Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சௌபாக்கியா வீட்டுத் தோட்டம் ஆரம்பித்து வைப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பத்து இலட்சம் வீட்டுத் தோட்டங்களை உருவாக்கும் திட்டததின் கீழான “சௌபாக்கியா வீட்டுத் தோட்டம்” இன்று (09) வாழைச்சேனை கமநல சேவைகள் திணைக்களத்தினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

வாழைச்சேனை கமநல சேவை பிரிவில் உள்ள மூன்று பிரதேச செயலாளர் பிரிவுகளில் முதற்கட்டமாக ஐநூறு குடும்பங்களுக்கு சௌபாக்கியா வீட்டுத் தோட்டத்திற்கான கத்தரி, மிளகாய், புசித்தாய், வெண்டி, போஞ்சி போன்ற ஐந்து வகை பயிர்களுக்கான விதைகள் வழங்கப்பட்டதுடன், பழ மரக்கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டது.

வாழைச்சேனை கமநல அபிவிருத்தி திணைக்கள பிரதேச உத்தியோகத்தர் எம்.ஏ.ரஷீட்; தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் திருமதி.நிஹாரா மௌஜூத், வாழைச்சேனை பிரதேச செயலாளர் கே.தனபாலசுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு பழமரக் கன்றுகளையும், மக்கறி வகைகளின் விதைகளையும் வழங்கி வைத்தனர். (150)

தமிழ் மக்கள் இதுபோன்ற சந்தர்ப்பங்களை நன்றாக பயன்படுத்த வேண்டும்! 

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, போல் said:

தமிழ் மக்கள் இதுபோன்ற சந்தர்ப்பங்களை நன்றாக பயன்படுத்த வேண்டும்! 

நான் ஒரு 30 வெண்டி மரங்கள் நட்டுள்ளேன் இனியும் இதான் வேலை அடுத்து பாவை ,கொச்சி , தக்காளி இப்படி வைக்க போறன் ஆனால் காணிதான் இல்லை 

உரப்பைகளை பயன்படுத்துகிறேன் 

7 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

நான் ஒரு 30 வெண்டி மரங்கள் நட்டுள்ளேன் இனியும் இதான் வேலை அடுத்து பாவை ,கொச்சி , தக்காளி இப்படி வைக்க போறன் ஆனால் காணிதான் இல்லை 

உரப்பைகளை பயன்படுத்துகிறேன் 

உங்கள் முயற்சிக்கு பாராட்டுக்கள்!

முடிந்தால் உங்கள் காணியின் ஒரு பகுதியை வலைகளால் அடைத்து அதனுள் பயிர்களை பயிரிடுவது கூடிய பலனைத் தரும்.

அணில், கோழி, முதலிய ஏனைய விலங்கினங்களிடமிருந்து பயிர்களை பாதுகாக்கலாம்.

சிறிது செலவானாலும் துருப்பிடிக்காத கம்பிவலைகளை அமைப்பது பயனுள்ளது. நூல் வலை எனின் அணில், எலி அவற்றை அறுத்துவிடும். வலைகளை சுற்றிவரவும் மேலும் அமைத்தல் சிறப்பானது. சிறுபகுதியில் ஆரம்பித்து பிறகு விரிவு படுத்தலாம். வீட்டு தோட்டங்களுக்கு இந்த முறை கூடிய பயனைத் தரும்.

தொடர்ச்சியாக செய்தால் கணிசமான இலாபம் கிடைக்கும் (செலவு குறையும்).

 

 

 

 

 

 

 

 

 

11 hours ago, தனிக்காட்டு ராஜா said:

நான் ஒரு 30 வெண்டி மரங்கள் நட்டுள்ளேன் இனியும் இதான் வேலை அடுத்து பாவை ,கொச்சி , தக்காளி இப்படி வைக்க போறன் ஆனால் காணிதான் இல்லை 

உரப்பைகளை பயன்படுத்துகிறேன் 

நல்லது. 

நாங்களும் ஒரு சிறு தோட்டம் செய்றம். வெண்டி, கத்தரி, மிளகாய், தக்காளி, அவரை உம் உண்டு.  அதுல எடுத்து சாப்பிடுறதுல ஒரு தனி சுகம் தான். 

11 hours ago, போல் said:

உங்கள் முயற்சிக்கு பாராட்டுக்கள்!

