Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இறுதிக்கிரியை தொடர்பில் விசேட வர்த்தமானி

Featured Replies

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி இறந்த ஒருவரின் தகனம் தொடர்பில், சுகாதாரம் மற்றும் சுதேச வைத்திய சேவைகள் அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சியால் 11ஆம் திகதியிடப்பட்ட 2170/8 என்னும் இலக்க விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டிருக்கிறது.

குறித்த வர்த்தமானியில் 4ஆம் சரத்தில், 61அ பிரிவின் பிரகாரம், 'கொறோனா வைரஸ் நோய் 2019 (கொவிட்-19) இனால் இறந்துள்ள ஆளொருவரின் பூதவுடலின் தகனம்' என்ற பகுதியில் பின்வரும் விடயங்கள் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன.

(1) அறுபத்தோராம் மற்றும் 62ஆம் ஏற்பாடுகள் எதுஎவ்வாறிருப்பினும், கொறோனாவைரஸ் நோய் 2019 (கொவிட்-19) இனால் இறந்துள்ள அல்லது இறந்துள்ளதாகச் சந்தேகிக்கப்படும் ஆளொருவரின் பூதவுடல், சுகாதாரப் பணிப்பாளர் தலைமையதிபதியினால் விடுக்கப்படும் பணிப்புகளுக்கு இணங்க -

  • (அ) ஏதேனும் சாத்தியமான உயிரியல் அச்சுறுத்தலைத் தடுக்கும் நோக்கத்துக்கென முழுமையாக எரிவதற்கென ஆகக் குறைந்தது நாற்பத்தைந்து நிமிடங்கள் முதல் ஒரு மணி நேரம் வரை 800 க்கும் 1200 இக்குமிடையிலான பாகை செல்சியஸ் வெப்ப நிலையிலும்; அத்துடன்
  • (ஆ) அத்தகைய அதிகாரியின் மேற்பார்வையின்கீழ் முறையான அதிகாரியினால் அங்கிகரிக்கப்படும் சுடலை அல்லது இடத்திலும், 

தகனம் செய்யப்படுதல் வேண்டும்.

(2) ஆளெவரும், கொறோனா வைரஸ் நோய் 2019 (கொவிட்-19) இனால் இறந்துள்ள அல்லது இறந்துள்ளதாகச் சந்தேகிக்கப்படும் ஆளொருவரின் பூதவுடலை முறையான அதிகாரியினால் பெயர் குறித்து நியமிக்கப்படும் தகனத்துக்கான அவசிய கடமைகளைப் பொறுப்பேற்கின்ற ஆள்கள் தவிர்ந்த வேறெவரேனும் ஆளுக்குக் கையளித்தலாகாது.

(3) அத்தகைய சுடலை அல்லது இடத்தில் பூதவுடலைக் கையாளுகின்ற ஆள்களினால் பயன்படுத்தப்படும் உடை மற்றும் மீளப் பயன்படுத்தப்படற்பாலதல்லாத தனிப்பட்ட பாதுகாப்புக் கருவிகள் தகனத்தின்போது சவப்பெட்டியுடன் அவற்றை இடுவதன் மூலம் எரிக்கப்படுதல் வேண்டும்.

(4) மீளபயன்படுத்தப்படற்பாலதான கருவியானது சுகாதாரப் பணிப்பாளர் தலைமையதிபதியினால் விடுக்கப்படும் பணிப்புகளுக்கு இணங்க முறையாக தூய்மையாக்கப்படுதலும் கிருமி நீக்கப்படுதலும் வேண்டும்.

(5) பூதவுடலின் சாம்பரானது, உறவினரின் வேண்டுகோளின் பேரில் அத்தகைய உறவினருக்கு கையளிக்கப்படலாம்.

http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/இறதககரய-தடரபல-வசட-வரததமன/150-248445

image_dc77e7200f.jpg

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ampanai said:

Perfect. மிகச் சரியான நடவழிக்கை. 👍

சிங்கன் கிடைச்ச சந்தர்ப்பத்தை விட மாட்டான்

  • கருத்துக்கள உறவுகள்

வோட்டு  ..றேற்று அந்தமாதிரி ஏறும்....

முசுலீம்களுக்கு ஆப்பு இறுக்கப்பட்டுள்ளது.

  • தொடங்கியவர்

இஸ்லாமியர்கள் எதிர்ப்பிற்கு மத்தியில் வர்த்தமானி வெளியீடு

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

203 பேர் கொரோனா தொற்றுக்கு இலக்காகியுள்ளதுடன், அவர்களில் 56 பேர் சிகிச்சைகளின் பின்னர் வீடு திரும்பியுள்ளனர்.

அத்துடன், 140 பேர் தொடர்ந்தும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் அதேவேளை, கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் 154 பேர் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், கொரோனா தொற்றினால் உயிரிழந்த 7 பேரின் சடலங்களும் தகனம் செய்யப்பட்டன.

இந்த நிலையில், உயிரிழந்தவர்களில் முஸ்லிம்களும் அடங்குகின்ற நிலையில், முஸ்லிம்கள் தமது மத சம்பிரதாயங்களுக்கு அமைய தகனம் செய்வது கூடாது என அரசாங்கத்தை வலியுறுத்தி வந்திருந்தனர்.

