Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலகத் தொலைத்தொடர்பு சந்தையில் சாதனைகளை தனதாக்கிக் கொள்ளும் லைக்கா!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

masmovil-compra-lycamobile-espana_thumb_728.jpg

உலகத் தொலைத்தொடர்பு சந்தையில் சாதனைகளை தனதாக்கிக் கொள்ளும் லைக்கா!

உலகின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு வலையமைப்பைக் கொண்ட லைக்கா தொலைத்தொடர்பு நிறுவனம் (lycamobile network) தனது ஸ்பெயின் நாட்டின் தொலைத்தொடர்பு வலையமைப்பை விற்பனை செய்வதாக மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளது.

ஸ்பெயின் நாட்டின் மிகப்பெரிய பொதுத் தொலைத்தொடர்பு நிறுவனமாகப் பட்டியலிடப்பட்டுள்ள Masmovil நிறுவனம், லைக்கா தொலைத்தொடர்பு நிறுவனத்தின் ஸ்பெயின் நிறுவனத்தை, இலங்கை ரூபாய் 7600 கோடி (76 பில்லியன்) பெறுமதியில் கொள்வனவு செய்ததன் மூலம் ஸ்பெயினில் லைக்காவின் நீண்ட கால இருப்பு தக்கவைத்துக்கொள்ளப்படுகிறது என்பதும் வரலாறாகிறது.

2010ஆம் ஆண்டு ஸ்பெயினில் தன்னை நிலை நிறுத்திய லைக்கா தொலைத்தொடர்பு நிறுவனம் (lycamobile) மிகக் குறைந்த கட்டணத்தில் தனது உயர்தரமான சேவையை விரிவுபடுத்தியது.

இதன்மூலம் 1.5 மில்லியன் பாவனையாளர்களைத் தன்னகத்தே கொண்ட பிரமாண்டமான MVNO சேவையைக் கொண்ட நிறுவனமாக லைக்கா தொலைத்தொடர்பு நிறுவனம் (lycamobile) உருவெடுத்தது.

இதுவே ஸ்பெயினின் மாஸ்மோவில் (Masmovil) நிறுவனம் லைக்கா நிறுவனத்தின் ஸ்பெயின் வலையமைப்பைக் கொள்வனவு செய்வதற்கு ஏதுவாக அமைந்தது. இதன்மூலம் தொலைத்தொடர்பு சேவைச் சந்தையில் லைக்காமொபைல் (lycamobile) சாதனை படைத்துள்ளது.

இந்தப் பரிவர்த்தனை குறித்து லைகா குழுமத்தின் நிறுவனரும் தலைவருமான கலாநிதி அல்லிராஜா சுபாஸ்கரன் அவர்கள் தெரிவிக்கையில் ‘நாங்கள் ஸ்பெயினுக்குள் நுழைந்தபோது, நாட்டின் மிகப் பெரிய MVNO வை அதிஉயர் தரமான சேவையாகவும், குறைந்த கட்டணத்திலான தொலைத்தொடர்புச் சேவையாகவும் கட்டியெழுப்ப வேண்டும் எனக் கனவு கண்டோம். அந்தக் கனவு நனவாகி இப்போது அந்த பணியில் நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம்’ எனத் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் ஸ்பெயினில் லைக்கா தொலைத்தொடர்புச் சேவையை மாஸ்மோவில் (Masmovil) நிறுவனம் கொள்வனவு செய்வதென்பது லைக்காவின் உலகளாவிய வெற்றியை உறுதிப்படுதிப்படுத்தி உள்ளது.

அத்துடன் மாஸ்மோவில் (Masmovil) நிறுவனம், லைகாமொபைல் இலட்சினையை (Brand) நீண்ட காலத்திற்கு தக்கவைத்துக் கொள்ள இணங்கியிருப்பது, லைக்காவின் நிறுவனத்தின் பெருமிதமாகவும் கொள்ளப்படுகின்றது.

இதேவேளை மாஸ்மோவில் நிறுவனம் (Masmovil) ஸ்பெயினில் மிகச் சிறந்த மற்றும் தொடர்ச்சியான வெற்றிகளைப் பெற்று வளர்ச்சி அடையவேண்டும் என, லைகா குழுமத்தின் நிறுவனரும் தலைவருமான கலாநிதி அல்லிராஜா சுபாஸ்கரன் அவர்கள் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான தொடர் வெற்றிகளைத் தனதாக்கும் லைக்கா நிறுவனம் தொடர்ந்தும் உலக அளவில் 23 நாடுகளின் தொலைத்தொடர்புச் சந்தைகளில் பிரமாண்ட செயற்பாட்டை தக்கவைத்துள்ளதுடன், புதிய நாடுகளில் தனது சேவையை விரிவாக்கும் உற்சாகமான செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளது.

இந்தப் புதிய நுழைவுகளின் மூலம் லைக்கா தொலைத்தொடர்பு நிறுவனம் (lycamobile network) உலகளாவிய இருப்பைக் கட்டியெழுப்புவதில் கவனம் செலுத்தியுள்ளது.

