Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனடாவிலிருந்து சேகரித்து தமிழ் அரசு கட்சிக்கு அனுப்பப்பட்ட 20 கோடி பணம் எங்கே?: மகளிர் அணி பரபரப்பு கேள்வி!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நுண்நிதிக் கடனால் இடம்பெறும் தற்கொலைகள் மற்றும் வறுமைக்குள் வாடும் பெண் தலைமை குடும்பங்களின் மேம்பாட்டுக்காக கனடாவில் பல அமைப்புக்கள், நலன்விரும்பிகளால் சேகரித்து தமிழரசுக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஊடாக வழங்கப்பட்ட 20 கோடியே 20 இலட்சம் (212 மில்லியன்) ரூபாவுக்கு என்ன நடந்தது என தமிழரசுக் கட்சியின் மகளிர் அணிச் செயலாளர் திருமதி விமலேஸ்வரி ஸ்ரீகாந்தறூபன் கேள்வி எழுப்பியுள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தில் இன்று முற்பகல் 10 மணிக்கு இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் மேற்படி கேள்வியினை எழுப்பியிருந்தார்.

அவர் இது குறித்து மேலும் தெரிவிக்கையில்,

ஈழத்தில் போரால் கடுமையாக பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கப்பால் வடக்கு கிழக்கில் நுண் நிதிக் கடன் பிரச்சினைகளால் பலர் குடும்பத்தோடு தற்கொலை செய்த சம்பவங்கள் இடம்பெற்றன. பலர் குடும்பங்களோடு தலைமறைவு வாழ்க்கை நடத்துமளவுக்கு தள்ளப்பட்டனர்.

மேலும் பல ஆயிரம் குடும்பங்கள் நுண்நிதிக்கடன்கால் நாளாந்த வருமானத்தை கடனுக்கு செலுத்திவிட்டு வறுமைக்குள் சிக்குண்டிருந்தனர்.

இவ்வாறான மக்களை கடன் சுமையிலிருந்து மீட்கவும் சுய வருமானத்தை கட்டியெழுப்பி அவர்களை வாழ்வாதாரத்தை கட்டியெழுப்பும் நோக்கோடு கனடாவிலுள்ள புலம் பெயர் ஈழத்தின் அமைப்புக்களும் புலம்பெயர் தமிழர்களும் இணைந்து தமிழரசுக் கட்சியூடாக 21 கோடியே 20 இலட்சம் (212 மில்லியன்) ரூபாவினை வழங்கியிருந்தனர்.

குறித்த நிதி வழங்கப்பட்டமை தொடர்பில் அண்மையில் திருகோணமலையில் இடம்பெற்ற தமிழரசுக்கட்சியின் மகளிர் கூட்டத்தில் குகதாசன் என்பவரால் கணினி மூலம் வெளிப்படுத்தப்பட்டபோதும் குறித்த நிதி பயன்பாடு குறித்து இன்றுவரை எதுவும் வெளிப்படுத்தப்படவில்லை.

இந்நிலையில் தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் பொருளாளர் கனகசபாபதியால் இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டதுடன் தமிழரசுக்கட்சியின் வங்கிக் கணக்கு கூற்றுக்களில் குறித்த நிதி வரவு வைக்கப்படவில்லை என்று தெரிவித்திருந்தார்.

நானும் இது குறித்து கேள்வியியை தொடர்ந்து எழுப்பியதன் பின்னர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தானே குறித்த நிதியினை கனடாவிலிருந்து பெற்று வந்ததாக குறிப்பிட்டார்.

ஆனால் குறித்த 212 மில்லியன் ரூபாவுக்கு என்ன நடந்தது என்பது குறித்து இன்றுவரை எந்த உத்தியோக பூர்வத் தகவல்களும் வெளிப்படத்தப்படவில்லை. நுண்நிதிகளால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கோ பெண்தலைமைத்துவக் குடும்பங்களுக்கோ குறித்த நிதியிலிருந்து இதுவரை எந்த உதவிகளும் செய்யப்பட்டதாக தெரியவில்லை.

