-
Tell a friend
-
Topics
-
1
ஏராளன் · தொடங்கப்பட்டது
-
-
Posts
-
புதிய ஆண்டைத் திட்டமிடுவது - நிலாந்தன் இந்த ஆண்டில் என்ன கிடைத்ததோ அதிலிருந்துதான் அடுத்த ஆண்டு தொடங்கும். இந்த ஆண்டு என்ன கிடைத்தது? இரண்டு தேர்தல்கள் நடந்தன. இரண்டு தேர்தல்களின் விளைவாகவும் என்பிபி மிகப்பெரிய பலத்தோடு ஆட்சிக்கு வந்திருக்கிறது. இது முதலாவது. இரண்டாவது,ஜனாதிபதி தேர்தலில் முன்னிறுத்தப்பட்ட தமிழ்ப் பொது வேட்பாளர் தமிழ்த் தேர்தல் வரலாற்றில் ஒரு வேட்பாளர் பெற்ற ஆகக்கூடிய வாக்குகளைப் பெற்றார். கட்சிகளைக்கடந்து தமிழ்மக்களைத் தேசமாகத் திரட்டலாம் என்ற முயற்சிக்கு கிடைத்த முதல் வெற்றியது. மூன்றாவது,நாடாளுமன்றத் தேர்தலில்,தமிழ்மக்கள் மத்தியில் இருந்தும் என்பிபிக்கு ஆதரவு கிடைத்திருக்கிறது. அதன்மூலம் தமிழ்மக்கள் தங்களை இலங்கையராகச் சிந்திக்கத் தொடங்கிவிட்டார்கள் என்று என்பிபியின் தமிழ் ஆதரவாளர்கள் கூறத்தொடங்கி விட்டார்கள். நாலாவது,நாடாளுமன்றத்தில் தமிழ்மக்கள் ஒரு தேசமாக மேலும் மெலிந்து போயிருக்கிறார்கள். ஐந்தாவது,தமிழ்த் தேசியவாதம் பேசும் கட்சிகள் தமிழ்மக்களை ஒரு தேசமாகத் திரட்டுவதிலும் வெற்றி பெறவில்லை;தங்களைக் கட்சிகளாகத் திரட்டுவதிலும் வெற்றி பெறவில்லை.ஒப்பீட்டளவில் அதிக ஆசனங்களை வென்ற தமிழரசுக் கட்சியானது நீதிமன்றத்தில் நிற்கிறது. எனவே ஒரு கட்சியாக அது தோல்வி யடைந்து விட்டது. ஆனால் தமிழ்மக்கள் வேறு வழியின்றி அதற்கு வாக்களித்திருக்கிறார்கள் இவைதான் இந்த ஆண்டில் தமிழ்மக்களுக்கு கிடைத்தவற்றுள் முக்கியமானவை.இவற்றின் தேறிய விளைவுகளே வரும் ஆண்டைத் தீர்மானிக்கும். தமிழ்மக்கள் ஒரு தேசமாக நாடாளுமன்றத்தில் மெலிந்து போயிருக்கும் ஓர் அரசியல் சூழலில் மூன்றில்இரண்டு பெரும்பான்மையை பெற்றிருக்கும் என்.பி.பி அரசாங்கம் இனப்பிரச்சினையை எப்படி அணுகும்? பேராசிரியர் ஜெயதேவ உயாங்கொட பின்வருமாறு கூறுகிறார்..” இந்தியாவால் அறிமுகப்படுத்தப்படட அதிகாரப் பரவலாக்கல் உரையாடலையும் என்பிபி தவிர்த்து ஒதுக்குகின்றது. ஐநாவின் முகவரமைப்புக்களினாலும் உள்ளூர் மற்றும் உலகளாவிய மனிதஉரிமைக் குழுக்களினாலும் ஊக்குவிக்கப்படும் முரண்பாடுகளுக்கான தீர்வு,நல்லிணக்கம் மற்றும் சமாதானத்தைக் கட்டியெழுப்புதல் போன்றவற்றுக்கான லிபரல் போக்குடைய சமாதான உரையாடல்களையும் என்பிபி தவிர்த்து ஒதுக்குகிறது.” அதாவது இனப்பிரச்சினைக்கான தீர்வு முயற்சிகளை பிராந்திய மற்றும் சர்வதேச மயநீக்கம் செய்ய அரசாங்கம் முயற்சிக்கின்றது என்று உயாங்கொட கூறுகிறார். அதேசமயம் அண்மையில் இந்தியாவுக்குச் சென்ற ஜனாதிபதி அனுர அங்கு பின்வருமாறு பேசியிருக்கிறார்.”