Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

spacer.png

மிழினப் படுகொலையின் பதினோராம் ஆண்டு நினைவேந்தல் இன்று!

ஆம்! ஒன்றரை இலட்சம் தமிழர்கள் துடிக்கத் துடிக்கக் கொல்லப்பட்டதை இந்த உலகம் வேடிக்கை பார்த்துப் பதினோரு ஆண்டுகள் ஆகி விட்டன!

ஒரே இரவில் நாற்பதாயிரம் பேர் கொன்று குவிக்கப்பட்டதை இந்த உலகம் வெறும் செய்தியாகக் கடந்து சென்று பதினோரு ஆண்டுகள் முடிந்து விட்டன!

கொசுக்களும் ஈக்களும் கூட ஒரே நாளில் இத்தனை ஆயிரம் எண்ணிக்கையில் கொல்லப்பட்டிருக்குமா எனத் தெரியவில்லை. ஆனால் மனிதர்களான நாம் கொல்லப்பட்டோம்! ஆயினும் இன்னும் நமக்கு நீதி வழங்க இந்த உலகம் ஒரு தப்படி கூட இதுவரை எடுத்து வைக்கவில்லை.

இந்தப் பதினோரு ஆண்டுகளாக நாமும் என்னென்னவோ செய்து கொண்டுதான் இருக்கிறோம். நினைவேந்தலுக்கு விளக்கேற்றுவதிலிருந்து ஐ.நா., அவையில் உரையாற்றுவது வரை. ஆனால் இவற்றால் ஏதாவது பலன் உண்டா என்பது பலரின் அடிமனத்துக் கேள்வியாக இருக்கிறது. எனக்கும் இந்தக் கேள்வி இருந்தது, இரண்டு வாரங்களுக்கு முன் நடந்த நிகழ்வைப் பார்க்கும் வரை.

இனப்படுகொலை நினைவேந்தல் காலமான இந்த மே மாதம் வந்தாலே இணையத்தில் ஈழ ஆதரவாளர்களுக்கும் தி.மு.க-வினருக்குமிடையே சொற்போர் நடப்பது வழக்கம்தான். இந்த முறை அது கொஞ்சம் பெரிதாகவே போய் விட்டது. ஆனால் செய்தி அஃது இல்லை! வரம்பு மீறிப் பேசிய தி.மு.க-வினரை இந்த முறை அந்தக் கட்சியே முறைப்படி அறிக்கை விட்டு அப்படிப் பேசுவதைத் தவிர்க்குமாறு கோரியதுதான் யாருமே எதிர்பாராத அந்த நிகழ்வு!

spacer.png

கடந்த ஆண்டு குடியுரிமைச் சட்டத் திருத்தத்தின்பொழுது, இந்தியாவில் தங்க வைக்கப்பட்டுள்ள ஈழத் தமிழ் ஏதிலியர்களை அந்தச் சட்டத்தின் கீழ் ஏன் சேர்த்துக் கொள்ளவில்லை என்று கேட்டு நாடாளுமன்றத்தில் தி.மு.க., குரல் எழுப்பியது.

அதைத் தொடர்ந்து குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு (Citizenship Amendment Act-CAA) எதிராகக் காஞ்சிபுரத்தில் நடைபெற்ற மாநாட்டில் “ஈழத் தமிழர் எங்கள் ரத்தம்” என்று தி.மு.க., தலைவர் முழக்கமிட்டார். இப்பொழுது ஈழப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்திப் பேசுவதைத் தவிர்க்கும்படி வேறு அக்கட்சி தன் தொண்டர்களுக்கு அறிவுறுத்துகிறது.

அடுத்தடுத்து நடக்கும் இந்த நிகழ்வுகளையெல்லாம் பார்க்கும்பொழுது தி.மு.க., ஈழப் பிரச்சினையில் மீண்டும் இறங்கி வருவதாகப் புரிந்து கொள்ள முடிகிறது.

