Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை வீடுகளிலிருந்து நினைவு கூருங்கள்: பேராயர் அழைப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை வீடுகளிலிருந்து நினைவு கூருங்கள்: பேராயர் அழைப்பு

attackk-300x168.jpgஉயிர்த்த ஞாயிறு தாக்குதலில் கொல்லப்பட்டவர்களை எதிர் வரும் 21 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 8.45 மணியளவில் வீடுகளில் இருந்தவாறு நினைவு கூருமாறு அனைத்து மக்களுக்கும் பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த நேரத்தில் பெளத்த, கிறிஸ்தவ மற்றும் பிற சமய ஆலயங்களில் மணியை ஒலிப்பதன் மூலம் நினைவு கூரலில் பங்கேற்குமாறும் அவர் கேட்டுள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இந்தக் கோரிக்கையை விடுத்தார்.

இதேவேளை, உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் குறித்து தொடர் விசாரணைகளுக்காகப் பேராயர் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார். தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளை வெற்றிகரமாக நடத்தித் தொடர்வதற்காக அரசுக்கு அவர் பாராட்டுத் தெரிவித்தார்.

இந்தத் தாக்குதல்களின் சதித்திட்டத்தில் ஈடுபட்ட நபர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படவேண்டும் என வலியுறுத்திய அவர், இந்த நாட்டில் உள்ள சமூகங்களுக்கிடையேயான சமாதானத்தைச் சீர்குலைக்கச் சதி செய்தால் அவர்கள் யாராயினும் சமூக அந்தஸ்து அல்லது அவர்கள் வகிக்கும் பதவிகளைப் பொருட்படுத்தாமல் தகுந்த தண்டனை வழங்கப்படுவதும் முக்கியம் எனவும் அவர் அழுத்தமாகத் தெரிவித்தார்.

இவ்வாறான சம்பவங்கள் எதிர்காலத்தில் நடக்காதவாறு நாம் தடுக்க முடியும்.அதனை உறுதி செய்வது பாதிக்கப்பட்டவர்களின் பெயரால் எங்களுக்கு விதிக்கப்பட்ட கடமை எனவும் அவர் கூறினார்.

இந்த விவகாரத்தில் விசாரணைகளைத் தொடரவும், சம்பந்தப்பட்டவர்கள் குறித்து மக்களுக்கு உண்மைகளை வெளிப்படுத்தவும் குற்றவியல் புலனாய்வுத் துறையிடம் அவர் கோரிக்கை விடுத்தார்

http://thinakkural.lk/article/38931

20 hours ago, உடையார் said:

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை வீடுகளிலிருந்து நினைவு கூருங்கள்: பேராயர் அழைப்பு

இந்த நேரத்தில் பெளத்த, கிறிஸ்தவ மற்றும் பிற சமய ஆலயங்களில் மணியை ஒலிப்பதன் மூலம் நினைவு கூரலில் பங்கேற்குமாறும் அவர் கேட்டுள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இந்தக் கோரிக்கையை விடுத்தார்.

இங்கு யார் குறிப்பாக கிறிஸ்தவ, பவுத்த ஆலயங்களில் மணி ஒலிக்கும்படி கேட்டுக்கொண்டிருக்கிறார்। மற்றைய மதத்தவர்கள் விரும்பினால் மணியை ஒலிக்க விடலாம்। நிச்சயமாக இந்து ஆலயத்தில் ஒலிக்காது। முஸ்லீம் பள்ளிகளில் மணி கிடையாது।

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஈஸ்டர் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்காக நினைவுச் சுடர்

1FC59FBF-2FED-4C71-8962-85ACD55754E2.jpeg?189db0&189db0

கடந்த வருடம் ஏப்ரல் 21 ஈஸ்டர் தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் உயிர்நீத்த உறவுகளுக்கான ஓராண்டு அஞ்சலியினைச் செலுத்தும் முகமாக எதிர்வரும் ஏப்ரல் 21ம் திகதி மாலை ஆறு மணிக்கு அனைவரின் வீடுகளிலும் வாசல்களில் நினைவுச் சுடரேற்றி அஞ்சலி செலுத்துமாறு மட்டக்களப்பு தமிழ் உணர்வாளர்கள் அமைப்பினால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அவ் அமைப்பின் தலைவர் கணபதிப்பிள்ளை மோகன் தெரிவிக்கையில்,

கடந்த 2019 ஏப்ரல் 21 ஈஸ்டர் தினத்தன்று மதவெறி கொண்ட மனித மிருகங்களால் நடாத்தப்பட்ட ஈனத்தனமான தற்கொலைத் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட எமது உறவுகளுக்காக நினைவு கூருவோம்.