மேலும் உகண்டாவில் அண்மையில் ஆரம்பித்த MNO சேவையின் மூலம் தெலைத்தொடர்பு தொழில்துறையில் லைகாமொபைல், தனது அடுத்த கட்ட நகர்வையும், திறனையும் வெளிப்படுத்தியுள்ளது.

http://athavannews.com/உலகத்-தொலைத்தொடர்பு-சந்த/

  • கருத்துக்கள உறவுகள்

கலாநிதி அல்லிராஜா சுபாஷ்கரன் ?????? எங்க பட்டம் பெற்றவர் :unsure:

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ரதி said:

கலாநிதி அல்லிராஜா சுபாஷ்கரன் ?????? எங்க பட்டம் பெற்றவர் :unsure:

அவரது அம்மாவுக்கு அமெரிக்காவில் கொடுத்தார்கள் தாயும் மகனும் பிரித்து எடுத்து இருப்பார்களோ??

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, விசுகு said:

அவரது அம்மாவுக்கு அமெரிக்காவில் கொடுத்தார்கள் தாயும் மகனும் பிரித்து எடுத்து இருப்பார்களோ??

முடியல்ல காசிருந்தால் என்னத்தையும் வேண்டலாம் ...எதுக்கு மினக்கெட்டு படிக்க வேண்டும் 😞

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, ரதி said:

முடியல்ல காசிருந்தால் என்னத்தையும் வேண்டலாம் ...எதுக்கு மினக்கெட்டு படிக்க வேண்டும் 😞

எதுவெண்டாலும்  பணம் சம்பாதிக்க தெரிந்து இருக்கணும் சிலோனிலை ஓசியில் படிப்பு படித்தபின் இவ்வளவு துள்ளுவது டூமச் இலவச கல்வி பரீட்ச்சை என்பதே சுய சிந்தனையை மழுங்கடிக்கும் செயல் பாடு .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
25 minutes ago, ரதி said:

கலாநிதி அல்லிராஜா சுபாஷ்கரன் ?????? எங்க பட்டம் பெற்றவர் :unsure:

கோடம்பாக்கத்துக்கை உள்ளுட்டால் எல்லா பட்டங்களும் தானாய் வீடு தேடி வரும்.

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, பெருமாள் said:

எதுவெண்டாலும்  பணம் சம்பாதிக்க தெரிந்து இருக்கணும் சிலோனிலை ஓசியில் படிப்பு படித்தபின் இவ்வளவு துள்ளுவது டூமச் இலவச கல்வி பரீட்ச்சை என்பதே சுய சிந்தனையை மழுங்கடிக்கும் செயல் பாடு .

ஓங்கட பொஸ்சா இவர் இப்படி கோபம் வருது ....நீங்கள் லண்டனில் பிறந்து ,பிரைவேட் ஸ்கூ லில் படித்து ,பணத்தில் மிதவுங்கோ ...எனக்கு பொறாமை 

13 minutes ago, குமாரசாமி said:

கோடம்பாக்கத்துக்கை உள்ளுட்டால் எல்லா பட்டங்களும் தானாய் வீடு தேடி வரும்.

அதுவும் கலாநிதி பட்டம் ...கஷ்டப்பட்டு படித்து  அந்த பட்டத்தை எடுத்தவர்களது நிலைமை 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ரதி said:

ஓங்கட பொஸ்சா இவர் இப்படி கோபம் வருது ....நீங்கள் லண்டனில் பிறந்து ,பிரைவேட் ஸ்கூ லில் படித்து ,பணத்தில் மிதவுங்கோ ...எனக்கு பொறாமை 

நாளைக்கு உங்களுக்கு லீவு போல் உள்ளது 😀 என்னுடைய பாஸ் இவர் கிடையாது அல்லி சுபாசின் தவறான அணுகுதல்களை யாழில் பலவிடங்களில் பதிவிட்டு  உள்ளேன் முக்கியமாய் 5g  வரும்போது இவரின் தவறான ஆட்டம் பிச்சை காரனாக்கி விட்டு விடும் என்பதை பலவிடங்களில் சுட்டி காட்டி உள்ளேன் இப்பவும் காலம் போகவில்லை தமிழ்நாட்டு சினிமாவை கை விட்டால் அவருக்கு நல்வாழ்வு உண்டு .

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, ரதி said:

கலாநிதி அல்லிராஜா சுபாஷ்கரன் ?????? எங்க பட்டம் பெற்றவர் :unsure:

மலேசிய பல்கலைக்கழகம் ஒன்றில்......

  • கருத்துக்கள உறவுகள்

அல்லிராஜாவின் பட்டத்தின் மீதான நிஜமான கோபமா அல்லது அல்லிராஜாவின் வெற்றியின் மீதான காழ்ப்புணர்வா இங்குள்ளோருக்கு ? 

