Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெயந்தன் படையணியின் போர்க்குணத்தால் நடுங்கிய எதிரிகளும் துரோகிகளும்.!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜெயந்தன் படையணியின் போர்க்குணத்தால் நடுங்கிய எதிரிகளும் துரோகிகளும்.!

Last updated May 3, 2020

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு படைத்துறை ரீதியில் செயற்திறண்மிக்க, வலுவானதொரு போரிடும் சக்தியாகத் திகழ்கின்றது. ஒரு தேசத்தின் படைக் கட்டுமாணத்திற்கு நிகரான படைத்துறைசார் நியமங்களை தன்னகத்தே கொண்டதாக அது தன்னை தகவமைத்துக் கொண்டுள்ளது.

ஒப்பிட முடியாதளவு ஆட் பல மேலாண்மையையும், போர்க்கல மேலாண்மையையும் கொண்ட சிறிலங்காவில் முப்படைகளுக்கெதிராக தாக்கமான சமர்க்கள வெற்றிகளை விடுதலைப்புலிகள் அமைப்பு ஈட்டிவருகின்றது. சிறிலங்காவின் படைத்துறை இயந்திரத்தைச் செயலிழக்க வைக்கக்கூடிய தனது வலுவாற்றலை அது இந்தப் போர்நிறுத்த உடன்பாட்டிற்கு முன்னான சமர்க்களங்களில் சாதித்துக் காட்டியது.

photo5.jpg

விடுதலைப்புலிகள் அமைப்பு இவ்வாறு படைத்துறை ரீதியில் உயர்நிலை பெறுவதற்கு அடித்தளமாய் அமைந்தது, அதன் படைத்துறைக் கட்டமைப்பே ஆகும். இவ்வகையில் விடுதலைப்புலிகளின் படையணிகளின் உருவாக்கமும் அவற்றின் செயற்திறண்மிக்க செயற்பாடுகளும் முக்கியத்துவம் பெறுகின்றன. இதனடிப்படையில், விடுதலைப்புலிகளின் மரபுசார் படைத்துறை திறணாற்றலுக்கு வலுச்சேர்த்த படையணிகளுள் ஜெயந்தன் படையணி சிறப்பிடம் பெறுகின்றது.

பொதுவாக ஒரு மரபுவழிப் படையணியைப் பொறுத்தவரை அதன் ஆரம்பச் சமர்க்களங்களில் உயர்நிலைப் பெறுபேறுகளைப் பெறுவதென்பது மிக அரிதானதே. ஆனால் ஜெயந்தன் படையணியைப் பொறுத்தவரை அது தனது முதற் சமரிலேயே தன்னை ஒரு உயர்நிலை சமராற்றல் மிக்க, அதீத போர்க்குணம் மிக்க படையணியாக வெளிக்காட்டி நின்றமை வியப்பிற்குரியதே.

மட்டக்களப்பு – அம்பாறை போர்ப் பிராந்தியத்தில் ஒரு கரந்தடி அமைப்பின் உச்சநிலை வளர்ச்சியை எட்டியிருந்த சண்டை அணிகள், பூநகரி ‘தவளை’ நடவடிக்கைக்காக ஒன்றிணைக்கப்பட்டு தலைமையினால் ஒரு படையணிக் கட்டுமாணத்துள் கொண்டுவரப்பட்டன. புதிய சூழல், புதிய படையணிக் கட்டுமாணம், படைத்துறைசார் நடைமுறைகள், கடின பயிற்சிகள் என்பன ஒரு வேறுபட்ட நடைமுறைச் சூழலுக்கு அவர்கள் தம்மை உடன் இசைவாக்கிக் கொள்ளவேண்டிய தேவையை ஏற்படுத்தின.

