Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உங்களுக்கு எந்த பாடலை கேட்டவுடன்  ஒரு குறிப்பிட்ட நினைவு வருகின்றது?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்த பாட்டை கேட்கும் போது ஊரில் சிறுவயதில் குடும்பத்துடன்,  ஊரார், நண்பர்களுடன் விதம் விதமாக சாப்பிட்ட நினைவுதான் வரும் .   இந்த பாட்டிற்கே இந்த படத்தை தமிழ் & மழையாளத்தில் பல தடவை பார்த்துவிட்டேன்

  • Replies 101
  • Views 13.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

Picture1.jpg

நான் சிறுவனாக இருக்கும்பொழுது பக்கத்து சிறு கிராமங்களின் தொகுப்பிற்கு நடுவில் டூரிங் டாக்கீஸ் ஒன்று திறக்கப்பட்டது. தினசரி இரண்டு காட்சிகள் தான். அப்பொழுதெல்லாம் இரவு ஏழு மணிக்கு முதல் காட்சி தொடங்கப்பட்டுவிடும். இரண்டாவது காட்சி இரவு பத்து மணிக்கு.

எனது ஐயாவிடம் அடம் பிடித்து கூட்டிச் சென்று இந்த படத்தை பார்த்தேன். "ஐயா, திரையில் தோன்றும் இவர்கள் ஏன் இப்படி அழுகிறார்கள்..?" என ஐயாவிடம் கேட்டதும், அதற்கு என் ஐயா "நீ சிறு பையன்.. படத்தைப் பார்.." பதில் சொல்லி சமாளித்ததும் ஞாபகம் உள்ளது. அதன் பின் இப்பாடலை அடிக்கடி இலங்கை வானொலியில் கேட்கும்போது திரையில் பார்த்து நினைவிற்கு வந்த இந்த முதல் பட பாடல் ஞாபத்திற்கு வரும்.

பால்ய பருவத்தின் சிறு சிறு நினைவுகளை இக்கொரானா காலத்தில் இரைமீட்டுவதில் அலாதியான சுகம் இருக்கிறதுதான்..!

எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று..!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 7/4/2020 at 19:27, Maruthankerny said:

அன்னை மடி தனில் சில நாள்,
அதை விடுத்தொரு சில நாள்
திண்ணை வெளியினில் சில நாள்,
உண்ண வழியின்றி சில நாள்,
நட்பின் அரட்டைகள் சில நாள்,
நம்பி திரிந்ததும் பல நாள்
கானல் நீரினில் சில நாள்,
கடல் நடுவிலும் சில நாள்
கன்னி மயக்கத்தில் திருநாள்,

இப்படியே உருண்டு ஓடிக்கொண்டிருந்த வாழ்க்கையில் ...
ஒரு நயினாதீவு ஏஜெண்சி காரனை நம்பி கடன்பட்டு  கட்டிய காசையும் இழந்து 
மொழி உணவு உடை இன்றி மொஸ்கோவில் ஒரு ஒன்றரை வருடம் அகப்பட்டு கொண்டேன் 
அப்போது வயது பதின்பம் என்பதால் ஓடும் காலம் பற்றியோ எதிர்காலம் பற்றியோ பெரிதாக 
மனம் அலட்டிக்கொள்வதில்லை ... இப்போதும் அப்படிதான் எதையாவது இழக்க நேர்ந்தால் அதை பற்றி 
பெரிதாக அலட்டி மனம் சுருள்வதில்லை இது ஒரு பலவீனமும் கூட இப்படியான இறுமாப்பும் பெரிதாக கூடாதுதான் ஆனால் தொட்டில் சுபாவமாக இது தொடர்கிறது. .......
எமக்கு வீடு தந்திருந்தவரின் மகள் கொஞ்சம் கொஞ்சம் ஆங்கிலம் பேசுவார் ... ஒரு நாள் அவர் ஒரு இந்தியா படம்  ஓடுகிறது என்றும் தனக்கு இந்தியா படம் விருப்பம் என்றும் என்னை தன்னுடன் படம் பார்க்க அழைத்து சென்றார் .......... தியேட்ட்ர் சென்று போஸ்ட்ரை பார்த்தல் நம்ம கமல் நிற்கிறார் ....... எதோ சொந்தக்காரரை பார்த்ததுபோல மகிழ்ச்சி ....படம் தொடங்கும் வரை இப்படித்தான் படத்தின் கதையும் இருக்கும் என்று தெரியவில்லை........ எனக்கும் அந்த ரசிய பெண்ணுக்கும் இருந்த மொழி பிரச்னையை பாலசந்தர் படத்தில்  தத்துரூபமாக  காட்சி ஆக்கி இருப்பார் ....... எங்கள் இருவருக்குமே எதோ எம்மை திரையில் பார்ப்பது போல   இருந்தது...... 
வாழ்க்கையில் மறக்க முடியாத படம் 

