Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆமைக்கறி, உடும்புக்கறி சாப்பிட்டேன்... உங்களுக்கு என்ன பிரச்சினை? - செந்தமிழன் சீமான்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 hours ago, சண்டமாருதன் said:

நாம் தமிழர் கட்சியின் தேர்தல் வெற்றி தோல்வி என்பது பெரிய விசயமாக கருதவில்லை. பல தளங்களில் அவர்கள் ஏற்படுத்திய விழிப்புணர்வும் எழுச்சியும் தமிழ்நாட்டுக்கு மிக அவசியமானது. குறிப்பாக இளைய தலைமுறைக்கு நம்மாழ்வார் கருத்துக்களை விதைப்பதாகட்டும், இயற்கை நீர் நிலவளத்தின் பாதுகாப்பு, கார்பரேட்டுக்களின் அணுஉலை ஈதேன் மீத்தேன் கைரோகார்பன் திட்டங்களின் ஆபத்து. மணற்கொள்ளை, மத்தியரசின் தமிழ்நாட்டிற்கு எதிரான சதிகள், திராவிட அரசியல் கட்சிகளின் சாதிய ஓட்டு அரசியல் சாராய அரசியல் , குடிநீர் பிரச்சனை நிலத்தடி நீர் வற்றிப் போதலின் அவசியம்  என பல தளங்களில் இளைய தலை முறைக்கு ஒரு புதிய சிந்தனை தோற்றுவிக்கப்பட்டுள்ளது. குறிப்பக பல கல்லூரிகள் அவரை உரையாற்ற அழைத்தது எதிர்கால தலமுறைக்கு இந்த சிந்தனை அவசியமான என்பதை உணர்ந்துதான். தேர்தலின் வெற்றியை விட இந்த விழிப்புணர்வே அவசியமானது. அந்தவகையில் நாம்தமிழர் கட்சி தனது நோக்கில் கணிசமான வெற்றியை பெற்றுவிட்டது. 

கடந்த வராரம் வன்னியில் இருக்கும் நண்பர்கள் உறவினர்களோடு கதைக்கும் போது ஒரு அவர்கள் கூறியது, கத்தரி பயிரடவில்லை அதற்கு பதிலாக நிலக்கடலை பயிரிடுகின்றார்கள். ஏன் என்று கேட்டால் கொரோனாவால் இந்தியாவில் இருந்து கைபிரட் கத்தரி விதைகள் வரவில்லை. பெரும்பாலானவர்கள் நாட்டு கத்தரி விதைகளை தொலைத்து விட்டார்கள். தக்காளி முருங்கை பப்பாசி போன்றவற்றுக்கும் கைபிரட்டையே நாடுகின்றார்கள். போர் முடிந்த பத்தாண்டுகளில் விவசாயத்தின் நிலமை தலைகீழாக போய்கொண்டிருக்கின்றது.  பாரம்பரிய விதைகளை அழிப்பதின் ஆபத்து குறித்து சீமான் விழிப்பணர்வு ஏற்படுத்துவது போல் யாரும் ஏற்படுத்தியதாக நான் அறியவில்லை. 

மற்றும்படி ஈழ அரசியல் குறித்தும் இனப்படுகொலை போராட்டம் குறித்தும் கடந்த பன்னிரண்டு வருடமாக தொடர்ந்து ஞாபகப்படுத்தும் கட்சி நாமதமிழர் கட்சி மட்டுமே. அவர்களுக்கு நிகராக வேறு எவரும் அதை செய்ய வில்லை.  எப்படி புலிகளின் போராட்ட காலத்தில் புலிகளை ஒரு தரப்பு ஈழத்தமிழர்கள் தொடர்ந்து எதிர்த்தார்களோ  அதே நாம் தமிழர் விசயத்திலும் நடக்கின்றது. இது ஒன்றும் ஆச்சரியமான விசயம் கிடையாது.  நாம் தமிழர் கட்சிக்கு பதிலாக வேறு ஒரு கட்சி அதிகமாக ஈழ ஆதரவு போககை கடைப்பிடித்தாலும் அவர்களுக்கும் இந்த எதிர்ப்பு வருவது தவிர்க்க முடியாதது. இந்த இனத்தின் சிந்தனை முறை, புத்திஜீவித அளவுகோல்கள் அப்படிப் பட்டது. இதே திரியில் படித்தவர்கள் ஈழத்தமிழருக்கு தலமையாக வரவேண்டும் என்று எல்லாம் பினாத்துகின்றார்கள். ஏன் விக்கினேஸ்வரனின் படிப்புக்கு என்ன குறை ? படிப்பின் மேன்மை பதவி மேன்மை என பல காரணிகளை வைத்துதானனே முதலமைச்சராக்கினார்கள். 

விவாதங்களின் நோக்கம் பொது நன்மை நோக்கியாதனது அல்ல.  தாம் கொண்ட கருத்தின் வெற்றி நோக்கியதாகவே அமைவது எப்போதும் இங்கு வழமையான ஒன்று. இப்போதைக்கு ஈழத் தமிழர் பிரச்சனை இனப்படுகொலை குறித்து அதிகம் பேசும் சீமானை அதிலிருந்து அந்நியப்படுத்த வேண்டும்.  பின்பு அடுத்து எவர் போசுவாரோ அவரை பிடித்து இழுத்து விழுத்திவிட காத்திருப்பது. இந்த இழவை செய்வதுக்கு தி மு க வுக்கோ அல்லது பிற கட்சிகளுக்கோ தமிழகத்தில் ஒரு கராணம் இருக்கின்றது ஆனால் ஈழத்தமிழருக்கு என்ன அவசியம் ? இதுதான் இந்த இனத்தின் சாபக்கேடு. 

நேர்த்தியான பார்வையும் விளக்கமும்.
நன்றி சண்டமாருதன்.

  • Replies 777
  • Views 64k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 hours ago, Nathamuni said:

நந்தன் எழுதினத்தை கிருபன் எழுதினது என்று வேறு குழப்புகிறீர்கள். உங்கள் பதிவுகள் தவறாகவே உள்ளனவே.

சீமான் தமிழகத்தில் புடுங்கினால் போதும். இலங்கையில் ஒரு ஆணியும் புடுங்க தேவையில்லை எண்டது தானே எல்லோரும் சொல்கிறோம்

நாதரே! உங்களுக்கு ஆன்ரி சுந்தரவள்ளியை தெரியுமா? அவவும் இப்படித்தான் நாம் தமிழர்,சீமான் என்ற சொல்லை கேட்டால் போது சாமி ஆட ஆரம்பித்துவிடுவார்.அது போல்தான் இங்கும்.என்ன எழுதுகின்றோம் என்று அவர்களுக்கே புரியவில்லை.அதிலும் அந்த தொப்பி போட்ட உயரமானவர் ஹான்சம் ஆனவர் இருக்கிறாரே சொல்லி வேலையில்லை.:grin:

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Nathamuni said:

என்னத்தைக் குழம்புறது...

பிரேமருக்கு வெடி போட்டது புலி எண்டுவியல். 

இல்லை, இந்தியன் ஆமியை ஓடுங்கோ நாட்டினை விட்டு என்று அனுப்பியதால், அவமானப்பட்ட இந்திய ரா எண்டுவேன்.... நம்பவா போறியள்? 😎

கதிர்காமர் இருந்தது கொழும்பு 7.... சந்திரிகா, ரணில் என்று பெரும் அரசியல் வாதிகள் வாழ்ந்த high security zone.

கதிர்காமர் வீட்டுக்கு பக்கத்தில் இருந்த வயதான தமிழ் தம்பதிகளின் வீட்டின் மேல்மாடியில், ஒரு அறையில், அவையளுக்கே தெரியாமல் உங்கடை வன்னி ஆக்கள், ஒளிஞ்சு ஒரு கிழமையா இருந்து, ஆயுதம் (சினிப்பர்), சாப்பாடு கொண்டு போய், வெடி வச்சுப்போட்டு, பத்திரமா வெளியில ஓடி வந்திட்டினம் எண்டால் நம்பிறன், பிடி பந்தயம் எண்டுவியல்.

