Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கருணா மீது சிஐடி விசாரணைக்கு உத்தரவு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
 

கருணா மீது சிஐடி விசாரணைக்கு உத்தரவு!

1575293764-karuna-2.jpg?189db0&189db0

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் இருந்த போது ஆனையிறவில் ஒரே இரவில் 2000 – 3000 இராணுவத்தினரை கொலை செய்ததாக தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரான கருணா எனும் வி.முரளிதரன் வெளியிட்ட கருத்து தொடர்பில் உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்குமாறு சிஐடிக்கு பதில் பொலிஸ்மா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.

கருணாவின் குறித்த கருத்துக்கு தென்னிலங்கையை சேர்ந்த அரசியல்வாதிகள் பலர் தொடர்ந்து எதிர்ப்பினை வெளிப்படுத்தி வருகின்றனர்.

மேலும் தென்னிலங்கை மக்களிடத்திலும் குறித்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Edited by nochchi

  • கருத்துக்கள உறவுகள்

அவர் விட்டதும் புஸ்வானம் இதுவும் புஸ்வானம்,

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, MEERA said:

அவர் விட்டதும் புஸ்வானம் இதுவும் புஸ்வானம்,

கண்துடைப்பு 😀

  • கருத்துக்கள உறவுகள்

இனி கருணாவை.... சிங்கள மக்கள், இராணுவத்தினர்  காணும் போதெல்லாம்.... 

3000 இராணுவத்தை கொன்ற ஆள் என்று சந்தேகத்துடன்தான் பார்ப்பார்கள். இது தேவையா.....

  • கருத்துக்கள உறவுகள்

என்னை கைது செய்ய முடியாது – என்னை விமர்சிப்போர் அப்பாவிகளல்ல – கருணா காட்டம்!

109748355_kamalgunarathnaandkaruna-itijtwtterphoto.jpg?189db0&189db0

உலகறிந்த உண்மையையே நான் கூறினேன். அதற்காக என்னை கைது செய்ய முடியாது. என்னை கைது செய்யக் கோருவோர் அப்பாவிகள் கிடையாது என்று கருணா எனும் வி.முரளிதரன் தெரிவித்துள்ளார்.

புலிகளுடன் இருந்த போது ஆணையிறவு மோதலில் 3000 இராணுவ வீரர்களை கொன்றதாக அண்மையில் அவர் தெரிவித்த கருத்து தொடர்பில் கடும் எதிர்ப்புக் கிளம்பியிருந்தது.

குறிப்பாக சஜித் பிரேமதாச, மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க, ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நவீன் திஸாநாயக்க மற்றும் ருவான் விஜயவர்த்த உட்பட பௌத்த தேரர்களும் கடுமையான கண்டனத்தினை வெளியிட்டனர்.

இந்நிலையில் அதற்கு பதிலளித்துள்ள கருணா,

‘நான் புதிதாக ஒன்றையும் கூறவில்லை. இந்நாட்டில் கடந்த காலத்தில் நிகழ்ந்த விடயங்களையே குறிப்பிட்டேன். புலிகள் அமைப்பு பலமாக இருந்த காலத்தில் அவ்விதமான சம்பவங்கள் இடம்பெற்றன. அதேபோன்று படைகளாலும் புலிகளுக்கு பாரிய அழிவுகள் ஏற்படுத்தப்பட்டன. இதனை இலங்கையில் உள்ளவர்களும் சரி உலகத்தில் உள்ளவர்களும் சரி அறிந்துள்ளனர்.

அவ்விடயங்களையே நான் கூறினேன். அதனை தற்போது தென்னிலங்கையில் சஜித், அநுர, நவீன், ருவான் போன்றவர்கள் தூக்கிப்பிடித்துக்கொண்டிருக்கின்றார்கள். ஆனால் தென்னிலங்கை மக்கள் அதுபற்றி அலட்டிக்கொள்ளவில்லை. இதிலிருந்து தென்னிலங்கை மக்கள் எனது கருத்துக்கள் தொடர்பிலான புரிதலைக் கொண்டிருக்கின்றார்கள் என்பது வெளிப்பட்டுள்ளது.

எனது கருத்தினை தூக்கிப்பிடித்து கொக்கரித்துக் காெண்டிருப்பவர்கள் தமது தேர்தல் பிரசாரத்திற்கான ஒரு உத்தியாகவே இதனை பயன்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள். அவர்களுக்கு தென்னிலங்கையில் சரிந்து கிடக்கும் வாக்குகளை மீளப்பெற்றுக்கொள்வதற்கு எனது கருத்துக்களை பயன்படுத்துகின்றார்கள்.

