Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Salmon and broccolini

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 Salmon and broccolini  

8-E534-DB3-812-A-44-BD-AC87-3-D3-EEC5-AD

சமையற்கட்டில் அதிகம் நேரம் செலவழிக்க விரும்பாதவர்களுக்கும்.. அதிகளவில், வகைவகையான உணவு செய்ய தேவையில்லாதவர்களுக்கும் ஒரு இலகுவான உணவு, அதே நேரம் சத்தான ஒரு உணவு.

தேவையான பொருட்கள்
Salmon மீன் - ஒரு சிறிய துண்டு
Broccolini - ஒரு கட்டு
Thickened cream - 300ml
மஞ்சள் தூள், கரம் மசாலா, உப்பு, மிளகு ருசிக்கேற்ப

033-B5-B36-4-D21-45-BE-88-C6-FAAFECFB261

உங்களது வீட்டிலிருக்கும் மசாலா தூள், அல்லது herbs mix அல்லது கறிதூள் இவைகளில் ஏதாவது ஒன்று, சிறிதளவு ஒலிவ் எண்ணெய், உப்பு, இவை மூன்றையும் கலந்து மீன் துண்டை பிரட்டி ஒரு மணித்தியாலம் ஊற வைக்கவும்..

பின்பு non stick fry panல் மீனை இரு பக்கமும் மாற்றிமாற்றி வைத்து சமைக்கவும்.. மீனின் தோல் கருகுமட்டும் அடுப்பில் வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை.. மீன் அளவாக வெந்திருந்தாலே போதும்..

அடுத்து, broccolini கழுவி, தண்ணீர் வடிந்தபின், பாத்திரம் ஒன்றில் சிறிதளவு பட்டர்( விருப்பமென்றால்) சேர்த்து பச்சை நிறம் அதிகம் மாறும் முன்பு வேகவைத்து எடுத்து வைக்கவும்..உப்பு, மிளகுதூள் விரும்பினால் சிறிதளவு தூவி விடலாம்

அதே பாத்திரத்திலேயே, இந்த thickened creamஐ ஊற்றி, விரும்பினால் அதற்குள் சிறிதளவு மஞ்சள், அல்லது கரம் மசாலா சேர்த்து, ஒரு தரம் கொதிக்கவைத்தபின்பு இறக்கிவைக்கவும்..இது ஒரு வகை creamy sauce 
உங்களுக்கு thick sauce விருப்பமில்லையென்றால் சிறிதளவு தண்ணீர் சேர்த்தால் sauce thickஆக இருக்காது..

75-AB4-A5-D-F443-4220-B187-6-BC3-DE5-AC2

பின்பு ஒரு bowlல் சமைத்த மீன் துண்டு, வேகவைத்த broccolini அருகருகே வைத்து இந்த creamy sauce அவற்றின் மேல் ஊற்றியபின்பு சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும்..தேவையென்றால் உப்பு மிளகுதூளை சேர்க்கலாம்..

மீனை ovenல் bakeபண்ணலாம்.. broccoliniற்கு பதிலாக asparagusஐ சேர்க்கலாம்..மசாலா, காரம் அவரவர் ருசிக்கேற்ப.. மிகவும் இலகுவான செய்முறை..

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு மிகவும் பிடித்த மீனிது. கிழமையில் ஒருக்காவது செய்து கொடுப்பேன், அடுத்த முறை broccoli உடன் செய்து கொடுத்து பார்ப்போம். நன்றி பகிர்வுக்கு. 

Hotel இல் asparagus உடன் உருளைகிழங்கும் மசித்து தருவார்கள் அந்த மாதிரி சுவை

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, உடையார் said:

எனக்கு மிகவும் பிடித்த மீனிது. கிழமையில் ஒருக்காவது செய்து கொடுப்பேன், அடுத்த முறை broccoli உடன் செய்து கொடுத்து பார்ப்போம். நன்றி பகிர்வுக்கு. 

Hotel இல் asparagus உடன் உருளைகிழங்கும் மசித்து தருவார்கள் அந்த மாதிரி சுவை

நான் மீனை ovenல் வைத்து bakeபண்ணுவது வழமை, pan fryயை விட baking நன்றாக வரும். 

உருளைக்கிழங்கு அதிகம் சேர்ப்பது இல்லை, ஆனாலும் செய்து பார்க்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

நான் மீனை ovenல் வைத்து bakeபண்ணுவது வழமை, pan fryயை விட baking நன்றாக வரும். 

உருளைக்கிழங்கு அதிகம் சேர்ப்பது இல்லை, ஆனாலும் செய்து பார்க்கிறேன்.