போலீஸ்காரரும் அந்த தமிழ் தம்பதிகளுக்கு ஒன்றுமே தெரியாது எண்டது உண்மைதான் எண்டு வழக்கு பதியாமல் இருந்த அதிசயமும் நடந்ததே.

காமினியும், லலித்தும், பிரேமரின் அரசியலுக்கு எதிராளிகளாய் இருந்த மேல்தட்டு வர்க்கத்தினர். அவர்களை இல்லாமல் செய்ய வேண்டிய தேவை அவருக்கு, மிக அவசரமாக இருந்ததோ இல்லையா? 🤔

5 hours ago, tulpen said:

நீங்க எழுதின  இந்த  விடயத்தை   உங்க வீட்டு நாய், பூனை, கோழி,போன்ற ஐந்தறிவு ஜீவன்களே  நம்பாது. ஆற்ற‍வு கொண்ட மனிதர்களை நம்ப சொல்லுறீங்களே. நியாயமா? யாராவது மிருங்களை விட குறைவான அறிவோட  இருப்பார்கள்  அவர்களிடம் போய் சொல்லி அவர்களை நம்ப வைக்க முயற்சி எடுங்கள். 

துல்பன்,  நாதமுனி சொல்வதில் உண்மை இருக்கலாம். அந்த நாட்களில் நான் முழுமையான கண்டு சிங்கள பிரதேசத்தில் சிங்கள குடும்பம் ஒன்றின் வீட்டில் வாடகைக்கு இருந்தேன். பிரேமதாசா கொல்லப்பட்டதும் கிராமமே வெடி கொழுத்தி கொண்டாடியது. விடுதலைப்புலிகள் தாண்டிக்குளம் போக்குவரத்து கட்டுப்பாட்டு நிலையத்தில் கறுப்புக்கொடி கட்டியிருந்ததாக செய்திகளில்படித்தேன். பிரேமதாசாவின் மகள் துலாஞ்சலி தனது தகப்பனாரை புலிகள் கொல்லவில்லை என்று பேட்டி ஒன்றில் குறிப்பிட்டார். லலித்தை கொன்றவர் சிகரட் ஊதிக்கொண்டு இருந்துவிட்டு அதை எறிந்துவிட்டு துப்பாக்கியை எடுத்து சுட்டதாக விசாரணைகளில் தெரிய வந்து இருந்தது. சிங்கள மக்கள் - கண்டி சிங்களவர்கள், லலித்தை கொன்றவர் பிரேமதாசாவால் ஏற்பாடு செய்யப்பட்டவர் என்றே நம்பினார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, கற்பகதரு said:

மெத்தப்படித்த அவர், உங்கள் நாய், கோழி, பூனைக்கு முதலில் சொல்லி போட்டு வாருங்கோ எண்டெல்லோ சொல்லப்போறார்.😀

அவர் தீவிரமா நம்புறதை, நீங்கள் ஏத்துக்க வேண்டும், நாம சொல்லுறது ஐந்து அறிவு கொண்டாக்களுக்கு தான்.😎

கொழும்பில வெள்ளவத்தையில தெரிந்த ஒருவர் வீடியோ கடையில, யாழ்பாணத்தால வந்த ஒருத்தர், 'அண்ண, இப்ப தான் பயணத்தால வந்தனான், உந்த பையை உதில வைச்சிட்டு, சாப்பிட்டு ஓடி வந்து எடுத்துக்கொண்டு போறன் எண்டு பையினை வைத்துப் போக, அரைமணி நேரத்தில் சும்மா அந்த ஏரியா செக்கிங்குக்கு வந்த போலீஸ், பையை செக் பண்ணி, அதில தடை செய்யப்படட சாமான்கள் இருந்தது எண்டு சொல்லி, வீடியோ கடைக்காரரை தூக்கிக் கொண்டு போய், வெலிக்கடையில போட்டு, இன்று 18 வருடம் விசாரணைக் கைதி. இவ்வளவுக்கும் பையை ஒருவர் கடையில் வைத்துவிட்டு போனதுக்கு சாட்சிகள் இருந்தனர். அதுக்குள்ள இருந்தது புலிகள் சிடி

கதிர்காமர் கொலையாளிகள் தங்கி இருந்த வீட்டின் சொந்தக்காரர்கள், தனபாலசிங்கமும், மனைவியும், அவர்கள் வீட்டில், மேலே, பாவிக்காமல் பூட்டி இருந்த அறைக்குள் தங்கி இருந்து (யன்னல் ஊடாக வந்து போன)  கொலை செய்தவர்கள் குறித்து தெரியாமால் இருந்திருக்கிறார்கள் என்று சொல்லப்பட்டு கைதாகவே இல்லை. எப்படி? 

எதுக்கும் நம்ம நாயிடமும், பூனையிடமும், கோழியிடமும் கேட்கப் போறேன்.

Edited by Nathamuni

6 hours ago, கிருபன் said:

ஒருவரை விவாதத்தில் வெல்லுவதன் மூலம் அவரது கருத்தியலை வெல்லமுடியாது என்று பல வருடங்களுக்கு முன்னரே யாழில் நானே எழுதியிருந்தேன் எனவே நான் கொண்ட கருத்தின் வெற்றிக்காக இந்தத் திரியில் கருத்தாடவில்லை.

அக்கருத்து இத்திரியின் போக்கு குறித்த பொதுவான கருத்தேயன்றி உங்களை குறிப்பிட்டு எழுதப்படவில்லை. 

6 hours ago, கிருபன் said:

சீமானின் சாதனைகளை வைத்து அவர் தமிழகத்தில் பிரச்சாரம் செய்து ஆட்சியைப் பிடிக்கட்டும். ஆனால் புலிகள் இல்லாத வெற்றிடத்தில் புலிகளையும், குறிப்பாக தலைவர் பிரபாகரனையும், ஈழத்தமிழர்களையும் தனது அரசியலுக்காகத்தான் பாவிக்கின்றார். அதைத்தான் இலங்கையில் தேர்தல் வரும்போதெல்லாம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் கூட்டணி என்று எல்லோரும் பாவிக்கின்றனர். ஆனால் இவர்கள் எவரும், படித்த விக்னேஸ்வரன் ஐயா உட்பட, தமிழ் மக்களுக்கு விடிவை ஏற்படுத்தித் தரப்போவதில்லை.

  ஈழத் தமிழரின் போராட்டம் தோற்றதிலும் இனப்படுகொலையிலும் இந்திய மததிய அரசின் துரோகங்கள் திராவிடக் கட்சிகளின் துரோகஙகளின் எதிரவினை தான் நாம தமிழர் என்ற தமிழ் தேசீய எழுசசி. பின்னர் அரசியல் அதிகாரம் அவசியம் என்ற அடிப்படையில் அரசியல் கட்சியாக வளர்கின்றது. ஈழப்போரின் முடிவின் நீட்சிதான் இந்த இனத் தேசீய எழுச்சி. ஒரு விடுதலைப்போராட்டம் எபபொழுதும் முற்று முழுதாக முடிவதிலலை. ஈழ விடுதலைப் போராட்டம்  புலிகள் தலைவர் ஈழத்தமிழர்கள்  அவர்கள் மீது நடத்தப்பட்ட படுகொலைகளும் தான் இந்த எழுச்சியின் அடிப்படை - பின்னர் அது தமிழகத்தின் பல்வேறு தள அரசியல் சமூக பிரச்சனைகளோடு விரிவடைகின்றது. இந்தக் காலத்தில் சீமான் ஈழத்தமிழரின் போராட்ட அடயாளங்களை தக்கவைக்கின்றார், பின்னர் வேறுரொவர் தககவைக்கலாம். புலம்பெயர் தமிழர்களாகிய நாம் போராட்டம்  தியாகஙகள் இனப்படுகொலை நிகழ்வுகளை உயிரப்புடன் வைத்திருக்க தவறுகின்றோம்.. அதற்கு பதிலாக சீமானை தூற்ற முற்படுகின்றோம்?

