Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"இராணுவதளபதி சவேந்திர சில்வாவிற்கு எதிராக பயணத்தடையை அறிவித்தது அமெரிக்கா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இது பழைய காணொளி என்றாலும்.. இதில் கூறப்பட்ட விடயங்கள் குறித்து நம்மவர்கள்.. இதுவரை எந்தக் காத்திரமான அழுத்தங்களையும் சர்வதேசத்துக்கு தாயகத்தில் இருந்து வழங்கவில்லை. குறிப்பாக தமிழ் அரசியல்வாதிகள்.

இப்போது அமெரிக்காவின் தற்சார்ப்பு நடவடிக்கை ஒன்றின் பின் தான்... சிலர் சிலதைப் பேசுகின்றனர். சம் சும் மாவை சாவை கும்பல் வழமை போல் மூச். 

இவர்களா தமிழ் மக்களுக்கு நீதியும் உரிமையும் பெற்றுக்கொடுப்பார்கள்..???! 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உந்த அமெரிக்கா கிந்தி பிரதமர் மோடிக்கு போடாத தடையா?
இப்ப பாக்கேல்லையே கட்டிப்பிடிச்சுக்கொண்டு திரியுதுகள் :cool:

Bildergebnis für modi obama

Bildergebnis für modi donald trump

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

உந்த அமெரிக்கா கிந்தி பிரதமர் மோடிக்கு போடாத தடையா?
இப்ப பாக்கேல்லையே கட்டிப்பிடிச்சுக்கொண்டு திரியுதுகள் :cool:

Bildergebnis für modi obama

Bildergebnis für modi donald trump

மோடி பிச்சை எடுப்பது அப்பட்டமாய் தெரிகிறது.

  • தொடங்கியவர்

இரா­ணு­வத்­ த­ள­ப­திக்கு எதி­ரான அமெ­ரிக்கப் பய­ணத்­த­டைக்குத் தமிழ்­ மக்கள் வர­வேற்பு - விக்­கி­னேஸ்­வரன்

இராணுவத்தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சில்வாவிற்கு எதிராகக் கடந்த வாரம் விதிக்கப்பட்ட அமெரிக்கத் தடையை எவ்வாறு பார்க்கிறீர்கள் என்று விக்கினேஸ்வரனிடம் செய்தியாளர் ஒருவர் கேட்டபோது, இலங்கைத் தமிழ் மக்களின் சார்பில் பேசுவதாகக் கூறிய அவர், 10 வருடங்களுக்கும் அதிகமான காலமாக இலங்கையில் அடுத்தடுத்துப் பதவிக்கு வந்த 3 அரசாங்கங்களின் பிடிவாதப்போக்கைக் கருத்திற்கொண்டு பார்க்கும்போது இப்போது சட்டத்தின் ஆட்சி நிலைநிறுத்தப்பட வேண்டும். நீதிக்கான தமிழ் மக்களின் நேரம் வந்துவிட்டது என்று அவர் தெரிவித்திருக்கிறார்.

அவர் பதிலின் முழுவிபரம் வருமாறு:

இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வாவிற்கும், அவரது குடும்பத்தினருக்கும் எதிராக அமெரிக்கா விதித்த பயணத்தடையை வடக்கு, கிழக்குத் தமிழ் மக்கள் வரவேற்கிறார்கள். சில்வா கட்டளைப் பொறுப்பின் ஊடாக பாரதூரமான மனித உரிமை மீறல்களில் சம்பந்தப்பட்டமை தொடர்பில் கிடைக்கப்பெற்ற நம்பகமான தகவல்களின் காரணமாக அவரை அமெரிக்காவில் வேண்டத்தகாதவர் என்று பிரகடனம் செய்வதற்கு முடிவெடுத்தமைக்காக அமெரிக்க இராஜாங்க செயலர் மைக் பொம்பியோவை முழு மனதுடன் நாம் பாராட்டுகிறோம்.