நானும் Oven இல் தான் வைப்பது. மெங்கொலியாவிற்கு அடிகடி போவதுட்டு வேலை விடயமாக, அப்போ Hotel இல் நிற்க்கும் போது சல்மன், உருளைகிழுங்குதான் சாப்பிடுவேன். உங்களின் செய்முறையை பார்த்தவுடன் அங்கு சாப்பிட்ட நினைவுதன் உடனே வந்திச்சு. 

அங்கு மரக்கறி சாப்படோ கோழியோ கிடைப்பது அரிது. மாடு ஆடு தான் எல்லோரும். அவர்களுக்கு மீன் சாப்பிட பிடிக்காது /  தெரியாது எப்படி சாப்படுவது என. கடலே இல்லாத நாடு, அத்துடன் பலருக்கு நீந்தவே தெரியாது. ஆனா நல்லவர்கள்

  • கருத்துக்கள உறவுகள்

Salmon அல்லது பொதுவாக எந்த மீனையும், oven இல் bake செய்வது  அல்லது pan fry செய்யும் போதும், பொதுவாக எந்த முறையான சமையல் முறை ஆயினும்

முள் அகற்றப் பட கூடாது
தோல் அகற்றப் பட கூடாது   
ஆனால், செதில்கள் கூரிய கத்தியால் (RAZOR sharp filleting அல்லது boning knife) வெட்டி அகற்றப்பட வேண்டும். You tube இல் தேடிப்பார்க்கவும். எந்த மீனிற்கும் இந்த செதில் வெட்டி அகற்றப்படுவது பொதுவாக பொருந்தும்.  

oven இல் bake செய்வது  அல்லது pan fry செய்யும் போதும், மசாலா தூள், மஞ்சள், மிளகு மற்றும் herbs உடன், ஒரு குறுக்காக நாடு முள்ளை துண்டித்து  வெட்டப்பட்ட துண்டின் அளவுக்கு, எமது பழப்புளி 3-5 சிறிய துளிகளையும் சேர்த்து ஊற வைத்தும், பின்பு 3-4 சிறிய துளிகளை வேகும் போது சேர்த்தால் சுவை நன்று. 

தொடக்கத்தில், 1-3 சிறிய பழப்புளி துளிகளுடன் சேர்த்து செய்து பார்க்கவும்.

39 minutes ago, உடையார் said:

நானும் Oven இல் தான் வைப்பது. மெங்கொலியாவிற்கு அடிகடி போவதுட்டு வேலை விடயமாக, அப்போ Hotel இல் நிற்க்கும் போது சல்மன், உருளைகிழுங்குதான் சாப்பிடுவேன். உங்களின் செய்முறையை பார்த்தவுடன் அங்கு சாப்பிட்ட நினைவுதன் உடனே வந்திச்சு. 

அங்கு மரக்கறி சாப்படோ கோழியோ கிடைப்பது அரிது. மாடு ஆடு தான் எல்லோரும். அவர்களுக்கு மீன் சாப்பிட பிடிக்காது /  தெரியாது எப்படி சாப்படுவது என. கடலே இல்லாத நாடு, அத்துடன் பலருக்கு நீந்தவே தெரியாது. ஆனா நல்லவர்கள்

மங்கோலியா சென்று அங்கிருக்கும் ஆட்டிறைச்சியினை (மிகவும் தூய்மையான இறைச்சி) , விரும்பினால் மாட்டிறைச்சி  சாப்பிடாமால் தவிர்ப்பவர் நீங்கலாக தான் இருக்கும்.

இயலுமென்றால், அப்படி மங்கோலிய செல்லும் போது ஒரு விடுமுறை எடுத்து, Ulan  Bator இல் இருந்து நீண்ட தூரத்தில் உள்ள Nomads இருக்கும் இடம் சென்று Boodog ஐயும் மற்றும் traditional மங்கோலியன் உணவுகளையும் மங்கோலியாவின் wilderness இல் ( Nomads இருக்கும் இடம்) try பண்ணி பாருங்கள்.   

இதை ஒழுங்கு செய்து தருபவர்கள் உள்ளார்கள். சில வேளைகளில் நீங்கள் தங்கும் hotel ஏ இஹை ஒழுங்கு செய்து தாரக கூடும் 

Edited by Kadancha
amend

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Kadancha said:

Salmon அல்லது பொதுவாக எந்த மீனையும், oven இல் bake செய்வது  அல்லது pan fry செய்யும் போதும், பொதுவாக எந்த முறையான சமையல் முறை ஆயினும்

முள் அகற்றப் பட கூடாது
தோல் அகற்றப் பட கூடாது   
ஆனால், செதில்கள் கூரிய கத்தியால் (RAZOR sharp filleting அல்லது boning knife) வெட்டி அகற்றப்பட வேண்டும். You tube இல் தேடிப்பார்க்கவும். 

oven இல் bake செய்வது  அல்லது pan fry செய்யும் போதும், மசாலா தூள், மஞ்சள், மிளகு மற்றும் herbs உடன், ஒரு குறுக்காக நாடு முள்ளை துண்டித்து  வெட்டப்பட்ட துண்டின் அளவுக்கு, எமது பழப்புளி 3-5 சிறிய துளிகளையும் சேர்த்து ஊற வைத்தும், பின்பு 3-4 சிறிய துளிகளை வேகும் போது சேர்த்தால் சுவை நன்று. 

