Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஏறாவூர் தமிழ் வித்தியாலயம் கோட்டத்தில் முதலிடம்

20200428_102222-960x640.jpg?189db0&189db0

க.பொ.த (சா/த).பரீட்சையில் மட்டக்களப்பு கல்வி வலையத்திற்குட்பட்ட ஏறாவூர் கல்விக் கோட்டத்தில் ஏறாவூர் தமிழ் மகா வித்தியாலயம் முதலிடம் பெற்றுள்ளது.

அப் பாடசாலையைச் சேர்ந்த ராதாகிருஸ்ணன் கேமதருண் எனும் மாணவன் 9-ஏ சித்தி பெற்று பாடசாலைக்கும் அப்பிரதேசத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.

ஏறாவூர் தமிழ் மகாவித்தியாலய பாடசாலை வரலாற்றில் முதற்தடவையாக க.பொ.த. (சா/தர) பரீட்சையில் 9-ஏ சித்தி பெற்ற சந்தர்ப்பமும் இதுவென்பதும் குறிப்பிடத்தக்கது.

9-ஏ சித்தி பெற்று பாடாசாலைக்கும் பாடாசாலைச் சமூகத்திற்கும் பெருமை சேர்த்த இம் மாணவனை பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பாடசாலைச் சமூகம் என்போர் தமது வெகுவான பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளனர். (150)

Edited by உடையார்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வா/இந்துக் கல்லூரியில் ஐவருக்கு 9-ஏ சித்தி

00.jpg?189db0&189db0

சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகிய நிலையில் வாழைச்சேனை இந்துக்கல்லூரி தேசிய பாடசாலையில் ஐந்து மாணவர்கள் ஒன்பது ஏ சித்திகளை பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளதாக பாடசாலை அதிபர் அ.ஜெயஜீவன் தெரிவித்தார்.

வாழைச்சேனை இந்துக்கல்லூரி தேசிய பாடசாலையில் 2019ல் நடைபெற்ற சாதாரண தர பரீட்சையில் 125 மாணவர்கள் தோற்றியிருந்தனர். இவர்களில் 90 மாணவர்கள் கணித பாடத்துடன் உயர் தரத்திற்குத் தகுதி பெற்றுள்ளனர். இதன்படி 72 வீதமாக மாணவர்கள் சித்தி பெற்றுள்ளதுடன், கடந்த வருடத்தினை விட இம்முறை 5 வீதமாக சித்தி வீதம் அதிகரித்துள்ளது.

அந்தவகையில் சுதாகரன் சனூர்ஷன், சிறிதரன் கபிஷாந்த், தவராஜா சனுஸ்காந்த், விக்னேஸ்வரன் திருட்ஷிகா, தேவராஜா அஸ்வினித்தா ஆகிய மாணவர்கள் ஒன்பது ஏ சித்தி பெற்றுள்ளனர்.

அத்தோடு சுகுமார் அனுதீஸ், இளங்கோவன் அக்ஷயன், மோகனதாஸ் கஜானந்த், தேவேந்திரன் டினோஜிகா ஆகிய மாணவர்கள் எட்டு ஏ மற்றும் வி சித்தி பெற்றுள்ளதுடன், ஏழு ஏ, இரண்டு வி புள்ளிகளை ஒரு மாணவரும், ஏழு ஏ, ஒரு வி, ஒரு சி புள்ளிகளை ஐந்து மாணவர்களும், ஆறு ஏ, மூன்று வி புள்ளிகளை மூன்று மாணவர்களும், ஆறு ஏ, இரண்டு வி மற்றும் ஒரு சி புள்ளிகளை ஒரு மாணவனும், ஐந்து ஏ, நான்கு வி புள்ளிகளை ஒரு மாணவரும் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளதாக பாடசாலை அதிபர் அ.ஜெயஜீவன் தெரிவித்தார்.

