Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஹைதராபாத் பாலியல் வல்லுறவு: குற்றம்சாட்டப்பட்ட 4 நபர்கள் போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக் கொலை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

47639-BF9-4-EC1-41-F2-95-B1-CE42-FA6612-

  • Replies 66
  • Views 6.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

விசிலடிச்சான் குஞ்சுகளுக்கு,

இந்தியாவின் என்கவுண்டர் நீதியின் ஒழுக்ககோவை என்ன என்பதை காட்ட இந்த 3 படங்களே போதுமானது.

large.DB65EFCA-E99E-4402-8039-B9FC0F35F88F.jpeg.5b17acecb53542198fd8304b4509524d.jpeglarge.5BB003D5-FEBF-408C-85B9-68E0719CB888.jpeg.c6507411e8359c232764e2c31e02f8f2.jpeglarge.51A64D16-106B-4A10-AB10-5B8D687BF376.jpeg.ff918d54041734ba84f58d94ca5ebdfa.jpeg

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, நிழலி said:

ரதி, இலங்கை, இந்தியா, மற்றும் தென்னாசிய நாடுகளில் இருக்கும் பிரச்சனையே இவர்கள் உண்மையான குற்றவாளிகளை தப்ப வைக்க அப்பாவிகளை மாட்டி விடுவது தான். இங்கும் இவர்கள் நான்கு பேருமே குற்றவாளிகளா அல்லது ஒரு சிலரா என்பது வெகுசனத்துக்கு தெரியப் போவதில்லை.

சுவாதி கொலையில், ராம்குமாரை கைது செய்த பின் அவர் வயரை கடித்து இறந்தார் போன்ற சோடிப்புகள் இங்கும் நிகழ்ந்து இருக்கலாம். ராம்குமாரை ஒரு நாள் கூட நீதிமன்றத்துக்கு கொண்டு வரவில்லை.

இப்படியான உடனடி நீதிகளில் தண்டிக்கப்படும்  அனைவரும் பரம ஏழைகளாக இருக்க டெல்லியில் தலித்  சிறுமியை கோவிலில் வைத்து பல நாட்கள் வல்லுறவு செய்து கொன்றதில் துணை போன பிஜேபி பிரமுகர்கள், வக்கீல்கள் எல்லாம் பிணையில் சுந்தந்திரமாக உலாவிக் கொண்டு இருக்கின்றார்கள். பொள்ளாச்சி வழக்கில் கைதானவர்கள் அரசியல் பின் புலம் இருப்பதால் குண்டாஸ் பிரிவில் இருந்தும் அவ் வழக்கை நீக்கியிருகின்றார்கள்.

இந்திய உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி மீது கூட அவருக்கு உதவியாளராக இருந்த பெண் ஒருவர் பாலியல் வன்முறை குற்றம் ஒன்றை சுமத்தியிருந்தார் (அவர் பிஜேபி யின் செல்வாக்கால் நியமிக்கப்பட்டவர் என்பதால் வழக்கை நிராகரித்து விட்டனர்)

இவ்வாறான என் கவுண்டர்கள் மூலம் இத்தகைய குற்றங்கள் குறையாது. வல்லுறவுக்குள்ளாகும் பெண்களை மேலும் கொன்றழிப்பதில் தான் இனி குற்றவாளிகள் அதிகமாக ஈடுபடுவர்.

