Jump to content

யாழ்ப்பாணத்திலிருந்து பாரம்பரிய சமையல் முறைகளை மையப்படுத்தி வெளியிடப்படும் யூடூப் காணொளிகள் உங்கள்ஆதரவுக்காக

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அவ்வப்போது வந்து பார்ப்பேன்.நேரம் எடுத்து பொறுமையா எல்லாம் செய்து இணைப்பதற்கு மிகவும் நன்றி.🙏

  • Replies 146
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
Posted
11 hours ago, தமிழ் சிறி said:

யாழ்ப்பாணத்தில்.... காளான் சாப்பிடுபவர்கள் இல்லை என நினைக்கின்றேன்.

அங்கை காளான் எண்டால் கொட்டுக்காளான் தான் ஞாபகத்துக்கு வரும். அதை நினைச்சாலே சாப்பிட மனம் வராது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
14 hours ago, தமிழ் சிறி said:

யாழ்ப்பாணத்தில்.... காளான் சாப்பிடுபவர்கள் இல்லை என நினைக்கின்றேன்.

புற்றுகாளானின் சுவைக்கு இங்கு விற்கும் காளான் எல்லாம் பிச்சை எடுக்கனும், அந்தளவு சுவை, இறைச்சி கறி கூட தோத்துவிடும். இடியுடன் மழை பெய்த அடுத்தநாள் காட்டுக்குள் பையுடன் வெளிக்கிட்டு விடுவேன் கறையான் புற்றுகளை தேடி, சிலவேளை பாம்புகளிருக்கு பற்றைக்குள் அவற்றை கலைத்துவிட்டுதான் பிடுங்குவது, மொட்டு விரியாமலிருக்கனும்.

இந்தியன் ஆமியின் பிரச்சனைக்குள் பிடுங்க யாருமில்லை, நான் மட்டும் பெட்டி பெட்டியா பிடுங்கி கறியுடன் சாத்ததை தொட்டு சாப்பிட்டோம் 😀

9 hours ago, Sanchu Suga said:

இந்த காளான் சாப்பிட்டதில்லை எப்படி சுவை? வீட்டில் வளர்த்து சமைப்பதே தனி சுவை

Posted
9 hours ago, யாயினி said:

அவ்வப்போது வந்து பார்ப்பேன்.நேரம் எடுத்து பொறுமையா எல்லாம் செய்து இணைப்பதற்கு மிகவும் நன்றி.🙏

உங்கள் பாராட்டுக்கு நன்றிகள்

4 hours ago, குமாரசாமி said:

அங்கை காளான் எண்டால் கொட்டுக்காளான் தான் ஞாபகத்துக்கு வரும். அதை நினைச்சாலே சாப்பிட மனம் வராது.

மொட்டுக்காளானையா சொல்கிறீர்கள்? அதன் சுவை மிக நன்றாகவே இருக்கும்.

Posted
1 hour ago, உடையார் said:

புற்றுகாளானின் சுவைக்கு இங்கு விற்கும் காளான் எல்லாம் பிச்சை எடுக்கனும், அந்தளவு சுவை, இறைச்சி கறி கூட தோத்துவிடும். இடியுடன் மழை பெய்த அடுத்தநாள் காட்டுக்குள் பையுடன் வெளிக்கிட்டு விடுவேன் கறையான் புற்றுகளை தேடி, சிலவேளை பாம்புகளிருக்கு பற்றைக்குள் அவற்றை கலைத்துவிட்டுதான் பிடுங்குவது, மொட்டு விரியாமலிருக்கனும்.

இந்தியன் ஆமியின் பிரச்சனைக்குள் பிடுங்க யாருமில்லை, நான் மட்டும் பெட்டி பெட்டியா பிடுங்கி கறியுடன் சாத்ததை தொட்டு சாப்பிட்டோம் 😀

இந்த காளான் சாப்பிட்டதில்லை எப்படி சுவை? வீட்டில் வளர்த்து சமைப்பதே தனி சுவை

புற்றுக்காளான் கறியை தனியாகவே சாப்பிடலாம். இந்த காளானும் சோறு , பிட்டுடன் சாப்பிட மிக நன்றாக இருக்கும்.