பாடசாலைக்கும், கல்குடா கல்வி வலயத்திற்கும் பெருமை சேர்ந்த மாணவர்கள், கற்பித்த ஆசிரியர்கள் கல்வி சாரா ஊழியர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினர் அனைவருக்கும் பாடசாலை சமூகம் சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாக பாடசாலை அதிபர் அ.ஜெயஜீவன் மேலும் தெரிவித்தார். (150)

https://newuthayan.com/வா-இந்துக்-கல்லூரியில்/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வேம்படியில் 58 மாணவிகள் யாழ் இந்துவில் 26 மாணவர்கள் 9 பாடங்களிலும் ஏ சித்தி

vembadi-300x175.jpg2019 ஆம் ஆண்டு க.பொ.த. சாதாரணதரப் பரீட்சையில் யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலையில் 58 மாணவிகள் 9 பாடங்களிலும் அதி திறமைச் சித்தி (ஏ) பெற்றுள்ளனர். 2019ஆம் ஆண்டு டிசெம்பரில் இடம்பெற்ற க.பொ.த. சாதாரணதரப் பரீட்சையில் யாழ்ப்பாணம் மகளிர் உயர்தரப் பாடசாலையில் 251 மாணவிகள் தோற்றியிருந்தனர்.

அவர்களில் தமிழ்மொழிமூலம் 177 மாணவிகளும் 74 மாணவிகள் இரு மொழிமூலம் பரீட்சைக்குத் தோற்றியிருந்தனர். இந்த நிலையில் 58 மாணவிகள் 9 பாடங்களிலும் அதிதிறமைச் சித்தி (ஏ) பெற்றுள்ளனர். அவர்களில் 34 மாணவிகள் தமிழ்மொழிமூலம் 24 மாணவிகள் இரு மொழி மூலமும் பரீட்சைக்குத் தோற்றியிருந்தனர்.

36 மாணவிகள் 8 பாடங்களில் அதி திறமைச்சித்தி (8ஏ), 36 மாணவிகள் 7 பாடங்களில் அதிதிறமைச்சித்தி (7ஏ), 37 மாணவிகள் 6 பாடங்களில் அதிதிறமைச் சித்தி (6ஏ) மற்றும் 21 மாணவிகள் 5 பாடங்களில் அதிதிறமைச்சித்தி (5 ஏ) பெற்றுள்ளனர்.

பாடசாலையின் பெறுபேறுகளின் அடிப்படையில் தமிழ், கணிதம், சைவ சமயம் மற்றும் றோமன் கத்தோலிக்கம், வரலாறு மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடங் களில் அனைத்து மாணவிகளும் சித்திபெற்று 100 சதவீதம் சித்தியை அடைந் துள்ளனர் என்று பாடசாலை பதில் அதிபர் திருமதி எஸ்.சுனித்திரா அறிவித்துள்ளார். மேலும் க.பொ.த. உயர்தரத்தில் கல்யைத் தொடர பரீட்சைக்குத் தொற்றிய 251 மாணவிகளும் தகுதியைப் பெற்றுள்ளனர்.

இதேவேளை, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் 26 மாணவர்கள் 9 பாடங்களிலும் திறமைச்சித்தி (ஏ) பெற்றுள்ளனர். 2019 டிசெம்பரில் நடைபெற்ற க.பொ.த. சாதாரண தரப்பரீட்சையில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் 250 மாணவர்கள் தோற்றியிருந்தனர்.

அவர்கள், 250 பேரும் சித்தியடைந்து, கல்லூரிக்கு100 வீதம் சித்தியைப் பெற்றுக் கொடுத்துள்ளனர். 26 மாணவர்கள் 9ஏ பெற்றுள்ளதுடன், அவர்களில் தமிழ் மொழி மூலம் 12 பேரும் ஆங்கில மொழி மூலம் 14 பேரும் அடங்குகின்றனர். 29 மாணவர்கள் 8ஏ பெற்றுள்ளனர். அவர்களில் தமிழ் மொழி மூலம் 13 மாணவர்களும், ஆங்கில மொழி மூலம் 16 மாணவர்களும் அடங்குகின்றனர்.