மரித்த இயேசுபிரான் உயிர்த்த நாளில் எம் உறவுகளை எலும்பும் சதையுமாக வேட்டையாடிய நரபலியாளர்களை ஈனத்தனமானவர்கள் என்றும், அவர்களால் மேற்கொள்ளப்பட்ட இத்தாக்குதல் நாளினை ஈனப்படுகொலை நாளாகக் கருதி எதிர்வரும் ஏப்ரல் 21ம் திகதி கொல்லப்பட்ட எமது உறவுகளை நினைந்து எம் ஒவ்வொருவரினதும் வீட்டு வாசல்களில் நினைவுச் சுடரேற்றிடுவோம் என்று தெரிவித்தார்.

https://newuthayan.com/ஈஸ்டர்-தாக்குதலில்-கொல்ல/

  • கருத்துக்கள உறவுகள்
On 17/4/2020 at 21:38, Vankalayan said:

இங்கு யார் குறிப்பாக கிறிஸ்தவ, பவுத்த ஆலயங்களில் மணி ஒலிக்கும்படி கேட்டுக்கொண்டிருக்கிறார்। மற்றைய மதத்தவர்கள் விரும்பினால் மணியை ஒலிக்க விடலாம்। நிச்சயமாக இந்து ஆலயத்தில் ஒலிக்காது। முஸ்லீம் பள்ளிகளில் மணி கிடையாது।

உண்மையாகவே வருத்தப்பட்டு எழுதுகிறீரா அல்லது வேண்டுமென்றே சிண்டு முடிகிறீரா ? 

 🤥

புரியவில்லை ☹️

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Kapithan said:

உண்மையாகவே வருத்தப்பட்டு எழுதுகிறீரா அல்லது வேண்டுமென்றே சிண்டு முடிகிறீரா ? 

 🤥புரியவில்லை ☹️

இன்று நான் அஞ்சலி செலுத்தினேன்

முஸ்லீம் பள்ளிகளிலும் தொளுகை நடந்ததாக மடவளக்காரன் படம் ஓட்டிருக்கான் கோவில்களில் மணி அடிக்க ஆட்கள் இல்லை பூசைக்கு ஆட்கள் இல்லை செல்ல முடியாது  அப்படி போனால் போட்டோ எடுத்து மீண்டும் போட்டு குளிர்காய்வார்கள் சிலர்

On 18/4/2020 at 07:08, Vankalayan said:

நிச்சயமாக இந்து ஆலயத்தில் ஒலிக்காது। முஸ்லீம் பள்ளிகளில் மணி கிடையாது।

 ஒரு  சைவ பேனரை கூட கட்டக்கூடாது என மன்னாரில் சம்பவம் நடந்தது அத்தனைக்கும்  அது ஒரு சுவரொட்டி  இருந்தாலும் கோவில்களில் மணி ஒலித்தது அது உங்களுக்கு தெரிய வாய்ப்பில்லை பூசையும் நடந்தது அதுவும் தெரிய வாய்ப்பில்லை.  

நீங்கள் விலகிப்போனாலும் விலத்திப்போனாலும் நாங்கள் அணைத்துக்கொண்டுதான்  இருப்போம்  அதுவும் தெரிய வாய்ப்பில்லை இல்லாவிட்டால் நீங்கள் இப்படி எழுதி இருக்க மாட்டியள்  நீங்களும் ஒரு போர்வைக்குள் தூரத்தில்தான் நிற்கிறீர்கள் .

7 hours ago, தனிக்காட்டு ராஜா said:

நீங்கள் விலகிப்போனாலும் விலத்திப்போனாலும் நாங்கள் அணைத்துக்கொண்டுதான்  இருப்போம்  அதுவும் தெரிய வாய்ப்பில்லை இல்லாவிட்டால் நீங்கள் இப்படி எழுதி இருக்க மாட்டியள்  நீங்களும் ஒரு போர்வைக்குள் தூரத்தில்தான் நிற்கிறீர்கள் .