அவ்வாறாயின் குறித்த நிதி எங்கே? அந் நிதியை யார் கையாண்டார்கள்? குறித்த நிதி மோசடி செய்யப்பட்டுவிட்டதா? போன்ற சந்தேகங்கள் காணப்பணுடுகின்றன. இது குறித்து தமிழரசுக்கட்சி ஊடாக நிதிக்கு என்ன நடந்தது என்பது குறித்து விசாரணை செய்வதற்கு அழுத்தம் கொடுப்போம். நிச்சயமாக இது வெளிப்படுத்தப்படும் என்றார்.

https://www.pagetamil.com/132205/

  • கருத்துக்கள உறவுகள்

இவக்கு ஒரு சீற் குடுத்திருந்தா இப்படியொரு பிரச்சனை வந்திருக்குமா 😜😜😜

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் பேஜ் சுமத்திரனின் விளம்பரம் கிடைக்குமட்டும் அந்த காசை அடித்ததவர் சுமத்திரன் என்று செய்தி போட்டுகொண்டு இருந்தது இப்போ யார் என்று சுட்டி காட்டாமல்  பொத்தம்  பொதுவா செய்தி புனையுது .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, பெருமாள் said:

நானும் இது குறித்து கேள்வியியை தொடர்ந்து எழுப்பியதன் பின்னர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தானே குறித்த நிதியினை கனடாவிலிருந்து பெற்று வந்ததாக குறிப்பிட்டார்.

பிறகு யாரிடம் குடுத்தவராம் அறிவு ஜீவிக்கு மறதி வந்திட்டுதாம் நம்புங்கள் மக்களே நம்புங்கள்.

19 hours ago, பெருமாள் said:

கனடாவில் பல அமைப்புக்கள், நலன்விரும்பிகளால் சேகரித்து தமிழரசுக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஊடாக வழங்கப்பட்ட 20 கோடியே 20 இலட்சம் (212 மில்லியன்) ரூபாவுக்கு என்ன நடந்தது என தமிழரசுக் கட்சியின் மகளிர் அணிச் செயலாளர் திருமதி விமலேஸ்வரி ஸ்ரீகாந்தறூபன் கேள்வி எழுப்பியுள்ளார்.

அது கட்சியின் எந்த கணக்கிலும் வரவில்லையாம்.

அதான் அதை சம்பந்தனும் சுமந்திரனும் சுருட்டிவிட்டதா பேச்சு அடிபடுது.

மோசமான ஊடகவியலாளர் டிபிஸ் ஜெயராஜ் தனது மச்சான் சுமந்திரன் காசை கட்சி கணக்கில் காட்டாமல் சுருட்டியது போலவே விக்கினேஸ்வரனும் சுருட்டியிருப்பார் என்டு பொய்களை எழுதித்தானே கனடாவில மூக்குடைபட்டவர்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Rajesh said:

மோசமான ஊடகவியலாளர் டிபிஸ் ஜெயராஜ் தனது மச்சான் சுமந்திரன் காசை கட்சி கணக்கில் காட்டாமல் சுருட்டியது போலவே விக்கினேஸ்வரனும் சுருட்டியிருப்பார் என்டு பொய்களை எழுதித்தானே கனடாவில மூக்குடைபட்டவர்.

அந்த பகிடிக்கு பிறகு டிபிஸ் ஜெயராஜ் எழுதிறதையே மறந்து போயிருந்தவர் விக்கியர்  குடுத்த பூசை அப்படி .

இந்த பக்கம் கபித்தனை  யாரும் பார்த்தீர்களா ?😁

2 minutes ago, பெருமாள் said:

அந்த பகிடிக்கு பிறகு டிபிஸ் ஜெயராஜ் எழுதிறதையே மறந்து போயிருந்தவர் விக்கியர்  குடுத்த பூசை அப்படி .

டிபிஸ் இப்ப திரும்பவும் சுமந்திரனின் தப்புத்தாளங்களுக்கு வக்காலத்து வாங்க வெளிக்கிட்டிருக்கார்!

தாயக மக்களை ஏமாத்திவிடலாம் என்று உள்ளூர்ப் பத்திரிகையில் தனது கைவரிசையை டிபிஸ் காட்டி வருகிறார்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

அந்த பகிடிக்கு பிறகு டிபிஸ் ஜெயராஜ் எழுதிறதையே மறந்து போயிருந்தவர் விக்கியர்  குடுத்த பூசை அப்படி .