ஒரு கரந்தடி வீரன் சந்திக்கக்கூடிய உச்ச கடின சந்தர்ப்ப, சூழ்நிலைகளுக்கு முகங்கொடுத்து அதில் போதிய பட்டறிவைப் பெற்றிருந்த அவ்வீரர்களுக்கு தங்களை இந்தப் புதிய நடைமுறைச் சூழலுக்கு இசைவாக்கிக் கொள்வதில் எந்தவித பிரச்சினையும் எழவில்லை.

photo46.jpgஜெயந்தன் படையணி தோற்றம்பெற்ற காலத்தில் இருந்தே அப்படையணியில் “படையணி மனோபாவம்” அல்லது “குழு உணர்வு” ஒரு மேம்பட்ட நிலையில் காணப்படுவதை நாம் அவதானிக்க முடியும். அத்துடன் சமர்க்களங்களில் அதன் “தீவிர மூர்க்கச் செயற்பாடுகள்”, “போர்க்குணம்” என்பன அப்படையணியின் தனித்துவமான இயல்புகளாக இனங்காணப்பட்டன.

ஜெயந்தன் படையணி எத்தரையமைப்பிலும் சமரிடக் கூடிய, பட்டறிவை, தகைமையைப் பெற்றிருந்மையானது அதன் சமராற்றலுக்கு மேலும் வலுச்சேர்ப்பதாக அமைந்திருந்தது

குறிப்பிடத்தக்கது. மட்டு – அம்பாறை போர்ப்பிராந்தியத்தின் தரைத்தோற்றமானது காடுகள், மலைகள், பரந்த வெளிகள் போன்ற எத் தரையமைப்பிலும் செயற்படத்தக்க அறிவை, அனுபவத்தை அவர்களுக்கு ஊட்டியிருந்தது. நீர்சார்ந்த நடவடிக்கைகளிலும் ஈடுபடக்கூடிய தமது இயலுமையை முதற்சமரிலேயே ஜெயந்தன் படையணி வெளிக்காட்டியது. மேற்குறித்த சாதகமான காரணிகள் பின்நாளில் அப்படையணி யாழ்.குடாநாட்டு வெளிகளிலும், வன்னிப் பெருநிலக் காடுகளிலும் ஈரூடக நடவடிக்கைகளிலும் திறம்படச் செயலாற்ற பேருதவியாய் அமைந்தன.

பூநகரி நடவடிக்கையைத் தொடர்ந்து யாழ்.குடாநாட்டின் குறிப்பிடத்தக்க சமர்க்களங்கள் அனைத்திலும் பங்குகொண்டு தனது சமராற்றலை மேலும் வளர்த்ததெடுத்த ஜெயந்தன் படையணி, ஒவ்வொரு களத்திலும் தனது தனித் தன்மையினை நிரூபித்தே வந்தது. தமிழீழ விடுதலைப்போர் வன்னிப் பெருநிலக் களங்களில் மையங்கொண்டதன் பின், வன்னிப் பெருநிலப்பரப்பில் ஓயாத அலைகள் ஒன்றுடன் புதிய போரரங்கு திறக்கப்பட்டபோது மிகப்பலம் வாய்ந்ததொரு படையணியாய் அது வளர்ச்சி கண்டிருந்தது.

photo49.jpg

ஜெயந்தன் படையணி வன்னிப் பெருநிலப்பரப்பில் சமர் முன்னெடுப்புக்களிலும், முறியடிப்புக்களிலும் தொடர்ந்து முக்கிய பங்கு வகித்தது. இப்படையணியின் பெயர் உள்நாட்டில் மட்டுமன்றி உலகநாடுகளிலும் அடிபடத்தொடங்கிய ஆண்டாக 1997 அமைந்தது. சிறிலங்கா படைத்துறை வரலாற்றில் மிகப்பெரும் போர் நடவடிக்கையாக அமைந்த ‘ஜெயசிக்குறு’ படை நடவடிக்கை ஆரம்பமானபோது அதை எதிர்கொள்ள எம் தலைவன் வகுத்த வியூகத்தில் பிரதானமானதொரு சக்தியாக ஜெயந்தன் படையணி திகழ்ந்தது. வருடக்கணக்கில் நீண்ட பாதுகாப்புச் சமர்களிலும் சரி, வலிந்த தாக்குதல்களிலும் சரி ஜெயந்தன் படையணி முன்னிலை வகித்துச் செயற்பட்டது.

