-s-jaishankar/articleshow/72059047.cms

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, Lara said:

தாமரைக் கோபுரம் இன்னும் இலங்கையின் கைகளில் தான் உள்ளது.

நன்றி, உங்களுக்கு தாமரை கோபுரம் பற்றிய சீனாவுடனான பிரச்சனைகள்  மற்றும் சொறி சிங்களத்தின் கைகளில் இல்லை தெரியவில்லை என்பதற்கு. அனால், இது சிறிய விடயம், மற்ற விடயங்களோடு ஒப்பிடும் போது. இதுவும், ராஜபக்சே பேரதில் ஒன்று. இது தெரிந்து  இருக்க  வேண்டியதில்லை.

49 minutes ago, Lara said:

அரசியல் அறிவு என்பது தாமாக வளர்த்துக்கொள்வது. அதை விளங்கிக்கொள்ளக் கூடியவர்களுக்கே விளங்கப்படுத்தலாம்.

நீங்கள் அறிவது மற்றும் புரிவது எல்லாமே black-and-white ஆக, செய்திகள் மற்றும் அறிக்கைகளில் உள்ளவற்றை.

கோத்தா இற்கு, pentagon , zionist தொடர்புகள் இருந்தும், கோத்தா தனது மற்றும் ராஜபக்சே நலன்களின் அடிப்படையில் இயங்க வேண்டிய கட்டாய தேவை இருக்கிறது. அதற்கு, சீனாவே வசத்திப்படுத்தக்கூடிய உள்ளக மற்றும் வெளியாக அரச, நிதி, மற்றும் நிர்வாக அதிகாரங்கள், செல்வாக்குகள் மற்றும் கட்டமைப்புகளை கொண்டுள்ளது. இதை அமெரிக்கா செய்ய முடியாது.

அதனால், கோத்தா விரும்பினாலும், அமெரிக்காக விரும்பினாலும், சீனாவே கோத்தாவின் தெரிவு.

கோத்தாவின் மீது அமெரிக்கவிற்கு உள்ள பிடி மனித  உரிமைகள், போர் குற்றங்கள். இதை அமெரிக்கா ஏற்கனவே நினைவு படுத்தி விட்டது.      கோத்த அதிபர் பதவி எடுத்ததில் ஓர் முக்கியமான நோக்கம் அதை வாழ்நாளில் தவிர்பதற்காக. சீன இதை பற்றி ஒன்றுமே கதைக்கவில்லை.

MCC கொடையை மகிந்த கேட்டது, சீனாவின் கடன் சுமையில் இருந்து இடைவெளி பெறும் நோக்கில். அதுவும், மனிதஉரிமை, போர்க்குற்றம் பிரச்சனைகளும், MCC ஐ மகிந்தவிற்கு தடுத்து விட்டது.

இப்போதைய MCC கொடையில், ராபக்சே  குடும்பத்தித்ற்கே பிரச்சனையான விடயம் உள்ளது. காணிச் சந்தையை உருவாக்குதல். ராபக்சே  குடும்பத்தின் நலனில்  இதயத்திலும், மூளையிலும்  கைவைக்கும் விடயம். இது ராஜபக்சேகளின்  கைகளை கட்டி, சீனவின் கைகளை கட்டுவது. சீனாவும் விரும்பாது. காணிச் சந்தை, SOFA இற்கு அவசியம்.

SOFA வில், உள்நாட்டு அரசியல் பிரச்னைகள், சீன தடுக்கின்றமை.    

ஈஸ்டர் தாக்குதல் அமெரிக்கா தான் செய்தது என்று உண்மையில் இருந்தாலும்,  அதை பற்றி சிங்களத்தின் எல்லா அதிகார மையங்களுக்கும் 6 மாததிற்கு முதலே தெரிந்து இருந்தது. எல்லோரும் தத்தம் நன்மை கருதி, கண்டும் காணாமல் இருந்து விட்டதே உண்மை.

