Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வீழ்த்தப்பட்ட தமிழரும் ஆண்ட அந்நியரும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, nedukkalapoovan said:

முதலமைச்சருக்கு தெரியாமலே இது நிகழ்ந்திருக்கலாம். இருந்தாலும் ஆட்சியில் இருந்தவர் என்ற வகையில்.. அவர் மீது பழிபோவது தவிர்க்க முடியாதது. 

இதே எம் ஜி ஆர் தான் ஒப்பரேசன் லிபரேசனின் போது உதவிகளை நேரடியாக அனுப்பினார் என்பதையும் மறக்க வேண்டாம். அதுவே இறுதியில் இந்திய - இலங்கை ஒப்பந்தம்.. ஹிந்தியப் படை வரவு வரை போனது. ஒப்பரேசன் லிபரேசனால் வரவிருந்த பெரும் அழிவுகள் தடுத்து நிறுத்தப்பட்டது.. மேலும் போராளிகளுக்கு தம்மை மீள ஆசுவாசப்படுத்த ஒரு கால அவகாசத்தை வழங்கியது. 

நெடுக்ஸ் , மத்திய  அரசிற்கு தெரியாமல் ,அவர்கள் அனுமதி இல்லாமல் இவரால் உதவி இருக்க முடியாது 

  • Replies 76
  • Views 7.7k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ரதி said:

நெடுக்ஸ் , மத்திய  அரசிற்கு தெரியாமல் ,அவர்கள் அனுமதி இல்லாமல் இவரால் உதவி இருக்க முடியாது 

எம் ஜி ஆர் துணிச்சல் மிக்க தலைவர். அவர் உதவ எண்ணி விட்டால்.. உதவியே தீருவார். அதேவேளை எதிர்க்க தீர்மானித்தால் எதிர்த்தே தீருவார்.

மத்திய அரசை தன் சார்ப்பு ஆக மாற்றும் ஆளுமை அவருக்கு இருந்தது. கருணாநிதிக்கு அது கிடையாது. தன் குடும்பத்துக்கு சலுகை பெற விட்டுக்கொடுப்புக்களை செய்ய மட்டுமே தெரியும். 

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, nedukkalapoovan said:

எம் ஜி ஆர் துணிச்சல் மிக்க தலைவர். அவர் உதவ எண்ணி விட்டால்.. உதவியே தீருவார். அதேவேளை எதிர்க்க தீர்மானித்தால் எதிர்த்தே தீருவார்.

மத்திய அரசை தன் சார்ப்பு ஆக மாற்றும் ஆளுமை அவருக்கு இருந்தது. கருணாநிதிக்கு அது கிடையாது. தன் குடும்பத்துக்கு சலுகை பெற விட்டுக்கொடுப்புக்களை செய்ய மட்டுமே தெரியும். 

உங்கட நம்பிக்கையை ஏன் கெடுப்பான் ...அவர்களை விடுங்கள் இறந்து போய் விட்டார்கள் ...உப்ப சீமானை நம்புங்கோ துணிச்சல் மிக்கவர் , மத்திய அரசை எதிர்க்கும் தைரியம் மிக்கவர் ...முதலமைச்சராய் வந்தவுடன் தமிழீழம் எடுத்து தந்து விட்டு தான் ஓய்வார் 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ரதி said:

உங்கட நம்பிக்கையை ஏன் கெடுப்பான் ...அவர்களை விடுங்கள் இறந்து போய் விட்டார்கள் ...உப்ப சீமானை நம்புங்கோ துணிச்சல் மிக்கவர் , மத்திய அரசை எதிர்க்கும் தைரியம் மிக்கவர் ...முதலமைச்சராய் வந்தவுடன் தமிழீழம் எடுத்து தந்து விட்டு தான் ஓய்வார் 

சீமான் முதலமைச்சராக வரும் போது எப்படி கிழக்குக் பாகிஸ்தானை பங்களாதேஷ் ஆக்கனும் என்ற தேவை ஏற்பட்டதோ.. அப்படி ஒரு தேவை இலங்கையின் வடக்குக் கிழக்கை பிரித்து தனிநாடு ஆக்க வேண்டும் என்ற நிலையை.. சர்வதேச.. சீன இராணுவ - பொருண்மிய நிலை உருவாக்குமாக இருந்தால்.. சீமானால்.. தமிழீழம் அடைவது சாத்தியமே. எல்லாம் காலத்தின் கையிலும் சீமானின் தளராத கொள்கைப் பிடிப்பிலும் தான் உள்ளது. காலத்தை சரியாகப் பயன்படுத்திக் கொள்வது அவசியம். கருணாநிதி மாதிரி குடும்பத்துக்கு என்று பயன்படுத்தினால்.. அழிவு தான் மிஞ்சும். 

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, nedukkalapoovan said:

சீமான் முதலமைச்சராக வரும் போது எப்படி கிழக்குக் பாகிஸ்தானை பங்களாதேஷ் ஆக்கனும் என்ற தேவை ஏற்பட்டதோ.. அப்படி ஒரு தேவை இலங்கையின் வடக்குக் கிழக்கை பிரித்து தனிநாடு ஆக்க வேண்டும் என்ற நிலையை.. சர்வதேச.. சீன இராணுவ - பொருண்மிய நிலை உருவாக்குமாக இருந்தால்.. சீமானால்.. தமிழீழம் அடைவது சாத்தியமே. எல்லாம் காலத்தின் கையிலும் சீமானின் தளராத கொள்கைப் பிடிப்பிலும் தான் உள்ளது. காலத்தை சரியாகப் பயன்படுத்திக் கொள்வது அவசியம். கருணாநிதி மாதிரி குடும்பத்துக்கு என்று பயன்படுத்தினால்.. அழிவு தான் மிஞ்சும். 

ஆக உங்களுக்கே சீமானின் நம்பிக்கை இல்லை 😆...கவலைப்படாதீர்கள் இவர்களுக்கு எல்லாம் ஈழ மக்கள் சிரமம் கொடுக்க மாட்டார்கள் ...ஒருமித்த குடைக்குள் ஒன்றாய் வாழ பழகி  விடுவார்கள் 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, ரதி said:

ஆக உங்களுக்கே சீமானின் நம்பிக்கை இல்லை 😆...கவலைப்படாதீர்கள் இவர்களுக்கு எல்லாம் ஈழ மக்கள் சிரமம் கொடுக்க மாட்டார்கள் ...ஒருமித்த குடைக்குள் ஒன்றாய் வாழ பழகி  விடுவார்கள் 

ஒருமித்த குடைக்குள் அல்ல.. மொட்டைகளின் குடைக்குள் எக்கத்துக் கரன ஆகிடுவிடுவினம். அதுதான் அடிமைகள் சோம்பேறிகள்.. செய்யக் கூடிய ஒரே மார்க்கம். 

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல காலம் எம்ஜிஆர் மு.வாய்க்காலுக்கு முன்னர் இறந்து விட்டார் 
 

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டுபக்கங்களை வாசிச்சே களைச்சுப்போனன் .... அப்பாடா 😀

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

ஆக உங்களுக்கே சீமானின் நம்பிக்கை இல்லை 😆...கவலைப்படாதீர்கள் இவர்களுக்கு எல்லாம் ஈழ மக்கள் சிரமம் கொடுக்க மாட்டார்கள் ...ஒருமித்த குடைக்குள் ஒன்றாய் வாழ பழகி  விடுவார்கள் 

 

1 hour ago, nedukkalapoovan said:

ஒருமித்த குடைக்குள் அல்ல.. மொட்டைகளின் குடைக்குள் எக்கத்துக் கரன ஆகிடுவிடுவினம். அதுதான் அடிமைகள் சோம்பேறிகள்.. செய்யக் கூடிய ஒரே மார்க்கம். 