28 மாணவர்கள் 7ஏ பெற்றுள்ளனர், அவர்களில் தமிழ் மொழி மூலம் 13 மாணவர்களும், ஆங்கில மொழி மூலம் 15 மாணவர்களும் சித்தியடைந்துள்ளனர். ஏனைய மாணவர்கள் க.பொ.த. உயர்தரத்துக்கு தகுதி பெற்று சித்தியடைந்துள்ளனர்

http://thinakkural.lk/article/39678

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணம் பெடியள் வெள்ளி பார்த்துக்கொண்டு திரிய, பெட்டயல் சுழிச்சுக் கொண்டோடி இருக்கினம். 😀

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Nathamuni said:

யாழ்ப்பாணம் பெடியள் வெள்ளி பார்த்துக்கொண்டு திரிய, பெட்டயல் சுழிச்சுக் கொண்டோடி இருக்கினம். 😀

அதுகும்... யாழ். இந்துவை விட, 
வேம்படியில்.... இரண்டு மடங்குக்கு மேல், 9 A சித்தி பெற்று இருக்கிறார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சைவ மங்கையர் கழக 29 மாணவிகள் ஒன்பது பாடங்களிலும் ‘ஏ’ சித்தி

க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் கொழும்பு மாவட்டத்தில் சைவ மங்கையர் கழகத்தில் 29 மாணவிகள் 9 பாடங்களிலும் ஏ சித்தியைப் பெற்றிருக்கின்றார்கள். இங்கு பரீட்சைக்குத் தோற்றிய 182 மாணவிகளில் 97.25 வீதமானவர்கள் 522-7-238x300.jpgஉயர்தர வகுப்புக்குச் செல்வதற்கான தகமையைபட பெற்றுள்ளார்கள்.

இதேவேளையில் கொழும்பு இந்துக் கல்லூரியில் 15 மாணவர்கள் ஒன்பது பாடங்களிலும் ஏ சித்தியைப் பெற்றிருக்கின்றார்கள். 9 மாணவர்கள் எட்டுப்பாடங்களிலும் ஏ சித்தியைப் பெற்றுள்ளார்கள்.

சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுக்கொடுத்தமைக்காக சைவ மங்கையர் கழக அதிபரை கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சி.பாஸ்கரா பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.

http://thinakkural.lk/article/39822

  • கருத்துக்கள உறவுகள்
On 29/4/2020 at 04:06, Nathamuni said:

யாழ்ப்பாணம் பெடியள் வெள்ளி பார்த்துக்கொண்டு திரிய, பெட்டயல் சுழிச்சுக் கொண்டோடி இருக்கினம். 😀

வெள்ளவத்தை சைவ மங்கையர் கழகமே.. யாழ் இந்து.. பம்பலப்பிட்டி இந்து எல்லாத்தையும் தோற்கடித்துவிட்டது. இதில.... வேம்படி சொல்லவும் வேண்டுமா.

கிழக்கில் வின்சனில்.. 40 9 ஏ யாம். யாழ் இந்து 250 பேரை அனுப்பி வெறும் 26 9 ஏ மட்டும் தான்.

யாழ் மத்திய கல்லூரியின் நிலைமை படுமோசம். வெறும் 58.8% உயர்தரத்துக்கு தகுதி. விஞ்ஞானம்.. ஆங்கிலத்தில் சித்தி வீதாசாரம் படுவீழ்ச்சி. சென் ஜோன்ஸ் கதையையே காணம்.

No photo description available.

மொத்தத்தில் யாழ் மாவட்டம் அகில இலங்கை ரீதியில் 19 இடத்தில். வடக்குக் கிழக்கில் கல்வி நிலைமை உயர குறுகிய கால நீண்ட கால திட்டங்கள் வகுக்கப்பட்டு நடைமுறைப்படுத்த வேண்டும்.

பழைய மாணவர் சங்கங்கள்.. பாடசாலைகளின் பெயரால் களியாட்ட நிகழ்வுகளை நடத்தி நிதி திரட்டுவதோடு நின்றுவிடாது.. மேற்படி திட்டங்களை வகுக்கவும்.. நடைமுறைப்படுத்தவும் உதவ வேண்டும். 

Edited by nedukkalapoovan

2 minutes ago, nedukkalapoovan said:

வெள்ளவத்தை சைவ மங்கையர் கழகமே.. யாழ் இந்து.. பம்பலப்பிட்டி இந்து எல்லாத்தையும் தோற்கடித்துவிட்டது. இதில.... வேம்படி சொல்லவும் வேண்டுமா.