முடிந்தால் உங்கள் காணியின் ஒரு பகுதியை வலைகளால் அடைத்து அதனுள் பயிர்களை பயிரிடுவது கூடிய பலனைத் தரும்.

அணில், கோழி, முதலிய ஏனைய விலங்கினங்களிடமிருந்து பயிர்களை பாதுகாக்கலாம்.

சிறிது செலவானாலும் துருப்பிடிக்காத கம்பிவலைகளை அமைப்பது பயனுள்ளது. நூல் வலை எனின் அணில், எலி அவற்றை அறுத்துவிடும். வலைகளை சுற்றிவரவும் மேலும் அமைத்தல் சிறப்பானது. சிறுபகுதியில் ஆரம்பித்து பிறகு விரிவு படுத்தலாம். வீட்டு தோட்டங்களுக்கு இந்த முறை கூடிய பயனைத் தரும்.

தொடர்ச்சியாக செய்தால் கணிசமான இலாபம் கிடைக்கும் (செலவு குறையும்).

நல்ல தகவல். நல்ல முறை. 
கோழிகள் மரத்தில இருக்கிற மிளகாய்களை விடாது. 

2 hours ago, Knowthyself said:

 

 

 

 

 

 

அருமையான இணைப்புகள்!
அனைவரும் கட்டாயம் பொறுமையா பாக்க வேண்டியது!

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, தனிக்காட்டு ராஜா said:

நான் ஒரு 30 வெண்டி மரங்கள் நட்டுள்ளேன் இனியும் இதான் வேலை அடுத்து பாவை ,கொச்சி , தக்காளி இப்படி வைக்க போறன் ஆனால் காணிதான் இல்லை 

உரப்பைகளை பயன்படுத்துகிறேன் 

உரப்பை மிகவும் நல்லது .....இந்தியாவில் இதற்காக பைகள் விற்பனையில் உள்ளது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
20 hours ago, தனிக்காட்டு ராஜா said:

நான் ஒரு 30 வெண்டி மரங்கள் நட்டுள்ளேன் இனியும் இதான் வேலை அடுத்து பாவை ,கொச்சி , தக்காளி இப்படி வைக்க போறன் ஆனால் காணிதான் இல்லை 

உரப்பைகளை பயன்படுத்துகிறேன் 

உந்த கொரோனாவாலை கனபேருக்கு நல்ல புத்தி வந்துட்டுது.😁

மனித இனம் கட்டுக்கடங்காமல் போனால் இயற்கை தானாக மனிதனை கட்டுப்படுத்தி திருந்த வைக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Kali said:

நல்லது. 

நாங்களும் ஒரு சிறு தோட்டம் செய்றம். வெண்டி, கத்தரி, மிளகாய், தக்காளி, அவரை உம் உண்டு.  அதுல எடுத்து சாப்பிடுறதுல ஒரு தனி சுகம் தான். 

அதான் உன்மை நேரத்தை அதற்க்காக செலவிடுவோம் ,பூக்கும் போதும் காய்க்கும் போது இனம்புரியாத சந்தோசம் மரத்தைப்பார்த்து ஏற்படுகிறது 

4 hours ago, putthan said:

உரப்பை மிகவும் நல்லது .....இந்தியாவில் இதற்காக பைகள் விற்பனையில் உள்ளது

ஓம் உரப்பை நல்லது பொலித்தீன் பையை விட

3 hours ago, குமாரசாமி said:

உந்த கொரோனாவாலை கனபேருக்கு நல்ல புத்தி வந்துட்டுது.😁

மனித இனம் கட்டுக்கடங்காமல் போனால் இயற்கை தானாக மனிதனை கட்டுப்படுத்தி திருந்த வைக்கும்.

இயற்கையைவிட நண்பன் உலகில் ஏது காணி இல்லை சாமி அண்ண இல்லையென்றால் நான் கூட ஓர் விவசாயியே 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

6,000 வீட்டுத்தோட்ட விவசாயிகளை ஊக்குவிக்க விசேட வேலைத்திட்டம்

ஏ.எல்.எம்.ஷினாஸ்     

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசனை,  வழிகாட்டலுக்கமைய 6,000 வீட்டுத்தோட்ட விவசாயிகளை ஊக்குவிக்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, மாவட்ட விவசாயப் பணிப்பாளர் எம்.எஸ்.அபுல் கலீஸ் தெரிவித்தார். 