இந்த பக்கம் கபித்தனை  யாரும் பார்த்தீர்களா ?😁

இருக்கிறேன் ஐயா இருக்கிறேன். 😂

அதுசரி காசை எப்படிக் கொண்டுபோனார்களாம். இடுப்பில் கட்டிக்கொண்டா அல்லது சூட்கேசிலா கொண்டுபோனார்கள். அதைச் சொல்லவேயில்ல 😂😂

உவவிற்கு ஒரு சீற் கொடுக்கும்படி சம்பந்தன் சுமந்திரனோட ஒருக்கால் கதைக்கத்தான் வேணும். 😜

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
Just now, Kapithan said:

உவவிற்கு ஒரு சீற் கொடுக்கும்படி சம்பந்தன் சுமந்திரனோட ஒருக்கால் கதைக்கத்தான் வேணும். 😜

 

20 hours ago, பெருமாள் said:

நுண்நிதிக் கடனால் இடம்பெறும் தற்கொலைகள் மற்றும் வறுமைக்குள் வாடும் பெண் தலைமை குடும்பங்களின் மேம்பாட்டுக்காக கனடாவில் பல அமைப்புக்கள், நலன்விரும்பிகளால் சேகரித்து

இந்த ஆட்களுக்கு என்று சேகரிப்பட்ட உதவி தொகையை கொடுப்பதுதான் முறை அதைவிட்டு அவவுக்கு சீட்  குடுத்து சுமத்திரனின் காசு சுருட்டலை மறைக்க பார்க்கிறீர்கள் மனசாட்சி உள்ளவர்கள் உந்த மாதிரி யோசிக்க மாட்டினம்.

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, பெருமாள் said:

 

இந்த ஆட்களுக்கு என்று சேகரிப்பட்ட உதவி தொகையை கொடுப்பதுதான் முறை அதைவிட்டு அவவுக்கு சீட்  குடுத்து சுமத்திரனின் காசு சுருட்டலை மறைக்க பார்க்கிறீர்கள் மனசாட்சி உள்ளவர்கள் உந்த மாதிரி யோசிக்க மாட்டினம்.

எந்த நேரமும் சீரியஸா இருக்காதெயுங்கோ பெருமாள். இடையிடைஇல சிரிக்கவும் வேணும் 😀

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, Kapithan said:

அதுசரி காசை எப்படிக் கொண்டுபோனார்களாம். இடுப்பில் கட்டிக்கொண்டா அல்லது சூட்கேசிலா கொண்டுபோனார்கள். அதைச் சொல்லவேயில்ல 😂

முதலில் அந்த காசுக்கு என்ன நடந்தது என்று தெரியாதவர்கள் தீர்வு எப்படி பெற்று தரப்போகிறார்கள் கேட்கவே தலைசுத்துது அதுக்கு சுமத்திரன் வழமை  போல் மகிந்தவின் ஊடுருவல் ஆள் என்று குற்றம் சொல்வது சரியல்ல .

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் சரி இந்த தேர்தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்டு கை காட்டுங்ஙகள்.எனக்கு வாக்குரிமை இலங்கையில் இருக்குது.

  • கருத்துக்கள உறவுகள்
On 27/6/2020 at 15:36, பெருமாள் said:

நுண்நிதிக் கடனால் இடம்பெறும் தற்கொலைகள் மற்றும் வறுமைக்குள் வாடும் பெண் தலைமை குடும்பங்களின் மேம்பாட்டுக்காக கனடாவில் பல அமைப்புக்கள், நலன்விரும்பிகளால் சேகரித்து தமிழரசுக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஊடாக வழங்கப்பட்ட 20 கோடியே 20 இலட்சம் (212 மில்லியன்) ரூபாவுக்கு என்ன நடந்தது என தமிழரசுக் கட்சியின் மகளிர் அணிச் செயலாளர் திருமதி விமலேஸ்வரி ஸ்ரீகாந்தறூபன் கேள்வி எழுப்பியுள்ளார்.

காசு கொடுத்தவர்கள் கணக்கு கேட்கவும் இல்லை, கேட்டவவுக்கு ஆதரவாக அறிக்கை விடவும் இல்லை, ஏன்? காசு கொடுத்தவர்களுக்கு காசு போக வேண்டிய இடத்துக்கு போய் சேர்ந்திட்டுது என்று ஆதாரம் கிடைச்சிருக்கும். இல்லாவிட்டால் கனேடிய தமிழரும் நிறுவனங்களும்  சுமேந்திரனை கள்ளன் என்று கொழும்பில்  வழக்கு போட்டு உள்ளே தள்ளி இருப்பார்களே? இவவுக்கு ஒருத்தரும் கணக்கு காட்டாததற்கு காரணம் இவவுக்கும் அந்த காசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லாதது.