இந்த பாட்டை ஆயிரம் தடவைக்கு மேல் கேட்டிருப்பேன் 
இந்த பாடல் கேட்க்கும்போதெல்லாம்  மொஸ்கோவின் வீதிகளும் கடைகளும் மெட்ரோ ரயில் பயணங்களும் 
நினைவில் வந்து வந்து போகும் 

On 7/4/2020 at 20:26, Eppothum Thamizhan said:

எனக்கும்   மனம் விட்டு அழவேண்டும்  என்று தோன்றினால் இந்தப்பாடலைத்தான் கேட்பேன், கண்ணீர் ஆறாக ஓடும்.  அற்புதமான பாடல் வரிகளும் சீர்காழியின் சிம்மக்குரலும் என்றும் திகட்டாது!!

இந்த இரண்டு பேரும் ஏதோ பிளானோடைதான் வந்திருக்கினம் போலை......
ஒராள் பாலச்சந்தர் எண்டுது மற்றாள் சீர்காழி எண்டுது.....😎

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:

ஏன் நீங்கள் பாடலை கேட்கவில்லையோ ??

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 minutes ago, Eppothum Thamizhan said:

ஏன் நீங்கள் பாடலை கேட்கவில்லையோ ??

எந்தப்பாடல் இதுவா? 😁

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:

எந்தப்பாடல் இதுவா? 😁

 நான் சொன்னது  'உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது ' பாடலை !!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 minutes ago, Eppothum Thamizhan said:

 நான் சொன்னது  'உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது ' பாடலை !!!

அந்த பாடல் என் கண்ணுக்கு தெரியவே இல்லை......அல்லது எனக்கு மட்டும் தான் தெரியவில்லையா? 🙃

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, குமாரசாமி said:

இந்த இரண்டு பேரும் ஏதோ பிளானோடைதான் வந்திருக்கினம் போலை......
ஒராள் பாலச்சந்தர் எண்டுது மற்றாள் சீர்காழி எண்டுது.....😎

இது ஒரு சாரின் குணாஅம்சங்கள் 
திரிக்கு திரி வன்மம் வளர்ப்பது ..... வாதம் செய்ய வக்கு இல்லையென்றால் 
இப்படித்தான் எங்காவது சொறிந்து தமக்கு தாமே இன்பம் காண்பது.