இது தொடர்பில் மேலும் கூறிய அவர், வீட்டுத் தோட்ட பயிர்ச்செய்கைக்கான விதைகள், கமநல சேவைகள் மத்திய நிலையத்தினூடாக ஓர் இரு தினங்களுக்குள் விநியோகிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவாகவும் தெரிவித்தார்.  

மாவட்டச் செயலாளர் டி.எம்.எல்.பண்டாரநாயக்கவின்  மேற்பார்வையின் கீழ், இந்த வேலைத்திட்டங்கள் மாவட்டத்தின் 20 பிரதேச செயலாளர் அலுவலகங்களிலும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.

'இலங்கையின் மொத்த அரிசு உற்பத்தியில், 25 சதவீதத்தை நான்கில் ஒரு பகுதியை அம்பாறை மாவட்ட உற்பத்தி பூர்த்தி செய்கிறது. இம்முறை சிறுபோகத்தில் 68ஆயிரம் ஹெக்டெயரில் நெற்பயிரச் செய்கையை காலம்முந்தி ஆரம்பித்திருக்கிறோம். ஏனெனில், மீண்டும் பெரும்போகத்தை ஆரம்பிப்பதற்கு முன்னர் எங்களுக்கு இரண்டு அல்லது மூன்று மாதங்கள் இடைவெளி கிடைக்கும். இந்த இடைவெளி காலப்பகுதியில், பயறு, கௌபி, சோளம் போன்ற பயிர்ச்செய்கைகளை முன்னெடுப்பதற்கும் தீர்மானித்துள்ளோம்' என்றார்.

 

http://www.tamilmirror.lk/அம்பாறை/6-000-வடடததடட-வவசயகள-ஊககவகக-வசட-வலததடடம/74-248354

 

13 hours ago, தனிக்காட்டு ராஜா said:

ஓம் உரப்பை நல்லது பொலித்தீன் பையை விட

DSC_2382.JPG&key=a38b2010cf2a596d0fd94a2

தற்போது பரவலாக பயன்படுத்தப்படும் பைகள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வவுனியாவில் மரக்கறி விதைகள் விநியோகம்…!

வவுனியா மாவட்டத்தில் வீட்டுத்தோட்ட அபிவிருத்திக்கான மரக்கறி விதைகள் மற்றும் மரக்கறி கன்றுகளை விநியோகம் செய்யும் நடவடிக்கை இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சுகாதார திணைக்களம் மற்றும் விவசாய திணைக்களத்துடன் இணைந்து கமநல அபிவிருத்தி திணைக்களத்தால் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கொரனா வைரஸ் தாக்கம் காரணமாக நாட்டில் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்,  மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையிலும் வீட்டுத் தோட்ட செய்கையை ஊக்கிவிக்கும் நோக்கிலும் இந்த செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

 

https://newuthayan.com/வவுனியாவில்-மரக்கறி-விதை/

வீட்டுத் தோட்டத்திற்றாக மரக்கறி விதைகள் விநியோகம் வவுனியாவில் ஆரம்பம்!

 

Supply-of-home-garden-seeds-in-Vavuniya-Coronavirus-Alert-Situation.jpg

வீட்டுத் தோட்டத்திற்காக முதற்கட்டமாக 10 ஆயிரம் மரக்கறி விதைகள் வவுனியாவில் 14 கிராமங்களுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் எண்ணக்கருவிற்கு அமைய பத்து இலட்சம் வீட்டுத் தோட்டத்தினை உருவாக்கும் சௌபாக்கியா வீட்டுத் தோட்டத் திட்டத்தின் கீழ் வவுனியாவில் மக்களுக்கு விதைகள் வழங்கும் செயற்திட்டம் வவுனியாவில் இடம்பெற்று வருகின்றது.

வவுனியா மாவட்டத்தில் வீட்டுத்தோட்ட அபிவிருத்திக்கான மரக்கறி விதைகள் மற்றும் மரக்கறி நாற்றுக்கள் விநியோகம் செய்யும் நடவடிக்கையானது சுகாதார திணைக்களம் மற்றும் விவசாய திணைக்களம் ஆகியன இணைந்து மேற்கொண்டு வருகின்றன.

