Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

த‌மிழ‌ர்க‌ளின் க‌லாச்சார‌ம் எத‌ நோக்கி போகுது , யாழ் க‌ள‌ உற‌வுக‌ளின் ப‌தில‌ எதிர் பார்த்து

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, குமாரசாமி said:

 நூற்றுக்கு நூறு வீதம் உண்மை.

எம்மவர் வாழும் புலம்பெயர் நாடுகளில் நான் அவதானித்த வரையில் சைவ கோவில் கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் தமிழ் பாடசாலைகள் என கவனத்தை  செலுத்தும் பெற்றோர்களின் பிள்ளைகள் நூற்றுக்கு எழுபது வீதமாவது தமிழர் கலாச்சாரத்துடனும் பண்பாட்டுடனும் வாழ்கின்றார்கள். சில பிள்ளைகள் சில இடங்களில் கிர்தா விளையாட்டுக்கள் விட்டாலும் தமிழர் எனும் குடையில் பண்பாட்டுடனேயே இருக்கின்றார்கள்.

※※※※※※※※※※※※※※※※※※※※※※※※※※※※※※※※※※※※※※※※※※

"எந்தக் குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே பின்பு
நல்லவனாவதும் தீயவனாவதும் அன்னை வளர்ப்பினிலே"
எவ்வளவு சத்தியமான வார்த்தைகள். குழந்தை வளர்ப்பு என்பது தனிக்கலை. ஒவ்வொரு குழந்தையும் இந்த உலகத்தில் பிறக்க கடவுள் தேர்ந்தெடுத்த கருவிகள் தான் பெற்றோர்.   

தாத்தா

முத‌லாவ‌து என‌து  பார்வையில் புல‌ம்பெய‌ர் பிள்ளைக‌ள் கெட்டு போவ‌து , வெள்ளை இன‌த்த‌வ‌ரின் பிள்ளைக‌ளை பார்த்து ,

இர‌ண்டாவ‌து ஒரு கொச‌ப்பு கூட‌ ந‌ண்ப‌ரா இருந்தா அந்த‌ கொச‌ப்பின் எல்லா ப‌ழ‌க்க‌த்தையும் அவ‌னுட‌ன் ப‌ழ‌கும் ம‌ற்ற‌வ‌ர்க‌ளுக்கும் தானாக‌ தொத்தும் ,

மூன்றாவ‌து

ந‌ல்ல‌ ந‌ண்ப‌ன் ந‌ல்ல‌ தோழி கூட‌ சிறு வ‌ய‌து முத‌லே ந‌ல்ல‌ ந‌ட்பாய் இருந்து ஒழுங்காய் வ‌ள‌ந்தா பின்னாளில் அந்த‌ பிள்ளைக‌ள் த‌ப்பான‌ வ‌ழிக்கு ஒரு போதும் போக‌ மாட்டார்க‌ள் ,

வெள்ளை இன‌த்த‌வ‌னின் பிள்ளைக‌ள் 10 வ‌ய‌திலே கிஸ் அடிக்குங்க‌ள் , அதுங்க‌ கூட‌ ப‌டிக்கிற‌ புல‌ம்பெய‌ர் நாட்டில் வாழும் பிள்ளைங்க‌ள் அதுங்க‌ளை பார்த்து 15வ‌ய‌திலே காத‌ல் என்று சொல்லி கில‌ம்பிடுவின‌ம் , அப்ப‌டியான‌ காத‌ல் நீண்ட வ‌ருட‌ம் நீடிக்காது , 

புல‌ம்பெய‌ர் நாட்டு பெற்றோரும் எப்ப‌ பார்த்தாலும் வேலை வேலை என்றால் பிள்ளைக‌ள் வீட்டில் இருந்து கொண்டே அதுங்க‌ட‌ இஸ்ர‌த்துக்கு ஆட்ட‌ம் போடுங்க‌ள் 

சிறு வ‌ய‌தில் இருந்தே எம் காலாச்சார‌ம் எம் மொழி த‌மிழ‌ர்க‌ளுடைய‌ பார‌ம்ப‌ரிய‌முறைக‌ளை சொல்லிக் கொடுத்து வ‌ள‌த்து இருக்க‌னும்  பிள்ளைக‌ளுக்கு , மேல‌ ஒரு க‌ள‌ உற‌வு எழுதி இருக்கிறார் , சில‌ த‌மிழ் ஆட்க‌ள் அவ‌ர்க‌ளின் பிள்ளைக‌ள்  வேறு மொழி க‌தைப்ப‌த‌ பெருமையா நினைக்கின‌மாம் , உப்ப‌டியான‌ க‌ழுச‌றைய‌ல‌ என்ன‌ செய்ய‌லாம் 😉

  • Replies 161
  • Views 13.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
9 hours ago, tulpen said:

அப்படியானால் தமிழ் கடவுள் முருகன் சொல்லி தந்த‍து நாய்கலாச்சாரமா?  அந்த கோவிலுக்கு போய் தான் கலாச்சாரத்தை பாதுகாக்கவேண்டும் என்று நீங்கள் தானே சொன்னீர்கள். கிருஷ்ன பரமாத்மா  பல கோபியரோடு கும்மாளம் கொட்டியது நாய் கலாச்சாரமா? பண்டை தமிழ் மன்னர்கள் ராஜராஜ சோழனுக்கும், ராஜேந்திர சோழனுக்கும் பல மனைவியர் இருந்தனர் அவர்கள் எல்லாம் நாய்கலாச்சாரத்திலா இருந்தார்கள்? 

மகா பாரத‍த்தில் திளெபதை 5 கணவர்களை  அதை விட வேறு பலருக்கு குழந்தை பெற்றாள் என்று முன்மாதிரி காட்டப்படுகிறதே இந்து கலாச்சாரத்தில் அது நாய்கலாச்சாரமா?  
 
புராணங்கள், இதிகாசங்கள்,கதைகள்,திரைப்படங்கள் எல்லாத்திலையும் நல்லது கெட்டதை  சொல்வார்கள்.அதிலை நல்லதை/ எமக்கு தேவையானதை எடுத்துக்கொண்டு கெட்டதை விட்டுடடோணும்.நீங்கள் எல்லா திரியிலையும் கள்ளுக்கொட்டில்லை கள்ளு வடிக்க பாவிக்கிற அந்த அது மாதிரி நல்லதெல்லாத்தையும் விட்டுட்டு கெட்டதை மட்டும் தலையிலை வைச்சுக்கொண்டு கூத்தாடுறீங்க.

எப்படி வாழ வேண்டும். எப்படி வாழக்கூடாது என்பதைத்தான் பழைய கதைகளும் இதிகாசங்களும் கூறுகின்றன.கண்னப்ப நாயனார் கதையிலும் ஒரு விடயம் சொல்லப்படுகின்றது. அதில் சொல்லப்படும் விடயத்தை கவனிக்கணுமே தவிர கண்ணை குத்துவது படு முட்டாள்த்தனம்.