முஸ்லிம் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் மக்கள் பிரதிநிதிகள், இஸ்லாமிய மதத் தலைவர்கள் உள்ளிட்ட பலர் அரசாங்கத்துடன் கலந்துரையாடல்களை நடத்திய போதிலும், தகனம் செய்யும் அரசாங்கத்தின் தீர்மானம் மாற்றப்படவில்லை.

கொரோனா தொற்று ஏற்பட்டு மரணமடையும் ஒருவரின் சடலத்தை தகனம் செய்வதே சிறந்தது என்ற நிலைப்பாட்டில் சுகாதார பிரிவினர் இருந்ததை அரசாங்கத்தின் உயர்மட்டத்தினர் தொடர்ச்சியாக சுட்டிக்காட்டியிருந்தனர்.

கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழக்கும் இஸ்லாமியர்களின் ஜனாஸாகளை தகனம் செய்யக்கூடாது என வலியுறுத்தி வந்த நிலையிலேயே சுகாதார அமைச்சு இந்த விசேட வர்த்தமானியை வெளியிட்டுள்ளது.

இந்த வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம், இனிவரும் காலங்களில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழப்போரின் சடலங்கள் உரிய நடைமுறைகளை பின்பற்றி தகனம் செய்யப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

https://www.bbc.com/tamil/sri-lanka-52263756

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Rajesh said:

முசுலீம்களுக்கு ஆப்பு இறுக்கப்பட்டுள்ளது.

கிறீத்துவர்களுக்கும் இதில் அடங்குவார்கள். ஆண்னால் என்ன, அவர்கள் சூழ்நிலைக்கேற்ப அனுசரித்து நடப்பார்கள் என எதிர்பார்க்கலாம்.🙂

  • தொடங்கியவர்

இருட்டு இணையத்தள வழிகள்  ஊடாக இவை பற்றி விவாதிக்கபப்டும். 

அடுத்த, உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு இது  வேகம் எடுத்து கொடுத்தாலும் ஆச்சரியபட ஒன்றும் இல்லை. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, Rajesh said:

முசுலீம்களுக்கு ஆப்பு இறுக்கப்பட்டுள்ளது.

முஸ்லீம்களுக்கு ஆப்பு வைக்கத்தான் ஒட்டுமொத்த சிங்களமும் கோத்தபாயவை ஒற்றுமையாய் தெரிவு செய்தைவையாம்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Rajesh said:

முசுலீம்களுக்கு ஆப்பு இறுக்கப்பட்டுள்ளது.

இதிலென்ன ஆப்பு...

மரணம் என்பது, புதைக்கப்பட்டாலும், கிண்டி எடுத்து அஞ்சலி செலுத்தக்கூடிய அளவுக்கு உணர்வு பூர்வமிக்க விடயம். 

அதேவேளை அந்த மரணத்துக்கு காரணமான கொலைக்கிருமி இருக்கக்கூடிய உடலை, அடுத்தவர்களுக்கு பரவாமல் ஆபத்து இல்லாமல் செய்யக்கூடியது எரிப்பது ஒன்றே.

அது உறவுகளுக்கு புரியாது. அதேவேளை அதில் அரசியல் செய்யாமல் தடுத்து சரியான வழிமுறைகளை செய்யவேண்டியது அரச அதிகாரிகள் கடமை.
 
Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, Kapithan said:

கிறீத்துவர்களுக்கும் இதில் அடங்குவார்கள். ஆண்னால் என்ன, அவர்கள் சூழ்நிலைக்கேற்ப அனுசரித்து நடப்பார்கள் என எதிர்பார்க்கலாம்.

உண்மை தான் அல்லாவின் கட்டளையை அரசுகள் மறுக்க முடியாது என்று முஸ்லிம்கள் மாதிரி நிற்கமாட்டார்கள்.

  • தொடங்கியவர்
On 12/4/2020 at 15:28, Kapithan said:

கிறீத்துவர்களுக்கும் இதில் அடங்குவார்கள். ஆண்னால் என்ன, அவர்கள் சூழ்நிலைக்கேற்ப அனுசரித்து நடப்பார்கள் என எதிர்பார்க்கலாம்.🙂

அவர்களுக்குள்ளும் எதிர்ப்புக்கள் இருக்கும். ஆனால், அவர்களுக்குள் அரசியல் பலம் இல்லாத காரணத்தால் மேற்குலக நாட்டின் தூதுவர்கள் மற்றும் மனித உரிமை அமைப்புக்கு (இரகசியமாக) முறையிடக்கூடும். 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ampanai said:

அவர்களுக்குள்ளும் எதிர்ப்புக்கள் இருக்கும். ஆனால், அவர்களுக்குள் அரசியல் பலம் இல்லாத காரணத்தால் மேற்குலக நாட்டின் தூதுவர்கள் மற்றும் மனித உரிமை அமைப்புக்கு (இரகசியமாக) முறையிடக்கூடும். 

கிறீத்துவர்களுக்கு அரசியற் பலம் தேவை என்கிறீர்கள். சிந்திக்க வேண்டிய விடயம்தான். 🤔

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.