Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரித்தானிய அரசின் உத்தரவை மீறிவரும் மக்கள் - 5வயது குழந்தை உட்பட ஒருநாளில் 708 உயிரிழப்புக்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

2019ம் ஆண்டு இறுதியில் சீனாவை உலுக்கிய கொரோனா வைரஸ் தொற்றுநோய் கொஞ்சம் கொஞ்சமாக பின்னர் வேகமாக உலக நாடுகளிலேயும் பரவி பல உயிர்களை கொன்றொழித்துவரும் நிலையில் பிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 708 பேர் உயிரிழந்துள்ளதாக இன்றைய கொரோனா வைரஸ் தொடர்பான புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த சில நாட்களாக பிரித்தானியாவில் உயிரிழப்புக்களும் தொற்றுநோயாளார்களின் எண்ணிக்கையும் மிகமிக வேகமாக அதிகரித்து வருவது கண்கூடு.

இந்நிலையில் 24 மணிநேரத்தினுள் எந்தவொரு சுகவீனமுமின்றி நல்ல சுகாதார நிலைமையைக்கொண்ட 5 வயது குழந்தை உட்பட 708 பேர் உயிரிழந்துள்ளமையோடு இதுவரையில் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 4313 ஆக காணப்படுகின்றது.

கொரோனா தாக்கத்தின் பிடியில் இருந்து விடுபடவேண்டும் என்பதற்காக சிற்சில நாடுகள் மிக கடுமையான முடக்கல்களை அமுல்ப்படுத்தியிருந்தாலும் பிரித்தானியா கடுமையாக முடக்காதுவிடினும் மக்களுக்காக சில அறிவுறுத்தல்களை வெளியிட்டிருந்தது.

ஆனாலும் அதை மக்கள் செவிமெடுக்காது கடந்த மாதம் அன்னையர் தினத்துக்காக வெளியிடங்களில் சமூக இடைவெளிகளை கடைப்பிடிக்காது ஒன்றாக பொது இடங்களில் கூடியிருந்ததை பிரித்தானிய ஊடகங்கள் வெளிக்காடி இருந்தமையை அடுத்து மீண்டும் அரசு மக்களை வீடுகளில் முடங்கியிருந்து மருத்துவ பணியாளர்களை உற்சாகப்படுத்தி கொரோனா வைரஸ் பிடியில் சிக்குண்ட நம் நாட்டையும் மக்களையும் காப்பாற்றுமாறும் கேட்டிருந்தது.

safe.png

இந்நிலையில் பிரித்தானிய இளவரசர் மற்றும் பிரதமர் உட்பட இன்னும் சில உயரதிகாரிகளுக்கு கொரோனா தொற்று இருப்பதை மருத்துவர்கள் உறுதிப்படுத்திய பின்னரும் பிரித்தானியாவில் நாளாந்த உயிரிழப்புக்கள் அதிகரித்தவண்ணமே இருக்கின்றது.

இந்நிலையில் பிரித்தானியாவில் இன்றைய காலநிலை மிகவும் நன்றாக இருப்பதனால் பல இடங்களில் பொதுமக்கள் கூடி இருப்பதை மீண்டும் பிரித்தானிய ஊடகங்கள் வெளிவிட்டிருக்கின்றன.

இவ்வாறு தொடரும் நாட்களில் வெப்பநிலை அதிகரிக்கும் என்பதனால் பிரித்தானிய மக்கள் அரச அறிவுறுத்தல்கள் எதனையும் கருத்திற்கொள்ளாது, கொரோனாவுக்கு பயப்படாது தத்தம் வேலைகளில் ஈடுபடுவதோடு வார இறுதி நாட்களில் சூரிய வெளிச்சத்திற்காக பொது இடங்களில் கூடுவதைத் தவிர்க்கவே முடியாது.

இதனாலேயே கொரோனா தொற்று இன்னும் அதிகமாக ஏற்படும் என்பதை அரசு அடிக்கடி சுட்டிக்காட்டினாலும் மக்கள் அதைப் பொருட்படுத்துவதில்லை என்பதும் பொலிஸாரால் அதைக் கட்டுப்படுத்தமுடியாது என்பதையும் பிரித்தானிய ஊடகங்கள் படங்கள் மூலம் வெளிப்படுத்தியுள்ளது.