(பி.கு.: திரியக் கொழுத்தியாச்சு ஓடி ஒழிவோம் 😜)

  • கருத்துக்கள உறவுகள்

நடிகர் கமல்ஹாசனுக்கு, கலைஞர் கருணாநிதிக்கு , மஹிந்த ராஜபக்சேவுக்கு, Nelson Mandela இப்படி கண பேருக்கு டொக்டர் பட்டம் ஒரு கௌரவ பட்டமாக கொடுத்திருக்கிறார்கள். அது கல்வி தகமை சார்ந்து கொடுக்கப்படும் விருதல்ல. 
குழுக்களின் சிபாரிசின் அடிப்படையிலும், அவர்கள் கொடுக்கும் ஒரு சொச்ச நன்கொடையின் $$$$$ அடிப்படையிலும் வழங்கப்படும் பட்டம் மட்டுமே இது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
29 minutes ago, பெருமாள் said:

நாளைக்கு உங்களுக்கு லீவு போல் உள்ளது 😀 என்னுடைய பாஸ் இவர் கிடையாது அல்லி சுபாசின் தவறான அணுகுதல்களை யாழில் பலவிடங்களில் பதிவிட்டு  உள்ளேன் முக்கியமாய் 5g  வரும்போது இவரின் தவறான ஆட்டம் பிச்சை காரனாக்கி விட்டு விடும் என்பதை பலவிடங்களில் சுட்டி காட்டி உள்ளேன் இப்பவும் காலம் போகவில்லை தமிழ்நாட்டு சினிமாவை கை விட்டால் அவருக்கு நல்வாழ்வு உண்டு .

தமிழ்ப்படம் எடுத்த தயாரிப்பாளர்மார் நல்லாய் இருக்கிறதாய் நான் கேள்விப்படேல்லை. 😎

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

உலகத் தொலைத்தொடர்பு சந்தையில் சாதனைகளை தனதாக்கிக் கொள்ளும் லைக்கா!

உலகின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு வலையமைப்பைக் கொண்ட லைக்கா தொலைத்தொடர்பு நிறுவனம் (lycamobile network) தனது ஸ்பெயின் நாட்டின் தொலைத்தொடர்பு வலையமைப்பை விற்பனை செய்வதாக மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளது.

ஸ்பெயின் நாட்டின் மிகப்பெரிய பொதுத் தொலைத்தொடர்பு நிறுவனமாகப் பட்டியலிடப்பட்டுள்ள Masmovil நிறுவனம், லைக்கா தொலைத்தொடர்பு நிறுவனத்தின் ஸ்பெயின் நிறுவனத்தை, இலங்கை ரூபாய் 7600 கோடி (76 பில்லியன்) பெறுமதியில் கொள்வனவு செய்ததன் மூலம் ஸ்பெயினில் லைக்காவின் நீண்ட கால இருப்பு தக்கவைத்துக்கொள்ளப்படுகிறது என்பதும் வரலாறாகிறது.

செய்தியின் உள்ளடக்கத்திலும், அது கூறவரும் தாக்கத்திலுமே முரண்பாடுகள் உள்ளது.

ஸ்பெயின் இல் இருக்கும் தனக்கான பிடியை லைக்கவோ (அல்லது வேறு எந்த நிறுமவனோமோ), ஸ்பெயின் இன் மிகப்பெரிய தொலை தொடர்பு நிறுவனத்திற்கு வீட்ற்கும் போது, லைக்காவின் பிடி ஆகக் குறைந்தது ஸ்பெயின் தொலைத்தொடர்பு சந்தையில் இருந்து முற்றாக நீங்கி விடுகிறது.

லைக்காவின் business model ஆட்டம் கண்டவுடன், இந்த விற்றபனை மூலம் லைக்கா தனது நிதி நிலை இருப்பை தக்கவைத்து கொள்ள எத்தனிக்கிறது, அதில் ஓரளவு முன்னேற்றமும் கண்டிருக்கிறது என்பதை செய்தியாளர் மாற்றி  (ஸ்பின்) எழுத எத்தனிக்கிறாரோ தெரியவில்லை.

உண்மையில், லைக்கா போன்ற mvno தோலை தொடர்பு நிறுவனங்களின் business model, குடிவரவு கொள்கைகள் ஐரோப்பாவில் தாளாரமாக இருப்பதை அடிப்படையாக கொண்டது.

brexit இதை தலைகீழாக மாற்றி விட்டது என்பது, லைக்கா இற்கு மிகவும் கேந்திரோபாயமானது. இதில் ஒரு பகுதி ரிஸ்க் இ லைக்கா தற்போது ஸ்பெயின் தோலை தொடர்பு நிறுவனத்திற்கு ஓடம் மாற்றி உள்ளது (risk transfer).

ஆனால், தன்னுடைய ஓர் பெரும்பகுதி வாடிக்கையாளர்களை மடையார்களாக்க லைக்கா நினைப்பது, லைக்கவையே மடையர்களாக்கி விடவும் கூடும். 

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, Kadancha said:

வணக்கம் கடஞ்சா.

கண்டு கனகாலம்.

  • கருத்துக்கள உறவுகள்

.

4 minutes ago, goshan_che said:

வணக்கம் கடஞ்சா.

கண்டு கனகாலம்.

நன்றி.

அவ்வப்போது எழுதுகிறேன், செய்திகளை இணைக்கிறேன். ஆனால் கிரமாமா வசித்து கொண்டுதான் இருக்கிறேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.