அரசர்கள் பல மனைவிகளை வைத்திருந்தார்கள். ஒரு மாதம் பழகிப்பார்த்து கழட்டி விடவில்லை.சாகும் வரைக்கும் வாழ்வாதாரம் கொடுத்தார்கள். நீங்கள் பூ,புஸ்பம் போல் மதிக்கும்  நாய் மூத்தால் தாய்க்கும் மாப்பிளை கலாச்சாரம் அவர்களிடம் இருக்கவில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, கிருபன் said:

ஒரு கதையில் படித்தது..

“ஒரு நாய் ஒருநாளைக்கு எப்டியும் பத்தாயிரம் இருபதாயிரம் முத்தம் குடுத்திரும். அது பாக்கிற எல்லாத்தையும் முத்தம் குடுத்திட்டே இருக்கு. ஒரு விஷயம் என்னன்னு பாக்கணும்னா முத்தம். அது பிடிக்கலைன்னா இன்னொரு முத்தம். பிடிச்சிருந்தா முத்தத்தோட முத்தம்… நாயோட வாழ்க்கையே முத்தம் குடுக்கிறதுதான்… காதலை நாய் மாதிரி தெரிஞ்ச எந்த தெய்வம் இருக்கு? நாய் காதலிலே அப்டியே திளைச்சிட்டிருக்குல்ல?”

“நீ நாய்க்க வாலை பாத்திருக்கியா? ஆடிக்கிட்டே இருக்கும். மனசிலே அன்பை வச்சுகிட்டு அதை காட்டத்தெரியாம இருக்கானுக மனுஷனுங்க. நாய் அப்டி இல்லை. மனசிலே அன்பிருந்தா வால் டான்ஸ் ஆட ஆரம்பிச்சிரும்… அன்பு அப்டியே துள்ளிகிட்டே இருக்கும்… அத்தனை அன்பை வேற எங்க அப்டி கண்ணாலே பாத்துக்கிட முடியும்?”

“நாய்க்குள்ள காமம் வேற எந்த உசிருக்கு இருக்கு? மனுசனெல்லாம் எங்க காமத்தை அறிஞ்சிருக்கான்? பாதிபேருக்கு பயம், மிச்சபேருக்கு வெக்கம். ரெண்டும் இல்லாதவனுக்கு சுயநலம். தோசைக்கு மாவூத்துதது மாதிரி ஊத்திட்டு போறான்… எங்கிட்டு நெறைய? அவளுக்கு நெறைஞ்சாத்தானே அவனுக்கு நெறையும்? நாயை பாரு,நாய் கொளுவிக்கிட்டுதுன்னா முச்சந்தியானாலும் மெய்மறந்து அப்டியே நின்னுட்டிருக்கும். அப்டியே ஓடும் சாடும். நிறைஞ்ச பிறவுதான் விடும்…”

வணக்கம் மிண்டர்! :cool:

 இப்பவெல்லாம் நாயை மாதிரித்தான் எங்கடை ஒரு சில இளம் சமுதாயத்தினர் வாழுனம்.நேர காலம் தெரியாது.எது எங்கை எப்பிடி இருக்கோணும் எண்டு தெரியாது. ஆரை எப்ப மடக்கலாம். எண்ட ஒரே நாய்ச்சிந்தனை தான்.சபை நாகரீகம் தெரியாது.கண்ட இடத்திலை கையை வைக்கிறது.நோண்டுறது.நடு ரோட்டிலை நிண்டு கிஸ் அடிக்கிறது. நடு ரோட்டிலை நிண்டு தேய்படுறது.

நாய் நன்றியுள்ள மிருகம். அதைப்பற்றி சொல்ல ஆயிரம் விடயங்கள். இருக்க. சொறி நாய்கள் செய்யும் கேடுகெட்ட செயலை வெட்டி ஒட்டி அதை ஒரு உதாரணமாக அழகு பார்க்கின்றீர்கள்.😜

10 minutes ago, குமாரசாமி said:

புராணங்கள், இதிகாசங்கள்,கதைகள்,திரைப்படங்கள் எல்லாத்திலையும் நல்லது கெட்டதை  சொல்வார்கள்.அதிலை நல்லதை/ எமக்கு தேவையானதை எடுத்துக்கொண்டு கெட்டதை விட்டுடடோணும்.நீங்கள் எல்லா திரியிலையும் கள்ளுக்கொட்டில்லை கள்ளு வடிக்க பாவிக்கிற அந்த அது மாதிரி நல்லதெல்லாத்தையும் விட்டுட்டு கெட்டதை மட்டும் தலையிலை வைச்சுக்கொண்டு கூத்தாடுறீங்க.

எப்படி வாழ வேண்டும். எப்படி வாழக்கூடாது என்பதைத்தான் பழைய கதைகளும் இதிகாசங்களும் கூறுகின்றன.கண்னப்ப நாயனார் கதையிலும் ஒரு விடயம் சொல்லப்படுகின்றது. அதில் சொல்லப்படும் விடயத்தை கவனிக்கணுமே தவிர கண்ணை குத்துவது படு முட்டாள்த்தனம்.

அரசர்கள் பல மனைவிகளை வைத்திருந்தார்கள். ஒரு மாதம் பழகிப்பார்த்து கழட்டி விடவில்லை.சாகும் வரைக்கும் வாழ்வாதாரம் கொடுத்தார்கள். நீங்கள் பூ,புஸ்பம் போல் மதிக்கும்  நாய் மூத்தால் தாய்க்கும் மாப்பிளை கலாச்சாரம் அவர்களிடம் இருக்கவில்லை.

அடுத்தத நாட்டில் அகதியாக ஒண்ட வந்ந நீங்கள் மட்டும் அடுத்தவன் கலாச்சாரத்தில் உள்ள எவ்வளவோ நல்ல பண்புகளை பார்க்காமல்  நீங்கள் சொல்லஅதே கள்ள வடிக்கும் பன்னாடை போல் நீங்கள் பிழைப்பு தேட வந்த நாட்டு மக்களை பார்த்து நாய் கலாச்சாரம் ஒரு பொது தளத்தில் திட்டினால் உங்கள் சொந்த    கலாச்சசாரத்தின் உள்ளகேவலமான பல ஓட்டைகளும்  வெளியே வர தான் செய்யும்.  