சஜித் பிரேமதாச ஒன்றை மறந்து விட்டார், அவரது தந்தை ரணசிங்க பிரேமதாச புலிகளுக்கு ஆயுதங்களை வழங்கினார். ஐயாயிரம் ரைபில் ரக துப்பாக்கிகளையும் ஒரு இலட்சம் ரவைகளும் அவரால் வழங்கப்பட்டது. அதற்கு நான் சாட்சியாக இருக்கிறேன்.

அநுரகுமார திஸாநாயக்கவுக்கு விடுதலை போராட்டம் பற்றியோ, அதில் இடம்பெற்ற மரணங்கள் பற்றியோ பேசுவதற்கு எந்தத் தகுதியும் கிடையாது. அவர் தமது மக்களுக்கு எதிராக போராடி 80 ஆயிரம் பேரைக் கொன்ற அமைப்பின் தலைவர்.

அவ்வாறானவர்களுக்கு என்னை விமர்சிக்க என்ன தகுதியுள்ளது. இதுபோன்று தான் ஐக்கிய தேசியக் கட்சியின் வரலாறு தெரியாது, நேற்றுப்பெய்த மழையில் முளைத்த களான்களாக இருக்கும் பரம்பரை அரசியல் வாரிசுகள் முதலில் ஐ.தே.கவினதும் தலைவர்களினதும் வரலாற்றினை முழுமையாக படித்து விட்டு வருமாறு கூறுகின்றேன்.’ – என்றார்.

https://newuthayan.com/என்னை-கைது-செய்ய-முடியாத/

 

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பொதுமேடையிலே

எதைச்சொல்லணும்

சொல்லக்கூடாது என்பது கூட தெரியாதவனெல்லாம் தலைவன்,  வழிகாட்டி, விடிவெள்ளி???

தூ.

ஜெனீவா முடியும் வரை சொறிலங்கனுக்கு கருணா தேவைப்படும்.
சோ, இந்த கண்துடைப்பு ஆட்டங்கள் மக்களை ஏமாத்தவே.
கருணா சொன்ன பச்சைப் பொய்யை நம்பி சில இளிச்சவாயன்கள் வாக்களிக்கலாம்.

சில இளிச்சவாயர்கள் கருணாவின் விசிறிகளாக மாறலாம்.

இது ரகசியமல்ல போரில் நடக்கும் விடயங்களே: கருணாவுக்கு தென்னிலங்கையில் வலுக்கும் ஆதரவு

இராணுவத்தினரை கொலை செய்ய நேரிடுவது சாதாரணமான விடயம் அதனாலேயே கருணா பயங்கரவாதியாக செயற்பட்ட காலத்தில் ஆயிரக்கணக்கான இராணுவத்தை கொலை செய்தார் என்பது முழு நாடும் அறியுமென ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் காலி மாவட்ட வேட்பாளர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பத்தரமுல்லையில் உள்ள தனது அலுவலகத்தில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் பேசிய அவர்,

பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் தெரிவித்திருந்த விடயம் சம்பந்தமாகவே கருணா இந்த கருத்தினை வெளியிட்டுள்ளார் என நினைக்கின்றேன்.

கருணா கொரோனாவை விட பயங்கரமானவர் என கூறியிருந்தனர். இதனால் போர் காலத்தில் அவர் பயங்கரவாத அமைப்பின் தலைவர் என்ற வகையில் இத்தனை இராணுவத்தினரை கொலை செய்ததாக அவர் கூறினார்.

அது இரகசியமல்ல. கிழக்கு மாகாணத்தில் தாக்குதல்கள் தொடர்பாக நாட்டு மக்கள் மிகவும் புரிந்துணர்வுடன்

பயங்கரவாத தலைவராக அவர் செய்ததை நாங்கள் தனிப்பட்ட ரீதியில் ஏற்காவிட்டாலும் பயங்கரவாத அமைப்புக்கும், இராணுவத்திற்கும் இடையில் போர் நடக்கும் போது இப்படியான நிலைமைகள் ஏற்படும்.

கருணா தலைமை வகித்து அவரது பயங்கரவாத அமைப்பை வெற்றி பெற செய்ய நடவடிக்கை எடுத்துள்ளார். நாங்கள் இராணுவம் என்ற வகையில் பயங்கரவாதத்தை தோற்கடிக்க இதற்கு சமமான நடவடிக்கைகளை மேற்கொண்டோம். இவை போரில் நடக்கும் விடயங்கள்.

எனினும் சாதாரண நிலைமைக்கு மாறிய பின்னர் தான் கடந்த காலங்களில் செய்த தவறுகளை பல சந்தர்ப்பங்களில் மறந்து விடுகின்றனர்.

மக்கள் விடுதலை முன்னணியின் புரட்சிக் காலத்திலும் ஒரு பக்கத்தை சேர்ந்த பெருந்தொகையான இளைஞர்கள் கொல்லப்பட்டனர். மறுபுறம் மக்கள் விடுதலை முன்னணியினர் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களை கொன்றனர்.