இலங்கை,இந்தியாவில் இப்படியான என் கவுண்டர்கள் மூலம் உண்மையான குற்றவாளிகள் தப்பிக்க வாய்ப்பு இருக்குது...நான் இல்லை என்று சொல்லவில்லை. இந்தியாவோட ஒப்பிடுகையில் இலங்கையில் அரசியற் கொலைகளை தவிர இப்படியான கொலைகள் குறைவு 
சுவாதி கொலையின் பின்னணி வேறு அங்கு பாலியல் பலாத்காரம் இடம் பெறவில்லை...அவரது கொலைக்கு பின்னால் மத்திய அரசோ அல்லது அவர் வேலை செய்த ஹதராபாத் கொம்பனி சம்மந்தப்பட்டு இருக்குது என்று சொல்கிறார்கள்...அநியாயமாய் அப்பாவி ராம்குமார் மாட்டுப் பட்டுப் போனார்.
இந்த சம்பவம் பிரியங்காவின் கொலை நடந்து 8 யில் இருந்து 10 நாட்களுக்குள் செய்து முடித்து விட்டார்கள் . .அரசுக்குத் தெரியும் மணித் உரிமை ஆணைக்குழு கட்டாயம் ஆதாரங்கள் கேட்பார்கள் என்று , அதனால் 
ஹை வேயில் நடந்ததால்  கட்டாயம் கமராக்கள் இருக்கும்.[ இதை செய்தவர்களும் போனில் வீடியோ பிடித்து வைத்து உள்ளதாக சொல்கிறார்கள்...அந்த வீடியோவை காட்டுங்கள் என்று கேட்பவர்கள் அதை பார்த்து ,ரசிக்கும் வக்கிர மனம் கொண்டவர்களாய்த் தான் இருப்பார்கள் ...அதை போலீஸ் வெளியில் விட வேண்டிய அவசியமில்லை .]
டிஎன் ஏ ஆதாரம் இந்த 4 பேருடையதும் பொருந்தி போயிருக்கும்.
அதில் இருவர் 17 வயதுக்கு குறைந்தவர்கள்...அதில் ஒருவரது அப்பாவிடம் பிரியங்காவின் கொலை சம்மந்தமாய் கேட்ட போது ,அவனுக்கு 17 வயசு தானே சீக்கிரம் வெளியில் வந்திடுவான் என்று சொல்லி இருக்கிறார்.
நிர்பயாவின் வழக்கிலும் அந்த பெடியன் வெளியில் வந்து சுதந்திரமாய் இருக்கிறான் ....அவர்களுக்கு தாங்கள் செய்த பிழையினை உணர சந்தர்ப்பம் கொடுக்கப்படவில்லை .
பிரியங்கா வழமையாக சுங்க  சாவடிக்கு அண்மையில் தான் வாகனத்தை நிறுத்துவதாகவும் அந்த அன்று அங்கு விட அவர்கள் மறுத்ததாகவும் சொல்லப்படுகின்றது...யார் அவர்கள் ? ஏன் மறுத்தார்கள் என்பது குறித்தும் விசாரிக்க வேண்டும் .
லொறி டிரைவர்கள் கொஞ்ச பேர் தன்னையே பார்த்துக் கொண்டு இருப்பதாக அவ தனது தங்கச்சிக்கு தொலைபேசியில் சொல்லி உள்ளார்.
மோ.சைக்கிளை கொண்டு போன பெடியனைக் காணவில்லை என்று தேடி அடித்து , அவனோடு கதைத்திருக்கிறா.
போலீசிடம் அவர்களது உரையாடலை  இருக்குது.
எனக்கு இவர்கள்  4 பேரும் குற்றவாளிகள் என்பதில் சந்தேகம் இல்லை...ஆனால் இவர்களோடு சேர்ந்து வேறு யாரும் பெருந்தலைகள் இருக்கலாமோ என்ற சந்தேகமும் இருக்கு .
இந்திய அரசியல்வாதிகள் சட்டத்தில் உள்ள ஓட்டைகளை மாற்றாமல்  இருப்பதற்கான காரணமே தாங்கள் தப்பிப்பதற்காகத் தான் .
இந்த என்கவுண்டர் செய்த அதிகாரி நேர்மையானவாய் இருக்கலாம்...கோட் ,கேஸ் என்று போனால் இழுபடும் ...குற்றவாளிகள் வயதை காட்டி தப்பித்து விடுவார்கள் என்பதால் தங்கட மாநில அரசின் உதவியுடன் என் கவுண்டர் செய்திருக்கலாம்.
உண்மை எப்படியும் ஒரு நாள் வெளியில் வரத் தானே வேண்டும் 

  • கருத்துக்கள உறவுகள்

அம்பனை நல்ல தகவல்களை இணைக்கிறார்.