என்னைப்பொறுத்தவரை இந்த உலகி்ல்  வாழும் ஒருவன்  "தன் கலாச்சாரம் தான் சிறந்த‍து அடுத்தவன் கலாச்சாரம் நாய்கலாச்சாரம்" என்று கூறுகிறானோ அவன்தான் இந்த உலகின் வாழும் மிக கேவலமான கலாச்சாரத்தின் சொந்தகாரன் என்பது தான் பொருள். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
9 hours ago, tulpen said:

உங்களைப்  போல எப்போது  பார்தாலும்  தாங்கள் உசத்தி என்று தமக்மகுள்ளே மட்டும் மனப்பால் குடித்துக்கொண்டு அடுத்தவனை மட்டமானவன் என்று கேலி பண்ணும் மனப்பாங்கால் தான் தமிழருக்கு சொந்த நாடு கூட இல்லாமல் உலகெங்கும் பிச்சை எடுக்கவேண்டிய நிலை.  ஒண்ட வந்த இடத்து மக்களின் கலாச்சாரத்தையே திட்டி தீர்ககும் கேவலமான கலாச்சாரம்

என்ரை கலாச்சாரம் என்ரை மொழிய நான் உசத்தியா சொல்லாமல் வேறை ஆர் சொல்லவேணும்?

7 minutes ago, tulpen said:

அடுத்தத நாட்டில் அகதியாக ஒண்ட வந்ந நீங்கள் மட்டும் அடுத்தவன் கலாச்சாரத்தில் உள்ள எவ்வளவோ நல்ல பண்புகளை பார்க்காமல்  நீங்கள் சொல்லஅதே கள்ள வடிக்கும் பன்னாடை போல் நீங்கள் பிழைப்பு தேட வந்த நாட்டு மக்களை பார்த்து நாய் கலாச்சாரம் ஒரு பொது தளத்தில் திட்டினால் உங்கள் சொந்த    கலாச்சசாரத்தின் உள்ளகேவலமான பல ஓட்டைகளும்  வெளியே வர தான் செய்யும்.  

என்னைப்பொறுத்தவரை இந்த உலகி்ல்  வாழும் ஒருவன்  "தன் கலாச்சாரம் தான் சிறந்த‍து அடுத்தவன் கலாச்சாரம் நாய்கலாச்சாரம்" என்று கூறுகிறானோ அவன்தான் இந்த உலகின் வாழும் மிக கேவலமான கலாச்சாரத்தின் சொந்தகாரன் என்பது தான் பொருள். 

10 hours ago, குமாரசாமி said:

ஒருவனுக்கு ஒருத்தி என்பதுதான் எமது கலாச்சாரம். திருமணம் எனும் பெயரில் பலருடன் கூத்தடிக்கும் கலாச்சாரத்தை நாய் கலாச்சாரம் என்று கூறாமல் அதி உன்னத வரலாற்று நிகழ்வு என்றா கூற முடியும்.
 வயது முதிர்ந்த ஐரோப்பியர்களே தமது இளம் சமுதாயத்தின் கலாச்சார நடவடிக்கைகளை பார்த்து வேதனையுடன் புலம்புகின்றார்கள்.
இவருக்கு பழையன கழிதலும் புதியன புகுதலுமாம். ஒரு வேளை காருக்கு உதிரிப்பாகங்கள் மாற்றுவதை சொல்கின்றாரோ???? 😜

5 minutes ago, குமாரசாமி said:

என்ரை கலாச்சாரம் என்ரை மொழிய நான் உசத்தியா சொல்லாமல் வேறை ஆர் சொல்லவேணும்?

எனது கலாசாரத்தை நானே உசத்தியா சொல்லுவது வீண் வெட்டி பெருமை மட்டுமே. அதை மற்றய இனத்தவர்கள் எமக்கு சொல்லும் படி நடந்து கொள்ள வேண்டும். அதுவே  உண்மையான பெருமை.

வயது முதிர்ந்தாலே இளசுகளை பார்த்து புறுபுறப்பது உலக வழமை . அது உலகில் எல்லா இடத்திலும் இருக்கும் ஒரு வகை மனநோய்.  அதற்கு வெள்ளைகார‍ரும்  விதிவிலக்கல்ல.  நீங்கள் கூறிய அந்த வயது முதிர்ந்த வெள்ளைகார‍ர் இளமையாக இருக்கும் போது அவரை விட வயது முதிர்ந்தவர்கள் அவரைப்பார்த்து இவ்வாறு புறுபுறுத்திருப்பார்கள்.  தனது இளமை போய்விட்டதே என்ற ஆற்றாமையால் வரும் புறுபுறுப்பு அது. உங்களுக்கும் அது இருக்கிறது. எனக்கும் அது இருக்கிறது. ஆனால் அதை உலகம் கணக்கெடுக்கப்போவதில்லை. 

குமாரசாமி, 

காலம் மாற மாற உலக கலாச்சாரம் (Civilization)  மாற்றம் காண்பது உலக இயல்பு. இதில் உங்கள் விருப்பமோ எனது விருப்பமோ முக்கியமில்லை. நீங்களோ நானா அதை ஏற்றுகொள்ளாமல் விட்டாலும் அது மாறி தான் தீரும். அதறகாக நான் தான் ஏதோ எல்லாவற்றையும் மாற்றுகிறேன் என்று நீங்கள் என்னை திட்டுவதில் எந்த பயனும் இல்லை. உலக ஜதார்த்தங்களை ஏற்றுகொண்டால்  மிகுதி வாழ்க்கையை அமைதியாக மகிழ்வாக கழிக்கலாம். இல்லை என்றால் புறுபுறுத்த்கொண்டே நாம் போய் சேரவேண்டியது தான். 😂

  • We can ignore reality, but we cannot ignore the consequences of ignoring reality
  • நாம் யதார்த்தத்தை புறக்கணிக்க முடியும், ஆனால் யதார்த்தத்தை புறக்கணிப்பதன் விளைவுகளை நாம் புறக்கணிக்க முடியாது.

ஜதாரத்தத்தை அன்று  புறக்கணித்ததால் வந்த விளைவுகளை புறக்கணிக்க முடியாமல் இன்று தமிழ் மக்கள்  கஷ்ரபடுவதை நாம் இப்போது பார்க்கிறோம். 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பையன்26 said:

தாத்தா

முத‌லாவ‌து என‌து  பார்வையில் புல‌ம்பெய‌ர் பிள்ளைக‌ள் கெட்டு போவ‌து , வெள்ளை இன‌த்த‌வ‌ரின் பிள்ளைக‌ளை பார்த்து ,

இர‌ண்டாவ‌து ஒரு கொச‌ப்பு கூட‌ ந‌ண்ப‌ரா இருந்தா அந்த‌ கொச‌ப்பின் எல்லா ப‌ழ‌க்க‌த்தையும் அவ‌னுட‌ன் ப‌ழ‌கும் ம‌ற்ற‌வ‌ர்க‌ளுக்கும் தானாக‌ தொத்தும் ,

