Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆமைக்கறி, உடும்புக்கறி சாப்பிட்டேன்... உங்களுக்கு என்ன பிரச்சினை? - செந்தமிழன் சீமான்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

நான் எனது கருத்தை தெளிவாகவே சொல்லி விட்டேன் ...திரும்பவும் உங்களுக்காய் ;
சீமான் அவரது நாட்டில் என்ன வேண்டுமானாலும் செய்யட்டும்...அதைப் பற்றிய அக்கறையோ அல்லது கவலையோ எனக்கு இல்லை. ஆனால்,
அவர் தலைவர் பற்றியோ அல்லது புலிகள் பற்றியோ தேவையில்லாத கட்டுக் கதைகளை தனது அரசியல் சுய லாபத்திற்காய் கதைக்க கூடாது.
அந்த கால கட்டத்தில் வன்னியில் போய் அது சாப்பிட்டேன் ,இது சாப்பிட்டேன் என்று அவர் சொல்வதின் பின் உள்ள அரசியலை நீங்கள் புரிந்து கொள்ளவில்லையா?

உண்மையில் புரியவில்லை உங்கள் புரிதலை கொஞ்சம் விளக்குவீர்களா?

அவர் எங்கே போய் சாப்பிட்டால் எனக்கு என்ன? பட்டினி கிடந்தால் எனக்கு என்ன?
புலிகள் பற்றியோ அல்லது தலைவர் பற்றியோ கதைப்பதற்கு அவருக்கு எந்த தகுதியும் இல்லை .

புலிகள் பற்றியும் தலைவர் பற்றியும் கதைக்க என்ன என்ன தகுதி இருக்க வேண்டும் 
என்று கொஞ்சம் விபரமாக எழுதினீர்கள் என்றால் அதை நான் சீமானிடம் தெரிவிக்க வசதியாக 
இருக்கும்.

புலிகளின் பணத்தை கொள்ளையடித்து பொம்பிளை பிடிக்க  போராடத்தையே 
காட்டிக்கொடுத்து அழித்த துரோக நாய்கள் எல்லாம் கதைக்கும் போது  சீமான் 
கதைக்க அப்படி என்ன தகுதி வேண்டும் என்று கொஞ்சம் புரியும் படி எழுதினால் 
வசதியாக இருக்கும். 

இண்ணனாருக்கு இன்ன இன்ன தகுதி வேண்டும்? என்று வரையறுக்கும் 
உங்கள் தகுதி பற்றியும் அறிய ஆவல்தான் .... எழுதாவிட்டாலும் பரவாயில்லை 


இனியும் இப்படி ஏதாவது சொல்லிக் கொண்டு திரிந்தால் நான் தொடர்ந்தும் விமர்சிப்பேன் .

விமர்சிப்பது உங்கள் தனி உரிமை 
அதை சீமானும் நாம்தமிழர் கட்சியும் வரவேற்கிறது 

உங்களுக்கு பிடிக்காட்டில் பேசாமல் இருங்கள் ...அது என்னுடைய பிரச்சனை இல்லை.

எங்களுக்கு பிடிக்கவில்லை என்று யார் சொன்னார்?
உங்கள் விமர்சனம் பற்றி விமர்சிக்க அடுத்தவருக்கும் 
உரிமை இருக்கும் அல்லவா? அது பற்றித்தான் நீங்கள் தெளிவு பெற வேண்டும் 

நீங்கள் இதே திரியில்  10 வருடத்தின் பின் அவர் சரியில்லா விட்டால் அவரை ஒதுக்குவேன் என்று எழுதி இருந்தீர்கள்...அதையே தான் நாங்கள் இப்போது செய்கிறோம்.

சரியில்லாததை ஒதுக்குவது என்பது .. ஒத்து வராத அல்லது ஒரு பிழையான 
துணையுடன் வாழ நேரும்போது விவாகரத்து பெற்றுக்கொள்ளவது. திருமண நாள் அன்றே ...... பின்னாளில் விவாகரத்து நேரும் என்று சொல்லி திருமணம் ஆகும் எல்லோரும் விவாகரத்து பெறுவது அல்ல. 

உங்களை போன்றவர்களுக்கு உண்மை தெரியும் ...ஆனால் எழுத வேண்டும் என்பதற்காய் எழுதி இங்குள்ள சிலரை உசுப்பேத்தி அவர்களது வாழ்க்கையும் நாசமாக்குகிறீர்கள் என்று நம்புகிறேன்.

நம்பிக்கைதான் வாழ்க்கை என்பார்கள். உங்கள் நம்பிக்கைகளை நாங்கள் 
அவநம்பிக்கை ஆக்குவது சரியாக படவில்லை. உங்களை போன்றவர்களை சேர்த்ததுதான் தமிழ் இனம் இருந்தாலும் தமிழனுக்கு விடிவு வேண்டும் வரவேண்டும் என்று தொடர்ந்தும் நம்புகிறோம் 

 

எப்படி புலிகளை விமர்சிக்காமல் அவர்கள் என்ன செய்தாலும் சரி என்று இங்கேயிருந்து விசிலடித்தார்களோ  அதே மாதிரி இப்ப சீமானுக்கு விசிலடிக்கிறார்கள்.

புலிகள் என்ன செய்தாலும் சரி என்று யார் எழுதினார்?
பொய்களை பொய்கள் என்று எழுதிவந்தோம் .... கரணம் அடித்தவர்கள் 
கும்மி அடித்தவர்கள்தான் வரும் வேகத்திலேயே காணாமல் போகிறார்கள். 
எங்களிடம் உண்மை இருப்பதால் ஒழிய வேண்டிய மறைய வேண்டிய தேவை இல்லை 
அதே கருத்துடன் இங்குதான் நிற்கிறோம். 

தமிழ்நாட்டில் உள்ள அரசியல்வாதிகள் எவரும் 2009யில் எங்களுக்கு உதவவில்லை ...ஆனால் அவர்களில் சீமானைத் தவிர மற்றவர்கள் ஒருவரும் தங்கட பிழைப்பிற்காய் புலிகளை இழுக்கவில்லை.

உண்மைதான் இல்லாத புலிகளால் இனி தமக்கு ஒன்றும் ஆவதுக்கு இல்லை 
என்று பலர் ஒதுங்கிவிட்டார்கள். இருந்தாலும் இல்லை என்றாலும் கொள்கையோடு 
வாழ்வதுவே வாழ்க்கை போராட்டம் என்று சிறை சென்றாலும் சீமான் தொடருகிறார். 

சீமான் நாளைக்கே முதலமைச்சராய் வந்தாலும் மத்திய அரசை மீறி அவரால் ஒன்றும் செய்யப் போறதில்லை [பதவிக்கு வந்தால் அவரே செய்ய மாட்டார் 😆அது வேற விசயம் .]