இலங்கை வரலாற்றில் முதன்முறையாக அண்மையில் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தல் மற்றும் பாராளுமன்றத் தேர்தல்களில் ஒரு போதுமில்லாதவாறு வெளிப்படுத்தப்பட்ட மக்கள் ஆணை, எமது நாட்டில் புதிய அரசியல் கலாசாரத்தை கட்டியெழுப்பக்கூடிய அரசியல் மாற்றத்திற்கான விதைகளை விதைத்துள்ளது. வடக்கு,தெற்கு,கிழக்கு மற்றும் மேற்கு ஆகிய திசைகளில் அமைந்துள்ள அனைத்து மாகாணங்களிலும் உள்ள பல்வேறு சமூகங்கள் மற்றும் பல்வேறு தரப்பு மக்களும் இந்த மக்கள் ஆணைக்கு பங்களித்தனர்.”அதாவது தமிழ்மக்களின் ஆணை தனக்கு உண்டு என்று ஜனாதிபதி கூறுகிறார். அதன்மூலம் இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கான ஆணை தனக்கு கிடைத்திருப்பதாக அவர் கூறவருகிறார். அவருடைய இந்திய விஜயத்தின் போது இந்தியா உத்தியோகபூர்வமாக 13ஆவது திருத்தத்தைப்பற்றி எதுவும் கூறவில்லை. பதிலாக யாப்பை முழுமையாக நிறைவேற்றுமாறுதான் கேட்கப்பட்டுள்ளது. மாகாணசபைத் தேர்தல்களை வைக்குமாறும் கேட்கப்பட்டிருக்கிறது. 13இன் மீதான அழுத்தத்தை இந்தியா குறைத்திருப்பது ஒரு கொள்கை மாற்றமாக ஒரு பகுதி ஆய்வாளர்களால் சுட்டிக்காட்டப்படுகிறது. ஆனால் கடந்த 15ஆண்டுகளிலும் இந்தியா 13ஐ அழுத்திக் கூறிவந்தாலும் 13ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த தேவையான அழுத்தங்களை கொழும்பின் மீது பிரயோகித்திருக்கவில்லை. இனப்பிரச்சினை தொடர்பில் இந்தியாவிடமிருந்து வரக்கூடிய அழுத்தங்கள் தொடர்பான பயம் சிங்களத் தலைவர்களுக்கு எப்பொழுதோ இல்லாமல் போய்விட்டது. நாட்டில் அதிகரித்துவரும் சீனாவின் பிரசன்னமானது சிங்களத் தலைவர்களின் பேர பலத்தை கூட்டியிருக்கிறது என்பதே உண்மைநிலை. கொழும்பை இறுக்கிப் பிடித்தால் அது சீனாவை நோக்கிச் சாய்ந்துவிடும் என்று ஏனைய தரப்புகள் பயப்படுவதை சிங்களத் தலைவர்கள் தமக்குரிய பேர வாய்ப்பாகக் கருதுகிறார்கள். தேர்தல் முடிந்த கையோடு வடக்கு கிழக்குக்கு வந்த முதலாவது தூதுவர் சீனத் தூதுவர்தான்.அவர் வழமையாக தமிழர்கள் மத்தியில் இனப்பிரச்சினை தொடர்பாக உரையாடுவதில்லை. ஆனால் இம்முறை வழமைக்கு மாறாக யாழ் ஊடக அமையத்தில் உரையாற்றும்போது தேர்தல் முடிவுகளை வரவேற்றுக் கதைத்திருக்கிறார். குறிப்பாக தமிழ்மக்கள் அரசாங்கத்துக்கு வாக்களித்ததை அவர் பாராட்டியிருக்கிறார். அதன்மூலம் அவர் சொல்லாமல் சொல்லவருவது என்னவென்றால், தமிழ்மக்கள் என்பிபி அரசாங்கத்தை நம்புகிறார்கள், எனவே இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் இந்தியாவோ, ஐநாவோ, ஐரோப்பிய ஒன்றியமோ,அமெரிக்காவோ தலையிடுவதற்கான தேவைகள் குறைந்துவிட்டன என்பதுதான். இவ்வாறு பேராசிரியர் உயாங்கொடவும் சீனத்துதுவரும் கூறியவற்றைத் தொகுத்துப்பார்த்தால் கிடைக்கும் சித்திரம் மிகத்தெளிவானது. இனப்பிரச்சினையை பிராந்திய மயநீக்கம் அல்லது சர்வதேச மயநீக்கம் செய்ய முற்படும் சக்திகள் நடந்து முடிந்த தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் உற்சாகமடைந்திருக்கின்றன. ஆனால்,தேசிய இனப்பிரச்சினைகள் உள்நாட்டுப் பிரச்சினைகள் அல்ல. அவை சாராம்சத்தில் பிராந்திய மற்றும் அனைத்துலகப் பிரச்சினைகள்தான். உள்நாட்டுப் பிரச்சினை ஒன்றின் மீது