Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மன உளைச்சல்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மன உளைச்சல்.

சில வருடங்களாகவே இது இருக்கிறது. வெளியே சொல்லவும் முடியாமல், உள்ளே வைத்திருக்கவும் முடியாமல், வேதனையும், இயலாமையும், வெறுப்பும், கையாலாகத்தனமும், கோபமும்....இப்படியே நேரத்திற்கொன்றாக மாறும் உணர்வுகளுடன் கழிகிறது பொழுது.

விடை தெரியாத கேள்விகளில் ஆரம்பித்து, இப்படியிருக்கலாம் என்று சமாதானம் செய்து, இனி என்ன செய்யலாம் என்று யோசித்து, எதுவும் முடியாதுடா உன்னால் என்று  எனக்கு நானே சொல்லிக்கொண்டு, அப்போதைக்கு மட்டும், என்னால என்னதான் செய்ய ஏலும் என்று கையாலாகத்தனத்துடன் கேட்டுவிட்டு நகர்ந்துவிடுவதோடு அப்போதைக்கு அந்தப் பிரச்சினை முடிந்துவிடும். ஆனால், சில நாட்களில் மீண்டும் அதே பிஒரச்சினை, அப்படியிருக்கேலாது, ஏதாவது செய்யவேணும். பார்த்துக்கொண்டிருந்தால் எதுவுமே மிஞ்சப்போவதில்லை என்று நினைக்கும்போது, அதே கவலை, அதே கோபம், அதே ஆற்றாமை, அதே பழிவாங்கும் வெறி. 

எவருக்காவது என்ன சொல்கிறேன் என்று புரிகிறதா? இரண்டே விடயங்கள்தான், வெரி சிம்பிள் யுவர் ஆர்னர். முதலாவது , கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமிக்கப்படும் எனது தாயகம். இரண்டாவது, அநியாயமாக அழிக்கப்பட்ட எமது சுதந்திர விடுதலைப் போராட்டம். 

இவை இரண்டிற்கும் என்னிடம் பதில் இல்லை. எதற்காக எமது போராட்டம் அழிக்கப்பட்டது? எமது தாயகத்தில் சிங்கள பெளத்தம் இன்று நடத்திவரும் திட்டமிட்ட ஆக்கிரமிப்பை எப்படித் தடுப்பது? 

சுமந்திரனாலோ, சம்பந்தனாலோ, கஜேந்திரக்குமாரினாலோ, விக்கினேஸ்வரனாலோ நிச்சயமா எமது தாயக ஆக்கிரமிப்பைத் தடுக்க முடியாது. அவர்கள் செய்யும் அரசியல் அதற்கானதல்ல. அப்படியானால், அவர்கள் யாருக்காக அரசியல் செய்கிறார்கள்? இன்று தமிழரின் பிரதிநிதிகள் என்பவர்களால் தமிழர்களின் அழிவைத் தடுக்க முடியாதென்றால், இவர்கள் செய்யும் அரசியல் யாருக்காக? யுத்தம் மூலம்பெற்ற வெற்றியை மூலதனமாகக் கொண்டு சிங்களம் இன்று நடத்தும் ஆக்கிரமிப்பு அரசியலைத் தடுக்கக்கூடியவர்கள் தமிழர்களிடத்தில் இருக்கிறார்களா? அல்லது, அவ்வாறானதொரு தடுப்பு அரசியலை தமிழர்கள் செய்வதற்கான வெளி இன்று இருக்கிறதா? 

ஏன் இந்த விளங்காத சொற்களெல்லாம்? பச்சையாகவே கேட்கிறேன், ஆயுதப் போராட்டம் மூலமான தடுப்பு அரசியலொன்றினாலன்றி எம்மால் சிங்கள ஆக்கிரமிப்பைத் தடுப்பது சாத்தியமா? 

வாங்கோ, எல்லாரும் வாங்கோ. வந்து, "உன்ர மேளைப் போராட்டத்துக்கு அனுப்பிவியோ?, ஆர் இருக்கினம் சண்டை பிடிக்க? சனம்  பட்ட அவஸ்த்தை காணாதோ, இன்னும் இன்னும் சாக்கொள்ளப் போறியோ? உனக்கென்ன, சிட்னியில சுகமா இருந்துகொண்டு கதைப்பாய், ஊரில சனமெல்லோ சாகப்போகுது? இனிமேல் ஆரும் ஆயுதப் போராட்டம் எண்டு கதைச்சியள் எண்டால், தெரியும் பிறகு!".  எண்டு என்னை வைச்சு செய்யுங்கோ. 