நாளைக்கு சீமான் என்ன செய்வார் என்று தெளிவாக எழுதும் நீங்கள் 
இன்று என்ன செய்கிறார் என்று கொஞ்சம் எழுதினால் வாசித்து அறியகூடியதாக இருக்கும்.
நாங்கள் ராசி பலன் சாத்திரங்களை நம்புவதில்லை. எதிர்காலத்தை கணிக்கும் ஒரு அபாரத திறமையை 
யாழ்களத்தில் மட்டுமே மூடி வைத்திருக்கிறீர்களே எனும்போது கொஞ்சம் வருத்தமாக இருக்கிறது.
10 20 வருடம் முந்தியே உலகை ஒரு தமிழர் சரியாக கணித்து கூறிவந்தார் எனும் பெருமை தமிழ் இனத்துக்கு 
இல்லாமல் போய்விடுகிறதே என்று ஒரு ஆதங்கமும் வருகிறது. 

 

இப்படி இவர்களுக்கு பின்னால் நின்று விசிலடிக்காமல் ஈழத்தில் இருக்கும் உணர்வுமிக்க ,படித்தவர்களாய் பார்த்து தேர்ந்து எடுத்து அவர்களை ஊக்கப்படுத்தி அவர்கள் மூலம் அரசியல் ரீதியான தீர்வினை வென்றெடுப்பதற்கு புலத்தில் உள்ளவர்கள் உறுதுணையாய் நிற்க வேண்டும் 

அது எவ்வாறு என்று கொஞ்சம் உங்களை போன்ற பெரியவர்கள் செய்து காட்டினால் 
பின்தொடர நாங்கள் எப்போதும் தயாராகவே இருக்கிறோம். 

இந்த கருத்து நான் மருதருக்கு எழுதியது தவறுதலாய் பகலவனை கோட் பண்ணி விட்டேன் ...மன்னிக்கவும் 

 

  • Replies 777
  • Views 64.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, tulpen said:

M

ஒற்றைத்தலைமை என்பது 2009 ன் ப்பின்னர் அல்ல அதற்கு முன்பே இருந்திருக்க கூடாது. அந்த ஒற்றைத்தலைமையில் பேதைத்தனமான அரசியலே இன்றைய ஈழத்தமிழரின் கையறு நிலைக்கு காரணம் என்பதை மட்டும் சொல்ல உங்கள்  மனம் மறுக்கிறது.  அதை மறைக்க கண்ணில் பட்டவனுக்கெல்லாம்  துரோகிப் பட்டம் வேறு. எமது தோல்விகளுக்கெல்லாம் அடுத்தவன் மீது பழி சுமத்தி அவனைத் துரோகியாக்கி அவனைத்திட்டியும் சீமானுக்கு விசிலடித்தும் எமது மிச்ச காலத்தை போக்குவதே புலம் பெயர்ஸ் முன்னாள்களின் அரசியல். அதுவே அவர்களது தமிழ்தேசியம். 

இதை விட புலிகள் இருந்த காலத்தில் அவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த இந்த முன்னாள்கள் அவர்களின் அரசியல் தவறுகளை சுட்டிக்காட்டி திருத்தி இருக்கலாம். அதன் மூலம் மாவீர்ர்களின் உன்னத தியாகம் வீண்போகாமல்  செய்திருக்கலாம். அதை விடுத்து இப்போது தமது ஆற்றாமையை மறைக்க அடுத்தவனை குற்றம் சாட்டுவது ஒட்டு மொத்த தமிழருக்கே அவமானம். 

அப்போ தமிழ் இன அழிப்பில் சிங்கள பேரினவாத - இந்திய பார்ப்பனிய அரசுகளுக்கு 
எந்த தொடர்பும் இல்லை?    

  • கருத்துக்கள உறவுகள்

இந்த திரியில் இரன்டு பக்கமும் கருத்தெழுதும் நான் மிகுந்த மதிப்பு வைத்திருக்கும் உறவுகள் உள்ளனர்.அவரவர் தங்கள் நிலைப்பாடுகளை நியாயப்படுத்தும் பொருட்டு வைக்கும் கருத்துக்கள் சில அவர்களின் நன் நிலை தவறுமாய்ப் போல் உள்ளது.இதெல்லாம் தேவையா.அதாவது சொற்பிரயோகங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

வ‌ண‌க்க‌ம் ப‌க‌ல‌வ‌ன் அண்ணா இந்த‌ ப‌திவு உங்க‌ளுக்கான‌து , 

அண்ண‌ன் சீமான் ப‌ற்றிய‌ முழு ஆதார‌மும் கிடைத்த‌து , 2009ம் ஆண்டு அவ‌ர் எப்ப‌ சிறைக்கு போனார் எப்ப‌ வெளியில் வ‌ந்தார் என்ர‌ விப‌ர‌ம் , 

இந்த‌ காணொளியி அண்ண‌ன் சீமான் 70நாட்க‌ள் சிறையில் இருந்து வெளிய‌ வ‌ந்த‌ போது பேசிய‌ காணொளி , 

இதில் பேசிய‌த‌ற்காக‌ மீண்டும் அண்ணன் சீமான் க‌ருணாநிதியால் மீண்டும் சிறைப் ப‌டுத்த‌ப் ப‌ட்டார் , அப்ப‌ எப்ப‌டி சூசை அண்ண‌ணுட‌ன் அண்ண‌ன் சீமான் க‌தைக்க‌ முடியும்  , 

நான் என‌து கைபேசியில் இருந்து தான் யாழில் எழுதுகிறேன் , ஊட‌க‌ங்க‌ளில் வ‌ந்த‌ செய்தி த‌லைப்பை இணைக்க‌ முடிய‌ வில்லை , என‌து த‌மிழ‌க‌ ந‌ண்ப‌ர்க‌ள் எல்லா ஆதார‌த்தையும் என‌து கைபேசிக்கு அனுப்பி இருந்தார்க‌ள் , க‌ணணி கைவ‌ச‌ம் இல்லை க‌ண‌ணி இருந்தா த‌லைப்பை இணைக்க‌ ஈசி  , நான் க‌ணணி‌ பாவிக்காம‌ விட்டு ப‌ல‌ வ‌ருட‌ம் 

நீங்க‌ள் மேல‌ எழுதி இருந்தீங்க‌ள்   சூசை அண்ண‌ன் தொலை பேசி எடுக்க‌ அண்ண‌ன் சீமான் க‌தைக்க‌ ம‌றுத்து விட்டார் என்று , இது முற்றிலும் பொய் , 

இறுதி க‌ட்ட‌ யுத்தத்‌தை புல‌ம்பெய‌ர் நாட்டில் இருந்து நான் உட் ப‌ட‌ எல்லாரும் க‌ண்ணீர் விட்ட‌ ப‌டி பார்த்து கொண்டு இருந்து எம்மால் இய‌ன்ற‌தை செய்தோம் போரை நிப்பாட்ட‌ , உல‌க‌த்தின் காதும் க‌ண்ணும் அப்ப‌ செவிடு குறுடு   , அவ‌ர்க‌ள் 2013ம் ஆண்டு ச‌ணல்4 ல‌ண்ட‌ன் ஊட‌க‌ம் வெளியிட்ட‌ காணொளிக்கு பிற‌க்கு தான் விழித்து கொண்டார்க‌ள் ,