வெளிச் சக்திகள் தலையீடு செய்யும்போதே தேசிய இனப்பிரச்சினைகள் பூதாகரமாகின்றன. எனவே எல்லாத் தேசிய இனப்பிரச்சினைகளுக்கும் அனைத்துலகத் தீர்வுதான் உண்டு. உள்நாட்டுத் தீர்வு கிடையாது. திம்புவில் தொடங்கி ஜெனிவா வரையிலும் அதுதான் இலங்கை இனப்பிரச்சினையின் யதார்த்தம். இந்த யதார்த்தத்தை அதன் பிரயோக வார்த்தைகளில் சொன்னால்,மூன்றாவது தரப்பு ஒன்றின் மத்தியஸ்தம் அல்லது அழுத்தம் இல்லாமல் இனப்பிரச்சினையைத் தீர்க்க முடியாது. ஆனால் கடந்த 15ஆண்டுகால அனுபவங்களின் அடிப்படையில் சொன்னால்,தமிழ்த் தரப்பு பலவீனமடைந்து செல்லும் ஒரு பின்னணியில், மூன்றாவது தரப்பை இனப்பிரச்சினையில் இருந்து நீக்குவது ஒப்பீட்டளவில் இலகுவாகி வருகிறது. அதாவது,பேச்சுவார்த்தக்கான தமிழ்த் தரப்பின் பேரபலம் குறைந்து வருகிறது என்பதைத்தான் நடந்து முடிந்த தேர்தல் முடிவுகள் நிருபித்திருக்கின்றன. வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலிலும் அதேவிதமான தேர்தல் முடிவுகள் கிடைத்தால் தமிழ்மக்கள் ஒரு தரப்பாக மேலும் பலவீனப்படுவார்கள். அந்த வெற்றி தரும் உற்சாகத்தில் அரசாங்கம் ஒரு புதிய யாப்புக்கான தயாரிப்பு வேலைகளை முடுக்கிவிட முடியும். எனவே இன்னும் சில மாதங்களுக்குள் உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடத்தப்படுமாக இருந்தால்,தமிழ்த் தரப்பு இப்பொழுதே திட்டமிட வேண்டும். தேர்தல் அறிவிக்கும் வரை காத்திருந்து தேர்தல் கால ஐக்கியங்களுக்கு போவதைவிடவும் தேர்தலுக்கு முன்னரே தமிழ்மக்கள் தங்களை ஐக்கியப்படுத்த வேண்டும்.இதை அதன் பிரயோக வார்த்தைகளில் சொன்னால்,தேர்தல் தேவைகளுக்காக ஐக்கியத்தை உருவாக்காமல் தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கான ஐக்கியத்தை,தேசத்தைத் திரட்டுவதற்கான ஐக்கியத்தைக் குறித்து தமிழ்க்கட்சிகள் சிந்திக்கவேண்டும். ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னரான சிவில்சமூக யதார்த்தத்தின்படி கட்சிகளை அவ்வாறு ஒன்றிணைக்கும் வேலைகளில் சிவில்சமூகங்கள் ஈடுபடுவதற்கான வாய்ப்புகள் அரிதாகவே தெரிகின்றன. கட்சிகள் தங்களாக ஐக்கியப்பட வேண்டும். அந்த அடிப்படையில்தான் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தீர்வை நோக்கிய ஐக்கியத்துக்கான முன்னெடுப்புகளைப் பார்க்கவேண்டும். அது ஒரு சுடலை ஞானம் தான். தேசமாக மெலிந்த பின் ஏற்பட்ட ஞானம். எனினும்,தேர்தல் முடிவுகளில் இருந்து கற்றுக்கொண்ட பாடங்களின் அடிப்படையில் முன்னணி சிந்திக்குமாக இருந்தால் அதை வரவேற்கலாம். ஆனால் தமிழரசுக் கட்சிக்குள் வளர்ந்துவரும் உட்பகையானது தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் ஐக்கியத்திற்கான அழைப்பை சவால்களுக்கு உட்படுத்தும். தமிழ்மக்கள் பேரவையின் முன்மொழிவின் அடிப்படையில் தீர்வு முயற்சிகளை எதிர்கொள்ள வேண்டும் என்று தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி அழைப்பு