அது சரி। உங்கள் காரியம் முடியும் வரைக்கும் அணைத்துக்கொண்டு செல்வீர்கள் எண்டு எமக்கு நன்றாகவே தெரியும்।

கார்டினல் அவர்கள் நிச்சயமாக இந்து ஆலயங்கள் , முஸ்லீம் மசூதிகள் என்று அவர் குறிப்பிட்டிருக்கலாம் । அவர் ஏன் அப்படி குறிப்பிடவில்லை என்று உங்களுக்கு புரியவிடடாள் நான் ஒன்றும் செய்யமுடியாது।

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, Vankalayan said:

அது சரி। உங்கள் காரியம் முடியும் வரைக்கும் அணைத்துக்கொண்டு செல்வீர்கள் எண்டு எமக்கு நன்றாகவே தெரியும்।

கார்டினல் அவர்கள் நிச்சயமாக இந்து ஆலயங்கள் , முஸ்லீம் மசூதிகள் என்று அவர் குறிப்பிட்டிருக்கலாம் । அவர் ஏன் அப்படி குறிப்பிடவில்லை என்று உங்களுக்கு புரியவிடடாள் நான் ஒன்றும் செய்யமுடியாது।

கார்டினல் யாருடைய ஊதுகுழல் என்று எல்லாருக்குமே தெரியும். அவர் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் ஒவ்வொரு மனிதநேயமுள்ள இலங்கை தமிழனும்  (ஏன் சிங்களவனும்கூட ) இந்த துயரமான நாளை நிச்சயம் நினைவுகூர்ந்திருப்பான். உங்கள் போன்றோருக்கு அது விளங்கப்போவதுமில்லை.

ஒன்றைமட்டும் நினைவில் கொள்ளுங்கள். இலங்கைத்தமிழன் என்ற போர்வை மட்டுமே உங்கள் அடையாளத்தை அல்லது இருப்பை இத்தீவில் நிலைநிறுத்தும்.

7 hours ago, Eppothum Thamizhan said:

கார்டினல் அவர்கள் பவுத்தர்கள் என்று குறிப்பிட்டு சொல்லி இருக்கிறார்। நீங்கள் இதில் சிங்களவர்கள் என்று குறிப்பிட தேவை இல்லை। கிறிஸ்தவர்கள் , பவுத்தர்கள் என்று சொல்லும்போது சிங்களவர்கள் எல்லோரும் உள்ளடக்கப்பட்டுள்ளார்கள்।

 நிச்சயமாக இலங்கை தமிழன் என்னும் அடையாளம் இங்கு பாதிப்பை ஏட்படுத்துமே ஒழிய நிச்சயமாக ஒரு பாதுகாப்பை தராது। அப்படி என்றால் எந்த தமிழனும் இங்கிருந்து வேறு நாடுகளுக்கு புலம்பெயர்ந்திருக்க மாடடார்கள்। புலம்பெயர் தமிழர்கள், ஈழ ஏதிலிகள்  போன்ற பெயர்கள் எல்லாம் உருவாகி இருக்காது।

  • கருத்துக்கள உறவுகள்
On 22/4/2020 at 07:05, Vankalayan said:

அது சரி। உங்கள் காரியம் முடியும் வரைக்கும் அணைத்துக்கொண்டு செல்வீர்கள் எண்டு எமக்கு நன்றாகவே தெரியும்।

கார்டினல் அவர்கள் நிச்சயமாக இந்து ஆலயங்கள் , முஸ்லீம் மசூதிகள் என்று அவர் குறிப்பிட்டிருக்கலாம் । அவர் ஏன் அப்படி குறிப்பிடவில்லை என்று உங்களுக்கு புரியவிடடாள் நான் ஒன்றும் செய்யமுடியாது।

சட்டியிலிருப்பதுதான் அகப்பையில் வரும்  நன்றி வணக்கம் 

On 22/4/2020 at 02:35, Vankalayan said:

அது சரி। உங்கள் காரியம் முடியும் வரைக்கும் அணைத்துக்கொண்டு செல்வீர்கள் எண்டு எமக்கு நன்றாகவே தெரியும்।

எங்கே கிறிஸ்த்தவர்களை நாங்கள் கழட்டி விட்டோம் என்று கூற முடியுமா..... அதே போல் காரியம் முடிந்து விட்டது என யார் சொன்னது தனி நாடு கேட்டு போராட்டம் ஆரம்பித்து இறுதியில் ஒரு ஏக்கர் நிலத்தை கூட காப்பாற்ற முடியாத வங்கு ரொத்து நிலையில் உள்ளோம். வரலாற்றில் என்றும் இல்லாதவாறு எமது ஒற்றுமையும் முக்கியமான தருணம் இது .. ஆனால் உங்களது பதிவுகள் எப்படி பிரச்சனையை கிளப்பி விடலாம் என்ற  நோக்கில் தான் உள்ளது.