கிழக்கில் வின்சனில்.. 40 9 ஏ யாம். யாழ் இந்து 250 பேரை அனுப்பி வெறும் 26 9 ஏ மட்டும் தான்.

யாழ் மத்திய கல்லூரியின் நிலைமை படுமோசம். வெறும் 58.8% உயர்தரத்துக்கு தகுதி. விஞ்ஞானம்.. ஆங்கிலத்தில் சித்தி வீதாசாரம் படுவீழ்ச்சி. சென் ஜோன்ஸ் கதையையே காணம்.

No photo description available.

அப்ப யாழ்ப்பாணத்தின் கல்வி தரம் வீழ்ந்து போச்சு என்ற கட்டுரைகளை நாம் எப்ப எதிர்பார்க்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

அகில இலங்கை ரீதியில் மாவட்ட நிலைகள்...

No photo description available.

5 minutes ago, Dash said:

அப்ப யாழ்ப்பாணத்தின் கல்வி தரம் வீழ்ந்து போச்சு என்ற கட்டுரைகளை நாம் எப்ப எதிர்பார்க்கலாம்.

மன்னாரை தவிர.. மிச்ச எல்லா வடக்குக் கிழக்கு மாவட்டங்களும் அடிமட்டத்தில் தான். 

  • கருத்துக்கள உறவுகள்

No photo description available.

15 minutes ago, nedukkalapoovan said:

அகில இலங்கை ரீதியில் மாவட்ட நிலைகள்...

No photo description available.

மன்னாரை தவிர.. மிச்ச எல்லா வடக்குக் கிழக்கு மாவட்டங்களும் அடிமட்டத்தில் தான். 

மன்னார் கூட தமிழர்களால் அல்ல. அதே போல் வீழச்சிக்குரிய காரணிகள் எல்லாருக்கும் தெரியும் ஆனால் அதைப்பற்றி பேச மாட்டர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி உயிரிழை நிறுவன முகநூல் பக்கம். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, nedukkalapoovan said:

வெள்ளவத்தை சைவ மங்கையர் கழகமே.. யாழ் இந்து.. பம்பலப்பிட்டி இந்து எல்லாத்தையும் தோற்கடித்துவிட்டது. இதில.... வேம்படி சொல்லவும் வேண்டுமா.

கிழக்கில் வின்சனில்.. 40 9 ஏ யாம். யாழ் இந்து 250 பேரை அனுப்பி வெறும் 26 9 ஏ மட்டும் தான்.

யாழ் மத்திய கல்லூரியின் நிலைமை படுமோசம். வெறும் 58.8% உயர்தரத்துக்கு தகுதி. விஞ்ஞானம்.. ஆங்கிலத்தில் சித்தி வீதாசாரம் படுவீழ்ச்சி. சென் ஜோன்ஸ் கதையையே காணம்.

No photo description available.

மொத்தத்தில் யாழ் மாவட்டம் அகில இலங்கை ரீதியில் 19 இடத்தில். வடக்குக் கிழக்கில் கல்வி நிலைமை உயர குறுகிய கால நீண்ட கால திட்டங்கள் வகுக்கப்பட்டு நடைமுறைப்படுத்த வேண்டும்.

பழைய மாணவர் சங்கங்கள்.. பாடசாலைகளின் பெயரால் களியாட்ட நிகழ்வுகளை நடத்தி நிதி திரட்டுவதோடு நின்றுவிடாது.. மேற்படி திட்டங்களை வகுக்கவும்.. நடைமுறைப்படுத்தவும் உதவ வேண்டும். 

பழைய மாணவ சங்கங்கள் தான் நீண்டகால திட்டங்களை நடைமுறைப்படுத்தனும்.

படிப்பு இப்ப இரண்டாம் நிலைபோல் புலத்தில்

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சாதித்த மாணவனுக்கு துவிச்சக்கர வண்டி வழங்கல்

p2-960x540.jpg?189db0&189db0

இம்முறை நடைபெற்று முடிந்த க.பொ.த.சாதாரணப் பரீட்சையில் வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள நாசீவன் தீவு மாணவன் சிறந்த பெறுபேற்றை பெற்று அக்கிராமத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.