தொடக்கத்தில், 1-3 சிறிய பழப்புளி துளிகளுடன் சேர்த்து செய்து பார்க்கவும்.

மங்கோலியா சென்று அங்கிருக்கும் ஆட்டிறைச்சியினை (மிகவும் தூய்மையான இறைச்சி) , விரும்பினால் மாட்டிறைச்சி  சாப்பிடாமால் தவிர்ப்பவர் நீங்கலாக தான் இருக்கும்.

இயலுமென்றால், அப்படி மங்கோலிய செல்லும் போது ஒரு விடுமுறை எடுத்து, Ulan  Bator இல் இருந்து நீண்ட தூரத்தில் உள்ள Nomads இருக்கும் இடம் சென்று Boodog ஐயும் மற்றும் traditional மங்கோலியன் உணவுகளையும் மங்கோலியாவின் wilderness இல் ( Nomads இருக்கும் இடம்) try பண்ணி பாருங்கள்.   

இதை ஒழுங்கு செய்து தருபவர்கள் உள்ளார்கள். சில வேளைகளில் நீங்கள் தங்கும் hotel ஏ இஹை ஒழுங்கு செய்து தாரக கூடும் 

உடன் தான் இப்பவும் வேலை,  என் நண்பர் சொன்னர் தங்கள் முறையில் கோழி செய்து தருகிறேன் என்று, பார்ப்போம். Minus -30 Mongolia 

20190210-115851.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Kadancha said:

oven இல் bake செய்வது  அல்லது pan fry செய்யும் போதும், மசாலா தூள், மஞ்சள், மிளகு மற்றும் herbs உடன், ஒரு குறுக்காக நாடு முள்ளை துண்டித்து  வெட்டப்பட்ட துண்டின் அளவுக்கு, எமது பழப்புளி 3-5 சிறிய துளிகளையும் சேர்த்து ஊற வைத்தும், பின்பு 3-4 சிறிய துளிகளை வேகும் போது சேர்த்தால் சுவை நன்று. 

தொடக்கத்தில், 1-3 சிறிய பழப்புளி துளிகளுடன் சேர்த்து செய்து பார்க்கவும்.

பழப்புளியா? மீன் குழம்பு செய்யும் போது தான் பழப்புளியில் ஊற விடுவதுண்டு. புதிய தகவல். நன்றி.

நான் lemongrass அல்லது thyme leaves போட்டு, bakeசெய்வதுண்டு.

வாழை இலையில் மீனை சுற்றி BBQ அல்லது bake செய்தாலும் மீன் சுவையாக இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

பழப்புளியா?

பழப்புளி கூழ் (pulp).

3-5 சிறிய துளிகளையும் சேர்த்து ஊற வைத்தும், பின்பு 3-4 சிறிய துளிகளை வேகும் போது.

தொடக்கத்தில், 1-3 சிறிய பழப்புளி துளிகளுடன்.

அளவு மிகவும் வேறுபட்டது, மிக சிறிய அளவு bake அல்லது fry பண்ணும் போது.  

4 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

மீன் குழம்பு செய்யும் போது தான் பழப்புளியில் ஊற விடுவதுண்டு

குழம்பிற்கு தேவையானது ஊற்றப்படும் அளவு  கூழ் (pulp).

14 minutes ago, உடையார் said:

உடன் தான் இப்பவும் வேலை,  என் நண்பர் சொன்னர் தங்கள் முறையில் கோழி செய்து தருகிறேன் என்று, பார்ப்போம். Minus -30 Mongolia 

1-2 மாதங்களில் கோடை மொங்கோலியாவில்.

  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் வீட்டிலும் அடிக்கடி செய்வோம்  பழ ப் புளி க்குப் பதில் சோயா சோஸ்  சேர்க்கலாம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, நிலாமதி said:

எங்கள் வீட்டிலும் அடிக்கடி செய்வோம்  பழ ப் புளி க்குப் பதில் சோயா சோஸ்  சேர்க்கலாம்

தகவலுக்கு நன்றிகள்..

நான் மிகவும் எளிதான சமையல் முறைகளையே அதிகம் விரும்புவதுண்டு.. அதனால் baking, salads, sandwiches என்பனவற்றில் கொஞ்சம் புதிய முறைகளை அறியவிரும்புகிறேன்

1 hour ago, Kadancha said:

பழப்புளி கூழ் (pulp).