கேதீஸ்வரத்தின் ஆலய வளைவை உடைத்த போது கூட சைவ மக்கள் எது விதமான பிரச்சனையும் பண்ணவில்லை; பண்ணியவர்கள் கூட மொட்டு,வீணை கட்சியின் உறுப்பினர்கள் மட்டுமே, காரணம் என்ன கிட்டத்தட்ட 500 வருடங்களாக இரண்டு சமூகங்களுக்குன் இடையில் இருந்த புரிந்துணர்வு, இன்னமும் கூறினால் இரண்டு சமுகங்களும் தம்மை வேற்று இனத்தவராக பார்த்ததும் இல்லை.

உலகின் மிகவும் பூர்வீகமன பழமை வாய்ந்த கோவில் வளைவை எந்த வித தய்வு தாட்சண்யமும் இன்றி உடைத்து தள்ளிய போது கோபப்படாமல் பொறுமையாக நிதானமாக செயற்பட்ட சைவத்தமிழனைப் பார்த்த்து நீங்கள் வைக்கும் குற்றச்சாட்டுகள் கவலைக்குரியவை.

சரி இதே மாதிரி நீங்கள் பெளத்த மத விகாரையையோ அல்லது இஸ்லாமிய மத சின்னத்தையோ உடைத்திருந்தால் .... அவர்கள் எவ்வளவு குப்பாடு போட்டிருப்பார்கள்.

8 hours ago, தனிக்காட்டு ராஜா said:

சட்டியிலிருப்பதுதான் அகப்பையில் வரும்  நன்றி வணக்கம் 

நிச்சயமாக। 

6 hours ago, Dash said:

எங்கே கிறிஸ்த்தவர்களை நாங்கள் கழட்டி விட்டோம் என்று கூற முடியுமா..... அதே போல் காரியம் முடிந்து விட்டது என யார் சொன்னது தனி நாடு கேட்டு போராட்டம் ஆரம்பித்து இறுதியில் ஒரு ஏக்கர் நிலத்தை கூட காப்பாற்ற முடியாத வங்கு ரொத்து நிலையில் உள்ளோம். வரலாற்றில் என்றும் இல்லாதவாறு எமது ஒற்றுமையும் முக்கியமான தருணம் இது .. ஆனால் உங்களது பதிவுகள் எப்படி பிரச்சனையை கிளப்பி விடலாம் என்ற  நோக்கில் தான் உள்ளது.

கேதீஸ்வரத்தின் ஆலய வளைவை உடைத்த போது கூட சைவ மக்கள் எது விதமான பிரச்சனையும் பண்ணவில்லை; பண்ணியவர்கள் கூட மொட்டு,வீணை கட்சியின் உறுப்பினர்கள் மட்டுமே, காரணம் என்ன கிட்டத்தட்ட 500 வருடங்களாக இரண்டு சமூகங்களுக்குன் இடையில் இருந்த புரிந்துணர்வு, இன்னமும் கூறினால் இரண்டு சமுகங்களும் தம்மை வேற்று இனத்தவராக பார்த்ததும் இல்லை.

உலகின் மிகவும் பூர்வீகமன பழமை வாய்ந்த கோவில் வளைவை எந்த வித தய்வு தாட்சண்யமும் இன்றி உடைத்து தள்ளிய போது கோபப்படாமல் பொறுமையாக நிதானமாக செயற்பட்ட சைவத்தமிழனைப் பார்த்த்து நீங்கள் வைக்கும் குற்றச்சாட்டுகள் கவலைக்குரியவை.

சரி இதே மாதிரி நீங்கள் பெளத்த மத விகாரையையோ அல்லது இஸ்லாமிய மத சின்னத்தையோ உடைத்திருந்தால் .... அவர்கள் எவ்வளவு குப்பாடு போட்டிருப்பார்கள்.

இங்கு கிறிஸ்தவர்களுக்கு எதிராக எழுதும் கருத்துக்களை நீங்கள் வசிப்பதில்லை போல தெரிகின்றது। நான் நிறையவே தமிழர்கள் கிறிஸ்தவர்களுக்கு எதிராக நடந்த பல காரியங்களை இதில் எழுதி உள்ளேன்। மீண்டும் மீண்டும் எழுத முடியாது। மன்னாரில் நடக்கும் காரியங்கள், வன்னியில் நடக்கும் காரியங்கள் உங்களுக்கு தெரிய நியமில்லை। இதில் பதிவிடடாலும் அது சில வேளைகளில் காணாமல் போகின்றது। கிறிஸ்தவர்கள் தமிழர்களுக்கு அடங்கி இருக்க வேண்டுமென்று எதிர்பார்ப்பதை நிச்சயமாக எதிர்த்தே தீருவோம்।