அவர் எனது பதிவை அவமதித்து இருக்கிறாராம் 
நாங்கள் அப்படியே சோகத்தில் சோர்ந்துபோகணுமாம்.
ஆக கடவது 

(அது பாலசந்தரின் டைரக்ஷனில் வெளியான முதல் ஹிந்தி படம் கமல் ரதி மாதவி மூவரும்  இந்த படத்தில்தான் முதன் முதலில் ஹிந்தியில் அறிமுகம். ரதிக்கு நஷனல் விருது கிடைத்த படம். இந்த பாடலை பாடியது லதா மங்சகேஸ்கார் இதே பாடல் ஸ் பி யின் குரலிலும் உண்டு. படத்தில் ஒருவரை ஒருவர் பார்க்க முடியாது பக்கத்து பக்கத்துக்கு அறையில் இருந்து கோட்டல் ஒன்றில் கமல் பாடும் சோக பாடல். இந்த பாடல் இருவருக்கும் காதல் இப்போதான் தொடங்குகிறது) 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

அந்த பாடல் என் கண்ணுக்கு தெரியவே இல்லை......அல்லது எனக்கு மட்டும் தான் தெரியவில்லையா? 🙃

என்னுடைய கண்ணுக்கும் தெரியவில்லை....மேலும் மருதரின் இணைப்பில் சத்யம் சிவம் சுந்தரம் வீடியோ இருக்கு ஆனால் அதுவும் வேலை செய்யவில்லை.....உங்களுக்கும் அப்படியா.....!  🤔

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, suvy said:

என்னுடைய கண்ணுக்கும் தெரியவில்லை....மேலும் மருதரின் இணைப்பில் சத்யம் சிவம் சுந்தரம் வீடியோ இருக்கு ஆனால் அதுவும் வேலை செய்யவில்லை.....உங்களுக்கும் அப்படியா.....!  🤔

இப்போ அருமையான சிட்சுவேசன் சாங்..! 😎

..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
9 minutes ago, Maruthankerny said:

இது ஒரு சாரின் குணாஅம்சங்கள் 
திரிக்கு திரி வன்மம் வளர்ப்பது ..... வாதம் செய்ய வக்கு இல்லையென்றால் 
இப்படித்தான் எங்காவது சொறிந்து தமக்கு தாமே இன்பம் காண்பது.

அவர் எனது பதிவை அவமதித்து இருக்கிறாராம் 
நாங்கள் அப்படியே சோகத்தில் சோர்ந்துபோகணுமாம்.
ஆக கடவது 

(அது பாலசந்தரின் டைரக்ஷனில் வெளியான முதல் ஹிந்தி படம் கமல் ரதி மாதவி மூவரும்  இந்த படத்தில்தான் முதன் முதலில் ஹிந்தியில் அறிமுகம். ரதிக்கு நஷனல் விருது கிடைத்த படம். இந்த பாடலை பாடியது லதா மங்சகேஸ்கார் இதே பாடல் ஸ் பி யின் குரலிலும் உண்டு. படத்தில் ஒருவரை ஒருவர் பார்க்க முடியாது பக்கத்து பக்கத்துக்கு அறையில் இருந்து கோட்டல் ஒன்றில் கமல் பாடும் சோக பாடல். இந்த பாடல் இருவருக்கும் காதல் இப்போதான் தொடங்குகிறது) 

அவரை நான் பிறகு பார்த்துக்கொள்கின்றேன்.

நீங்கள் இணைத்தது சலங்கை ஒலி திரைப்பட பாடல். அதன் டைரக்டர் வேறொருவர்.
நீங்கள் நினைத்தபாடல் இதுவெல்லோ 😁

13 minutes ago, suvy said:

என்னுடைய கண்ணுக்கும் தெரியவில்லை....மேலும் மருதரின் இணைப்பில் சத்யம் சிவம் சுந்தரம் வீடியோ இருக்கு ஆனால் அதுவும் வேலை செய்யவில்லை.....உங்களுக்கும் அப்படியா.....!  🤔

சத்தியம் சிவம் சுந்தரம் பாட்டு இந்த திரியிலை இருக்கா? எங்கை ஐயா????? 😲

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

அவரை நான் பிறகு பார்த்துக்கொள்கின்றேன்.