எவ்வளவோ சிரமங்களுக்கு மத்தியில் பெரும் இழப்புகளை சந்தித்து வாழும் எம் மக்களை இப்படி “அடிமைகள் சோம்பேறிகள்” என்று சொல்கிறீர்களே? நியாயமா?

1 hour ago, ரதி said:

நல்ல காலம் எம்ஜிஆர் மு.வாய்க்காலுக்கு முன்னர் இறந்து விட்டார் 
 

முள்ளிவாய்கால் காலத்தில் எம்.ஜி. ஆர் இருந்திருந்தால் முன்பு செய்த உதவிகள் நன்மைகள் எல்லாம் நன்றி மறக்கபட்டு இன்று மாபெரும் துரோகிபோல்  சித்தரிக்கபட்டு திட்டி தீர்த்திருக்கப்பட்டிருப்பார். கருணாநிதி தப்பி இருப்பார்.

  • கருத்துக்கள உறவுகள்
On 8/5/2020 at 22:10, nedukkalapoovan said:

 

எங்களுடைய நிலைப்பாடு.. எமது போராட்டம் மெளனிக்கப்பட்டுள்ள நிலையில்.. எமது மக்களின் பணத்தை சிங்களவனும்.. அந்நியனும்.. துரோகிகளும் அனுபவிப்பதை விட.. நம்மவர்களே அனுபவிக்கட்டும்.  இல்லை அதனை சிங்களவனும் அந்நியனும் துரோகிகளும் தான் அனுபவிக்க வேண்டும் என்று நினைப்பவர்களை என்ன செய்ய முடியும். இலங்கையில் 10 பணக்காரர்களுக்கு கருணா என்ற துரோகி வந்திட்டார். டக்கிளஸ் இன்னொரு பக்கம். ஏன் அவர்களிடம் போய் காசுக்கணக்கு பார்க்கிறீர்கள் இல்லை..?! பயம் போல.

எத்தனையோ புலம்பெயர் போராளிகள் மக்கள் வேலைக்குப் போக முடியாத அளவுக்கு உள வளப்பிரச்சனையோடு இருக்கிறார்கள்.. உடல் நலிவுற்றிருக்கிறார்கள்.. அதாவது தெரியுமா உங்களைப் போன்றோருக்கு..?! 

 

நெடுக்கர் இப்பத்தான் சரியான இடத்துக்கு வந்திருக்கிறார். கருணா, டக்ளஸ் போன்றோரை நாம் எப்படி துரோகிகள் என்று கூறுகின்றோமோ, அதைவிட கேவலமானவர்கள் இந்த மக்களிடமிருந்து காசு சேர்த்து ஆட்டையைப்போட்டவர்கள். அவர்கள் எப்படியாவது எமது சமூகத்தில் இருந்து அகற்றப்பட வேண்டியவர்களே.

 மற்றயது நீங்கள் கூறியதுபோல் உடல், உள நலிவுற்றிருக்கும் ஊரிலுள்ளோருக்கு அவர்கள் சுருட்டிய பணத்தில் ஒரு சிறு தொகையை கொடுத்தாலே பல போராளிக்குடும்பங்கள் நிமிர்ந்திருக்கும்.

மற்றும்படி இந்த கருணாநிதி அவரது அரசியல் வாரிசுகள் எல்லாருமே கடைந்தெடுத்த சுயநலமிக்க அயோக்கியர்கள் என்பதில் மாற்றுக்கருத்தில்லை!!

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, nedukkalapoovan said:

இதே எம் ஜி ஆர் தான் ஒப்பரேசன் லிபரேசனின் போது உதவிகளை நேரடியாக அனுப்பினார் என்பதையும் மறக்க வேண்டாம். அதுவே இறுதியில் இந்திய - இலங்கை ஒப்பந்தம்.. ஹிந்தியப் படை வரவு வரை போனது. ஒப்பரேசன் லிபரேசனால் வரவிருந்த பெரும் அழிவுகள் தடுத்து நிறுத்தப்பட்டது.. மேலும் போராளிகளுக்கு தம்மை மீள ஆசுவாசப்படுத்த ஒரு கால அவகாசத்தை வழங்கியது. 

நெடுக்ஸ் இங்குதான் நீங்கள் பிழையாக விளங்கிக்கொண்டிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். ஆபரேஷன் லிபேரேஷன் நடவடிக்கை இலங்கை அரசால் தமிழர்களை (புலிகளை) அழிக்க முன்னெடுக்கப்பட்டது. அதைசாட்டாக வைத்து உதவுவதுபோல இந்தியா உள்ளே வந்தது. ஆனால் முள்ளிவாய்க்கால் சிறிலங்கா , இந்தியா மற்றும் பல நாடுகளின் தயவுடன்தான் நடந்தேறியது. இதை முன்னின்று நடத்தியதே சோனியா தலைமையிலான இந்தியாதான். அப்படியிருக்க இருவிடயங்களையும் ஒப்பிடுவது பொருந்தாது. ஒருவேளை கருணாநிதி தலைமையிலான திமுகவின் 39 பாராளுமன்ற உறுப்பினர்களும் ராஜினாமா செய்திருந்தால் சோனியா ஆட்சி கலைந்து பிஜேபி வருவதற்கான சாத்தியப்பாடுகள் இருந்திருக்கும். எப்படியிருப்பினும் புலிகள் எவ்வாறாவது அழிக்கப்பட்டிருப்பார்கள். ஆனால் பொதுசனத்தின் சாவையாவது தடுத்து நிறுத்தியிருக்கலாம்!!

எப்போதும் தமிழன் 2009 ல் கருணாநிதியிடம் 39 பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கவில்லை. திமுக வெறும் 16 எம்பிகளைஏ வைத்திருந்த‍து. மிகுதி காங்கிரஸ்,பாட்டாளி மக்கள் கட்சி போன்ற கூட்டணிக்கட்சிகளிடம் தான் இருந்த‍து. அதேவேளை தமிழகத்தில் கருணாநிதியின் ஆட்சி காங்கிரசின் 35 சட்ட மன்ற உறுப்பினர்களின் தயவில் தான் நடந்து கொண்டிருந்த‍து. அவ்வேளை கருணாநிதி மத்திய அரசுக்கான தனது ஆதரவை விலக்கி இருந்தாலும் மத்தியில் ஆட்சி மாற்றம் நடக்க சந்தர்ப‍ம் இல்லை. அதன் பின்னர் 2009  தேர்தலில் நீங்கள் கூறியபடி பிஜேபி ஆட்சிக்கு வரவில்லை.  காங்கிசே வெற்றி பெற்று பதவிக்கு வந்திருந்தததை உங்களுக்கு ஞாபகப்ப‍டுத்து கின்றேன். அதே வேளை கருணாநிதிக்கான ஆதரவை காங்கிரஸ் விலக்கி கொண்டிருக்கும். ஈழதமிழருக்காக  இரண்டாம்  முறை ஆட்சியை இழந்த கருணாநிதி என்ற பெயரை மட்டும் பெற்றிருப்பார்.  அதை விட  எதுவும் நடந்திருக்காது.

முள்ளிவாய்க்கால் பேரழிவு என்பது புலிகளின் வலிமை இழப்போடு அதாவது  கிளிநோச்சி வீழ்ச்சியோடு  உறுதி செய்யபட்டு விட்டது. 

