Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அலாவுதீனும் அற்புத அனுபவமும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

DA21-FCCC-A8-F1-4-D71-B02-C-ABB6485369-B
Aladdin, Tarzan, Tanz der Vampire, Koenig der Loewe போன்ற இசை நடன நிகழ்ச்சிகள் பற்றிய
விளம்பரங்கள் தொலைக்காட்சியில்  வரும் போதெல்லாம் ஒருதடவை போய்ப் பார்க்க வேண்டும் என்று நினைத்துக் கொள்வேன். நீண்ட காலங்களாக  என்னுள் அந்த விருப்பம் இருந்தும்  ஏனோ முடியவில்லை. ஒன்று நுழைவுச் சீட்டின் விலை அதிகம் என்பதால் இருக்கலாம் இல்லை அந்த நிகழ்ச்சியைப் பார்ப்பதற்கு 90 கிலோ மீற்றர்கள் பயணிக்க வேண்டும்  என்பதாகவும் இருந்திருக்கலாம்இதை எல்லாம் தாண்டி இப்பொழுது அது நிறைவேறி இருக்கிறது

நிகழ்ச்சி முடிய இரவு 11 மணி ஆகிவிடும். குளிர்காலமாதலால் வீதிகளில்  பனி படர்ந்திருக்கலாம் என்ற எண்ணம் வர ஒரு நாளுக்காக ஒரு ஹொட்டலில் தங்கி விட முடிவு செய்தேன். நுழைவுச் சீட்டுக்கு மட்டும் 142 யூரோக்கள்ஆனாலும் இவ்வளவு பணத்தை, நேரத்தை செலவழித்து நிகழ்ச்சியைப் போய்ப் பார்ப்பது பெறுமதியாக இருக்குமா என்றொரு அச்சம் கடைசிவரை என்னுள் இருந்தது. தனியாகப் போய்ப் பாரப்பதில் ஏதும் இருக்கப் போவதில்லை. மனைவியை அழைத்துப் போகும் போது செலவு இரட்டிப்புஆனாலும் இறுதி முடிவாக மனது சொன்னதுகாசைப் பார்க்காதே, நிகழ்ச்சியைப் போய்ப் பார்என்று.

Stuttgart SI Cntrum  என்ற இடத்தில் நிகழ்ச்சி. முதலில் SI Centrum பற்றிச் சொல்லிவிடுகிறேன். இதை ஒரு கேளிக்கை நிலையம் எனலாம். நடன இசை  நிகழ்ச்சிகளுக்காக Stage Apollo Theater, Stage Palladium Theater  என இரண்டு அரங்குகள்,  11 உணவு விடுதிகள், 7 மதுபான பார்கள், 3 கோப்பி நிலையங்கள், ஆறு சினிமா தியேட்டர்கள்,  3 சூதாட்ட மையங்கள், 22 மாநாட்டு மண்டபங்கள்  அத்தோடு ஒரு ஆரோக்கிய நிலையம் என்று யேர்மனியர்களுக்காக மட்டுமல்லாமல்  சர்வதேச சுற்றுலாப் பயணிகளையும் மையப் படுத்தி  உருவாக்கப்பட்டது இந்த SI Centrum

நாங்கள் நிகழ்ச்சி பார்க்கப்  போன Aladdin இசை நடன நிகழ்ச்சி நடைபெற்ற அரங்கம் 1807 இருக்கைகள் கொண்ட  Palladium Theater. பயங்கரவாதத் தாக்குதல்கள் எதுவும் நடந்து விடக் கூடாது என்பதற்காக சோதனைகள் நடத்தியே அரங்குக்குள் அனுமதித்தார்கள்.

அரங்கம் முழுமையானதாக நிறைந்திருந்தது. நிகழ்ச்சி தொடங்கும் போதே "போட்டோ எடுப்பதோ, வீடியோ எடுப்பதோ, தொலை பேசி உரையாடலோ அரங்கத்துக்குள் தயவு செய்து வேண்டாம்" என்று அறிவித்து விட்டார்கள்.