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, Vankalayan said:

கிறிஸ்தவர்கள் தமிழர்களுக்கு அடங்கி இருக்க வேண்டுமென்று எதிர்பார்ப்பதை நிச்சயமாக எதிர்த்தே தீருவோம்।

யார் உங்களை அடங்கிருக்க சொல்லி  இருக்காங்கள் ஒருத்தரும் இல்லையே முதலில் உங்களுக்குள் ஒற்றுமை இல்லை ஐ மீன் ஒட்டு மொத்த தமிழர்களுக்கும் 

மட்டக்களப்பில் தாக்குதல் நடந்த நாளில் சேர்ஜ்ஜில் தாக்குதல் நடந்து விட்டதாம்

கலைந்து செல்லுங்கள் என்று சொல்ல இன்னொரு  சேர்ஜில் நடந்த ஆராதனையில் அவர்கள் அவர்கள் சொன்னது அந்த சேர்ஜ் ஆட்கள் எங்க ஆட்கள் இல்லை அவர்கள் வேற சபையினர். இப்படி இருக்கிறது முதலில் ஒற்றுமையை வளங்கள் ஐ எஸ் அமைப்பின் தாக்குதலில் ஏன் அந்த சேர்ஜ் மட்டும் இலக்கு வைத்தார்கள் என்றும் நீங்கள் அறிய வேண்டும்  ( காரணம் முஸ்லிம்களையும் விட வில்லை மதமாற்றம் தான் ) அந்த சேர்ச்சிக்கு முன்னால் இரண்டு தேவாலயங்கள் உள்ளது அதை விட பெரிய சேர்ஜ் மற்றும் பல நூறு பேர்  கலந்து கொண்டார்கள் . ஆனால்  தாக்குதல் நடத்தவில்லை  

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, Vankalayan said:

இங்கு கிறிஸ்தவர்களுக்கு எதிராக எழுதும் கருத்துக்களை நீங்கள் வசிப்பதில்லை போல தெரிகின்றது। நான் நிறையவே தமிழர்கள் கிறிஸ்தவர்களுக்கு எதிராக நடந்த பல காரியங்களை இதில் எழுதி உள்ளேன்। மீண்டும் மீண்டும் எழுத முடியாது। மன்னாரில் நடக்கும் காரியங்கள், வன்னியில் நடக்கும் காரியங்கள் உங்களுக்கு தெரிய நியமில்லை। இதில் பதிவிடடாலும் அது சில வேளைகளில் காணாமல் போகின்றது। கிறிஸ்தவர்கள் தமிழர்களுக்கு அடங்கி இருக்க வேண்டுமென்று எதிர்பார்ப்பதை நிச்சயமாக எதிர்த்தே தீருவோம்।

தமிழ் பேசும் கிறிஸ்தவர்கள் எந்த இனம்?

Just now, தனிக்காட்டு ராஜா said:

யார் உங்களை அடங்கிருக்க சொல்லி  இருக்காங்கள் ஒருத்தரும் இல்லையே முதலில் உங்களுக்குள் ஒற்றுமை இல்லை ஐ மீன் ஒட்டு மொத்த தமிழர்களுக்கும் 

மட்டக்களப்பில் தாக்குதல் நடந்த நாளில் சேர்ஜ்ஜில் தாக்குதல் நடந்து விட்டதாம்

கலைந்து செல்லுங்கள் என்று சொல்ல இன்னொரு  சேர்ஜில் நடந்த ஆராதனையில் அவர்கள் அவர்கள் சொன்னது அந்த சேர்ஜ் ஆட்கள் எங்க ஆட்கள் இல்லை அவர்கள் வேற சபையினர். இப்படி இருக்கிறது முதலில் ஒற்றுமையை வளங்கள் ஐ எஸ் அமைப்பின் தாக்குதலில் ஏன் அந்த சேர்ஜ் மட்டும் இலக்கு வைத்தார்கள் என்றும் நீங்கள் அறிய வேண்டும்  ( காரணம் முஸ்லிம்களையும் விட வில்லை மதமாற்றம் தான் ) அந்த சேர்ச்சிக்கு முன்னால் இரண்டு தேவாலயங்கள் உள்ளது அதை விட பெரிய சேர்ஜ் மற்றும் பல நூறு பேர்  கலந்து கொண்டார்கள் . ஆனால்  தாக்குதல் நடத்தவில்லை  

கலைந்து செல்லும்படி யார் கூறியது? அப்படி என்றால் தாக்குதல் நடக்குமென்று முன்பே தெரிந்திருந்ததா? அவர்கள் கலைந்து செல்லவிடடாள் அப்படியே தாட்கொலை குண்டு தாக்குதலுக்கு இடம் கொடுத்து கொலை செய்வதா?