நீங்கள் கூறியபடி பிஜேபி ஆட்சிக்கு வந்திருந்தாலும் காங்கிரஸ் என்ன செய்த‍தோ அதையே பிஜேபியும் செய்திருக்கும் என்பது இந்திய அரசியலை அவதானிக்கும் ஒருவருக்கு நன்கு தெரியும். காங்கிரசை விட ஈழத்தமிழரை அதிகம் வெறுக்கும் கட்சி பிஜேபி என்பது அவர்களது  நகர்வுகளை கவனமாக அவதானிப்பவர்களுக்கு தெரியும்.தமிழக அரசின் பரிந்துரையின் பிறகும் எழுவர் விடுதலை தொடர்பாக தனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்று ராகுல் காந்தியே கூறிய பிறகும் பிஜேபி அரசு அவர்களை விடுதலை செய்யாது இழுத்தடிப்பதில் இருந்து அதை புரிந்து கொள்ளலாம். 

 ஈழ‍தமிழருக்கு எதிரான  அரசியல் கொள்கை  என்பது இந்திய அரசின் கட்சிகளுக்கு அப்பால் இருந்த பொதுவான இந்திய வெளியுறவுக் கொள்ளை.  1991  ல் நடந்த ராஜீவ் கொலை  ஈழத்தமிழர் போராட்டடதை அழிப்பதை நியாயபடுத்த அவர்களுக்கு கிடைத்த மாபெரும் வாய்ப்பு. நாமே கொடுத்த அந்த வாய்ப்பை அவர்கள் திறமையாக பயன்படுத்தினார்கள் என்பதே உண்மை. 

10 hours ago, Eppothum Thamizhan said:

நெடுக்ஸ் இங்குதான் நீங்கள் பிழையாக விளங்கிக்கொண்டிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். ஆபரேஷன் லிபேரேஷன் நடவடிக்கை இலங்கை அரசால் தமிழர்களை (புலிகளை) அழிக்க முன்னெடுக்கப்பட்டது. அதைசாட்டாக வைத்து உதவுவதுபோல இந்தியா உள்ளே வந்தது. ஆனால் முள்ளிவாய்க்கால் சிறிலங்கா , இந்தியா மற்றும் பல நாடுகளின் தயவுடன்தான் நடந்தேறியது. இதை முன்னின்று நடத்தியதே சோனியா தலைமையிலான இந்தியாதான். அப்படியிருக்க இருவிடயங்களையும் ஒப்பிடுவது பொருந்தாது. ஒருவேளை கருணாநிதி தலைமையிலான திமுகவின் 39 பாராளுமன்ற உறுப்பினர்களும் ராஜினாமா செய்திருந்தால் சோனியா ஆட்சி கலைந்து பிஜேபி வருவதற்கான சாத்தியப்பாடுகள் இருந்திருக்கும். எப்படியிருப்பினும் புலிகள் எவ்வாறாவது அழிக்கப்பட்டிருப்பார்கள். ஆனால் பொதுசனத்தின் சாவையாவது தடுத்து நிறுத்தியிருக்கலாம்!!

 

Edited by tulpen

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, tulpen said:

முள்ளிவாய்கால் காலத்தில் எம்.ஜி. ஆர் இருந்திருந்தால் முன்பு செய்த உதவிகள் நன்மைகள் எல்லாம் நன்றி மறக்கபட்டு இன்று மாபெரும் துரோகிபோல்  சித்தரிக்கபட்டு திட்டி தீர்த்திருக்கப்பட்டிருப்பார். கருணாநிதி தப்பி இருப்பார்.

MGR  இருந்து இருந்தால் முள்ளிவாய்க்கால் மட்டும் யுத்தம் போகுமட்டும் பார்த்துக்கொண்டு இருக்க மாட்டார் .அவரின் தமிழ் உணர்வுக்கு பல உதாரணம் சொல்லலாம் .கருணாநிதி தமிழ்நாட்டு தமிழர்களின் ஆதரவை இழக்க கூடாது எனும் பயத்தினால் மட்டுமே எங்களுக்கு உதவுவது போல் நடித்தவர் பெரும் ஆரவாரத்துடன்  அவர் தத்தெடுத்த ஈழத்து அகதி சிறுவன் இப்ப எங்கிருக்கிறார் என்று தெரியுமா ?

எப்படி ஒரு மனிதன் வாழக்கூடாது என்பதுக்கு தெலுங்கு கருணாநிதி சாட்சி .

  1.  2009  ல் நடந்த பாராளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து காங்கிரசிலிருந்து பேச வந்து போகும் பிரணாப் முகர்ஜி போன்றவர்களை கூட   ஈழப்போர் நிறுத்தம் குறித்துதான் பேச வந்ததாக கூட்டு சேர்ந்து நாடகமாடியது
  2.  ஈழப்படுகொலைக்கு எதிரான போராட்டங்களை இரும்புக்கரம் கொண்டு தடுக்கும் வகையில் சுவரொட்டி அச்சிட தடை . அப்படியே அச்சிட்டு ஓட்ட சென்றாலும் சென்றவர்களை தூக்கி சிறையிலிடுதல்.
  3.  2009  ஜனவரியில் செங்கல்பட்டில்  சாகும் வரை உண்ணாவிரதம் இருந்த  சட்ட கல்லூரி மாணவர்களை கைது செய்ததோடு முத்துகுமார் மரணத்தினால் மாணவர்கள் மத்தியில் எழுர்ந்த பேரெழுச்சியை தடுக்க கல்வி கூடங்களுக்கு காலவரையற்ற விடுமுறையளித்தது .
  4. லிபியா, எகிப்த்து  என பிற நாடுகளின் பதிக்கப்படும் , கொல்லப்படும் செய்திகளை ஒளிபரப்பவும் ,தன் ஏடுகளில் படமாகவும்  போடும் தன் ஊடகம்  தமிழின படுகொலைகளைப்பற்றி  சிறிதும் கண்டுகொள்ளாமல் ஊடக இருட்டடிப்பு செய்தும் இன்றும் ஈழப்படுகொலைப்பற்றியே விபரம் தெரியாத மக்களாக தமிழர்கள் இருக்க காரணமாயிருப்பது
  5. தமிழினத்தை காங்கிரஸ் அழிக்கிறது அதனுடன் கூட்டு சேர்த்ததால் நீண்ட  கால பழி வரும், நாங்கள் உங்களுடன் இருக்குறோம் கவலைபடாதிர்கள் என ராமதாஸ் , திருமா, வீரமணி உள்பட பலர் காதுகிழிய சொல்லியும் அதை சிறிதும் கண்டுகொள்ளாமல் இவர்களுக்கெல்லாம் விபரம் பத்தாதாது போல் நினைத்து, நீங்கள் பெரிதாக நினைக்கும் ஈழ விஷயத்தை என் சாணக்கிய புத்தியால் ஒன்றும் இல்லாமல் செய்கிறேன் பார் என திட்டமிட்டு,  திரும்ப திரும்ப சீமான் போன்றவர்களை சிறை தள்ளியதோடு இனத்திற்காக வெகுண்டெழுந்து உண்ணா விரதமிருந்து தமிழ் இனத்திற்கே தனியொரு தலைவனாய் உருவெடுத்த திருமாவையும் இரண்டு சிட் கொடுத்து ..இன்று தன்னைபற்றியே குறை பேசாத நபராக மாற்றியது .
  6. இனி என்ன செய்ய போகிறோம் என்ற  குறுவட்டை பார்த்த எந்த ஒரு நபரும் ஏன்? காங்கிரஸ்காரரே கூட தன் கட்சிக்கு ஒட்டு போட மாட்டார் .அப்படிப்பட்ட ஈழ படுகொலையை எடுத்து சொல்லும் குறுவட்டை எங்கும் பரப்பவிடாமல் பலரை சிறை அனுப்பியதோடு ,கலைஞர் ஒரு தமிழின கொலைஞர் என்ற குறுவட்டை தயாரித்த நபரையும் சிறைதள்ளியது.
  7. ஈழபிரச்சனையில் ஊர் ஊராக சென்று கருணாநிதி , காங்கிரஸ்க்கு எதிராக பிரசாரம் செய்த ஒரே ஒரு காரணத்திற்காக இயக்குனர் பாரதிராஜா அலுவலகத்தை முரட்டுத்தனமாக தாக்கி  தன்னை எதிர்ப்பவர் யாராகயிருந்தாலும் அவர்களுக்கு இந்த கதிதான் என பயமுறுத்தியும். வைக்கோ உள்ளிட்ட பல தலைவர்கள் கூடி கண்டன பொதுகூட்டம் நடத்தியும் குற்றவாளிகளை உடனே கண்டுபிடித்து தண்டிக்காதது. அத்தோடு திரைத்துறையினர் தனக்கு சாதகமாக  நடப்பவர்களை  உக்குவித்தும் எதிராக நடப்பவர்களுக்கு எல்லாவிதமான நெருக்கடிகளையும் தொடர்ந்துகொடுத்துவருவது  அல்லது கூடி கண்டன எதிர்த்தவர்களையே தன்வசப்டுத்தி தனக்காக பேச வைப்பது 