2009 ஆம் ஆண்டு இலங்கையின் உள்நாட்டுப்போரின் இறுதிக்கட்டங்களில் சட்டவிரோதமான கொலைகளுக்கு சில்வா உத்தரவிட்டார் என்ற நம்பகமான குற்றச்சாட்டுக்களை பி.பி.சியின் சனல் - 4 ஆவணப்படுத்தியிருக்கிறது. 'என்னவானாலும் செய்யுங்கள். அது செய்யப்படவே வேண்டும். ஆனால் முடித்துக்கட்டப்பட வேண்டி முறையில் அதை முடித்துவிடுங்கள்' என்று அன்றைய பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸவிடமிருந்து கிடைக்கப்பெற்ற கட்டளையொன்றை சில்வா இலங்கை இராணுவத்தின் 58 ஆவது படைப்பிரிவில் தனக்குக் கீழ் பணியாற்றியவர்களுக்குத் தெரியப்படுத்தியதற்கான சான்று சனல் - 4 ஒளிபரப்பிய காணொளி அறிக்கைகளில் உள்ளடங்கியிருக்கிறது. அந்தக் கட்டளை குடிமக்களும், சரணடைந்த போராளிகளும் உட்பட (அபகீர்த்தி மிக்க வெள்ளைக்கொடி சம்பவம் உட்பட) பெரும் எண்ணிக்கையிலான தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதற்கு வழிவகுத்ததாகக் கூறப்பட்டது. எனவே அமெரிக்காவிற்குள் பிரவேசிக்க முடியாதவாறு சில்வா மீது விதிக்கப்பட்ட தடை ஏனைய நாடுகளும் பின்பற்றுவதற்கான ஒரு உதாரணமாக அமைகிறது.

போர்க்குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலையாக அமையக்கூடிய செயற்பாடுகளுக்காக இலங்கை அதிகாரிகளை சட்டத்தின் முன் நிறுத்துவதில் சர்வதேச சமூகத்திற்கு இருக்கும் கடமையையும், அமெரிக்காவின் இந்த ஆக்கபூர்வமான நடவடிக்கை மேலும் உறுதிப்படுத்துகிறது. அத்தகைய குற்றவாளிகள் என்று கூறப்படுபவர்களை விசாரிப்பதற்குக் கலப்பு நீதிமன்றம் ஒன்றை அமைக்குமாறு பணித்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் பல தீர்மானங்களுக்கு இணங்கமுடியாது என்று இலங்கை தொடர்ச்சியாகக் கூறிவந்திருக்கிறது. அப்பாவி குடிமக்களை வேண்டுமென்றே பயங்கரவாதிகள் என்று கூறிக்கொண்டு கொலை செய்வது எந்த வகையிலுமே வீரசாகசத்துக்கு ஒப்பாகிவிடாது என்பதை லெப்டினன்ட் ஜெனரல் சில்வாவை ஒரு ஹீரோவாகக் காண்பிக்க முயற்சிப்பவர்கள் விளங்கிக்கொள்ள வேண்டும்.

குற்றவியல் பொறுப்புத் தொடர்பான அத்த்கைய தெளிவான குற்றச்சாட்டுக்களுக்கு இலக்காகும் சகல அதிகாரிகளினதும் வழக்குகள் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தினால் அல்லது தகுதி வாய்ந்த எந்தவொரு சர்வதேச மன்றினால் விசாரணை செய்யப்பட வேண்டும். அத்தகைய குற்றங்கள் தொடர்பில் வழக்குத் தொடுப்பதற்கு சர்வதேச சமூகத்திற்கு இருக்கக்கூடிய அதிகாரம் (ஐக்கிய நாடுகள் சாசனத்தின் ஏழாவது அத்தியாயத்தில் உள்ளவாறான) சர்வதேச நியாயாதிக்கக் கோட்பாட்டிலும், ரோம் சட்டத்தில் கைச்சாத்திடாத நாடுகளைச் சேர்ந்த பிரஜைகளுக்கு எதிராக அந்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான சட்ட நடைமுறையிலும் குறித்துரைக்கப்பட்டிருக்கிறது.

