Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இஸ்ரேலில் பராமரிப்பு தொழில் துறையில் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு!

Featured Replies

தகுதி பெற்ற இலங்கையர்களுக்கு பராமரிப்பு சேவை தொழில் துறையில் தொழில் வாய்ப்பை பெற்றுக்கொள்வதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கையில் இஸ்ரேல் அரசாங்கமும் இலங்கை அரசாங்கமும் கைச்சாத்திட்டுள்ளது.

இது தொடர்பான நிகழ்வு கடந்த 24 ஆம் திகதி இஸ்ரேலில் ஜெருசலேமில் உள்ள அந் நாட்டு வெளிநாட்டு அலுவலகத்தில் இடம்பெற்றது.

இஸ்ரேல் அரசாங்கத்தின் சார்பில் இந்த ஒப்பந்தத்தில் அந் நாட்டு வெளிநாட்டு அமைச்சின் சார்பில் உள்நாட்டு அமைச்சர் ஆர்ய மௌலப் டெரி (Aryeh Machluf Deri) கைச்சாத்திட்டார்.

இலங்கையின் சார்பில் செயல்திறன் அபிவிருத்தி தொழில் மற்றும் தொழில் பாதுகாப்பு வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் தினேஸ் குணவர்தன சார்பில் திறனாற்றல் அபிவிருத்தி, தொழில் மற்றும் தொழில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் சரத் அபே குணவர்தன கைச்சாத்திட்டார்.

இஸ்ரேலில் வெளிநாட்டு பணியாளர்களை இணைத்துக்கொள்ளுதல் மற்றும் தற்காலிக தொழில்துறையில் ஈடுபடுத்தல், இஸ்ரேலில் நடைமுறையில் உள்ள சட்டம், இஸ்ரேல் தேசிய மனித வள சந்தை நிலைமை மற்றும் வெளிநாட்டு ஊழியர் தொழில்வாய்ப்புக்கான பகிரங்க பிரிவு தொடர்பில் இஸ்ரேல் அரசாங்கத்தின் கொள்கையைப் போன்று தற்காலிக வெளிநாட்டு ஊழியர்களுக்கு வருடாந்த கோட்டா மற்றும் ஒவ்வொரு தொழில் வாய்ப்புக்கான அனுமதிப் பத்திரம் வழங்குவதற்காக இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/76687

  • தொடங்கியவர்
5 minutes ago, ampanai said:

தகுதி பெற்ற இலங்கையர்களுக்கு பராமரிப்பு சேவை தொழில் துறையில் தொழில் வாய்ப்பை பெற்றுக்கொள்வதற்கான... 

ஒரு பல்லின சமூக நாடாக இஸ்ரேலின் வளர்ச்சி உலகையே திரும்பி பார்க்க வைத்துள்ளது. 

உலகம் இலங்கையையும் பார்க்கின்றது, ஆனால் ? "பராமரிப்பு சேவை தொழில் " செய்ப்பவர்களை இறக்குவதற்கு !!

இஸ்ரேல் உருவான ஆண்டு - 1948 
இலங்கை உருவாக்கப்பட்ட ஆண்டு - 1948 

நிலப்பரப்பு இஸ்ரேல்  :: 20,770–22,072 km2
நிலப்பரப்பு இலங்கை :: 65,610 km2

சனத்தொகை  இஸ்ரேல்  :: 9 மில்லியன்கள் 
சனத்தொகை  இலங்கை :: 22 மில்லியன்கள் 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ampanai said:

இந்த எண்ணிக்கைகளுக்கும் செய்திக்கும் உள்ள சம்பத்தத்தையும் எழுதி இருக்கலாமே?

9 மில்லியன் சனத்தொகை கொண்ட இஸ்ரேலில் வேலைகளுக்கு மேலதிக ஆட்கள் தேவை.

22 மில்லியன் சனத்தொகை கொண்ட இலங்கையில் பெருமளவு ஆட்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை. ஆகவே இந்த செய்தி சாத்தியமானது. மற்ற எண்ணிக்கைகளுக்கும் இந்த செய்திக்கும் என்ன சம்பந்தம்?