நீங்கள் இணைத்தது சலங்கை ஒலி திரைப்பட பாடல். அதன் டைரக்டர் வேறொருவர்.
நீங்கள் நினைத்தபாடல் இதுவெல்லோ 😁

இல்லை சலங்கைஒலி அது வேறு படம் அதில் ரதி இல்லை 
அது கமல் ஜெயப்பிரதா அது பாரத நாட்டியத்தை மையமாக கொண்ட காதல் கதை.

இது ஒரு தெலுங்கு ஹிட் ஆன பட சாயல் 
ஹிந்தியில் பாலசந்தர் கொஞ்சம் மாற்றி டைரக்ட் செய்திருந்தார் 

படத்தின் பெயர் Ek Duuje Ke Liye

இதுக்கு வேறு பெயர் இருந்து 
இந்த பெயரை பின்பு மாற்றியதாக எங்கோ வாசித்த நினைவு 
முந்திய பெயர் தெரியவில்லை 

நான் இணைத்தது இந்த பாடல் 

  • கருத்துக்கள உறவுகள்

இதோ இப்பொழுதும் மருதரின் இணைப்பில் சத்யம் சிவம் சுந்தரம் வீடியோ இருக்கு.....!  🤔

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, suvy said:

என்னுடைய கண்ணுக்கும் தெரியவில்லை....மேலும் மருதரின் இணைப்பில் சத்யம் சிவம் சுந்தரம் வீடியோ இருக்கு ஆனால் அதுவும் வேலை செய்யவில்லை.....உங்களுக்கும் அப்படியா.....!  🤔

நான் இணைத்த பாடல் தெரியவில்லையா?
எனக்கு தெரிகிறதே .....அதுதான் குழப்பமா?
மீண்டும் இணைத்து இருக்கிறேன் பாருங்கள் தெரிகிறதா என்று 

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Maruthankerny said:

இல்லை சலங்கைஒலி அது வேறு படம் அதில் ரதி இல்லை 
அது கமல் ஜெயப்பிரதா அது பாரத நாட்டியத்தை மையமாக கொண்ட காதல் கதை.

இது ஒரு தெலுங்கு ஹிட் ஆன பட சாயல் 
ஹிந்தியில் பாலசந்தர் கொஞ்சம் மாற்றி டைரக்ட் செய்திருந்தார் 

படத்தின் பெயர் Ek Duuje Ke Liye

இதுக்கு வேறு பெயர் இருந்து 
இந்த பெயரை பின்பு மாற்றியதாக எங்கோ வாசித்த நினைவு 
முந்திய பெயர் தெரியவில்லை 

நான் இணைத்தது இந்த பாடல் 

இப்பொழுது உங்களின் இணைப்பை கோட் பண்ணியுள்ளேன் பாருங்கள்.....!

மறுத்தார் நான் கோட் பண்ணும்போது சத்யம் பாடல்.  அதில் பதிவாகும்போது chura liya hai  பாடல் இருக்கு.....!

இப்ப நான் இணைக்க வாசமில்லா மலரிது இருக்கு.....!

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, suvy said:

இப்பொழுது உங்களின் இணைப்பை கோட் பண்ணியுள்ளேன் பாருங்கள்.....!

ஆம் நான் இணைத்து இந்த பாடல் இல்லை மாறி வருகிறது ... குறைந்த பட்ஷம் படம் என்றாலும் 
அதுவாக இருக்கிறது.

யூடுப் காரர்கள்தான் எதோ கோல்மால் செய்கிறார்களா?
உண்ணுமே புரியவில்லை ...

நீங்கள் இணைக்கும் சில பாடல்களும் இங்கு பார்க்க முடிவதில்லை 
இவங்கள் அமெரிக்க காரங்கள்தான் எதோ தில்லு முல்லு செய்கிறார்கள் என்று நினைக்கிறேன் 

  • கருத்துக்கள உறவுகள்

நான் நினைக்கிறன் இந்தத் திரியில் மட்டும் ஏதோ கோளாறு இருக்கு.நிர்வாத்தினர் பார்த்தால் சரி செய்து விடுவார்கள்.....!  