    இனத்திற்கு ஆதரவான போராட்டங்களை ஓடிக்கி கொண்டே .. காங்கிரசோடு கூட்டணி வேண்டம், கூட்டணி வேண்டம் என தலைபாடக அடித்து கூறிய வீரமணி போன்றவர்கள் வாயிலாகவே.. நாம் கருணாநிதியை வெற்றி பெற வைத்தால் தான் இந்தளவுக்காவது போராட முடியும் . ஜெயலலிதா வந்துவிட்டால் வாயை துறந்து இனத்திற்கு ஆதரவாக பேசமுடியாது எனும் ஒரு கூற்றை.. மீண்டும் மீண்டும் தனக்காக பிறரை பேச வைத்து நாடகமாடியது . ஏதோ மீண்டும் ஒரு முறை அதே 2008  .  அதேபுலிகள் கையில் ஈழம் .. அதே சோனியா  அதேஇந்தியபடை உதவி .. அந்த நேரம் பார்த்து இங்கு ஜெயலலிதா ஆட்சி இருக்க போவது போலவும், இவர் போலவே அவரும் துரோகம் செய்வார் போலவும், அந்த நேரம் போராடுவர்களை இவரைவிட அதிகமாக முடக்குவார் போலவும் கூறும் இவரின் கூற்றையும் சிலர் நம்பினார்களே

    நம்ப வைத்தார். இப்படி பேசினால் எப்படி முடியும் என சாணக்கியனுக்கு தெரியும்.

  8. கடலில் என்னை தூக்கி போட்டால் நன் கட்டுமரமாக உதவுவேன் வசனம் பேசிய கருணாநிதி மீனவர்கள் சிங்களர்களால் தாக்கப்பட்டும் கொல்லப்படும் நிகழ்வுக்கு .. நம் மீனவர்கள் பேராசைகாரர்கள் அதனால் தான் எல்லை தாண்டி செல்கிறார்கள் என்று பேட்டி கொடுத்தது .
  9.  நாம் தமிழர் இயக்கத்தினரை சம்மந்தமில்லாமல் ஈ.வி.கே.ஸ்.இவன்கோவன் வீட்டில் பெட்ரோல் குண்டு விசியதாக சிறை தள்ளியும் .. அதே இயக்கத்தை சேர்ந்த ஈழ படுகொலையின் போது செத்து கொண்டிருந்த மக்களுக்கு இரத்தபொட்டலம் கடத்தியதாக அதே இயக்கத்தை சேர்ந்த (கடத்தினால் என்ன ?) முத்துகுமார் மீது  வழக்கு பதிவு செய்து புழல் சிறையிலடைத்து .அதே இயக்கத்திலிருந்த என்னை ஜெயராம் வழக்கில் சிக்க வைத்து 16 நாள் சிறையிலடைத்து .. ஆம் 25  / 01 / 2010   தேதியே நடிகர் ஜெயராம் தமிழச்சியை கேவலமாக பேசியது குமுதம் நாளிதழில் வெழிவந்தது அதனை தொடர்ந்து  இதற்க்கு மனிப்பு கேட்பிர்களா என்று அவரிடம் கேட்க  அவர் அது தவறில்லை  என்று கூறியிருக்கிறார்  இந்நிலையில்  நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கசென்றது 5 / 2  /2010 .   ஆக இப்படி கேவலமாக தமிழச்சியை பேசிய ஒரு நடிகரை 10  நாளாகியும் கண்டிக்காதது விட்டு   விட்டது யார் தவறு?   பின் எங்களை கைது செய்ததோடு சட்டம் அதன் கடமையை  செய்யும் என்றதோடு எங்களுக்கு கண்டனம் வேறு
  10. தன் சிங்கள இனத்திற்கு விசுவாசமாக தமிழினத்தை கொன்று மீதியுள்ளோரையும் முள் வேலி முகாமில் அடைத்த ராஜபட்செவிடமே தமிழ் இன தலைமகனின் மகளான கனிமொழியை அனுப்பி, கைகுலுக்கி பரிசு பெற்று

    வந்த பாக்கிய முகாமில் அடைத்த ராஜபட்செவிடமே  தியை பெற்ற தந்தை.. அதே மகளை வைத்தே பின் அதே ராஜபக்சேவுக்கு எதிராக மீனவ நண்பன் போராட்டம்

  11. செங்கல்பட்டு சிறப்பு முகாம் என்ற பெயரில் காரணமின்றி வருடக்கணக்கில் அடைத்து வைத்துள்ளவர்களின் கோரிக்கையான ஒன்று விடுவி அல்லது தண்டனை கொடு என்ற தொடர் போராட்டங்களை ஒடுக்க தமிழரல்லாத ஒரு பிகாரி அதிகாரியை போட்டு உயிர்போக அடித்த பின் வாரி திருச்சியலடைந்த்து அகதிமுகாம்களில் உள்ளவர்களையும் புலி ஆதரவு கருணாநிதி ஆதரவு என பிரித்து நடந்தும்    சூழ்ச்சி       பொய்வழக்குகள் போடுவது.

  12.  

    முத்துகுமார்  இறந்த போது தான் உடலை எடுத்து செல்ல விடவில்லை .. கட்சி சார்பற்று இயக்குனர் புகழேந்தி தங்கராஜ் ஏற்பாடு செய்த முத்துகுமார் முதலாம் அன்டு நினைவு துண்  வைக்கும் நிகழ்ச்சிக்கு அனுமதி மறுத்து நீதிமன்றம் அலையவிட்டது

    புலிகள் ஒட்டு மொத்தமாக ஒளிந்துவிட்டோம் என ராஜபக்சேவே கூறிய பின்னும்  தடையை நீக்க, கையெழுத்து இயக்கம் நடத்த அனுமதி கேட்டால்அதற்க்கு அனுமதி மறுத்து நிதிமன்றம் அலையவிட்டது. இது போன்ற இனம் சார்ந்த பல நிகழ்வுகள் நீதிமன்றத்திற்கு சென்றே அனுமதிபெற்று நடத்தினாலும் அடுத்த அடுத்த நிகழ்ச்சிக்கு அனுமதி  மறுப்பதை அரச வாடிக்கையாக்கியது

  13. மீனவர்களில் ஒருவன் தாக்கப்பட்டால் சிங்கள மாணவர்கள் பாதுகாப்புடன் இங்கு நடமாட முடியாது என கூறிய சீமானை கைது செய்து 5  மாதம் சிறையில் அடைத்த கருணாநிதி ,மீனவனை  கொன்ற சிங்களனை கைது செய்து தண்டிக்க வேண்டுமென   இதுவரை ஒரு வார்த்தை கூறாதது

  14.  இனத்திற்காக போரடுபவர்களிடம் பணம் கிடையாது அந்தநிலையிலும் பிச்சை எடுத்து போராட்டத்திற்கு அழைப்பு விடுத்து  ஒட்டப்படும் சுவரொட்டிகளையும் பதாகைகளையும் காவல்துறையை விட்டு தெரு தெருவாக சுற்றி கிழிக்க வைப்பது அல்லது மொத்தமாக கைப்பற்றி காவல்நிலையத்தில் போடுவது இன்னும் ஒருபடி மேலே போய் தடை செய்த இயக்கத்தை பற்றி பேசினாலோ எழுதினாலோ கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என 26 / 11 / 2009  தேதி ஒரு பக்க விளம்பரம் போல அவ்வபோது அரசு செலவிலேயே அச்சுறுத்துவது 7  , 8  , பிரிவுகளில் வழக்கு பதிவு செய்வது.