அவர்களும் (தி.மு.க-வினர்) இந்தப் பதினோரு ஆண்டுகளாக எத்தனையோ மாய்மாலங்களைச் செய்து பார்த்தார்கள்.

“ஆயிரம்தாம் இருந்தாலும் ஈழ விவகாரம் வேற்று நாட்டுச் சிக்கல். அதில் நாம் ஓரளவுக்கு மேல் தலையிட முடியாது” என்று மக்களைத் திசை திருப்பப் பார்த்தார்கள்; நடக்கவில்லை.

இனப்படுகொலை நேரத்தில் தி.மு.க., எந்த விதத்திலும் ஈழத் தமிழர்களுக்கு எதிராக இங்கே நடந்து கொள்ளவில்லை என்று நம்ப வைக்கப் பார்த்தார்கள்; முடியவில்லை.

விடுதலைப்புலிகளையும் ஈழப் போராட்டத்தையும் கொச்சைப்படுத்தி அதன் மூலம் ஈழத் தமிழர்கள் மீதான தமிழ்நாட்டு மக்களின் அன்பைக் குறைக்க முயன்றார்கள்; பலிக்கவில்லை.

இப்படி எல்லா வழிகளிலும் முயன்று பார்த்து விட்டுத்தான் எதற்குமே தமிழ்நாட்டு மக்கள் மசியவில்லை, ஈழத் தமிழர்களுடனான இவர்களுடைய உள்ளார்ந்த நேசப் பிணைப்பை அறுக்கவே இயலவில்லை என்றானதும் வேறு வழியின்றி இப்பொழுது தங்கள் கட்சிக்காரர்களையே திருத்த வேண்டிய நிலைமைக்குச் சென்றுள்ளது தி.மு.க.!

ஈழ விவகாரத்தில் எதிர்மறையான நிலைப்பாட்டில் இருந்து கொண்டு தமிழ்நாட்டில் அரசியல் நடத்த முடியாதெனத் தி.மு.க., தலைமைக்குப் புரியத் தொடங்கியுள்ளது என்பதன் சிறு அறிகுறியே இது!

இஃது ஈழ உறவுகளைக் காப்பாற்றத் தமிழ்நாட்டிலிருந்து நம்மால் ஒரு துரும்பைக் கூடக் கிள்ளிப் போட இயலாவிட்டாலும் அவர்களுக்காகப் பேசுவது, கவிதை எழுதுவது, ஓவியம் வரைவது, இணையத்தில் பதிவிடுவது, சமுக ஊடகங்கள் வாயிலாகக் குரல் கொடுப்பது, நினைவேந்துவது எனக் கடந்த பதினோரு ஆண்டுகளாகச் செய்து வந்தோமே அந்த அத்தனை முயற்சிகளுக்கும் கிடைத்துள்ள மிகச் சிறு வெற்றி!

ஆட்சி, அதிகாரம், சட்டம் என அத்தனையும் தங்களுக்கு எதிராக இருந்தும் அஞ்சாமல், இத்தனை காலமாகியும் சோர்வுறாமல் நம் தமிழீழச் சொந்தங்களுக்காக இங்கே இடைவிடாது இயங்கி வந்த ஈழ ஆதரவு இயக்கங்கள் – கட்சிகள் – தலைவர்கள் – பொதுமக்கள் ஆகியோரே இதற்கு முழுக் காரணம்!

தி.மு.க-வைப் பொறுத்த வரை, ஆட்சியில் இல்லாவிட்டால் ஈழத்துக்காகக் கழுத்து நரம்பு தெரிய முழங்குவதும் ஆட்சியைப் பிடித்து விட்டால் இரண்டகம் (துரோகம்) புரிவதுமே வாடிக்கை. இந்த முறை அவர்கள் இறங்கி வருவதும் அப்படி வழக்கமான ஒன்றாகவே இருக்கலாம். ஆனால் அதற்காக நமக்கு ஆதரவான எந்த ஒரு சிறு மாற்றத்தையும் நாம் பயன்படுத்திக் கொள்ளாமல் இருந்து விடக்கூடாது; அது மிகப் பெரும் வரலாற்றுப் பிழையாகப் போய்விடும் என்பதே என் கோரிக்கை!

