Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மணல் கொள்ளையர்களின் உழவு இயந்திரங்கள் தீ மூட்டப்பட்டன: தீவக மக்கள் அதிரடி!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
78817123_2467640000173397_44781113243410
 

தீவகம், சாட்டி மற்றும் மண்கும்பான் பகுதிகளில் மணல் கொள்ளையில் ஈடுபட்ட இரண்டு உழவு இயந்திரங்கள் பொதுமக்களால் தீமூட்டப்பட்டுள்ளது. அந்த பகுதியில் மணல் கொள்ளையர்களின் அட்டகாசம் கட்டுங்கடங்காமல் அதிகரித்த நிலையிலேயே பொதுமக்கள் இந்த அதிரடி நடவடிக்கையில் இறங்கினர்.

மணல் கடத்தலில் ஈடுபட்ட இரு உழவு இயந்திரங்களை நேற்று (10) மறித்த சிலர் அவற்றை தீ வைத்து எரித்தனர். இதனால் இரண்டு உழவு இயந்திரங்களும் பலத்த சேதமடைந்தன.

மணல் கடத்தல் தொடர்பாக பொலிசாரிடம் முறையிட்டும், மணல் கடத்தல் தொடர்ந்ததால் ஆத்திரமடைந்த மக்களே உழவு இயந்திரத்திற்கு தீ வைத்ததாக தெரிவிக்கப்படுகிறது.

வேலணை- சாட்டி நல்ல தண்ணீர் கிணறுகள் உள்ள பகுதிகளுக்கு அண்மையில் தனியார் காணிகளில் கடந்த சில நாட்களாக பெருமளவு மணல் கொள்ளை இடம்பெற்று வருகிறது.

கடந்த 3 நாட்களில் சுமார்15 உழவு இயந்திரங்களுடன் மணல் கொள்ளையர்கள் இங்கு முகாமிட்டு, மணல் அகழ்ந்து கடத்தலில் ஈடுபட்டு வந்ததாக பிரதேசமக்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த சில தினங்களில் மட்டும் 200 இற்கும் அதிக உழவு இயந்திர மணல் கடத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

இது தொடர்பில் ஊர்காவற்றுறை பொலிசாருக்கு காணி உரிமையாளர்கள் முறையிட்டுள்ளனர். தீவக பொது அமைப்புக்களும் முறையிட்டுள்ளன.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சாட்டிப் பகுதிக்கு பொலிசார் சென்றபோது, மணல் கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பியோடி விட்டனர்.

தீவக பகுதிக்கான ஒரேயொரு குடிநீர் ஆதாரமாக சாட்டி பகுதியில் உள்ள நன்னீர் கிணறுகள் உள்ளன. அந்த பகுதியில் பெருமளவு மணல் கொள்ளை இடம்பெறுவது, அந்த பகுதியையும் உவர்நீராக மாற்றிவிடும். தீவகத்தின் பல பகுதிகளில் மணல் கொள்ளையால் நன்னீர் உவரடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.pagetamil.com/93184/

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, பெருமாள் said:
இது தொடர்பில் ஊர்காவற்றுறை பொலிசாருக்கு காணி உரிமையாளர்கள் முறையிட்டுள்ளனர். தீவக பொது அமைப்புக்களும் முறையிட்டுள்ளன.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சாட்டிப் பகுதிக்கு பொலிசார் சென்றபோது, மணல் கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பியோடி விட்டனர்.

தீவக பகுதிக்கான ஒரேயொரு குடிநீர் ஆதாரமாக சாட்டி பகுதியில் உள்ள நன்னீர் கிணறுகள் உள்ளன. அந்த பகுதியில் பெருமளவு மணல் கொள்ளை இடம்பெறுவது, அந்த பகுதியையும் உவர்நீராக மாற்றிவிடும். தீவகத்தின் பல பகுதிகளில் மணல் கொள்ளையால் நன்னீர் உவரடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஒரு ஊரின்... குடிநீருக்கே... ஆபத்து  வரும் என்றால்,
பொதுமக்கள் அதிரடி நடவடிக்கையில் இறங்கியதில் தவறு இல்லை.

"மத்தியில் கூட்டாக கொலை, கொள்ளை, மாநிலத்தில் சுயமாக கொலை, கொள்ளை" என்ற குறிக்கோளாட காலத்தை கழிக்கிற டக்கி அமைச்சரான கையோட தன்னுடைய பாரம்பரியத் தொழிலை முழுமூச்சா செய்யத் தொடங்கின  நேரத்துல இப்பிடி ஒரு திருப்பம் வரும் என்டு நெச்சிருக்கமாட்டார்.