Posted
17 hours ago, Sanchu Suga said:

நாய் கடிக்கிற, பூரான் கடிக்கிற, தேள் கடிக்கிற அனுபவம் கிடைக்கணும் எண்டு சொல்லுவீங்க போல இருக்கே.....! 😜

ஹா ஹா😀

இருக்கட்டுமே 

ஆனா, விஷ பாம்பு கடிக்காம இருக்கட்டும்

  • கருத்துக்கள உறவுகள்
Posted
11 hours ago, Sanchu Suga said:

நானே சிறுவயதில் புற்றுக்காளான் சாப்பிட்டு இருக்கிறேன்.அந்த சுவையால் இறைச்சி கறியை கூட அடித்து கொள்ள முடியாது...

Kräuter, Pilze, Sprossen - Pilze - Kößnach

இலங்கையில்... இருக்கும் போது காளான் சாப்பிட்டதில்லை.
இங்கு வந்த பின்பு பலர் அதனை விரும்பி உண்பதால்... 
ஒரு முறை வாங்கி வந்து, சமைத்துப் பார்த்தோம். 
எனக்கு அதன் சுவை, பிடித்துக் கொண்டதால்...
இப்போ... அடிக்கடி சமைப்போம். 

இங்கு பலவகைகளில்... காளான் கிடைத்தாலும்,
மேலே உள்ள, மண்ணிற காளான் தான்... எமது கறிக்கு சுவையாக உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
11 hours ago, Sanchu Suga said:

காளான் கறியும் சிவப்பு பச்சை அரிசி சோறும்

ஒரு மாதிரி யுரியூப் போட பழகியாச்சு.
பாராட்டுக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
18 hours ago, Sanchu Suga said:

நீங்கள்.. சாப்பிடும் போது, காளான் கறிக்குள் போட்ட கருவேப்பிலையை... 
ஏன்  கோப்பையின், கரையில்... எடுத்து வைத்தீர்கள்?  :grin:

நாங்கள்... கறிக்கு போட்ட, கறிவேப்பிலையையும்... சப்பி சாப்பிடுவோம்.  🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, குமாரசாமி said:

அங்கை காளான் எண்டால் கொட்டுக்காளான் தான் ஞாபகத்துக்கு வரும். அதை நினைச்சாலே சாப்பிட மனம் வராது.

மழை காலங்களில்... வீட்டு  வளவுக்குள், பெரிய வெள்ளை நிற காளான் வளரும்.
அது பேய்க் காளான். கிட்ட போய் தொட்டுப் போடாதேங்கோ... 
என்று அப்பம்மா, பயப்பிடுத்துவா. :)

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, உடையார் said:

புற்றுகாளானின் சுவைக்கு இங்கு விற்கும் காளான் எல்லாம் பிச்சை எடுக்கனும், அந்தளவு சுவை, இறைச்சி கறி கூட தோத்துவிடும். இடியுடன் மழை பெய்த அடுத்தநாள் காட்டுக்குள் பையுடன் வெளிக்கிட்டு விடுவேன் கறையான் புற்றுகளை தேடி, சிலவேளை பாம்புகளிருக்கு பற்றைக்குள் அவற்றை கலைத்துவிட்டுதான் பிடுங்குவது, மொட்டு விரியாமலிருக்கனும்.

இந்தியன் ஆமியின் பிரச்சனைக்குள் பிடுங்க யாருமில்லை, நான் மட்டும் பெட்டி பெட்டியா பிடுங்கி கறியுடன் சாத்ததை தொட்டு சாப்பிட்டோம் 😀

காளான்களிலும்  ... சில காளான்கள் நஞ்சுத்தன்மை உடையவை என்று இங்கு சொல்வார்கள்.
காடுகளில்... காளான் பிடுங்கப் போகும் போது,  
அவற்றைப்  பற்றிய விபரம் அறிந்திருக்க வேண்டுமாம்.