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
11 minutes ago, Maruthankerny said:

ஆம் நான் இணைத்து இந்த பாடல் இல்லை மாறி வருகிறது ... குறைந்த பட்ஷம் படம் என்றாலும் 
அதுவாக இருக்கிறது.

யூடுப் காரர்கள்தான் எதோ கோல்மால் செய்கிறார்களா?
உண்ணுமே புரியவில்லை ...

நீங்கள் இணைக்கும் சில பாடல்களும் இங்கு பார்க்க முடிவதில்லை 
இவங்கள் அமெரிக்க காரங்கள்தான் எதோ தில்லு முல்லு செய்கிறார்கள் என்று நினைக்கிறேன் 

7 minutes ago, suvy said:

நான் நினைக்கிறன் இந்தத் திரியில் மட்டும் ஏதோ கோளாறு இருக்கு.நிர்வாத்தினர் பார்த்தால் சரி செய்து விடுவார்கள்.....!  

ஒரு சோலியும் வேண்டாம் நான் நாளைக்கு வாறன். கடிவாங்கினது போதும்.

Vadivelu Funny Comedy Scene | Kovil | Tamil Film | Part 9 on Make ...

கொரோனா சோலிக்கை இவிங்க வேற...😂

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

ஒரு சோலியும் வேண்டாம் நான் நாளைக்கு வாறன். கடிவாங்கினது போதும்.

Vadivelu Funny Comedy Scene | Kovil | Tamil Film | Part 9 on Make ...

கொரோனா சோலிக்கை இவிங்க வேற...😂

இது புதிதாக இருக்கிறது ......
இணைத்து வேலை செய்யவில்லை என்றால் கூட பரவாயில்லை 
வேறு பாடல் வருவது என்பது விந்தையாக இருக்கிறது 

5 minutes ago, குமாரசாமி said:

ஒரு சோலியும் வேண்டாம் நான் நாளைக்கு வாறன். கடிவாங்கினது போதும்.

Vadivelu Funny Comedy Scene | Kovil | Tamil Film | Part 9 on Make ...

கொரோனா சோலிக்கை இவிங்க வேற...😂

கொரோனா கூட வந்து போராடி தோற்றால்தான் மரணம் 
இந்த குழப்பம் கொஞ்சம் கொஞ்ச்மாக கொல்கிறது ...
எப்படித்தான் உங்களுக்கு தூக்கம் வருமோ தெரியவில்லை 
சென்று முயற்சி செய்து பாருங்கள் முடியாவிட்டால் .. எழுந்து வாருங்கள் 
நாங்கள் இங்குதான் இருப்போம் 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

அந்த பாடல் என் கண்ணுக்கு தெரியவே இல்லை......அல்லது எனக்கு மட்டும் தான் தெரியவில்லையா? 🙃

மருதரின் இணைப்பில் இருந்த பாடல் பாடகர் முகேஷ் அவர்கள் ZEE டிவி நிகழ்ச்சி ஒன்றில் பாடிய கர்ணன் திரைப்படத்தில் இடம்பெற்ற  'மரணத்தை எண்ணி கலங்கிடும்' என்றபாடலுடன் தொடங்கி 'உள்ளத்தில் நல்ல உள்ளம்' என்ற பாடலுடன் முடிந்தது. அதற்குத்தான் எனது கருத்து??

இப்போதும் நான் இணைத்த கருத்தில் அதே பாடல்தான் இருக்கிறது??

Edited by Eppothum Thamizhan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
12 minutes ago, Eppothum Thamizhan said:

மருதரின் இணைப்பில் இருந்த பாடல் பாடகர் முகேஷ் அவர்கள் ZEE டிவி நிகழ்ச்சி ஒன்றில் பாடிய கர்ணன் திரைப்படத்தில் இடம்பெற்ற  'மரணத்தை எண்ணி கலங்கிடும்' என்றபாடலுடன் தொடங்கி 'உள்ளத்தில் நல்ல உள்ளம்' என்ற பாடலுடன் முடிந்தது. அதற்குத்தான் எனது கருத்து??