நாசீவன் தீவு கிராமமானது 4 பக்கமும் கடல் மற்றும் ஆறுகளால் சூழுப்பட்ட மிகவும் பின் தங்கிய பிரதேசமாகும்.

அங்கிருந்து வாழைச்சேனை இந்துக்கல்லூரி தேசிய பாடசாலையில் கல்வி கற்கும் மாணவனான தவராஜா சனுஸ்காந் என்பவரே இவ்வாறு சிறந்த பெறுபேற்றை பெற்று சாதித்துள்ளார்.

குறித்த பாடசாலையில் சனுஸ்காந்துடன் 5 மாணவர்கள் 9-ஏ சித்திகளை பெற்றுள்ளனர்.

மீனவத் தொழில் புரியும் தந்தை தனது மகனின் கல்விக்காக தமது கிராமத்தில் இருந்து அன்றாடம் தோணியின் உதவியுடன் வாழைச்சேனை பிரதேசத்திற்கு ஆற்றைக் கடந்து வந்து மகனின் கல்வியை தொடர பெரிதும் உறுதுணையாக இருந்துள்ளர்.

குறித் மாணவனின் சாதனையை பிரதேச இளைஞர் அமைப்புக்கள் மற்றும் மட்டக்களப்பு வாசம் உதவும் கரங்கள் அமைப்பு என்பன பாராட்டி கௌரவித்தனர். இதேவேளை வாசம் உதவும் கரங்கள் அமைப்பின் தலைவர் வே.பிரபாகரனினால் குறித்த மாணவனின் எதிர்கால கல்வி வளர்சி கருதி துவிச்சக்கரவண்டி ஒன்றும் அன்பளிப்பு செய்து வைக்கப்பட்டது. (150)

கொரோனா தொற்று சுயதொழில் மற்றும் தற்சார்பில் உள்ள பெறுமதியை உணர்த்தியுள்ளது.

மாணவர்கள் இவற்றை கவனத்தில் எடுக்க வேண்டும்.

9A எடுத்து பொறியியலாளர், வைத்தியர் ஆகவேண்டும் என்ற கனவுகளை புறம்தள்ளி தற்சார்பு நிலையை அடையக்கூடிய நிலையை நோக்கி கவனம் திரும்ப வேண்டும். 

On 30/4/2020 at 13:09, nedukkalapoovan said:

மன்னாரை தவிர.. மிச்ச எல்லா வடக்குக் கிழக்கு மாவட்டங்களும் அடிமட்டத்தில் தான். 

யாழ் மாவட்டத்தில் ஆசிரியர்களின் தரமும் மாணவர்களின் ஒழுக்கமும் தேய்வடைகின்றன 

On 30/4/2020 at 13:27, Dash said:

On 30/4/2020 at 21:55, ampanai said:

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.

மன்னரை தவிர எல்லா தமிழர் பகுதிகளும் கீழேதான் இருக்கின்றது।அங்கு சில வேளைகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் அவர்களை கட்டுப்படுத்த முடியுமாக இருக்கலாம்। அன்கொன்றும்  , இன்கொன்றும் கிடைத்ததான நல்ல முடிவுகளை வைத்து இங்கு தீர்மானிக்க முடியாது। எனவே இது பற்றி நிறையவே எழுதலாம்। இருந்தாலும் தமிழ் கல்விமான்கள் இதுபற்றி ஆழமாக சிந்திக்க வேண்டும்। யார் எதை கூறினாலும் யாழ் மாவட்த்தின் நிலைமை இவ்வளவு கீழே இருக்க முடியாது। சிங்களவர்களே ஏற்றுக்கொள்ளமாடடார்கள்। 

Edited by Vankalayan
Need to change some wordings

எனது இரண்டு மருமகன்கள் இந்த வருடம் சாதாரண தர பரீட்சையில் தோன்ற உள்ளார்கள். 

ஒருவர், புத்தக பூச்சி - அதிகம் புள்ளிகள் வாங்குவார் 
அடுத்தவர், புத்தகத்திற்கு வெளியால் ஏன்? எதற்கு? என கேள்வி கேட்டு விடை எழுதி, குறைந்த புள்ளிகள் வாங்குவார். 