நீங்கள் மட்டுமில்லை, என்ர சிநேகிதரே இப்படி நேரடியா என்னட்டை கேட்டாச்சு. என்னட்டப் பதில் இல்லை. 

சர்வதேசத்தோட சேர்ந்து தீர்வு நோக்கிப் போகப்போயினமாம் கூத்தமைப்பு. சிங்களவரோட அனுசரிச்சுப் போகப்போகிறாராம் தேவானந்தா.  தமிழரின்ர பிரச்சினைய கட்டாயம் தீர்த்துவைப்பாராம் கோத்தா என்று அங்கஜன் சொல்லுறார். இவ்வளவு காலமும் இதைத்தனே சொல்லிக்கொண்டிருக்கிறம். எந்தச் சர்வதேசம் வந்து இனி உங்களுக்குச் செய்யப்போகுது? சர்வதேசம் சர்வதேசம் எண்டு சொல்றதில ஒண்டும் இல்லை. இருப்பது அமெரிக்காவும், சீனாவும் மட்டும்தான். இந்த  ரெண்டு கொள்ளைக்காரருக்குப் பின்னாலதான் மற்றைய நாடெல்லாம். 

சலிப்புத்தான் மீதமாக இருக்கிறது. போதாக்குறைக்கு வடக்குக் கிழக்கு தமிழரின் தாயகம் இல்லையெண்டு சிங்கள தொல்பொருள் கலாசார அமைப்பின் பிரதிநிதி சொல்லுறார். அதற்குத் தலைவர் நந்திக்கடலில சனத்தை தாங்கியால உழுத கமால் குணரட்ன. எப்படியிருக்கும் எண்டு பாருங்கோ. 

வேற வழியில்லை சனமே! வேற வழியில்லை. நேற்றுக்கூட ஒருத்தரோட கதைக்கேக்க, "எங்கட சந்ததியில இல்லாட்டியும், வாற சந்ததியிலயாவது தமிழருக்குத் தீர்வு வரும்" எண்டு சொன்னார். கோதாரி, உதைத்தனே தந்தை செல்வா காலத்திலையிருந்து சொல்லிக்கொண்டு வாறம்? என்ன தீர்வு வந்தது? இருந்ததும் இல்லாமப் போனதுதானே மிச்சம்? 

சிங்களவனோடு சேந்துபோனாலும் அழிக்கிறான், சண்டை பிடிச்சாலும் அழிக்கிறானே , அப்ப என்ன செய்ய? 

ஆனால், ஏதாவது செய்தாகவே வேணும். பாத்துக்கொண்டிருக்க எங்கட ஊரெல்லாம் சிங்கள மயமாகப் போகுது. எங்களால எதுவுமே செய்ய ஏலாது. ஒரு தேசமும் எமக்காக வரப்போவதில்லை. சனத்தாலையும் போராட ஏலாது. இப்ப இருக்கிற அரசியலும் ஒரு சதத்துக்கும் உதவாது. 

ஒரேயொரு முடிவுதான் இருக்கு. மூளையைக் கழட்டி, தாயகத்தின்ர நினைவெல்லாம் அழிக்க முடியுமோ எண்டு பாக்கப்போறன். தொல்லை தாங்க ஏலாது இனி. 

Edited by ரஞ்சித்

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல வைத்தியரை அணுகுவது நன்று.முதல் பந்தி வாசிக்கும் போது தோன்றிய எண்ணம் அப்படியே பதிகிறேன்.வேற ஏதாவது எழுதுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, ரஞ்சித் said:

ஒரேயொரு முடிவுதான் இருக்கு. மூளையைக் கழட்டி, தாயகத்தின்ர நினைவெல்லாம் அழிக்க முடியுமோ எண்டு பாக்கப்போறன். தொல்லை தாங்க ஏலாது இனி. 

எங்காவது கயிறின் நுனி கிடைக்கும் எனும் நம்பிக்கை இன்னும் இருக்கு நம்பிக்கையை இழக்காதீர்கள் ஆனால் சைக்கிளும் சரி விக்கியரும் சரி சம்பந்தனும் சரி எல்லாமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் இவர்களால் எதனையும் பெற்றுத்தர முடியாது ஆனால் சுமத்திரன் வந்தால் நீங்கள்  அச்சப்படும் நிகழ்வுகள் விரைவாக நடக்கும் என்பதில் மாற்று கருத்து கிடையாது .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, பெருமாள் said:

சுமத்திரன் வந்தால் நீங்கள்  அச்சப்படும் நிகழ்வுகள் விரைவாக நடக்கும் என்பதில் மாற்று கருத்து கிடையாது .