இப்போதும் நான் இணைத்த கருத்தில் அதே பாடல்தான் இருக்கிறது??

உங்களில் பிழை இல்லை. ஏனென்றால் ஒவ்வொருவருக்கும் பாடல்கள் மாறி மாறி காட்டுகின்றது என தெரிவித்திருக்கின்றார்கள்.
உங்கள் மனதை நோகடித்திருந்தால் மன்னிக்கவும்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ராசவன்னியன் said:

Picture1.jpg

நான் சிறுவனாக இருக்கும்பொழுது பக்கத்து சிறு கிராமங்களின் தொகுப்பிற்கு நடுவில் டூரிங் டாக்கீஸ் ஒன்று திறக்கப்பட்டது. தினசரி இரண்டு காட்சிகள் தான். அப்பொழுதெல்லாம் இரவு ஏழு மணிக்கு முதல் காட்சி தொடங்கப்பட்டுவிடும். இரண்டாவது காட்சி இரவு பத்து மணிக்கு.

எனது ஐயாவிடம் அடம் பிடித்து கூட்டிச் சென்று இந்த படத்தை பார்த்தேன். "ஐயா, திரையில் தோன்றும் இவர்கள் ஏன் இப்படி அழுகிறார்கள்..?" என ஐயாவிடம் கேட்டதும், அதற்கு என் ஐயா "நீ சிறு பையன்.. படத்தைப் பார்.." பதில் சொல்லி சமாளித்ததும் ஞாபகம் உள்ளது. அதன் பின் இப்பாடலை அடிக்கடி இலங்கை வானொலியில் கேட்கும்போது திரையில் பார்த்து நினைவிற்கு வந்த இந்த முதல் பட பாடல் ஞாபத்திற்கு வரும்.

பால்ய பருவத்தின் சிறு சிறு நினைவுகளை இக்கொரானா காலத்தில் இரைமீட்டுவதில் அலாதியான சுகம் இருக்கிறதுதான்..!

எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று..!!

ராஜவன்னியன் எனக்கு நெடுநாள் சந்தேகம் தமிழக உறவுகள்தான் இதை அதிகம் பாவிப்பார்கள் ஈழத்தில் இது இல்லை.

டூரிங் டாக்கீஸ் என்றால் என்ன? சினிமா தியேட்டருக்கும் டூரிங் டாக்கீசுக்கும் என்ன வித்தியாசம் உறவே??

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

ராஜவன்னியன் எனக்கு நெடுநாள் சந்தேகம் தமிழக உறவுகள்தான் இதை அதிகம் பாவிப்பார்கள் ஈழத்தில் இது இல்லை.

டூரிங் டாக்கீஸ் என்றால் என்ன? சினிமா தியேட்டருக்கும் டூரிங் டாக்கீசுக்கும் என்ன வித்தியாசம் உறவே??

டூரிங் டாக்கீஸின் (Touring Talkies) அமைப்புகள்..

53433064.jpg  

m_id_381242_maharashtra_touring_talkies.jpg?w=660

53433066.jpg

GaneshThiraiArangam_650_new2.jpg

GaneshThiraiArangam_750Main.jpg?itok=YGEOOAcx

1_16a0822e7e2.1878989_3436951993_16a0822e7e2_medium.jpg

நான் சிறுவனாக இருக்கும்பொழுது, இப்படித்தான் டூரிங் டாக்கீஸில் படம் பார்த்து ரசித்தேன்..!