மூன்றாவ‌து

ந‌ல்ல‌ ந‌ண்ப‌ன் ந‌ல்ல‌ தோழி கூட‌ சிறு வ‌ய‌து முத‌லே ந‌ல்ல‌ ந‌ட்பாய் இருந்து ஒழுங்காய் வ‌ள‌ந்தா பின்னாளில் அந்த‌ பிள்ளைக‌ள் த‌ப்பான‌ வ‌ழிக்கு ஒரு போதும் போக‌ மாட்டார்க‌ள் ,

வெள்ளை இன‌த்த‌வ‌னின் பிள்ளைக‌ள் 10 வ‌ய‌திலே கிஸ் அடிக்குங்க‌ள் , அதுங்க‌ கூட‌ ப‌டிக்கிற‌ புல‌ம்பெய‌ர் நாட்டில் வாழும் பிள்ளைங்க‌ள் அதுங்க‌ளை பார்த்து 15வ‌ய‌திலே காத‌ல் என்று சொல்லி கில‌ம்பிடுவின‌ம் , அப்ப‌டியான‌ காத‌ல் நீண்ட வ‌ருட‌ம் நீடிக்காது , 

புல‌ம்பெய‌ர் நாட்டு பெற்றோரும் எப்ப‌ பார்த்தாலும் வேலை வேலை என்றால் பிள்ளைக‌ள் வீட்டில் இருந்து கொண்டே அதுங்க‌ட‌ இஸ்ர‌த்துக்கு ஆட்ட‌ம் போடுங்க‌ள் 

சிறு வ‌ய‌தில் இருந்தே எம் காலாச்சார‌ம் எம் மொழி த‌மிழ‌ர்க‌ளுடைய‌ பார‌ம்ப‌ரிய‌முறைக‌ளை சொல்லிக் கொடுத்து வ‌ள‌த்து இருக்க‌னும்  பிள்ளைக‌ளுக்கு , மேல‌ ஒரு க‌ள‌ உற‌வு எழுதி இருக்கிறார் , சில‌ த‌மிழ் ஆட்க‌ள் அவ‌ர்க‌ளின் பிள்ளைக‌ள்  வேறு மொழி க‌தைப்ப‌த‌ பெருமையா நினைக்கின‌மாம் , உப்ப‌டியான‌ க‌ழுச‌றைய‌ல‌ என்ன‌ செய்ய‌லாம் 😉

மிகச் சரியாக சொன்னீர்கள், அதனால் நான் வீட்டை படசாலைக்குமுன்னால் வாங்கி, அவர்களின் நண்பர்கள் அனைவரையும் வீட்டுக்கு கூட்டிகிட்டு வாருங்கள், வந்து எவ்வளவு நேரமானலும் இருந்து கதையுங்கள் படியுங்கள் என சொல்லியுள்ளேன்.

அவர்களின் நண்பர்களுக்கும் சமைத்து கொடுப்போம்(😂 - 5stars தருவார்கள் வடை, தக்காளி சாதம், முறுக்கு...) , அதனால் அவர்களின் நண்பர்களை பற்றி எம்மால் அறிய முடியும், அத்துடன் பிள்ளைகளுக்கும் ஒரு சுதந்திரம்,

அவர்கள் தங்கள் நண்பர்களுடன் கடைக்கு சினிமாக்கு போகிறோம் என சொன்னால் யாருடன் போகின்றீர்கள் என கேட்டுதான் விடுவோம், எங்களுக்கு அவர்களின் நண்பர்கள் எல்லோரையும் தெரிந்து வைத்திருப்பதால் பயப்படுவதில்லை, என்றாலும் வெளியில் போய் வரும் நேரமெல்லாம் கேட்டுதான் அனுப்புவோம், அத்துடன் போனவுடன் & வெளிக்கிடும் போது whatsapp இல் செய்தியும் அனுப்பிவிடுவார்கள் FAMILY Group க்கு, இது ஒரு பாதுகாப்பிற்கே. கட்டி வைத்திருக்க முடியா இங்கு, ஆனா கவனமாக வளர்க்கலாம், நல்ல அறிவுரைகளை சொல்லி.

ஒவ்வொரு நாளும் வீடு திருவிழா மாதிரிதான் , ஒன்று மனைவியிடம் படிக்க பல பிள்ளைகள் வருவார்கள், அவர்களுடன் எங்கள் பிள்ளைகளும் நட்பாக பழகுவார்கள், அதனால் பல தமிழ், தெலுங்கு, மலையாள பெற்றோர் & பிள்ளைகளுடன் பழகும் வாய்ப்பு அதிகம், அதனால் வெளியில் சேட்டை விட முடியாது, தகவல் உடன் வரும்  😂.

நமது கலாச்சாரத்துடன் போய்கிட்டிருக்கின்றார்கள், கடந்த 10 வருடங்களாக சாய்பாபா SSE வகுப்புகளிற்கு போய்கிட்டு இருக்கின்றார்கள், அதனால பல நல்ல விடயங்களை கற்றுள்ளார்கள்.

நீங்கள் சாய்பாபா பக்தராக இருக்கவேண்டுமென்றில்லை (எனக்கு நம்பிக்கை இல்லை இவரில்😡) SSE வகுப்பிற்கு விடுங்கள், நல்ல பழக்க வழக்கம் வரும், பலருடன் சேர்ந்து பழகும் வாய்ப்பும் கிட்டும். அத்துடன் மனித நேயம், தொண்டு, இப்படி பல அங்கு கற்கலாம். உங்கள் விருப்பம். 🙏🙏🙏 (துல்பன் - வந்து கேட்கப்படாது மூட நம்பிக்கையை வளர்கின்றேன் என😎)

நான் என் நண்பர்களையும் ஊக்கப்படுத்தி அவர்களும் அங்கு அனுப்பினவர்கள். சிலர் முழுநேர பக்தர்கள் ஆகிவிட்டார்கள்😂

32 minutes ago, tulpen said:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, உடையார் said:

உங்க‌ளின் எழுத்தின் மூல‌ம் தெரியுது , உங்க‌ட‌ பிள்ளைக‌ள் ந‌ல் வ‌ழியில் ப‌ய‌ணிக்கின‌ம் என்று 🙏🙏🙏🙏🙏 ,

என்ர‌ அத்தை ம‌ச்சாள் , இங்கை டென்மார்க்கில் இருக்கும் என‌து ம‌ச்சான் சாய்பாபா வை அதிக‌ம் ந‌ம்பி வ‌ண‌ங்குவின‌ம் , த‌மிழ் நாடு போன‌ போது நானும் சாய்பாபாவின் அழ‌கான‌ ப‌ட‌ம் ஒன்று வாங்கி வ‌ந்தேன் , ஆனால் இதுவ‌ர‌ பெரிசா வ‌ண‌ங்கின‌து இல்ல ‌ப‌ட‌த்தை பார்த்து  , ம‌ச்சாள் சாய்பாபாவின் ப‌ட‌ங்க‌ளை முக‌ நூலில் போடுவா , ம‌ன‌ ஆறுத‌லுக்கு லைக் ப‌ண்ணுவேன் உடையார் ஜ‌யா 🙏

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, tulpen said:

உலக ஜதார்த்தங்களை ஏற்றுகொண்டால்  மிகுதி வாழ்க்கையை அமைதியாக மகிழ்வாக கழிக்கலாம்.