6 hours ago, கிருபன் said:

தமிழ் மக்கள் ஒரு தேசியமாக வலுவான இனமாக என்றும் இருக்கவில்லை; சாதி, மதம், பிரதேசம் என்று பிரிந்துதான் உள்ளார்கள் என்று அடிக்கடி நீங்கள் எழுதியதுண்டு. அது உண்மையும் கூட. இந்த வலுவில்லாத நிலையை உணர்ந்து ஒரு தேசிய இனமாக பலத்துடன் மீண்டுவரும்வரை தமிழர்களுக்கு உய்வில்லை. அது தலைவர் பிரபாகரன் காலத்திலேயே சாத்தியமில்லாமல் போனதாலும், கடந்த பத்து வருடங்களில் மேலும் நலிந்துபோனதாலும் பலர் நம்பிக்கையிழந்து இருக்கலாம். எனினும் இந்தத் தலைமுறையில் சாத்தியம் இல்லாவிடினும், அடுத்த தலைமுறையோ, அதற்கடுத்த தலைமுறையோ தமிழ் தேசிய இனமாக வலுவாக வருவதற்காக தேசிய உணர்வுள்ளவர்கள் சேரவேண்டும்.

இந்த தலைமுறைக்கும் அடுத்த தலைறைக்கும் உள்ள கால இடைவெளியில் ஈழ விடுதலைபபோரும் இனப்படுகொலையும் உயிர்புடன் இருக்கவேண்டும்.. உயிர்புடன் இல்லாத பட்சத்தில் எதிர்காலத் தலமுறை புதிதாக உணர்வுபெற்று எழுச்சி பெற வாய்ப்பில்லை. உயிர்புடன் வைத்திருக்கும் நாம் தமிழர் கட்சியின் பணியை ஈழத்தமிழராகிய நாம் எதிர்க்க தேவையில்லை. புலம் பெயர்ந்தவர்கள் தங்களாலனவரை மாவீரர் தினங்கள் இனப்படுகொலை தினைங்களை  எழுச்சியுடனும் உணர்வுடனும் தொடரவேணும். அதை விடுத்து நாம தமிழர் கட்சியை எதிர்ப்பதும் ஈழவிடுதலைப்போர் இனப்படுகொலை பற்றி பேசக் கூடாது என்பதால் என்ன நன்மை நிகழப்போகின்றது. ?

6 hours ago, கிருபன் said:

சீமான் போன்றவர்கள் காலம் காலமாக தமிழர்களாக தம்மை அடையாளம் கண்டவர்களைக்கூட பிரிவினை அரசியலுக்காக தெலுங்கன் என்று இழிவாகப் பேசுவதால் தமிழர்களின் அரசியல் தலைமையாக தமிழகத்தில் வரக்கூடிய தகுதியையும் இழந்து நிற்கின்றார்கள். ஆதலால் ஈழத்தமிழர்களுக்கு அவர்போன்றவர்கள் ஆதர்சமாக இருக்கமுடியாது.

இவைகள் தவிர்க்க முடியாதவை. நாயக்கர் கால ஆட்சியின் பின்னர் தமிழராக அடயாளப்படுத்துகின்றவர்கள்  கைகளில் தான் தமிழக அரசியலின் பொரும்பான்மை  அதிகாரம் உள்ளது . சிறு வணிகங்கள பெரு வணிகங்கள் அரசு துறை பணிகள் , சினிமாத் துறை , தலை நகர் சென்னையின் வர்த்தகம் என இந்த அதிகாரம் விரிவடைந்துள்ளது. இவைகள் பற்றி பேசாமல் தமிழ்த் தேசீய எழுச்சி சாத்தியமில்லை.

திராவிடமா தமிழ்த்தேசீயமா என்று வரும்போது  பெரும்பாலான திராவிட கொள்கை ஈர்பாளர்கள் திராவிடத்தின் பக்கமே செல்கினறார்கள். இதன் அரசியல் தள விழைவு ஸ்டாலினையோ அவரின் மகன் உதயநிதியையோ அவரின் மகனையோ தமிழகத்தின் அரசியல் அதிகாரத்தில் அமர்த்துவது என்பது தெரிந்தும் அதை செய்கின்றார்கள், இதற்கு சுபவி வைககோ  மதி மாறன் என பலரை எடுத்துக்காட்டலாம். ஆனால் மஞ்சள் பையுடன் ரெயிலுக்கு ஐம்பது பைசா இல்லாமல் அரசியல் தொடங்கிய கருணாநிதியின் ஊளல்கள் சொத்துக் குவிப்புகள்  குடும்ப அரசியல் தொடக்கம் காங்கிரஸ் பிஜேபி கூட்டணிகள் இறுதியாக திரும்ப ஆட்சியை பிடிப்பதற்கு பிரசாந் கிஷே◌ார் என்கிற பார்பனரின் கார்பரேட்  கம்பனியுடன் 350 கோடிக்கு ஒப்பந்தம் செய்து வேலை செய்வது தெரிந்தும் தமிழ்த்தேசீயத்தை விட திராவிடத்தின் பக்கம் நிற்கின்றனர்.. 

பெரியார் கொள்கைகளின் பற்றாளர் சுபவி ஸ்டாலினை தளபதி என்று துதிபாடுகின்றார், ஈழப்போராட்டம் முடிந்துபோன கதை என்கின்றார். வைகோ தமிழ்த்தேசீயம் என்று கிழம்பியிருக்கிறாங்கள் அவங்களை நம்பக் கூடாது என்று நாம் தமிழரை சாடி ஸ்டாலினுக்கு துதிபாடுகின்றார் ஸ்டாலின் பிரசாந் கிஸோர் என்கிற பர்பனர் ஆலோசனையில் நடக்கின்றார். இங்கே திராவிடக் கொள்கைகள் அரசியல் அதிகாரம் பார்பானியம் கார்பரேட் என அனைத்தும் கைகோர்த்து நிற்கின்றது. திராவிடக் கட்சித் தலமைகளின் பூர்வீகம் தமிழராக அடயாளப்படுத்துபவர்களிடமே உள்ளது. கடந்த ஐம்பதாண்டுகால தமிழகத்தின் அரசியல் அதிகாரம் திராவிடக் கட்சிகளிடமே உள்ளது.  பிரிவினை அரசியல் இந்த அதிகர குவிப்பின் சிதைவுக்கு அவசியமாகின்றது.  

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, சண்டமாருதன் said:

அக்கருத்து இத்திரியின் போக்கு குறித்த பொதுவான கருத்தேயன்றி உங்களை குறிப்பிட்டு எழுதப்படவில்லை. 

  ஈழத் தமிழரின் போராட்டம் தோற்றதிலும் இனப்படுகொலையிலும் இந்திய மததிய அரசின் துரோகங்கள் திராவிடக் கட்சிகளின் துரோகஙகளின் எதிரவினை தான் நாம தமிழர் என்ற தமிழ் தேசீய எழுசசி. பின்னர் அரசியல் அதிகாரம் அவசியம் என்ற அடிப்படையில் அரசியல் கட்சியாக வளர்கின்றது. ஈழப்போரின் முடிவின் நீட்சிதான் இந்த இனத் தேசீய எழுச்சி. ஒரு விடுதலைப்போராட்டம் எபபொழுதும் முற்று முழுதாக முடிவதிலலை. ஈழ விடுதலைப் போராட்டம்  புலிகள் தலைவர் ஈழத்தமிழர்கள்  அவர்கள் மீது நடத்தப்பட்ட படுகொலைகளும் தான் இந்த எழுச்சியின் அடிப்படை - பின்னர் அது தமிழகத்தின் பல்வேறு தள அரசியல் சமூக பிரச்சனைகளோடு விரிவடைகின்றது. இந்தக் காலத்தில் சீமான் ஈழத்தமிழரின் போராட்ட அடயாளங்களை தக்கவைக்கின்றார், பின்னர் வேறுரொவர் தககவைக்கலாம். புலம்பெயர் தமிழர்களாகிய நாம் போராட்டம்  தியாகஙகள் இனப்படுகொலை நிகழ்வுகளை உயிரப்புடன் வைத்திருக்க தவறுகின்றோம்.. அதற்கு பதிலாக சீமானை தூற்ற முற்படுகின்றோம்?

