Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நில்மினியின்  மருத்துவ  ஆலோசனைகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
On ‎09‎-‎07‎-‎2020 at 15:45, nilmini said:

ரதி உங்களுக்கு நிச்சயமாக காது , தொண்டை, மூக்குப்பகுதியில் எதோ ஒரு பிரச்சனை இருக்கு. இவை மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்பில் இருப்பது என்றபடியால் உரிய நேரத்தில் கவனம் எடுக்காவிட்டால் ஒரு இடத்தில் இருந்து துடங்கி மற்ற இடங்களுக்கும் பரவும். அத்துடன் மூக்கு, நடுக்காதில் இருந்தெல்லாம் மூளைக்கும் சிலவேளை தாக்கம் வரும் ( இது அரிதென்றாலும் தெரிந்திருப்பது நல்லது) காதுக்குப்பின்னால் நோ இருக்குதா?   வெக்கை காலத்தில் வருவது போவது எல்லாம் வேறு ஏதாவது காரணிகளால் இருக்கலாம். அத்துடன் காதுக்குள் அடிக்கடி கிர் என்று கேப்பது பிற்காலத்தில் காது கேக்கும் தன்மையை குறைக்கும். எனவே நீங்கள் உங்கள் குடும்ப வைத்தியரிடம் போய் Referral வாங்கி specialist மருத்துவரை உடனடியாக பார்க்கவும். இது ஏன் உங்களுக்கு வந்தது என்று யோசிக்கவேண்டாம். மரபு வழியாக, குளிர் exposure ஆள் மற்றும் பொதுவான உங்கள் உடல் அமைப்பு இவை தான் காரணமாக இருக்கும். இப்பதான் எல்லாவற்றுக்கும் வைத்தியம் இருக்கு. இந்த மாதிரி  பிரச்சனைகள் ஆங்கில மருத்துமுறையால் தான் நிரந்தர அல்லது நீண்ட கால தீர்வு காணலாம். 

spacer.pngspacer.png

ஈழப்பிரியன் அண்ணா குமாரசாமி அண்ணாவின் பதிவுகளுக்கு விளக்கமாக உரிய நேரத்தில் respond  பண்ண முடியவில்லை. இன்றுதான் முழுவதும் வாசிக்க போகிறேன். 

எல்லோரும் ஆஸ்பத்திரிக்கு போகத் தான் சொல்லினம்...எனக்கு சும்மாவே போக விருப்பமில்லை அத்தோடு பயம் ...இந்த கால கட்டத்தில் துண்டரப் போக பயமாயிருக்கு ...பதிலுக்கு நன்றி நில்மினி

  • Replies 391
  • Views 59.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, ரதி said:

எல்லோரும் ஆஸ்பத்திரிக்கு போகத் தான் சொல்லினம்...எனக்கு சும்மாவே போக விருப்பமில்லை அத்தோடு பயம் ...இந்த கால கட்டத்தில் துண்டரப் போக பயமாயிருக்கு ...பதிலுக்கு நன்றி நில்மினி

வருத்தத்தை கூட விட்டால் அதைப்போல ஒரு கஷ்டம் இல்லை.ஆரம்பத்திலையே  களத்திலை இறங்கிடோணும். இது என்ரை சொந்த அனுபவம்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

வருத்தத்தை கூட விட்டால் அதைப்போல ஒரு கஷ்டம் இல்லை.ஆரம்பத்திலையே  களத்திலை இறங்கிடோணும். இது என்ரை சொந்த அனுபவம்.

உண்மை தான் அண்ணா .கொண்டு போய் காட்ட தான் வேணும் . நன்றி

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 1/7/2020 at 05:37, nilmini said:

வணக்கம் நில்மினி! மீண்டும் ஒரு கேள்வியுடன்......

எனக்கு அக்குபஞ்சர் சிகிச்சை மூலம் மூட்டுவலிகள் ஓரளவு குறைந்தமாதிரி தெரிகின்றது.இருந்தாலும் நான் வழமையாக எடுத்த வலி மாத்திரையை(Tilidin ) இப்போது விட முடியவில்லை.ஒரு நாளைக்கு எடுக்கா விட்டால் கை காலெல்லாம் பதறுகின்றது. ஏதோ போதைப்பொருள் பாவித்தவர்கள் போல் இருக்கின்றது.இதிலிருந்து விடுபட ஏதாவது வழி இருக்கின்றதா? எனது வீட்டு வைத்தியரும் 3வாரம் விடுமுறையில் சென்று விட்டார். உங்கள் ஆலோசனையை எதிர்பார்க்கின்றேன்
நன்றி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, குமாரசாமி said:

வணக்கம் குமாரசாமி அண்ணா. Tilidin செயற்கை முறையில் செய்த போதை மருந்துதானே? திடீரெண்டு Tilidin  மருந்தை விடக்கூடாது. அது வேறு விளைவுகளை ஏற்படுத்தலாம். குறைச்சு எடுத்துப்பாருங்கள். அக்குபஞ்சர்  சிகிச்சையும் ஓரிரு முறைகள் செய்தவுடன் வேலை செய்யாது ( உங்கள் அக்குபஞ்சர் வைத்தியர் சொல்லியிருப்பா) என்றபடியால் எவ்வளவுக்கு குறைத்து Tilidin எடுக்கமுடியுமோ அவ்வளவு எடுக்கவும். அக்குபஞ்சரையும் செய்துகொண்டு  Tildin ஐயும் கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து க்கொண்டு வந்தால் நல்லது. ஒரேயடியாக நிப்பாட்டுவது கூடாது . 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
9 hours ago, nilmini said:

ஆலோசனைக்கு நன்றி நில்மினி.

  • கருத்துக்கள உறவுகள்

 மருத்துவ அம்மணி, நாளையிலிருந்து நான் ஈழத் தமிழராகலாமென எண்ணுகிறேன். 😡

அப்படியாவது பதில் கிட்டுமா..? 😜

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, ராசவன்னியன் said:

 மருத்துவ அம்மணி, நாளையிலிருந்து நான் ஈழத் தமிழராகலாமென எண்ணுகிறேன். 😡

அப்படியாவது பதில் கிட்டுமா..? 😜

நீங்களும் புரட்சியும்  இப்ப ஈழத்தமிழர் இல்லையா , நாங்கள் உங்களை ஈழத்தமிழாராய் ஏற்று கனகாலமாச்சுது ......!   😎

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, ராசவன்னியன் said:

 மருத்துவ அம்மணி, நாளையிலிருந்து நான் ஈழத் தமிழராகலாமென எண்ணுகிறேன். 😡

அப்படியாவது பதில் கிட்டுமா..? 😜

வன்னியன்... சார்,  நீங்கள் ஈழத் தமிழராவதற்கு...முதலில், 
தினமும்.. இட்லியும், சட்னியும்... சாப்பிடுவதை, நிறுத்தி...

இடியப்பமும்... சம்பலும், தேங்காய்ப் பால் சொதியும்...  சாப்பிட ரெடியா?
அப்பிடி எண்டால்...  டபிள் ஓகே....   :grin:

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ராசவன்னியன் said:

 மருத்துவ அம்மணி, நாளையிலிருந்து நான் ஈழத் தமிழராகலாமென எண்ணுகிறேன். 😡

அப்படியாவது பதில் கிட்டுமா..? 😜

வன்னியர் உங்கள் கேள்வியை தவறவிட்டிருக்கலாம்.
திரும்பவும் தோண்டி எடுத்து இணைத்து விடுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, ஈழப்பிரியன் said:

வன்னியர் உங்கள் கேள்வியை தவறவிட்டிருக்கலாம்.
திரும்பவும் தோண்டி எடுத்து இணைத்து விடுங்கள்.

ஈழப்பிரியன்... சொல்வது, சரி... வன்னியன். 
நில்மினி... எப்பவும், எல்லோருக்கும் உதவக் கூடிய மனப் பான்மை, உள்ளவர்.  

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

வன்னியன்... சார்,  நீங்கள் ஈழத் தமிழராவதற்கு...முதலில், 
தினமும்.. இட்லியும், சட்னியும்... சாப்பிடுவதை, நிறுத்தி...

இடியப்பமும்... சம்பலும், தேங்காய்ப் பால் சொதியும்...  சாப்பிட ரெடியா?
அப்பிடி எண்டால்...  டபிள் ஓகே....   :grin:

என்ன சிறி, பாதி மல்லுவாக சொல்கிறீர்களே..? அப்போ புட்டுக்குள் அப்பளம், வாழைப்பழத்தை பிசைந்து அடிக்க சொல்வீர்களோ..?