நீங்கள்... பாம்பு புற்றுக்கள் போய்.. பாம்பை கலைத்து விட்டு,
காளான் புடுங்கி.. சாப்பிட்டதை  நினைக்க, அதிசயமாக இருக்கு.
நானென்றால்... உந்த வேலைக்கு, போகமாட்டன். :)

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, தமிழ் சிறி said:

கறையான் புற்றுக்குள் தான் காளான் வரும் பாம்பிருக்காது அந்த புற்றில் 

ஆனா புற்று இருக்கும் பற்றைக்குள் பாம்புகள் இருந்திருக்கு, பயமறியா வயசு அது😀

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இடி இடித்து மலை பெய்யும் காலங்களில்தான் கருக்கலில் போனால் மொட்டுக்காளான் பார்த்து பார்த்து பிடுங்கிக் கொண்டு வரலாம்.பழைய இடிந்து கிடக்கும்  மண்சுவர் வீடுகளிலும் காளான் பூத்து இருக்கும்.இறைச்சி போலவும் அதைவிடவும் தனி சுவையுடன் இருக்கும்.....!

இப்பவும் வீட்டில் விசேஷமாய் எல்லோரும் மச்சம் மாமிசம் செய்து சாப்பிடும் நேரங்களில் மனிசிக்கு மனசு தாங்காது, (என்னை நினைத்துத்தான்.எல்லா விலங்குகளையும் வஞ்சகமின்றி விழுங்கின மனுஷன் இப்ப முயல் ஆடு போல இலை குலையும் கேரட்டும் தின்னுதே என்று ). உடனே அவவின் தெரிவு காளானும் அல்லது சோயா மீற்றும்தான்.அதை விதம் விதமாய் குழம்பும் வைத்து பொரித்தும் தருவா.....!  😁

Posted
18 hours ago, Sanchu Suga said:

எப்படி குற்றினாலென்ன மாவு வந்தா சரிதான். படத்தொகுப்பாளர் வெட்டிய விதத்தில் அப்படி தெரிகிறது. கல்லுரலுக்கு அந்த அளவு அழுத்தம் கொடுத்தால் மாவு முழுக்க நிலத்தில்தான் கிடக்கும்.நீங்கள் சொல்வது மர உரலுக்குதான் நல்லா பொருந்தும்.

காளான் கறியும் சிவப்பு பச்சை அரிசி சோறும்

காளான் கறி. மம்மம்மம சாப்பிட்டதே இல்லை. சரி அக்கா அந்த கப்பியலுக்கு எண்ணை விடுங்கோ. அயலட்டையில் சனம் தூங்கேலாது.

முந்தி என்ர  வீட்டுக்குப் பக்கத்தில இருந்த நண்பன் விடிய 4 மணிக்கு எழும்பி படிக்க தொடங்கிடுவான். அவன் முகம் கழுவ தண்ணி அள்ளுற சத்தம் கேட்க அம்மா தொடங்கிடுவா "உங்கா அந்தப் பிள்ள படிக்க எழும்பிடுத்து" என  பிறகு ஒன்றும் செய்யேலாமல் நான் இரவு களவாக இறங்கி கப்பியலுக்கு எண்ணை ஊத்தினான். 

சமையல் நல்லாயிருக்கு. சிலவற்றில் கொஞ்சம் கவனமெடுங்க அக்கா. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, suvy said:

இடி இடித்து மலை பெய்யும் காலங்களில்தான் கருக்கலில் போனால் மொட்டுக்காளான் பார்த்து பார்த்து பிடுங்கிக் கொண்டு வரலாம்.பழைய இடிந்து கிடக்கும்  மண்சுவர் வீடுகளிலும் காளான் பூத்து இருக்கும்.இறைச்சி போலவும் அதைவிடவும் தனி சுவையுடன் இருக்கும்.....!