ஆனால் வெளிநாடுகளில் வாழும் தமிழர்களர்களை கவருவது என்ன என்றால் என்கவுண்டர் செய்து பொலீசு நீதியை நிலைநாட்டியிருக்கிறார்கள் என்று நடிகை நயன்தாரா தெரிவித்ததும் பொலீசு என்கவுன்ட்டர் கொலைகள் செய்வதை சட்டப்பூர்வமாக்க வேண்டும் என்று பாஜக பெண் எம்பியின் வேண்டுகோள்

5 minutes ago, விளங்க நினைப்பவன் said:

அம்பனை நல்ல தகவல்களை இணைக்கிறார்.

ஆனால் வெளிநாடுகளில் வாழும் தமிழர்களர்களை கவருவது என்ன என்றால் என்கவுண்டர் செய்து பொலீசு நீதியை நிலைநாட்டியிருக்கிறார்கள் என்று நடிகை நயன்தாரா தெரிவித்ததும் பொலீசு என்கவுன்ட்டர் கொலைகள் செய்வதை சட்டப்பூர்வமாக்க வேண்டும் என்று பாஜக பெண் எம்பியின் வேண்டுகோள்

எனது பார்வையில் வெளிநாடுகளில் வாழும் தமிழர்களர்களில், "என்கவுண்டர் செய்து பொலீசு நீதியை நிலைநாட்டியிருக்கிறார்கள் - நடிகை நயன்தாரா என்பதும் "பொலீசு என்கவுன்ட்டர் கொலைகள் செய்வதை சட்டப்பூர்வமாக்க வேண்டும் - பாஜக பெண் எம்பியின் வேண்டுகோள்" போன்ற செய்திகளுக்கு 'லைக்' போடுவார்கலால் அவை பிரபல்யமாக காண்பிக்கபடுகின்றது. ஆனால், அமைதிகாக்கும் பெரும்பான்மை புலம் பெயர் மக்கள் இவை சலசலப்பு மட்டுமே என்பதில் தெளிவாக உள்ளார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ampanai said:

அமைதிகாக்கும் பெரும்பான்மை புலம் பெயர் மக்கள் இவை சலசலப்பு மட்டுமே என்பதில் தெளிவாக உள்ளார்கள். 

அது தான் அமைதிகாக்கும் பெரும்பான்மை வேண்டும்.

பாலியல், அது சம்பந்தப்பட்ட விழிப்புணர்வு, பாலியல் வன்புணர்வு மற்றும் அது பற்றிய சட்டம் +  விழிப்புணர்வு பற்றிய கல்வி போன்றன இப்படியான வன்முறைகளை குறைக்க உதவும்.

எனவே இது ஒரு சமூக, ஆன்மீக, அரசியல் மற்றும் சட்டம் கலந்த தீர்வாக அமையவேண்டும். தனியாகவே ஒரு அணுகுமுறையால் தீர்வை காணமுடியாது. 

  • கருத்துக்கள உறவுகள்
On 12/6/2019 at 2:10 PM, நிழலி said:

ஆகக் குறைந்தது இரண்டு வருடங்களாவது கடூழிய சிறையில் அடைக்கப்பட்டு 'சிறை நீதி' யை ஏனைய குற்றவாளிகள் மூலம் கொடுக்கப்பட்டு பின் மரண தண்டனை கொடுக்கப்பட்டு இருந்தால் மிகவும் சிறப்பாக இருந்து இருக்கும்.

'சிறை நீதி' குற்றவாளிகள் பலர் தப்புவதற்கும் துணைபோயிருக்கிறது. அந்தக் கொடூரர்களைக் கொன்ற காவல்துறையினரை மக்கள் மலர்தூவி வாழ்த்துவதையும் காணலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

யேர்மனிய தொலைக்காட்சி இப்படிச் சொல்கிறது,

காவல் துறை பல்லாண்டு வாழ்கஎன்று ஆயிரக்கணக்கான ஆண்களும் பெண்களும் பூக்களை அள்ளி வீசி காவல்துறையினரை உற்சாகப்படுத்துகிறார்கள். இத்தனைக்கும் காரணம் சமீபத்தில் ஒரு பெண்ணை வல்லுறவுக்கு உட்படுத்தி  எரித்துக் கொலை செய்த 20 முதல் 26 வயதுக்குட்பட்ட நான்கு ஆண்களை  இந்திய காவல்துறை சுட்டுக் கொன்றதே.