3-5 சிறிய துளிகளையும் சேர்த்து ஊற வைத்தும், பின்பு 3-4 சிறிய துளிகளை வேகும் போது.

தொடக்கத்தில், 1-3 சிறிய பழப்புளி துளிகளுடன்.

அளவு மிகவும் வேறுபட்டது, மிக சிறிய அளவு bake அல்லது fry பண்ணும் போது

மிகவும் நன்றி

வாரத்தில் குறைந்தது மூன்று நாட்களாவது சமன் மீனும் முட்டை வெள்ளைக் கருவும் தான் என் காலை ஆகாரம். Oven bake தான் செய்வது. Frozen இல்லாத சமன் மீன் இங்கு அனேகமாக farm மில் வளர்க்கப்படும் மீன்கள் என்பதால் அதை தவிர்த்து frozen Atlantic salmon தான் வாங்குவது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நானும் இந்த மீன் அதிகம் விரும்பி சாப்பிடுவேன். எனது வேலை இடத்திலும் அதிகமாக விற்பனையாகும் மீன்.அவித்தோ அல்லது பொரித்தும் சாப்பிடலாம்.வெடுக்கும் இல்லை.
ஜேர்மனிக்கு  அதிகமாக நோர்வே,துருக்கி நாடுகளிலிருந்து வருகின்றது.பண்ணையில் வளர்க்கப்படும் மீன்களால் புற்றுநோய் ஆபத்து உள்ளதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

அந்த மீன் தலையில் சொதி வைக்க அந்தமாதிரி இருக்கும்.அதுவும் கூப்பன்மா இடியப்பத்துக்கு சொல்லி வேலையில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

Salmon மீன் - ஒரு சிறிய துண்டு

கொஸ்கோவில் இதே மாதிரியான துண்டுகளாக வெட்டிய பல துண்டுகள் அடங்கிய ஒரு பொதியில் விற்பார்கள்.இந்த பொதிகள் எமது வீட்டில் எப்போதும் கையிருப்பு இருக்கும்.
  மேலே காட்டிய மாதிரி அனேகமான நாட்களில் பேரனுக்கு செய்து கொடுப்பேன்.பெரிய துண்டை இரண்டாக வெட்டி அதை ஒரு அங்குலமாக வெட்டி கொஞ்சம் காரமசாலா உப்பு போட்டு பிரட்டி வைத்துவிட்டு வெங்காயம், புறக்கொலி சிறிது வதக்கி மீனையும் போட்டு சிறிய நெருப்பில் வதக்க அதில் உள்ள எண்ணெயில் வதங்கி நல்ல சுவையாக இருக்கும்.
       இதே மாதிரி தூள் போட்டும் குழம்பு நல்ல சுவையாக இருக்கும்.

இணைப்புக்கு நன்றி பிரபா.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, உடையார் said: அவர்களுக்கு மீன் சாப்பிட பிடிக்காது /  தெரியாது எப்படி சாப்படுவது என. கடலே இல்லாத நாடு, அத்துடன் பலருக்கு நீந்தவே தெரியாது. ஆனா நல்லவர்கள்

சிலசில இடங்களில் நல்ல வகையான இயற்கை உணவுகள் இருந்தும் அவர்களுக்கு அதை என்ன செய்வதென்றே தெரியாது.

எனது மகள் என் ஜீ ஓ வுக்காகக புறுண்டி என்ற ஆபிரிக்க நாட்டில் 9 மாத காலம் வேலை செய்தார்.அங்கு முருங்கை மரம் நிறையவே உள்ளதாம்.எவருக்கும் அதை கறியாக்கத் தெரியவில்லை.பிடுங்கி மாடுகளுக்கு போடுகிறார்களாம்.
 
   மகள் தங்களது சமையல்காரருக்கு இதைபற்றி சொல்லிக் கொடுத்து ஒவ்வொரு நாளும் இதில கறி வைக்கச் சொல்லி போற இடமெல்லாம் இதையே சொல்லி கொடுத்து நிறைய பேர் சமைக்க பழகி விட்டார்களாம்.

இதே மாதிரி சீவீட் என்ற சாமான் எமது கடற்கரைகளில் நிறைய இருந்தும் யாரும் சாப்பிடுவதாக தெரியவில்லை.வெளிநாடுகளில் பணம் செலவு பண்ணி வாங்கி சாப்பிடுகிறார்கள்.

image.jpeg.c4387bbaf898fe6da0b11b93e42708e5.jpeg

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Kadancha said:

பழப்புளி கூழ் (pulp).