நிகழ்ச்சி ஆரம்பித்த நேரத்தில் இருந்து எந்த ஒரு வினாடியும் இடை விடாது நிகழ்ச்சி போய்க் கொண்டே இருந்தது.. மேடையிலே நகரும் கட்டிடங்கள், ஓடும் மேகங்கள், ஒளிபாய்ச்சும் சூரியன், பாழிக்கும் நிலவு, மின்னும் நட்சத்திரங்கள், களை கட்டி நிற்கும் சந்தை, வண்டிகள் போகும் வீதிகள் என ஒரு சினிமா பார்ப்பது போன்ற பிரமையே இருந்தது. நாடகத்தை ரசித்து, பார்வையாளர்கள் கைதட்டி, தங்களது பாராட்டுக்களைத் தெரியப்படுத்தாமல் மட்டும் இருந்திருந்தால் கண் முன்னாலே அவர்கள் வந்து நடித்துக் கொண்டிருந்ததை ஒரு அகன்ற திரையில் ஒரு சினிமா என்றுதான் நினைத்திருப்பேன்.

அலாவுதீன் கதை ஏற்கனவே தெரிந்திருந்ததால், Aladdin நிகழ்ச்சியைப் பார்க்கும் போது சோர்வு வந்து விடுமோ என்ற என்னுள் இருந்த அச்சம் வீணாகிப் போனதுமேடையிலே மறைந்து தோன்றும் பூதம், நொடிப் பொழுதில் அரண்மனை மறைந்து சந்தைகள், வீடுகள், அந்தப்புரம், படுக்கையறை  தோன்றும் காட்சிகள், எம்ஜிஆர் பாணி வாள்ச் சண்டைகள் என்று எல்லாவற்றிலும் என்னை நான் மறந்து போனேன்.

நடிகர்கள் பாடி ஆடி நடித்தது இன்னும் நிகழ்ச்சியை மெருகூட்டியது. நடிகர்களில், ஆபிரிக்கவைச் சேர்ந்தவர்கள் மூவர் இருந்தார்கள். அலாவுதீன் இளவரசியுடன் கம்பளத்தில் பறக்கும் காட்சி வருமா, அது இந்த மேடையில் சாத்தியமாகுமா என்ற ஆவலான கேள்வி எனக்குள் இருந்தது. என் எதிர்பார்ப்புக்கு மேலாக அந்தக் காட்சி அமைந்திருந்தது. அலாவுதீனும் இளவரசியும் கம்பளத்தில் பறந்த காட்சி என்னை மட்டுமல்ல மற்றைய பார்வையாளர்களையும் பெரிதும் கவர்ந்திருந்தது என்பது அரங்கம் வெடித்து விடும் அளவுக்கு எழுந்த கரகோசம் சொன்னது.

6-CB253-D8-8-AE5-4472-8-E39-1-D9-D8-A474

எண்ணிக்கைகளில் குறைந்த நடிகர்கள்தான் பங்கு பற்றி இருந்தார்கள். ஆனால் உடைகளை, வேசங்களை நொடிப் பொழுதில் மாற்றி வந்து மேடையை நிறைத்திருந்தார்கள். நடிப்பில் இசையில் ஏதேனும் பிழைகள் இருந்திருக்கலாம். அவை எல்லாம் பார்வையாளரைச் சென்றடையாமல் கையாளும் திறமை அவர்களிடம் இருந்திருக்கும்.

நிகழ்ச்சி முடிந்த போது எழுந்த கரகோசம் அடங்க சில நிமிடங்கள் தேவைப்பட்டன.