625.0.560.350.160.300.053.800.700.160.90.jpg

https://www.tamilwin.com/uk/01/242680?ref=home-imp-parsely

  • கருத்துக்கள உறவுகள்

திமிருக்கான விலையை பிரித்தானியா கொடுக்க போகிறது

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, விசுகு said:

திமிருக்கான விலையை பிரித்தானியா கொடுக்க போகிறது

இந்த படங்களில் உள்ளவர்களுக்கு அதிகூடிய நம்பிக்கை தங்களுக்கு வருத்தம் வந்தாலும் வெண்டிலேற்றர்  கட்டாயம் இருக்குமென்று மீண்டும் படங்களை பார்க்கவும்  விடயம் புரியும் .

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, விசுகு said:

திமிருக்கான விலையை பிரித்தானியா கொடுக்க போகிறது

இவர்களின் இந்த திமிருக்கான விலை ஏலவே கொடுக்கப்பட்டாயிற்று. இன்னும் கொடுக்கப் போகிறார்கள்.

சீனா.. 3300 போரோடு நிறுத்தியதை இவர்கள்.. 4200 தாண்டியும் நிறுத்த முயலவில்லை.

பிபிசி பிரித்தானியா சீனாவை விஞ்சி விட்டது குறித்து மூச்சும் விடவில்லை.

இவர்களின் திமிருக்கு.. 5 பேரூந்து ஓட்டினர்கள்.. 7 சுகாதார சேவையாளர்கள்.. விலை கொடுத்துள்ளனர் இதுவரை.

இன்னும் இந்த வகுப்பினரிடையே உயிழப்பு அதிகரிக்கும் என்று கூறி வருகின்றனரே தவிர கட்டுப்படுத்த நடவடிக்கைகள் தெளிவாக இல்லை.

பிரித்தானிய அரசின் இறுக்கமற்ற அணுகுமுறை.. பலியிடலை அதிகரிக்கும். புதிய தொற்றுக்களை குறைக்காமல்.. பலிகளை குறைக்க முடியாது. 

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, விசுகு said:

திமிருக்கான விலையை பிரித்தானியா கொடுக்க போகிறது

நியூயோர்க்கிலும் இது தான் நிலமை.

உண்மையில் இவர்கள் தான் காவிகள்.
 
14 minutes ago, nedukkalapoovan said:

இவர்களின் இந்த திமிருக்கான விலை ஏலவே கொடுக்கப்பட்டாயிற்று. இன்னும் கொடுக்கப் போகிறார்கள்.

வணக்கம் நெடுக்கு
நீங்களும் வைத்திய சம்பந்தமான துறை என்று எண்ணுகிறேன்.
மிகவும் கவனமாக இருங்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, ஈழப்பிரியன் said:

வணக்கம் நெடுக்கு
நீங்களும் வைத்திய சம்பந்தமான துறை என்று எண்ணுகிறேன்.
மிகவும் கவனமாக இருங்கள்.

என்னுடைய வேண்டுகோளும் அதுவே கவனம் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

படத்தில் காணப்பட்ட கூத்துக்களை ஜேர்மனியில் பார்ப்பது அரிது.
ஏதும் அவசர தேவையெண்டால் கடைக்கு போறம் ....வாங்குறம்...வாறம் அவ்வளவுதான்.

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, குமாரசாமி said:

படத்தில் காணப்பட்ட கூத்துக்களை ஜேர்மனியில் பார்ப்பது அரிது.
ஏதும் அவசர தேவையெண்டால் கடைக்கு போறம் ....வாங்குறம்...வாறம் அவ்வளவுதான்.

ஜேர்மனிகள் சாவுக்கு பயந்தவர்கள் பிரித்தானியர்கள் சாவை எதிர்கொண்டு சாவார்கள் 😎😎

  • கருத்துக்கள உறவுகள்

சொல்லு கேளாமல், வெளிய போய் வருத்தம் வந்தால், அவர்களது மருந்து செலவு, அவர்களே பொறுப்பு, அவர்களின் சம்பளத்தில் இருந்து மாதாமாதம் அரசு கழித்துக் கொள்ளும் என்று சொன்னால், வீட்டுக்குள் இருப்பார்கள். 🤨

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, பெருமாள் said:

இந்த படங்களில் உள்ளவர்களுக்கு அதிகூடிய நம்பிக்கை தங்களுக்கு வருத்தம் வந்தாலும் வெண்டிலேற்றர்  கட்டாயம் இருக்குமென்று மீண்டும் படங்களை பார்க்கவும்  விடயம் புரியும் .