  15.  

    தமிழ்  மொழி பேசிய ஒரே காரணத்திற்காக, முள்வேளிக்குள்ளே ஆடு மாடுகளாய்  அடைத்து வைத்திருந்தவர்களை திறந்துவிட்டாவது நடத்தினால் பரவாயில்லை என்ற எந்த கூச்ச சுபாவம் இல்லாமல் இனத்துரோக அலை பரவுவதை தடுக்க ஓடிசியா மைதானத்தில் செம்மொழி மாநாடு

    அதனை தொடர்ந்து 1000 ம் ஆண்டு விழா இராஜ இராஜ சோழனுக்கு. இதில் ஒவ்வொன்றிலும் எதாவது சித்து விளையாட்டு போல கோடிக்கணக்கில் அரசு பணத்தை செலவு செய்ததே ஆகா , அப்படி, இப்படி என மக்களே வாய்விட்டு பேச வைக்கும்  உள்நோக்கம்  இதில் யார் யாரையெல்லாம் எந்த எந்த நிகழ்ச்சிவாயிலாக பங்கெடுக்க வைக்கலாமென யோசித்து,  செம்மொழியா……. தமிழ்மொழியா ..என ஆஸ்கர்  பரிசு பெற்றவரையே கூட துரோகம் மறைக்க இசையமைக்க வைத்த செயல். அரசு நிகழ்ச்சி வாயிலாகவே   வந்தஅனைவரும்    தன் பக்கம்தான் இருக்கிறார்கள் என்ற மாயையை வெழிக்காட்டவும் வராதவர்களை தனியே பிறித்தது… பிறித்துமேயத்தான் .

    செம்மொழிக்கு எதிராக

    எட்டப்பனை கட்டபொம்மனாக்க செம்மொழி மாநாடா ? என சுவரொட்டி ஒட்டியவர்கள் பேசியவர்களுக்கு கவனிப்பு

    25  ஒக்கனேக்கல் கர்நாடகாவை சேர்ந்தது என எடியுரப்பாவை எல்லை தாண்டி உள்ளே வந்து  போராட அனுமதித்து .கேரளா அமராவதி குறுக்கே அணைகட்டுவதை கண்டித்து போராடிய வைக்கோவை கேரளா எல்லையே நுழைய விடாமல்  தடுத்தது கேரளா காவல்துறையை மகிழ்வித்தது .

  16.  மத்திய அரசே அனுமதித்தும்  இங்கு வந்து சேர்ந்த அன்னை பார்வதி அம்மாவை தமிழ்நாட்டில் இருந்து சிகிச்சை பெற அனுமதிக்காமல் திருப்பி அனுப்பியதற்கு வைக்கோ போன்றவர்கள் பெரும்கூட்டமாக விமான நிலையம் சென்றதுதான் காரணம் என கூறியது. அதுவல்ல  காரணம் . தன்னை பற்றி எதாவது பார்வதியம்மாள் தவறாக கூறிவிடுவரோ  இல்லை உடல் நிலை தேறிய பிறகு கூறிவிடுவரோ .. இலங்கைக்கே திருப்பி அனுப்பிவிட்டால் துரோகத்தோடு துரோகமாக   ஒன்று கூடும் என்ற உள் எண்ணம் .

    27 .https://thamukablog.wordpress.com/2017/04/17/தெலுங்கர்-கருணாநிதியின்/ தமிழ் இனத்தையே கொன்று முள்வேலிக்குள் அடைத்து வைத்தவனும், பல கோவில்களைக்கூட இடித்த  இராசபக்சே அவனது அமைச்சர்கள்    எந்த வித பயமும் இன்றி தமிழக  கோவில் குளங்களுக்கு வருவது எதற்கு ? தமிழினத்தை கொன்றதை தமிழ்நாட்டு தமிழர்கள் ஏற்று கொண்டுள்ளார்கள் என   உலகத்தாரை நம்ப வைத்து.. இனப்படுகொலை விசாரணை யிலிருந்து தப்பிக்க, அடிக்கடி தமிழகம் வந்து செல்வதை மட்டுமாவது தடுக்கலாம். அதைவிட்டு இன்னும் தமிழ் உணவாளர்கள் சுடுசுரனையுடன் தான் இருக்கிறார்ககளா? என்று அவ்வபோது பரிசோதித்து கொள்வதற்காவது அவர்களின் வருகை பயன் படட்டுமே

    வெறும் 2008 முதல்  ,2009,முதல் 2010 என வெறும் இரண்டே  ஆண்டுகளில்  வெளியில் தெரியும்படி  நடந்தது  இந்த 27  துரோக செயல்கள் . தன்னை தமிழன் என்று சொல்லி   நம்மை ஏமாற்றிய  தெலுங்கர் கருணாநிதி   2008 ஆம் ஆண்டுககு  முன் செய்த துரோகத்தின் எண்ணிக்கை என்ன ?  தெரியாமல் இருக்கும் துரோகங்களின் எண்ணிக்கை என்ன ?

  17.    1 /2 நாள் உண்ணாவிரதம் ..அதனை தொடர்ந்து போர் நின்று விட்டது என அறிவித்து, பின் தானே முடித்து கொண்ட நிலையில் போர் இன்னும் நிற்கவில்லையே என நிருபர்கள் கேட்ட கேள்விக்கு ..  மழை நின்றும் துவானம் விடவில்லை என பேசியது .

  18.  29 / 01 / 2009  ல்  முத்துகுமார் தீக்குளித்து இறந்து போனதும் அந்த உடலை கொளத்தூரிலிருந்து புரசைவாக்க பிரதான சாலை வழியாக கூட எடுத்து  செல்ல  அனுமதிக்காதது  முத்துகுமாரின் கடைசி ஆசைப்படி என்  உடலை கருவியாக வைத்து போராடுங்கள் என்ற கூற்றுப்படி தமிழகமெங்கும் எடுத்து செல்ல வேண்டும். அப்படி போராடுங்கள் செய்தால் நம் துரோகம் அதிகமாக வெளிப்பட்டுவிடும் என பயந்து அதற்க்கு அனுமதி மறுத்தது .

  19. முத்துகுமார் செய்தி காட்டு தீயாய் தமிழ் உணர்வாளர்களை வாட்டி கொண்டிருக்கும் நிலையிலேயே .. தன் மகன் அழகிரியின் பிறந்த நாளை பிரியாணி பொட்டலங்களுடன் தடபுடலாய்  கொண்டாட அனுமதித்தது .