இந்த தலைமுறைக்கும் அடுத்த தலைறைக்கும் உள்ள கால இடைவெளியில் ஈழ விடுதலைபபோரும் இனப்படுகொலையும் உயிர்புடன் இருக்கவேண்டும்.. உயிர்புடன் இல்லாத பட்சத்தில் எதிர்காலத் தலமுறை புதிதாக உணர்வுபெற்று எழுச்சி பெற வாய்ப்பில்லை. உயிர்புடன் வைத்திருக்கும் நாம் தமிழர் கட்சியின் பணியை ஈழத்தமிழராகிய நாம் எதிர்க்க தேவையில்லை. புலம் பெயர்ந்தவர்கள் தங்களாலனவரை மாவீரர் தினங்கள் இனப்படுகொலை தினைங்களை  எழுச்சியுடனும் உணர்வுடனும் தொடரவேணும். அதை விடுத்து நாம தமிழர் கட்சியை எதிர்ப்பதும் ஈழவிடுதலைப்போர் இனப்படுகொலை பற்றி பேசக் கூடாது என்பதால் என்ன நன்மை நிகழப்போகின்றது. ?

இவைகள் தவிர்க்க முடியாதவை. நாயக்கர் கால ஆட்சியின் பின்னர் தமிழராக அடயாளப்படுத்துகின்றவர்கள்  கைகளில் தான் தமிழக அரசியலின் பொரும்பான்மை  அதிகாரம் உள்ளது . சிறு வணிகங்கள பெரு வணிகங்கள் அரசு துறை பணிகள் , சினிமாத் துறை , தலை நகர் சென்னையின் வர்த்தகம் என இந்த அதிகாரம் விரிவடைந்துள்ளது. இவைகள் பற்றி பேசாமல் தமிழ்த் தேசீய எழுச்சி சாத்தியமில்லை.

திராவிடமா தமிழ்த்தேசீயமா என்று வரும்போது  பெரும்பாலான திராவிட கொள்கை ஈர்பாளர்கள் திராவிடத்தின் பக்கமே செல்கினறார்கள். இதன் அரசியல் தள விழைவு ஸ்டாலினையோ அவரின் மகன் உதயநிதியையோ அவரின் மகனையோ தமிழகத்தின் அரசியல் அதிகாரத்தில் அமர்த்துவது என்பது தெரிந்தும் அதை செய்கின்றார்கள், இதற்கு சுபவி வைககோ  மதி மாறன் என பலரை எடுத்துக்காட்டலாம். ஆனால் மஞ்சள் பையுடன் ரெயிலுக்கு ஐம்பது பைசா இல்லாமல் அரசியல் தொடங்கிய கருணாநிதியின் ஊளல்கள் சொத்துக் குவிப்புகள்  குடும்ப அரசியல் தொடக்கம் காங்கிரஸ் பிஜேபி கூட்டணிகள் இறுதியாக திரும்ப ஆட்சியை பிடிப்பதற்கு பிரசாந் கிஷே◌ார் என்கிற பார்பனரின் கார்பரேட்  கம்பனியுடன் 350 கோடிக்கு ஒப்பந்தம் செய்து வேலை செய்வது தெரிந்தும் தமிழ்த்தேசீயத்தை விட திராவிடத்தின் பக்கம் நிற்கின்றனர்.. 

பெரியார் கொள்கைகளின் பற்றாளர் சுபவி ஸ்டாலினை தளபதி என்று துதிபாடுகின்றார், ஈழப்போராட்டம் முடிந்துபோன கதை என்கின்றார். வைகோ தமிழ்த்தேசீயம் என்று கிழம்பியிருக்கிறாங்கள் அவங்களை நம்பக் கூடாது என்று நாம் தமிழரை சாடி ஸ்டாலினுக்கு துதிபாடுகின்றார் ஸ்டாலின் பிரசாந் கிஸோர் என்கிற பர்பனர் ஆலோசனையில் நடக்கின்றார். இங்கே திராவிடக் கொள்கைகள் அரசியல் அதிகாரம் பார்பானியம் கார்பரேட் என அனைத்தும் கைகோர்த்து நிற்கின்றது. திராவிடக் கட்சித் தலமைகளின் பூர்வீகம் தமிழராக அடயாளப்படுத்துபவர்களிடமே உள்ளது. கடந்த ஐம்பதாண்டுகால தமிழகத்தின் அரசியல் அதிகாரம் திராவிடக் கட்சிகளிடமே உள்ளது.  பிரிவினை அரசியல் இந்த அதிகர குவிப்பின் சிதைவுக்கு அவசியமாகின்றது.  

நீங்கள் சொல்வதனை ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் கிருபன் ஏற்றுக் கொள்ள மாட்டார் என்றே நினைக்கிறேன்.

ஈழத்தில், பெரும்பான்மை சிங்கள இனவாதத்தினால் பாதிக்கப்பட்ட கிருபன், தமிழகத்தில் சிறுபான்மை தெலுங்கர்கள், அரசியல் அதிகாரத்தில் இருந்து கொண்டு, பெரும்பாண்மை தமிழர்களை ஆள்வதை என்ன கோணத்தில் நோக்குகிறார் என்கிற கேள்வி எழுகின்றது.

எமது நாட்டின் அரசியல் அனுபவத்தினால் பயம் கொள்வதாக கூட இருக்கலாம். பண்டாரநாயக்க (தெலுங்கர்) சிங்கள தேசியவாதம் பேசி, சிங்கள மட்டும் சட்டம் கொண்டுவருவேன் என்று என்று பேசி பதவிக்கு வந்தார், சிறுபான்மையினர் பாதிக்கப்பட்டனர். இன்றும் அவர்கள் அதேயே பேசி அரசியலுக்கு வருகின்றனர்.

தமிழகத்தில், நாம் தமிழர் நிலைப்பாடும் அதேபோல அமையுமோ என்று அவர் கவலை கொள்வது நியாயம். ஆயினும் பெரும்பான்மையினமாக அங்கே தமிழர் இருந்தாலும், ஆளும் சிறுபான்மையினர், ஊழல் இல்லாத, நேர்மையான ஆட்சி செய்தால், சீமானுக்கு அங்கே இடமில்லை என்பதும் உண்மைதானே.

350 கோடி பிரசாந்த் கிசோருக்கு கொடுத்து, வாக்குக்கு காசும் கொடுத்து பதவிக்கு வருபவர்கள், அந்த செலவழித்த பணத்தினை எடுக்க, இன்னும் ஊழல் செய்வார்களே. அதுக்கு மிச்சம் இருக்கும் மணலையும், மலையினையும் வித்து துளைப்பார்களே என்பதே என்போன்றவர்கள் பலர் அச்சம். 

சீமான் வேண்டாம் என்று சொன்னால், அப்படியானால் இந்த ஊழல் முதலைகளின் கையில் தமிழகம் என்னாகும் என்றும் சொல்லவேண்டும்.

அதிமுகவின் ஊழல் விபரம், மோடி கையில் இருப்பதால் தான் நீட், gst போன்ற எதிலுமே மத்திய அரசின் மூக்கு நுழைத்தலை தடுக்க முடியவில்லை. இதே நிலை தான் திமுக வந்தாலும்.