லங்கனாக 'லங்கோடு கட்டுங்கள்' என சொல்லாதவரை சரிதான்..! 😜

2 hours ago, ஈழப்பிரியன் said:

வன்னியர் உங்கள் கேள்வியை தவறவிட்டிருக்கலாம்.
திரும்பவும் தோண்டி எடுத்து இணைத்து விடுங்கள்.

ஆனி போய், ஆவடி போய் அமாவாசையும் வந்தாச்சுது, அம்மணியிடமிருந்து பதில் வர இல்லை.. நானும் மதியமானால் தூங்கித் தூங்கி, அதுவே பழகி பிடித்தும் போச்சு.😍

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, தமிழ் சிறி said:

..இடியப்பமும்... சம்பலும், தேங்காய்ப் பால் சொதியும்...  சாப்பிட ரெடியா?...

நீங்கள் சொல்ற இடியப்பம், சாம்பல் etc.,  இப்படி இருக்குமா..?  des_spaghettis.gifvil-afaim.gif

food.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, ராசவன்னியன் said:

 மருத்துவ அம்மணி, நாளையிலிருந்து நான் ஈழத் தமிழராகலாமென எண்ணுகிறேன். 😡

அப்படியாவது பதில் கிட்டுமா..? 😜

மிக மிக பிந்திய பதிலுக்கு முதலில் ராசவன்னியன் அவர்களிடம் மன்னிப்பு கோருகிறேன். எனது தாமதத்துக்கு ஏதாவது காரணம் இருந்திருக்கும் என்ற உண்மையை அறிந்த எனது அண்ணாக்களுக்கு நன்றி. பகிடி விட்ட சிறிக்கு நன்றி. சுவி அவர்கள் சொன்னது போல நீங்கள் எப்பவிருந்து யாழ் களத்தில் இருக்கிறீர்களோ அப்போதிருந்தே உங்களை எம்மில் ஒருவராகத்தான் நினைக்கிறோம்.

வரிசையில் பதில் போட்டுகொண்டு வந்தேன். உங்கள் தருணம் வரும்போது இடையில் களத்தில் காணவில்லை. என்ன நடந்தது என்று கேட்டு ஒரு பதிவு போடலாம் என்று நினைத்தேன். ஆனால்  நிச்சயம் மற்ற என்னைவிட active ஆன உறுப்பினர்களுக்கு காரணம் தெரிந்திருக்கும் என்று நினைத்து பேசாமல் இருந்துவிட்டேன். மீண்டும் உங்கள் பதிவுகளை பார்த்தபோது இந்த நினைவுதான் முதலில் வந்தது. உடனேயே இந்த பதிவை போடலாம் என்று நினைத்தேன். ஆனால்  நிறைய காலமாகி விட்டதே ஒருவேளை இப்ப எல்லாம் சரியாகி இருக்குமோ, அல்லது ஏற்கனவே மருத்துவ உதவியை நாடி விட்டீர்களா என்று ஒரு யோசனை. எது எப்படி இருந்தாலும் பிந்தியதற்கு மன்னிப்பு கேட்டே ஆகவேண்டும். யாழ் களத்தில்  நாம் எல்லோரும் ஈழத்து சொந்தங்கள்தான். அத்துடன் எனக்கு இந்தியாவும் தமிழ் நாட்டு உறவுகளும் மிகவும் பிடித்தமானவை 

உங்களுக்கு மத்தியானதுக்கு  பின் நித்திரை வருவதால் உடலுக்கு தேவையான ஒய்வு கிடைத்துவிடுகிறது. அதனால் எப்பாடு  பட்டாவது பகல் நித்திரையை தவிர்த்து இரவில் மெலட்டோனினை ஒரு மணித்தியாலத்துக்கு முன் எடுத்து மின்சார விளக்கு மற்றும் எல்லா இலத்திரனியல் பொருள்களையும் விட்டுட்டு அமைதியாக உறங்க முயற்சிக்கவும். 10 mg Melatonin நித்திரை கொள்வதற்கு ஒரு மணித்தியாலம் முந்தி எடுக்கவும். ஆறு கிழமைக்கு தொடர்ந்து எடுத்தால் circadian rhythm ஒழுங்குபெறும். கூடியது ஓரிரு மாதத்துக்கு தான் எடுக்க வேணும். அது வேலை செய்யாவிட்டால் வைத்தியரை  நாடவேணும். சாதாரணமாக மெலடோனின் எனப்படும் ஹோர்மோன் இரவு நேரத்தில் வெளிச்சம் இல்லாதநேரத்தில் சுரந்து எம்மை நித்திரை கொள்ள வைக்கும். Long term அல்லது Chronic Insomnia என்று சொல்வார்கள்.  இப்ப எல்லாத்துக்கும் stress தான் காரணம் என்கிறார்கள். நாம் எம்மை எவ்வளவுதான் உற்சாகமான, சந்தோசமான மனிதர்களாக உலகுக்கு காட்டிக்கொண்டாலும் உள்மனதில் எத்தனையோ விடயங்களை உள்வாங்கி கொள்கிறோம். அது எம்மை அறியாமலேயே தினசரி எதோ ஒருவகையில் எமது உடலை, மனதை தாக்குகிறது. அதனால் நாம் உண்ணும் உணவில் இருந்து, எமது அன்றாட வாழ்க்கையில் நமக்காக , எமது உடல், மனத்துக்காக என்ன செய்கிறோம் என்பதை மீள் பரிசீலனை செய்யவேணும். சிலவேளைகளில் எமது அன்றாட பழக்க வழக்கங்களில் சிறிய மாற்றங்களை கொண்டுவரவதன் மூலம் மிகச்சிறந்த பலா பலன்களை பெறலாம்.