photo27.jpg

இந்த வன்னிச் சமர்க்களத்தில் பாதுகாப்புச் சமர், படை முன் நகர்வு முறியடிப்பு, வலிந்த தாக்குதல்கள் என மரபுவழிப் படை நடவடிக்கைகளில் ஈடுபட்டுவந்த ஜெயந்தன் படையணி, மரபுசாரா நடவடிக்கைகளையும் முன்னெடுத்தது. சிறு குழு நடவடிக்கை என்ற வகையில், ஆழ ஊடுருவி தாக்குதல் நடத்துவதிலும் ஜெயந்தன் படையணியின் பிரிவுகள் வன்னிச் சமர்க்களத்தில் தொடர்ந்தும் செயற்பட்டுவந்தன. விசேட வேவு அணியினருடன் இணைந்ததான இந் நடவடிக்கைகள் குறிப்பிடத்தக்க பெறுமதியான விளைவுகளையும் பெற்றுத்தந்தன. ஓயாத அலைகள் – 03இன் போதும் இத்தகைய அணிகள் ஆழ ஊடுருவி நடவடிக்கைக்குப் பலம் சேர்த்தன. கரும்புலி அணிகள் முன்னெடுத்த சிறப்புத் தாக்குதல் நடவடிக்கைகளில் ஜெயந்தனின் வீரர்கள், தளபதிகள் இணைந்து செயற்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கதொரு விடயமாகும்..

photo32.jpg

‘சமர்களுக்கெல்லாம் தாய்ச்சமர்’ என பெருந் தலைவனால் குறிப்பிடப்பட்ட ஜெயசிக்குறு எதிர்ச் சமரிலும் ஓயாத அலைகள் – 2, 3 ஆகிய பாரிய வலிந்த தாக்குதல் முன்னெடுப்புக்களிலும் ஜெயந்தன் படையணி பல முனைகளிலும் ஒரே நேரத்தில் சண்டையிட்டமையானது அதன் பலத்தையும் வலுவாற்றலையும் எடுத்துக்காட்டுவதாய் அமைந்தது. தொடர்ந்தும் ஆனையிறவிற்கான சமர், குடாநாட்டு நடவடிக்கைகள் என ஜெயந்தன் படையணி ஓய்வின்றி களமாடியது. பின்நாளில் ஜெயந்தன் படையணியின் வீரர்கள் மத்தியில் ஜெயசிக்குறு பற்றிக் கருத்துக்கூறிய தேசியத் தலைவர் “இது உங்களின் சமர் என்று கூறக் கூடியளவிற்கு இச்சமரில் நீங்கள் சாதித்துள்ளீர்கள்” என கூறியிருந்தமை வன்னிச் சமர்க்களத்தில் ஜெயந்தன் படையணியின் தாக்கம் எத்தகையது என உணர்ந்துகொள்ள போதுமானதாகும்.

1993.05.04 அன்று கட்டமைக்கப் பெற்ற ஜெயந்தன் படையணி தனது 12 வருடகால ஓய்வற்ற சமர்க்களப் பயணத்தில் சாதித்தவை சாதாரணமானவையல்ல. இப் படையணி இத் தேசவிடுதலைப்போரில் ஆற்றிய பங்கு பற்றித் தேசியத் தலைவர் தன் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டவை ஜெயந்தன் படையணி வரலாற்றில் மட்டுமன்றி எமது போராட்ட வரலாற்றிலும் மிக முக்கியம் வாய்ந்த பதிவுகளாகும்.

photo6.jpg‘ஜெயந்தன் படையணி அது தோற்றம்பெற்ற காலத்திலிருந்தே எதிரியின் நிலைகள்மீது இடைவிடாது தாக்குதல் தொடுத்தது…. கெரில்லாப் பாணியிலான தாக்குதல்களில் இருந்து மரபுவழிச் சமர்வரை ஜெயந்தன் படையணி சிறப்பாகச் செயலாற்றியது…. இப்படையணியின் போராளிகளும் தளபதிகளும் போர்க்கலையில் வல்லவர்கள், அபார துணிச்சல் மிக்கவர்கள். இவர்களின் இந்தப் போர்ப்பண்புகளுக்கு எதிரி பயப்படுகின்றான்’. என தேசியத்தலைவர் இப்படையணி பற்றிக் குறிப்பிட்டிருந்தார்.