இதனால் தான் சீமான் திமுகவால் கடுமையாக எதிர்க்கப்படுகின்றார். 
சீமான் எதிர்ப்பு வேறு, அதுக்காக திமுக ஆதரவு நிலைப்பாடு எடுப்பது, ஊழலை ஆதரிப்பது ஆகிவிடும் என்று அவர் நினைக்கவில்லை என்று ஆதங்கம் இருந்தது. அதனால் தான் திமுக விடீயோக்களை கிருபன் இணைத்தபோது, கடுமையாக எதிரித்தேன். 

இந்த மாதிரி இயற்கையை பத்தி பேசும் ஒருவரின், கறி இட்லி குறித்த கருத்துதான் மனதை கவர்ந்தால், அது எந்த வகை ரசனை என்று புரியவில்லை

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

4 hours ago, Nathamuni said:

சீமான் வேண்டாம் என்று சொன்னால், அப்படியானால் இந்த ஊழல் முதலைகளின் கையில் தமிழகம் என்னாகும் என்றும் சொல்லவேண்டும்

இதுதான் அடிப்படை பிரச்சனை. ஒருவரின் முயற்சியை பிழை என்று சுட்டிக் காட்டும் போது சரியாக யார் முயற்சிக்கின்றார் என்பதை சுட்டிக்காட்டுவதில்லை. ஏனெனில் அவ்வாறான ஒரு தலமை தற்போது கிடையாது. இந்த நிலமையானது சுட்டிக் காட்டுபவர்களின் விருப்பு வெறுப்புக்கு அப்பாற்பட்டு உழல்வாதிகளையே திரும்ப திரும்ப அதிகாரத்தில் அமர வைக்கவே துணை நிற்கின்றது.

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, கிருபன் said:

கல்தோன்றி மண் தோன்றக் காலத்தே வாளோடு முன்தோன்றிய மூத்த இனம் தமிழினம்.

நாம் தமிழர் இயக்கம் ஆரம்பத்தில் இருந்தே இப்படியா 🤣

  • கருத்துக்கள உறவுகள்

நாதா என‌க்கு ல‌க்ஸ்ம‌ன்காதிர் காம‌ர‌ யார் கொலை செய்தார்க‌ள் தெரியாது , ஆனால் ப‌ழி எம்ம‌வ‌ர்க‌ள் மேல் சும‌த்த‌ப் ப‌ட்ட‌து , 
அத‌ற்கு பிற‌க்கு தான் எம்ம‌வ‌ர் ஜ‌ரோப்பாவுக்கு வ‌ர‌ ஜ‌ரோப்பா த‌டை போட்ட‌து /

நீங்க‌ள் சொன்ன‌ மாதிரியும் ந‌ட‌ந்து இருக்க‌லாம் , 

அவ‌னின் இற‌ப்பு அப்போது ப‌ல‌ருக்கு ம‌கிழ்ச்சியை த‌ந்தாலும் , அவ‌ரின் கொலையால் பாதிக்க‌ப் ப‌ட்ட‌து எம் ச‌மாதான‌ பேச்சு வார்த்தையும் /

ம‌கிந்தா ப‌ர‌ம்ப‌ர‌ மிக‌வும் ஆவ‌த்தான‌வ‌ர்க‌ள் , அர‌சிய‌லுக்காக‌ அப்பாவி ம‌க்க‌ளை கூட‌ கொல்ல‌க் கூடிய‌வ‌ர்க‌ள் 😡

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, சண்டமாருதன் said:

இதுதான் அடிப்படை பிரச்சனை. ஒருவரின் முயற்சியை பிழை என்று சுட்டிக் காட்டும் போது சரியாக யார் முயற்சிக்கின்றார் என்பதை சுட்டிக்காட்டுவதில்லை. ஏனெனில் அவ்வாறான ஒரு தலமை தற்போது கிடையாது. இந்த நிலமையானது சுட்டிக் காட்டுபவர்களின் விருப்பு வெறுப்புக்கு அப்பாற்பட்டு உழல்வாதிகளையே திரும்ப திரும்ப அதிகாரத்தில் அமர வைக்கவே துணை நிற்கின்றது.

சீமானை எதிர்ப்பவர்கள் எவ்வித மாற்றுக்கருத்துக்களும் வைக்காமல் வேற்றுத்தனமான கருத்துக்களை வைத்து ஊழல்கட்சிகளுக்கே மறைமுக ஆதரவை வழங்குகின்றார்கள்.
பார்பனியம் இவரை கொண்டு நடத்துகின்றது,ஈழப்பிரச்சனைகளை நீர்த்துப்போக செய்கின்றார்கள் என விவாதிப்பவர்கள் இதுவரை எந்த ஆதாரங்களையும் காட்டவேயில்லை.
 
  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:

சீமானை எதிர்ப்பவர்கள் எவ்வித மாற்றுக்கருத்துக்களும் வைக்காமல் வேற்றுத்தனமான கருத்துக்களை வைத்து ஊழல்கட்சிகளுக்கே மறைமுக ஆதரவை வழங்குகின்றார்கள்.
பார்பனியம் இவரை கொண்டு நடத்துகின்றது,ஈழப்பிரச்சனைகளை நீர்த்துப்போக செய்கின்றார்கள் என விவாதிப்பவர்கள் இதுவரை எந்த ஆதாரங்களையும் காட்டவேயில்லை.
 
ஊரில ரலி சைக்கிளை, கழுவி, துடைச்சு, கவட்டுக்க வைத்துக்கொண்டு திரிந்த பொடியளை கொண்டு பொய், ஆயுத பயிட்சி கொடுத்து, அவர்களுக்கு லோக்கலில் ஆதரவா இருக்குமாறு, கொழுதூர் மணி போன்றவர்களை செட் பண்ணி, பின்னர் தமக்குள்ள அடிபட வைத்து, வளர்ந்த ஒரு குறுப்பினை அழிக்க, ஆமியை அனுப்பி, சரி வரவில்லை எண்டோன்ன, சிங்களவனுக்கு முழு ஆதரவு கொடுத்து, இனத்தையே ஒட்டுமொத்தமாக அழித்த இந்தியா, இனி ஒரு தீர்வு என்று வரவே தேவையில்லை.

பிச்சை வேண்டாம், நாயை பிடி.

ஊழல் அரசியல்வாதிகள் இல்லாமல் தமிழக மக்கள் வாழ்ந்தாலே எமக்கு போதும். அப்படி வாழ்ந்து கொண்டே தார்மீக ஆதரவு எமக்கு தந்தாலே போதுமானது. அப்பனுக்கே ஒரு துண்டு கோவணம். அதுக்குள்ள மகனுக்கும் இழுத்து போர்த்து விடு எண்டால் எப்படி நிலையில் அங்கே இருக்கிறார்கள்.

ஊழல்வாதிகள் எமக்கு உதவுவர் என்ற நிலையில் தமிழக அரசியலை பார்க்காமல் இருந்தாலே தெளிவாகமுடியும்.

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, பையன்26 said:

நாதா என‌க்கு ல‌க்ஸ்ம‌ன்காதிர் காம‌ர‌ யார் கொலை செய்தார்க‌ள் தெரியாது , ஆனால் ப‌ழி எம்ம‌வ‌ர்க‌ள் மேல் சும‌த்த‌ப் ப‌ட்ட‌து , 
அத‌ற்கு பிற‌க்கு தான் எம்ம‌வ‌ர் ஜ‌ரோப்பாவுக்கு வ‌ர‌ ஜ‌ரோப்பா த‌டை போட்ட‌து /

நீங்க‌ள் சொன்ன‌ மாதிரியும் ந‌ட‌ந்து இருக்க‌லாம் , 

அவ‌னின் இற‌ப்பு அப்போது ப‌ல‌ருக்கு ம‌கிழ்ச்சியை த‌ந்தாலும் , அவ‌ரின் கொலையால் பாதிக்க‌ப் ப‌ட்ட‌து எம் ச‌மாதான‌ பேச்சு வார்த்தையும் /

ம‌கிந்தா ப‌ர‌ம்ப‌ர‌ மிக‌வும் ஆவ‌த்தான‌வ‌ர்க‌ள் , அர‌சிய‌லுக்காக‌ அப்பாவி ம‌க்க‌ளை கூட‌ கொல்ல‌க் கூடிய‌வ‌ர்க‌ள் 😡

அந்த வீடு, மேல்மாடி, கொலையாளிகள் தங்கி இருந்தார்கள் எல்லாம் கட்டுக்கதை.