அதுதான் எனது பயமும். ஆனால், எமக்கு வேறு தெரிவுகள் இருக்கிறதா? 

25 minutes ago, யாயினி said:

வேற ஏதாவது எழுதுங்கள்.

நீங்களே அதையும் சொல்லிவிடுங்களேன்.

  • கருத்துக்கள உறவுகள்

ர‌குநாத‌ன் அண்ணா , உங்க‌ளின் ம‌ன‌ நிலை தான் என‌க்கும் , சில‌ ச‌மைய‌ம் வெறுப்பின் உச்ச‌த்துக்கே போவேன் இவ‌ள‌வு வேர்வை ர‌த்த‌ம் சிந்தி இப்ப‌டி வாழுற‌துக்காக‌ போராடினோம்  ,  மாவீர‌ர்க‌ளின் ப‌ட‌ங்க‌ளை பார்க்கும் போது வ‌ரும் ம‌ன‌ வ‌லி சொல்லில் அட‌ங்காது 😓😓😓

நான் கூட‌ எழுதினால் க‌ற்ப‌னை என்று கூவுவின‌ம் , எம் நில‌த்தை சிங்க‌ள‌வ‌ன் ஆக்கிர‌மிக்க‌ த‌டுக்க‌ எவ‌ள‌வோ வ‌ழி இருக்கு ர‌குநாத‌ன் அண்ணா 🤛💪🤛

த‌மிழீழ‌ ம‌ண்ணில் சின்ன‌ வெடி ச‌த்த‌ம் கேக்கிற‌தே இனி ந‌ட‌க்காதாம் , கிளைமோர‌ வெடிக்க‌ வைக்க‌ கூடிய‌ அனுப‌மான‌வ‌ர்க‌ள் இப்ப‌வும் உயிரோடு தான் இருக்கின‌ம் ஈழ‌ ம‌ண்ணில் , 

ஒரு சில‌ உண்மைக‌ளை பெது வெளியில் எழுதாம‌ விடுவ‌து ந‌ல்ல‌ம் , 

சிங்க‌ள‌வ‌ன் ஓட‌ ஒன்னா வாழுவ‌தும் எயிட்ஸ் நோயுட‌ன்  வாழுவ‌தும் ஒன்று தான் 😡 ,

போரால் பாதிக்க‌ ப‌ட்ட‌ ம‌க்க‌ளின் கோவ‌த்தில் ஞாய‌ம் இருக்கு , வ‌ன்னி த‌ல‌மை எடுத்த‌ ப‌ல‌ முட்டாள் த‌ன‌மான‌ முடிவால் தான் இப்போது நாம் இந்த‌ நிலையில் இருக்கிறோம் 😓

எம்ம‌வ‌ர்க‌ள் க‌ண் மூடி விட்டார்க‌ள் அவ‌ர்க‌ளை ஒரு போதும் தூற்ற‌க் கூடாது , அவ‌ர்க‌ள் விட்ட‌ ஒரு சில‌ பிழைக‌ளால் நாம் இனி வ‌ரும் கால‌ங்க‌ளில் எவ‌ள‌வ‌த்துக்கு போராட‌ வேண்டி கிட‌க்கு 🤔 ,

திராவிட‌ க‌ட்சிக‌ளால் எம‌க்கு ஒரு போதும் ஒரு ந‌ண்மையும் வ‌ர‌ போவ‌து இல்லை , இது தான் உண்மையும் கூட‌ 😊 ,

ஏதாவ‌து ஒரு ச‌ர்வ‌தேச‌ நாட்டின்  உத‌வி இருந்தா நாம் துணிந்து க‌ள‌த்தில் குதிக்க‌லாம் 💪

மேல‌ பெருமாள் அண்ணா சொன்ன‌து போல் ம‌ன‌ச‌ குழ‌ப்பிக்க‌ வேண்டாம் , மீண்டு எழுவோம் , 

ந‌ம்பிக்கை தான் வாழ்க்கை 👏💪🙏

  • கருத்துக்கள உறவுகள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆயுதப் போராட்டம் அல்லாமல், வெளியுலக அழுத்தம் ஒன்றினால் நடப்பதே உகந்தது. ஆனால், அப்படி யார் இருக்கிறார்? அப்படி இன்னொரு ஆயுதப் போராட்டம் வேறு வழிகளின்றித் தொடங்கினாலும்கூட, இந்தியா எனும் நிரந்தரச் சாபம் எமக்கருகில் எப்போதும் இருந்துகொண்டுதானே இருக்கப்போகிறது? அது மீண்டும் எம்மைக் கொல்லாதென்பதற்கு எந்த உறுதியும் இல்லையே? 