பல வருடங்களுக்கு முன்பு எனது பேராசிரியர் ஒருவருக்கு கிட்டத்தட்ட இந்தமாதிரி ஒரு பிரச்னை இருந்து சீனாவில் இருக்கும் ஒரு வைத்தியர் மூலம்  வைத்தியம் பெற்று குணமடைந்ததாக கூறினார்.

மற்றும் நித்திரையின்மை ஒரு நோயல்ல. அது வேறு நோய்களின் ஒரு அறிகுறியே. அத்துடன் நித்திரையிண்மையில் எத்தனையோ வகைகள் உண்டு. ஆனால் அவை எவையும் உங்களது நித்திரை பிரச்சனைக்குள் வராது . ஏனெனில் உங்களுக்கு பகலில் நல்ல நித்திரை வருகிறது. எனது கருத்து என்னவெனில், உங்களுக்கு Melatonin ஹோர்மோன் therapy வேலை செய்யும் போல இருக்கிறது. மேலே குறிப்பிட்ட சிலவற்றை கடைபிடித்து மெலட்டோனினையும் எடுத்துப்பாருங்கள். அநேகமாக குணமடைய வாய்ப்பு உண்டு. எத்தனையோ மருந்துகள் விற்கிறார்கள். ஆனால் அவை அனைத்தும் addiction ஆக்கும் . பின் விளைவுகளை ஏற்படுத்தும். போகப்போக டோஸ் கூட்டிகொண்டே போய்  ஒரு நிலையில் எந்த டோஸும் வேலை செய்யாது.

Edited by nilmini

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 hours ago, ராசவன்னியன் said:

நீங்கள் சொல்ற இடியப்பம், சாம்பல் etc.,  இப்படி இருக்குமா..?  des_spaghettis.gifvil-afaim.gif

food.jpg

உப்பிடி நாங்கள் ஒரு நாளும்  ஒண்டடிமண்டடியாய் சாப்பிடுறேல்லை. இடியப்பம் இல்லாட்டி புட்டு இல்லாட்டி தோசை. 
ஆனால் இப்ப வெளிநாடுகளிலை எங்கடை சனத்தை பற்றி தெரியும் தானே ....சந்தனம் மிஞ்சினால் 😎

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, குமாரசாமி said:

உப்பிடி நாங்கள் ஒரு நாளும்  ஒண்டடிமண்டடியாய் சாப்பிடுறேல்லை. இடியப்பம் இல்லாட்டி புட்டு இல்லாட்டி தோசை. 
ஆனால் இப்ப வெளிநாடுகளிலை எங்கடை சனத்தை பற்றி தெரியும் தானே ....சந்தனம் மிஞ்சினால் 😎

இது buffet இல அங்கலாச்சுக்கொண்டு  கோப்பையை நிறைத்துக்கொண்டு கடைசியில் ஒண்டையும் உருப்படியாக சாப்பிடாத போலத்தான் இருக்கு. நான் buffet சாப்பாடு பக்கமே போறதில்லை. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ராசவன்னியன் said:

நீங்கள் சொல்ற இடியப்பம், சாம்பல் etc.,  இப்படி இருக்குமா..?  des_spaghettis.gifvil-afaim.gif

இப்பிடித்தான் சாப்பிடுகிறது. நானும் அக்காவும் செய்த இடியப்பம், புட்டு, சம்பல், சொதி , முருகைக்காய் கறி , கத்தரிக்காய், உருளைக்கிழங்கு ,வெங்காயப்பொரியல் 

DSC-2994.jpg

spacer.png

spacer.png

Edited by nilmini

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nilmini said:

இது buffet இல அங்கலாச்சுக்கொண்டு  கோப்பையை நிறைத்துக்கொண்டு கடைசியில் ஒண்டையும் உருப்படியாக சாப்பிடாத போலத்தான் இருக்கு. நான் buffet சாப்பாடு பக்கமே போறதில்லை. 