பொலீஸாரிடம் இருந்து துப்பாக்கிகளை எடுத்து அவர்களைத் தாக்க முயற்சித்த போதே தற்காப்புக்காக அந்த நான்கு பேரையும் பொலீஸார் சுட வேண்டி வந்தது என பொலீஸ்தரப்பில் அறிவிக்கப் பட்டுள்ளது. ஆனால் பொலீஸ் சட்டத்தை தங்கள் கையில் எடுத்து தாங்களே நீதி வழங்கியிருக்கிறார்கள் என்றே பலர் நினைக்கிறார்கள்.

"பொலிஸாரின் சில  நடவடிக்கைகள் ஒரு வழியில் நியாயமானதுதான். கொலை நடந்து பத்து நாட்களில் கொலையாளிகள் தண்டிக்கப் பட்டதையிட்டு நாங்கள் மகழ்ச்சி அடைகிறோம். இதை எங்கள் நாட்டின்  பிரதமர் புரிந்து கொள்ள வேண்டும்என்று பெண்கள் உரிமை ஆர்வலர் ஷிராஸ் (Shiraz Amin) அமின் கூறுகிறார்.

வழக்கு என்று எதுவும் நடக்கவில்லை, அவர்கள் உண்மையில் பாலியல் வன்புணர்வு செய்தவர்களா? அவர்கள்தான்  27 வயதான திஷாவை எரித்தார்கள் என்பவை பற்றி சரியாகத் தெளிவுபடுத்தாமலே வெறுமனே பொலீஸ் தரும் நீதி என்பது விடையாக இருக்க முடியாது என்று விமர்சகர்கள் கூறுகிறார்கள்.

இந்தியாவில் ஒவ்வொரு நாளும் சராசரியாக 100 பெண்கள் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்படுகிறார்கள் என்று அறிக்கை ஒன்று சொல்கிறது. ஆனால் இருண்ட ஒரு பக்கம் நிச்சயமாக இருக்கும். வெட்கம், பயம் காரணமாக பல பெண்கள் காவல்துறைக்குச் சென்று முறையிடாமல் இருக்கலாம். இரண்டு நாட்களுக்கு முன்புதான், நீதிமன்றத்திற்கு செல்லும் வழியில் ஒரு இளம் பெண் எரிக்கப்பட்டாள் என்பது அதற்கு ஒரு சாட்சி.

"பொலிஸ் வளங்களின் பற்றாக்குறை நீக்கப்படல் வேண்டும்,  பொறுப்புக்கூறலில் இருந்து பொலீஸ் பின் வாங்கக் கூடாது, வழக்குகளுக்கான தீர்ப்புகள் விரைவாக வரவேண்டும்என டெல்லி மகளிர் குழுத் தலைவர் சுவாதி முல்வாலி (Swati Mulwali) கூறினார்.

சந்தேக நபர்களின் மரணம் குறித்து திஷாவின் குடும்பத்தினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.  இந்த சம்பவம் இறுதியாக இந்திய சமுதாயத்தில் ஒரு மாற்றத்தைக்  கொண்டுவரும் என  அவர்கள் நம்புகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்

Edited by vasee

  • கருத்துக்கள உறவுகள்

எனது இந்த கருத்தை பார்த்தவுடனேயே 
பதில் அடி  கொடுக்க வேண்டும் என்று பாய்பவர்கள்தான் அதிகம் 
ஒரு நிமிடம் இதில் ஏதும் தாக்கம் இருக்குமோ என்று ஒரு நிமிடம் சிந்திப்பவர்கள் குறைவு.

இந்த ஆதிக்க புத்திக்கு அடிப்படை காரணமே இந்துமதம்தான் 
ஒரு சகமனிதனுக்கு  எவ்ளவு கொடுமைகளை வேண்டுமானாலும் 
மிக சாதாரணமாக செய்ய கூடிய மனநிலையை இந்த இந்த மதம்தான் வளர்க்கிறது.

இன்னொரு மனிதனை சக மனிதனாக பார்க்கவிடாது 
ஒரு பெண்ணை சமத்துவமாக பேண விடாது தடுப்பது என்பதை 
எழுத்து வடிவிலேயே கொண்டது இந்துமதம் என்பதை  யாராலும் மறுக்க முடியாது.