இன்றைய சூழலில், வட இந்தியா முழுவதையும் சமயப் போதையில் ஆழ்த்தி வைத்திருக்கும் பா.ச.க-வுக்கு எதிராகக் காங்கிரசு இங்கே அரசியல் செய்ய வேண்டுமானால் அதற்குத் தென்னாட்டின் முக்கிய கட்சிகளில் ஒன்றான தி.மு.க-வின் ஆதரவு இன்றியமையாதது. பத்தாண்டுக் காலமாக ஆட்சி இழந்து நிற்கும் தி.மு.க-வுக்கோ எந்த விதத்திலும் மக்களோடு முரண்படாமல் இணங்கிப் போக வேண்டிய கட்டாயம். அதனால்தான் ஈழ விவகாரத்திலும் இறங்கி வருகிறார்கள் என்பது என் பணிவன்பான கருத்து.

இவர்களுடைய இந்த அரசியல் நெருக்கடியை ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டியது அவர்களுக்காகப் போராடி வரும் இயக்கங்களின் வரலாற்றுக் கடமை! பெரியோர்களே! எங்கள் முன்னோடிகளே! வழிகாட்டிகளே! இதை விட்டால் இனி இப்படி ஓர் அரிய வாய்ப்பு அமையாது!

எனவே ஈழத் தமிழர் நலனுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் இயக்கங்கள், கட்சிகள், தலைவர்கள், போராளிகள் அனைவரும் இனி ஈழ விவகாரத்தில் தி.மு.க-வுக்கு எதிராக அரசியல் செய்வதை விட, இறங்கி வரச் செய்கை (signal) காட்டும் தி.மு.க-வை ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக வழிக்குக் கொண்டு வர முயலுமாறு இந்தப் பதினோராம் ஆண்டு நினைவேந்தல் நாளில் வேண்டி வலியுறுத்திக் கோருகிறேன்!

அரசியல்வாதிகளைப் பொறுத்த வரை அரசியல் எனும் சொல்லுக்கு எத்தனையோ பொருள்கள் இருக்கலாம். ஆனால் போராளிகளைப் பொறுத்த வரை அதிகாரத்தில் இருப்பவர்களையும் அதிகாரத்துக்கு வர இருப்பவர்களையும் மக்களுக்கு ஆதரவாகச் செயல்படும் வகையில் அழுத்தம் கொடுப்பது மட்டுமே அரசியல் எனும் சொல்லுக்கான ஒரே பொருள் என்பது நீங்கள் அறியாதது இல்லை!

தமிழீழ ஆதரவுத் தலைவர்கள் அந்த அழுத்தத்தைத் தர இப்பொழுதும் தவற மாட்டீர்கள் எனும் நன்னம்பிக்கையுடன் இதோ உங்களோடு சிறியேனும் குடும்பத்தினருடன் ஏற்றுகிறேன் எங்கள் வீட்டு வாசலில் மெழுகுத்திரி!

இந்த மெழுகுத்திரியின் கண்ணீர் போலவே விரைந்து தீரட்டும் தமிழர் கண்ணீரும்!

வாழ்க தமிழ்!
வளர்க தமிழர்!!
மலர்க தமிழீழம்!!!