அங்கலாச்சுக்கொண்டு, ஆவலாதிபட்டுக்கொண்டு, கெலில, முந்தி பிந்தி சாப்பாட்டை  காணாததுகள் மாதிரி ....இவையெல்லாம் once up on a time  வாங்கிய அர்ச்சனைகள் மகள்.இப்ப உங்களுக்கு உதவலாம் என்று எடுத்து தாறன்......!   😁

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, suvy said:

அங்கலாச்சுக்கொண்டு, ஆவலாதிபட்டுக்கொண்டு, கெலில, முந்தி பிந்தி சாப்பாட்டை  காணாததுகள் மாதிரி ....இவையெல்லாம் once up on a time  வாங்கிய அர்ச்சனைகள் மகள்.இப்ப உங்களுக்கு உதவலாம் என்று எடுத்து தாறன்......!   😁

🤣இந்த சொல்லுகளை அடிக்கடி பாவித்தால் தான் தமிழ் கதைச்ச மாதிரி இருக்கும். ஞாபபகப்படுத்தியத்துக்கு நன்றி. இப்பிடி நான் வீட்டில் கதைப்பதால் மகன்மாருக்கு இந்தமாதிரி சொல்லுகள்தான் தமிழில் கூடுதலாக தெரியும்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, nilmini said:

மிக மிக பிந்திய பதிலுக்கு முதலில் ராசவன்னியன் அவர்களிடம் மன்னிப்பு கோருகிறேன். எனது தாமதத்துக்கு ஏதாவது காரணம் இருந்திருக்கும் என்ற உண்மையை அறிந்த எனது அண்ணாக்களுக்கு நன்றி. பகிடி விட்ட சிறிக்கு நன்றி. சுவி அவர்கள் சொன்னது போல நீங்கள் எப்பவிருந்து யாழ் களத்தில் இருக்கிறீர்களோ அப்போதிருந்தே உங்களை எம்மில் ஒருவராகத்தான் நினைக்கிறோம்.

வரிசையில் பதில் போட்டுகொண்டு வந்தேன். உங்கள் தருணம் வரும்போது இடையில் களத்தில் காணவில்லை. என்ன நடந்தது என்று கேட்டு ஒரு பதிவு போடலாம் என்று நினைத்தேன். ஆனால்  நிச்சயம் மற்ற என்னைவிட active ஆன உறுப்பினர்களுக்கு காரணம் தெரிந்திருக்கும் என்று நினைத்து பேசாமல் இருந்துவிட்டேன். மீண்டும் உங்கள் பதிவுகளை பார்த்தபோது இந்த நினைவுதான் முதலில் வந்தது. உடனேயே இந்த பதிவை போடலாம் என்று நினைத்தேன். ஆனால்  நிறைய காலமாகி விட்டதே ஒருவேளை இப்ப எல்லாம் சரியாகி இருக்குமோ, அல்லது ஏற்கனவே மருத்துவ உதவியை நாடி விட்டீர்களா என்று ஒரு யோசனை. எது எப்படி இருந்தாலும் பிந்தியதற்கு மன்னிப்பு கேட்டே ஆகவேண்டும். யாழ் களத்தில்  நாம் எல்லோரும் ஈழத்து சொந்தங்கள்தான். அத்துடன் எனக்கு இந்தியாவும் தமிழ் நாட்டு உறவுகளும் மிகவும் பிடித்தமானவை 