👍 ஈழப்பிரியன் சொன்ன மாதிரி முள்ளில் விழுந்த சேலை தான் நம் பிள்ளைகள்; எப்படி எடுக்கின்றோம் என்பதே, அவர்கள் வாழப்போகும் வாழ்கை

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, tulpen said:

என்னைப்பொறுத்தவரை இந்த உலகி்ல்  வாழும் ஒருவன்  "தன் கலாச்சாரம் தான் சிறந்த‍து அடுத்தவன் கலாச்சாரம் நாய்கலாச்சாரம்" என்று கூறுகிறானோ அவன்தான் இந்த உலகின் வாழும் மிக கேவலமான கலாச்சாரத்தின் சொந்தகாரன் என்பது தான் பொருள். 

எமது கலாசாரத்தை எல்லா திரிகளிலும் கேவலமாக சித்தரிக்கும் உங்களை போன்றவர்கள் எவ்வளவு கேவலமானவர்கள் என்பதை ஒப்புக்கொண்டதற்கு நன்றி. இனிமேலாவது  கொஞ்சம் மூடிக்கொண்டிருக்க பழகுங்கள்.

பல்தேசிய இனங்கள் சேர்ந்து வாழும் நாடுகளில் கலாச்சார பரம்பல் ஏற்படுவது இயற்கை. இந்த உலகில் வாழும் மற்றய மனிதர்களைபோல சாதாரண மனிதர்களான தமிழர்களிலும் அந்த பரம்பல் ஏற்பட தான் செய்யும். இந்த இயல்பு என்ற ஜதாரத்தத்தை மறுத்து எனது கலாச்சாரம் தான் உயர்ந்த‍து மற்றதெல்லாம் தாழ்ந்ந்து என்று கூறும் அறிவிலிகள் எல்லா சமூகத்திலும் உள்ளார்கள் தான். குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டும் சிலர் எமது  கலாச்சாரம் தான் உசத்தி என்று கூறி மற்றயவர்களை தாழ்த்துவதும் அதை வாசித்தது மற்றவர்கள் புளகாங்கிதம் அடைவதும் அதையே எல்லோரும் கூறவேண்டும் என்று எதிர்பார்ப்பதும்  இந்த பாடலை ஞாபகப்படுத்தகிறது

 "ஒரு பொய்யாவது சொல் கண்ணே உன் காதலன் நான் தான் என்று அந்த சொல்லில் உயிர்வாழ்வேன்".

இப்படியே எனது கலாச்சாரம் தான் உலகில் உயர்ந்தது என்ற பொய்யை கேட்டு மாயையில் வாழவேண்டியது தான். 

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, tulpen said:

கலாச்சாரம் என்பது வாழ்வியலோடும் ஒரு சமூகத்தின் வளர்ச்சி மற்றும் முதிர்ச்சியோடும்  சம்பந்தப்பட்டது

அதற்கு காரண காரியங்களையும் தீர்வுகளையும் விளக்கங்களையும் சொல்வது  கடினம்

தமிழரின் வாழ்வும்  காலமும் வரலாறும் சொல்லும்

வழிமுறைகளையும் பாதைகளையும் தீர்வுகளையும் விளங்கப்படுத்துதல்  அல்லது ஒழுகுதல் அல்லது அலசுதல் என்பது மிக மிக  கடினமானதும் நேரத்தை  விழுங்குவதுமானதாகும்.

சமீபத்திய  உதாரணமாக  கொரோனா  சில  விடயங்களை  தவிர்க்கும்படி சொல்லிவிட்டு  செல்கிறது

தமிழர்கள் இப்படி  எத்தனைக்கு  முகம் கொடுத்து பழக்கவளக்கங்களை சீர்  செய்தனரோ நாம் அறியோம்?????

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, tulpen said:

இப்படியே எனது கலாச்சாரம் தான் உலகில் உயர்ந்தது என்ற பொய்யை கேட்டு மாயையில் வாழவேண்டியது தான். 

வெளிநாடுகளில் வாழும் ஈழதமிழர்ககள் பெரும்பாலும் தங்களது கலாச்சாரத்தை குறைவாக தான் நம்புகிறார்கள். அதன் காரணமாகவே எமக்கு தொடர்பற்ற வட இந்திய ஹிந்தி உடைகளை திருமணங்களில் அணிந்து புளகாங்கிதம் அடைகின்றனர். வெளியில் தமிழன் தமிழன் காலாச்சாரம் தான் உலகில் உயர்ந்தது என்று புழுகி கொள்வது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, tulpen said:

பல்தேசிய இனங்கள் சேர்ந்து வாழும் நாடுகளில் கலாச்சார பரம்பல் ஏற்படுவது இயற்கை. இந்த உலகில் வாழும் மற்றய மனிதர்களைபோல சாதாரண மனிதர்களான தமிழர்களிலும் அந்த பரம்பல் ஏற்பட தான் செய்யும். இந்த இயல்பு என்ற ஜதாரத்தத்தை மறுத்து எனது கலாச்சாரம் தான் உயர்ந்த‍து மற்றதெல்லாம் தாழ்ந்ந்து என்று கூறும் அறிவிலிகள் எல்லா சமூகத்திலும் உள்ளார்கள் தான். குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டும் சிலர் எமது  கலாச்சாரம் தான் உசத்தி என்று கூறி மற்றயவர்களை தாழ்த்துவதும் அதை வாசித்தது மற்றவர்கள் புளகாங்கிதம் அடைவதும் அதையே எல்லோரும் கூறவேண்டும் என்று எதிர்பார்ப்பதும்  இந்த பாடலை ஞாபகப்படுத்தகிறது

 "ஒரு பொய்யாவது சொல் கண்ணே உன் காதலன் நான் தான் என்று அந்த சொல்லில் உயிர்வாழ்வேன்".

இப்படியே எனது கலாச்சாரம் தான் உலகில் உயர்ந்தது என்ற பொய்யை கேட்டு மாயையில் வாழவேண்டியது தான். 