மேலே வசி அவர்கள் இணைத்த வீடியோ (இணைப்பிற்கு நன்றி) வில் இருக்கு பெண்களுக்கு 
அவர்கள் வாழ்க்கையில் இப்படியான சம்மவம் இப்போதான் முதன் முதலில் நடக்கிறது 
ஆதலால் மனமுடைந்து போகிறார்கள் இப்படி ஒரு வீடியோவை பதிவு செய்து போடுகிறார்கள்.
இந்தியாவிலேயே வாழும் பெண்களுக்கு?
இது ஒரு சாதாரண வாழ்க்கை.
இந்த வாழ்வை அடிப்படியாக கட்டி அமைத்தது எது?

அயார்பாடியில் கிருஷ்ணர் என்ன செய்தார்?
அவ்வளவும் இளம் பெண்களுக்கு எதிரான பாலியல் சேட்டைகள் 
அவற்றை பாட்டாக்கி  பக்தியாக்கி எங்கள் மனதில் மிக சிறு வயதிலேயே 
பதித்துவிடுகிறார்கள் .........

இப்போதைய சோசியல் மீடியா காலத்தில் பதியபடும் கருத்த்துகளில் 
இந்திய இளைஞர்கள் மிக சாதாரணமா எழுதுவார்கள் " இவா எதோ பத்தினி மாதிரி ... மூடிட்டு போடி" என்று 
பத்தினி இல்லாத எல்லோரையும் திறக்கலாம் .... அவர்கள் அதை மறுக்க முடியாது என்ற ஒரு அடிப்படை புத்தி 
இவர்களிடம் மிக சாதாரணமாக இருக்கிறது. 

சமத்துவத்தை கற்றுக்கொடுக்க 
கற்றுக்கொள்ள இந்தியா துணியும்வரை 
இந்த வன்கொடுமை என்பதோ தவிர்க்க முடியாதது. 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Maruthankerny said:

எல்லா மதமும் பெண்களை அடிமையாய் தான் வைத்திருக்குது. அவற்றில் கிறிஸ்தவம் கொஞ்சம் பரவாயில்லை என்று சொல்லலாம்

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ரதி said:

எல்லா மதமும் பெண்களை அடிமையாய் தான் வைத்திருக்குது. அவற்றில் கிறிஸ்தவம் கொஞ்சம் பரவாயில்லை என்று சொல்லலாம்

எல்லா மதமும் பெண்களுக்கு மட்டும் இல்லை பொதுவாகவே 
மனிதர்களை பயத்தில் தள்ளிவிட்டு சிந்திக்க விடாது தடுத்து 
தம்மை வளர்த்து கொள்வதுக்கே இங்கு இருக்கிறது. எந்த மதமும் மனிதர்களுக்காகவோ 
கடவுளுக்கவோ இல்லை. 
இல்லாத கடவுளை சித்தரிப்பதிலேயே முதல் பொய்யும் புரட்டும் உருவெடுக்கிறது. 
கடவுள் ஏன் இருக்கவேண்டும்? என்று நீங்கள் கேட்டால் எல்லா மதமும் 
அவர் ஒரு சர்வாதிகாரி போன்ற ஒரு பதிலைத்தான் சுற்றிவளைத்து தருகிறது. 

இந்துமதம் என்பது ஒரு மனிதனை வக்கிரனாக மாற்றுகிறது இந்த மாறுபடை 
புரிந்துகொள்ள வேண்டும். ஒரு சக மனிதனை நான் துன்புறுத்துவத்துக்கு எனக்கு நான் வளர்ந்த 
சமூகம் தனது மதம் ஊடாக அனுமதி அளித்து இருந்தது என்பதை யாராலும் மறுக்க முடியுமா? 
அதை நாம் எல்லோரும் சர்வ சாதாரணமாக செய்துகொண்டு இருந்தோம் ... மறு  கரையில் 
ஒரு மனித குழுமம் நசுங்கி ஒடுங்கி மனபங்கப்பட்டு ஒதுங்கி கொண்டிருந்ததை யாராலும் மறுக்க முடியுமா?