2 hours ago, ampanai said:

அதுக்கெல்லாம் மண்டையில சரக்கு இருக்க வேண்டும்। 1948 இல் உருவாகிய நாடு மூளையை பாவித்து இன்று உலகின்  மிகச்  சிறந்த , பொருளாதாரத்தில் தன்னிறைவு கண்ட, அதி கூடிய தனி   மனித வருமானம்  கொண்ட நாடாக மாறிவிட்ட்து।

  நமது நாடடை உருவாக்கியே நம்மிடம் வெள்ளைக்காரன் கொடுத்து விட்டு போனான்। இனவாதம் , மதவாதம் , பெரும்பான்மை , சிறுபான்மை எண்டு  எல்லாம்  பேசி சிங்கள தலைமைகள் நாடடை குட்டிசுவராக்கிவிட்டுதுகள்।

 இருந்தாலும் இஸ்ரவேலுக்கு கூலி வேலைக்கு போனாலும் நல்ல சம்பளமும் , வசதிகளும் கிடைக்கும்। 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Vankalayan said:

அதுக்கெல்லாம் மண்டையில சரக்கு இருக்க வேண்டும்। 1948 இல் உருவாகிய நாடு மூளையை பாவித்து இன்று உலகின்  மிகச்  சிறந்த , பொருளாதாரத்தில் தன்னிறைவு கண்ட, அதி கூடிய தனி   மனித வருமானம்  கொண்ட நாடாக மாறிவிட்ட்து।

  நமது நாடடை உருவாக்கியே நம்மிடம் வெள்ளைக்காரன் கொடுத்து விட்டு போனான்। இனவாதம் , மதவாதம் , பெரும்பான்மை , சிறுபான்மை எண்டு  எல்லாம்  பேசி சிங்கள தலைமைகள் நாடடை குட்டிசுவராக்கிவிட்டுதுகள்

இசுரேலில் பெரும்பான்மை யூதர்கள் சிறுபான்மை பாலஸ்தீன அரபிகளை அடித்து அடக்கி ஆரம்பம் முதலே தலை எடுக்க விடாமல் வைத்து இருப்பதால் இசுரேலால் முன்னேற முடிந்தது.

பிரபாகரன் காலத்தில் இலங்கையில் சிறுபான்மை தமிழர்களை பெரும்பான்மை சிங்களவர்களால் முப்பது வருடமாக இபப்டி அடக்கி வைக்க முடியாமல் போனதால் இந்த தமிழர்கள் பெரும் அழிவையும் செய்து நாட்டையும் முன்னேற விடவில்லை. இப்ப தானே கோத்தபாய ஜனாதிபதி ஆகி இருக்கிறார். அடுத்த ஐம்பது வருடத்தில் பலஸ்தீனரிலும் கீழாக சிறுபான்மை தமிழரை அடக்கி ஒடுக்கி வைத்து விட்டு சிங்களவர் உயர்ந்து காட்டுவார்கள். அதன் பிறகு ஒப்பிட்டு பாருங்கள்.

  • தொடங்கியவர்
4 hours ago, கற்பகதரு said:

இந்த எண்ணிக்கைகளுக்கும் செய்திக்கும் உள்ள சம்பத்தத்தையும் எழுதி இருக்கலாமே?

9 மில்லியன் சனத்தொகை கொண்ட இஸ்ரேலில் வேலைகளுக்கு மேலதிக ஆட்கள் தேவை.

22 மில்லியன் சனத்தொகை கொண்ட இலங்கையில் பெருமளவு ஆட்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை. ஆகவே இந்த செய்தி சாத்தியமானது. மற்ற எண்ணிக்கைகளுக்கும் இந்த செய்திக்கும் என்ன சம்பந்தம்?

ஒரு பல்லின சமூக நாடாக இஸ்ரேலின் வளர்ச்சி உலகையே திரும்பி பார்க்க வைத்துள்ளது. அந்த நாட்டின் வளர்ச்சி, அதாவது மூளையை வைத்து, அபரீதமானது 

அதே வயதை உடைய இலங்கை, அன்று  இரு லீ குவான் யூவால் பாராட்டப்பட்ட  நாடு இன்றி சிங்கப்பூருக்கும் அதே பராமரிப்பு வேலையாக்கு ஆட்களை அனுப்பும் நிலை. இப்படியே அடுக்கிய வண்ணம் செல்லலாம். 

அதிகம் மக்கள் தொகையை கொண்ட தென் கொரியாவிற்கும் ஜப்பானுக்கும் கூட பராமபரிப்பு வேலை அனுப்புகின்றோம்.   

  • தொடங்கியவர்
2 hours ago, கற்பகதரு said:

இசுரேலில் பெரும்பான்மை யூதர்கள் சிறுபான்மை பாலஸ்தீன அரபிகளை அடித்து அடக்கி ஆரம்பம் முதலே தலை எடுக்க விடாமல் வைத்து இருப்பதால் இசுரேலால் முன்னேற முடிந்தது.