  • கருத்துக்கள உறவுகள்

 

 

அரச நிலத்தில் மண் அள்ளும்போது இப்படி தண்டனை கொடுக்கலாம். ஆனால் சில காணி சொந்தக்காரர்கள் மண் அள்ள அனுமதி அளித்துள்ளார்களாம். இவர்களை மக்கள் அதிகாரிகள்மூலம் தண்டிக்க வேண்டும்.

வாகனங்களில் கொண்டு செல்வதட்கு அனுமதிப்பத்திரம் தேவை இல்லை. ஆனால் மண் அள்ளும் இடங்களுக்கு அனுமதி பத்திரம் தேவை. அதிகாரிகள் மக்களின் உதவியுடன் இதை தடுக்க வேண்டும். மக்களும் அதிகாரிகளுக்கு தகவல் வழங்க வேண்டும்.

10 hours ago, nunavilan said:

 

 

மண் திருடுவது, மரம் திருடுவது, தண்ணீர் திருடுவது, கல்வியை திருடுவது, வாழ்வாதாரத்தை திருடுவது ... 

இவை மனிதன் இருக்கும்வரை வடக்கும். மனிதம் அதுவரை போராடி வாழ்வதுதான் வாழ்க்கை. 

யாழ்.தீவகத்தில் சட்டவிரோத மணல் அகழ்வு - பதுக்கலில் ஈடுபடுவோரைக் கைது செய்ய உத்தரவு

“ஊர்காவற்றுறை நீதிமன்ற நியாயாதிக்க எல்லையில் தனியார் காணிகளில் சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெற்றும் இதுதொடர்பில் முறைப்பாடு வழங்காதோரைக் கைது செய்வதுடன், அதிகளவு மணல் கும்பிகள் உள்ள காணிகள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து சந்தேகத்துக்கிடமானோரை மன்றில் முற்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்”

இவ்வாறு ஊர்காவற்றுறை நீதிமன்ற நீதிவான் அந்தோனிப்பிள்ளை ஜூட்சன், பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

மண்கும்பானில் மணல் அகழ்வில் ஈடுபட்டோரைத் தாக்கியதுடன் இரண்டு உழவு இயந்திரங்களுக்கு தீ வைத்தனர் என்ற குற்றச்சாட்டில் 8 பேர் மீது ஊர்காவற்றுறை நீதிமன்றில் பொலிஸார் இருவேறு வழக்குகளைத் தாக்கல் செய்தனர்.

அந்த வழக்குகளின் விசாரணையின் போதே ஊர்காவற்றுறை நீதிமன்றம் இந்த உத்தரவை வழங்கியது.

தீவகம் மண்கும்பானில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட கும்பலை விரட்டிய ஊர் மக்கள், கும்பல் கைவிட்டுச் சென்ற இரண்டு உழவு இயந்திரங்களுக்கு தீ வைத்தனர். இந்தச் சம்பவம் நேற்றுமுன்தினம் இடம்பெற்றது.

இந்த நிலையில் மண்கும்பானைச் சேர்ந்த இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். மேலும் ஆறு பேரை கைது செய்ய ஊர்காவற்றுறை பொலிஸார் முற்ப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட இருவர் உள்பட 8 பேருக்கு எதிராக இருவேறு அறிக்கைகளை ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றில் தாக்கல் செய்தனர். சந்தேகநபர்கள் இருவரும் மன்றில் முற்படுத்தப்பட்டனர்.

மேலும் 6 பேர் மூத்த சட்டத்தரணி வி.திருக்குமரன் ஊடாக மன்றில் சரண்டைந்தனர்.

வழக்குகள் ஊர்காவற்றுறை நீதிமன்ற நீதிவான் அந்தோனிப்பிள்ளை ஜூட்சன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

“மணல் லோட்டுகளை ஏற்றியோர் மீது சந்தேகநபர்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். காணி உரிமையாளர்களின் அனுமதியுடனேயே மணல் அகழ்வு இடம்பெற்றது.

பொது மக்கள் சட்டத்தை கையில் எடுக்க முடியாது. சட்டவிரோத செயற்பாடு நடந்தால் பொலிஸாருக்கு அறிவிக்கவேண்டும்.

சந்தேகநபர்கள் அதனைச் செய்யாமல், சட்டத்தில் கையில் எடுத்து மணல் ஏற்றிச் சென்றோர் மீது தாக்கியதுடன் இரண்டு உழவு  இயந்திரங்களுக்கு தீ வைத்துள்ளனர்” என்று பொலிஸார் மன்றுரைத்தனர்.