3-5 சிறிய துளிகளையும் சேர்த்து ஊற வைத்தும், பின்பு 3-4 சிறிய துளிகளை வேகும் போது.

தொடக்கத்தில், 1-3 சிறிய பழப்புளி துளிகளுடன்.

அளவு மிகவும் வேறுபட்டது, மிக சிறிய அளவு bake அல்லது fry பண்ணும் போது.  

குழம்பிற்கு தேவையானது ஊற்றப்படும் அளவு  கூழ் (pulp).

1-2 மாதங்களில் கோடை மொங்கோலியாவில்.

பழப்புளி மீன்கறிக்குதான் விடுவது, இதவரை சல்மானுக்கு சேர்க்கவில்லை, அடுத்த முறை சேர்த்து செய்து பார்ப்போம்

8 hours ago, ஈழப்பிரியன் said:

இதே மாதிரி சீவீட் என்ற சாமான் எமது கடற்கரைகளில் நிறைய இருந்தும் யாரும் சாப்பிடுவதாக தெரியவில்லை.வெளிநாடுகளில் பணம் செலவு பண்ணி வாங்கி சாப்பிடுகிறார்கள்.

image.jpeg.c4387bbaf898fe6da0b11b93e42708e5.jpeg

இந்த சீவீட் பதப்படுத்திதானே சமைக்க வேண்டும், உங்களுக்கு தெரியுமா எப்படி சமைப்பது என்று 

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, உடையார் said:

பழப்புளி மீன்கறிக்குதான் விடுவது, இதவரை சல்மானுக்கு சேர்க்கவில்லை, அடுத்த முறை சேர்த்து செய்து பார்ப்போம்

இந்த சீவீட் பதப்படுத்திதானே சமைக்க வேண்டும், உங்களுக்கு தெரியுமா எப்படி சமைப்பது என்று 

உடையார் மீன் கறிக்கு பழப்புளி தான் பாவிப்பது.

சீவீட் சாப்பிட்டிருக்கிறேனே தவிர சமைத்து பார்த்ததில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
On 30/5/2020 at 13:55, பிரபா சிதம்பரநாதன் said:

பழப்புளியா? மீன் குழம்பு செய்யும் போது தான் பழப்புளியில் ஊற விடுவதுண்டு. 

12 hours ago, உடையார் said:

பழப்புளி மீன்கறிக்குதான் விடுவது, இதவரை சல்மானுக்கு சேர்க்கவில்லை

12 hours ago, ஈழப்பிரியன் said:

மீன் கறிக்கு பழப்புளி தான் பாவிப்பது.

Salmon அல்லது வேறு நிறமுள்ள மீன்களுக்கு,  நடுமுள்ளுடன் சேர்த்து  குறுக்காக Salmon துண்டின் அளவுக்கு,
பழப்புளி கூழ் (pulp) 3-5 சிறிய துளிகள்,   

வெள்ளையான மீன்கள், cod, pollock மிக மிக குறைவாக 1-2 சிறிய துளிகள்

புதிதாக தொடங்கும் பொது  ஓரளவு dilute செய்யப்பட்ட பழப்புளி கூழ் 1-3 சிறிய துளிகள் ருசியை அறிவதற்கு. 

ஆட்டிறைச்சி கறி மற்றும் வைரமான கோழி இறைச்சி கறிக்கும் (,இறக்கும் தருவாயில், 5 -6 நிமிடங்கள் இருக்கும் போது)  ஓரளவு dilute செய்யப்பட்ட பழப்புளி கூழ் 1-5  துளிகள். இப்படி 1-2 பழப்புளி துளிகள் விட்டு சேர்த்து நீங்கள் உடனடியாக ருசி பார்க்கலாம். ருசி அறிந்த பின் dilute செய்யாமல் 1-5  பழப்புளி சிறிய துளிகள். 
 
இது மிக சிறிய அளவு.

நீங்கள் எல்லோரும் குழம்பிற்கு தேவையான பழப்புளி கூழின்  ஊற்றப்படக்கூடிய  அளவுடன் ஒப்பிட்டு குளம்புகிறீர்கள். அப்படி ஒப்பிட முடியாது.   

12 hours ago, ஈழப்பிரியன் said:

சீவீட் சாப்பிட்டிருக்கிறேனே

sea weed இல் உள்ள பிரச்னை, சில sea weed நஞ்சு மற்றும் கிருமி தன்மை (காளான்கள் போல) உள்ளவை.

அப்படியான  see weed ஐயும் அவிப்பது, காயவைப்பது, புளிக்கவைப்பது போன்ற முறைகளின் மூலம் உணவாக பவிக்கப்படக்கூடிய நிலைக்கு கொண்டு வரலாம். 