10 வருடங்களுக்கும் அதிகமான காலமாக அடுத்தடுத்துப் பதவிக்கு வந்த 3 இலங்கை அரசாங்கங்களின் பிடிவாதத்தைக் கருத்திற்கொண்டு நோக்கும் போது இப்போது சட்டத்தின் ஆட்சி கட்டாயம் நிலைநிறுத்தப்பட வேண்டும். நீதிக்கான தமிழ் மக்களின் தருணம் வந்துவிட்டது என்று கூறியுள்ளார்.

https://www.virakesari.lk/article/75879

  • தொடங்கியவர்

அமெரிக்காவின் தடையை விட அதன் பதிலே பலமானது

இலங்கையின் இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவும் அவரது குடும்பத்தினரும் அமெரிக்காவுக்குள் நுழைவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் இந்த அதிரடி நடவடிக்கை இலங்கை அரசுக்கான முதலாவது எச்சரிக்கை எனலாம்.
 
ஏலவே சவேந்திர சில்வாவை இராணுவத் தளபதியாக நியமித்தமை தொடர்பில் சர்வதேச அளவில் கடும் எதிர்ப்பு ஏற்பட்டிருந்தது. போர்க்குற்றம் புரிந்தவர் என்று குற்றம் சாட்டப்பட்ட ஒருவரை இராணுவத் தளபதியாக நியமிப்பது நியாயமாகாதென்ற அடிப்படையில், சவேந்திர சில்வாவுக்கான எதிர்ப்பு சர்வதேச மட்டத்தில் வலுப் பெற்றிருந்தது. எனினும் இதனைப் பொருட்படுத்தாமல் இராணுவத் தளபதியாக அவர் நியமிக்கப் பட்டார்.
 
இவ்வாறு நியமிப்பதன் மூலம், சர்வதேசத் தின் எதிர்ப்பைத் தாம் பொருட்படுத்தவில்லை என்பதை உலகுக்குக் கூறுவது இலங்கை ஆட்சி யாளர்களின் முதன்மை நோக்கமாக இருந்தது. இதுதவிர, சர்வதேச நாடுகளின் எதிர்ப்பு சிறிது காலம் மட்டுமே நின்று நிலைக்கும். பின்னர் அது மறக்கப்பட்ட விடயமாகிப் போய் விடும் என்ற நினைப்பிலும் சவேந்திர சில்வா இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டார்.
 
நிலைமை இதுவாக இருக்கையில், இலங்கை இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவும் அவரது குடும்பத்தினரும் அமெரிக்காவுக்குள் நுழைய முடியாது என அமெரிக்கா அதிரடியாக அறிவித்தது.
 
ஒரு நாட்டின் இராணுவத் தளபதியாக இருக்கக்கூடிய ஒருவரைத் தனது நாட்டுக்குள் நுழைய விட முடியாது என இன்னொரு நாடு அறிவிக்குமாக இருந்தால், சம்பந்தப்பட்ட இராணுவத் தளபதிக்கு அதைவிட்ட அவ மானம் வேறு எதுவுமாக இருக்க முடியாது.
 
இந்நிலையிலேயே அமெரிக்கத் தூதுவர் களை அழைத்து சவேந்திர சில்வா மீது அமெ ரிக்கா விதித்த தடையை நீக்குமாறு இலங்கை அரசாங்கம் கேட்டுள்ளது. இவ்வாறு கேட்கப்பட்டதற்கு, சவேந்திர சில்வா போர்க்குற்றம் புரிந்ததற்கான ஆதாரம் தம்மிடம் உள்ளதாக அமெரிக்காவின் பதில் அமைந்தது.
 