பி.கு.: உலகத் தமிழ் நெஞ்சங்களே! தமிழ் இன அழிப்பை எப்படியாவது தடுத்திருக்க முடியாதா எனும் தமிழர் ஒவ்வொருவரின் ஏக்கத்தையும் கற்பனையிலாவது தணித்துக் கொள்ளும் சிறு முயற்சியே கடந்த ஆண்டு நான் எழுதிய 13ஆம் உலகில் ஒரு காதல் புதினம்! எனவே இனப்படுகொலை நாளை ஒட்டி அந்த நூல் இன்றும் நாளையும் இலவசம்! இதுவரை படிக்காத உணர்வாளர்கள் இப்பொழுதாவது படியுங்கள்! உங்கள் கருத்தைப் பதியுங்கள்! நூலைப் பெற - https://amzn.to/2qFuL4z

படம்: நன்றி மாவீரம்.

  • தொடங்கியவர்

நண்பர் @ampanai அவர்களே! முதல் ஆளாக இந்தப் பதிவுக்கு நீங்கள் நன்றிக்குறி அளித்திருப்பது கண்டு உண்மையிலேயே மிகவும் மகிழ்கிறேன். இது கொஞ்சம் சர்ச்சைக்குரிய பதிவு. ஈழத் தமிழ் மக்கள் ஒருவேளை இதைப் படித்துச் சீற்றம் கொள்வீர்களோ என்று அஞ்சினேன். உங்கள் நேர்மறையான எதிர்வினை எனக்கு மிகுந்த ஆறுதல்! மிக்க நன்றி!

  • தொடங்கியவர்

நன்றி புரட்சிகர தமிழ்தேசியன் அவர்களே!

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, இ.பு.ஞானப்பிரகாசன் said:

ஈழ விவகாரத்தில் தி.மு.க-வுக்கு எதிராக அரசியல் செய்வதை விட, இறங்கி வரச் செய்கை (signal) காட்டும் தி.மு.க-வை ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக வழிக்குக் கொண்டு வர முயலுமாறு இந்தப் பதினோராம் ஆண்டு நினைவேந்தல் நாளில் வேண்டி வலியுறுத்திக் கோருகிறேன்!

வேண்டுதலைப் பலர் புரிந்துகொண்டாலும், ஈழத்தமிழர்களில் சிலர் எல்லாத் தோல்விகளுக்கும் அவலங்களுக்கும் பிறரையே குற்றம்சாட்டுவதை ஒரு கொள்கையாகக் கொண்டுள்ளதால் மாறமாட்டார்கள். ஆனால் காலங்கள் நகர அவர்கள் வரலாற்றிலும் ஒரு புள்ளியாகவும் இருக்கமாட்டார்கள். 

உங்கள் இணைப்பிற்கு நன்றி ஞானப்பிரகாசன் அவர்களே. ஈழத்தமிழர்களாகிய நாம் தமிழக அரசியலில் தலையாடாமல் யாருக்கும் ஆதரவு தெரிவிக்காமல் இருப்பதே உண்மையான ராஜதந்திரம். விடுதலைப்புலிகள் இருந்தவரை தமிழக உள்ளூர் அரசியல் தொடர்பாக எந்த கருத்தும் தெரிவிக்காமல் மெளனம் காத்தத‍து அதற்கு தான். 1985 எம்..ஜி. ஆரின் அரசின் உதவியை பெற்ற போதோ 1989 திமுக அரசின்  உதவயை பெற்ற போதோ உள்ளூர் அரசியல் குறித்து எந்த கருத்தும் தெரிவிக்காமல் மெளனம் காத்தார்கள்.  ஏன் பிரபாகரனை பிடித்து வந்து இந்தியாவில் தூக்கில் இடவேண்டும் என்று ஜெயல‍லிதா சட்ட மன்றத்தில்  தீர்மானம் நிறைவேற்றிய போது கூட அது தொடர்பாக எந்த கருத்தையும் தெரிவிக்க வில்லை.  அதுவே சரியான அணுகு முறை. உண்மையில் தமிழகத்தில் யாரை ஆதரிக்க வேண்டும் என்று தீர்மானிக்க வேண்டியவர்கள் தமிழக மக்களே. 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, tulpen said:

மிகச்சரியான கருத்து tulpen . ஆனால் காங்கிரசுடன் கூட்டணி வைத்துக்கொண்டு  இலங்கை தமிழரின் நலன்களுக்காக குரல் கொடுத்தாலும் திமுகவால் அதனை நடைமுறைப்படுத்த முடியுமென்று நினைக்கிறீர்களா?