உதாரணமாக, ஜப்பானில் பாவிக்கப்படும் Tetrodotoxin (TTX) i நஞ்சுள்ள Fugu (puffer fish ) மீன் போல. Fugu மீனும் பிறக்கும் போது நஞ்சு இல்லாதது. அதன் உணவான மற்றும் அது வாழும் சூழலில் உள்ள  சில நஞ்சு தன்மை bacteria உள்ள பவளப்பாறைகள் மற்றும் sea weed காரணமாக,  படிப்படியாக Tetrodotoxin (TTX) i நஞ்சை Fugu (puffer fish ) மீனின்  உடலில் விருத்தியாகிறது.    

சில sea weed உணவாக பாவிக்கப்படவே கூடாது.

அதனால், கடலில் இருந்து நேரடியாக sea  weed ஐ எடுத்தால்,  உங்களுக்கு எந்த sea weed நேரடியாக  உணவாக பா விக்கப்படக் கூடியது என்பது தெரிந்து தெரிந்து இருக்க வேண்டும்.

அதனால், sea weed பற்றி தெரியாவிட்டால், கடைகளில் வாங்குவது நல்லது.  

21 hours ago, ஈழப்பிரியன் said:

இதே மாதிரி சீவீட் என்ற சாமான் எமது கடற்கரைகளில் நிறைய இருந்தும் யாரும் சாப்பிடுவதாக தெரியவில்லை.வெளிநாடுகளில் பணம் செலவு பண்ணி வாங்கி சாப்பிடுகிறார்கள்.

sea weed இல் உள்ள பிரச்னை, சில sea weed நஞ்சு மற்றும் கிருமி தன்மை (காளான்கள் போல) உள்ளவை.

அப்படியான  see weed ஐயும் அவிப்பது, காயவைப்பது, புளிக்கவைப்பது போன்ற முறைகளின் மூலம் உணவாக பவிக்கப்படக்கூடிய நிலைக்கு கொண்டு வரலாம். 

உதாரணமாக, ஜப்பானில் பாவிக்கப்படும் Tetrodotoxin (TTX) i நஞ்சுள்ள Fugu (puffer fish ) மீன் போல. Fugu மீனும் பிறக்கும் போது நஞ்சு இல்லாதது. அதன் உணவான மற்றும் அது வாழும் சூழலில் உள்ள  சில நஞ்சு தன்மை bacteria உள்ள பவளப்பாறைகள் மற்றும் sea weed காரணமாக,  படிப்படியாக Tetrodotoxin (TTX) i நஞ்சை Fugu (puffer fish ) மீனின்  உடலில் விருத்தியாகிறது.    

சில sea weed உணவாக பாவிக்கப்படவே கூடாது.

அதனால், கடலில் இருந்து நேரடியாக sea  weed ஐ எடுத்தால்,  உங்களுக்கு எந்த sea weed நேரடியாக  உணவாக பா விக்கப்படக் கூடியது என்பது தெரிந்து தெரிந்து இருக்க வேண்டும்.

அதனால், sea weed பற்றி தெரியாவிட்டால், கடைகளில் வாங்குவது நல்லது.  

Edited by Kadancha
correction.

  • கருத்துக்கள உறவுகள்
On 29/5/2020 at 23:27, பிரபா சிதம்பரநாதன் said:

 Salmon and broccolini  

8-E534-DB3-812-A-44-BD-AC87-3-D3-EEC5-AD

சமையற்கட்டில் அதிகம் நேரம் செலவழிக்க விரும்பாதவர்களுக்கும்.. அதிகளவில், வகைவகையான உணவு செய்ய தேவையில்லாதவர்களுக்கும் ஒரு இலகுவான உணவு, அதே நேரம் சத்தான ஒரு உணவு.

தேவையான பொருட்கள்
Salmon மீன் - ஒரு சிறிய துண்டு
Broccolini - ஒரு கட்டு
Thickened cream - 300ml
மஞ்சள் தூள், கரம் மசாலா, உப்பு, மிளகு ருசிக்கேற்ப

033-B5-B36-4-D21-45-BE-88-C6-FAAFECFB261

உங்களது வீட்டிலிருக்கும் மசாலா தூள், அல்லது herbs mix அல்லது கறிதூள் இவைகளில் ஏதாவது ஒன்று, சிறிதளவு ஒலிவ் எண்ணெய், உப்பு, இவை மூன்றையும் கலந்து மீன் துண்டை பிரட்டி ஒரு மணித்தியாலம் ஊற வைக்கவும்..

பின்பு non stick fry panல் மீனை இரு பக்கமும் மாற்றிமாற்றி வைத்து சமைக்கவும்.. மீனின் தோல் கருகுமட்டும் அடுப்பில் வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை.. மீன் அளவாக வெந்திருந்தாலே போதும்..