வவுனியா நகர், தாண்டிக்குளம், சூசைப்பிள்ளையார் குளம், தெற்கிலுப்பைக்குளம் ஆகிய இடங்களில் இன்று (செவ்வாய்க்கிழமை) விதைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் முகமாக வீட்டுத் தோட்டச் செய்கை திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள நிலையில் கிராமங்கள் தோறும் செல்லும் கமநல அபிவிருத்தித் திணைக்கள உத்தியோகத்தர்கள் ஒலிபெருக்கி மூலம் அறிவித்து வீடுகள் தோறும் சென்று மக்களுக்கு விதைகளையும், நாற்றுக்களையும் விநியோகித்து வருகின்றனர்.

அதேவேளை, வவுனியா மாவட்டத்தின் எந்தப் பிரதேசத்தினைச் சேர்ந்தவராயினும் வவுனியா நகருக்கு வரும்போது இலுப்பையடியில் அமைந்துள்ள கோவில்குளம் கமநல சேவை நிலையத்தில் 20ரூபாய் செலுத்தி நாற்றுக்கள் அல்லது விதைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Supply-of-home-garden-seeds-in-Vavuniya-

Supply-of-home-garden-seeds-in-Vavuniya-

Supply-of-home-garden-seeds-in-Vavuniya-Coronavirus-Alert-Situation-4-scaled.jpg

Supply-of-home-garden-seeds-in-Vavuniya-

Supply-of-home-garden-seeds-in-Vavuniya-Coronavirus-Alert-Situation-5-scaled.jpghttp://athavannews.com/வீட்டுத்-தோட்டத்திற்றாக/

On 11/4/2020 at 06:27, தனிக்காட்டு ராஜா said:

அதான் உன்மை நேரத்தை அதற்க்காக செலவிடுவோம் ,பூக்கும் போதும் காய்க்கும் போது இனம்புரியாத சந்தோசம் மரத்தைப்பார்த்து ஏற்படுகிறது 

 

எப்படி போகுது உங்கள் வீட்டுத்தோட்டம்?
செழிப்பா வளர்ந்து கொண்டிருக்கும் என நினைக்கிறன்

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Kali said:
 

எப்படி போகுது உங்கள் வீட்டுத்தோட்டம்?
செழிப்பா வளர்ந்து கொண்டிருக்கும் என நினைக்கிறன்

93477396_245797996787114_6582917703386791936_n.jpg?_nc_cat=110&_nc_sid=b96e70&_nc_ohc=VrAfzIr_0KkAX9OTlTd&_nc_ht=scontent-syd2-1.xx&oh=64b4517755af0605f12479d64906f752&oe=5EC09E99சுமாராக போகின்றது குளிர் காலம் தொடங்கிவிட்டது...இனி கொஞ்ச நாளைக்கு வெளியே செல்ல உடம்பும் மனமும் இடம் கொடுக்காது

Edited by putthan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மரக்கறி பயிர் விதைகள் வழங்கல்

சௌபாக்கியா வீட்டுத் தோட்டம்” அரச திட்டத்தின் கீழ் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவில் பாலைநகர் கிராமத்தில் அமைந்துள்ள இமாம் ஜஃபர் ஸாதிக் சமூக சேவைகள் நிறுவனத்தின் ஏற்பாட்டில் வீட்டுத் தோட்டம் அமைத்தலும், விதைகள் வழங்கும் நிகழ்வும் நேற்று (17) நடைபெற்றது.

இதன்போது வீட்டுத் தோட்டத்திற்கான கத்தரி, மிளகாய், வெண்டி, போஞ்சி, பாகல் போன்ற ஐந்து வகை பயிர்களுக்கான விதைகள் வழங்கப்பட்டது. (150)

 

கோட்டாபயவின் எண்ணக்கருவில் “சௌபாக்கியா” திட்டம்! மக்களின் வீடுகளுக்குச் செல்லும் அதிகாரிகள்

நாட்டின் ஜனாதிபதியின் எண்ணக்கருவிற்கமைய ஆரம்பிக்கப்பட்டுள்ள பத்து இலட்சம் வீட்டுத் தோட்டத்தினை உருவாக்கும் 'சௌபாக்கியா வீட்டுத் தோட்டம்' அமைக்கும் பணிகள் நாடளாவிய ரீதியில் இடம்பெற்று வருகின்றது.