எமது இலட்சியப் பயணத்தில் என்றுமில்லாதவாறு ஒரு மாபெரும் துரோகம், மட்டக்களப்பில் கருணா என்ற பெயரில் அரங்கேறியபோது, ஜெயந்தன் படையணி அதை எதிர்கொண்டவிதம், அதன் கடந்த கால சமர்க்களச் சாதனைகளை விஞ்சிநின்றது. இதுபற்றி தலைவர் குறிப்பிடுகையில்,

photo51.jpg‘ஜெயந்தன் படையணியின் பேராற்றலையும், இலட்சிய உறுதியையும் கடந்த ஆண்டின் முற்பகுதியில் உலகமே தன் கண்ணால் நேரடியாகக் கண்டது. மட்டக்களப்பு மண்ணிலே எமது போராட்டத்திற்கெதிராகப் பெரும் துரோகம் நிகழ்ந்தபோது ஜெயந்தன் படையணி வெளிக்காட்டிய வீரமும், கொள்கைப்பற்றும் என்றுமே பாராட்டிற்குரியவை.’

தலைமையின் இந்த உள் மனவெளிப்பாட்டிற்கு ஏற்றவகையில் ஜெயந்தன் படையணி என்றும் செயற்படும் என்பதை 04.05.2005 அன்று மட்டக்களப்பு தரவைப் பகுதியில் சிறப்புற நடைபெற்ற படையணியின் 12வது வருட நிறைவு நிகழ்வுகள் எடுத்துக்காட்டின. வனமும் வயலும் மலையும் சூழ்ந்த ஜெயந்தன் படையணியின் அந்தப் பிரதான தளத்தில் தமிழீழ தேசியக்கொடி உயர்ந்து பறந்துகொண்டிருக்க ஜெயந்தன் வீரர்கள் கம்பீரமாய் அணிவகுத்து வந்த காட்சி எதிரிகளுக்கும் துரோகிகளுக்கும் உயிரொடுங்கும் செய்தியொன்றைஉறைக்க உரைத்திருக்கும்.

t.jpg

“எங்கும் செல்வோம் எதிலும் வெல்வோம்”

வெளியீடு :விடுதலைப்புலிகள் 2005 இதழ் 

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

https://www.thaarakam.com/news/127310

  • கருத்துக்கள உறவுகள்

பதிவும் நினைவும் மட்டுமே ஆயிரக்கணக்கில் போராளிகளை கண்ட இடமென்றால் அது மட்டக்களப்பில் தான் மாவீரர் தினத்தில் 

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாமே பசுமை நினைவுகளாய்

 கனத்த மெளனத்தில்,...........

தீயாய் சுட...          

பெரு மூச்சு மட்டும் ....... நிஜமாய் வலியாய்

😭😭😭

😡

  • கருத்துக்கள உறவுகள்

கருணா இல்லாத ஜெயந்தன் படையணியா ?...கருணாவின் பிரிவை ஜெயந்தன் படையணி எவ்வாறு எதிர் கொண்டது?...அதன் பின்னர் அவர்களால் வெற்றிகரமான தாக்குதல்களை நடத்த முடிந்ததா ?... கட்டுரையாளர் இந்த கட்டுரையை எழுதினதிற்கு பேசாமல் மூடிட்டு படுத்திருக்கலாம் 
 
4 hours ago, தனிக்காட்டு ராஜா said:

பதிவும் நினைவும் மட்டுமே ஆயிரக்கணக்கில் போராளிகளை கண்ட இடமென்றால் அது மட்டக்களப்பில் தான் மாவீரர் தினத்தில் 

ஒரு வரி எழுதினாலும் அதில் ,ஆயிரம் அர்த்தங்கள்

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

கருணா இல்லாத ஜெயந்தன் படையணியா ?...கருணாவின் பிரிவை ஜெயந்தன் படையணி எவ்வாறு எதிர் கொண்டது?...அதன் பின்னர் அவர்களால் வெற்றிகரமான தாக்குதல்களை நடத்த முடிந்ததா ?... கட்டுரையாளர் இந்த கட்டுரையை எழுதினதிற்கு பேசாமல் மூடிட்டு படுத்திருக்கலாம் 
 
ஏன் இதற்குள் வினாயகமூர்த்தி முரளிதரனை வலிந்து இழுக்கிறீர்கள். ☹️

Edited by Kapithan
திருத்தம்

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Kapithan said:

ஏன் இதற்குள் வினாயகமூர்த்தி முரளிதரனை வலிந்து இழுக்கிறீர்கள். ☹️

தற்போது முரளிதரன் கட்டுரைக்கு கர்ணா அம்மான் 😜 மாபெரும் நம்பிக்கை படையணி மீது இருந்த காலம் அது  

10 hours ago, ரதி said:

ஒரு வரி எழுதினாலும் அதில் ,ஆயிரம் அர்த்தங்கள்

வரி சீருடையை கண்டு கதி கலங்கி நின்ற காலம் அது 

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

வரி சீருடையை கண்டு கதி கலங்கி நின்ற காலம் அது 

கிழக்கருடைய அடி  அப்பிடி ...சிங்கள ராணுவம் காச்சட்டையிலே மூச்சா போன காலம் அது 
ஜெயந்தன் அணி எண்டாலே PK தான் ஞாபகம் வரும், PK வச்சு அடிச்சு துவம்சம் செய்வதில் யாரும் இவர்களை நெருங்க முடியாது, அதுவும் நிலத்தில் படுக்காது ஹிப்பில் வச்சு அடிப்பினம் AK வச்சு அடிப்பது போல   

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, அக்னியஷ்த்ரா said:

கிழக்கருடைய அடி  அப்பிடி ...சிங்கள ராணுவம் காச்சட்டையிலே மூச்சா போன காலம் அது 
ஜெயந்தன் அணி எண்டாலே PK தான் ஞாபகம் வரும், PK வச்சு அடிச்சு துவம்சம் செய்வதில் யாரும் இவர்களை நெருங்க முடியாது, அதுவும் நிலத்தில் படுக்காது ஹிப்பில் வச்சு அடிப்பினம் AK வச்சு அடிப்பது போல   

பொடிசுகள் மத்திய கிழக்கில் கிடந்து மாடாய் உருகிறார்கள்  சகல அடிமட்ட வேலைகளும் நாடு திரும்ப முடியாத காரணத்தினால் செய்கிறார்கள்

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தனிக்காட்டு ராஜா said:

1) தற்போது முரளிதரன் கட்டுரைக்கு கர்ணா அம்மான் 😜 மாபெரும் நம்பிக்கை படையணி மீது இருந்த காலம் அது  

2) வரி சீருடையை கண்டு கதி கலங்கி நின்ற காலம் அது 

1) நீங்கள் சொல்வது சரிதான். ஆனால் பழைய ஆளை இங்கே இழுத்துவிட, பலரும் சேர்ந்து அந்த ஆளுக்கு PK யால அடிக்க, கடைசியில் ஜெயந்தன் படையணியை போற்றி எழுதப்பட்ட  கட்டுரை நாற்றமெடுக்க  வெளிக்கிடும். ☹️

OK யா உங்கழுக்கு ? 🤔

2) அதில் 2ம் கருத்து சிங்களத்திற்குக் கூட இருக்க வாய்ப்பில்லை 💪

  • கருத்துக்கள உறவுகள்

23 hours ago, Kapithan said:

1) நீங்கள் சொல்வது சரிதான். ஆனால் பழைய ஆளை இங்கே இழுத்துவிட, பலரும் சேர்ந்து அந்த ஆளுக்கு PK யால அடிக்க, கடைசியில் ஜெயந்தன் படையணியை போற்றி எழுதப்பட்ட  கட்டுரை நாற்றமெடுக்க  வெளிக்கிடும். ☹️

OK யா உங்கழுக்கு ? 🤔

2) அதில் 2ம் கருத்து சிங்களத்திற்குக் கூட இருக்க வாய்ப்பில்லை 💪

ஜெயந்தன் படையணி ஒன்றும் ஒருவரை நம்பி இல்லை கர்ணா குற்றம் செய்தால் படையணி பொறுப்பாகாது போராடியவர்களுக்கும் வளர்த்தவர்களுக்குமே அதன் அருமை தெரியும் .