உங்களின் புரிதல் எனக்கு தெரியாது, எல்லா western அரசியல், பொருளியல் மற்றும் பாதுகாப்பு வட்டரங்களில்,  கோத்தாவின் வெற்றி சீனாவின் வெற்றியாகவே நோக்கப்படுகிறது.

அரசியல், ரஜதந்திரம், பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு என்பவையம், அவற்றின் ஒன்றோடு ஒன்றிணைந்த நலன்கள்  எவ்வாறு அடையப்படுகிறது என்பதின் அறிவையும் யார் வளர்க்க வேண்டும் என்பதை வாசகர்களிடம் விட்டு விடுகிறேன். 

ஆயினும், நான் அதில் வரும் மாற்றங்கள் பற்றி அறிவை வளர்த்துக்கொண்டு தான் இருக்கிறேன்.

2 hours ago, Lara said:

நான் சரியான உதாரணமாக Port City பற்றி சுட்டிக்காட்டினேன்.

நீங்கள் தான் தவறான உதாரணமாக அதை பயன்படுத்தினீர்கள். இந்தியா Port City விடயத்தில் எதையும் சாதிக்கவில்லை.

ஆனால், நீங்கள் இணைத்த க்ஸி ஜின்பிங் இன் ஆங்கில அறிக்கையில் black-and-white ஆகவே உள்ள சீனாவின் திருப்தி இல்லாமையை புரிந்து கொள்ள முடியாதது, இந்தியா பற்றி ஒன்றுமே சொல்லாமல்,  உங்களுடைய புரிதலுக்கு பின்பு port city உதாரண

நான் சொன்னது, Port City உங்களின் உதாரணம் உங்களுடைய புரிதல் படி இருந்தும், க்ஸி ஜின்பிங் சீனாவின் தற்போதைய அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளார். இந்தியா பற்றி நான் ஒன்றுமே சொல்லவில்லை.  மொத்தத்தில், க்ஸி ஜின்பிங் இன்  அறிக்கை  உங்களுக்கு புரியவில்லை. 

விடுங்கள்.

இந்திய அரசின் port city பற்றிய செல்வாக்கும், ஈடுபடும் உங்களுக்கு தெரிந்து இருக்க வேண்டும் என்று நான் எதிர்பார்க்கவும் இல்லை. அதற்காக, இந்திய அரச செய்தது மற்றும் சாதித்தது இல்லை என்று ஆகி விடாது.

2 hours ago, Kadancha said:

நன்றி, உங்களுக்கு தாமரை கோபுரம் பற்றிய சீனாவுடனான பிரச்சனைகள்  மற்றும் சொறி சிங்களத்தின் கைகளில் இல்லை தெரியவில்லை என்பதற்கு. அனால், இது சிறிய விடயம், மற்ற விடயங்களோடு ஒப்பிடும் போது. இதுவும், ராஜபக்சே பேரதில் ஒன்று. இது தெரிந்து  இருக்க  வேண்டியதில்லை.

தாமரைக்கோபுரம் தொடர்பாக ALIT நிறுவனத்துடன் 2 பில்லியன் ரூபாய் பணம் தொடர்பான பிரச்சினை போய்க்கொண்டிருக்கிறது. மற்றும்படி தாமரைக்கோபுரம் இன்னும் இலங்கையின் கையில் தான் உள்ளது. முதலில் நீங்கள் ஒன்றை இன்னொன்றுடன் சேர்த்து குழப்பிக்கொள்ள வேண்டாம்.

Edited by Lara

  • கருத்துக்கள உறவுகள்

லாரா ,கடன்சா உங்கள் இருவரின் கருத்தாடல்களில் இருந்து நிறைய விடயங்கள் அறியக் கூடியதாக உள்ளது.

இருவருக்கும் நன்றியும் பாராட்டுக்களும்.

தொடர்ந்தும் கருத்தாடுங்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.