விடுத்திருக்கிறது. ஆனால் சுமந்திரன் தெரிவிக்கும் கருத்துக்கள் அந்த அழைப்பை வரவேற்பவைகளாக இல்லை. சுமந்திரன் இப்பொழுதும் கட்சிக்குள் செல்வாக்கு மிக்கவர் போலவே காணப்படுகிறார். சிறீதரன் கட்சியைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியாதவராகவும் காணப்படுகிறார். எனவே தமிழரசுக் கட்சிக்குள் காணப்படும் தலைமைத்துவ முரண்பாடானது, புதிய யாப்புருவாக்க முயற்சிகளிலும்,உள்ளூராட்சி சபைத் தேர்தலிலும் பிரதிபலிப்புகளை ஏற்படுத்தக்கூடிய வாய்ப்புக்கள் உண்டு. முன்னணியின் ஐக்கிய முயற்சிகளின் அடுத்த கட்டமானது, தமிழரசுக் கட்சியின் தலைமையை யார் கட்டுப்படுத்துகிறார்கள் என்பதிலும் தங்கியுள்ளது. அது மட்டுமல்ல, ஜனநாயகத் தமிழ்த்தேசிய கூட்டமைப்பும் ஒரு கூட்டாக என்ன முடிவை எடுக்கப்போகிறது? ஜனாதிபதித் தேர்தலில் ஒரு பொது வேட்பாளரை முன்னுறுத்திய தமிழ்த்தேசியப் பொது கட்டமைப்பின் தேர்தல் அறிக்கையில் தமிழ்மக்கள் பேரவையின் முன்மொழிவை வரவேற்று எழுதப்பட்ட வாசகங்களை ஜனநாயகத் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு உள்ள சில கட்சித் தலைவர்கள் நீக்குமாறு கேட்டார்கள்.அதற்கு அவர்கள் கூறிய காரணம் பேரவைக்குள் தாங்கள் இருக்கவில்லை என்பதாகும். இப்படிப்பட்டதோர் பின்னணியில், தமிழ்மக்கள் பேரவையின் முன்மொழிவின் அடிப்படையில் கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சிகள் எந்தளவு தூரம் வெற்றி பெறும் என்பதனை பொறுத்திருந்தே பார்க்கவேண்டும். அவ்வாறு வெற்றி பெற்றாலும் அது தேசத்தை திரட்டுவதற்கான ஒரு முழுமையான ஐக்கியமாக இருக்கமுடியாது. ஜனாதிபதித் தேர்தலில் கிடைத்த அனுபவம் அத்தகையதே. தமிழ் மக்களை வாக்காளர்களாக,விசுவாசிகளாக,பக்தர்களாக, வெறுப்பர்களாகப் பிரித்து வைத்திருப்பது கட்சிகள்தான். அவ்வாறு பிரித்து வைத்திருந்ததன் தோல்விகரமான விளைவுகளினால் கட்சிகள் தங்களுக்கு இடையே ஏதாவது ஓர் ஐக்கியத்துக்கு போக முயற்சிக்கக்கூடும். ஆனால் அதுமட்டும் தேசத்தைத் திரட்ட உதவாது.அது ஒரு தொடக்கமாக இருக்கலாம்.தமிழ்ப்பொது வேட்பாளரை முன்நிறுத்திக் கிடைத்த அனுபவம் அதுதான். எனவே இந்த ஆண்டின் தொடக்கத்தில் தமிழரசுக் கட்சிக்குள் நடந்த தேர்தலும் ஆண்டின் முடிவிலும் நடந்த நாடாளுமன்றத் தேர்தலும் தமிழரசியலின் சீரழிவைக் காட்டின. எனினும் செப்டம்பர் மாதம் நடந்த ஜனாதிபதித் தேர்தல் கடந்த 15ஆண்டுகால தமிழ் அரசியலில் ஒரு புதிய அனுபவத்தை கொடுத்திருக்கிறது. தமிழ்மக்கள் எப்பொழுதும் தேசமாகத் திரள்வதற்குத் தயாராக இருக்கிறார்கள் என்பதே அந்தச் செய்தி. அதுதான் இந்த ஆண்டின் நற்செய்தியும்கூட. அந்த நற்செய்தியில் இருந்து திட்டமிட்டால் அடுத்த ஆண்டை ஒரு வெற்றி ஆண்டாக மாற்றலாம். https://www.nillanthan.com/7038/
-
By தமிழ் சிறி · பதியப்பட்டது