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, கிருபன் said:

வேண்டுதலைப் பலர் புரிந்துகொண்டாலும், ஈழத்தமிழர்களில் சிலர் எல்லாத் தோல்விகளுக்கும் அவலங்களுக்கும் பிறரையே குற்றம்சாட்டுவதை ஒரு கொள்கையாகக் கொண்டுள்ளதால் மாறமாட்டார்கள். ஆனால் காலங்கள் நகர அவர்கள் வரலாற்றிலும் ஒரு புள்ளியாகவும் இருக்கமாட்டார்கள். 

நீங்கள் சொல்வது உண்மை தான். அங்கே சீமான் கட்சி மட்டும் என்னவாம்? யாழ்களத்திலேயே மற்ற பகுதியில் திமுகவிற்கு எதிரான சீமானின் முழக்கம் நடைபெற்று கொண்டிருக்கிறதே :rolleyes:

8 hours ago, இ.பு.ஞானப்பிரகாசன் said:

நண்பர் @ampanai அவர்களே! முதல் ஆளாக இந்தப் பதிவுக்கு நீங்கள் நன்றிக்குறி அளித்திருப்பது கண்டு உண்மையிலேயே மிகவும் மகிழ்கிறேன். இது கொஞ்சம் சர்ச்சைக்குரிய பதிவு. ஈழத் தமிழ் மக்கள் ஒருவேளை இதைப் படித்துச் சீற்றம் கொள்வீர்களோ என்று அஞ்சினேன். உங்கள் நேர்மறையான எதிர்வினை எனக்கு மிகுந்த ஆறுதல்! மிக்க நன்றி!

நன்றி எல்லாம் தேவையில்லை. ஒரு கருத்தை உண்மையாகவும் நேர்மையாகவும் முன்வைக்க எந்த தமிழனும் தயங்க தேவையில்லை, தயங்கவும் கூடாது. 

தாய்த்தமிழகம் என்றும் தமிழீழ மக்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள் என்பதும், அவர்களே என்றும் எமக்கு  காப்பரண்கள் என்பதும் எனது நிலை. 

ஈழ மக்கள் பாதுகாப்புடன் சுய மரியாதையுடன் கௌரவத்துடன் வாழ ஒரு அரசியல் தீர்வு / பகிர்வு தேவை. அதற்கு, நாம் உண்மையான நண்பர்களை தேடவும் சேர்க்கவும் வேண்டும். என்றும் சிங்களவர்களுக்கு அருகே ஒரு பக்கமும், தாய்த்தமிழகத்திற்கு மறு பக்கமும் தான் வாழவும் வேண்டும். 

தமிழக அரசியலை பொறுத்தவரையில் யார் ஆட்சியிலும் இருந்தாலும், அவர்களை ஈழ நலம் சார்ந்து உண்மையாக செயல்பட வைக்கும் அரசியல் திறமையும் ஒருங்கிணைப்புமே என்றும் தேவை. அமேரிக்கா வாழ் யூதர்களை உதாரணத்திற்கு கூறலாம். எந்த கட்சியை சார்ந்தவர் சனாதிபதி என்றாலும், அவர்களை யூத நலம் சார்ந்து முடிவுகளை எடுக்கும் அரசியல் பண்பை அமெரிக்க யூதர்கள் தக்கவைத்துள்ளார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, விளங்க நினைப்பவன் said:

நீங்கள் சொல்வது உண்மை தான். அங்கே சீமான் கட்சி மட்டும் என்னவாம்? யாழ்களத்திலேயே மற்ற பகுதியில் திமுகவிற்கு எதிரான சீமானின் முழக்கம் நடைபெற்று கொண்டிருக்கிறதே :rolleyes:

உதிரிகளாக இருப்பவர்களின் உணர்ச்சிக் கூச்சல்களுக்கும் இரசிகர்கள் இருப்பார்கள்தானே.