உங்களுக்கு மத்தியானதுக்கு  பின் நித்திரை வருவதால் உடலுக்கு தேவையான ஒய்வு கிடைத்துவிடுகிறது. அதனால் எப்பாடு  பட்டாவது பகல் நித்திரையை தவிர்த்து இரவில் மெலட்டோனினை ஒரு மணித்தியாலத்துக்கு முன் எடுத்து மின்சார விளக்கு மற்றும் எல்லா இலத்திரனியல் பொருள்களையும் விட்டுட்டு அமைதியாக உறங்க முயற்சிக்கவும். 10 mg Melatonin நித்திரை கொள்வதற்கு ஒரு மணித்தியாலம் முந்தி எடுக்கவும். ஆறு கிழமைக்கு தொடர்ந்து எடுத்தால் circadian rhythm ஒழுங்குபெறும். கூடியது ஒருமாதத்துக்கு தான் எடுக்க வேணும். அது வேலை செய்யாவிட்டால் வைத்தியரை  நாடவேணும். சாதாரணமாக மெலடோனின் எனப்படும் ஹோர்மோன் இரவு நேரத்தில் வெளிச்சம் இல்லாதநேரத்தில் சுரந்து எம்மை நித்திரை கொள்ள வைக்கும். Long term அல்லது Chronic Insomnia என்று சொல்வார்கள்.  இப்ப எல்லாத்துக்கும் stress தான் காரணம் என்கிறார்கள். நாம் எம்மை எவ்வளவுதான் உற்சாகமான, சந்தோசமான மனிதர்களாக உலகுக்கு காட்டிக்கொண்டாலும் உள்மனதில் எத்தனையோ விடயங்களை உள்வாங்கி கொள்கிறோம். அது எம்மை அறியாமலேயே தினசரி எதோ ஒருவகையில் எமது உடலை, மனதை தாக்குகிறது. அதனால் நாம் உண்ணும் உணவில் இருந்து, எமது அன்றாட வாழ்க்கையில் நமக்காக , எமது உடல், மனத்துக்காக என்ன செய்கிறோம் என்பதை மீள் பரிசீலனை செய்யவேணும். சிலவேளைகளில் எமது அன்றாட பழக்க வழக்கங்களில் சிறிய மாற்றங்களை கொண்டுவரவதன் மூலம் மிகச்சிறந்த பலா பலன்களை பெறலாம்.

பல வருடங்களுக்கு முன்பு எனது பேராசிரியர் ஒருவருக்கு கிட்டத்தட்ட இந்தமாதிரி ஒரு பிரச்னை இருந்து சீனாவில் இருக்கும் ஒரு வைத்தியர் மூலம்  வைத்தியம் பெற்று குணமடைந்ததாக கூறினார்.

மற்றும் நித்திரையின்மை ஒரு நோயல்ல. அது வேறு நோய்களின் ஒரு அறிகுறியே. அத்துடன் நித்திரையிண்மையில் எத்தனையோ வகைகள் உண்டு. ஆனால் அவை எவையும் உங்களது நித்திரை பிரச்சனைக்குள் வராது . ஏனெனில் உங்களுக்கு பகலில் நல்ல நித்திரை வருகிறது. எனது கருத்து என்னவெனில், உங்களுக்கு Melatonin ஹோர்மோன் therapy வேலை செய்யும் போல இருக்கிறது. மேலே குறிப்பிட்ட சிலவற்றை கடைபிடித்து மெலட்டோனினையும் எடுத்துப்பாருங்கள். அநேகமாக குணமடைய வாய்ப்பு உண்டு. எத்தனையோ மருந்துகள் விற்கிறார்கள். ஆனால் அவை அனைத்தும் addiction ஆக்கும் . பின் விளைவுகளை ஏற்படுத்தும். போகப்போக டோஸ் கூட்டிகொண்டே போய்  ஒரு நிலையில் எந்த டோஸும் வேலை செய்யாது.

விரிவான விளக்கத்திற்கு மிக்க நன்றி, அம்மணி. இதற்கு ஏன் மன்னிப்பு அம்மணி..?  நான் எழுதியது பகடிக்குத்தான்..:)

வேலைப் பளுவால் சில மாதங்கள் களத்திற்கு வர இயலவில்லை.

தமிழ் நாட்டில் அரசு வேலையில் இருக்கும்போது இரவு 10 மணிக்குதான் தூங்க செல்வது. ஏனெனில் அங்கு அலுவலக வேலை நேரம் காலை 10 மணி முதல் மாலை 5:30 மணி வரை. அந்த வழக்கத்திற்கு உடல் பழகிக்கொண்டது. மேலும் வேலையில் அதிக அழுத்தம் இருப்பதில்லை. நிதியாண்டு வருட இறுதியான மார்ச் மாதத்தில் மட்டும் அதிக வேலைப் பளு, மன அழுத்தம் இருக்கும்.