டங்குவார் அறுந்து போவது என்றால் என்ன பொருள்? இரண்டையுமே அறிவோம். Tanga / Tonga என இந்தியில் அழைக்கப்படும் குதிரை வண்டியில் குதிரையை வண்டியுடன் பிணைக்க பயன் பட்ட தோல் வார் தான் (மாட்டுத் தோலால் ஆன பட்டையான கனமான பெல்ட் போன்ற ஒன்று) குதிரையின் முழு பலமும் இந்த டங்குவாரின் மூலமே வண்டிக்கு கிடைக்கும். வண்டியில் பொருத்தப்பட்டுள்ள இரும்பு வளையங்களின் ஊடே இந்த டங்குவார் நுழைக்கப் பட்டு குதிரையின் உடலோடு சேர்த்து கட்டப்பட்டிருக்கும். மேற்கண்ட டோங்கா வண்டிகள் முகலாயர் காலத்தியவை. வண்டியோட்டி முன் புறம் பார்த்தபடி வண்டியோட்ட பயணிப்பவர்கள் பின்னோக்கி பார்த்தபடி அமர்ந்திருப்பர். பின்னர் ஆள வந்த ஆங்கில உயர் அலுவலர்களாலும் ஆங்கில மேட்டுக்குடி மக்களாலும் மிகுதியாக டோங்கா வண்டிகள் பயன்படுத்தப்பட்டன. முறையான சாலைகளே இல்லாத வழிகளில் இந்த டோங்காக்கள் பயணிக்கும். தொடர்ச்சியாக ஓரே நாளில் பல மணி நேரங்களுக்கும் தொடர்ந்து பல நாட்களுக்கும் குதிரை ஓடும் போது இரும்பு வளையங்களின் இடையே உராய்ந்து உராய்ந்து இந்த டங்கு வார் தேய்ந்து வலிமை இழந்து விடும். சில சமயங்களில் ஒரே பயணத்திலேயே இந்த டங்கு வார்கள் அறுந்து போகும்.. இதிலிருந்து அப்பயணத்தின் கடுமையை உணரலாம். சில கடும் பயண வழித்தடங்களை குறிப்பிட. "ஐயோ அந்த ஊருக்கு போகனுமா? டங்குவார் அறுந்துடுமே" என குறிப்பால் பயண கடுமையை குறித்துப் பேச... அதுவே, ஓர் செயலை செய்ய பெரும் துன்பப்படும் நிலைகள் ஏற்படுகையில் அக்கால கட்டத்தில் வண்டியோட்டிகள் பயன் படுத்திய இச்சொலவடை வழக்கு எல்லாவற்றுக்கும் பயன்படுத்தப்படலானது. காலணியின் டங்குவார் அறுந்து போவதும் பெரும் அலைச்சலையும் சரியாக நடக்க இயலாது சிரமமான நிலையையும் குறிக்கும். அதாவது ஒருவர், அவரது இயல்பு வாழ்க்கையில் பெரும் துயரங்களை பட்டால்தான் ஒரு சாதாரண வேலையையே முடிக்க முடியும் என்பதே. டங்குவார் அறுந்துடும் என்பதன் பொருள். நன்றி Quara -
By பாலபத்ர ஓணாண்டி · Posted
நடிப்பு.. மகா நடிப்பு.. அப்பாவும் மகனும் பேசிவச்சு நடிப்பு.. இப்ப நடிகர் எல்லாம் அரசியலுக்கு வாறங்கள்.. அரசியல்வாதிகள் எல்லாம் நடிக்க ஆரம்பிச்சிட்டாங்கள்.. -
கட்சியின் வெற்றிடமான பதவியை நிரப்பும் அதிகாரம் மத்தியகுழுவிற்கே உள்ளது – எம்.ஏ.சுமந்திரன் December 29, 2024 12:09 pm கட்சியில் வெற்றிடமான பதவியினை நிரப்பும் அதிகாரம் யாப்பின் படி மத்தியசெயற்குழுவிற்கே உள்ளதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் பேச்சாளர் எம்எ. சுமந்திரன் தெரிவித்தார். தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக்கூட்டம் வவுனியா இரண்டாம் குறுக்குத்தெருவில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் நேற்று இடம்பெற்றிருந்தது. இதன் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், “ஒருவர் தனது பதவியில் இருந்து விலகுவதற்கு பூரண சுதந்திரம் இருக்கிறது. எனவே மாவை சேனாதிராஜா தனது பதவியில் இருந்து விலகுவதற்கு பூரண சுதந்திரம் இருந்தது. அதனை உபயோகித்து