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தனிக்காட்டு ராஜா said:

ஜெயந்தன் படையணி ஒன்றும் ஒருவரை நம்பி இல்லை கர்ணா குற்றம் செய்தால் படையணி பொறுப்பாகாது போராடியவர்களுக்கும் வளர்த்தவர்களுக்குமே அதன் அருமை தெரியும் .

தெழிவுற வாசியுங்கள். 🌞

ஜெயந்தன் படையணியின் புகழைப் போற்றும் கட்டுரையை மாறி மாறி சேறடிக்கும் திரியாக மாற்றக் கூடாது என்பதுதான் என் நோக்கம் 👍

அதனால்தான் வினாயகமூர்த்தியரை வலிந்து இதற்குள் இழுக்கவேண்டுமா என்று கேட்டிருந்தேன். 🤔

இதில் உங்களுக்கு உடன்பாடில்லையென்றால், உங்களுக்கு இல்லாத சுதந்திரமா 😀

  • கருத்துக்கள உறவுகள்
On 9/5/2020 at 19:00, Kapithan said:

தெழிவுற வாசியுங்கள். 🌞

ஜெயந்தன் படையணியின் புகழைப் போற்றும் கட்டுரையை மாறி மாறி சேறடிக்கும் திரியாக மாற்றக் கூடாது என்பதுதான் என் நோக்கம் 👍

அதனால்தான் வினாயகமூர்த்தியரை வலிந்து இதற்குள் இழுக்கவேண்டுமா என்று கேட்டிருந்தேன். 🤔

இதில் உங்களுக்கு உடன்பாடில்லையென்றால், உங்களுக்கு இல்லாத சுதந்திரமா 😀

இந்த படையணிக்கு பாரிய பங்குண்டு கர்ணாவுக்கு ஆனால் அவர் விலக்கப்பட்டதால் அவருக்குரிய பங்கு இல்லை அதான் உன்மையும் 

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

இந்த படையணிக்கு பாரிய பங்குண்டு கர்ணாவுக்கு ஆனால் அவர் விலக்கப்பட்டதால் அவருக்குரிய பங்கு இல்லை அதான் உன்மையும் 

தனி ,அவர் விலக்கப்பட்டதால் எப்படி அவருக்கு உரிய பங்கு இல்லாமற் போகும் ?

  • கருத்துக்கள உறவுகள்
Just now, ரதி said:

தனி ,அவர் விலக்கப்பட்டதால் எப்படி அவருக்கு உரிய பங்கு இல்லாமற் போகும் ?

ஒன்றை  உற்பத்திசெய்து அறுவை செய்பவன் உரிமை கோரலாம்  ஆக்கியவற்றை அழித்து சென்றவரை உரிமை கோர முடியாது அதை அழித்தவர் பெயரில்தான் இருக்கலாம்  

இத்தனைக்கும் கர்ணா அம்மான் எனது முகநூலில் (பேக்) ஐடியில் நண்பர் 🤠   எனக்கும் சிலவற்றை எழுதி ரக் பண்ணுவார் 

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

ஒன்றை  உற்பத்திசெய்து அறுவை செய்பவன் உரிமை கோரலாம்  ஆக்கியவற்றை அழித்து சென்றவரை உரிமை கோர முடியாது அதை அழித்தவர் பெயரில்தான் இருக்கலாம்  

இத்தனைக்கும் கர்ணா அம்மான் எனது முகநூலில் (பேக்) ஐடியில் நண்பர் 🤠   எனக்கும் சிலவற்றை எழுதி ரக் பண்ணுவார் 

தனி , அவர் ஆக்கி சென்றாரோ அல்லது அழித்து சென்றாரோ அவருக்கு பின்னால் ஜெயந்தன் படையணி என்று ஒன்று இல்லை 

  • கருத்துக்கள உறவுகள்
Just now, ரதி said:

தனி , அவர் ஆக்கி சென்றாரோ அல்லது அழித்து சென்றாரோ அவருக்கு பின்னால் ஜெயந்தன் படையணி என்று ஒன்று இல்லை 

அத்தனை பேரையும் கலைத்துவிட்டு சென்றார் ரதி என்னுடன்  மத்திய கிழக்கில் இருந்தவர்கள் பலர் ஒன்றை மட்டும் சொன்னார்கள் அம்மான் விலகி சென்றுருந்தால் சென்று இருக்கலாம் ஆனால் எல்லோரையும் கலைத்து விட்டு சென்றது பிழையென இதில் 83 ம் ஆண்டு சேர்ந்து இயங்கிய போராளியும் ஒருத்தர் இருந்தவர் என்னுடன் 

அவர் சொன்ன கதை ஏராளம் சொல்ல முடியாது பொது வெளி .