ஏன் ஆஸ்பத்திரியில் இன வேறுபாடு பார்க்கிறார்களா?
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ரதி said:

ஏன் ஆஸ்பத்திரியில் இன வேறுபாடு பார்க்கிறார்களா?
 
அதெல்லாம் வெளியில் சொல்லப்படாது இன்னும் சொல்வது என்றால் ஆசியர்கள் கூட உள்ள பகுதி ஆஸ்பத்திரிகளுக்கு போதுமான மாஸ்க்குகள் கூட அனுப்பப்படவில்லை ஆனால் M 25 விட்டு வெளியே கதை வேறு பொதுவெளியில் ஓரளவுக்கு மேல சொல்ல முடியாது உங்களுக்கு தெரிந்த வைத்திய நிலையத்தில் வேலை பார்ப்பவர்களை கேட்டு பாருங்கள் குமுறி விழுவார்கள் .

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, பெருமாள் said:

😟

  • கருத்துக்கள உறவுகள்

பிரித்தானியாவில் இந்த வீக்கன்டோட இறப்பு வகை  தொகையின்றி போகும் என்று சொல்லினம்...இத்தாலியை மிஞ்சிடுவம் போல இருக்கு😟 ...பாக்குகளையும் பூட்டப் போறார்களாம் 
 
  • கருத்துக்கள உறவுகள்
On 4/4/2020 at 23:13, ஈழப்பிரியன் said:

வணக்கம் நெடுக்கு
நீங்களும் வைத்திய சம்பந்தமான துறை என்று எண்ணுகிறேன்.
மிகவும் கவனமாக இருங்கள்.

On 4/4/2020 at 23:49, பெருமாள் said:

என்னுடைய வேண்டுகோளும் அதுவே கவனம் .

நன்றி உறவுகளே. கடந்த தைத் திங்களில்... சீனாவில் இந்த வைரஸ் பரவத் தொடங்கியது முதல் பிரித்தானியாவுக்குள் நோய் காவாளர்கள் வரத்தொடங்கி விட்டார்கள். அப்போதே நாம் எச்சரித்தோம்.. சரியான தடுப்பு protocols ஐ உடனடியா நிறுவி அமுல்படுத்துங்கள் இன்றேல்.. இது பாரதூரமான விளைவுகளை கொண்டு வரும் என்று. எமது வேலைத்தள.. நிர்வாகப் பொதுக்கூட்டத்தில் கூட இதனை வலியுறுத்தினோம். எமக்கான வழிமுறைகளை வரையச் சொல்லி கேட்டோம். ஆனால் அப்போது PHE இன் வழிமுறைகளை வேதவாக்காக எடுத்துச் செயற்பட நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். 

ஆனால்... அன்று இதனை சாதாரணமாக எடுத்தவர்களும்.. ஆரம்பத்தில்.. covid -19 ஐ downgrade பண்ணி அரசுக்கு ஆலோசனை வழங்கியவர்களின் தவறே.. இத்தனை மரணங்கள். தொற்றுக்கள்.

குறிப்பாக.. ஸ்கான்டிநேவியன் நாடுகள்.. சீனாவில் பரவத்தொடங்கியதும்.. தம் தம் நாடுகளை பூட்டி விட்டார்கள். எல்லைகளை மூடிவிட்டார்கள். ஆனால்.. பிரித்தானியா.. இத்தாலியில் ஸ்பெயினில்... தொற்றுள்ளவர்கள்.. பிரித்தானியவுக்குள் வந்து பதுங்கும் வரை ஒரு உருப்படியான செயற்திட்டமும் இன்றி.. செயற்பட்டுக்கொண்டிருந்தார்கள். 

நாங்கள் நேரடியாக.... covid-19 positive மாதிரிகளோடு வேலை செய்திருக்கிறோம். இதுவரை எந்தப் பெரிய பாதிப்பும் வரவில்லை. இது கெட்டித்தனம் அல்ல.. அதிஷ்டம் அவ்வளவே. குறிப்பாக ஆய்வுசாலைகளுக்கூடாக கொவிட் 19 பரவியதாக சான்றுகள் இல்லை. பொதுப் போக்குவரத்து மற்றும் பொது மக்கள் கூடும் அல்லது அடர்த்தியா உள்ள இடங்களில் பரவியது தான் அதிகம். 

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.