நாங்கள் விட்ட அம்பு ஊரை சுற்றி எமது வீட்டு பெண்களை நோக்கி வரும்போது மட்டும்  
எதோ பெரிய  புரட்ச்சியாளர்கள்போல பொங்குகிறோம். இவளவு நாளும் அதைத்தான் நாம் இன்னொரு வடிவில்  இன்னொரு மனிதனுக்கு செய்துகொண்டு இருந்தோம். இன்று வருவதே நாம் நேற்று விட்ட அம்புதான். 

இதை இந்துமதத்துக்கு எதிரான கருத்தியலாக பார்க்காது 
நாம் திருத்தம் செய்யவேண்டிய .... திருத்த வேண்டிய அடிப்படை விடயம்கள் 
இருக்கிறது என்பதை புரிந்துகொள்ள வேண்டிய கடமை இருக்கிறது.......... என்பதை என்றாலும் புரிந்துகொள்வதுதான்  அவசியமானது.  

என்கவுண்டர் போலீசார் மீது வழக்கு; சுப்ரீம் கோர்ட் ஏற்பு

புதுடில்லி: தெலுங்கானாவில் பெண் டாக்டரை பாலியல் வன்கொடுமை செய்து எரித்து கொன்ற 4 பேரை, என்கவுன்டர் செய்த போலீசார் மீது தொடரப்பட்ட வழக்கை சுப்ரீம் கோர்ட் விசாரணைக்கு ஏற்றது.

தெலுங்கானாவில் நவ.,27ம் தேதி பெண் டாக்டர் பலாத்காரம் செய்யப்பட்டு எரித்துக் கொல்லப்பட்டார். இரவு வீடு திரும்பிய அவரது பைக் டயரை பஞ்சர் செய்து, அவருக்கு உதவுவது போல நடித்து, 4 லாரி டிரைவர்கள் பலாத்காரம் செய்தனர். அவரது வாயில் மதுவை ஊற்றி, கழுத்தை நெரித்து கொன்று, உடலை எரித்தனர். இச்சம்பவம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இக்கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட லாரி டிரைவர்கள், கிளீனர்கள் கேசவலு, முகமது பாஷா, நவீன், சிவா ஆகியோரை கைது செய்த போலீசார், அவர்களிடம் விசாரணை நடத்தினர். இந்நிலையில் பெண் டாக்டர் கொல்லப்பட்ட இடத்தில், குற்றம் நடந்தது எப்படி என நடித்துக் காட்டிய போது, போலீசாரை துப்பாக்கியால் சுட்டு தப்பி ஓட முயற்சித்த 4 கயவர்களையும், கடந்த 6ம் தேதி, போலீசார் சுட்டுக் கொன்றனர். சம்பவ இடத்தில், போலீசாரை பொதுமக்கள் தூக்கி வைத்து கொண்டாடினர். 4 பேரும் என்கவுன்டரில் கொல்லப்பட்டது அனைத்து தரப்பினரிடையேயும், பலத்த வரவேற்பை பெற்றது.

https://www.dinamalar.com/news_detail.asp?id=2430209

இந்நிலையில் என்கவுன்டருக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில், வக்கீல்களான மணி, பிரதீப் குமார் மனு தாக்கல் செய்திருந்தனர். மனுவில் குறிப்பிடப்பட்டதாவது: என்கவுன்டர் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் வழிமுறைகள் பின்பற்றப்படவில்லை. என்கவுன்டர் செய்த போலீசார்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக அமைக்கப்பட்ட சிறப்பு குழுவின் விசாரணையையும் கண்காணிக்க வேண்டும் என கூறியிருந்தனர்.

இவ்வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்றுக் கொண்ட சுப்ரீம் கோர்ட், நாளை மறுநாள்(டிச.,11) இம்மனு மீதான விசாரணை நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Maruthankerny said:

எல்லா மதமும் பெண்களுக்கு மட்டும் இல்லை பொதுவாகவே 
மனிதர்களை பயத்தில் தள்ளிவிட்டு சிந்திக்க விடாது தடுத்து 
தம்மை வளர்த்து கொள்வதுக்கே இங்கு இருக்கிறது. எந்த மதமும் மனிதர்களுக்காகவோ 
கடவுளுக்கவோ இல்லை. 
இல்லாத கடவுளை சித்தரிப்பதிலேயே முதல் பொய்யும் புரட்டும் உருவெடுக்கிறது. 
கடவுள் ஏன் இருக்கவேண்டும்? என்று நீங்கள் கேட்டால் எல்லா மதமும் 
அவர் ஒரு சர்வாதிகாரி போன்ற ஒரு பதிலைத்தான் சுற்றிவளைத்து தருகிறது. 