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

அத்தனை பேரையும் கலைத்துவிட்டு சென்றார் ரதி என்னுடன்  மத்திய கிழக்கில் இருந்தவர்கள் பலர் ஒன்றை மட்டும் சொன்னார்கள் அம்மான் விலகி சென்றுருந்தால் சென்று இருக்கலாம் ஆனால் எல்லோரையும் கலைத்து விட்டு சென்றது பிழையென இதில் 83 ம் ஆண்டு சேர்ந்து இயங்கிய போராளியும் ஒருத்தர் இருந்தவர் என்னுடன் 

அவர் சொன்ன கதை ஏராளம் சொல்ல முடியாது பொது வெளி .

அவர் கலைத்து விட்டு சென்றபடியால் தான் இப்போதும் உயிரோடு இருக்கிறார்கள். அவரும் அந்த நேரத்தில் தனது பதவிக்குரிய அதிகாரத்தோடு தான் நடந்து கொண்டார் என்பதையும் மறுக்கவில்லை 

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, ரதி said:

அவர் கலைத்து விட்டு சென்றபடியால் தான் இப்போதும் உயிரோடு இருக்கிறார்கள். அவரும் அந்த நேரத்தில் தனது பதவிக்குரிய அதிகாரத்தோடு தான் நடந்து கொண்டார் என்பதையும் மறுக்கவில்லை 

போராட சென்றவர்கள் உயிரை நினைத்து போராட செல்லவில்லை என்பதை மறந்து விட்டீர்கள் போல

அதிகார துஸ்பிரயோகம் என்பதை நீங்கள் எந்தளவில் வைத்துக்கிறீர்கள் 

உங்கள் முதிர்ச்சியடையாத கருத்திற்கு பதில்க்  கருத்தெழுதத் தொடங்கினால் புகழ் பெற்ற ஜெயந்தன் படையணியைப் போற்றி எழுதப்பட்ட கட்டுரையின் நோக்கமே மாறிப்போகும். ஆதலினால் அதனைத் தவிர்க்கிறேன். 🙂

(உங்கள் கருத்தை மட்டுமே இதில் குறிப்பிடுகிறேன், எந்த ஒரு தனி நபரையும் அல்ல.)

அக்கதானே அம்மானின் கொள்கை பரப்பு செயளாலர். 
அக்காவோட, அம்மானைபற்றி கதைத்து வெல்லமுடியாது. 
அக்காவை பொறுத்தவரை அம்மான் செய்தது எல்லாமே சரி, மாற்றுக்கருத்துக்கு இடமேயில்லை.

முன்பு எல்லாம் காட்டி கொடுப்புக்கும் துரோகத்தனத்துக்கும் காக்கைவன்னியனை உதாரணம் காட்டுவார்கள்.
இப்பொழுது ?

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, Kaalee said:

அக்கதானே அம்மானின் கொள்கை பரப்பு செயளாலர். 
அக்காவோட, அம்மானைபற்றி கதைத்து வெல்லமுடியாது. 
அக்காவை பொறுத்தவரை அம்மான் செய்தது எல்லாமே சரி, மாற்றுக்கருத்துக்கு இடமேயில்லை.

முன்பு எல்லாம் காட்டி கொடுப்புக்கும் துரோகத்தனத்துக்கும் காக்கைவன்னியனை உதாரணம் காட்டுவார்கள்.
இப்பொழுது ?