ஆர‌ம்ப‌த்தில் நாக‌ரிக‌மான‌ முறையில் விவாத‌த்துக்கு த‌யார் என்று ம‌ருத‌ங்கேணி அண்ணாவுக்கு எழுதி இருந்தீங்க‌ள் , அத‌ற்கு ம‌ருத‌ங்கேணி அண்ணாவும் நாக‌ரிக‌மான‌ முறையில் ப‌தில் அளித்து இருந்தார் , 

கீழ‌ உங்க‌ளை நீங்க‌ளே த‌ர‌ம் தாழ்த்தி கொள்ளும் அள‌வுக்கு திராவிட‌ர்க‌ள் போல் அண்ண‌ன் சீமானை ப‌ற்றி தேவை இல்லாம‌ எழுதி இருந்தீங்க‌ள் , அதற்கும் விள‌க்க‌ம் த‌ந்தேன் இதா உங்க‌ளின் நாக‌ரிகமானா ‌எழுத்து ம‌ற்றும் விவாத‌ம் அதில் நீங்க‌ள்  கீழ‌ எழுதின‌ ப‌திவுக்கும் மேல‌ எழுதின‌ ப‌திவுக்கும் தொட‌ர்வே இல்லை , 

இனி உங்க‌ளுட‌ன் விவாதிக்க‌ ஒன்றும் இல்லை , உங்க‌ட‌ க‌ட்டு க‌தையை அவுட்டு விடுங்கோ , அண்ண‌ன் சீமானின் ஆத‌ர‌வாள‌ர்க‌ள் ப‌தில் அளிக்க‌ மாட்டார்க‌ள் , 
அண்ண‌ன் சீமானை தூற்றுப‌வ‌ர்க‌ள் உங்க‌ளின் ப‌திவுக்கு ப‌ச்சை குத்தி க‌ண்டிப்பாய் உங்க‌ளை ஊக்கிவிப்பின‌ம் 😉

 

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, சுவைப்பிரியன் said:

இந்த திரியில் இரன்டு பக்கமும் கருத்தெழுதும் நான் மிகுந்த மதிப்பு வைத்திருக்கும் உறவுகள் உள்ளனர்.அவரவர் தங்கள் நிலைப்பாடுகளை நியாயப்படுத்தும் பொருட்டு வைக்கும் கருத்துக்கள் சில அவர்களின் நன் நிலை தவறுமாய்ப் போல் உள்ளது.இதெல்லாம் தேவையா.அதாவது சொற்பிரயோகங்கள்.

கருத்துக்களுடன் தான் மோதல். தனி மனிதர்களுடன் அல்ல. இருந்தாலும் சுட்டிக்காட்டியமைக்கு நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ரதி said:

புலிகளை வைத்து அரசியல் செய்யம் தகுதி  சீமானுக்கு  இல்லை" . இந்த பதில் போதுமா 🙂
 

சீமானுக்குத் தகுதி இருக்கின்றதா இல்லையா என்பதை போராடினவர்களும் யாருக்காகப் போராடினார்களோ அந்த மக்களும் கூறட்டுமே 😀

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, tulpen said:

M

ஒற்றைத்தலைமை என்பது 2009 ன் ப்பின்னர் அல்ல அதற்கு முன்பே இருந்திருக்க கூடாது.

உலகம் பூராக இருக்கும் நாடுகள் அனைத்திலும் ஒரு பிரதமர் ஒரு ஜனாதிபதி 
இருக்கும் போது ......தமிழர்களுக்கு மட்டும்  10 ஜனாதிபதி 15 பிரதமர்கள் இருக்க வேண்டும் 
என்பதை முழுமையா புரிந்துகொள்ள விரும்புகிறேன். திரும்ப திரும்ப முயற்சித்தும் எனக்கு இந்த கருத்து 
புரியவில்லை. உலகில் உள்ள எல்லா அமைப்பிற்கும் ஒரு தலைவர் இருக்கும்போது புலிகளுக்கு 15 தலைவர்கள் இருந்து இருக்க வேண்டும் என்கிறீர்களா? ஒரு வேளை இது ஒரு வித்தியாசமான சிந்தனையாக கூட இருக்கலாம்  எல்லோரும்போல நாம் இருக்க வேண்டும் என்று இல்லைதானே? ஆனால் எவ்வாறு ஒரு செயல்திட்டத்தை நடைமுறை படுத்துவத்துவது? நடைமுறைக்கு ஒத்துவராது என்றுதானே ஒரே தலைவர் எனும் நடைமுறைக்கு சிறிய வியாபார நிறுவனங்களே வந்துவிடுகின்றன?? 

 

அந்த ஒற்றைத்தலைமையில் பேதைத்தனமான அரசியலே இன்றைய ஈழத்தமிழரின் கையறு நிலைக்கு காரணம் என்பதை மட்டும் சொல்ல உங்கள்  மனம் மறுக்கிறது.  

தமிழர்களின் வரலாறு குறைந்த படசம் 3000 வருடங்களுக்கு என்றாலும் எழுத்தில் 
பதிவாகி இருக்கிறது ... இந்த 3000 வருட வரலாறில் ஒற்றைத்தலைமையின் கீழ்தான் தமிழர்கள் 
வாழ்ந்து வந்து இருக்கிறார்கள் இதில் பல வெற்றிகளும் தோல்விகளும் மாறி மாறி வந்து இருகினறன 
கடந்த 3000 வருட ஒற்றைத்தலைமை முறைமைதான் ஈழத்தமிழர் கையறு நிலைக்கு காரணம் என்பது 
சரியாக புரியவில்லை. சிங்கள ஆதிக்க பேரினவாதம் என்பது இலங்கையில் வாழ்ந்துவந்த 12 வீதமான தமிழர்களுக்கு எதிரானது ... இதில் எத்தனை வீதமான தமிழர்கள் சிங்கள பேரினவாதத்துக்கு எதிராக போராடினார்கள்? சொந்த சோம்பேறி தனத்தையும் சுயநல தனத்தையும் மறைக்க 3000 வருட வரலாறை சாட மனம் மாறுகிறது என்பதுதான் உண்மை. ஈழத்தமிழரின் கையறு நிலைக்கு ஈழத்தமிழர்கள்தான் காரணம்.புலிகளின் தலைவர் சுதுமலையிலும்  திலீபன் ஊர் ஊராகவும் சொல்லிவந்தது மக்கள் புரடசி ஒன்றுதான் சுதந்திரத்தை பிறப்பிக்கும் என்று ஆயுத போராட்டம் என்பது ஒரு தற்காப்பு போராட்டம் தவிர சுதந்திர அரசை நிறுவாது. எத்தனை வீதமான மக்கள் புரட்சி செய்தார்கள்? இன்றைய சோசியல் மீடியா காலத்தில் இலங்கை சிங்கள கொடியவர்களின் உயிர் அச்சுறுத்தல் இல்லாத நிலையில் எத்தனை ஈழத்தமிழர்கள் தமக்கு கொடுமை நடந்ததை சொல்கிறார்கள்? 