Back stage பார்ப்பதற்கு மறுநாள் 11.30க்குப் போனோம்அதற்கும் கட்டணம் இருந்தது. 20 பேர் கொண்ட குழுக்களாக அழைத்துப் போய் காட்டி விளக்கம் தந்தார்கள்

நடிகர்கள் உடனடியாக ஓடி வந்து இருட்டினிலும் எடுத்து மாற்றக் கூடிய முறையில் உடைகளை தனித்தனியாக ஒழுங்காக  வைத்திருந்தார்கள். அதேபோல்தான் தலையில் போடும் விக்குகள், ஆபகரணங்கள், கையில் வைத்திருக்கும் பொருட்கள்  எல்லாம் ஒழுங்கான முறையில் வைக்கப்பட்டிருந்தன. தலை விக்குகளில் எப்படி மைக்கை பொருத்தி மறைத்து வைப்பது, தலைமயிர் இல்லாத பூத்த்தின் தாடிக்குள் மைக்கை எப்படி பொருத்துவது என்பதை எல்லாம் விளக்கினார்கள். பத்தாயிரம் யூரோ  பெறுமதியான ஆடைகள் இருபது கிலோவரையிலான அலாவுதீனின் உடைகள் எல்லாம் காட்டினார்கள். ஆனால் தொட்டுப் பார்க்கக் கூட அனுமதி தரமாட்டோம் என்றார்கள். மேடைத் தளத்திலேயே சிறிய லிப்ற் அமைத்திருந்தார்கள். அதனூடாகத்தான் பூதம் தோன்றி மறைவதை விளங்கப் படுத்தினார்கள். கம்பளத்தில் அலாவுதீனும் இளவரசியும் எப்படிப் பறந்தார்கள் என்பதை மட்டும் சொல்ல மறுத்து விட்டார்கள்.

திரும்பி வரும் பொழுது Aladin நிகழ்ச்சியைப்  பார்தத்தற்கு கொடுத்த பணத்துக்கு மேலான திருப்தி இருந்தது. ஆனாலும் எங்களவர்களது நிகழ்ச்சிகள் எவ்வளவு தூரத்திற்கு பின்னால் இருக்கிறது என்ற ஒரு ஆதங்கம் இருந்தது.

  • கருத்துக்கள உறவுகள்

Aladdin  படம் என்றால் எனக்கும் பிரியம்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தத் திரைப்படத்தை நான் கம்போடியா சென்றபோது விமானத்தில் பார்த்தேன். சலிப்பை ஏற்படுத்தாத படம். அரங்கத்தில் நேரடியாக நடிப்பதைப் பார்ப்பதே ஓர் அலாதியான அனுபவம். நான் The lion King ஐ பார்த்தபோது உணர்ந்து கொண்ட அனுபவம். சில நல்ல அனுபவங்களுக்காக பணத்தை இழப்பது பெரிதல்ல அண்ணா. நாம் அனுபவித்தால்த்தான் அதன் அருமை தெரியும்.

  • கருத்துக்கள உறவுகள்

(Broadway shows) ப்ரோட்வே தியேட்டர்ஸ் நிகழ்ச்சிகள் மேட்குலகில் வசிப்பவர்களுக்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதம்.
நான் மிகவும் ரசித்து பார்த்த சில நாடகங்கள் இருக்கின்றன. எல்லாமே ஒரு கனவுலகில் நடப்பது போல மிக மிக பிரமாண்டமாக இருக்கும். 
லயன் கிங் , ரிவர் டான்ஸ் , பந்தோம் ஆஃ ஓப்ரா , மிஸ் சைகோன் , புக் ஆஃ மோர்மன் 
இவை நான் பார்த்த சில மேடை நாடக நிகழ்ச்சிகள்.

பல வருடங்களுக்கு முன்னர் American Express இல் வேலை செய்ததால் கிடைத்த ஒரு சலுகை . 🙏 

ஏ.ஆர் ரஹ்மான் கூட அன்றூவ் லோயிட் வெபருடன் (Andrew Lloyd Webber) சேர்ந்து ஒரு ப்ரோட்வே நிகழ்ச்சி செய்திருந்தார்.
இனிவரும் காலங்களில் ஏ.ஆர் ரஹ்மான் இது மாதிரியான நிகழ்ச்சிகளில் தான் கூடுதல் கவனம் எடுக்கப்போவதாக பேட்டி ஒன்றிலும் கூறியிருந்தார்.