அந்தவகையில் ஓட்டமாவடி பிரதேச செயலக பிரிவில் பிரதேச செயலாளர் திருமதி.நிஹாரா மௌஜுத் வழிகாட்டலில் வீட்டுத் தோட்டம் செய்யும் பயனாளிகளுக்கு விதைகள் மற்றும் கன்றுகள் வழங்கும் நிகழ்வு இடம்பெற்று வருகின்றது.

இதனடிப்படையில் ஓட்டமாவடி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கிராம சேவகர் பிரிவில் வீட்டுத் தோட்டம் செய்யும் பயனாளிகளுக்கு விதைகள் மற்றும் கன்றுகள் வீடு வீடாக சென்று வழங்கப்படுவதுடன், தோட்டத்தினை ஊக்குவிக்கும் வழிமுறைகளும் நடைபெற்று வருகின்றது.

இதன்போது ஓட்டமாவடி பிரதேச செயலக விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தர்களான எம்.எம்.எம்.அஸ்பர், ரி.மோனகரூபன், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் ஐ.றியாஸ் ஆகியோர் வீடு வீடாக சென்று வழங்கி வருகின்றனர்.

இதில் கத்தரி விதைகள் ஐம்பது பேருக்கும், சட்டியில் வளர்க்கப்பட்ட கத்தரி கன்றுகள் நூறு பேருக்கும், சௌபாக்கியா திட்டத்தின் ஐந்து விதைகள் அடங்கிய பைகள் நூற்றி ஐம்பது பேருக்கும் வழங்கி வைக்கப்பட்டுள்ளதாக ஓட்டமாவடி பிரதேச செயலாளர் திருமதி.நிஹாரா மௌஜுத் தெரிவித்தார்.

 

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

https://www.ibctamil.com/srilanka/80/141452

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்
On 17/4/2020 at 20:03, Kali said:
 

எப்படி போகுது உங்கள் வீட்டுத்தோட்டம்?
செழிப்பா வளர்ந்து கொண்டிருக்கும் என நினைக்கிறன்

ஓம் இப்பதான் வளர்ந்து வருகிறது 

4 hours ago, putthan said:

 

நல்ல பதிவு!

மாவிட்டபுரம்  நித்தியானந்தனின் ஒருங்கிணைந்த பண்ணை முயற்சி பலருக்கு நல்ல முன்னுதாரணம்!

ஈழத்தில் வாழும் தமிழர் நலனில் அக்கறை உள்ள புலம்பெயர் தமிழர்கள் இந்த வீட்டுத்தோட்ட முயற்சியை ஊக்குவிக்கும் வாய்ப்பை இவர் வழங்குகிறார்.

Edited by Rajesh

எமது வளங்களை பயன்படுத்தி வளமான எதிர்காலத்தை அமைப்போம் –  சிவசக்தி ஆனந்தன்

In இலங்கை     April 19, 2020 7:13 am GMT     0 Comments     1058     by : Benitlas

தாயகத்தில் தனித்துவமாக உள்ள வளங்களை பயன்படுத்தி எமக்கான வளமான எதிர்காலத்தினை அமைத்துக்கொள்வதற்கு அனைத்து தரப்பினரும் பேதமின்றி திடசங்கற்படம் பூணவேண்டும் என தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் செயலாளர் சிவசக்தி ஆனந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இன்றைய தினம்(ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொரோனா வைரஸ் பரவலின் தாக்கம் உலகளாவிய ரீதியில் தீவிரமாகியுள்ள நிலையில் அதன் பாதிப்புக்கள் இலங்கையிலும் ஏற்பட்டுள்ளது.

ஏனைய உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் கொரோனா தொற்றாளர்களும், மரணங்களும் இலங்கையில் குறைவாக இருந்தாலும் அதனால் நாட்டின் ஒட்டுமொத்தமான  நிலைமையும் தலைகீழாக மாறியுள்ளது.

சுகாதார பிரிவினரின் தகவல்களின் பிரகாரம் எதிர்வரும் நாட்களில் நாட்டில் ஒரளவு நிலைமைகள் வழமைக்கு திரும்பினாலும், அன்றாட வாழ்வாதாரத்தினை நகர்த்திச் செல்வதில் பெரும் நெருக்கடியான நிலைமைகள் ஏற்படப்போகின்றமையை தவிர்க்க முடியாதவொரு சூழல் எழுந்துள்ளது.