14 hours ago, Rajesh said:

அது கட்சியின் எந்த கணக்கிலும் வரவில்லையாம்.

அதான் அதை சம்பந்தனும் சுமந்திரனும் சுருட்டிவிட்டதா பேச்சு அடிபடுது.

நுண்நிதிக் கடனால் இடம்பெறும் தற்கொலைகள் மற்றும் வறுமைக்குள் வாடும் பெண் தலைமை குடும்பங்களின் மேம்பாட்டுக்காக கொடுத்த பணம் எப்படி கட்சியின் கணக்கில் வரும்? கட்சி காசை களவெடுத்து தேர்தல் விளம்பரத்துக்கும்,  மேடை, போக்குவரத்து செலவுகளுக்கும் பயன்படுத்தியிருந்தால்தானே கட்சியின் கணக்கில் வரும்? இங்கே காசை கனடாவில் இருந்து இலங்கைக்கு கொண்டுபோய் சுமேந்திரன் அந்த நலன்புரி நிறுவனங்களுக்கு உதவியிருக்கிறார். இப்படியே போனால் காசோலையை   தபாலில் அனுப்பும் தமிழர் எல்லாம் தபால் கந்தோரின் கணக்கிலெல்லோ காசை தேட வேண்டும்? எங்கள் மக்களின் அறிவு இவ்வளவு மட்டமா?😩

Edited by கற்பகதரு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, கற்பகதரு said:

கொடுத்தவர்களுக்கு காசு போக வேண்டிய இடத்துக்கு போய் சேர்ந்திட்டுது என்று ஆதாரம் கிடைச்சிருக்கும். இல்லாவிட்டால்

ஆதாரம் இருக்கா உங்களிடம் ?

49 minutes ago, கற்பகதரு said:

அந்த நலன்புரி நிறுவனங்களுக்கு உதவியிருக்கிறார்.

என்ன பெயரில் உள்ள நலன் புரிநிறுவனம்கள் பெயர்கள் விளக்கமாக தருவீர்களா ?

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, சுவைப்பிரியன் said:

எல்லாம் சரி இந்த தேர்தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்டு கை காட்டுங்ஙகள்.எனக்கு வாக்குரிமை இலங்கையில் இருக்குது.

அப்படி யாருக்கும் கைகாட்டி நீங்கள் வாக்குப் போடக் கூடாது! (rhetorical என்பது விளங்குது)

தெரிவு செய்யப் படப் போகும் ஆளிடம் எதை எதிர்ப் பார்க்கிறீர்கள் என்று ஒரு சின்னக் கேள்வியை கேட்டுப் பார்த்து நீங்களே வாக்கைத் தீர்மானியுங்கள்! 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, பெருமாள் said:

ஆதாரம் இருக்கா உங்களிடம் ?

என்ன பெயரில் உள்ள நலன் புரிநிறுவனம்கள் பெயர்கள் விளக்கமாக தருவீர்களா ?

நீங்கள் சுமந்திரனிடம் காசு கொடுத்ததற்கு ஆதாரத்தை தந்தால் மேற்படி விடயங்களை தரலாம். காசு கொடுத்தவர்களுக்குத் தான் மேற்படி தகவல்கள் வழங்கப்படும் - மற்றவர்களுக்கு இதில் சம்பந்தம் இல்லையே?

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, சுவைப்பிரியன் said:

எல்லாம் சரி இந்த தேர்தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்டு கை காட்டுங்ஙகள்.எனக்கு வாக்குரிமை இலங்கையில் இருக்குது.

அந்த வாக்குசீடடினை என்னிடம் தாருங்கள்.

நானும் கள்ள வோட்டு போட்டு கனகாலமாகுது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, கற்பகதரு said:

நீங்கள் சுமந்திரனிடம் காசு கொடுத்ததற்கு ஆதாரத்தை தந்தால் மேற்படி விடயங்களை தரலாம். காசு கொடுத்தவர்களுக்குத் தான் மேற்படி தகவல்கள் வழங்கப்படும் - மற்றவர்களுக்கு இதில் சம்பந்தம் இல்லையே?