இவ்வாறு அமெரிக்கா தெரிவித்த பதிலா னது அந்த நாடு சவேந்திர சில்வாவுக்கு விதித்த தடையை விட, காத்திரமும் கனதியு மானது என்பதுதான் இங்கு கவனிக்கப்பட வேண்டிய விடயமாகும்.
 
அதாவது, இலங்கையின் இராணுவத் தளபதியாக இருக்கக்கூடியவர் போர்க்குற்றம் புரிந்தவர் என அமெரிக்கா கூறுகிறது  என்றால், இலங்கை ஆட்சியாளர்கள் எவ்வாறாக தங்கள் அதிகாரத்தை சிறுபான்மைத் தமிழ் மக்கள் மீது பிரயோகிக்கின்றனர் என்பது வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
 
  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, Kapithan said:

மோடி பிச்சை எடுப்பது அப்பட்டமாய் தெரிகிறது.

மோடியைத் தேடிப் போனது டிரம்...அவர் தான் பிச்சை எடுத்து திரியிறார் 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

மோடியைத் தேடிப் போனது டிரம்...அவர் தான் பிச்சை எடுத்து திரியிறார் 

உங்கள் முசுப்பாத்திக்கு அளவேயில்ல. இரதிக்கு எந்த நேரமும் பகிடிதான். 😜

  • கருத்துக்கள உறவுகள்
On ‎2‎/‎18‎/‎2020 at 10:38 PM, Kapithan said:

உங்கள் முசுப்பாத்திக்கு அளவேயில்ல. இரதிக்கு எந்த நேரமும் பகிடிதான். 😜

 

மோடியைத் தேடிப் போனது யாரு ?...நிழலி ஏற்கனவே எழுதியது தான் ...டிரம்ப் முதலில் ஒரு வியாபாரி🤣 ...பிறகு தான் ஜனாதிபதி
 

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, ரதி said:

 

மோடியைத் தேடிப் போனது யாரு ?...நிழலி ஏற்கனவே எழுதியது தான் ...டிரம்ப் முதலில் ஒரு வியாபாரி🤣 ...பிறகு தான் ஜனாதிபதி
 

இரதிக்கு பகிடி கூடிப்போச்சு. 😀

  • கருத்துக்கள உறவுகள்
On 2/16/2020 at 9:39 PM, ampanai said:

எதிர்காலத்தில் இதே நிலைமை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ உள்ளிட்ட ஏனைய முக்கியஸ்தர்களுக்கும் ஏற்படாலம் என்று அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடங்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளன.

அங்க நிக்குது சிங்களத்தின் நாடித்துடிப்பு. நடுங்குதில்ல?... ஆயத்தமாகுவது நல்லது. எவ்வளவு வீறவாப்பு பேசினாலும், ஒருநாள் எல்லாம் கலையும். எதுக்கும் தமிழன் வாக்கு முக்கியம். பாத்து நடவுங்காே.....ம்.

  • தொடங்கியவர்

அமேரிக்கா : தனக்கு இன்று சிங்களம் மீது ஒரு அழுத்தத்தை பிரயோகிக்க எண்ணி இந்த முடிவை எடுத்துள்ளது. 

என்ன அழுத்தம் : சோபா மற்றும் எம்.சி.சி. போன்ற உடன்படிக்கைகளை முன்னெடுத்தல் 

சிங்களம் : இறுதியில் இந்தியாவின் ஊடாக ஒரு விட்டுக்கொடுப்பை எடுக்கும் 

சீனா: இன்றும் சிங்களத்திற்கும் உதவ எண்ணுகின்றது, ஆனால், கொரோனா வைரஸால் பலவீனமாக்கப்பட்டுள்ளது. 

தமிழர் தரப்பு : போர்க்குற்றம் என்பதை இன்று ஏற்றுக்கொண்ட நிலையில் இருந்து இனப்படுகொலை என்பதை ஏற்க வைத்தல் 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.