அவர் கடந்த ஒக்டோர்பர் மாதம் பதவி விலகுவதாக அறிவித்தார். கட்சியின் யாப்பின் பிரகாரம் ஒரு பதவி வெற்றிடமானால் அதனை நிரப்பவேண்டிய பொறுப்பு கடமை அதிகாரம் மத்தியசெயற்குழுவிற்கே இருக்கிறது. அதனை இன்று செய்துள்ளது. தன்னுடைய நிலைப்பாட்டில் மாற்றம் இருப்பதாக அவர் வாய்மொழி ஊடகவோ எழுத்து மூலமாகவோ அறிவிக்கவில்லை. அவருக்கு தேவையான கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. எனவே அதன்பின்னரே கட்சி எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை எடுக்கும் என்று செயலாளர் அவருக்கு அறிவித்திருந்தார். இதேவேளை மாவை சேனாதிராஜா கட்சியின் பெருந்தலைவராக நியமிக்கப்பட்டார் என்று செய்திகள் வந்துள்ளன. அரசியல்குழு தலைவராக சம்மந்தன் அவர்களை நியமித்தபோதும் பெருந்தலைவர் என்றே அழைத்தோம். அவ்வாறு மாவைசேனாதிராஜாவை அழைப்போம் என நான் பிரேரித்திருந்தேன், ஆனால் யாப்பிலே அப்படி ஒரு பதவி இல்லை, எனவே யாப்பின்படி நாங்கள் செல்லவேண்டும் என்று சிறிதரன்கூறியதன் காரணத்தினால் பெருந்தலைவர் என்ற சொற்பதத்தை நாங்கள் உபயோகிக்கவில்லை. இதேவேளை சிவிகே சிவஞானம் பதில் தலைவராக செயற்படுவார் என்பது ஏகமனதாக எடுக்கப்பட்ட தீர்மானம். அதற்கு எவரும் மறுப்பு தெரிவிக்கவில்லை. சில திருத்தங்கள் செய்யப்பட்டது. அந்த தீர்மானத்திற்கு தான் இணங்கவில்லை என்றவாறான கருத்தை சிவமோகன் ஊடகங்களிடம் தெரிவித்திருந்தார். ஆனால் அந்த தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட தருணத்தில் அவர்கூட்டத்திலே இருந்ததுடன் எதிர்ப்பு எதனையும் தெரிவிக்கவில்லை. கட்சியின் 75 வது வருடநிறைவை முன்னிட்டு, பவள விழாவாக அதனை கொண்டாடுவதற்கு மாவட்டம் தோறும் நினைவு கூட்டங்கள் செய்வதற்கு தீர்மானித்துள்ளோம். அதனை பெருவிழாக மட்டக்களப்பு மாவட்டத்தில் கொண்டாட தீர்மானித்துள்ளோம். அதனையொட்டி மலர் ஒன்றும் பிரசுரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அந்த மலர்குழுவிற்கு மாவைசேனாதிராஜா அவர்கள் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். விழாக்குழுவின் தலைவராக கட்சியின் பதில் தலைவராக செயற்பட்டுக்கொண்டிருக்கிற சிவிகே. சிவஞானம் அவர்களை நியமித்துள்ளோம். அதற்கான ஏற்பாடுகளை மட்டக்களப்பு மாவட்டகுழுவுடன் இணைந்து செய்வதாக என மத்திய செயற்குழு தீர்மானித்துள்ளது” என்றார். https://oruvan.com/the-power-to-fill-a-vacant-position-in-the-party-lies-with-the-central-committee-m-a-sumanthiran/
-
மீண்டும் சர்ச்சையில் சிக்கிய அர்ச்சுனா; 1000 மில்லியன் ரூபா நஷ்டஈடு கோரி வழக்கு கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டத்தில் பனை அபிவிருத்திச் சபை சார்ந்து பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் சுமத்திய குற்றச்சாட்டுக்களை நிரூபிக்க தவறும் பட்சத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிடில் 1000 மில்லியன் ரூபா நஷ்டஈடு கோரி வழக்கு தொடர்வதற்கு நான் சட்டத்தரணி ஊடாக தயாராகி வருகின்றேன் என பனை அபிவிருத்திச் சபை தலைவர் வி.