மற்றைய ஆலயத்தில் ஆராதனை நடந்தபோது இவர்கள் ஆராதனை செய்தால் என்ன தவறு?

அப்படி என்றால் கொச்சிக்கடை, நீர்கொழும்பு ஆலயங்கள் தாக்கப்பட்ட்து மதமாற்றத்தின் நிகழ்வாலா?

முதலில் கிழக்கு  வடக்கு தமிழரை இணைக்க பாருங்கள்। பின்னர் தமிழர் கிறிஸ்தவர்களை இணைத்துக்கொள்ளலாம்।

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, உடையார் said:

தமிழ் பேசும் கிறிஸ்தவர்கள் எந்த இனம்?

தமிழர்கள் இல்லை உடையார் அது அவர்கள் மனதில் இருப்பது முஸ்லீம்களை இலங்கை தமிழ் சோனகரா எனக்கேட்டால் தற்போது நாங்கள் முஸ்லீம்கள் என்பார்கள் ஆனால் முஸ்லீம்கள் மன்னாரில் காணி பிடிக்கும் போது அடக்கி ஆழ நினைக்கும் போது எதிர்க்கமாட்டார்கள் நம்மகிட்டதானே சண்டித்தனம் காட்டுவார்கள்  

ஆனால் நாங்கள் அடங்கிப்போகமாட்டார்கள் என வீர வசனம்  பேசுவார்கள் ஹாஹா

1 minute ago, உடையார் said:

தமிழ் பேசும் கிறிஸ்தவர்கள் எந்த இனம்?

தமிழ் பேசும் முஸ்லிம்கள் எந்த இனம்?

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Vankalayan said:

கலைந்து செல்லும்படி யார் கூறியது? அப்படி என்றால் தாக்குதல் நடக்குமென்று முன்பே தெரிந்திருந்ததா? அவர்கள் கலைந்து செல்லவிடடாள் அப்படியே தாட்கொலை குண்டு தாக்குதலுக்கு இடம் கொடுத்து கொலை செய்வதா?

மற்றைய ஆலயத்தில் ஆராதனை நடந்தபோது இவர்கள் ஆராதனை செய்தால் என்ன தவறு?

அப்படி என்றால் கொச்சிக்கடை, நீர்கொழும்பு ஆலயங்கள் தாக்கப்பட்ட்து மதமாற்றத்தின் நிகழ்வாலா?

முதலில் கிழக்கு  வடக்கு தமிழரை இணைக்க பாருங்கள்। பின்னர் தமிழர் கிறிஸ்தவர்களை இணைத்துக்கொள்ளலாம்।

தாக்குதல் நடந்த பிறகு கருத்தை நன்றாக வாசியுங்கள் அதிலும் வீக என்றால் நான் என்ன செய்வது மற்ற ஆலயங்களில் தாக்குதல் நடத்தப்படலாம் என்ற நினைப்புத்தான் 

தமிழர்களை இணைத்துக்கொள்ளலாம் ஆனால் நாங்கள் தமிழர்கள் இல்லை என்று சொல்பவர்களை இணைத்துக்கொள்ள கொஞ்சம் கஸ்ரம்

4 minutes ago, Vankalayan said:

தமிழ் பேசும் முஸ்லிம்கள் எந்த இனம்?

இலங்கை சோனகர் 

Just now, தனிக்காட்டு ராஜா said:

தமிழர்கள் இல்லை உடையார் அது அவர்கள் மனதில் இருப்பது முஸ்லீம்களை இலங்கை தமிழ் சோனகரா எனக்கேட்டால் தற்போது நாங்கள் முஸ்லீம்கள் என்பார்கள் ஆனால் முஸ்லீம்கள் மன்னாரில் காணி பிடிக்கும் போது அடக்கி ஆழ நினைக்கும் போது எதிர்க்கமாட்டார்கள் நம்மகிட்டதானே சண்டித்தனம் காட்டுவார்கள்  

ஆனால் நாங்கள் அடங்கிப்போகமாட்டார்கள் என வீர வசனம்  பேசுவார்கள் ஹாஹா

மன்னாரில் காணி பிடிப்பது இருக்கட்டும்। மடடகளப்பு, திருகோணமலையில் பிடித்த காணிகளுக்கு  
 என்ன சொல்லப்போகிறீர்கள் । மன்னாரில் காணி மட்டும்தான் பிடித்தான்। கிழக்கு மாகாணத்தை சவுதியாகவே , முஸ்லீம் நடக்கவே மாற்றிவிடடார்கள்। இஸ்லாமிய பல்கலைக்கழகம்।அப்போது என்க போனது உங்கள் வீர வசனங்கள்?