இப்பவும் வீட்டில் விசேஷமாய் எல்லோரும் மச்சம் மாமிசம் செய்து சாப்பிடும் நேரங்களில் மனிசிக்கு மனசு தாங்காது, (என்னை நினைத்துத்தான்.எல்லா விலங்குகளையும் வஞ்சகமின்றி விழுங்கின மனுஷன் இப்ப முயல் ஆடு போல இலை குலையும் கேரட்டும் தின்னுதே என்று ). உடனே அவவின் தெரிவு காளானும் அல்லது சோயா மீற்றும்தான்.அதை விதம் விதமாய் குழம்பும் வைத்து பொரித்தும் தருவா.....!  😁

அட உங்கள் வாய்க்கு துணைவியார் கட்டுப்போட்டுவிட்டாரா, அதுதான் மச்சம் மாமிச காணொளிகளை இணைத்து மனதை சந்தோஷப்படுத்துகின்றீர்கள். 😀 . இப்ப விளங்குது

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, உடையார் said:

அட உங்கள் வாய்க்கு துணைவியார் கட்டுப்போட்டுவிட்டாரா, அதுதான் மச்சம் மாமிச காணொளிகளை இணைத்து மனதை சந்தோஷப்படுத்துகின்றீர்கள். 😀 . இப்ப விளங்குது

உடையார் உங்களுக்கு இப்பதான் உண்மை விசயம் விளங்கிச்சோ!!!!!!!
சிறித்தம்பி எனக்கெல்லாம் எப்பவோ விளங்கீட்டுது.😂
ஐயா ஒவ்வொரு மச்ச வீடியோக்களை வெட்டி ஒட்டேக்கை அவர் விடுற பெருமூச்சு எங்கடை காதுக்கு கேக்கும்.:grin:

  • கருத்துக்கள உறவுகள்
Posted
12 hours ago, Sanchu Suga said:

உங்கள் பாராட்டுக்கு நன்றிகள்

மொட்டுக்காளானையா சொல்கிறீர்கள்? அதன் சுவை மிக நன்றாகவே இருக்கும்.

கொட்டுக்காளான் தான் அது.  மழைகாலங்களிலை அங்கினேக்கை தென்னங்குத்தியிலை முளைச்சு வரும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, குமாரசாமி said:

உடையார் உங்களுக்கு இப்பதான் உண்மை விசயம் விளங்கிச்சோ!!!!!!!
சிறித்தம்பி எனக்கெல்லாம் எப்பவோ விளங்கீட்டுது.😂
ஐயா ஒவ்வொரு மச்ச வீடியோக்களை வெட்டி ஒட்டேக்கை அவர் விடுற பெருமூச்சு எங்கடை காதுக்கு கேக்கும்.:grin:

புளிப்பானைக்குள் புளி இல்லையெண்டாலும் அதன் வாசம் போகாது தெரியுமோ ...... !  😢

  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 hours ago, உடையார் said:

கறையான் புற்றுக்குள் தான் காளான் வரும் பாம்பிருக்காது அந்த புற்றில் 

ஆனா புற்று இருக்கும் பற்றைக்குள் பாம்புகள் இருந்திருக்கு, பயமறியா வயசு அது😀

srithar20194: அறிவியல் அறிவோம்; கரையான் ...

உடையார்,  கறையான் புற்றுக்குள்.... பாம்பு இருக்காது என்பது, 100 வீதம் உண்மையா?
உண்மை என்றால்... இன்று, ஒரு புதிய தகவலை தெரிந்து கொண்டேன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 hours ago, suvy said:

இடி இடித்து மலை பெய்யும் காலங்களில்தான் கருக்கலில் போனால் மொட்டுக்காளான் பார்த்து பார்த்து பிடுங்கிக் கொண்டு வரலாம்.பழைய இடிந்து கிடக்கும்  மண்சுவர் வீடுகளிலும் காளான் பூத்து இருக்கும்.இறைச்சி போலவும் அதைவிடவும் தனி சுவையுடன் இருக்கும்.....!

இப்பவும் வீட்டில் விசேஷமாய் எல்லோரும் மச்சம் மாமிசம் செய்து சாப்பிடும் நேரங்களில் மனிசிக்கு மனசு தாங்காது, (என்னை நினைத்துத்தான்.எல்லா விலங்குகளையும் வஞ்சகமின்றி விழுங்கின மனுஷன் இப்ப முயல் ஆடு போல இலை குலையும் கேரட்டும் தின்னுதே என்று ). உடனே அவவின் தெரிவு காளானும் அல்லது சோயா மீற்றும்தான்.அதை விதம் விதமாய் குழம்பும் வைத்து பொரித்தும் தருவா.....!  😁

சுவி... இயலுமென்றால், மொட்டுக் காளான் படத்தை போட்டு விடுங்களேன். :)

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, தமிழ் சிறி said:

உடையார்,  கறையான் புற்றுக்குள்.... பாம்பு இருக்காது என்பது, 100 வீதம் உண்மையா?
உண்மை என்றால்... இன்று, ஒரு புதிய தகவலை தெரிந்து கொண்டேன்.