இவர்கள் அனைவரும் தற்போது ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்து நாடாளுமன்றத்திற்கு வந்துள்ளனர். கருணாவும் நாடாளுமன்றத்திற்கு வந்தார்.

தற்போதும் அந்த பிரதேச மக்கள் விரும்பினால் அவரை நாடாளுமன்றத்திற்கு அனுப்பி வைப்பார்கள் அதன் மூலம் அவரது அரசியல் வாழ்க்கையும் தொடருமென அவர் தெரிவித்துள்ளார்.

https://www.ibctamil.com/srilanka/80/145629?ref=ibctamil-recommendation

நான் கூறியது கூறியதுதான்! எந்த மாற்றமும் இல்லை- என்னை கைது செய்ய முடியாது! கருணா பகிரங்க தகவல்

நா்ன் கூறிய கருத்துக்களின் நிலைப்பாட்டிலேயே இப்போதும் இருக்கிறேன். அதில் மாற்றமில்லை என முன்னாள் பிரதி அமைச்சரும்,அம்பாறை மாவட்ட வேட்பாளருமான விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸை விட தான் பயங்கரமானவன் எனவும், ஒரே தினத்தில் இரண்டாயிரம் முதல் மூவாயிரம் இராணுவத்தினரை கொலை செய்ததாகவும் கருணா தெரிவித்திருந்த கருத்துக்கள் தென்னிலங்கையில் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

இது தொடர்பில் தன்னுடைய நிலையப்பாட்டை வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது பேசிய அவர்,

விடுதலைப்புலிகள் அமைப்பின் உறுப்பினராக இருந்த போது இராணுவத்தினரை தான் கொலை செய்தது அனைவரும் அறிந்த விடயம் என்பதால், தற்போது என்னை கைது செய்ய முடியாது.

நான் கூறிய நிலைப்பாட்டிலேயே தற்போதும் இருக்கிறேன். அதில் மாற்றமில்லை.

என்னை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியும், மக்கள் விடுதலை முன்னணியும் கூறினாலும் அந்த கட்சிகளிடமும் கடந்த கால தவறுகள் இருப்பதை நினைவுபடுத்துகிறேன்.

தற்போது நான் ஜனநாயக அரசியல் நீரோட்டத்தில் இணைந்துக்கொண்டுள்ளேன் என்றார்.

https://www.ibctamil.com/srilanka/80/145623?ref=rightsidebar

  • கருத்துக்கள உறவுகள்

கருணா அவர்கள் பகிரங்க மன்னிப்பு கேட்கலாம். அதைவிடுத்து தான் பேசியதை நியாயப்படுத்தி தொடர்ந்து சவால் விடுவது இவர் புனர்வாழ்வு பெறவேண்டியவர் என்பதை காட்டுகின்றது. 

கருணா அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால் இது ஒரு தவறான முன்னுதாரணமாக எதிர்காலத்தில் அமையும். நாட்டில் நீதி பரிபாலனம், சட்டங்களுக்கு ஜனாதிபதி உட்பட அனைவருமே கட்டுப்பட்டவர்கள்.

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, Rajesh said:

தற்போதும் அந்த பிரதேச மக்கள் விரும்பினால் அவரை நாடாளுமன்றத்திற்கு அனுப்பி வைப்பார்கள் அதன் மூலம் அவரது அரசியல் வாழ்க்கையும் தொடருமென அவர் தெரிவித்துள்ளார்.

அதுதானே. தங்கள் நோக்கத்தை தெளிவாகச் சொல்கிறார். தங்களது முகவரான கருணாவை மக்கள் வாக்களித்துத் தங்களது எண்ணங்களை கிழக்கிலே நிiவேற்ற அனுப்ப வேண்டுமாம்.

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தல் மேடையில சொன்னதெல்லாம், உண்மை என்று விசாரிக்க கிளம்பினால்.... சம்பந்தர் முதல் மகிந்தர் வரை எல்லா கொண்டு போய் விசாரிக்க வேணும்.

அம்மான்... அட.. சும்மா போங்க.... நான் சும்மா வாக்குகளுக்கு விட்ட புருடா எண்டு சொல்லிக்கொண்டே கிளம்பிடுவார்.

ஐடியா சொல்லிக் கொடுக்க மகிந்தரே பின்னால இருக்கிறாரே.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

கருணா அவர்கள் பகிரங்க மன்னிப்பு கேட்கலாம். அதைவிடுத்து தான் பேசியதை நியாயப்படுத்தி தொடர்ந்து சவால் விடுவது இவர் புனர்வாழ்வு பெறவேண்டியவர் என்பதை காட்டுகின்றது. 