கதிர்காமர் அருகில் இருந்தே சுடப்பட்டார். அதனால் அடைந்த பலன் இரண்டு. 

ஒன்று, புலிகள் மீது பழி விழுந்து ஐரோப்பாவில், கனடாவில் தடை விழுந்தது.

மகிந்தருக்கு பிரதமராகும் சந்தர்ப்பம் கிடைத்தது.

வீட்டில நாய், பூனை இருந்தால் சொல்லிப்பாருங்கள். விளங்கிவிட்டது என்று சொன்னால் எனக்கு சொல்லுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, Nathamuni said:

ஊரில ரலி சைக்கிளை, கழுவி, துடைச்சு, கவட்டுக்க வைத்துக்கொண்டு திரிந்த பொடியளை கொண்டு பொய், ஆயுத பயிட்சி கொடுத்து, அவர்களுக்கு லோக்கலில் ஆதரவா இருக்குமாறு, கொழுதூர் மணி போன்றவர்களை செட் பண்ணி, பின்னர் தமக்குள்ள அடிபட வைத்து, வளர்ந்த ஒரு குறுப்பினை அழிக்க, ஆமியை அனுப்பி, சரி வரவில்லை எண்டோன்ன, சிங்களவனுக்கு முழு ஆதரவு கொடுத்து, இனத்தையே ஒட்டுமொத்தமாக அழித்த இந்தியா, இனி ஒரு தீர்வு என்று வரவே தேவையில்லை.

பிச்சை வேண்டாம், நாயை பிடி.

ஊழல் அரசியல்வாதிகள் இல்லாமல் தமிழக மக்கள் வாழ்ந்தாலே எமக்கு போதும். அப்படி வாழ்ந்து கொண்டே தார்மீக ஆதரவு எமக்கு தந்தாலே போதுமானது. அப்பனுக்கே ஒரு துண்டு கோவணம். அதுக்குள்ள மகனுக்கும் இழுத்து போர்த்து விடு எண்டால் எப்படி நிலையில் அங்கே இருக்கிறார்கள்.

ஊழல்வாதிகள் எமக்கு உதவுவர் என்ற நிலையில் தமிழக அரசியலை பார்க்காமல் இருந்தாலே தெளிவாகமுடியும்.

எத்த‌ன‌ தீராவிட‌ர்க‌ள் வீட்டில் எங்க‌ த‌லைவ‌ரின் ப‌ட‌ம் இருக்கு , என‌க்கு தெரிந்து அனைத்து நாம் த‌மிழ‌ர் க‌ட்சி உற‌வுக‌ளின் வீட்டில் த‌லைவ‌ர் ப‌ட‌ம் இருக்கு ,

நாதா உங்க‌ள் க‌ருத்துட‌ன் உட‌ன் ப‌டுகிறேன் ஊழ‌ல் திராவிட‌ர்க‌ளால் எம‌க்கு ஒரு போது ந‌ன்மை வ‌ர‌ப் போர‌து இல்ல‌ , இவ‌ர்க‌ளை ந‌ம்பினா ந‌டுத்தெருவில் தான் நிக்க‌னும் , இப்ப‌ இருக்கிற‌ இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ளுக்கு இருக்கும் அறிவும் அர‌சிய‌ல் புரித‌லும் எம்ம‌வ‌ர் ப‌ல‌ருக்கு இல்ல‌ , அவையின் வ‌ய‌த‌ பார்த்தா 55வ‌ய‌த‌ தாண்டின‌வ‌ர்கள்  ,

இவ‌ர்க‌ள் புடுங்குவ‌து தேவை இல்லா ஆணி என்று தெரிந்து தான் என் வ‌ழிய‌ வேறு திசைக்கு மாற்றி த‌மிழ‌க‌த்து இளைஞ‌ர்க‌ளுட‌ன் ஒன்னா ப‌ய‌ணிக்கிறேன் 

Edited by பையன்26

  • கருத்துக்கள உறவுகள்

101903922_172080774336373_5624103955777716224_n.jpg?_nc_cat=100&_nc_sid=e3f864&_nc_eui2=AeFi4XfHawSR-m_RvfBcS9_tRiXhCloHVfhGJeEKWgdV-CDXVLGJytjUmnqkOUkOvHqAnS9_3iuyXYmfCgbwEhJS&_nc_ohc=XxY78AcW0fYAX-X46D7&_nc_ht=scontent-frx5-1.xx&oh=603a6b8049f13d11ce47704aae68926e&oe=5F00BFDA

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் ப‌த்து வ‌ருட‌ம் க‌ழித்து பார்த்த‌ த‌மிழ‌க‌ அர‌சிய‌லில் மாற்ற‌ம் தெரியும் என்று ப‌ல‌ வாட்டி எழுதி விட்ட‌ன் , 
என‌து அத்த‌னை ப‌திவுக்கும் இந்த‌ ப‌திவு என்றே போதும் , 

20200607-120317.png

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பையன்26 said:

நாதா என‌க்கு ல‌க்ஸ்ம‌ன்காதிர் காம‌ர‌ யார் கொலை செய்தார்க‌ள் தெரியாது , ஆனால் ப‌ழி எம்ம‌வ‌ர்க‌ள் மேல் சும‌த்த‌ப் ப‌ட்ட‌து , 
அத‌ற்கு பிற‌க்கு தான் எம்ம‌வ‌ர் ஜ‌ரோப்பாவுக்கு வ‌ர‌ ஜ‌ரோப்பா த‌டை போட்ட‌து /

நீங்க‌ள் சொன்ன‌ மாதிரியும் ந‌ட‌ந்து இருக்க‌லாம் , 

அவ‌னின் இற‌ப்பு அப்போது ப‌ல‌ருக்கு ம‌கிழ்ச்சியை த‌ந்தாலும் , அவ‌ரின் கொலையால் பாதிக்க‌ப் ப‌ட்ட‌து எம் ச‌மாதான‌ பேச்சு வார்த்தையும் /

ம‌கிந்தா ப‌ர‌ம்ப‌ர‌ மிக‌வும் ஆவ‌த்தான‌வ‌ர்க‌ள் , அர‌சிய‌லுக்காக‌ அப்பாவி ம‌க்க‌ளை கூட‌ கொல்ல‌க் கூடிய‌வ‌ர்க‌ள் 😡

பையன்..

இந்த கதிர்காமரை யார் கொலை செய்தார்கள் என்று தெரியாது. ஆனால் அவரைப் பற்றி   இங்கிலாந்து காரர் ஒருவர் புத்தகம் எழுதியுள்ளார். அதன் சில பக்கங்களை கூகிள் புத்தக பக்கத்தில் முன்னம் வாசிச்சு இருக்கிறன். நேற்று தேடினேன். கிடைக்கவில்லை.

அதில் கதிர்காமர் சந்திரிகாவுக்கு எழுதிய கடிதங்கள் பற்றி இருக்கு. அதாவது கதிர்காமருக்கு பிரதமர் ஆகும் கனவு இருந்ததாக. தன்னை பிரதமர் வேட்பாளராக அறிவிக்குமாறு அந்த கடிதங்கள்.

ஆனால் இனவெறிக்குப் பயந்த சந்திரிக்கா இழுத்தடித்து உள்ளார். எப்படியானாலும் தமிழன் பிரதமர் ஆகிவிட்டார் என வந்துவிடும் அல்லவா?!

அப்போது சந்திரிக்காவை கடிந்தும் கடிதம் எழுதினாராம் கதிர்காமர். கடைசியில் அவரை மேலே அனுப்பியதும் கீழே இருந்த மகிந்த சகோதர்ர்கள் மேலே வந்தார்களாம். சந்திரிக்காவுக்கு கவலையாம்.