படிப்பில் முதலாவதவர் வெற்றி பெறலாம். இலங்கையில் அதுவே ஒரே வழியாக இன்று இல்லை. ஆனால், நிச்சயம்  இரண்டாவதவர் வாழ்க்கையில் வெல்வார் என்ற நம்பிக்கை உண்டு. 

வாட்சப்பில் தத்தித்தத்தி வந்தது:

#பின்னடைந்தே_செல்லும்_யாழ்ப்பாணம்_மற்றும்_வடமாகாணம்

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை முடிவுகளின் அடிப்படியில்

#2005_சாதாரண_தரம்

கொழும்பு-1ம் இடம்
வவுனியா - 2ம் இடம்
மாத்தறை- 9ம் இடம்
#யாழ்ப்பாணம்-10 ம் இடம்
மட்டக்களப்பு-13ம் இடம்
அம்பாந்தோட்டை- 15 ம் இடம்
திருகோணமலை- 21ம் இடம்
முல்லைதீவு- 24ம் இடம்
கிளிநோச்சி- 25ம் இடம்

#2010_சாதாரண_தரம்

கொழும்பு- 1ம் இடம்
வவுனியா - 7ம் இடம்
மாத்தறை- 5ம் இடம்
#யாழ்ப்பாணம்-12 ம் இடம்
அம்பாந்தோட்டை- 10 ம் இடம்
மட்டக்களப்பு-15ம் இடம்
திருகோணமலை- 22ம் இடம்
முல்லைதீவு- 24ம் இடம்
கிளிநோச்சி- 25ம் இடம்

#2015_சாதாரண_தரம்

கொழும்பு-1ம் இடம்
வவுனியா - 19ம் இடம்
மாத்தறை- 2ம் இடம்
#யாழ்ப்பாணம்-21 ம் இடம்
அம்பாந்தோட்டை-3 ம் இடம்
மட்டக்களப்பு-18ம் இடம்
திருகோணமலை- 23ம் இடம்
முல்லைதீவு- 24ம் இடம்
கிளிநோச்சி- 25ம் இடம்

#2019_சாதாரண_தரம்

கொழும்பு 3ம் இடம்
வவுனியா - 21ம் இடம்
மாத்தறை- 2ம் இடம்
#யாழ்ப்பாணம்-19 ம் இடம்
அம்பாந்தோட்டை- 1 ம் இடம்
மட்டக்களப்பு-18ம் இடம்
திருகோணமலை- 23ம் இடம்
முல்லைதீவு- 24ம் இடம்
கிளிநோச்சி- 25ம்

புள்ளிவிபரம் நன்றி - தயா

எனது பார்வையில் சிலகாரணங்கள் ( யாரையும் நோவதற்காகவல்ல சிந்தித்து முன்னேறுவதற்கே)

(1) கல்வி எங்கள் மூலதனம் என்று போர்க்காலத்தில் இருந்த எண்ணம் தற்போது இல்லாதது போனது

(2) மாணவர்களின் எண்ண மாற்றங்கள்

(3) பெற்றோரின் கட்டுப்பாடில் இருந்து மாணவர்கள் விலகியது

(4) அதீத கவனக் கலைப்பான்களின் ஆதிக்கமும் அளவும்

(5) ஆசிரியர்களின் பங்களிப்பு

(6) ஆளுமை அனுபவம் மாணவர் மனநிலையறிந்து வழிநடத்தும் ஆசிரியர்கள் அதிபர்கள் இல்லாமை

(7) இந்திய சினிமாத்துறையின் ஆதிக்கம் , மாணவர்கள் ஒவ்வொருவரும் தாங்கள் நிஜ வாழ்வில் சூப்பர் ஸ்டாராக , ஒரு தலையாக ஒரு தளபதியாக சந்திரமுகியாக மாறுவது. அடிதடி குழுக்களுக்கும் இதுதான் காரணமாகலாம்.

(8) காதலும் மோதலும் - காதலிக்கு கீரோவாக கல்வியை பயன்படுத்தாமல் வேறு வழியை நாடுவது

(9) ஆங்கில மொழில் கற்றால்தான் பெருமை என்று இயலாதவர்களும்  ஆங்கில மொழிமூலம் மாறுவது மற்றது அதற்குரிய தகுந்த ஆசிரியர்கள் மற்றும் பெற்றோரின் உதவிகள் இல்லாமல் தவிப்பது.