அடுத்து, broccolini கழுவி, தண்ணீர் வடிந்தபின், பாத்திரம் ஒன்றில் சிறிதளவு பட்டர்( விருப்பமென்றால்) சேர்த்து பச்சை நிறம் அதிகம் மாறும் முன்பு வேகவைத்து எடுத்து வைக்கவும்..உப்பு, மிளகுதூள் விரும்பினால் சிறிதளவு தூவி விடலாம்

அதே பாத்திரத்திலேயே, இந்த thickened creamஐ ஊற்றி, விரும்பினால் அதற்குள் சிறிதளவு மஞ்சள், அல்லது கரம் மசாலா சேர்த்து, ஒரு தரம் கொதிக்கவைத்தபின்பு இறக்கிவைக்கவும்..இது ஒரு வகை creamy sauce 
உங்களுக்கு thick sauce விருப்பமில்லையென்றால் சிறிதளவு தண்ணீர் சேர்த்தால் sauce thickஆக இருக்காது..

75-AB4-A5-D-F443-4220-B187-6-BC3-DE5-AC2

பின்பு ஒரு bowlல் சமைத்த மீன் துண்டு, வேகவைத்த broccolini அருகருகே வைத்து இந்த creamy sauce அவற்றின் மேல் ஊற்றியபின்பு சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும்..தேவையென்றால் உப்பு மிளகுதூளை சேர்க்கலாம்..

மீனை ovenல் bakeபண்ணலாம்.. broccoliniற்கு பதிலாக asparagusஐ சேர்க்கலாம்..மசாலா, காரம் அவரவர் ருசிக்கேற்ப.. மிகவும் இலகுவான செய்முறை..

நாங்களும் இந்த மீனை அடிக்கடி வாங்கி சமைப்போம், உங்களை மாதிரி Oven இல் Bake பண்ணுவது, அல்லது BBQ போட்டு சாப்பிட மிகவும் நன்றாக இருக்கும், மகனுக்கு மிகவும் விருப்பம். எங்களது மீன் குழம்பு அல்லது பொரியலுக்கும் சூப்பர் ஆக இருக்கும். இங்கு Atlantic Farm Raised என்பதுதான் ஓரளவுக்கு விலை குறைவு. Alaska  Wild Caught எனப்படும் ஆள் கடலில் பிடிக்கப்படும் சமன் மிகவும் விலை அதிகம். 

  • கருத்துக்கள உறவுகள்

Salmon ஐ நீங்கள் விரும்புவதால், அதன் வாழ்க்கை வட்டத்தையும் அறியுங்கள், தனது இனவிருத்திக்கு தான் பிறந்த இடத்தை நோக்கி எத்தனையோ தடைகள் தாண்டி வருகிறது.  இது எமது, புலம்பெயர்ந்தவர், மீண்டும் பிறந்த இடத்திற்கு வந்து தமது சந்ததிக்கு தமது பாரம்பரியத்தை கடத்தும்  துடிக்கும் துடிப்பாகவே இருக்கிறது.   

  • கருத்துக்கள உறவுகள்
On 30/5/2020 at 16:49, ஈழப்பிரியன் said:

சிலசில இடங்களில் நல்ல வகையான இயற்கை உணவுகள் இருந்தும் அவர்களுக்கு அதை என்ன செய்வதென்றே தெரியாது.

எனது மகள் என் ஜீ ஓ வுக்காகக புறுண்டி என்ற ஆபிரிக்க நாட்டில் 9 மாத காலம் வேலை செய்தார்.அங்கு முருங்கை மரம் நிறையவே உள்ளதாம்.எவருக்கும் அதை கறியாக்கத் தெரியவில்லை.பிடுங்கி மாடுகளுக்கு போடுகிறார்களாம்.
 
   மகள் தங்களது சமையல்காரருக்கு இதைபற்றி சொல்லிக் கொடுத்து ஒவ்வொரு நாளும் இதில கறி வைக்கச் சொல்லி போற இடமெல்லாம் இதையே சொல்லி கொடுத்து நிறைய பேர் சமைக்க பழகி விட்டார்களாம்.