இப்போது கூட டொரோண்டோவில் "ஷென் யூன்"  Shen Yun என்னும் ஒரு ப்ரோட்வே நிகழ்ச்சி நடக்கவிருக்கிறது. சுமார் 650 மேற்பட்ட கலைஞர்கள் பங்குகொள்ளும் மிக பிரமாண்டமானதொரு நிகழ்ச்சி இது.

வசதியும், சந்தர்ப்பமும் கிடைத்தால் குறைந்தது ஒன்றையாவது கண்டிப்பாக ஒவொருவரும் பார்க்கவேண்டிய நிகழ்ச்சிகள் இவை.

அலாவுதீன் இசை நடன நிகழ்ச்சியை மகளின் பாடசாலையில் பாத்தபோதே நன்றாக இருந்தது... அதை இப்படி ஒரு பிரமண்ட படைப்பில் பார்க்கும் போது சொல்லத்தேவையில்லை.

உங்கள் விமச்சனத்தை வாசித்தபின்பு அலாவுதீன் போய்ப்பார்க்கவேண்டும் என்ற ஆவல் எழுந்துள்ளது.

சசி அண்ணா சொன்னது போல் இங்கு இது  எமக்கு கிடைத்த வரப்பிரசாதங்களில் ஒன்று என்றே சொல்வேன்.

நானும் Waitress, Come from away, Legally Blonde, Chicago, Les Mis, Fiddler on the roof  பார்த்துள்ளேன்.... என்னவாக பாடி நடிக்கின்றார்கள்.  வரும் ஏப்பிரலில் Hamilton பார்க்க போகவுள்ளேன். ( இவற்றில் முதல் இரண்டு தான் Down Town Theater ல்  போய்ப்பார்த்தேன் மற்றவை எனது மகள் படிக்கும் இசைப்பள்ளியில் பார்த்தேன்)

Shen Yun ம் முடிந்தால் போய் பார்க்கவேண்டும்.

அலாவுதீனின் விமர்ச்சனத்திற்கு நன்றிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான விமர்சனம்.......இதுவரை பார்த்ததில்லை, இனிமேல் சந்தர்ப்பம் கிடைத்தால் பார்ப்பேன்......!  😁

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, தமிழினி said:

அலாவுதீன் இசை நடன நிகழ்ச்சியை மகளின் பாடசாலையில் பாத்தபோதே நன்றாக இருந்தது... அதை இப்படி ஒரு பிரமண்ட படைப்பில் பார்க்கும் போது சொல்லத்தேவையில்லை.

உங்கள் விமச்சனத்தை வாசித்தபின்பு அலாவுதீன் போய்ப்பார்க்கவேண்டும் என்ற ஆவல் எழுந்துள்ளது.

சசி அண்ணா சொன்னது போல் இங்கு இது  எமக்கு கிடைத்த வரப்பிரசாதங்களில் ஒன்று என்றே சொல்வேன்.

நானும் Waitress, Come from away, Legally Blonde, Chicago, Les Mis, Fiddler on the roof  பார்த்துள்ளேன்.... என்னவாக பாடி நடிக்கின்றார்கள்.  வரும் ஏப்பிரலில் Hamilton பார்க்க போகவுள்ளேன். ( இவற்றில் முதல் இரண்டு தான் Down Town Theater ல்  போய்ப்பார்த்தேன் மற்றவை எனது மகள் படிக்கும் இசைப்பள்ளியில் பார்த்தேன்)

Shen Yun ம் முடிந்தால் போய் பார்க்கவேண்டும்.

அலாவுதீனின் விமர்ச்சனத்திற்கு நன்றிகள்.

தமிழினி, மகள் படிக்கும் இசைக்கல்லூரியின் பெயர் என்ன?
எந்த வகையான இசை திறமையை அவர் பயிலுகிறார்?
என்னுடைய மகனையும் அப்படியான ஒன்றில் தான் சேர்ப்பதற்காக யோசித்துக்கொண்டு இருக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான  நிகழ்வு ஒன்றை 12 ம் வகுப்பு மாணவர்கள் நடாத்தி இருந்தார்கள். ஏறத்தாள ஒரு வருடம் பயிற்சி செய்து இருந்தார்கள். நானும் அரை மனமாக தான் சென்றேன்.