துல்ப‌ன்
நீங்க‌ள் எல்லாத்திலும் எம் ம‌ற்ற‌ க‌ள‌ உற‌வுக‌ளுக்கு எதிரா எழுத‌க் கூடிய‌வ‌ர் , உங்களின் எழுத்த‌ வாசிக்க‌ தெரியுது நீங்க‌ள் எத்த‌ க‌ல்ச்ச‌ரில் வாழ‌ விரும்புகிறீங்க‌ள் என்று 

எம் முன்னோர்க‌ள் எங்க‌ளுக்கு சொல்லி த‌ந்த‌ ந‌ல்ல‌த‌ எம் அடுத்த‌ ச‌ந்த‌திக்கும் எடுத்து செல்ல‌ வேண்டிய‌து எங்க‌ க‌ட‌மை , 

வெள்ளை இன‌த்த‌வ‌னின் நாட்டில் நாம் வாழ்ந்தாலும் எங்க‌ளுக்கும் அவ‌ர்க‌ளுக்கும் நிறைய‌ வேறு பாடு இருக்கு ,

 நூற்றுக்கு 48 விழுக்காடு வெள்ளைய‌ர்க‌ள் க‌லியாண‌ம் செய்து டிவேஸ் எடுத்து வாழுகிறார்க‌ள் இந்த‌ நாட்டில் , 

எம் க‌லாச்சார‌த்தில் எம் முன்னோர்க‌ள் சொன்ன‌து க‌லியாண‌ம் ஆயிர‌ம் கால‌த்து ப‌யிறு ,  இது ப‌ல‌ருக்கு தெரிந்த‌ ஒன்று , இதன் அர்த்த‌ம் உங்க‌ளுக்கு தெரிந்து இருக்க‌ வாய்ப்பு இல்ல‌ , ஊரில் போர் சூழ‌ல் கார‌ண‌மாய் அரைகுறை ப‌டிப்பு ப‌டிச்சிட்டு சிறு வ‌ய‌தில் புல‌ம் பெய‌ர் நாட்டுக்கு வ‌ந்த‌ என் போன்ற‌ பிள்ளைக‌ள் ப‌ல‌ருக்கு தெரியும் எம் க‌லாச்சார‌ம் , உங்க‌ளுக்கு தெரியாத‌து ஆச்ச‌ரிய‌மாய் இருக்கு 😉

வெள்ளை இன‌த்த‌வ‌ன் உங்க‌ட‌ பெண்டாட்டிக்கு ரூட்டு போட்டா அவ‌ன் போட‌ட்டும் என்று பார்த்து கொண்டு சும்மா இருப்பிங்க‌ளா 😁

ஒரு குடும்ப‌ம் என்றால் ம‌னைவி பிள்ளைக‌ளுட‌ன் ஒரு குறையும் இல்லாம‌ அடுத்த‌வ‌ர்க‌ள் ம‌ற்ற‌வ‌ர்க‌ளை பார்த்து கேலி செய்யும் அள‌வுக்கு நாம் வாழக் கூடாது , 

எங்கு இருந்தாலும் எம் க‌லாச்சார‌ம் முக்கிய‌ம் ,  எங்களுக்கு எம் போராட்ட‌ம் த‌மிழீழ‌ த‌னி நாடு எவ‌ள‌வு முக்கிய‌மோ அதே போல் த‌மிழ் க‌லாச்சார‌மும் முக்கிய‌ம் , 

நாம் தான் புல‌ம்பெய‌ர் நாட்டில் ந‌ல்லா வாழுகிறோம் எம‌க்கு எத‌ற்கு போராட்ட‌ம் எம‌க்கு எத‌ற்கு த‌னி நாடு என்று ஒதுங்கி இருந்து இருக்கிறோமா , நாட்டை விட்டு தான் வ‌ந்தோம் எம் உண‌ர்வை விட்டுட்டு வ‌ர‌ வில்லை , 

அதே போல‌ தான் வெளி நாட்டில் நாம் வாழ்ந்தாலும் எம் க‌லாச்சார‌ம் முக்கிய‌ம் , அடுத்த‌வ‌ன்ட‌ பெண்டாட்டிய‌ இவ‌ன் வைத்து இருக்கிற‌து இவ‌ன் பெண்டாட்டியை அவ‌ன் வைத்து இருப்ப‌து எல்லாம் த‌மிழீழ‌ ம‌ண்ணில் நான் பார்த்த‌து இல்ல‌ , 

நான் என்ர‌ த‌ங்கைச்சிக‌ள் கூட‌ அதிக‌ம் நெருங்கி ப‌ழ‌குவேன் , அண்ண‌ன் என்ற‌ முறையில் அதுங்க‌ளுக்கு சொல்லி குடுக்க‌ நிறைய‌ இருக்கு , அதுங்க‌ள் இங்கை பிற‌ந்த‌ பிள்ளைங்க‌ள் நான் த‌மிழீழ‌த்தில் , 

நானே அரைகுறை த‌மிழில் எழுதுவேன் என்ர‌ த‌ம்பி அவ‌னுக்கு என்னால் முடிந்த‌ த‌மிழை சொல்லி குடுத்தேன் எப்ப‌டி க‌ணணியில் கைபேசியில் இருந்து த‌மிழ் எழுதுவ‌து என்று , 

இப்ப‌டி ஒரு அண்ண‌ன் த‌மிழ் சொல்லித் த‌ந்த‌ ப‌டியால் தான் நாங்க‌ள் கொஞ்ச‌ம் த‌ன்னும் எழுதுகிறோம் என்று என்ர‌ ஒன்ட‌ விட்ட‌ ச‌கோத‌ர‌ங்க‌ள் நினைத்தா அல்ல‌து நேர‌டியாய் சொன்னால் அது என‌க்கு ம‌கிழ்ச்சி , என்ர‌ ச‌கோத‌ர‌மும் த‌மிழ் மீது ஆர்வ‌ம் காட்டுவ‌து   என‌க்கு ம‌கிழ்ச்சியை த‌ருது 🙏👏

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, nedukkalapoovan said:

எங்கள்.. திருமணத்தை தாங்கள் சொல்லியது போல் சைவத் தமிழ் முறைப்படி.. கோவிலில் தான் நடத்தினோம்.

பிறரைப் போல வாய்ப்பந்தல் போடாமல் பாரம்பரியத்தையும், தொன்மங்களையும் கடைப்பிடித்து திருமணம் செய்த நெடுக்ஸுக்குப் பாராட்டுக்கள்.👏👏👏

திருமணம் எளிமையாகவும், பண்பாட்டையும் தொன்மங்களையும் வெளிப்படுத்துவதுமாக இருக்கவேண்டும் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்தில்லை.

ஆனால் பெரும்பாலான திருமணங்கள் ஆடம்பரமாகவும்,  மானாட மயிலாட ஷோ போலவும், போதாக்குறைக்கு கூறை மாத்த பெண்போகும் இடைவெளியில் சீக்கியரின் பாங்கரா மேளமடித்து ஒரு கூத்துமடித்தும் இருக்கும்.