இப்போது இரதிக்கு புரிந்திருக்கும் ஏன் வினாயகமூர்த்தியரை இந்தக் கட்டுரைக்குள் இழுக்க வேண்டாம் என கூறினேன் என்று. ☹️

  • கருத்துக்கள உறவுகள்
On 8/5/2020 at 08:00, அக்னியஷ்த்ரா said:

கிழக்கருடைய அடி  அப்பிடி ...சிங்கள ராணுவம் காச்சட்டையிலே மூச்சா போன காலம் அது 
ஜெயந்தன் அணி எண்டாலே PK தான் ஞாபகம் வரும், PK வச்சு அடிச்சு துவம்சம் செய்வதில் யாரும் இவர்களை நெருங்க முடியாது, அதுவும் நிலத்தில் படுக்காது ஹிப்பில் வச்சு அடிப்பினம் AK வச்சு அடிப்பது போல   

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தனிக்காட்டு ராஜா said:

போராட சென்றவர்கள் உயிரை நினைத்து போராட செல்லவில்லை என்பதை மறந்து விட்டீர்கள் போல

அதிகார துஸ்பிரயோகம் என்பதை நீங்கள் எந்தளவில் வைத்துக்கிறீர்கள் 

ஜெயந்தன் படையணியை கலைக்காமல் அவர் மட்டும் . ஓடியிருந்தால், அவர் உருவாக்கின படையணியையும் , அவரை நம்பி வந்த போராளிகளையும் விட்டுட்டு அவர் மட்டும் தப்பி போயிடடார் என்று சொல்லியிருப்பினம்...அதிகார துஸ்பிரயோகத்தை அநேகமாய்  எல்லாத் தளபதிகளும் தான் செய்தவர்கள் 
 
1 hour ago, Kapithan said:

இப்போது இரதிக்கு புரிந்திருக்கும் ஏன் வினாயகமூர்த்தியரை இந்தக் கட்டுரைக்குள் இழுக்க வேண்டாம் என கூறினேன் என்று. ☹️

நீங்கள் சொல்ல முதலே எனக்குத் தெரியும் . ஆனால் என்னை பொறுத்த வரை கருணா இல்லாமல் ஜெயந்தன் படையணி இல்லை.
முகம்  மூடி வரும் யாழில் கூட ஒரு ஐடியில் வந்து எழுத முடியாமல் , மாத்தி ,மாத்தி வந்து மற்றவர்களை நக்கலடிப்பவர்களை நாங்கள் கணக்கெடுக்கத் தேவையில்லை 🙂
 
  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ரதி said:

ஜெயந்தன் படையணியை கலைக்காமல் அவர் மட்டும் . ஓடியிருந்தால், அவர் உருவாக்கின படையணியையும் , அவரை நம்பி வந்த போராளிகளையும் விட்டுட்டு அவர் மட்டும் தப்பி போயிடடார் என்று சொல்லியிருப்பினம்...அதிகார துஸ்பிரயோகத்தை அநேகமாய்  எல்லாத் தளபதிகளும் தான் செய்தவர்கள் 
 
என்னது கும்மான் ஜெயந்தன் படையணியை கலைத்தாரா??

தலைவரின் ஊடக சந்திப்பிற்கு பின்னர் வன்னியிலிருந்து மட்டுவிற்கு கும்மான் தனது படையணிகளையும் கூட்டி கொண்டு புறப்பட்ட வேளை தலைவரால் ஜெயந்தன் படையணியை வன்னியில் விட்டு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டது. 

ஜெயந்தன் படையணியின் தளபதி ஜெயாத்தன் 2009இல் இந்தியாவிற்கு குடும்பமாக வந்து தற்போது புலம்பெயர் நாடு ஒன்றில் உள்ளர்(?).

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, ரதி said:

நீங்கள் சொல்ல முதலே எனக்குத் தெரியும் . ஆனால் என்னை பொறுத்த வரை கருணா இல்லாமல் ஜெயந்தன் படையணி இல்லை.
முகம்  மூடி வரும் யாழில் கூட ஒரு ஐடியில் வந்து எழுத முடியாமல் , மாத்தி ,மாத்தி வந்து மற்றவர்களை நக்கலடிப்பவர்களை நாங்கள் கணக்கெடுக்கத் தேவையில்லை 🙂
 
ஆக,

ஜெயந்தன் படையணியைப்பறிய திரி எப்படிப் போனாலும் உங்களுக்குப்  பிரச்சனையில்லை, முரளீதரனை எப்படிக் கழுவி ஊற்றினாலும் கவலையில்லை. ☹️

நல்ல கொள்கை. வாழ்த்துக்கள். 🤥

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.