  20. முத்துக்குமாரை தொடர்ந்து அதே 2009 பிப்ரவரி மாதத்தில் இனத்திற்க்காக தீக்குளித்து இறந்த சிலரை ,குடும்ப சண்டையில் இறந்துவிட்டதாக  பொய் செய்திகளை   பரப்பி அவர்களின் தியாகத்தை கேவலப்படுத்தியது .

நன்றி அதியமான் .

இதுக்கு மேலயும் கருணாநிதி நல்லவர் வல்லவர் என்று கம்பு சுத்த வருபவர்கள் வந்து கருத்துக்களை வையுங்கள் பார்க்கலாம் !.........................

Edited by பெருமாள்

1 hour ago, பெருமாள் said:

 

பெருமாள் விவாத்தில் சொல்லபட்ட கருத்துகளை ஒருமுறை வாசித்து பாருங்கள். கருணாநிதி நல்லவரா? கெட்டவரா? என்பதல்ல இங்கு விவாதப்பொருள். 

 கருணாநிதி மட்டுமல்ல  இந்தியா இலங்கையில் உள்ள அரசியில் வாதிகள் யாரும் நல்லவர் என்று யாரும் கம்பு சுத்த முடியாது. எல்லோரும் சுயலநல வாதிகளே. சுயநல வாதிகள் எங்கும் உள்ளார்கள்.  எமக்கு அதுவல்ல பிரச்சனை. நாம் இங்கு விவாதிப்பது அது பற்றி அல்ல. 

எமது போராட்ட தோல்விக்கு கருணாநிதி மட்டும் தான் காரணம் என்று நெடுக்கர் போட்ட மீம்ஸ் பற்றி  மட்டும் தான் இங்கு விவாதிக்கிறோம். 

உங்கள் அதியமான் கருணாநிதி மீது வைத்து குற்றச்சாட்டு போல் தமிழகத்தில் வாழும்  எல்லா அரசியல்வாதி மேலும்    ஆயிரம் குற்றச்சாட்டுக்களை ஆளாளுக்கு ஒவ்வொருவரின் அரசியல் எதிரிகளால் சுமத்த முடியும். இதை எழுதியவருக்கெதிராகவும் அவரின் எதிரியால் இப்படி ஆயிரம் குற்றங்களை சுமத்த முடியும். என்ன அதியமான் யார் என்று தெரியாத‍தால் அவர் செய்த குற்றங்களை பற்றி எமக்கும் தெரியாது. அவ்வளவு தான். ஆனால் அவை அத்தனையும் பற்றி நாம் சிந்திக்கவோ அவற்றின் உண்மை தன்மை பற்றி விவாதிக்கவோ எம்மால்  முடியாது.  எமது போராட்டத்திற்கு எதிராக எமக்குள் நடந்த ஆயிரம் குற்றங்களை எமக்கு தெரிந்தும் அதை பற்றி பேச விருப்பம் இல்லாமல் அடுத்தவன் மீது குற்றம் சாட்டுவது எமது இயலாமையை மறைக்க என்பது தான் நான் சொல்லும் குற்றச்சாட்டு.  போராட்டத்தை சாட்டி மக்களை கடனாளியாக்கி மில்லியன் கணக்கான பணத்தை சூறைய  திருட்டு கும்பல்  பற்றி கூறும் போதுஅந்த திருட்டு பணம் தமிழனிடம் தானே இருக்கிறது என்ற திருட்டு கும்பலுக்கு வக்காலத்து வாங்குவோர் அக்குற்றங்களை மறைக்க கருணாநிதி என்ற அரசியல் வாதியை சாட்டி ஒழிவது பற்றி தான் விவாதிக்கிறோம். 

மீண்டும் கூறுகிறேன் 1991 ராஜீவ் கொலையில் பின்னர் முதலமைச்சராக யார்  இருந்தாலும்  இந்திய அரசை எதிர்த்து அவர்களால் ஈழ மக்களுக்கு எதையும் வெட்டிப் புடுங்க முடியாது.  அது தான் நிஜம். 

 

Edited by tulpen

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, tulpen said:

மீண்டும் கூறுகிறேன் 1991 ராஜீவ் கொலையில் பின்னர் முதலமைச்சராக யார்  இருந்தாலும்  இந்திய அரசை எதிர்த்து அவர்களால் ஈழ மக்களுக்கு எதையும் வெட்டிப் புடுங்க முடியாது.  அது தான் நிஜம். 

 

ராஜீவ் கொலைக்குப் பின்னர் தான் புலிகள் மிகப்பெரிய இராணுவ வெற்றிகளை பதிவுசெய்தனர்.

ராஜீவ் கொலைக்கு பின்னர் தமிழகத்தில் ஆட்சியில் இருந்தோர்.. ஒருவர் பழைய சுயநல அரசியல்வாதி கருணாநிதி.. மற்றவர் தானும் தன் ஊழல்களும் என்றிருந்த ஜெயலலிதா. இவர்கள் இருவரிலும் கருணாநிதியே.. ஈழத்தமிழரை வைச்சு சுயநல அரசியலை முன்னெடுத்ததில் அதிக பங்குள்ளவர். ஜெயலலிதாவுக்கு ஈழத்தவர் பற்றி அக்கறை ஏதுமே இல்லை. அவர் கருணாநிதிக்கு எதிர்ப்பு அரசியல் செய்தாரே தவிர.. கருணாநிதியை விட மோசமாக ஈழத்தவர்களை எதிர்ப்பது எப்படி என்ற பார்பர்ணிய சித்தாந்தத்தில் இருந்தாரே தவிர ராஜீவ் படுகொலைக்கு அப்பால் சென்று தமிழகத்தில் ஈழ உணர்வூட்டலை செய்ய விளையவில்லை. அவருக்கு போட்டியா கருணாநிதியும் ஈழத்தவர் அரசியலை செய்யாமல்.. நல்ல பிள்ளைக்கு நடித்துக் கொண்டார்.

மேலும் இருவரும்..அவரவர் செய்த ஊழல்களும்.. அவர்களின் வாரிசுகள் செய்த ஊழல்களும் செய்த தொந்தரவில் இருந்து வெளிவரவே அதிக காலத்தை செலவிட வேண்டி வந்திருந்தது.

ஆனாலும்.. 2009 மே க்குப் பின் நாம் தமிழர் கட்சியின் அழுத்தங்களை அடுத்து ஜெயலலிதா அம்மையார் இனப்படுகொலை மற்றும்.. ஐநா மத்தியத்தத்தோடு பொதுவாக்கெடுப்பை வடக்குக்கிழக்கில் நடத்த கோரி இருந்தார். அதற்கான பிரேரணையையும் தமிழக சட்டமன்றில் நிறைவேற்றி இருக்கிறார். 

ஆனால்.. மத்திய அரசியல்.. வாஜ்பாய் ஆட்சியிலும் சரி.. நரசிம்ராவ் ஆட்சியிலும் சரி சோனியாவின் தனிப்பட்ட வெறுப்பை ஈழமண்ணில் பதிவு செய்ய முடியாமல் போனது. வாஜ்பேய் ஆட்சியில்.. ஜார்ஜ் பெர்னாடஸ் அவர்கள்.. பாதுகாப்பு மந்திரியாக இருந்த வேளையில் தான் புலிகள் இயக்கம் பாரிய இராணுவ தளபாட வளர்ச்சி கண்டது. ஹிந்தியா நேரடியாக உதவாவிட்டாலும்.. விடுதலைப்புலிகள் தம்மை பலப்படுத்துவதை ஹிந்தியா அப்போது பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை.

அதன் பயனாக... விடுதலைப்புலிகள்.. ஓயாத அலைகள் மூலம்.. பெரும் இராணுவ வெற்றிகளையும் முன் எப்போதும் கண்டிராத அளவுக்கு சிங்கள இராணுவ ஆக்கிரமிப்பற்ற நில விடுவிப்புக்களையும் சாத்தியமாக்கினர். 