கறையான் தான் புத்தொடுக்கும்.பின்னர் அந்தப் புத்துக்குள் பாம்பு போய் இருக்கும்.
என்று எண்ணுகிறேன்.
எமது வீட்டிலேயே இப்படி புத்து இருக்கும். மெழுகுவதற்கும் அடுப்பு செய்வதற்கும் வெட்டி எடுப்போம்.

2 hours ago, suvy said:

புளிப்பானைக்குள் புளி இல்லையெண்டாலும் அதன் வாசம் போகாது தெரியுமோ ...... !  😢

அப்ப மூத்திர ஒழுங்கை.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 minutes ago, ஈழப்பிரியன் said:

கறையான் தான் புத்தொடுக்கும்.பின்னர் அந்தப் புத்துக்குள் பாம்பு போய் இருக்கும்.
என்று எண்ணுகிறேன்.
எமது வீட்டிலேயே இப்படி புத்து இருக்கும். மெழுகுவதற்கும் அடுப்பு செய்வதற்கும் வெட்டி எடுப்போம்.

அப்படித்தான்...  ஒரு பழமொழியும், தமிழில் இருக்கு... ஈழப்பிரியன்.
உடையார்... நமக்கு, நாக பாம்பு கடிக்க வைக்க....  
"பிளான்" பண்ணியிருக்கிறார் போலை கிடக்குது. 🤪

என்ன இருந்தாலும்... நாங்கள் தான், புத்திசாலித்தனமாய் நடக்க வேணும் கண்டியளோ... :grin:

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, தமிழ் சிறி said:

சுவி... இயலுமென்றால், மொட்டுக் காளான் படத்தை போட்டு விடுங்களேன். :)

Des champignons hallucinogènes contre la dépression résistante aux  traitements ? | Psychomédia

அண்ணளவாக இப்படி இருக்கும்.........!  

கரையான் புத்தெடுக்க கருநாகம் குடியிருக்கும் என்று பழமொழி உண்டு.....!   😁

Posted
18 hours ago, Kali said:
 
ஹா ஹா😀

இருக்கட்டுமே 

ஆனா, விஷ பாம்பு கடிக்காம இருக்கட்டும்

பாம்புகள் எங்கள் இடத்தில் அதிகம். அதற்காகவே சில "கினி கோழி" களை வளர்க்கிறோம். அவை குட்டிப்பாம்புகளை சாப்பிட்டுவிடும்.

18 hours ago, தமிழ் சிறி said:

Kräuter, Pilze, Sprossen - Pilze - Kößnach

இலங்கையில்... இருக்கும் போது காளான் சாப்பிட்டதில்லை.
இங்கு வந்த பின்பு பலர் அதனை விரும்பி உண்பதால்... 
ஒரு முறை வாங்கி வந்து, சமைத்துப் பார்த்தோம். 
எனக்கு அதன் சுவை, பிடித்துக் கொண்டதால்...
இப்போ... அடிக்கடி சமைப்போம். 

இங்கு பலவகைகளில்... காளான் கிடைத்தாலும்,
மேலே உள்ள, மண்ணிற காளான் தான்... எமது கறிக்கு சுவையாக உள்ளது.

நானும் இந்த மண்ணிறகாளான் வகையை  சாப்பிட்டிருக்கிறேன். ஆனால் நான் வைத்த ஒயிஸ்ரர் காளான் கறிக்கு கிட்டவும் நிற்காது :)

Posted
18 hours ago, ஈழப்பிரியன் said:

ஒரு மாதிரி யுரியூப் போட பழகியாச்சு.
பாராட்டுக்கள்.

நன்றி. கைத்தொலைபேசியில் யூரியூப் லிங்கை எடுத்து யாழில் போட்டால் Embed வியூ வராது. Desktop இல் போட்டால் வருகிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.