இந்தக் கூத்துகளைப் பார்க்கப் பிடிக்காமல் வெளியே போய் நண்பர்களிடன் இரண்டு பியர் அடித்துவிட்டு (சம்மரில்தானே கலியாணங்கள்), சாப்பாட்டு வரிசை தொடங்க வந்து நாலு விழல்க்கதைகளும் பேசி, குடிச்ச பியருக்கு தோதாக மூன்று நாலு பொரிச்ச உறைப்பான மிளகாயையும் கடித்து, மரக்கறியையும் சாப்பிட்டுவிட்டு மேடையில் கூட்டம் குறைய மாப்பிள்ளை, பொம்பிளைக்கு ஒரு “ஹலோ”, “கொங்கிராயுலேஷன்ஸ்” சொல்லி, கார்ட்டையும் கொடுத்துவிட்டு,  பொண்ணுக்கு கையைக் கொடுக்கிறதா, கொடுக்காமல் விடுகிறதா என்று குழம்பி, அறுகரிசி மேலிருந்து போடுகிறதா, கீழிருந்து போடுகிறதா என்று முளுசி, ஏதோ ஒரு வழத்தால் போட்டுவிட்டு, படம் எடுக்க விறைப்பாக மூஞ்சையை வைத்துக்கொண்டு நின்றுவிட்டு, மேடையை விட்டு இறங்கும்போது கிடைக்கும் பலகார/பரிசுப் பொதியையும் பிரிச்சுப் பார்த்து நல்ல பருத்துறை வடை இருந்தால் ஒரே கடியில் அதையும் விழுங்கி கார் பார்க்குக்கு வந்தால் நிதானம் வந்துவிடும்😎

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

பிறரைப் போல வாய்ப்பந்தல் போடாமல் பாரம்பரியத்தையும், தொன்மங்களையும் கடைப்பிடித்து திருமணம் செய்த நெடுக்ஸுக்குப் பாராட்டுக்கள்

இதற்கு முக்கிய காரணம்.. எங்கள் திட்டங்களை கூடிய அளவு நாங்களே வகுத்து ரகசியமாகச் செய்து கொண்டிருந்தது தான்.. கூடிய அளவுக்கு அடுத்தவர்களின் ஆலோசனைக்கு இடமளிக்கவில்லை. திருமணத்திற்கு இரண்டு நாளுக்கு முன் தான் எமது குடும்பப் பெரியவர்களுக்கு.. இளையோருக்கு இது இது தான் உங்கள் வேலை என்று அவரவர் அனுபவம்.. இயலுமைக்கு ஏற்ப வேலைகளைப் பகிர்ந்து கொடுத்தது. எல்லோரும் ஒரு குறையும் சொல்லாமல் அதனை ஏற்றுக் கொண்டமை பாராட்டப்பட வேண்டிய ஒன்று.

இதே காலத்தில் எம்மவர் திருமணம் என்றால்.. டுபாயில் நகை.. சிங்கப்பூரில் நகை.. ஹிந்தியாவில் இருந்து சாறி.. ஜோதிகா மாலை.. அந்த மாலை.. இந்த மாலை.. போட்டோ சூட் என்று உலக நாடுகள் எங்கும் ஒரு சுற்றுலா.. என்று கிட்டத்தட்ட ஒராண்டு கால திட்டமிடலும் செயலும் என்று நம்மவர்கள் திருமணம் செய்யப் போய்.. பல நூறு பேரை அழைத்து.. அவர்கள் களைச்சு விழுந்து.. வெறுத்துப் போய் போவது தான் நடக்கிறது. இதே தான் சாறி செரிமனிக்கும்..! 😀😀

  • கருத்துக்கள உறவுகள்

மேற்கு மக்கள் கீழத்தேயத்தை விரும்ப.. கீழத்தேயம்.. குழப்பமயமாகிட்டு வருகுது.

Image may contain: Nthiran Krishnan, standing and outdoor, text that says "FaceApp"

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

பிறரைப் போல வாய்ப்பந்தல் போடாமல் பாரம்பரியத்தையும், தொன்மங்களையும் கடைப்பிடித்து திருமணம் செய்த நெடுக்ஸுக்குப் பாராட்டுக்கள்.👏👏👏

திருமணம் எளிமையாகவும், பண்பாட்டையும் தொன்மங்களையும் வெளிப்படுத்துவதுமாக இருக்கவேண்டும் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்தில்லை.

ஆனால் பெரும்பாலான திருமணங்கள் ஆடம்பரமாகவும்,  மானாட மயிலாட ஷோ போலவும், போதாக்குறைக்கு கூறை மாத்த பெண்போகும் இடைவெளியில் சீக்கியரின் பாங்கரா மேளமடித்து ஒரு கூத்துமடித்தும் இருக்கும்.

இந்தக் கூத்துகளைப் பார்க்கப் பிடிக்காமல் வெளியே போய் நண்பர்களிடன் இரண்டு பியர் அடித்துவிட்டு (சம்மரில்தானே கலியாணங்கள்), சாப்பாட்டு வரிசை தொடங்க வந்து நாலு விழல்க்கதைகளும் பேசி, குடிச்ச பியருக்கு தோதாக மூன்று நாலு பொரிச்ச உறைப்பான மிளகாயையும் கடித்து, மரக்கறியையும் சாப்பிட்டுவிட்டு மேடையில் கூட்டம் குறைய மாப்பிள்ளை, பொம்பிளைக்கு ஒரு “ஹலோ”, “கொங்கிராயுலேஷன்ஸ்” சொல்லி, கார்ட்டையும் கொடுத்துவிட்டு,  பொண்ணுக்கு கையைக் கொடுக்கிறதா, கொடுக்காமல் விடுகிறதா என்று குழம்பி, அறுகரிசி மேலிருந்து போடுகிறதா, கீழிருந்து போடுகிறதா என்று முளுசி, ஏதோ ஒரு வழத்தால் போட்டுவிட்டு, படம் எடுக்க விறைப்பாக மூஞ்சையை வைத்துக்கொண்டு நின்றுவிட்டு, மேடையை விட்டு இறங்கும்போது கிடைக்கும் பலகார/பரிசுப் பொதியையும் பிரிச்சுப் பார்த்து நல்ல பருத்துறை வடை இருந்தால் ஒரே கடியில் அதையும் விழுங்கி கார் பார்க்குக்கு வந்தால் நிதானம் வந்துவிடும்😎

இப்படித் தான் அவருடைய திருமணம் நடந்ததிற்கு ஆதாரத்தை இணைக்க சொல்லுங்கோ😂🤩🤩 ...யாழ் தன்னுடைய குடும்பம் என்று சொல்லுறவர் ...தன்னுடைய சகோதர சகோதரிகளை ஏன் கூப்பிடவில்லை என்றும் கேளுங்கோ 🤣