(10) கனவுகாணலின் கனவு மண்டலம் அதிகரித்திருப்பது

(11) மாகாண கல்வி அமைச்சின் மற்றும் வலய கல்விப்பணியாளர்கனின் ஆர்வம்

(12) சரி யாராவது நடவடிக்கையெடுத்தால் அரசியல் இடமாற்றம்

போன்று பலகாரணிகளை அடுக்கலாம். நான் களத்தில் இல்லை நீங்கள் உங்குள்ளவர்கள் உரையாடி ஆலோசித்து மாணவர்கள் , ஆசிரியர்கள் , அதிபர்கள் , கல்விப்பணிப்பாளர்கள் , வடமாகாண கல்வி அமைச்சர் (தற்போது  இல்லை) , பெற்றோர்கள் ஒன்றுகூடி சிந்தித்து செயல்படவேண்டும். இல்லையேல் நாங்களே எங்களுக்குள் பிழைபிடித்து (பரம்பரை தொழில்) , நாங்களே எங்களுக்கு காரணங்களை வழிவகுத்து அழிவினை நோக்கி செல்வோம் காப்பாற்ற யாருமில்லை. ஆகவே இது உங்களில் பிழை என்று நினைக்காமல் ஒட்டுமொத்த சமுதாயமும் ஒன்று சேர்ந்து தமிழர் கல்வியை மீண்டும் புத்தெழுச்சி பெறச்செய்யவேண்டும்.

குணரத்தினம் பார்த்தீபன்

3 hours ago, Rajesh said:

எனது பார்வையில் சிலகாரணங்கள் ( யாரையும் நோவதற்காகவல்ல சிந்தித்து முன்னேறுவதற்கே)

(1) கல்வி எங்கள் மூலதனம் என்று போர்க்காலத்தில் இருந்த எண்ணம் தற்போது இல்லாதது போனது

(2) மாணவர்களின் எண்ண மாற்றங்கள்

(3) பெற்றோரின் கட்டுப்பாடில் இருந்து மாணவர்கள் விலகியது

(4) அதீத கவனக் கலைப்பான்களின் ஆதிக்கமும் அளவும்

(5) ஆசிரியர்களின் பங்களிப்பு

(6) ஆளுமை அனுபவம் மாணவர் மனநிலையறிந்து வழிநடத்தும் ஆசிரியர்கள் அதிபர்கள் இல்லாமை

(7) இந்திய சினிமாத்துறையின் ஆதிக்கம் , மாணவர்கள் ஒவ்வொருவரும் தாங்கள் நிஜ வாழ்வில் சூப்பர் ஸ்டாராக , ஒரு தலையாக ஒரு தளபதியாக சந்திரமுகியாக மாறுவது. அடிதடி குழுக்களுக்கும் இதுதான் காரணமாகலாம்.

(8) காதலும் மோதலும் - காதலிக்கு கீரோவாக கல்வியை பயன்படுத்தாமல் வேறு வழியை நாடுவது

(9) ஆங்கில மொழில் கற்றால்தான் பெருமை என்று இயலாதவர்களும்  ஆங்கில மொழிமூலம் மாறுவது மற்றது அதற்குரிய தகுந்த ஆசிரியர்கள் மற்றும் பெற்றோரின் உதவிகள் இல்லாமல் தவிப்பது.

(10) கனவுகாணலின் கனவு மண்டலம் அதிகரித்திருப்பது

(11) மாகாண கல்வி அமைச்சின் மற்றும் வலய கல்விப்பணியாளர்கனின் ஆர்வம்

(12) சரி யாராவது நடவடிக்கையெடுத்தால் அரசியல் இடமாற்றம்

பல்கலைக்கழகம் சென்றும் அரச வேலைகளுக்காக பட்டதாரிகள் போராடுவதை காண்கின்றோம். இந்த நிலை மாறினால் மட்டுமே உயர்கல்வியில் அதிக நாட்டம் வரும்.. 

தனியார் துறை வளர வேண்டும். அதற்கு, அரசின் இராணுவ கட்டுப்பாடு குறைக்கப்படல் வேண்டும். அரச செலவீனங்கள் குறைக்கப்பட்டு தனியார் முதலீடுகள் ஊக்குவிற்கப்படல் வேண்டும் 

அது நடக்க, எமக்கு ஒரு அரசியல் தீர்வு வேண்டும்.. 