மகளீர்  அணித்தலைவி சுமத்திரனை  நோக்கி கேள்வி எழுப்புகிறா  அப்ப  அவ காசு குடுத்துவிட்டா கேட்க்கிறா ?

என்ன பெயரில் உள்ள நலன் புரிநிறுவனம்கள் பெயர்கள் விளக்கமாக தருவீர்களா ? மழுப்ப  வேண்டாம் உங்கள் கட்சி சர்வாதிகார கட்சி அல்ல என்பது உங்களுக்கு தெரியும் அந்த நிறுவனம்களின் பெயர் என்ன ?

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, Nathamuni said:

அந்த வாக்குசீடடினை என்னிடம் தாருங்கள்.

நானும் கள்ள வோட்டு போட்டு கனகாலமாகுது.

கள்ளவாக்கு செலுத்துவது மிகக்கடினம், அடையாள அட்டை சரி பார்ப்பதுடன் கட்சி முகவர்கள் உட்கார்ந்திருப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைக்கு மாறான செய்திகளைப் பரப்பியவர் மீது உடன் நடவடிக்கை எடுங்கள் – மாவை அவசர கடிதம்

 

 

     by : Jeyachandran Vithushan

Mavai-Senathirajah-1.jpg

பொதுத் தேர்தலில் வேட்பாளர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து விமலேஸ்வரி சிறீகாந்தரூபன் மற்றும் நால்வர் விடுவித்துள்ள அறிவிப்பு தமிழரசுக் கட்சிக்கும், வேட்பாளர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவை என அக் கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராசா தெரிவித்துள்ளார்.

கட்சித் தலைமைக்குத் தெரிவிக்காமல் இத்தகைய செய்திகளைப் பரப்பியமைக்கு எதிராகச் சம்பந்தப்பட்டவர்கள் மீது கட்சித் தலைமை, “உடன் கட்சியிலிருந்து இடைநிறுத்துவது” முதலான ஒழுங்கு நடவடிக்கைகளை உடன் எடுக்க வேண்டும் என கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராஜசிங்கத்துக்கு அவசர கடிதம் ஒன்றை இன்று அனுப்பியுள்ளார்.

குறித்த கடிதத்தில் “நேற்று முன்தினம் 27.06.2020 அன்று தமிழரசுக் கட்சி மகளிர் அணிச் செயலாளர் என்று கூறப்பட்ட விமலேஸ்வரி சிறீகாந்தரூபன் மற்றும் நால்வர் யாழ்ப்பாணம் ஊடக மையத்துக்குச் சென்று தெரிவித்த கருத்துக்கள் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக இக்கடிதத்தை எழுதுகிறேன். நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை தாங்களும் தொலைபேசி மூலம் இவ்விடயங்கள் தொடர்பில் பேசியிருந்தீர்கள்.

வடக்கு கிழக்கு பெண்களின் வாழ்வாதாரத்தை மீட்க என தமிழரசுக் கட்சிக்குக் கொடுத்த 212 மில்லியன் ரூபா எங்கே?” என்று நேற்றைய ஊடகங்களில் வெளிவந்த செய்திகள்;
“சிறீதரன், சுமந்திரனை தேர்தலில் தமிழ் மக்கள் நிராகரிக்க வேண்டும்” என்ற செய்திகள் (மேற்படி நேற்று வெளிவந்த பத்திரிகைச் செய்திகள்)

(அ). இச் செய்திகள் தொடர்பில் நேற்றும் இன்றும் தமிழரசு மகளிர் அணித் தலைவர் திருமதி. மதனி, செயலாளர் திருமதி வளர்மதி ஆகியோர் தொலைபேசி மூலம் முறையிட்டுள்ளனர்.

(ஆ) நேற்று வேட்பாளர்கள் எம்.ஏ.சுமந்திரன், சி.சிறீதரன், இருவரும் மேற்படி செய்திகள் பற்றி என்னிடம் முறையிட்டுள்ளனர்.

இவ்வாறு முறையிடப்பட்ட செய்திகளை யாழ். ஊடகத்திற்குத் தாமாகவே, தன்னிச்சையாகவே திருமதி.விமலேஸ்வரியும் ஏனைய நால்வரும் சென்று வெளியிட்டுள்ளனர். இச் செய்திகள் தொடர்பில் கட்சித் தலைமைக்கோ அன்றி கட்சித் தலைவருக்கோ, பொதுச் செயலாளருக்கோ நேரடியாகவோ, எழுத்து மூலமாகவேனும் தெரிவிக்கவில்லை.