அது சரி எங்கட கல்யாண வீடுகளில் பியரும் கொடுக்கிறவையோ :unsure:

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, ரதி said:

அது சரி எங்கட கல்யாண வீடுகளில் பியரும் கொடுக்கிறவையோ :unsure:

யாழில் பலர் ஒழுங்காக தமிழை வாசிப்பதில்லை. நீங்களுமா?😮

Quote

வெளியே போய் நண்பர்களிடன் இரண்டு பியர் அடித்துவிட்டு

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, கிருபன் said:

யாழில் பலர் ஒழுங்காக தமிழை வாசிப்பதில்லை. நீங்களுமா?😮

ஓ ...மன்னிக்கவும்  அவசரம் 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

இப்படித் தான் அவருடைய திருமணம் நடந்ததிற்கு ஆதாரத்தை இணைக்க சொல்லுங்கோ😂🤩🤩 ...யாழ் தன்னுடைய குடும்பம் என்று சொல்லுறவர் ...தன்னுடைய சகோதர சகோதரிகளை ஏன் கூப்பிடவில்லை என்றும் கேளுங்கோ 🤣

அது சரி எங்கட கல்யாண வீடுகளில் பியரும் கொடுக்கிறவையோ :unsure:

நிகழ்ந்ததை எழுதினால்.. நம்பக் கூடியவர்கள் நம்புங்கள்.. நம்பாதாவர்கள் நம்பாதீர்கள். அது ஒரு பிரச்சனையே அல்ல. 

திருமணம் என்பது தனிப்பட்ட எளிமையான எமது பண்பாட்டு வெளிப்பாட்டுடன் அமைய வேண்டிய ஒரு மனதிரு நிகழ்வு. எமது நெருங்கிய உறவுகள்.. தற்கால நண்பர்களை தவிர வேறு எவரையும் அழைக்கவில்லை. 

மேலும் எங்கள் திருமணம் கடும் குளிர் காலத்தில் நிகழ்ந்த ஒன்று.. குளிர் நாட்டின் தன்மையையும் உள்வாங்க.  அதுவும் ஒரு புது அனுபவம் தான்.

நாங்கள் திருமண வரவேறுப்பு என்று திருமண நிகழ்வுக்கு அப்பாலான.. தனி நிகழ்வு எதனையும் செய்யவில்லை. 

யாழ் கள உறவுகளை அழைப்பது என்று முடிவெடுத்தால்... எல்லா உறவுகளையும் பாரபட்சமின்றி அழைக்கனும்.. அதற்கான வாய்ப்புக்களை செய்து கொடுக்கனும். ஒரு நாட்டில் ஒரு ஊர்காரரை மட்டும் அழைத்து மற்றவர்களுக்கு அதை விடுப்புக்காட்டுவதில் நமக்கு உடன்பாடில்லை. அது உறவுகளை பாரபட்சமின்றி மதிப்பளிப்பது ஆகாது. 

மேலும் யாழ் ஒரு பொதுவெளி. அங்கு எங்கள் தனிப்பட்ட நிகழ்வுக்குரிய விடயங்களை முழுமையாகவோ பகுதியாகவோ.. குறிப்பாக படங்களோடு பிரசுரிக்க முடியாது. அது எங்கள் கொள்கை.. யாழும் எமது தனிப்பட்ட பகிர்வுகளுக்கு நாமே தான் பொறுப்பும் என்று கூறியுள்ளது.. அதன் பொறுப்பை திறந்துள்ளது. ஆகவே இதுவிடயத்தில் எங்களிடம்.. நெகிழ்வுக்கு இடமில்லை. 

நீங்கள் எப்படி தான் தூண்டில் போட்டாலும்.. சிக்கக் கூடிய மீன்கள் மட்டும் தான் சிக்கும். 😀

மீளவும்.. யாழ் ஒரு குடும்பம்... போல. யாழ் கள உறவுகள்.. எங்கள் அன்பின் கள உறவுகள் தாம். அதில் மாற்றுக்கருத்தில்லை. கருத்தால் மோதிக் கொண்டாலும். கொள்ளா விட்டாலும். 

  • கருத்துக்கள உறவுகள்

புகழிடம் vs தாயகம்.

1 hour ago, ரதி said:

அது சரி எங்கட கல்யாண வீடுகளில் பியரும் கொடுக்கிறவையோ :unsure:

எங்கள் தமிழ் கலயாண வீடுகளில்  கிச்சினில் மேசைகளுக்கு அடியிலும் ஆங்காங்கே பார்க பண்ணி இருக்கும் கார் டுக்கிக்குள்ளும்  பெருமளவில் மதுபானங்கள் பரிமாறப்படும் 

சமீப காலங்களில் இங்கு  பிறந்து வளர்ந்த பிள்ளைகளின் திருமண விழாக்களில் தான் நேரடியாக Cocktail 🍹 உட்பட ஒழுங்கு முறையில் பரிமாறுகிறார்கள்.  

கிச்சினுக்குள்ளும் கார் டிக்குள்ளும்  ஒழித்து ஒழித்து குடித்து நிலை தடுமாறி வாந்தி எடுத்து வீடு செல்லும. கலாச்சாரத்தைக் கொண்டவர்களை  மேசையில் இருத்தி அளவோடு குடித்து  மரியாதையாக மனைவி பிள்ளைகளுடன் வீடு செல்ல வைத்தவர்கள் இங்கு  பிறந்த இளம் பிள்ளைகளே.  

10 minutes ago, nedukkalapoovan said:

புகழிடம் vs தாயகம்.

நெடுக்கு இப்படி செலக்ரிவாக படத்தை போடுவதன்  மூலம் தாயகத்திற்கும் புகலிடத்திற்கும் இடையிலான உண்மையான வித்தியாசத்தைக் காட்ட முடியாது. 

  • கருத்துக்கள உறவுகள்

யூதர்கள் எம்மை விட மோசமான இனப்படுகொலையை எதிர்கொண்டவர்கள். உலகம் பூராவும் புலம்பெயர்ந்து  வாழ்ந்தாலும்..தமது அடையாளம் தொலைக்காமல் மற்றைய இனங்களோடு இணைந்து வாழ்ந்து வரும் அதேவேளை.. தமது தாயகத்தை உருவாக்கி.. அதனையும் செழிப்போடும்.. தமது பண்பாட்டு விழுமியத்தோடும்.. பாதுகாத்து வருகின்றனர்.

இங்கு நாம் எங்கு நிற்கிறோம்..???! 

அதற்காகத்தான் இணைத்தேன். ஒரு ஒப்பீட்டுக்காக. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.