கொஸ்ரியூமில் இருந்து பின்ணணி இசை வரை ஒவ்வொரு ஆசியர் பொறுப்பெடுத்து செய்து இருந்தார்கள். பாடசாலை இசைக்குழுவே பின்னணி இசையை செய்து இருந்தார்கள். பல்வேறு நாட்டு பின்ணணிகளை கொண்ட  மாணவர்கள் பங்கு பற்றி பின்னி எடுத்து விட்டார்கள். ஒருவர்  இனிமையாக பாடுவதே அதிசயம். ஒரு குழு பாடி , ஆடி நடிப்பது என்பது நினைத்து பார்க்க முடியாத ஒன்று. அத்தனை  திறமை இந்த சிறுவர்களிடமா என பிரமித்து நின்றேன். பார்த்த காட்சியின் பெயர் legally blond.

கவி அவர்களே உங்கள் காட்சி வருணனை அருமை. நேரே காட்சியை பார்ப்பது போன்ற பிரமையை ஏற்படுத்தியது. நன்றிகள்

56 minutes ago, Sasi_varnam said:

தமிழினி, மகள் படிக்கும் இசைக்கல்லூரியின் பெயர் என்ன?
எந்த வகையான இசை திறமையை அவர் பயிலுகிறார்?
என்னுடைய மகனையும் அப்படியான ஒன்றில் தான் சேர்ப்பதற்காக யோசித்துக்கொண்டு இருக்கிறேன்.

சசி அண்ணா எனது மகள் Cawthra Park Art School லிலும் MERRIAM School of Music லிலும் படிக்கின்றா.  இப்போது Innovative Art School லிலும் சேர்ந்துள்ளா. மகளின் Major -Vocal அத்துடன் இப்படியான இசைநடனத்திலும் ஆர்வம் இருப்பதால் அதையும் சேர்த்து படிக்கின்றா.

Innovative Art School - Oakville லிலும் Down Town லிலும் உள்ளது. Down Town உங்களுக்கு கிட்டவாக இருக்கும். தற்போது Frozen Musical தொடங்கவுள்ளார்கள். முடிந்தால் உங்கள் மகனை அங்கு சேர்க்கலாம் சசி அண்ணா.

Edited by தமிழினி

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, தமிழினி said:

மிக்க மகிழ்ச்சி தமிழினி,
எல்லா பெற்றோரையும் போல இன்ஜினியரிங் , ரோபோடிக்ஸ், மெடிக்கல் சயன்ஸ், ஐ .பீ  ஸ்கூல் என்று பறைசாற்றல் இல்லாது  இசை, நாட்டியம், நாடகம் என்னும் பாதையில் மகளை தயார் செய்வதற்கு ஒரு பச்சை .

12 minutes ago, Sasi_varnam said:

மிக்க மகிழ்ச்சி தமிழினி,
எல்லா பெற்றோரையும் போல இன்ஜினியரிங் , ரோபோடிக்ஸ், மெடிக்கல் சயன்ஸ், ஐ .பீ  ஸ்கூல் என்று பறைசாற்றல் இல்லாது  இசை, நாட்டியம், நாடகம் என்னும் பாதையில் மகளை தயார் செய்வதற்கு ஒரு பச்சை .

நன்றி சசி அண்ணா. சிறு வயதில் இருந்தே இசை மேல் அவவிற்கு ஆர்வம் இருந்ததால் அவவின் தெரிவு Art School ஆக இருந்தது.  அவவின் விருப்பப்படி அங்கு தான் தற்போது High School படிக்கின்றா. எதிர்காலத்தில் அவவின் விருப்பங்கள் மாறக்கூடும் ஆனால் எதை படிக்க விரும்பினாலும் அவவின் விருப்பம் தான் எம் விருப்பமாகவிருக்கும்.