தமிழக மக்களின் கணிசமான ஆதரவுடன் ஆளும்கட்சியாகவும், அல்லது எதிர்க்கட்சியாகவும் இருக்கும் முக்கிய கட்சிகளை ஈழத்தமிழர் விவகாரத்தில் இதயசுத்தியுடன் செயற்படச் செய்வதற்கான வழிவகைகளைப் பார்க்கவேண்டும்.

சீமானின் முழக்கம் ஒரு சிறிய வட்டத்திற்கு அப்பால் கேட்காது!

12 hours ago, Eppothum Thamizhan said:

மிகச்சரியான கருத்து tulpen . ஆனால் காங்கிரசுடன் கூட்டணி வைத்துக்கொண்டு  இலங்கை தமிழரின் நலன்களுக்காக குரல் கொடுத்தாலும் திமுகவால் அதனை நடைமுறைப்படுத்த முடியுமென்று நினைக்கிறீர்களா?

எப்போதும்  தமிழன் இந்திய அரசின் தேசிய இனங்களை அடக்கி வைக்க வேண்டும் அல்லது அவர்கள் பலம் பெறுவது தடுக்க வேண்டும் என்ற கொள்கை  இந்கதுயாவை ஆளும் கட்சிகளைகளுக்கு அப்பாற்பட்ட சில சக்திகளால் எடுக்கப்படுபவை.

ஆனால் தமிழகத்தில்  உள்ள எல்லா கட்சிகளுக்குள்ளும் ஈழத்தமிழர் ஆதரவு சக்திகள் உண்டு. ஆகவே அவர்களது அரசியல் கட்சிகளுக்குள் உள்ள முரண்பாடுகளில் நாம் எமது ஈழத்தமிழ் அமைப்புக்கள் கருத்து  சொல்வது. ஒரு கட்சியை ஆதரிப்பது என்பது  பாதகமான விளைவையே எமக்கு ஏற்படுத்தும்.  எல்லாக் கட்சிகளுக்குள்ளும் உள்ள எமது ஆதரவு சக்திகளோடு நட்புறவு பாராட்டுவதே புத்திசாலித்தனமான நடவடிக்கை. 

  • தொடங்கியவர்
14 hours ago, கிருபன் said:

வேண்டுதலைப் பலர் புரிந்துகொண்டாலும், ஈழத்தமிழர்களில் சிலர் எல்லாத் தோல்விகளுக்கும் அவலங்களுக்கும் பிறரையே குற்றம்சாட்டுவதை ஒரு கொள்கையாகக் கொண்டுள்ளதால் மாறமாட்டார்கள். ஆனால் காலங்கள் நகர அவர்கள் வரலாற்றிலும் ஒரு புள்ளியாகவும் இருக்கமாட்டார்கள். 

கருத்துக்கு நன்றி நண்பரே! ஆனால் இந்த வேண்டுகோளை நான் ஈழத் தமிழர்களிடம் முன்வைக்கவில்லை. ஈழத் தமிழர்களுக்காகத் தமிழ்நாட்டிலிருந்து குரல் கொடுக்கும் எனதருமைத் தமிழீழ ஆதரவுத் தலைவர்களுக்கும் இயக்கங்களுக்குமானது இது. இப்படி ஒரு வேண்டுகோளை அவர்களிடம் முன்வைக்கிறேன் என்பதை ஈழத் தமிழ் மக்களின் பார்வைக்கு வைக்கவே இங்கு இதைப் பகிர்ந்தேன். ஏனெனில் ஒருவேளை என்னுடைய இந்த வேண்டுகோள் தவறானதாக இருந்தால் இதனால் பாதிக்கப்படப் போவது ஈழத் தமிழ் மக்கள்தாம் அல்லவா? ஆகவே இங்கு பகிர்ந்தால் இது தவறெனில் ஈழ உறவுகள் பார்த்து என்னைத் திருத்துவீர்கள் என்பதற்காகத்தான். உங்கள் கருத்தை அறியத் தந்தமைக்கு நன்றி!