பிரபாகரன் காலத்தில் இலங்கையில் சிறுபான்மை தமிழர்களை பெரும்பான்மை சிங்களவர்களால் முப்பது வருடமாக இபப்டி அடக்கி வைக்க முடியாமல் போனதால் இந்த தமிழர்கள் பெரும் அழிவையும் செய்து நாட்டையும் முன்னேற விடவில்லை. இப்ப தானே கோத்தபாய ஜனாதிபதி ஆகி இருக்கிறார். அடுத்த ஐம்பது வருடத்தில் பலஸ்தீனரிலும் கீழாக சிறுபான்மை தமிழரை அடக்கி ஒடுக்கி வைத்து விட்டு சிங்களவர் உயர்ந்து காட்டுவார்கள். அதன் பிறகு ஒப்பிட்டு பாருங்கள்.

1983 ஆண்டு வரை என்ன நடந்தது என்பது உங்களுக்கும் தெரியும். 

  • கருத்துக்கள உறவுகள்

வட ஆபிரிக்க சட்ட விரோத குடியேற்றவாசிகளை பலவந்தமாக வ்ளியேற்றும் இஸ்ரவேல், இத்தனை ஆயிரம் மைல்கள் கடந்து இலங்கையைக் குறிவைக்கக் காரணம் என்ன ? 

சோழியன் குடுமி சும்மா ஆடாதே ?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ampanai said:

1983 ஆண்டு வரை என்ன நடந்தது என்பது உங்களுக்கும் தெரியும். 

பாலும் தேனும் ஆறாக ஓடியது..... மோட்டுத் தமிழர்களுக்கு அதனை அள்ளிப் பருகத் தெரியவில்லை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 hours ago, கற்பகதரு said:

இசுரேலில் பெரும்பான்மை யூதர்கள் சிறுபான்மை பாலஸ்தீன அரபிகளை அடித்து அடக்கி ஆரம்பம் முதலே தலை எடுக்க விடாமல் வைத்து இருப்பதால் இசுரேலால் முன்னேற முடிந்தது.

அங்கை இஸ்ரேல் முழுக்க முழுக்க தனிய நிண்டு வேர்த்து விறுவிறுக்க வேலை செய்து முன்னேறேல்லை. பின்னுக்கு உந்து சக்தியாய் அமெரிக்கா,பிரித்தானியா போல  பணக்கார நாடுகள் மிண்டு குடுத்ததும் ஒரு முக்கிய காரணம். அதோடை நாசிகளாலை பாதிப்பப்பட்ட இனமெண்ட பரிதாப அலை இப்பவும் வேலை செய்யுது.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ampanai said:

ஒரு பல்லின சமூக நாடாக இஸ்ரேலின் வளர்ச்சி உலகையே திரும்பி பார்க்க வைத்துள்ளது.    

பல்லின சமுகம் என்று சொல்லியிருக்கின்றீர்கள் .......ஏற்றுகொள்ளமுடியவில்லை.....யூதர்கள் தானே அட்டகாசம் அங்கு....

  • தொடங்கியவர்
6 minutes ago, putthan said:

பல்லின சமுகம் என்று சொல்லியிருக்கின்றீர்கள் .......ஏற்றுகொள்ளமுடியவில்லை.....யூதர்கள் தானே அட்டகாசம் அங்கு....

விக்கிப்பீடியாவில் பார்த்துத்தான் எழுதினேன் :

https://en.wikipedia.org/wiki/Israel

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Kapithan said:

வட ஆபிரிக்க சட்ட விரோத குடியேற்றவாசிகளை பலவந்தமாக வ்ளியேற்றும் இஸ்ரவேல், இத்தனை ஆயிரம் மைல்கள் கடந்து இலங்கையைக் குறிவைக்கக் காரணம் என்ன ? 

சோழியன் குடுமி சும்மா ஆடாதே ?

முஸ்லீம்கள் மத்திய கிழக்கு நாடுகளில் பணிபுரிந்து பணம் சம்பாதித்து தாயகத்தில் பெரிய பள்ளிவாசல்களை கட்டுகிறார்கள்.....அதே போன்று சிங்கள பெளத்தர்களும் முன்னேற வேண்டும் என்ற தினேஸ் குணவர்த்தாவின்  புரட்சிகர சிந்தனையாக இருக்க கூடும்..