அதை மறைக்க கண்ணில் பட்டவனுக்கெல்லாம்  துரோகிப் பட்டம் வேறு.

யார் அவ்வாறு துரோகி பட்டம் பெற்றார்கள்? 
இங்கு எழுதுங்கள் அவர் துரோகியா? இல்லையா? என்று விவாதிக்கலாம்.
கண்ணில் பட்டவருக்கு எல்லாம்? அப்போ எல்லோரும் துரோகிகள்தானே?
இதில் துரோகி இல்லாதோர் யார்?  

எமது தோல்விகளுக்கெல்லாம் அடுத்தவன் மீது பழி சுமத்தி அவனைத் துரோகியாக்கி அவனைத்திட்டியும் சீமானுக்கு விசிலடித்தும் எமது மிச்ச காலத்தை போக்குவதே புலம் பெயர்ஸ் முன்னாள்களின் அரசியல். அதுவே அவர்களது தமிழ்தேசியம். 

இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்ததில் இருந்து ஈழத்தமிழருக்கு 
நடந்த அழிவுகள் தோல்விகளில் எதிரி மட்டும் இல்லை. பல அரசியல் துரோகம் 
நடந்து இருக்கிறது எம் கண் முன்னே இன்றும் நடக்கிறது. உங்கள் கண்களுக்கு தெரியாது இருந்தால் 
பகலில் சூரியன் வருவது எல்லோர் கண்ணுக்கும் தெரியாமல் இருக்க வேண்டுமா? 
சொந்த பிழைப்புக்கு பதவிக்கும் பணத்துக்கும் பழி செய்தவர்கள் ஆயிர கணக்கில் உண்டு 
ஜி ஜி பொன்னம்பலம் தொடங்கி சுமந்திரன் வரை என்ன என்ன துரோகம் செய்தார்கள் என்பதை 
ஈழத்தமிழரின் வரலாறு பதிவு செய்துகொண்டுதான் இருக்கிறது. உங்கள் கண்களுக்கு தெரியவில்லை என்பதுக்காக எல்லோரும் கண்ணைக்கட்டிக்கொண்டு திரியவேண்டுமா? பழி செய்தவர்கள் பழிசுமப்பதில் உங்களுக்கு என்ன வில்லங்கம் என்பது புரியவில்லை? பழி செய்தாலும் இன்னொருவரில்  பழி சுமத்த கூடாது என்று ஒரு ஜென் நிலை புது புரட்சி ஏதும் செய்கிறீர்கள் என்றால் .... புலிகளையும் கொஞ்சம் கவனத்தில் எடுங்கள் என்பது எங்கள் பணிவான வேண்டுகோள். 
விசில் அடிப்பது என்பது ஒரு சாதாரண மனித வெளிப்பாடு .... மகிழ்ச்சியான தருணத்தில் சிரிப்பது ...
மரியாதைக்கு உரியவர் முன் எழுந்து நிற்பது எல்லாம் காலம் காலமாக தமிழர்கள் செய்து வருவது.
திடீரென உங்களுக்கு பிடிக்கவில்லை என்பதுக்காக தமிழர்கள் இனி கையால் நடக்க முடியுமா? 
உங்களை யாராவது விசில் அடிக்க வற்புறுத்தினால் .. உங்களுக்கு பிடிக்காவிட்டால் அடிக்காதீர்கள் 
உங்களுக்கு அதில் இஸ்டம் இல்லை என்பதை தெரிவித்து கொள்வதோடு ....விசில் அடிக்க அடுத்தவருக்கு இருக்கும் சுதந்திரத்தையும் மதிக்க கற்றுக்கொள்ளுங்கள். 
முன்னாள்களின் தமிழ்த்தேசியம் பற்றி விபரிப்பதைப்போல  பின்னாள்களின்   பற்றி விபரித்தால் வித்தியாசத்தை  காணமுடியும் ... அதில் இருக்கும் நல்லது கெட்டதுகளை திருத்திக்கொள்ள சின்ன முயற்சி என்றாலும் இருக்கும் . 

இதை விட புலிகள் இருந்த காலத்தில் அவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த இந்த முன்னாள்கள் அவர்களின் அரசியல் தவறுகளை சுட்டிக்காட்டி திருத்தி இருக்கலாம். 

புலிகள் அரசியலை முன்னெடுக்கும் சூழ்நிலைகள் அமையவில்லை 
ஆதிக்க உலக வெறியர்கள் புலிகள் மீது எடுத்த அரசியல் வெறித்தனங்களுக்கு 
புலிகள் ஒரு தற்காப்பு அரசியலை மட்டுமே செய்து வந்தார்கள் ... இதில் சரி பிழை 
என்று ஏதும் இருக்க சாத்தியம் இல்லை .....ஒருவனின் குரல் வளையை பிடித்து நெரிக்கும்போது 
உயிர்வாழ ஒருவன் சுவாசிக்க எத்தனித்துக்கொண்டு இருக்கும்போது ........ ஆயுளை கூட்டுவதுக்கு 
யோகாவில் சில சுவாச முறைகள் உண்டு என்று ஏகாந்தம் பேசும் நிலைக்கு ஆறாம் அறிவை இறக்கிவைத்து வியாக்கியானம் பேச வேண்டிய வில்லங்கம் ஏதும் எமக்கு அன்று இருக்கவில்லை. 

முன்னாள்களுக்கும் புலிகளுக்கும் இரத்த உறவு ஒன்றும் உங்களைப்போல அவர்களுக்கும் 
இருக்கவில்லை பின்னாள்கள் ஆகிய நீங்களே அதை செய்திருக்கலாம் என்றுதான் எனக்கு தோன்றுகிறது விளங்காத ஒன்றை விளங்கபடுத்துவதிலும் விட ... விளங்கிய நீங்களே செய்திருக்கலாம். 

அதன் மூலம் மாவீர்ர்களின் உன்னத தியாகம் வீண்போகாமல்  செய்திருக்கலாம். அதை விடுத்து இப்போது தமது ஆற்றாமையை மறைக்க அடுத்தவனை குற்றம் சாட்டுவது ஒட்டு மொத்த தமிழருக்கே அவமானம். 