இப்படி அந்த புத்தகத்தில் இருக்கு.

Edited by இசைக்கலைஞன்

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, இசைக்கலைஞன் said:

பையன்..

இந்த கதிர்காமரை யார் கொலை செய்தார்கள் என்று தெரியாது. ஆனால் அவரைப் மற்ற இங்கிலாந்து கார ர் ஒருவர் புத்தகம் எழுதியுள்ளார். அதன் சில பக்கங்களை கூகிள் புத்தக பக்கத்தில் முன்னம் வாசிச்சு இருக்கிறன். நேற்று தேடினேன். கிடைக்கவில்லை.

அதில் கதிர்காமர் சந்திரிகாவுக்கு எழுதிய கடிதங்கள் பற்றி இருக்கு. அதாவது கதிர்காமருக்கு பிரதமர் ஆகும் கனவு இருந்ததாக. தன்னை பிரதமர் வேட்பாளராக அறிவிக்குமாறு அந்த கடிதங்கள்.

ஆனால் இனவெறிக்குப் பயந்த சந்திரிக்கா இழுத்தடித்து உள்ளார். எப்படியானாலும் தமிழன் பிரதமர் ஆகிவிட்டார் என வந்துவிடும் அல்லவா?!

அப்போது சந்திரிக்காவை கடிந்தும் கடிதம் எழுதினாராம் கதிர்காமர். கடைசியில் அவரை மேலே அனுப்பியதும் கீழே இருந்த மகிந்த சகோதர்ர்கள் மேலே வந்தார்களாம். சந்திரிக்காவுக்கு கவலையாம்.

இப்படி அந்த புத்தகத்தில் இருக்கு.

ஆறுமுகன் தொண்டைமான் மரணம் குறித்தும் எதிர்காலத்தில் புத்தகம் வரும்.

அம்மானும் அடக்கி வாசிக்கவேண்டும். இல்லையெண்டால், தங்கச்சிமார் கண்ணீர் அஞ்சலி செலுத்த வேண்டி இருக்கும்.

டக்ல்ஸ் மாமாவுக்கு தெரியும்.... எல்லைக்கோடு. அதிக அலம்பறை பண்ணுவதில்லை.  

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணன் சீமானை சென்ற தேர்தல் வரையில்    தமிழகம் கண்டு கொள்ளாமல் இருந்த காரணங்கள்.

1) பட்டி தொட்டி எங்கும் சென்று சேரவில்லை.

2) ஊடக மறைப்பு (விஜயகாந்துக்கு எவ்வளவு coverage கொடுத்தார்கள்; கமலுக்கு எவ்வளவு என ஒப்பீடு செய்தால் தெரிய வரும்)

3) அந்நிய lobby (குறிப்பாக தெலுங்கு lobby)

4) பணவசதி இன்மை

5) இவரும் கூட்டணிக்கு போய்விடுவார் எனும் மக்களின் அவநம்பிக்கை

6) வாக்குக்கு பணம் தரவில்லை.

7) சினிமாகார்ர்களை (கமல், இனிமேல் ரஜினி) தேர்தலில் இறக்கி வாக்குகளை சிதறடிக்கும் ஆரிய சிந்தனைகள்.

”8) சமூக ஊடகங்களில் நடுநிலைவாதிகள் எனும் பெயரில் திராவிடத்தார் எழுதும் பொய்கள். (உ+ம்: சுபவீ, ஆழி செந்தில்நாதன், மே 17, கொளத்தூர் மணி, மதிமாறன், etc)

===================================

ஈழத்தமிழர்களில் சிலர் அண்ணன் சீமானை எதிர்க்க காரணங்கள்.

1) அண்ணன் வைகோ மீது வைத்த கண்மூடித்தனமான விசுவாசம்; ஏமாறும் தன்மை

2) மே 17 திருமுருகன் காந்தியின் உரை வீச்சு. இவர் வைகோவின் சீடர் என்பது கூடுதல் தகவல்.

3) மேலே குறிப்பிட்ட காரணம் 8 ஐ வாசித்து, குழம்பிப் போய் அதை மற்றவர்களுக்கும் கடத்தி      விடுவது.

Edited by இசைக்கலைஞன்

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, இசைக்கலைஞன் said:

அண்ணன் சீமானை சென்ற தேர்தல் வரையில்    தமிழகம் கண்டு கொள்ளாமல் இருந்த காரணங்கள்.

1) பட்டி தொட்டி எங்கும் சென்று சேரவில்லை.

2) ஊடக மறைப்பு (விஜயகாந்துக்கு எவ்வளவு coverage கொடுத்தார்கள்; கமலுக்கு எவ்வளவு என ஒப்பீடு செய்தால் தெரிய வரும்)

3) அந்நிய lobby (குறிப்பாக தெலுங்கு lobby)

4) பணவசதி இன்மை

5) இவரும் கூட்டணிக்கு போய்விடுவார் எனும் மக்களின் அவநம்பிக்கை

6) வாக்குக்கு பணம் தரவில்லை.

7) சினிமாகார்ர்களை (கமல், இனிமேல் ரஜினி) தேர்தலில் இறக்கி வாக்குகளை சிதறடிக்கும் ஆரிய சிந்தனைகள்.

”8) சமூக ஊடகங்களில் நடுநிலைவாதிகள் எனும் பெயரில் திராவிடத்தார் எழுதும் பொய்கள். (உ+ம்: சுபவீ, ஆழி செந்தில்நாதன், மே 17, கொளத்தூர் மணி, மதிமாறன், etc)

===================================

ஈழத்தமிழர்களில் சிலர் அண்ணன் சீமானை எதிர்க்க காரணங்கள்.

1) அண்ணன் வைகோ மீது வைத்த கண்மூடித்தனமான விசுவாசம்; ஏமாறும் தன்மை

2) மே 17 திருமுருகன் காந்தியின் உரை வீச்சு. இவர் வைகோவின் சீடர் என்பது கூடுதல் தகவல்.

3) மேலே குறிப்பிட்ட காரணம் 8 ஐ வாசித்து, குழம்பிப் போய் அதை மற்றவர்களுக்கும் கடந்த விடுவது.

மேலுள்ள 7 விடயங்களில் எவ்விடங்களில் மாறுதல் நடந்திருக்கின்றன என்று நினைக்கிறீர்கள்?

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Nathamuni said:

மேலுள்ள 7 விடயங்களில் எவ்விடங்களில் மாறுதல் நடந்திருக்கின்றன என்று நினைக்கிறீர்கள்?

1) குக்கிராமங்களிலும் கால் பதித்துள்ளது நாம் தமிழர். Environmental wing செய்யும் களப்பணிகளும் கூடுதல் பலம். சென்ற உள்ளாட்சி தேர்தலில் சீரங்கம் (திருச்சி) கவுன்சிலர் தேர்தலில் இரண்டாவது இடம் வந்தது ஒரு ஆச்சரியம். அங்கே ஐயர்கள் அதிகம். 

2) ஊடக மறைப்பு இப்போது முன்பை விட அதிகம். ஆகவே வளர்ச்சி என்பது மட்டுப்படுத்தப் படுகிறது.

3) இன்னும் வேகமெடுத்து செயல்படுகிறது. தமிழர்கள் தமிழ்நாட்டில் வந்தேறிகள். தெலுங்கர்கள் நாங்கள்தான் ஆளுவோம் என வெளிப்படையாக பதிவுகளும், மேடைப் பேச்சுகளும் ஆரம்பித்து விட்டன.

4) இன்னும் பணவசதி இல்லாத நிலைமைதான். துளி எனும் திட்டத்தின் மூலம் ஒவ்வொரு தொகுதி பொறுப்பாளரும் மாதம் ரூ.1000 சேர்த்து தர வேண்டும் எனும் திட்டம் ஓடிக்கொண்டிருக்கு.