இந்துமதம் என்பது ஒரு மனிதனை வக்கிரனாக மாற்றுகிறது இந்த மாறுபடை 
புரிந்துகொள்ள வேண்டும். ஒரு சக மனிதனை நான் துன்புறுத்துவத்துக்கு எனக்கு நான் வளர்ந்த 
சமூகம் தனது மதம் ஊடாக அனுமதி அளித்து இருந்தது என்பதை யாராலும் மறுக்க முடியுமா? 
அதை நாம் எல்லோரும் சர்வ சாதாரணமாக செய்துகொண்டு இருந்தோம் ... மறு  கரையில் 
ஒரு மனித குழுமம் நசுங்கி ஒடுங்கி மனபங்கப்பட்டு ஒதுங்கி கொண்டிருந்ததை யாராலும் மறுக்க முடியுமா?

நாங்கள் விட்ட அம்பு ஊரை சுற்றி எமது வீட்டு பெண்களை நோக்கி வரும்போது மட்டும்  
எதோ பெரிய  புரட்ச்சியாளர்கள்போல பொங்குகிறோம். இவளவு நாளும் அதைத்தான் நாம் இன்னொரு வடிவில்  இன்னொரு மனிதனுக்கு செய்துகொண்டு இருந்தோம். இன்று வருவதே நாம் நேற்று விட்ட அம்புதான். 

இதை இந்துமதத்துக்கு எதிரான கருத்தியலாக பார்க்காது 
நாம் திருத்தம் செய்யவேண்டிய .... திருத்த வேண்டிய அடிப்படை விடயம்கள் 
இருக்கிறது என்பதை புரிந்துகொள்ள வேண்டிய கடமை இருக்கிறது.......... என்பதை என்றாலும் புரிந்துகொள்வதுதான்  அவசியமானது.  

நான் சாதியைப் பற்றி ஒரு பிராமண குருவிடம் கேட்ட போது ,அவர் சொன்னார் நீங்கள் சாப்பிடும் கடல் உணவான மீன்கள் எத்தனை வகை? எல்லாத்துக்கும் ஒரு குணம் இருக்காம்...நண்டுக்கு ஒரு குணம்[அது கெளவி பிடிப்பது] , றாலுக்கு ஒரு குணம்,மீனுக்கு ஒரு குணம்...இப்படி நாங்கள் சாப்பிடுவதிலேயே எத்தனை விதம்? சாதியும் அப்படித் தானாம்.

ஒவ்வொரு சாதிக்கென்று ஒரு குணம் இருக்காம்...அந்த குணத்தை அடிப்படையாய் வைத்தே சாதி வகுக்கப்பட்டதாம்....எப்படித் தான் படித்தாலும் ,உயர் பதவியில் இருந்தாலும் ஒரு பிரச்சனை என்று வரும் போது அந்தந்த சாதிக்காரர் தங்கட சாதிக்குரிய குணத்தை காட்டுவினமாம்

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, ரதி said:

நாம் மனிதர்களை பற்றி பேசுகிறோம் 
பார்ப்பான் மீன்களை பற்றி பேசுகிறான்.
இதுதான் இந்துமதம் எனும் பிராடு தனம் 
ஒரு ஆதிக்க வெறியை  அப்பிளுக்கும் ஆரஞ்சுக்கும் வித்தியாசம் காட்டி 
வளர்த்து விடுவதுதான் இந்த இந்துமதம்.

நான் சொல்லபோனால் மத்துக்கு எதிரான கருத்தகவே பார்ப்பார்கள் 
இப்போ பிராமணனே சொல்கிறான் ... இந்த பிராட்டு தனத்தை பாருங்கள். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.