அவமானம் என்பது மானத்தின் எதிர்சொல் (மேற்கொண்டு  எழுத தேவை இல்லை) 

 

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு போலி அரசியல்வாதியினால், தனது நாட்டு பிரதமந்திரியினை, he was the PM of India for you. ஆனால் எனக்கு ராணுவத்தை அனுப்பி (இன்னோரு நாட்டில்) எனது இன மக்களை கொன்றொழித்த  கொலைகாரர், That's all. your honour. என்று பகிரங்கமாக புலம் பெயர் தமிழர்களை திருப்திப்படுத்த ஆயினும் சொல்லமுடியுமா? @3:40

ஆஷ் துரையினை சுட்டுக் கொன்ற வாஞ்சிநாதன் தியாகி என்றால், ஜாலியன் வாலாபாக்கில் பல நூறுபேரை சுட்டுக்கொல்ல உத்தரவு தந்த டயர் என்பவனை 21வருடம் காத்திருந்த கொன்றொழித்த உத்தம் சிங் தியாகி என்றால், ராஜீவை கொன்ற அக்கா தனுவும் எமக்கு தியாகி தான்.

அதுவே சீமானின் உறுதியான உண்மை முகம்.

 

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Nathamuni said:

ஒரு போலி அரசியல்வாதியினால், தனது நாட்டு பிரதமந்திரியினை, he was the PM of India for you. ஆனால் எனக்கு ராணுவத்தை அனுப்பி (இன்னோரு நாட்டில்) எனது இன மக்களை கொன்றொழித்த  கொலைகாரர், That's all. your honour. என்று பகிரங்கமாக புலம் பெயர் தமிழர்களை திருப்திப்படுத்த ஆயினும் சொல்லமுடியுமா? @3:40

அதுவே சீமானின் உறுதியான உண்மை முகம்.

 

சூசை அண்ணாவுட‌ன் அருகில் இருந்த‌வ‌ர் விவாத‌த்துக்கு த‌யார் என்று சொல்லி விட்டு ஆளைக் காணும் , 
நாம் த‌மிழ‌ர் க‌ட்சியில் இருக்கும் உந்த‌ சின்ன‌ பெடிய‌ங்க‌ள் நாதா ந‌ல்ல‌ திற‌மை சாலிய‌ல் ,

அதுங்க‌ட‌ வ‌ய‌த‌ விட‌ மூளையாஸ்தி , நேற்று கேட்டேன் எல்லா விப‌ர‌மும் காலையில் எழுந்து பார்க்க‌ என்ர‌ வாஸ்ப்பில் த‌க‌வ‌ல்க‌ள் அனைத்தும் வ‌ந்து இருக்கு 👏🤞

 

 

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, Nathamuni said:

ஒரு போலி அரசியல்வாதியினால், தனது நாட்டு பிரதமந்திரியினை, he was the PM of India for you. ஆனால் எனக்கு ராணுவத்தை அனுப்பி (இன்னோரு நாட்டில்) எனது இன மக்களை கொன்றொழித்த  கொலைகாரர், That's all. your honour. என்று பகிரங்கமாக புலம் பெயர் தமிழர்களை திருப்திப்படுத்த ஆயினும் சொல்லமுடியுமா? @3:40

ஆஷ் துரையினை சுட்டுக் கொன்ற வாஞ்சிநாதன் தியாகி என்றால், ஜாலியன் வாலாபாக்கில் பல நூறுபேரை சுட்டுக்கொல்ல உத்தரவு தந்த டயர் என்பவனை 21வருடம் காத்திருந்த கொன்றொழித்த உத்தம் சிங் தியாகி என்றால், ராஜீவை கொன்ற அக்கா தனுவும் எமக்கு தியாகி தான்.

அதுவே சீமானின் உறுதியான உண்மை முகம்.

 

அண்ண‌ன் சீமான் மேல் ப‌ல‌ நூறு  வ‌ழ‌க்குக‌ள் இருக்கு நாதா , அதை எல்லாம் தாண்டி இப்ப‌டி பேச‌ துணிவு வேண்டும் ,

ராஜிவ்காந்தியை நாம் தான் கொன்று புதைத்தோம் என்று சொன்ன‌ போது , அண்ண‌ன் சீமானின் த‌லைக்கு பேர‌ம் பேசின‌வை த‌மிழ் நாட்டு காங்கிர‌ஸ் க‌ட்சியை சேர்ந்த‌ ஒருத‌ர் , இப்ப‌டி ப‌ல‌ நெருக்க‌டிக்கு ம‌த்தியில் தான் அண்ண‌னின் அர‌சிய‌ல் ப‌ய‌ண‌ம் தொட‌ர்கிற‌து 

Edited by பையன்26

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, பையன்26 said:

சூசை அண்ணாவுட‌ன் அருகில் இருந்த‌வ‌ர் விவாத‌த்துக்கு த‌யார் என்று சொல்லி விட்டு ஆளைக் காணும் , 

அவர் வரமாட்டார். சிலவருடங்களுக்கு முன்னர், மனைவியுடன் ஹாலிடே போன பதிவு ஒன்றினை போட்டு இருந்தார். (மால்டா என்று நினைக்கிறன்) வேலைப்பளுக்களுக்கு இடையே அபூர்வமாக கிடைத்த விடுமுறையில் போனதாக சொல்லி நல்ல படங்களுடன் போட்டிருந்தார்.

விசுகு அண்ணர் கூட, வேடிக்கையாக, இவ்வளவு தூரம் வந்து, அண்ணனிடம் ஒரு எட்டு வந்து பார்க்காமல் போய் விட்டீர்களே என்று கேட்டிருந்தார்.

தான் 2009 may சூசையுடன் நின்றதாக சொன்னபோது, பெரும் யுத்தகளத்தில் இருந்து வெளியே வந்து, எந்த நாட்டில் தங்கி இருந்து, எந்த நாட்டுக்கு போய் சேர்ந்து, மொழியினை படித்து, சிறந்த வேலை எடுத்து, திருமணமும் செய்து ஹாலிடே போகுமளவுக்கு, அதுவும் சில வருடங்களில், (immigration, visa, passport) எப்படி சாத்தியமானது என்ற இயல்பான கேள்வி எழுந்தது.

இப்போது, லோக்டௌன் சமயத்தில் கூட வேலைப்பளு என்கிறார். அப்படியானால் நிச்சயமாக சிறந்த வேலை செய்பவராகவே இருப்பார்.

அவர் இங்கே முன்னதாகவே இருந்து, சமராட அங்கே போயிருப்பாரோ என்றும் கூட நினைத்தேன்.

அவர் அங்கிருந்து எதுவித தீங்கும் இல்லாமல் எப்படி வெளியே வந்தார்  என்று சொல்லும் வரை, இந்த கேள்வி இருக்கும்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Nathamuni said:

அவர் வரமாட்டார். சிலவருடங்களுக்கு முன்னர், மனைவியுடன் ஹாலிடே போன பதிவு ஒன்றினை போட்டு இருந்தார். (மால்டா என்று நினைக்கிறன்) வேலைப்பளுக்களுக்கு இடையே அபூர்வமாக கிடைத்த விடுமுறையில் போனதாக சொல்லி நல்ல படங்களுடன் போட்டிருந்தார்.