அது ஒரு கனாக் காலம், இனி திரும்ப வராது..🙄

boy.jpg

டூரிங் டாக்கீஸ் (Touring Talkies) என்பது ஊருக்கு வெளியே மக்களின் குடியிருப்புகளுக்கு அப்பால், காலி நிலத்தில் மூங்கில் கம்புகளும், பனைமர தூண்களும், தென்னங் கீற்று கிடுகுகளின் அடுக்குகளால் வேயப்பட்டு உருவாக்கப்படும் கொட்டகையாகும். இக்கொட்டகையை சுற்றி தெப்பை தட்டிகளால் வேலி அமைத்திருப்பார்கள்.

உள்ளே உட்கார்ந்து படம் பார்க்க,

'தரை டிக்கட்' என்பது ஆற்று மணலை கொட்டி வைத்திருப்பார்கள்.

அடுத்தது 'பெஞ்ச் டிக்கட்' என்பது மரத்தால் ஆன நீளமான இருக்கைகள் உள்ள பகுதியாகும்.

அடுத்தது 'சேர் டிக்கட்' என்பது முதல் வகுப்பு மாதிரி, உயரமாக மேடை அமைத்து ஒவ்வொருவருக்கும் தனித்தனி இருக்கைகள் இருக்கும்.

கொட்டகை அமைக்கப்பட்ட பின், வருவாய் துறை, வட்டாட்சியர் அலுவலக அதிகாரிகள் வந்து சோதனை செய்துவிட்டு, இயங்க அனுமதி அளிப்பார்கள்

இதற்கு 'டூரிங் டாக்கீஸ்' என பெயர் வரக் காரணம், இந்த கொட்டகை அமைப்பிற்கு ஆயுட்காலம் இரண்டு அல்லது மூன்று வருடங்கள் மட்டுமே இயங்க அரசு அனுமதி அளிக்கும். அடுத்து இயங்க வேண்டுமெனில், கொட்டகையை முற்றிலும் பிரித்துவிட்டு புது மூங்கில், கிடுகுகளைக்கொண்டு வேய்ந்து அனுமதிக்கு மறுபடியும் விண்ணப்பிக்க வேண்டும்.

மழையிலும், வெயிலிலும் தொடர்ந்து இயங்குவதால் இதன் ஆயுட்காலம் கம்மி. மேலும் எளிதில் தீ பிடித்து பலத்த உயிர் சேதங்களும் ஏற்படுவதுண்டு. ஆகவே இவற்றை ஊருக்கு வெளியே தள்ளி திறந்த வெளியில் தான் அமைக்க அரசு அனுமதி அளிக்கும்.

பின்னர் காலம் செல்ல செல்ல, பரிணாம வளர்ச்சி பெற்று, மூங்கில், கிடுகளுக்கு பதில், நீளமான சவுக்கு கட்டைகள், மற்றும் மெல்லிய ஆஸ்பெஸ்டாஸ் தகடுகளைக் கொண்டு 'டூரிங் டாக்கீஸ்'கள் அமைக்கப்பட்டன.

நிலையில்லாமல், அடிக்கடி இடம் விட்டு இடம் மாறுவதாலும், முற்றிலும் பிரிக்கப்பட்டு திரும்ப கொட்டகை அமைக்கப்படுவதாலும் இவற்றுக்கு "டூரிங் டாக்கீஸ்" (Touring Talkies) என பெயர் வந்தது.

நிலையான கட்டிடங்களில் இயங்கும் திரையரங்குகளின் அமைப்பே வேறு.

Omaha-Theater.jpg

தெளிவுபடுத்தியிருப்பேன் என நம்புகிறேன்..! 😎

நன்றி.

Edited by ராசவன்னியன்

  • கருத்துக்கள உறவுகள்

இதுக்கு மேலுமா....... இப்ப அவர் தெளிந்து இருப்பார் வன்னியன்.......!   😁

Vivek on Make a GIF

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ராசவன்னியன் said:

படத்தை திரையிடும் தொழில்நுட்பம் ஒரே மாதிரியானதாக தெரிகிறதே 
அல்லது ஏதும் வித்தியாசம் இருக்கிறதா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.