ஆனால்.. சோனியாவின் எடுபிடிகளாக மன்மோகன் சிங் மத்தியிலும்.. கருணாநிதி தமிழகத்திலும் வந்த பின் தான் சோனியா தன் தனிப்பட்ட காழ்புணர்ச்சி நிமித்தம் ஈழத்தமிழர்களையும் விடுதலைப்புலிகளையும் பழிவாங்கினார். அதன் ஒரு விளைவே முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை. சோனியாவின் அந்த தேவையோடு.. சிங்களம் சர்வதேச அரங்கில் இருந்த பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற மேற்குலக நிலைப்பாடுகளையும் ஒரு நேர்கோட்டில் சமப்படுத்தி செய்த இனப்படுகொலை தான்.. முள்ளிவாய்க்கால் படுகொலை.

இதில் கருணாநிதியின் துரோகம் மிக முக்கியமான ஒன்று. புறக்கணிக்கப்பட முடியாத ஒன்று. 

 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, tulpen said:

கருணாநிதி மட்டுமல்ல  இந்தியா இலங்கையில் உள்ள அரசியில் வாதிகள் யாரும் நல்லவர் என்று யாரும் கம்பு சுத்த முடியாது. எல்லோரும் சுயலநல வாதிகளே. சுயநல வாதிகள் எங்கும் உள்ளார்கள்.  எமக்கு அதுவல்ல பிரச்சனை. நாம் இங்கு விவாதிப்பது அது பற்றி அல்ல. 

எமது போராட்ட தோல்விக்கு கருணாநிதி மட்டும் தான் காரணம் என்று நெடுக்கர் போட்ட மீம்ஸ் பற்றி  மட்டும் தான் இங்கு விவாதிக்கிறோம். 

நீங்கள்  நித்திரையில் இருப்பது போல் நடிக்குகிறீர்கள் .எழுப்ப முடியாது .

ஆனால் உங்களுக்கு பிடிக்கவில்லை என்பதுக்காக  கருணாநிதியின் தமிழருக்கு எதிரான துரோகங்கள் ஓடி ஒளிந்து விடாது மற்றவர்களை  விட கருணாநிதி தமிழ் மீது பற்று போல் நடித்த அரசியல் வியாபாரி அதை அறியாது தெலுங்கு வடுகனை தமிழின காவலர் என்று நினைத்து ஏமாந்தது தமிழ் சனம்  .

ஆனால் அம்மு ஈழத்தமிழர்கள் மத்தியில் பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானமும் போர்க்குற்றம் இழைத்த மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்துக்கு எதிராகச் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று நிறைவேற்றப்பட்ட தீர்மானமும் எடுக்க முடிந்தது இதை  எப்படி அவர்களால் செய்ய முடிந்தது ?

உங்கள் கருணாநிதி கடிதம் எழுதிக்கொண்டு இருந்தவர் 

மேலும் ஒரு படி மேலே போய் போர்க்குற்றமிழைத்த இலங்கைப் படையினருக்குத் தமிழ்நாட்டு மண்ணில் பயிற்சி அளிக்கக்கூடாது என்று மனிசி பிடிவாதம் பிடித்து மத்திய அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுத்து, குன்னூரிலும் தாம்பரத்திலும் பயிற்சி பெற்ற இலங்கைப் படையினரைத் கலைக்க அவரால் முடிந்தபோது தமிழின காவலாளி என்று தன்னைத்தானே சொல்லிக்கொள்ளும் வடுகன் எங்கே போனவர் ? அதற்குப் பின்னர், இலங்கைப் படையினருக்கு தமிழ்நாட்டில் பயிற்சி அளிக்கப்படுவதையே முற்றாக இல்லாதொழித்தவர் ஜெயலலிதா அம்மா .

நாளைக்கு கனிமொழியோ சுடானிலோ   முதலமைச்சராய் வந்தால் தமிழ்நாட்டில்  மறுபடியும் சிங்கள ராணுவத்துக்கு பயிற்சி தொடருமா தொடராதா ?

இதே கனிமொழி ராஜபக்சேவுக்கு சென்னைக்கு கூப்பிட்டு  பெரும் விழா எடுத்தாலும் ஆச்சரியப்படுவதுக்கில்லை .

அன்று கருணாநிதி ஆட்சியில்  இல்லாவிட்டால்  ஈழத்தில் போர் வேறு விதமாக போயிருக்கும் .

முதலில் புலிகளை பலமிழக்க செய்து ஒரு வலிந்த தீர்வை கொடுப்பதுக்கு இடைவிடாத போர் என்றார்கள்  மக்கள் வன்னியில் 1வருடத்துக்கு மேல்  அங்குமிங்கும் அகதியாய் ஓடிக்கொண்டு இருக்குதுகள் அப்போது சொல்லப்பட்டது அதன் பின் முகமாலை புலிகளின் முன்னரங்கு தகர்ப்படும் பொழுது முடிவு தெரிய தொடங்கியது பாரிய அழிவுகள் என்று அப்போது   அதிகாரப் பகிர்வை புலிகளிடம் தரப்போவதில்லை புலிகளை அழித்துவிட்டுத்தான் அதிகாரத்தை தமிழ் மக்களிடம்  கொடுப்போம் என்று  ராஜபக்சேவினர் சொல்லியதாக திமுக முக்கியஸ்த்தர் சொல்லிவிட்டு அதன் பின் வடகிழக்கில் இருந்தும்  உலகத்தமிழர்களிடமிருந்தும்  சென்ற ஒரு போனுக்கும்  பதில் இல்லை .டெல்லிக்கு போரை நிறுத்தச்சொல்லி கடிதம் எழுதிக்கொண்டு இருந்தார் உங்கள் ஆள் .

Edited by பெருமாள்

6 minutes ago, பெருமாள் said:

நீங்கள்  நித்திரையில் இருப்பது போல் நடக்குகிறீர்கள் .எழுப்ப முடியாது .

ஆனால் உங்களுக்கு பிடிக்கவில்லை என்பதுக்காக  கருணாநிதியின் தமிழருக்கு எதிரான துரோகங்கள் ஓடி ஒளிந்து விடாது மற்றவர்களை  விட கருணாநிதி தமிழ் மீது பற்று போல் நடித்த அரசியல் வியாபாரி அதை அறியாது தெலுங்கு வடுகனை தமிழின காவலர் என்று நினைத்து ஏமாந்தது தமிழ் சனம்  .

 

பெருமாள் நீங்கள் தான் அப்படி நடிக்கிறீர்கள். நான் என்ன கூற வருகிறேன் என்று தெளிவாக கூறியும் மீண்டும்  ஒரே விடயத்திற்குள்ளையே நிற்கிறீகள்.  1986 லேயே  நம்பாத ஒருவரை 25 வருடம் கழித்து  2009 நம்பி ஏமாந்தோம் என்று கூறவது எவ்ளவு அபத்தமானது.  போலியானது. 