2 minutes ago, ampanai said:

விக்கிப்பீடியாவில் பார்த்துத்தான் எழுதினேன் :

https://en.wikipedia.org/wiki/Israel

பல்லினசமுகங்களையும் ஒன்றிணைத்து வன்முறையற்ற நாடாக இருந்தால் ,அதை பல்லின சமுக நாடு என்று சொல்லலாம் என நான் நினைக்கிறேன்

  • தொடங்கியவர்
3 hours ago, குமாரசாமி said:

அங்கை இஸ்ரேல் முழுக்க முழுக்க தனிய நிண்டு வேர்த்து விறுவிறுக்க வேலை செய்து முன்னேறேல்லை. பின்னுக்கு உந்து சக்தியாய் அமெரிக்கா,பிரித்தானியா போல  பணக்கார நாடுகள் மிண்டு குடுத்ததும் ஒரு முக்கிய காரணம். அதோடை நாசிகளாலை பாதிப்பப்பட்ட இனமெண்ட பரிதாப அலை இப்பவும் வேலை செய்யுது.

உலகில் பரந்து பலமாக அத்துடன் ஓரளவிற்கு ஒற்றுமையாக உள்ளார்கள். மேலாக, ஒருவரை ஒருவர், தமக்குள் ஊக்குவிக்கும் பண்பும் உள்ளது. முக்கியமாக, இவர்களுக்கு பெரிதாக உழைக்கவும், உழைப்பதில் ஒரு பகுதியை நாடு/இனம்/மொழி தேவைக்கு ஒதுக்கவும், தம் தம் நாடுகளில் அரசியல் முன்னெடுப்புக்களை பலமாக முன்னெடுக்கவும் தெரியும்.

இறுதியாக, இசுரேல் மத்திய கிழக்கில் ஒரே ஒரு சனநாயக நாடு என்ற பெயரும் பலமும் கொண்டது.

7 minutes ago, putthan said:

பல்லினசமுகங்களையும் ஒன்றிணைத்து வன்முறையற்ற நாடாக இருந்தால் ,அதை பல்லின சமுக நாடு என்று சொல்லலாம் என நான் நினைக்கிறேன்

அப்படி பார்த்தால் உலகில் ஒரு நாடும் இருக்க முடியாது ( எது வன்முறை என்பதில் வேறுபடமால் பார்த்தல்) 🙂 

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, ampanai said:

உலகில் பரந்து பலமாக அத்துடன் ஓரளவிற்கு ஒற்றுமையாக உள்ளார்கள். மேலாக, ஒருவரை ஒருவர், தமக்குள் ஊக்குவிக்கும் பண்பும் உள்ளது. முக்கியமாக, இவர்களுக்கு பெரிதாக உழைக்கவும், உழைப்பதில் ஒரு பகுதியை நாடு/இனம்/மொழி தேவைக்கு ஒதுக்கவும், தம் தம் நாடுகளில் அரசியல் முன்னெடுப்புக்களை பலமாக முன்னெடுக்கவும் தெரியும்.

இறுதியாக, இசுரேல் மத்திய கிழக்கில் ஒரே ஒரு சனநாயக நாடு என்ற பெயரும் பலமும் கொண்டது.

அப்படி பார்த்தால் உலகில் ஒரு நாடும் இருக்க முடியாது ( எது வன்முறை என்பதில் வேறுபடமால் பார்த்தல்) 🙂 

இன ஒடுக்குமுறை ,இன வன்முறை, வேறு இனத்தை வன்மறையால் (முக்கியமாக சிறுபான்மையினரை)ஒடுக்குதல்

15 minutes ago, ampanai said:

இறுதியாக, இசுரேல் மத்திய கிழக்கில் ஒரே ஒரு சனநாயக நாடு என்ற பெயரும் பலமும் கொண்டது.

ஜனநாயக நாடு கேள்விக்குறி.....அது சரி உலகில் ஜனநாயகமே கேள்விக்குறியாக இருக்கும் பொழுது நாங்கள் இஸ்ரேலை ஜனநாயக என்று சொல்வதில் தப்பில்லை....

  • தொடங்கியவர்

இலங்கையர்கள், மத்திய கிழக்கில் மட்டுமல்ல தென் கொரியா, ஜப்பான் போன்ற நாடுகளிலும் அதிகமாக உழைத்து இலங்கை பொருளாதாரத்திற்கு பலம் சேர்த்து வருகின்றனர். 

இதை அரசும் ஊக்குவிற்கின்றது. அதற்கென ஒரு அலுவலகம் அமைச்சு. 

Remittances in Sri Lanka decreased to 515.30 USD Million in November from 607 USD Million in October of 2019. Sri Lanka Remittances - data, historical chart, and calendar of releases - was last updated on February of 2020 from its official source.

Sri Lanka Remittances

https://tradingeconomics.com/sri-lanka/remittances

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.