Edited by தமிழினி

  • கருத்துக்கள உறவுகள்

கவி அருணாசலம், சென்ற  செவ்வாய்க் கிழமை பதிந்த பதிவை... இன்று தான்...  கண்டேன். :rolleyes:

அதுகும்... எமக்கு அருகில் உள்ள இடம். அங்கு... இப்படி  ஒரு, அருமையான நிகழ்ச்சி.... 
அங்கு  நடந்திருக்கும் என்று, நான் எதிர் பார்க்கவேயில்லை. 

அனுமதி சீட்டு.... 147 €  எனும் போது, அந்த ஆசையை விடலாம் என யோசித்தாலும்,
நானும், ஒய்வு (பென்ஷன்)  :grin: எடுத்த பின்...   அங்கு ஒரு முறை சென்று பார்க்க,
கவி அருணாசலத்தின்... அழகிய எழுத்து நடையுடன் உள்ள பதிவு, என்னைத் தூண்டியுள்ளது. :)

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

Image associée

நீங்கள் பென்சன் எடுத்திட்டு போய் நாடகம் பார்க்கும்போது அலாவுதீனும் இளவரசியும்  கம்பளத்தை எறிஞ்சு போட்டு கிளைடரில் பாறப்பார்கள்.......!    😁

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, suvy said:

நீங்கள் பென்சன் எடுத்திட்டு போய் நாடகம் பார்க்கும்போது அலாவுதீனும் இளவரசியும்  கம்பளத்தை எறிஞ்சு போட்டு கிளைடரில் பாறப்பார்கள்.......!    😁

சுவியர்...  "அலாவுதீனும் அற்புத விளக்கும்" என்ற கதை...
ஒருவரின்..  சிறு வயதில், மனதில்  "கல் வெட்டாக"  பதிந்த கதை.

அந்தக் கதை...  பாஞ்ச் அண்ணைக்கும்,  ராஜவன்னியனுக்கும், விசுகு, ஈழப்பிரியன், 
புங்கையூரான்... போன்ற எல்லோருக்கும் பொருந்தும்.
வாழ்க்கை என்பது, ஒரு... வட்டம்  தானே.. சுவி அண்ணா. :)

ஆனால்....  "அலாவுதீனும் அற்புத விளக்கும்"  என்ற கதையை....
"பாட்டி... வடை, சுட்ட கதை" ... என்ற மாதிரி,
அடுத்த  தலைமுறையும், விரும்பி ரசிக்கும், 
காலத்தால்.... அழியாத கதைகளில், இதுவும் ஒன்று.  ❤️

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
On 1/23/2020 at 9:43 PM, Sasi_varnam said:

(Broadway shows) ப்ரோட்வே தியேட்டர்ஸ் நிகழ்ச்சிகள் மேட்குலகில் வசிப்பவர்களுக்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதம்.
நான் மிகவும் ரசித்து பார்த்த சில நாடகங்கள் இருக்கின்றன. எல்லாமே ஒரு கனவுலகில் நடப்பது போல மிக மிக பிரமாண்டமாக இருக்கும். 
லயன் கிங் , ரிவர் டான்ஸ் , பந்தோம் ஆஃ ஓப்ரா , மிஸ் சைகோன் , புக் ஆஃ மோர்மன் 
இவை நான் பார்த்த சில மேடை நாடக நிகழ்ச்சிகள்.

பல வருடங்களுக்கு முன்னர் American Express இல் வேலை செய்ததால் கிடைத்த ஒரு சலுகை . 🙏 

ஏ.ஆர் ரஹ்மான் கூட அன்றூவ் லோயிட் வெபருடன் (Andrew Lloyd Webber) சேர்ந்து ஒரு ப்ரோட்வே நிகழ்ச்சி செய்திருந்தார்.
இனிவரும் காலங்களில் ஏ.ஆர் ரஹ்மான் இது மாதிரியான நிகழ்ச்சிகளில் தான் கூடுதல் கவனம் எடுக்கப்போவதாக பேட்டி ஒன்றிலும் கூறியிருந்தார்.