இதே மாதிரி சீவீட் என்ற சாமான் எமது கடற்கரைகளில் நிறைய இருந்தும் யாரும் சாப்பிடுவதாக தெரியவில்லை.வெளிநாடுகளில் பணம் செலவு பண்ணி வாங்கி சாப்பிடுகிறார்கள்.

image.jpeg.c4387bbaf898fe6da0b11b93e42708e5.jpeg

கோஸ்கோவில் துண்டுகளாக வாங்காமல், முழு மீனாக வாங்குங்கள். மலிவாக இருக்கும். நாமே வீட்டில் இலகுவாக வெட்டி, பொதியாக்கி ப்ரீசரில் போட்டு தேவையான நேரம் பாவிக்கலாம். துண்டு விக்கிற விலைக்கு, இரண்டு முழு மீனே வாங்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

மீன்துண்டுகளை, நமது மசாலாவில் ஊறவைத்து, பின்னர், அவனுள் வைத்து நன்றாக தோல், மற்றும் மேல்பகுதி பிரவுன் ஆகும் வரை பேக் பண்ணி எடுக்கவேண்டும்.

pan ஒன்றை அடுப்பில் வைத்து, பட்டர் போட்டு (ஒலிவ் ஒயிலும் பாவிக்கலாம்) அதனுள் சிறு துண்டுகளாக வெட்டிய காளான், காலிபிலோவர் இரண்டையும் போட்டு வதங்கி வரும்போது, உப்பு, மஞ்சள் (அல்லது food colouring) சேர்த்து, நன்றாக வேகி வரும் போது, double cream சேர்த்து அதனுள் மீன் துண்டுகளை போட்டு உடையாமல் மெதுவாக கலந்து பரிமாறுங்கள்.

குழந்தைகளானால், மசாலாவில் உறைப்பினை குறையுங்கள்.  

மீன் நன்கு bake ஆகி வருவதால், சுவையாக இருப்பதுடன், இறைச்சி உண்பது போன்ற உணர்வு இல்லாமல் சாப்பிடக்கூடியதாக இருக்கும்.

Buy wholesale Mushrooms online now from George Perry Fruit and ...

Market Fresh Finds: Cauliflower can be versatile, even colorful ...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kadancha said:

பிறந்த இடத்தை நோக்கி எத்தனையோ தடைகள் தாண்டி வருகிறது.  இது எமது, புலம்பெயர்ந்தவர், மீண்டும் பிறந்த இடத்திற்கு வந்து தமது சந்ததிக்கு தமது பாரம்பரியத்தை கடத்தும்  துடிக்கும் துடிப்பாகவே இருக்கிறது.   

அவற்றின் நினைவுகளிலே தனது பிறந்த இடத்தை நோக்கி திரும்ப வேண்டும் என்பது எவ்வளவு ஆழமாக பதிந்துள்ளது. 

  • 1 month later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 5/6/2020 at 00:23, Nathamuni said:

pan ஒன்றை அடுப்பில் வைத்து, பட்டர் போட்டு (ஒலிவ் ஒயிலும் பாவிக்கலாம்) அதனுள் சிறு துண்டுகளாக வெட்டிய காளான், காலிபிலோவர் இரண்டையும் போட்டு வதங்கி வரும்போது, உப்பு, மஞ்சள் (அல்லது food colouring) சேர்த்து, நன்றாக வேகி வரும் போது, double cream சேர்த்து அதனுள் மீன் துண்டுகளை போட்டு உடையாமல் மெதுவாக கலந்து பரிமாறுங்கள்.

நான்,  ஒலிவ் எண்ணெயில் Cauliflower, காளானுடன் broccoli போட்டு செய்தேன்.. மிகவும் நன்றாக வந்தது.. cream பாவிக்காமலே நன்றாகவும் இருந்தது.

உங்களது தகவலுக்கு நன்றி. 

82964-A7-B-A24-F-4-FE4-9-C0-A-AAA68529-A

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

நான்,  ஒலிவ் எண்ணெயில் Cauliflower, காளானுடன் broccoli போட்டு செய்தேன்.. மிகவும் நன்றாக வந்தது.. cream பாவிக்காமலே நன்றாகவும் இருந்தது.

உங்களது தகவலுக்கு நன்றி. 

82964-A7-B-A24-F-4-FE4-9-C0-A-AAA68529-A

கிறீம் பிடிக்காவிடில், முதல் தேங்காய்பால் பாவிக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
On 30/5/2020 at 08:01, உடையார் said:

நானும் Oven இல் தான் வைப்பது. மெங்கொலியாவிற்கு அடிகடி போவதுட்டு வேலை விடயமாக, அப்போ Hotel இல் நிற்க்கும் போது சல்மன், உருளைகிழுங்குதான் சாப்பிடுவேன். உங்களின் செய்முறையை பார்த்தவுடன் அங்கு சாப்பிட்ட நினைவுதன் உடனே வந்திச்சு. 

அங்கு மரக்கறி சாப்படோ கோழியோ கிடைப்பது அரிது. மாடு ஆடு தான் எல்லோரும். அவர்களுக்கு மீன் சாப்பிட பிடிக்காது /  தெரியாது எப்படி சாப்படுவது என. கடலே இல்லாத நாடு, அத்துடன் பலருக்கு நீந்தவே தெரியாது. ஆனா நல்லவர்கள்

கடல் இருந்து பின் பாலை வனமாகியிருக்கிறது..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.