போரின் பாதிப்புக்குள்ளாகியிருக்கும் எமது மக்களை மாறிமாறி ஆட்சிப்பீடத்தில் இருந்த அரசுகள் மாற்றான் தாய் மனப்பான்மையுடனேயே நடத்தி வந்திருந்தன என்பதை வெளிப்படையான விடயமாகின்றது.

எமது மக்களுக்கான நலத்திட்டங்கள் அனைத்துமே கண்துடைப்பான நாடகங்களாகவே இருக்கையில் எமது மக்கள் தமது சொந்த முயற்சியில் வாழ்வியலில் மீண்டெழ ஆரம்பித்திருந்தனர்.

அவ்வாறான நிலையில்  உலகளாவிய தொற்றுநோயான கொரோனா மீண்டெழ ஆரம்பித்திருந்த எமது மக்களின் ஒட்டுமொத்த வாழ்க்கையையும் புரட்டிப்போட்டுள்ளது.

திறந்த பொருளாதாரக் கொள்கை என்ற பெயரில் அரசாங்கம் பின்பற்றிய இறக்குமதிகளை மட்டுமே மையப்படுத்திய பொருளாதாரத்தினால், தற்போது பெரும் நெருக்கடிகள் எழுந்துள்ளதோடு சவால்கள் நிறைந்த எதிர்காலமொன்றுக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலைமையும் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் தாயக பூமி, காடுகளையும், களனிகளையும், நீர்நிலைகள் உள்ளிட்ட வளங்கள் நிறைந்தவையாக இருக்கின்றது.

இதனை நாம் அனைவரும் முதலில் மனதில் திடமாக நிறுத்திக்கொள்வதோடு உடனடியாக எமது வளங்களை மையப்படுத்தி எதிர்காலத்தினை திட்டமிடவேண்டிய கடப்பாட்டிற்குள் தள்ளப்பட்டுள்ளோம்.

குறிப்பாக எமது பிரதேசத்தின் தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதற்காக ‘சுயதேவை பொருளாதார’ கொள்கைகளை மையப்படுத்திய திட்டங்களை உடன் பின்பற்றுவதே எமக்கும் எதிர்காலச் சந்ததியினரினதும் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதாக இருக்கும்.

விசேடமாக, நெல் உற்பத்தி, மரக்கறி உற்பத்தி, நன்னீர், கடல் நீர் மீன்பிடி ஆகியவற்றை ஊக்குவிப்பது இன்றியமையாததாகின்றது.

அதுமட்டுமன்றி, அனைத்து தரப்பினரும் தமது வீடுகளில் வீட்டுத்தோட்டங்களை முன்னெடுப்பதும் அவசியமானதொரு செயற்பாடாகின்றது.

ஆகவே எமது மண்ணில் உள்ள வளங்களை சரியாக புரிந்து முறையாக பகிர்ந்து செயற்படுவதன் ஊடாக நாம் ஆட்சியாளர்களிடமோ, பிற தரப்பினர்களிடமோ தங்கி வாழும் சூழலிலிருந்து முற்றாக விடுபடுவதற்கான வழியை ஏற்படுத்துகின்றது.

கொரோனாவினால் ஏற்பட்டுள்ள சவால்களுக்கு முகங்கொடுக்கும் முகமாகவும் எமது எதிர்காலத்தினை நாமே வளமானதாக வகுத்துக்கொள்வதற்காகவும் தற்போதே தீர்க்கமாக முடிவெடுத்து  நடைமுறைச்சாத்தியமான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டியது கட்டாயமாகின்றது“ எனக் குறிப்பிட்டுள்ளார்.

http://athavannews.com/எமது-வளங்களை-பயன்படுத்தி/

On 18/4/2020 at 02:53, putthan said:

போகின்றது குளிர் காலம் தொடங்கிவிட்டது...இனி கொஞ்ச நாளைக்கு வெளியே செல்ல உடம்பும் மனமும் இடம் கொடுக்காது

குளிர்காலம் செடிகளுக்கும் கஷ்ட காலம் தான். 

On 19/4/2020 at 09:19, Rajesh said:

ஈழத்தில் வாழும் தமிழர் நலனில் அக்கறை உள்ள புலம்பெயர் தமிழர்கள் இந்த வீட்டுத்தோட்ட முயற்சியை ஊக்குவிக்கும் வாய்ப்பை இவர் வழங்குகிறார்.

நல்ல திட்டம் 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.