Just now, தனிக்காட்டு ராஜா said:

தாக்குதல் நடந்த பிறகு கருத்தை நன்றாக வாசியுங்கள் அதிலும் வீக என்றால் நான் என்ன செய்வது மற்ற ஆலயங்களில் தாக்குதல் நடத்தப்படலாம் என்ற நினைப்புத்தான் 

தமிழர்களை இணைத்துக்கொள்ளலாம் ஆனால் நாங்கள் தமிழர்கள் இல்லை என்று சொல்பவர்களை இணைத்துக்கொள்ள கொஞ்சம் கஸ்ரம்

இலங்கை சோனகர் 

நாங்கள் இலங்கை கிறிஸ்தவர்கள்।தமிழ் பேசுபவர்கள்  எல்லாம் தமிழர்களாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை। 

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, Vankalayan said:

மன்னாரில் காணி பிடிப்பது இருக்கட்டும்। மடடகளப்பு, திருகோணமலையில் பிடித்த காணிகளுக்கு  
 என்ன சொல்லப்போகிறீர்கள் । மன்னாரில் காணி மட்டும்தான் பிடித்தான்। கிழக்கு மாகாணத்தை சவுதியாகவே , முஸ்லீம் நடக்கவே மாற்றிவிடடார்கள்। இஸ்லாமிய பல்கலைக்கழகம்।அப்போது என்க போனது உங்கள் வீர வசனங்கள்?

நாங்க எங்க வீரவசனம் பேசிருக்கம் இல்லையே முஸ்லீம்களை எதிர்ப்போம் என . நீங்கள் தானே தமிழர்களை எதிர்போம் என கூறியுள்ளீர்கள்  கிறிஸ்த்தவர்களுக்கெதிரானதெ

14 minutes ago, Vankalayan said:

நாங்கள் இலங்கை கிறிஸ்தவர்கள்।தமிழ் பேசுபவர்கள்  எல்லாம் தமிழர்களாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை। 

ஹாஹா அதுதானே பார்த்தன் 

Just now, தனிக்காட்டு ராஜா said:

நாங்க எங்க வீரவசனம் பேசிருக்கம் இல்லையே முஸ்லீம்களை எதிர்ப்போம் என . நீங்கள் தானே தமிழர்களை எதிர்போம் என கூறியுள்ளீர்கள்  கிறிஸ்த்தவர்களுக்கெதிரானதெ

ஹாஹா அதுதானே பார்த்தன் 

முதலில் உங்கள் ஊரை கவனியுங்கள்। பின்னர் மற்றைய ஊர்களை கவனிக்கலாம்।

உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை முதலில் எடுத்துப்போட்டு மற்றவன் கண்ணில் இருக்கிற துரும்பை எடுக்கப் பார்।

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, Vankalayan said:

முதலில் உங்கள் ஊரை கவனியுங்கள்। பின்னர் மற்றைய ஊர்களை கவனிக்கலாம்।

உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை முதலில் எடுத்துப்போட்டு மற்றவன் கண்ணில் இருக்கிற துரும்பை எடுக்கப் பார்

நீங்கள் நிதானத்தை இழந்துவிட்டீர்கள்🙄

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, Vankalayan said:

தமிழ் பேசும் முஸ்லிம்கள் எந்த இனம்?

இவர்களை பற்றியெனக்கு கவலை இல்லை, ஏனெற்றால் என் முதுகில் ஆழமாக குற்றியவர்கள், என்னுடன் படித்த முஸ்லிம் நண்பன் வேலை இல்லை எடுத்த தர செல்ல, Oman Ministry of Defense இல் வேலை எடுத்து கொடுத்தேன்,  இரண்டு வருடத்திற்கு மேல் வேலை செய்த எங்களை வந்து ஆறு மாதத்தில் வெளியேற்றிவிட்டான். அந்த நாட்டு முஸ்லிம்களை மூளை சலவை செய்து. சில  நல்ல நண்பர்களுடன் இன்னும் தெடர்பிலிருக்கேன். ஆனா நம்பமாட்டேன்