14 hours ago, tulpen said:

உங்கள் இணைப்பிற்கு நன்றி ஞானப்பிரகாசன் அவர்களே. ஈழத்தமிழர்களாகிய நாம் தமிழக அரசியலில் தலையாடாமல் யாருக்கும் ஆதரவு தெரிவிக்காமல் இருப்பதே உண்மையான ராஜதந்திரம். விடுதலைப்புலிகள் இருந்தவரை தமிழக உள்ளூர் அரசியல் தொடர்பாக எந்த கருத்தும் தெரிவிக்காமல் மெளனம் காத்தத‍து அதற்கு தான். 1985 எம்..ஜி. ஆரின் அரசின் உதவியை பெற்ற போதோ 1989 திமுக அரசின்  உதவயை பெற்ற போதோ உள்ளூர் அரசியல் குறித்து எந்த கருத்தும் தெரிவிக்காமல் மெளனம் காத்தார்கள்.  ஏன் பிரபாகரனை பிடித்து வந்து இந்தியாவில் தூக்கில் இடவேண்டும் என்று ஜெயல‍லிதா சட்ட மன்றத்தில்  தீர்மானம் நிறைவேற்றிய போது கூட அது தொடர்பாக எந்த கருத்தையும் தெரிவிக்க வில்லை.  அதுவே சரியான அணுகு முறை. உண்மையில் தமிழகத்தில் யாரை ஆதரிக்க வேண்டும் என்று தீர்மானிக்க வேண்டியவர்கள் தமிழக மக்களே. 

நன்றி tulpen அவர்களே! ஈழத் தமிழர்கள் தமிழ்நாட்டு அரசியல் குறித்து இப்படி ஒரு நிலைப்பாட்டில் இருப்பது எனக்குத் தெரியாது. அறியத் தந்தமைக்கு நன்றி! ஆனால் நான் மேலே கிருபன் அவர்களுக்கான மறுமொழியில் தெரிவித்தது போல், இந்த வேண்டுகோளை நான் ஈழத் தமிழர்களிடம் முன்வைக்கவில்லை. ஈழத் தமிழர்களுக்காகத் தமிழ்நாட்டிலிருந்து குரல் கொடுக்கும் எனதருமைத் தமிழீழ ஆதரவுத் தலைவர்களுக்கும் இயக்கங்களுக்குமானதே இது. இப்படி ஒரு வேண்டுகோளை அவர்களிடம் முன்வைக்கிறேன் என்பதை ஈழத் தமிழ் மக்களின் பார்வைக்கு வைக்கவே இங்கு இதைப் பகிர்ந்தேன். ஏனெனில் ஒருவேளை என்னுடைய இந்த வேண்டுகோள் தவறானதாக இருந்தால் இதனால் பாதிக்கப்படப் போவது ஈழத் தமிழ் மக்கள்தாம் அல்லவா? ஆகவே இங்கு பகிர்ந்தால் இது தவறெனில் ஈழ உறவுகள் பார்த்து என்னைத் திருத்துவீர்கள் என்பதற்காகத்தான். நன்றி!

  • தொடங்கியவர்
8 hours ago, ampanai said:

நன்றி எல்லாம் தேவையில்லை. ஒரு கருத்தை உண்மையாகவும் நேர்மையாகவும் முன்வைக்க எந்த தமிழனும் தயங்க தேவையில்லை, தயங்கவும் கூடாது. 

மிக்க நன்றி நண்பரே!