5) மக்கள் இப்போது நம்ப ஆரம்பித்து விட்டார்கள். ஆனால் தராசின் முள்ளை மற்றப் பக்கம் திருப்புவதற்கு கனதியான ஒரு அலை தேவைப்படுகிறது. ஏறு தழுவுதல், காவிரி போராட்டம் போல. ஆனால் காலம் lockdown இல் இருக்கு.

6) தொடர்ந்தும் வாக்குக்கு பணம் தரமாட்டார்கள். மற்றவர்கள் அள்ளி வீசுவார்கள். இது தொடர்ந்தும் ஒரு பெரும் பின்னடைவுதான்.

7) கமல் தொடர்ந்தும் நகர அதிருப்தி வாக்குகளை சிதறடிப்பார். குறிப்பாக, சென்னை, சேலம், கோவை. ரஜினி தப்பி ஓடப்பார்க்கிறார். ஆனால் பாஜக பிடித்து இறக்கி விடுவார்கள். இது நடந்தால் சிறு நகரப் பகுதிகளில் வாக்குகள் பறிபோகும்.

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, இசைக்கலைஞன் said:

பையன்..

இந்த கதிர்காமரை யார் கொலை செய்தார்கள் என்று தெரியாது. ஆனால் அவரைப் பற்றி   இங்கிலாந்து காரர் ஒருவர் புத்தகம் எழுதியுள்ளார். அதன் சில பக்கங்களை கூகிள் புத்தக பக்கத்தில் முன்னம் வாசிச்சு இருக்கிறன். நேற்று தேடினேன். கிடைக்கவில்லை.

அதில் கதிர்காமர் சந்திரிகாவுக்கு எழுதிய கடிதங்கள் பற்றி இருக்கு. அதாவது கதிர்காமருக்கு பிரதமர் ஆகும் கனவு இருந்ததாக. தன்னை பிரதமர் வேட்பாளராக அறிவிக்குமாறு அந்த கடிதங்கள்.

ஆனால் இனவெறிக்குப் பயந்த சந்திரிக்கா இழுத்தடித்து உள்ளார். எப்படியானாலும் தமிழன் பிரதமர் ஆகிவிட்டார் என வந்துவிடும் அல்லவா?!

அப்போது சந்திரிக்காவை கடிந்தும் கடிதம் எழுதினாராம் கதிர்காமர். கடைசியில் அவரை மேலே அனுப்பியதும் கீழே இருந்த மகிந்த சகோதர்ர்கள் மேலே வந்தார்களாம். சந்திரிக்காவுக்கு கவலையாம்.

இப்படி அந்த புத்தகத்தில் இருக்கு.

அப்ப‌ சிங்க‌ள‌மே அவ‌ர‌ கொலை செய்து விட்டு நாட‌க‌த்தை அர‌ங் ஏற்றி இருக்கின‌ம் , சிங்க‌ள‌த்துக்கு விஸ்வாஸ்சமாய் இருந்த‌வ‌ருக்கு ந‌ட‌ந்த‌ கொடுமையை நினைக்க‌ ஆச்ச‌ரிய‌மாய் இருக்கு , 

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, பையன்26 said:

அப்ப‌ சிங்க‌ள‌மே அவ‌ர‌ கொலை செய்து விட்டு நாட‌க‌த்தை அர‌ங் ஏற்றி இருக்கின‌ம் , சிங்க‌ள‌த்துக்கு விஸ்வாஸ்சமாய் இருந்த‌வ‌ருக்கு ந‌ட‌ந்த‌ கொடுமையை நினைக்க‌ ஆச்ச‌ரிய‌மாய் இருக்கு , 

சிங்கள மட்டும் சட்டம் கொண்டு வந்தாப்பிறகு, தமிழ் கிறிஸ்தவராக சுதந்திரத்துக்கு முன்னர் இருந்து, பின்னர் சிங்கள பௌத்தராக நடித்த, சிங்க‌ள‌த்துக்கு விஸ்வாஸ்சமாய் இருந்த‌ பண்டாரநாயகவிக்கும் வெடிதானே விழுந்தது.

காரணம், பெடரல் முறையினை கொண்டுவந்துவிடுவார் என்று தான்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, இசைக்கலைஞன் said:

1) குக்கிராமங்களிலும் கால் பதித்துள்ளது நாம் தமிழர். Environmental wing செய்யும் களப்பணிகளும் கூடுதல் பலம். சென்ற உள்ளாட்சி தேர்தலில் சீரங்கம் (திருச்சி) கவுன்சிலர் தேர்தலில் இரண்டாவது இடம் வந்தது ஒரு ஆச்சரியம். அங்கே ஐயர்கள் அதிகம். 

2) ஊடக மறைப்பு இப்போது முன்பை விட அதிகம். ஆகவே வளர்ச்சி என்பது மட்டுப்படுத்தப் படுகிறது.

3) இன்னும் வேகமெடுத்து செயல்படுகிறது. தமிழர்கள் தமிழ்நாட்டில் வந்தேறிகள். தெலுங்கர்கள் நாங்கள்தான் ஆளுவோம் என வெளிப்படையாக பதிவுகளும், மேடைப் பேச்சுகளும் ஆரம்பித்து விட்டன.

4) இன்னும் பணவசதி இல்லாத நிலைமைதான். துளி எனும் திட்டத்தின் மூலம் ஒவ்வொரு தொகுதி பொறுப்பாளரும் மாதம் ரூ.1000 சேர்த்து தர வேண்டும் எனும் திட்டம் ஓடிக்கொண்டிருக்கு.

5) மக்கள் இப்போது நம்ப ஆரம்பித்து விட்டார்கள். ஆனால் தராசின் முள்ளை மற்றப் பக்கம் திருப்புவதற்கு கனதியான ஒரு அலை தேவைப்படுகிறது. ஏறு தழுவுதல், காவிரி போராட்டம் போல. ஆனால் காலம் lockdown இல் இருக்கு.

6) தொடர்ந்தும் வாக்குக்கு பணம் தரமாட்டார்கள். மற்றவர்கள் அள்ளி வீசுவார்கள். இது தொடர்ந்தும் ஒரு பெரும் பின்னடைவுதான்.

7) கமல் தொடர்ந்தும் நகர அதிருப்தி வாக்குகளை சிதறடிப்பார். குறிப்பாக, சென்னை, சேலம், கோவை. ரஜினி தப்பி ஓடப்பார்க்கிறார். ஆனால் பாஜக பிடித்து இறக்கி விடுவார்கள். இது நடந்தால் சிறு நகரப் பகுதிகளில் வாக்குகள் பறிபோகும்.

ட‌ங்கு க‌ம‌லின் ம‌ற்றும் ர‌ஜ‌னியின் அர‌சிய‌ல் வ‌ருகை  ச‌ர்ந்ப்ப‌ வாத‌ அர‌சிய‌ல் , க‌ம‌லால் த‌மிழ‌க‌ அர‌சிய‌லில் மாற்ற‌த்தை ஏற்ப‌டுத்த‌ முடியாது ,  ஜெய‌ல‌லிதா என்ற‌ பெரும் ஆளுமை இருந்து இருந்தா , க‌ம‌ல் அர‌சிய‌லை எட்டியும் பார்த்து இருக்க‌ மாட்டார் , வேங்கை ம‌க‌ன் ஒரு தேர்த‌ல் ஓட‌ ந‌ல்ல‌ பாட‌ம் க‌ற்று கொள்ளுவார் , அதோட‌ த‌மிழ‌க‌ ஊட‌க‌துறையில் ர‌ஜ‌னியை ப‌ற்றி பெரிசா அல‌ட்ட‌ மாட்டின‌ம் /

வ‌ந்தா நேர‌டியா முத‌ல் அமைச்ச‌ர் என்ற‌ நினைப்பில் ர‌ஜ‌னி மித‌க்கிறார் , த‌மிழ‌க‌ அர‌சிய‌லின் ஆள‌ம் தெரியாம‌ ர‌ஜ‌னி கால் வைக்கிறார் , 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.