சகாதேவன் தெரிவித்தார். யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில், கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் அர்ச்சுனா இராமநாதன் எம்.பி மிகமோசமான முறையில் செயற்பட்டார். என்னுடைய உறவினர்கள் எவருமே பனை அபிவிருத்தி சபையில் இல்லை. என்னை வாயை மூடு என சொல்கின்றார். சபை நாகரிகம் இல்லாமல்அவர் இவ்வாறான விடயங்களை சொல்வது எமது சபையின் எதிர்காலத்தைப் பாதிக்கும். 95,000 ஆக இருந்த பனைத் தொழிலாளர்கள் எண்ணிக்கை இன்று 6000 ஆக குறைந்திருக்கின்றது. எதிர்வரும் வருடங்களில் 1500 பேர் வரையிலானோரே அனுமதிக்கு வந்துள்ளார்கள். 15000 பேரை கொண்டு வருவதற்கான முயற்சியை மேற்கொண்டு வரும்போது அர்ச்சுனா இராமநாதனின் நடவடிக்கை இந்த தொழிலை முற்றாக அழிக்கின்ற நிலைக்கு தள்ளும். டிசம்பர் மாதத்தில் செய்ய வேண்டிய வேலைக்காக கடந்த யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் சில விடயங்களை செய்ய முயன்றபோது அர்ச்சுனாவின் குழப்பத்தால் செய்ய முடியவில்லை. அர்ச்சுனா இராமநாதன் எம்.பி.எல்லோரிடமும் கேள்வி கேட்டு குழப்பம் செய்வதன் மூலம் ஊடகத்தில் தலைப்பு செய்தியாக வர முயல்கிறார்.அர்ச்சுனாவை கட்டுப்படுத்த வேண்டிய தேவை அமைச்சர் சந்திரசேகருக்கு இல்லை.அர்ச்சுனா எம்.பி.கட்டுப்பாட்டுடன் செயல்பட வேண்டும் என்ற தேவை அவருக்கு இருக்கின்றது. எதிர்வரும் காலங்களில் இதனை செய்ய தவறினால் மிகுந்த சிரமங்களை எதிர்நோக்க வேண்டும். நமது அமைதி நிதானம் என்பதை பொருட்டாக கருதாமல் தொடர்ந்து இவ்வாறு செயல்பட்டால் தக்க பதிலடி கொடுக்கப்படும். உண்மையில் அர்ச்சுனா அதிகாரிகளை கேள்வி கேட்பதற்கு முதல் தன்னை நோக்கி கேள்விகளை கேட்க வேண்டும். சாவகச்சேரி மக்கள் நம்பிக்கை அடிப்படையில் அர்ச்சனாவை எம்.பி.யாக அனுப்பி இருக்கின்றார்கள். அவர்களுக்கு உண்மையில் விசுவாசமாக நடக்கின்றாரா? அவர் முகப்புத்தகத்தில் வருகின்ற கருத்துக்களை வைத்து கொண்டு தன்னை பெரியாளாக கருதுகின்றார். உண்மையில் அவருடைய எம்.பி. பதவி என்பது ஊழலுக்கு எதிரான குரலுக்கு கிடைத்த பரிசாகும். சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை வளங்களை முன்னேற்ற தடை ஏதும் இல்லை. ஆனால் இன்று அது நடந்து இருக்கின்றதா? உண்மையில் இந்த ஊடகங்கள் அர்ச்சுனாவை பார்த்து கேள்வி கேட்கின்ற நேரம் விரைவில் வரும். சஜித் பிரேமதாசாவுக்கு பின்னால் அர்ச்சுனா ஒளி ய முற்பட்டார். அது நடக்கவில்லை. தற்போது தேசிய மக்கள் சக்திக்கு பின்னால் ஒளி ய முற்படுகின்றார். என்னை யாரும் இந்த அரசியல் கட்சி தான் என்று சொல்ல மாட்டார்கள். என் மீது பல விமர்சனங்கள் உண்டு. விமர்சனங்களை கடந்து நான் ஆராய்ச்சி துறையில் விடுதலைப் புலிகளின் காலம் சிறப்பாக பல வேலைகளை செய்துள்ளேன். கட்சிக்குரிய ஆளாக செயல்படவில்லை. அதற்கு சான்றாகவே இந்த பதவியை தந்தார்கள். நான் ஜே.