கருணாநிதி சுயநல வாதி என்பதும் அவர் தனது குடும்பத்தை கட்சிக்குள் வளர்க்கும் வாரிசு அரசியலில் தான் ஈடுபடுகிறார் என்பதும்  பல வருடங்கள் முன்பே தெரிந்த ஒன்று தான். அப்படியான ஒருவர் பதவியில் உள்ளார் என்றால் அவர் எமக்கு உதவமாட்டார் என்பது குழந்தைப்பிள்ளைக்கும் தெரியும்.  அதற்கெதிரான ராஜதந்திர நடவடிக்கைகளை  தகுந்த வேளையில் எடுத்து போராட்டத்தை நகர்த்தும் பொறுப்பு எங்களுடைது . அதை செய்யாமல் போரின் இறுதிவரை இருந்து விட்டு ஒரு நபரை ஒட்டு மொத்த தோல்விக்கும் ஒரு நபரை கைகாட்டுவது கோழைத்தனம்.  எமக்குள் இருந்த போராட்டத்தை சாட்டி மக்களின் பணத்தை கையாடியவர்கள் பற்றி கேட்டும்  அது பற்றி பேச நீங்கள்  பேசாமால்   இருப்பது ஏன்? போராட்டத்தை தொடங்கியது நாம். நடத்தியது நாம். தோல்விக்கு மட்டும் கருணாநிதி எப்படி காரணமாக இருக்க முடியும்.  நீங்கள் கூறிய அம்மு தான் பிரபாகரனை பிடித்து வந்து இந்தியாவில் தூக்கில் போட வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்றினார்.  

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nedukkalapoovan said:

ஜார்ஜ் பெர்னாடஸ் அவர்கள்.. பாதுகாப்பு மந்திரியாக இருந்த வேளையில் தான் புலிகள் இயக்கம் பாரிய இராணுவ தளபாட வளர்ச்சி கண்டது. ஹிந்தியா நேரடியாக உதவாவிட்டாலும்.. விடுதலைப்புலிகள் தம்மை பலப்படுத்துவதை ஹிந்தியா அப்போது பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை.

அதன் பயனாக... விடுதலைப்புலிகள்.. ஓயாத அலைகள் மூலம்.. பெரும் இராணுவ வெற்றிகளையும் முன் எப்போதும் கண்டிராத அளவுக்கு சிங்கள இராணுவ ஆக்கிரமிப்பற்ற நில விடுவிப்புக்களையும் சாத்தியமாக்கினர். 

மத்திய அரசில் பாதுகாப்பு அமைச்சின் ஆதரவு ஒன்றே எல்லாவற்றையும் தீர்மானித்தது.

42 minutes ago, tulpen said:

பெருமாள் நீங்கள் தான் அப்படி நடிக்கிறீர்கள். நான் என்ன கூற வருகிறேன் என்று தெளிவாக கூறியும் மீண்டும்  ஒரே விடயத்திற்குள்ளையே நிற்கிறீகள்.  1986 லேயே  நம்பாத ஒருவரை 25 வருடம் கழித்து  2009 நம்பி ஏமாந்தோம் என்று கூறவது எவ்ளவு அபத்தமானது.  போலியானது. 

கருணாநிதி சுயநல வாதி என்பதும் அவர் தனது குடும்பத்தை கட்சிக்குள் வளர்க்கும் வாரிசு அரசியலில் தான் ஈடுபடுகிறார் என்பதும்  பல வருடங்கள் முன்பே தெரிந்த ஒன்று தான். அப்படியான ஒருவர் பதவியில் உள்ளார் என்றால் அவர் எமக்கு உதவமாட்டார் என்பது குழந்தைப்பிள்ளைக்கும் தெரியும். 

குழந்தைப்பிள்ளைகளுக்கு கூட தெரியக்கூடியதை அறியாமல் இருக்கும் சிலர் யாழ் களத்தில் இருக்கிறார்கள் - ஆதாரம் இதோ:

1 hour ago, பெருமாள் said:

 

டெல்லிக்கு போரை நிறுத்தச்சொல்லி கடிதம் எழுதிக்கொண்டு இருந்தார் உங்கள் ஆள் .

😄

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, கற்பகதரு said:

குழந்தைப்பிள்ளைகளுக்கு கூட தெரியக்கூடியதை அறியாமல் இருக்கும் சிலர் யாழ் களத்தில் இருக்கிறார்கள் - ஆதாரம் இதோ:

சும்மா எதையாவது எழுதணும் என்பதுக்கு எழுதாதிங்க .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, கற்பகதரு said:

மத்திய அரசில் பாதுகாப்பு அமைச்சின் ஆதரவு ஒன்றே எல்லாவற்றையும் தீர்மானித்தது.

மட்டுமல்ல.. குறிப்பாக.. வை.கோ போன்ற தமிழக அரசியல்வாதிகள் ஜோர்ஜ் பெர்னான்டஸ் போன்றவர்களுக்கு கள நிலைமையை விளக்கிக் கொண்டும் இருந்தார்கள்.  தமிழக முதல்வர்களாக இருந்தவர்களின் பார்வையில்.. புலிகளின் செயற்பாடுகள் கண்டும் காணாமலும் போலுமால் போய் இருந்தன. காரணம்.. அவர்களுக்கு தமது ஊழலை சமாளிக்கவே நேரம் கிடைக்கவில்லை. அதனை சரி செய்ய மத்தியை தாஜா பண்ணுவதே குறியாய் இருந்தனர். 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nedukkalapoovan said:

மட்டுமல்ல.. குறிப்பாக.. வை.கோ போன்ற தமிழக அரசியல்வாதிகள் ஜோர்ஜ் பெர்னான்டஸ் போன்றவர்களுக்கு கள நிலைமையை விளக்கிக் கொண்டும் இருந்தார்கள். 

வை.கோ போன்ற தமிழக அரசியல்வாதிகள் ஜோர்ஜ் பெர்னான்டசுடன் இணைந்து செயற்பட்டார்கள் என்று அறிந்திருக்கிறேன். ஆனால் வை.கோ போன்ற தமிழக அரசியல்வாதிகள் விளக்கித்தான்  ஜோர்ஜ் பெர்னான்டஸ் களநிலையை அறிய வேண்டிய நிலையில் இருந்தார் என்பது சாத்தியக் குறைவானதாக தெரிகிறது. இதற்கு காரணம் வை.கோ போன்றே ஜோர்ஜ் பெர்னான்டசும் தனிப்பட்ட முறையில் இலங்கைத் தமிழர் மீது இரக்கம் கொண்டவராக இருந்ததுடன், மத்திய அரசின் பாதுகாப்பு அமைச்சர் என்ற அளவில் செய்மதிகள் முதல் அனைத்து உளவுப்பிரிவுகளினதும் சேவைகளை பெற்றுக் கொண்டவராக இருந்தார். ஆகவே அவர் தானாகவே களநிலை பற்றி போதிய அறிவை பெற்றுக் கொண்டிருந்தார் - தமிழகத்தில் அதற்கு தங்கி இருக்கவில்லை என்றே தெரிகிறது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

●2009 மே இறுதி யுத்தத்தில் சரணடைந்த விடுதலைப்புலிகளுக்கு என்ன நடந்தது
●கருணாநிதியின் தமிழீழ துரோகம் விபரிக்கிறார் அப்போதைய இலங்கை பாராளுமன்ற உறுப்பினரும் விடுதலைப்புலிகளின் சரணடைவு தொடர்பாக இலங்கை இந்திய அரசுகளுடனும் விடுதலைப்புலிகளுடனும் தொடர்பில் இருந்தவர் சந்திரகாந்தன்
●தமிழீழ அரசியல் துறை பொறுப்பாளர் நடேசன் அண்ணா சமாதான செயலக பணிப்பாளர் புலித்தேவன் அண்ணா உட்ப்பட சரணடைந்த போராளிகளை அமர வைத்து தேனீர் அருந்த கொடுத்து சுட்டு கொண்டு இருக்கிரார்கள் அம்பலப்படுத்தினார் சந்திர நேரு அனைவரும் காணொளி பாக்கவும்
●இந்திய ரோவின் தலைமையில் பல நாடுகள் சேர்ந்து அழிக்கபட்ட ஈழவிடுதலை
 

மீள்பதிவு.

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.