இப்போது கூட டொரோண்டோவில் "ஷென் யூன்"  Shen Yun என்னும் ஒரு ப்ரோட்வே நிகழ்ச்சி நடக்கவிருக்கிறது. சுமார் 650 மேற்பட்ட கலைஞர்கள் பங்குகொள்ளும் மிக பிரமாண்டமானதொரு நிகழ்ச்சி இது.

வசதியும், சந்தர்ப்பமும் கிடைத்தால் குறைந்தது ஒன்றையாவது கண்டிப்பாக ஒவொருவரும் பார்க்கவேண்டிய நிகழ்ச்சிகள் இவை.

இதைத்தான் (மியூசிக்கல்) எங்கள் ஊரில் நாட்டிய நாடகம் என்பார்கள் ?

றஹ்மானும் அன்ரு லாயிட் வெபரும் இணைந்து படைத்த நாட்டியநாடகம் பம்பே டிரீம்ஸ்.

செஹன் யூன் அருமையான படைப்பு. இதை பலுங் கொங்கின் அங்கம் என்று சீனாவில் தடை செய்துள்ளார்கள். பார்த்துவிட்டு வெளியே வரும்போதும் மறைமுகமாக சொல்லப்பட்ட கம்யூனிஸ்ட்-எதிர் செய்திகளை நாமே இனம் காணலாம். வெளியே ஓபனாககவே பலுங்கொங் பிரசுரங்கள் இருக்கும்.

இன்னொரு அரிய படைப்பு War Horse. இதை பார்த்து அழாமால் இருக்க யாராலும் முடியாது.

7 hours ago, தமிழினி said:

சசி அண்ணா எனது மகள் Cawthra Park Art School லிலும் MERRIAM School of Music லிலும் படிக்கின்றா.  இப்போது Innovative Art School லிலும் சேர்ந்துள்ளா. மகளின் Major -Vocal அத்துடன் இப்படியான இசைநடனத்திலும் ஆர்வம் இருப்பதால் அதையும் சேர்த்து படிக்கின்றா.

Innovative Art School - Oakville லிலும் Down Town லிலும் உள்ளது. Down Town உங்களுக்கு கிட்டவாக இருக்கும். தற்போது Frozen Musical தொடங்கவுள்ளார்கள். முடிந்தால் உங்கள் மகனை அங்கு சேர்க்கலாம் சசி அண்ணா.

எதிர்காலத்தில் மேற்கத்திய இசை உலகில் முடிசூடும் தமிழ் பெண் என்ற செய்தி வரத்தான் போகிறது. இவவின் அம்மாவை எனக்கு சமூக வலைத்தளத்தில் பழக்கம் என நானும் ஓரிரு பார்டிகளில் விலாசம் காட்டத்தான் போறன். 😂

வாழ்துகள் ☘️

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Sasi_varnam said:

தமிழினி, மகள் படிக்கும் இசைக்கல்லூரியின் பெயர் என்ன?
எந்த வகையான இசை திறமையை அவர் பயிலுகிறார்?
என்னுடைய மகனையும் அப்படியான ஒன்றில் தான் சேர்ப்பதற்காக யோசித்துக்கொண்டு இருக்கிறேன்.

யோசிக்காமல்- திறமையை இனம் கண்டால் - களத்தில் இறங்குங்கள் சசி.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழினி... யாழ். களத்திலுள்ள  புத்திசாலியான பெண்.
அவரின்...... குட்டி,  இன்னும், கூட.. பாய வேண்டும், என வாழ்த்துகின்றேன். :)

  • கருத்துக்கள உறவுகள்

அன்புஉறவுகள் தமிழினி, சசிவர்ணம் ஆகியோரின் பிள்ளைகள் சகல வளமும் பெற்றுவாழ  வாழ்த்துக்கள் & பாராட்டுக்கள் .....!   🌹

Edited by suvy
சிறுத்திருத்தம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.