“அரசு மணலை ஏற்றிச் செல்வதற்கான அனுமதிப்பத்திரத்தை மாத்திரமே ரத்துச் செய்துள்ளது. ஆனால் மணல் அகழ்வுக்கு அனுமதி தேவை. எனவேதான் சட்டவிரோதமாக மணல் அகழ்வு தொடர்பில் ஊர் மக்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

எனினும் இரண்டு நாள்களுக்கு மேலாக பொலிஸார் நடவடிக்கை எடுக்காததால் ஊர்மக்கள் மணல் கடத்தலைத் தடுக்க கும்பலை விரட்டினர். வழக்குகளில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கும் சம்பவத்துக்கும் தொடர்பில்லை. அவர்களுக்கு பிணை வழங்கவேண்டும்” என்று மூத்த சட்டத்தரணி வி.திருக்குமரன் மன்றுரைத்தார்.

இருதரப்பு சமர்ப்பணங்களையும் ஆராய்ந்த நீதிவான், சந்தேகநபர்களுக்கு பிணை வழங்கி உத்தரவிட்டார்.

அத்துடன், ஊர்காவற்றுறை நீதிமன்ற நியாயாதிக்க எல்லையில் தனியார் காணிகளில் சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெற்று காணிகளுக்குள் பள்ளம் காணப்பட்டால் அதுதொடர்பில் முறைப்பாடு வழங்காதோரைக் கைது செய்வேண்டும்.

அதிகளவு மணல் கும்பிகள் உள்ள காணிகள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து சந்தேகத்து இடமானோரை மன்றில் முற்படுத்த உனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்று நீதிவான், பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

https://www.virakesari.lk/article/70945

8 hours ago, ampanai said:

அதிகளவு மணல் கும்பிகள் உள்ள காணிகள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து சந்தேகத்து இடமானோரை மன்றில் முற்படுத்த உனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்று நீதிவான், பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

கடத்தலிகளின் பின்னணியில் உள்ளவர்களிடமே கடத்தலை கட்டுப்படுத்த உத்தரவிடுவது  மிகவும் வேடிக்கையானதாகவே இருக்கப்போகிறது.

தற்போதைய வரிக்குறைப்புகள், மண்ணை எடுத்துச் செல்வதற்கான அனுமதி நீக்கம் போன்றவற்றை 90% ஆனவை பிரபல்ய கடத்தல் கொலைகாரனும் போர்க்குற்றவாளியுமான கோட்டாபய தான் கொள்ளையடித்த பணத்தை முதலீடு செய்து கட்டியெழுப்பும் பல மாடிக்கட்டிடங்களுக்கு உதவும் வகையிலேயே செய்யப்பட்டுள்ளன.

வட மாகாணத்தில் மண், மரக் கடத்தலின் பின்புலத்தில் பெரும்பாலும்  போலீஸ் மற்றும் உயர் இராணுவ அதிகாரிகளாக உள்ள சிங்கள-பௌத்த பயங்கரவாதிகளே உள்ளனர்.

வட மாகாணசபையால் கட்டுப்படுத்தப்பட்டிருந்த டக்ளஸ் தேவானந்தாவின் கடத்தல் கும்பலும் மீண்டும் மண் கடத்தலில் ஈடுபட்டு வருகின்றனர்.

மண்ணை விற்றுக் காசாக்கி கைலாயம் கொண்டா போவீர்கள்

மணல் மண்ணை எடுத்துச் செல்வதற்கான வழி அனுமதிப் பத்திர நடைமுறையை அமைச்சரவை இரத்துச் செய்த கையோடு, எங்கள் வடபுலத்தில் சட்டவிரோத மண் அகழ்வு அசுர வேகத்தில் நடைபெறுகிறது.

உண்மையில் மணல் மண் உட்பட கனிய வளங்களை எடுத்துச் செல்வதற்கான பயண வழி அனுமதி நடைமுறை இரத்துச் செய்யப் பட்டமையானது மணல் மண்ணை விரைவாக எடுத்துச் செல்வதற்கும் செலவைக் குறைப்பதற்குமானது.

எனினும் நம் வடபுலத்தில் மேற்குறித்த விடயம் தவறாக விளங்கிக் கொள்ளப்பட்டுள் ளது. இதற்குப் பொலிஸாரின் அசமந்தமும் காரணம் எனலாம்.