விசுகு அண்ணர் கூட, வேடிக்கையாக, இவ்வளவு தூரம் வந்து, அண்ணனிடம் ஒரு எட்டு வந்து பார்க்காமல் போய் விட்டீர்களே என்று கேட்டிருந்தார்.

தான் சூசையுடன் நின்றதாக சொன்னபோது, வெளியே வந்து, மொழியினை படித்து, சிறந்த வேலை எடுத்து, திருமணமும் செய்து ஹாலிடே போகுமளவுக்கு, அதுவும் சில வருடங்களில், (immigration, visa, passport) எப்படி சாத்தியமானது என்ற இயல்பான கேள்வி எழுந்தது.

அவர் இங்கே முன்னதாகவே இருந்து, சமராட அங்கே போயிருப்பாரோ என்றும் கூட நினைத்தேன்.

அவர் அங்கிருந்து எதுவித தீங்கும் இல்லாமல் எப்படி வெளியே வந்தார்  என்று சொல்லும் வரை, இந்த கேள்வி இருக்கும்.

நாதா 11வ‌ருட‌த்தை முன் நோக்கி பாப்போம் , ச‌ர‌ன் அடைந்த‌ பொது ம‌க்க‌ளை கூட‌ ப‌ல‌ மாத‌க் க‌ண‌க்கில் உள்ள‌ வைத்து இருந்திட்டு தான் வெளியில் விட்ட‌வ‌ங்க‌ள் , க‌ட‌சி க‌ட்ட‌த்தில் க‌ருணாவின்ட‌ ஆட்க‌ள் தொட்டு ப‌ல‌ரின் க‌ண்கானிப்பில் ச‌ர‌ன் அடைந்த‌ போராளிக‌ள்  , 

சூசை அண்ணா மே17ம் திக‌தி தொலைபேசி ப‌ண்ணுகிறார் , 
சூசை அண்ணா தொலைபேசி ப‌ண்ணும் போது தானும் அருகில் இருந்தாராம் ,  ம‌க்க‌ளோடு ம‌க்க‌ளாய் ச‌ர‌ன் அடைந்த‌ போராளிகள்‌‌ எவ‌ள‌வோ த‌ண்ட‌னையை அனுப‌வித்த‌வை , இவ‌ர் மே18 அன்று ச‌ர‌ன் அடைந்து , க‌ருணாவின் ஆட்க‌ள் சிங்க‌ள‌ ப‌டை இவையின் இரும்பு பிடிக்குள் இருந்து த‌ப்பி புல‌ம் பெய‌ர் நாட்டுக்கு வ‌ந்து வ‌ந்த‌ கையோட‌ யாழ் க‌ள‌த்தில் உறுப்பின‌ர் ஆகி ,அண்ண‌ன் சீமானை ப‌ற்றி விவாதிக்கும் அள‌வுக்கு வ‌ந்திட்டார் ,  

க‌ட்டுநாய‌க்கா தாக்குத‌லில் வீர‌காவிய‌மான‌ 14ம‌றைமுக‌ க‌ரும்புலிக‌ளை நினைவு கூரும் திரி ஒன்று திற‌ந்தேன் யாழில் , அதில் க‌ட்டு நாய‌க்கா தாக்குத‌ல‌ வ‌ழி ந‌ட‌த்தின‌ ( சாள்ஸ் அண்ணாவை ப‌ற்றி எழுதினேன் ) அதில் ப‌க‌ல‌வ‌னும் வ‌ந்து எழுதினார் ) 

அவ‌ரிட‌ம் நான் கேட்ட‌ கேள்வி சாள்ஸ் அண்ணாவுக்கு பிற‌க்கு கொழும்பு த‌லைமையை யார் ஏற்ற‌து , அதுக்கு அவ‌ர் ப‌தில் அளிக்காம‌ க‌ட‌ந்து சென்று விட்டார்  , ஏன் என்றால் சாள்ஸ் அண்ணா கொழும்பில் இருந்த‌ போது சிங்க‌ள‌த்தை திகைக்க‌ வைத்தார் , 2008ம் ஆண்டு ம‌ன்னாரில் ந‌ட‌ந்த‌ கிளைமோர் தாக்குத‌ல் சாள்ஸ் அண்ணா வீர‌ச்சாவு , 

ஆர‌ம்ப‌த்தில் ப‌க‌ல‌வ‌னை ந‌ம்பினேன் , சூசை அண்ணா கூட‌ இருந்தார் என்று எழுதும் போது தான் ச‌ந்தேக‌ம் அதிக‌ரித்த‌து 😉

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, பையன்26 said:

க‌ட்டுநாய‌க்கா தாக்குத‌லில் வீர‌காவிய‌மான‌ 14ம‌றைமுக‌ க‌ரும்புலிக‌ளை நினைவு கூரும் திரி ஒன்று திற‌ந்தேன் யாழில் , அதில் க‌ட்டு நாய‌க்கா தாக்குத‌ல‌ வ‌ழி ந‌ட‌த்தின‌ ( சாள்ஸ் அண்ணாவை ப‌ற்றி எழுதினேன் ) அதில் ப‌க‌ல‌வ‌னும் வ‌ந்து எழுதினார்

ஆர‌ம்ப‌த்தில் ப‌க‌ல‌வ‌னை ந‌ம்பினேன் , சூசை அண்ணா கூட‌ இருந்தார் என்று எழுதும் போது தான் ச‌ந்தேக‌ம் அதிக‌ரித்த‌து 😉

கோத்தாவுக்கே டிமிக்கா கொடுத்துப்போட்டு வெளியில வந்திருக்கிறார் எண்டு சொல்லுங்கோவன்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

“சூசை அண்ணையுடன் களத்தில் நின்றவர்களில் நானும் ஒருவன். சீமான் வன்னி வந்தபோது வன்னியில் இருந்தவர்களில் நானும் ஒருவன். சேரா எனது நண்பனும் கூட.”

இது தான் பகலவன் எழுதியது. அவர் 2009 வன்னியில் இருந்ததாக எழுதவில்லை ஆனால் 2008 இல் வன்னியில் இருந்திருக்கிறார்

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, MEERA said:

“சூசை அண்ணையுடன் களத்தில் நின்றவர்களில் நானும் ஒருவன். சீமான் வன்னி வந்தபோது வன்னியில் இருந்தவர்களில் நானும் ஒருவன். சேரா எனது நண்பனும் கூட.”

இது தான் பகலவன் எழுதியது. அவர் 2009 வன்னியில் இருந்ததாக எழுதவில்லை ஆனால் 2008 இல் வன்னியில் இருந்திருக்கிறார்

தவறு மீரா. தான் இறுதி யுத்தகளத்தில் இருந்ததாக சொல்லி இருக்கிறார்.