வி.பி.யின் தொழிற்சங்கத்திலும் அங்கத்தவராக இல்லை. பாராளுமன்ற அர்ச்சுனா எம்.பி.யின் அவதூறு பொய் கருத்துக்கள் மக்களைச் சென்றடைந்திருப்பதால் நான் மிகுந்த மன உளைச்சலுக்குள் பணியாளர்களுடன் தொடர்ந்து வேலைகளை முன்னெடுப்பதில் இக்கட்டான சூழலில் இருக்கின்றேன். எம்முடைய பனை அபிவிருத்திச் சங்கங்கள் இதனால் பாதிப்படைய போகின்றன. முழு விடயங்களுக்கும் அர்ச்சுனா எம்.பி. பதில் சொல்லி பொறுப்பு கூற வேண்டும். இதற்கான சட்ட ஆலோசனை பெற்றிருக்கின்றேன். கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் பனை அபிவிருத்திச் சபை சார்ந்து அர்ச்சுனா எம்.பி. சுமத்திய ஏதாவது ஒரு குற்றச்சாட்டையாவது நிரூபிக்க தவறும் பட்சத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும். அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க தயாராக இருக்கின்றேன். 1000 மில்லியன் ரூபா நஷ்டஈடு கோரி வழக்கு தொடர்வதற்கு நான் சட்டத்தரணி ஊடாக தயாராகி வருகின்றேன். இனி இவ்வாறான விடயங்களை கூட்டங்களில் செய்வாராகவிருந்தால் பாரதூரமான பின்விளைவுகளை சந்திக்க வேண்டி வரும் என்பதை உறுதிபடத் தெரிவித்துக் கொள்கின்றேன் – என்றார். https://akkinikkunchu.com/?p=305311
-
-
Our picks
-
"முதுமையில் தனிமை [Senior Isolation]"
kandiah Thillaivinayagalingam posted a topic in வாழும் புலம்,
"முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.-
- 4 replies
Picked By
மோகன், -
-
"சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"
kandiah Thillaivinayagalingam posted a topic in மெய்யெனப் படுவது,
"சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"
தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!
“ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
-
- 4 replies
Picked By
மோகன், -
-
வேதத்தில் சாதி இருக்கிறதா?
narathar posted a topic in மெய்யெனப் படுவது,
இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.
ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.-
- 4 replies
Picked By
மோகன், -
-
மனவலி யாத்திரை.....!
shanthy posted a topic in கதை கதையாம்,
மனவலி யாத்திரை.....!
(19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)
அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.-
- 1 reply
Picked By
மோகன், -
-
பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை
mooki posted a topic in சமூகச் சாளரம்,
பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்
Friday, 16 February 2007
காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.-
- 20 replies
Picked By
மோகன், -
-
Recommended Posts
Archived
This topic is now archived and is closed to further replies.