Quote

தாய்த்தமிழகம் என்றும் தமிழீழ மக்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள் என்பதும், அவர்களே என்றும் எமக்கு  காப்பரண்கள் என்பதும் எனது நிலை.

உண்மையிலேயே நெகிழ்கிறேன்! இனப்படுகொலை நேரத்தில் உங்களைக் காப்பாற்றத் தவறி விட்டோம் என்கிற குற்ற உணர்ச்சி இன்றும் எங்களில் ஏராளமானோருக்கு உண்டு. ஆனால் நீங்கள் இன்னும் எங்கள் மீது இவ்வளவு நம்பிக்கை வைத்திருப்பது கண்டு நெக்குருகி நிற்கிறேன். நன்றி!

Quote

தமிழக அரசியலை பொறுத்தவரையில் யார் ஆட்சியிலும் இருந்தாலும், அவர்களை ஈழ நலம் சார்ந்து உண்மையாக செயல்பட வைக்கும் அரசியல் திறமையும் ஒருங்கிணைப்புமே என்றும் தேவை. அமேரிக்கா வாழ் யூதர்களை உதாரணத்திற்கு கூறலாம். எந்த கட்சியை சார்ந்தவர் சனாதிபதி என்றாலும், அவர்களை யூத நலம் சார்ந்து முடிவுகளை எடுக்கும் அரசியல் பண்பை அமெரிக்க யூதர்கள் தக்கவைத்துள்ளார்கள். 

இதைத்தான் நானும் செய்ய நினைக்கிறேன். அதுவும் மிகச் சில நாட்களாகத்தாம் எனக்கு இந்தப் புரிதல் ஏற்பட்டிருக்கிறது. ஆனால் இதைச் சொன்னாலே இங்கே நம் மக்கள் உணர்ச்சிவசப்படுகிறார்கள். இனப்படுகொலை செய்த தி.மு.க-வுக்கு ஆதரவாகப் பேசுகிறேன் எனக் குற்றம்சாட்டுகிறார்கள். உண்மையில் நான் தி.மு.க-வுக்கு ஆதரவாகப் பேசவில்லை; மாறி வரும் அரசியல் சூழல்களுக்கேற்ப அரசியலாளர்கள் தங்கள் நிலைப்பாடுகளை மாற்றிக் கொள்வது போல் மக்களான நாமும் அவ்வப்பொழுது இடனறிந்து செயல்பட வேண்டும் என்றுதான் சொல்கிறேன். உங்கள் புரிதலுக்கு மிக்க நன்றி!

20 minutes ago, tulpen said:

எப்போதும்  தமிழன் இந்திய அரசின் தேசிய இனங்களை அடக்கி வைக்க வேண்டும் அல்லது அவர்கள் பலம் பெறுவது தடுக்க வேண்டும் என்ற கொள்கை  இந்கதுயாவை ஆளும் கட்சிகளைகளுக்கு அப்பாற்பட்ட சில சக்திகளால் எடுக்கப்படுபவை.

ஆனால் தமிழகத்தில்  உள்ள எல்லா கட்சிகளுக்குள்ளும் ஈழத்தமிழர் ஆதரவு சக்திகள் உண்டு. ஆகவே அவர்களது அரசியல் கட்சிகளுக்குள் உள்ள முரண்பாடுகளில் நாம் எமது ஈழத்தமிழ் அமைப்புக்கள் கருத்து  சொல்வது. ஒரு கட்சியை ஆதரிப்பது என்பது  பாதகமான விளைவையே எமக்கு ஏற்படுத்தும்.  எல்லாக் கட்சிகளுக்குள்ளும் உள்ள எமது ஆதரவு சக்திகளோடு நட்புறவு பாராட்டுவதே புத்திசாலித்தனமான நடவடிக்கை. 

உங்கள் புரிதல் கண்டு வியந்து நிற்கிறேன்! அலாதி!... அலாதி!...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.