  1. சீமானிடம் பதில் கேட்டுத்தான் தெரியவேண்டிய அவசியம் எனக்கு இல்லை, ஏனென்றால் சூசை அண்ணையின் பக்கம் நின்றவர்களில் நானும் ஒருவன். இன்னும் பலரும் உயிருடன் இருக்கிறார்கள்.
  2. சந்தோஷுடன் பேசியும் இருக்கிறேன்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Nathamuni said:

கோத்தாவுக்கே டிமிக்கா கொடுத்துப்போட்டு வெளியில வந்திருக்கிறார் எண்டு சொல்லுங்கோவன்.

உண்மையாய் ச‌ர‌ன் அடைந்து ப‌ல‌ வ‌ருட‌ம் சிறைக்குள் இருந்து  மெலிந்து வெளியில் வ‌ந்த‌ போராளிக‌ள் 

பிரான்ஸ்
டென்மார்க்
இன்ரொனேசியா போன்ற‌ நாடுக‌ளில் வ‌சிக்கின‌ம் , அவை வெளியில் வ‌ர‌வே அவ‌ள‌வு கால‌ம் எடுத்த‌து , சூசை அண்ணாவுட‌ன் இருந்த‌ ப‌க‌ல‌வ‌லுக்கு , சீக்கிர‌ம் வெளியில் வ‌ர‌ முடிந்த‌து ,  அப்ப‌ கொத்த‌பாயா க‌ருணாவின் ஆட்க‌ளுக்கு த‌ண்ணீர் காட்டி த‌ப்பித்து வ‌ந்து விட்டார் 😉

3 minutes ago, MEERA said:

“சூசை அண்ணையுடன் களத்தில் நின்றவர்களில் நானும் ஒருவன். சீமான் வன்னி வந்தபோது வன்னியில் இருந்தவர்களில் நானும் ஒருவன். சேரா எனது நண்பனும் கூட.”

இது தான் பகலவன் எழுதியது. அவர் 2009 வன்னியில் இருந்ததாக எழுதவில்லை ஆனால் 2008 இல் வன்னியில் இருந்திருக்கிறார்

அவ‌ர் என்ன‌ எழுதி இருக்கிறார் என்ற‌த‌ ஒழுங்காய் வாசித்து விட்டு உங்க‌ள் ப‌தில‌ எழுதுங்கோ , சூசை அண்ணா தொலைபேசி ப‌ண்ணும் போது தானும் அருகில் நின்ற‌தாய் எழுதி இருக்கிறார் 😉/

நல்லது பையன். நன்றி உங்கள் காணொளி விளக்கத்துக்கு. இன்னுமா நீங்கள் தொடர்பெடுத்து திகதிகளை அறியமுடியாமல் இணையத்தில் காணொளி தேடி கொண்டு இருக்கிறீங்கள். 

சீமானின் வைகாசி 18 இல் நாம் தமிழர் இயக்கமாக மதுரையில் நடந்த பேரணி பற்றி சொல்லவில்லையா. 

இல்லை உங்கள் நண்பர்களிடம் சூசை அண்ணையுடன் பேசிய சந்தோஷின் தொடர்பை எடுத்து பேசுங்கள்.

நன்றாக ஆராய்ந்துவிட்டு எழுதுங்கள். இல்லை என்னை வசைபாடுங்கள். நன்றி.

நாதமுனி உங்கள் விளக்கத்துக்கு மிக்க நன்றி. என்னை யாருடன் வேணுமென்றாலும் இணைத்து பேசுங்கள் அதற்கான அவ்வளவு தகுதிகளும் உரிமையும் உங்களுக்கு இருக்கு.

நான் எப்போது எப்படி வெளியில் வந்தேன் என்று தெரிந்து தான் மேலே குறிப்பிட்ட தகவலை உறுதிபடுத்தவேண்டிய தேவை எனக்கு இப்போது இல்லை. இருந்தாலும் உங்களுக்கும் நன்றி.

 

தொடர்ந்தும் போராடுங்கள்.

Edited by பகலவன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, பகலவன் said:

நன்றி உங்கள் காணொளி விளக்கத்துக்கு. இன்னுமா நீங்கள் தொடர்பெடுத்து திகதிகளை அறியமுடியாமல் இணையத்தில் காணொளி தேடி கொண்டு இருக்கிறீங்கள். 

காணொளியில் மே 11 பன்னரில் இருக்கு. அன்றுதான் தமிழ்நாட்டில் தேர்தல் பிரச்சாரம் முடிந்தது. 14ந் தேதி தேர்தல்  நடைபெற்றது. அரசியல் கட்சிகள் எல்லாம் யார் வெல்வார்கள் என்று பிஸியாக 17, 18 களில் இருந்தார்கள்.

அண்ணன் சீமான் 5 தடவைகள் சிறைக்குப் போயிருக்கின்றார். அதுவும் ஒன்றறை வருட இடைவெளியில். எனவே எல்லாத் திகதிகளும் அவருக்கும் நினைவில் இருக்காது. ஆனால் 11 மேயில் வெளியில் இருந்தவர் தேர்தல் அமளிக்குள் உள்ளே போயிருப்பார் என்பதை பையன் அறுதியிட்டுக் கூறும்போது நம்பத்தானே வேண்டும்.😄

 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, பகலவன் said:

நாதமுனி உங்கள் விளக்கத்துக்கு மிக்க நன்றி. என்னை யாருடன் வேணுமென்றாலும் இணைத்து பேசுங்கள் அதற்கான அவ்வளவு தகுதிகளும் உரிமையும் உங்களுக்கு இருக்கு.

நான் எப்படி வெளியில் வந்தேன் என்று தெரிந்து தான் மேலே குறிப்பிட்ட தகவலை உறுதிபடுத்தவேண்டிய தேவை எனக்கு இப்போது இல்லை. இருந்தாலும் உங்களுக்கும் நன்றி.

நான் யாருடனும் உங்களை இணைத்து பேசவில்லை. அது எனது வேலையும் அல்ல. ஆனால், உங்களது பதிவு சில கேள்விகளை எழுப்புவது தவிர்க்க முடியாதது.

ரதி அக்கா தனது ஆதரவு நிலைப்பாட்டினை தெளிவாக சொல்லிவிட்டதால், இணைத்து பேசுகிறோம்.

அதாவது, அவரவர் சொல்வதில் இருந்து தான் கேள்விகள் வருமே அன்றி, நாம் ஒன்றும் புதிதாக நோண்டிப் பிடிப்பதில்லை.

பதிவினை போட்டபின்னர் கேள்விகள் எழும் போது, உறுதிப்படுத்த வேண்டிய தேவை இல்லை என்று சொல்லிக் கொள்ள முடியுமானால் அந்த பதிவை தவிர்த்திருக்கலாமே நண்பரே. 

ஏனெனில், நீங்கள் சொல்வது போல, அங்கே களத்தில் நீங்கள் இருக்கவில்லை என்பதே நிதர்சனம். 

அதனை உறுதிப்படுத்த வேண்டிய தேவையும் உங்களுக்கு இல்லை என்பதனையும் ஏற்றுக் கொள்கிறேன்.

நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, பகலவன் said:

நல்லது பையன். நன்றி உங்கள் காணொளி விளக்கத்துக்கு. இன்னுமா நீங்கள் தொடர்பெடுத்து திகதிகளை அறியமுடியாமல் இணையத்தில் காணொளி தேடி கொண்டு இருக்கிறீங்கள். 

சீமானின் வைகாசி 18 இல் நாம் தமிழர் இயக்கமாக மதுரையில் நடந்த பேரணி பற்றி சொல்லவில்லையா. 

இல்லை உங்கள் நண்பர்களிடம் சூசை அண்ணையுடன் பேசிய சந்தோஷின் தொடர்பை எடுத்து பேசுங்கள்.

நன்றாக ஆராய்ந்துவிட்டு எழுதுங்கள். இல்லை என்னை வசைபாடுங்கள். நன்றி.

நாதமுனி உங்கள் விளக்கத்துக்கு மிக்க நன்றி. என்னை யாருடன் வேணுமென்றாலும் இணைத்து பேசுங்கள் அதற்கான அவ்வளவு தகுதிகளும் உரிமையும் உங்களுக்கு இருக்கு.

நான் எப்போது எப்படி வெளியில் வந்தேன் என்று தெரிந்து தான் மேலே குறிப்பிட்ட தகவலை உறுதிபடுத்தவேண்டிய தேவை எனக்கு இப்போது இல்லை. இருந்தாலும் உங்களுக்கும் நன்றி.

 

தொடர்ந்தும் போராடுங்கள்.

நான் ஒன்றும் இணைய‌ த‌ள‌த்தில் தேட‌ வில்லை அண்ண‌ன் சீமான் அருகில் இருப்ப‌வ‌ர்க‌ள் மூல‌ம் கிடைத்த‌ காணொளி , இந்த‌ காணொளியை இன்று தான் பார்க்கிறேன் , 

நீங்க‌ள் உங்க‌ பானியில் எதையும் எழுதுங்கோ அதை ப‌ற்றி கொஞ்ச‌மும் க‌வ‌லை இல்லை , ஆனால் ம‌ற்ற‌வ‌ர்க‌ளை ம‌ட்ட‌ம் த‌ட்ட‌ வெளிக்கிட்டு உங்க‌ளின் உண்மை முக‌த்தை எம‌க்கு காட்டிய‌மைக்கு ந‌ன்றி 😁

அண்ண‌ன் சீமான் 2010ம் ஆண்டு தான் க‌ட்சி ஆர‌ம்பிச்ச‌வ‌ர் இது க‌ட்சியில் இருக்கும் சின்ன‌ ப‌ஸ்ச‌ங்க‌ளுக்கும் தெரியும் ,

மேல‌ உங்க‌ளின் விவாத‌ ப‌டி உங்க‌ளிட‌ம் நான் கேட்டு எழுதின‌துக்கு ப‌தில் அளிக்காம‌  காணொளி ப‌திவுக்கு ம‌ட்டும் ப‌தில் அளித்து இருக்கிறீங்க‌ள் , 

அண்ண‌ன் சீமான் சூசை அண்ண‌னுட‌ன் க‌தைக்க‌ ம‌றுத்த‌து ப‌ச்சை பொய் , இப்ப‌ நான் உங்க‌ளுக்கு காணொளி மூல‌ம் நிருபித்த‌ மாதிரி அண்ண‌ன் சீமான் சூசை அண்ணாவுட‌ன் க‌தைக்க‌ ம‌றுத்த‌தை நிருபித்து காட்டுங்கோ 😉

புரிதலுக்கு நன்றி நாதமுனி.

நல்லது சூசை அண்ணையுடன் பேசிய சந்தோஷ் இன்னும் இருக்கிறார். கேட்டு தெரிந்துகொள்ளுங்கள் பையன்.

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, கிருபன் said:

காணொளியில் மே 11 பன்னரில் இருக்கு. அன்றுதான் தமிழ்நாட்டில் தேர்தல் பிரச்சாரம் முடிந்தது. 14ந் தேதி தேர்தல்  நடைபெற்றது. அரசியல் கட்சிகள் எல்லாம் யார் வெல்வார்கள் என்று பிஸியாக 17, 18 களில் இருந்தார்கள்.

அண்ணன் சீமான் 5 தடவைகள் சிறைக்குப் போயிருக்கின்றார். அதுவும் ஒன்றறை வருட இடைவெளியில். எனவே எல்லாத் திகதிகளும் அவருக்கும் நினைவில் இருக்காது. ஆனால் 11 மேயில் வெளியில் இருந்தவர் தேர்தல் அமளிக்குள் உள்ளே போயிருப்பார் என்பதை பையன் அறுதியிட்டுக் கூறும்போது நம்பத்தானே வேண்டும்.😄

 

சிங்கன்... பதுங்கி இருந்து கொண்டு... பாய்ண்டுக்கு பார்த்துக் கொண்டிருக்கிறார் போலை கிடக்குது. (சும்மா பகிடிக்கு) :grin:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஏன் எப்போதும் தங்களை மூளைசாலிகளாகக் கருதும் தமிழ்ச்சனங்களில் கொஞ்சப்பேர் சுவிஸ் போதகர் போல் சற்குணராஜா போன்றவர்கள் பின்னால் ஊழியம் செய்யப்போனார்கள் என்று சந்தேகம் இருந்தது. ஆனால் இந்தத் திரியில் அதற்கான விளக்கம் நன்றாகவே வந்துள்ளது😃

நன்றி நண்பர்களே☺️

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, பகலவன் said:

புரிதலுக்கு நன்றி நாதமுனி.

நல்லது சூசை அண்ணையுடன் பேசிய சந்தோஷ் இன்னும் இருக்கிறார். கேட்டு தெரிந்துகொள்ளுங்கள் பையன்.

சந்தோஷ் லண்டனில் இருந்தார். 👋

பேசி இருக்கிறேன்

Edited by Nathamuni

7 minutes ago, பையன்26 said:

அண்ண‌ன் சீமான் 2010ம் ஆண்டு தான் க‌ட்சி ஆர‌ம்பிச்ச‌வ‌ர் இது க‌ட்சியில் இருக்கும் சின்ன‌ ப‌ஸ்ச‌ங்க‌ளுக்கும் தெரியும் ,

பையன் நீங்கள் சீமானை அவர் அரசியலை பின்பற்றுவதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. 

ஆனால் நன்றாக அவர்களின் வரலாறை படியுங்கள். நான் எழுதியது நாம் தமிழர் இயக்கம். பின்னர் ஒரு வருடத்தில் நாம் தமிழர் இயக்கம் கட்சியாக மாறியது. 

நன்றி பையன் உங்கள் நேரத்துக்கும் என்னை பற்றிய புரிதலுக்கும். எனக்கு யார் மீதும் எந்தகோபமும் இல்லை ஏன் என்றால் நாம் எல்லாருமே தமிழர் தான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.