அதாவது ஓர் இடத்தில் இருந்து மண்ணை எடுப்பதாக இருந்தால், அதற்கான அனுமதி கள் கட்டாயமாகப் பெறப்பட வேண்டும்.

அதிலும் குறிப்பாக கனிய வளங்கள் திணைக் களத்திடம் இருந்து முறையான அனுமதியைப் பெற்றாக வேண்டும்.

அதேநேரம் வாகனத்தில் மண்ணை ஏற்றிச் செல்லும்போது அந்த மண் எடுக்கப்பட்ட தற்கான அனுமதிப்பத்திரம் இருப்பது அவசியம்.

தவிர, மணல் மண் அகழப்படுகின்ற இடங்களில் எவ்வளவு ஆழத்துக்கு மண்ணை எடுக்க முடியும் என்ற நியமங்களை கனிய வளத் திணைக்களம் வரையறை செய்திருக்கும்.

எனவே உரிய அனுமதியுடன் மணல் அகழ்வு செய்யப்படும்போது அதனால் எந்தத் தீங்கும் ஏற்பட மாட்டாது.

ஆனால் மேற்குறித்த நிலைமையைப் புரிந்து கொள்ளாத மணல் வியாபாரிகள், காய்ந்த மாடு கம்பில் விழுந்தபோல கிராமங்களையும் ஊர்களையும் அழிக்கும் வகையில் மணல் மண்ணை அகழ்ந்து எடுப்பதில் ஈவு இரக்கமின்றிச் செயற்படுகின்றனர்.

கூடவே மணல் மண் அகழப்படுகின்ற இடங்களுக்குச் சென்று உரிய அனுமதிப்பத்திரங் கள் பெறப்பட்டுள்ளதா என்பதை அறிவதற்குப் பொலிஸார் தயாரில்லாத நிலையில், சட்ட விரோத மணல் அகழ்வு உச்சமடையலாயிற்று.

இந்நிலையில் மணல் அகழ்வால் தங்கள் ஊருக்குள் கடல் நீர் புகுந்து விடப்போகும் அபாயத்தை உணர்ந்த ஊர் மக்கள் மணல் அகழ்வைத் தடுப்பதில் முனைப்புக் காட்டி யுள்ளனர்.

எனவே மணல் மண் விடயத்தில் வழி அனுமதிப்பத்திரம் மட்டு மே இரத்துச் செய்யப்பட்டது. மற்றும்படி மணல் மண்ணை எங்கிருந்து எடுப்பதாக இருந்தாலும் அதற்கான அனுமதிப் பத்திரம் கைவசம் இருந்தாக வேண்டும்.

இந்த நடைமுறையை இறுக்கமாக அமுல் படுத்தும்போது; குறைந்த விலையில், விரை வாக மணல் மண்ணைப் பெற்றுக் கொள்வதும் கட்டிட  நிர்மாணப் பணிகளை விரைவு படுத்தவும் முடியும்.

மணலுக்கான வழி அனுமதி நடைமுறை இரத்துச் செய்யப்பட்டதுதான் தாமதம் எங்கள் மணல் வியாபாரிகள் மண்ணை விற்று மிகப் பெருமளவில் பணத்தைச் சம்பாதித்து கைலாயம் கொண்டு போகலாம் என்பதுபோல நடந்து கொள்வதுதான் மிகப்பெரிய வேதனை.

http://valampurii.lk/valampurii/content.php?id=20121&ctype=news

‘மணல் அகழ்வால் வடக்கின் சூழல் பாதிப்பு’

மணல் அகழ்வால், பாரிய சூழலியல் பிரச்சினைக்குள் வடக்கு மாகாண தள்ளப்பட்டுள்ளதாக, வடக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன், இன்று (15) தெரிவித்தார்.

இது குறித்துத் தொடர்ந்துரைத்த அவர், மணல் ஏற்றிச் செல்லும் வழித்தட அனுமதியை அரசாங்கத்தால் அவசியமற்றதாக பிரகடனம் செய்தமையால், வடக்கு மாகாணம் பாரிய சூழலியல் பிரச்சினைக்கு முகங்கொடுக்க நேரிட்டுள்ளதாகவும் கூறினார்.

http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/மணல்-அகழ்வால்-வடக்கின்-சூழல்-பாதிப்பு/71-242464

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மண்கும்பான் அண்ணை ஒராளை சந்திச்சன். அவர் சொன்னார் தன்ரை வடலிக்காணி இரண்டு கேணி மாதிரி வந்துட்டுதாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.