On 2/5/2020 at 07:50, ampanai said:

எனது இரண்டு மருமகன்கள் இந்த வருடம் சாதாரண தர பரீட்சையில் தோன்ற உள்ளார்கள். 

ஒருவர், புத்தக பூச்சி - அதிகம் புள்ளிகள் வாங்குவார் 
அடுத்தவர், புத்தகத்திற்கு வெளியால் ஏன்? எதற்கு? என கேள்வி கேட்டு விடை எழுதி, குறைந்த புள்ளிகள் வாங்குவார். 

படிப்பில் முதலாவதவர் வெற்றி பெறலாம். இலங்கையில் அதுவே ஒரே வழியாக இன்று இல்லை. ஆனால், நிச்சயம்  இரண்டாவதவர் வாழ்க்கையில் வெல்வார் என்ற நம்பிக்கை உண்டு. 

இரண்டாமவரை அவரின் புள்ளிகளை காட்டி மட்டம் தட்டாம ஊக்கப்படுத்தினால் அவர் உயர்ந்த நிலைக்கு வருவார்.

எப்படி இருந்தாலும் மன்னர் மாவடடம் ஏழாம் இடத்தில ஒரு உயர்ந்த இடத்தில இருக்கிறது। வாழ்த்துக்கள்। 

க.பொ.த சாதாரண தர பரீட்சையில் வரலாற்று சாதனை படைத்த மாணவன்

மன்னார் மடு கல்வி வலயத்தில் க.பொ.த சாதாரண தர பரீட்சையில் முதல் தடவையாக 9ஏ சித்தியை பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளார் ஆண்டான்குளம் றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை மாணவன் ரி.டேவதரன்.

மன்னார் மடுக்கல்வி வலயம் தொடங்கி இது வரை காலப்பகுதியில் சுமார் 21 வருடங்களுக்கு பின்னர் முதல் தடவையாக ஆண்டான் குளம் றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை மாணவன் ரி.டேவதரன் 9ஏ சித்திகளைப்பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

இம் மாணவன் புலமைப்பரிசில் பரீட்சையிலும் 184 புள்ளிகளைப்பெற்று மாவட்ட ரீதியில் 2ஆம் இடத்தினையும் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

மடு கல்வி வலயத்தில் க.பொ.தா. சாதாரண தர பரீட்சைக்கு 400 மாணவர்கள் தோற்றியுள்ள நிலையில் ஒரு மாணவன் 9ஏ சித்தி பெற்றுள்ளதோடு ஏனைய மாணவர்களும் சிறப்பான சித்தி பெற்று உயர்தரம் கல்வி கற்க தகுதி பெற்றுள்ளார்கள் என்பது மகிழ்ச்சிதான்.

ஆனாலும் இன்னும் அதிக முயற்சிகள் மேற்கொன்டுள்ளோம். வட மாகாண ரீதியில் 12 வலயங்களில் எமது வலயம் 67.2 புள்ளிகளைப்பெற்று 05ஆம் இடத்தில் உள்ளது.

இன்னும் முன்னேற்றம் பெற பல திட்டங்களை வகுத்துள்ளோம் என மடுக்கல்வி வலய பணிப்பாளர் .க.சத்தியபாலன் தெரிவித்தார்.

இச் சாதனையை நிகழ்த்துவதற்கு சிறப்பாக பணி புரிந்த அனைத்து ஆசிரியர்களுக்கும், பக்க பலமாக இருந்த பெற்றோர்களுக்கும் பாடசாலையின் அதிபரான ஞானப்பிரகாசம் அன்ரனிப்பிள்ளை மற்றும் மடுக்கல்வி வலய பணிப்பாளர் க.சத்தியபாலன் அவர்களுக்கும் பாடசாலைச் சமூகத்திற்கும் பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

https://www.ibctamil.com/srilanka/80/142561

  • கருத்துக்கள உறவுகள்

மாணவர்கள்.. பெற்றோர்கள்.. கேட்க வேண்டிய பேச்சு..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.