கருணா அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால் இது ஒரு தவறான முன்னுதாரணமாக எதிர்காலத்தில் அமையும். நாட்டில் நீதி பரிபாலனம், சட்டங்களுக்கு ஜனாதிபதி உட்பட அனைவருமே கட்டுப்பட்டவர்கள்.

 

கருணா மகிந்த அன்ட் கோ வுக்குக் கிடைத்துள்ள வரப்பிரசாதம்.  கருணாவைப் பிரித்தெடுத்து ரணில்  தொடக்கிவைத்த நரி வேலையின் தொடர்ச்சியாகத் தற்போது கிழக்கிலே அரசியல்ரீதியாகச் செய்யக் களமிறக்கப்பட்டவரே கருணா. ராயபக்சர்களோ தாமரைமொட்டோ தமிழர்களிடம் எடுபடாதென்பதால் புலிப்புராணத்தோடு  தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி என்றபோர்வையில் களமிறக்கப்பட்டுள்ள ஒரு கூலிதான் கருணா. தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதித்துவத்தைத் தமிழரை வைத்தே சிதைக்க எடுக்கும் முயற்சியைத் தமிழர்கள் சரியாக இனங்கண்டு  தமது வாக்குப்பலத்தை தமிழ் தேசியத்தை வலுப்படுத்தும் வகையிலே பயன்படுத்த வேண்டும்.குறைந்தபட்சம் தமிழரது பிரதிநிதித்துவத்தைக் காத்தல் என்ற வகையில் மட்டுமே. சிங்களத்தை பெரும்பான்மையாகக்கொண்ட நாடாளுமன்று தமிழருக்கெதிரான சட்டங்களை நிறைவேற்றும் சபை. வெறும் அடையாளக் குரலெழுப்புதல் மட்டுமே தமிழ் அரசியல்வாதிகள் செய்யக்கூடியது. 
 

கடந்த தேர்தற்காலங்களைப் போன்று இந்தக் காலத்திலும் புலிகளைத் தமது தேவைக்கேற்ப தமிழ் சிங்கள அரசியல்வாதிகள் பயன்படுத்தும் ஒரு கீழ்மையான அரசியல் வங்குரோத்துத்தனம் குறித்துத் தமிழர்கள் இனங்கான வேண்டியது அவசியமானது.புலிகள்தானே மௌனிப்பதாகச் சொல்லியதோடு அவர்கள் ஒதுங்கிவிட்ட சூழலில் அவர்களை தங்களது பரப்புரைக்கும் வெற்றிக்கும் பயன்படுத்தும் சிங்கள தமிழ் அரசியல்வியாதிகள் ஈழத்தீவின் சாபக்கேடாகும். இதனை எப்போது தமிழினமும் சிங்கள இனமும் புரிந்துகொள்கிறதோ அன்றுதான் ஒரு நியாயமான அரசியல் மாற்றம் நிகழ வாய்ப்பு ஏற்படலாம்.

கருணா மன்னிப்புக் கேட்க வேண்டும் என்பது சரியானபோதும் இலங்கையில் பக்கச்சார்பற்ற இனவாத மனோநிலையற்ற நீதிபரிபாலனம் இருக்கிறதா? இலங்கையில் நீதியென்பதே சிங்களவருக்கா நீதி மட்டுமே. 

சவேந்திர சில்வா கோத்தபாய உட்பட இனக்கொலையாளர்களின் நிலை என்ன? கடத்திக் கொலை செய்த கொலையாளிகளான படையினரின் நிலை என்ன?
 

On 22/6/2020 at 11:21, nochchi said:

கருணா மீது சிஐடி விசாரணைக்கு உத்தரவு!

சுமந்திரன் ஒரு பழைய பேப்பரைக் காட்டி தனது சகா கருணா பற்றிய விசாரணை எல்லாம் முடிஞ்சுது, இனி விசாரிக்க ஒன்றுமில்லை என்று விரைவில சொல்லுவார்.

  • கருத்துக்கள உறவுகள்
On 23/6/2020 at 00:26, Rajesh said:

கருணா தலைமை வகித்து அவரது பயங்கரவாத அமைப்பை வெற்றி பெற செய்ய நடவடிக்கை எடுத்துள்ளார். நாங்கள் இராணுவம் என்ற வகையில் பயங்கரவாதத்தை தோற்கடிக்க இதற்கு சமமான நடவடிக்கைகளை மேற்கொண்டோம். இவை போரில் நடக்கும் விடயங்கள்.

சிங்களவனின் ராஜதந்திரம். மற்றைய தமிழ்க்கைதிகளை வேறொரு மாதிரி நடத்துவத்தின் காரணம் என்னவோ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.