ஆனா கிறிஸ்தவ நண்பர்களுடன் இன்ப துன்பகளை பகிர்ந்தவன். சிங்கள கிறிஸ்தவர்கள் தங்ளை சிங்களவன் என்றுதான் சொல்கிறார்கள் பெருமையாக, அவர்கள் கிறிஸ்தவ மதத்தை பின்பற்றினாலும்... நான் கொழும்பில் இருந்த வாடகை வீடு கிறிஸ்தவ சிங்களவருடையது, அவர்கள் கூறியதுதான் இது. அவர்கள் வெசாக் கூட கொண்டாடுவார்கள்

  • கருத்துக்கள உறவுகள்
On ‎22‎-‎04‎-‎2020 at 02:35, Vankalayan said:

அது சரி। உங்கள் காரியம் முடியும் வரைக்கும் அணைத்துக்கொண்டு செல்வீர்கள் எண்டு எமக்கு நன்றாகவே தெரியும்।

கார்டினல் அவர்கள் நிச்சயமாக இந்து ஆலயங்கள் , முஸ்லீம் மசூதிகள் என்று அவர் குறிப்பிட்டிருக்கலாம் । அவர் ஏன் அப்படி குறிப்பிடவில்லை என்று உங்களுக்கு புரியவிடடாள் நான் ஒன்றும் செய்யமுடியாது।

கார்டினல் சொல்வதை நீங்கள் வேத வாக்காய் எடுக்க வேண்டிய அவசியமில்லையே ...நீங்கள் என்ன கத்தோலிக்கரா இல்லையே?...உங்களுக்குள்ளேயே பிழைப்பிற்காய் 108 சபை ...அதற்குள்  மற்றவர்களுக்கு பாடம் படிப்பிக்க வந்து விட்டீர்கள்...உங்களை நீங்கள் கிறிஸ்தவர் என்று பொதுவாய் அடையாப்படுத்துவதே பிழை ...நீங்கள் அல்லேலூயா🙂 ...எப்படித் தான் நல்லவர் மாதிரி நடிச்சாலும் சுயரூபம் காட்டிக் கொடுத்து விடும்...இந்த திரியிலேயே பார்க்கிறோம் 
 
9 hours ago, ரதி said:

நான் ஒரிஜினல் கத்தோலிக்கம்। அறுநூறு கத்தோலிக்க ரத்த சாட்சிகளின் ரத்தத்தில் கடத்தப்படட சபைதான் இது। சில சபைளுக்கும் , எங்களுக்கும் பிரச்சினை இருக்கலாம் । அது வேறு விடயம்।

முதலில் எண்கள் கத்தோலிக்க சபைக்குள்ளும் சிங்கள , தமிழ் பிரச்சினை இருந்தது। இப்போது கார்டினல் தலைமையில் எல்லோரும் ஒன்று சேர்ந்துள்ளோம்।

நீங்கள் அரோகரா சொல்லும்போது நாங்கள் அல்லேலூயா சொல்லக்கூடாது? இதில் யாருக்கும் கேள்வி கேட்க உரிமை இல்லை। இன்னும் கூட சொல்லுவோமேஒழிய ஓடி ஒழிய மாடடோம்। எம்மை யாராலும் ஒழிக்க முடியாது। கொரோனவளும் ஒழிக்க முடியாது।

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, உடையார் said:

நீங்கள் நிதானத்தை இழந்துவிட்டீர்கள்🙄

சாத்தான்கள் என்று திட்டாதவரைக்கும் ஓகே  உடையார் மதவெறி என்பது சிங்களார்களை விட தமிழ் என்ற மொழி பேசும் ஆட்களுக்கும் உண்டு 

10 hours ago, ரதி said:

கார்டினல் சொல்வதை நீங்கள் வேத வாக்காய் எடுக்க வேண்டிய அவசியமில்லையே ...நீங்கள் என்ன கத்தோலிக்கரா இல்லையே?...உங்களுக்குள்ளேயே பிழைப்பிற்காய் 108 சபை ...அதற்குள்  மற்றவர்களுக்கு பாடம் படிப்பிக்க வந்து விட்டீர்கள்...உங்களை நீங்கள் கிறிஸ்தவர் என்று பொதுவாய் அடையாப்படுத்துவதே பிழை ...நீங்கள் அல்லேலூயா🙂 ...எப்படித் தான் நல்லவர் மாதிரி நடிச்சாலும் சுயரூபம் காட்டிக் கொடுத்து விடும்...இந்த திரியிலேயே பார்க்கிறோம் 

ஹாஹா ஓம் ஓம் இப்பதானே விளங்குது ரதி 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.