வெளியிட்டுள்ள செய்திகள் குறிப்பாக நிதி தொடர்பான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இறுதியாக நடைபெற்ற தமிழரசுக் கட்சி மத்திய செயற்குழுவில் எழுப்பப்பட்ட ஒரு கேள்விக்குக் கட்சியின் பொருளாளர், “அவ்வாறான நிதி வரவு பற்றி கட்சியின் வங்கிக் கணக்கில் வரவே இல்லை. குறிப்பிடப்பட்ட நிதி தொடர்பிலும் எந்த விபரங்களும் தனக்கோ, கட்சிக்கோ எதுவும் தெரியாது” என்று பதிலளித்துள்ளார். மத்திய செயற்குழு அப்பதிலை ஏற்றுக் கொண்டது.

பத்திரிகைச் செய்தி வெளியிட்டவர்கள் செய்திகளில் குறிப்பிட்டவாறு, திருகோணமலை தமிழரசுக் கட்சியின் பொறுப்பிலுள்ளவரும், தற்போது தேர்தல் வேட்பாளரும், முன்பு கனடாவிலிருந்தவருமான குகதாஸிடமிருந்தோ, சுமந்திரனிடமிருந்தோ எந்த தகவலும் கட்சிக்குத் தரப்படவில்லை.

இவ்விடயம் தொடர்பாக பத்திரிகைக்கு இச் செய்திகள் வெளியிட்டவர்களும் எந்த ஆதாரத்தையோ, ஆவணத்தையோ, முறைப்பாட்டையோ கட்சித் தலைமையிடம் தெரிவித்திருக்கவில்லை.

இவ்விடயம் தொடர்பில் பொதுச் செயலாளர் ஒழுங்கு நடவடிக்கைக் குழுவுக்கு அறிவித்து கனடாவில் இவ்வாறு தெரிவிக்கப்படும் நிதி பற்றி அங்குள்ள எமது கூட்டமைப்புக் கிளை மூலம் விசாரணை நடத்த வேண்டுமென்று தங்களிடம் நினைவூட்டியிருக்கிறேன். இது பற்றி எந்த ஒரு ஆதாரமோ, ஆவணமோ, தொடர்பான அறிக்கையோ இதுவரை கிடைக்கவில்லை.

நேற்றுமுன்தினம் ஊடகத்துக்குச் சென்ற திருமதி. விமலேஸ்வரி மற்றும் நால்வரும் அதுவும் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள காலத்தில் கட்சிக்கு அபகீர்த்தியையும், வேட்பாளர்களுக்குப் பங்கமேற்படும் வகையிலும் திட்டமிட்டு ஊடகங்களுக்குச் செய்தி பரப்பியது பாரதூரமான விடயங்களாகும்.

உண்மைக்கு மாறான செய்திகளுமாகும். இவ்விடயம்; தொடர்பில் கட்சியும் ஒரு விசாரணை நடாத்தி மக்களுக்குத தெளிவுபடுத்த வேண்டும். இவ்வாறான ஆதாரமற்ற கட்சிக்குப் பங்கமேற்படுத்தக் கூடிய செய்திகளைப் பரப்பியவர்களுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் வேண்டும்.

2020 மார்ச் பகுதியில் பொதுத் தேர்தல் வேட்பு மனுக்கள் தயாரித்த காலத்தில் ஊடக மையத்தில் வெளியிட்ட செய்திகளுக்காக திருமதி.விமலேஸ்வரி, திருமதி. மிதிலைச்செல்வி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று வற்புறுத்தல்கள் இருந்தபோதும் அவ்வாறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கவில்லை என்பதும் குறிப்பிட வேண்டும்.

அடுத்து இப் பொதுத் தேர்தலில் வேட்பாளர்களான சுமந்திரன், சிறீதரனுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள், அறிவிப்புக்கள் கட்சிக்கும், வேட்பாளர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவைகளாகும். கட்சித் தலைமைக்குத் தெரிவிக்காமல் இத்தகைய செய்திகளைப் பரப்பியமைக்கு எதிராகச் சம்பந்தப்பட்டவர்கள் மீது கட்சித் தலைமை, “உடன் கட்சியிலிருந்து இடைநிறுத்துவது” முதலான ஒழுங்கு நடவடிக்கைகளை உடன் எடுக்க வேண்டும்.