அதற்கு நேர் மாறானது மத்தியக் கிழக்கு நாட்டு பகுதியில் என்னுடைய வாழ்க்கையும், அலுவலக நடைமுறைகளும்.

காலை 7 மணிக்கு வேலை ஆரம்பித்து மதியம் 3 மணிக்கு முடிந்துவிடும் அலுவலகம்.

ஏனெனில் இங்கு பிற்பகலில் வெப்பம் மிக அதிகம். ஜூலை மாதத்தில் சர்வசாதரணமாக 50 பாகை வெப்பம் இருக்கும்.ஆகவே அரசும் கோடை காலைத்தில் வெயிலில் வேலை செய்யும் ஊழியர்கள் யாரும் பிற்பகல் 12:30 லிருந்து 3 மணி வரை வேலை செய்ய அனுமதிப்பதில்லை. பெரும்பாலும் வேலைகள் நகருக்கு வெளியே பாலைவனத்திற்குள்ளேயே இருக்கும்.

வேலையும் பெண்டு கழன்றுவிடும். இங்கு சொகுசான வேலைகளை உள்நாட்டு அரபிகளும், மாங்கு மாங்கென உழைக்கும் மண்டை காயும் வேலைகளை வெளிநாட்டினரும் செய்ய வேண்டும். அதற்குத்தானே வெளிநாட்டினர் இங்கே..!

இருக்கும் வேலைகளை பின்னர் பார்த்துக்கொள்ளலாமென தள்ளிப்போட இயலாது. வேலையில் சிறு சிறு தவறுகளுக்கும் தண்டனை அதிகம். அந்த நிமிடமே வேலை போய்விடும், நம் கவனக்குறைவால், தாமதத்தால் பாதிப்பு அதிகமெனில் சிறைக்கும், தண்டைனை முடிந்தவுடன் சொந்த நாட்டுக்கு நாடு கடத்தலும் உண்டு.வேலையில் கவனம் மிக மிக முக்கியம்.

(சில மாதங்களுக்கு முன்னர் கூட அலுவலகத்தில் உயர் பதவியிலுள்ள ஒரு இந்தியர், 'என்ன தவறு செய்தார்..?' என சரியான விபரங்கள் யாருக்கும் தெரியாது, போலீஸ் வந்து கூட்டிச் சென்றது, இதுவரை அவர் எங்கிருக்கார் என தெரியவில்லை. அனேகமாக அவர் சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பபட்டிருப்பார்.)

ஆகவே காலை முதல் மண்டை காயும் வேலைகளை, அழுத்தங்களை சமாளித்து வீட்டுக்கு மதியம் 3 மணிக்கு திரும்பினால் உடலும், மனமும் ஓய்விற்கு ஏங்கும். புறத்தில் வெப்பமும் மிக அதிகமாக இருப்பதால் கண்கள் தூக்கத்திற்கு காத்திருக்கும். மதிய உணவிற்குப் பின் தூங்கிவிடுவேன். இதே பழக்கத்தை விடுமுறைக்கு தமிழகம் சென்றாலும் உடல் தொடருகிறது.

இப்படியே வாழ்க்கை 21 வருடமாக ஓடுகிறது. இப்பதிவை எழுதும்ப்போதுகூட மதியம் பக்ரீத் பிரியாணி சாப்பிட்டுவிட்டு முன்னிரவு 8:30 மணிக்குத்தான் எழுந்தேன்.

இனி உங்கள் மருத்துவ ஆலோசனைக்கு..

எனக்கு லேசான சுகர் உண்டு. அதற்கு சென்னை மருத்துவர் சொன்னபடி தினமும் குளிசைகளை காலை மட்டும் எடுத்து வருகிறேன். எப்பொழுதாவது நடைப்பயிற்சி உண்டு.

நீங்கள் கூறும் 10 mg Melatonin பற்றி இங்கு கடைகளில் கேட்டுப் பார்க்கிறேன். சில மருந்துகளை, மருத்துவர்களின் சிபாரிசு கடிதம் இல்லாமல் கடைகளில் கொடுக்க மாட்டார்கள்.

இம்மருந்து, எளிதாக கிடைக்கும் மருந்தா..?

Edited by ராசவன்னியன்

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு மூன்று மாத கடுமையான வேலைப் பளுவிற்கு பின் ஓய்வாக 4 நாட்கள் பக்ரீத் விடுமுறை கிடைத்துள்ளது. நாளை மறுநாள் முதல் திரும்பவும் வேலைக்கு செல்ல வேண்டும், இன்னும் ஒருமாதம் இந்த வேலைப்பளு தொடரும், யாழ்களம் வர ஓய்வான நேரமிருக்காது.

அம்மணி, நீங்கள் கூறிய 10 mg Melatonin மாத்திரைகள் பற்றி மருந்துக்கடைகளில் விசாரித்து எழுதுகிறேன்.

ஆலோசனைகளுக்கு, மிக்க நன்றி. 🙏

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nilmini said:

spacer.png

இந்தப் படத்தில் சிவப்பா இருக்கும் உணவுக்கு பெயர்தான் சாம்பலா..?

இந்த இடியாப்பத்துக்கு நாங்கள் சீனி போட்ட தேங்காய்ப் பாலை தான் தொட்டுக்கொள்ள பாவிப்பது.

இங்கேயிருக்கும் மல்லுகள்தான், வேக வைத்த கொண்டைக்கடலை, பாசிப்பருப்பு பயறு, துவரம்பருப்பு பயறு போன்றவற்றை மசாலாவாக செய்து சேர்த்து உண்பார்கள்.

3 hours ago, குமாரசாமி said:

உப்பிடி நாங்கள் ஒரு நாளும்  ஒண்டடிமண்டடியாய் சாப்பிடுறேல்லை. இடியப்பம் இல்லாட்டி புட்டு இல்லாட்டி தோசை. 
ஆனால் இப்ப வெளிநாடுகளிலை எங்கடை சனத்தை பற்றி தெரியும் தானே ....சந்தனம் மிஞ்சினால் 😎

நான் இணைத்த படம், யாழ்ப்பாண ரயில் நிலையத்துக்கு அண்மித்த வலம்புரி ஓட்டலில் கிடைக்கிறது, கு.சா.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, ராசவன்னியன் said:

எனக்கு மூன்று மாத கடுமையான வேலைப் பளுவிற்கு பின் ஓய்வாக 4 நாட்கள் பக்ரீத் விடுமுறை கிடைத்துள்ளது. நாளை மறுநாள் முதல் திரும்பவும் வேலைக்கு செல்ல வேண்டும், இன்னும் ஒருமாதம் இந்த வேலைப்பளு தொடரும், யாழ்களம் வர ஓய்வான நேரமிருக்காது.

அம்மணி, நீங்கள் கூறிய 10 mg Melatonin மாத்திரைகள் பற்றி மருந்துக்கடைகளில் விசாரித்து எழுதுகிறேன்.

ஆலோசனைகளுக்கு, மிக்க நன்றி. 🙏

வணக்கம். மெலடோனின் மருந்துக்கடைகளில் Prescription இல்லாமல் கிடைக்கும். இது பக்க விளைவுகள் எதுவும் ஏற்படுத்தாத, எமது உடலில் சுரக்கப்படும் மெலடோனினுக்கு இணையான ஒரு ஹோர்மோன். ஆனால் எந்த மருந்தை எடுத்தாலும் மனசு அமைதியடையாமல் படபடத்தால் நித்திரை குளம்பும் .

ஓம் மத்தியகிழக்கு நாடுகளில் எம்மவரின் வேலை சட்ட திட்டங்களை பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். 

மலையாளிகள் கடலைக்கறியுடன் சாப்பிடுவார்கள். அவர்கள்  புட்டு இடியப்பம் செய்யும் முறையும் வித்தியாசம். 

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 2/8/2020 at 13:51, nilmini said:

வணக்கம் நில்மினி!
உடம்பில் யூரிக் அமிலம் கூடினால் என்ன விளைவுகள் வரும்? அதை நாங்களே சுயமாக கண்டறிய முடியுமா?  அதை குறைக்க வழிகள் உள்ளதா?
நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, குமாரசாமி said:

வணக்கம் நில்மினி!
உடம்பில் யூரிக் அமிலம் கூடினால் என்ன விளைவுகள் வரும்? அதை நாங்களே சுயமாக கண்டறிய முடியுமா?  அதை குறைக்க வழிகள் உள்ளதா?
நன்றி.

உடம்பு நிறை கூடும்  , டயபிட்டீஸ் வரும் என்று நினைக்கிறேன் ...நில்மினி வந்து மேலதிக விளக்கம் தருவா 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.