எனவே இக் குற்றச்சாட்டுக்கள் பற்றியும், குற்றஞ்சாட்டியவர்கள் பற்றியும் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழுவுக்கு அறிவித்து ஒரு வாரத்தில் அறிக்கை பெற்று பொருத்தமான நடவடிக்கை எடுக்க வேண்டும். மகளிர் அமைப்பையும் கூட்டி உடன் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கையையும் எடுத்தாக வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.

அண்மைக்காலங்களில் தமிழரசுக் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியவர்கள், ஒழுங்கு நவடிக்கைக் கோவையின் படி விதிமுறைகளையும் மீறியவர்கள் மீதும் பொருத்தமான நடவடிக்கைகளை எடுத்து இவ்வாறான செயற்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக் கொள்கின்றேன்” என குறிப்பிட்டுள்ளார்.

http://athavannews.com/உண்மைக்கு-மாறான-செய்திகள/

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, ஏராளன் said:

கள்ளவாக்கு செலுத்துவது மிகக்கடினம், அடையாள அட்டை சரி பார்ப்பதுடன் கட்சி முகவர்கள் உட்கார்ந்திருப்பார்கள்.

கோத்தாவிண்ட் ஸ்பெஷல் பெமிசனோட, டாக்கி அங்கிள்க்கு போடேலாது எண்டுறியளோ? அதெல்லாம் வெட்டியாடலாம், பயப்படாதீங்கோ.😜

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Nathamuni said:

கோத்தாவிண்ட் ஸ்பெஷல் பெமிசனோட, டாக்கி அங்கிள்க்கு போடேலாது எண்டுறியளோ? அதெல்லாம் வெட்டியாடலாம், பயப்படாதீங்கோ.😜

உங்களுக்கு தரமாட்டாங்கள்!

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ஏராளன் said:

உங்களுக்கு தரமாட்டாங்கள்!

அதை விடுங்கோ.

உந்த 20 கோடி.... உண்மையிலேயே கனடாவில் கலெக்ஷன் ஆகி இருக்கும் எண்டு நம்புறியளா? எனெக்கெண்டா.... அதுவும் ஏதோ தேர்தல் சுத்துமாத்துக் கதை போலை கிடக்குது.

8 hours ago, கற்பகதரு said:

நுண்நிதிக் கடனால் இடம்பெறும் தற்கொலைகள் மற்றும் வறுமைக்குள் வாடும் பெண் தலைமை குடும்பங்களின் மேம்பாட்டுக்காக கொடுத்த பணம் எப்படி கட்சியின் கணக்கில் வரும்? கட்சி காசை களவெடுத்து தேர்தல் விளம்பரத்துக்கும்,  மேடை, போக்குவரத்து செலவுகளுக்கும் பயன்படுத்தியிருந்தால்தானே கட்சியின் கணக்கில் வரும்? இங்கே காசை கனடாவில் இருந்து இலங்கைக்கு கொண்டுபோய் சுமேந்திரன் அந்த நலன்புரி நிறுவனங்களுக்கு உதவியிருக்கிறார். இப்படியே போனால் காசோலையை   தபாலில் அனுப்பும் தமிழர் எல்லாம் தபால் கந்தோரின் கணக்கிலெல்லோ காசை தேட வேண்டும்? எங்கள் மக்களின் அறிவு இவ்வளவு மட்டமா?

இதன் மூலம் இவர்கள் பணத்தை சுருட்டியது ஆணித்தரமாக நிரூபிக்கப்படுகிறது!
மக்கள் அறிவு மட்டமானவர்கள் என்று கயவர்கள் எண்ணியிருக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Nathamuni said:

அதை விடுங்கோ.

உந்த 20 கோடி.... உண்மையிலேயே கனடாவில் கலெக்ஷன் ஆகி இருக்கும் எண்டு நம்புறியளா? எனெக்கெண்டா.... அதுவும் ஏதோ தேர்தல் சுத்துமாத்துக் கதை போலை கிடக்குது.

உறுதியாக தெரியாது, உள்வீட்டு விசயமெல்லே!
எங்கட ஊரவர் தான் கனடாவில் சுமந்திரன் ஐயாவை தன் வீட்டிலயும் தங்க வைச்சிருந்தவர். அந்தாள கேட்டா உண்மையை சொல்லாது தானே?!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.