அல்லது, ஒரு நல்ல சிங்களத் தலைவர் வந்து, மக்கள் அனைவரும் சமம், ஆகவே சகலருக்கும் சமவுரிமை, இரு நாடு என்று பிரகடனம் செய்ய வேண்டும், நடக்குமா?

அல்லது, நாம் அனைவரும் சிங்களவர்களாக மாறிவிட்டால், தமிழர் பிரச்சினையென்று ஒன்றே இராது. இதுதான், எல்லாவற்றிலும் சாத்தியமானது. கற்பகதருகூட இதற்கு சம்மதம் தெரிவிப்பார்.

  • கருத்துக்கள உறவுகள்

 மன உளைச்சல் தரும் அளவுக்கு நாம் பொதுப் பிரச்சினைகளைப் பற்றி மண்டை காயக் கூடாது எனக் கருதுகிறேன்! எங்கள் பிரச்சினையை "பொதுப் பிரச்சினை" என்று குறிப்பிட்டதற்காக எனக்கு வசவு விழலாம், ஆனால் எந்த வழியில் பார்த்தாலும் எமது கட்டுப்பாட்டில் இல்லாமல் நிகழ்ந்த விடயங்களே எங்கள் இனப் பிரச்சினை! ஒரு பொதுப் பிரச்சினையை நாம் தீர்க்க வேண்டும் என்று நினைக்கும் போது விரைவில் helplessness உம் ஆயாசமும் வருவது இயல்பு! 

ஹசன் மின்ஹாஜ் என்ற நகைச்சுவையாளர் தனது நிகழ்ச்சியொன்றில் இதைப் பற்றிப் பேசியிருந்தார்.  எல்லா பிரச்சினைகளையும் தீர்க்க வேண்டுமென்று முயலாமல் ஒரு அல்லது இரண்டு விடயங்களை எடுத்துக் கொண்டு முயலும் போது நாம் முன்னேற வாய்ப்புண்டு என்கிறார் (divide & conquer).  இன்றைய தமிழர் நிலை என்கிற பிரச்சினையில், இளையோரின் கல்வி நிலையை உயர்த்துவதற்கு உதவுவது என்பது நான் இலக்கு வைக்கும் சிறு பகுதி! அது போல நீங்களும் ஏதாவது ஒரு சிறு பகுதியைத் தெரிவு செய்தால் பலனும் கிடைக்கும், இப்படியான  வெறுமையுணர்வும் வராது! 

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, Justin said:

 நீங்களும் ஏதாவது ஒரு சிறு பகுதியைத் தெரிவு செய்தால் பலனும் கிடைக்கும், இப்படியான  வெறுமையுணர்வும் வராது! 

இதே கருத்தை தான் நானும் முன்வைக்கலாம் என்று நினைத்தேன். இதற்கெல்லாம் மனம் உடைந்து உங்களுக்கு கடவுள் தந்த இந்த வாழ்க்கையை வீணடிக்கக்கூடாது. அத்துடன் உலகத்தில் குறிப்பாக ஆபிரிக்காவில் மக்கள் பட்ட படும் வேதனையான வாழ்க்கையுடன் பார்க்கும்போது எமது பிரச்னையை அவ்வளவு மோசமானது அல்ல. ரஞ்சித், பையன் குறிப்பிட்டது போல நாம் எல்லோருமே எமது நாட்டுப்பிரச்னையால்  மன உளைச்சலுக்கு  ஆளாகினவர்கள் தான். அதுவும் குறிப்பாக 2009 மே இல் இருந்து நானும் எனது குடும்பம், நண்பர்கள் எல்லோருமே ஒரு வருடத்துக்கு மேலாக இதில் இருந்து வெளியில் வர மிகவும் கஸ்டப்பட்டோம் . அதன் பிறகு ஒவ்வொருவரும் அவர்களின் மனநிலை, வசதி, எண்ணங்களின் படி இவற்றை எல்லாம் ஏற்றுக்கொண்டு வாழத்தொடங்கி விட்டார்கள். நான் எமது மக்களுக்கு கல்வி மற்றும் பண உதவி இன்றுவரை செய்து வருகிறேன். இன்னமும் செய்வதற்கு திட்டங்கள் வைத்திருக்கிறேன். சிலர் தமது ஊர்களில் உள்ள பாடசாலைகளுக்கு நிறய வசதிகள் செய்து கொடுத்திருக்கிறார்கள். எனது நெருங்கிய உறவினர் இறுதிவரை தன்னால் இயன்ற அளவுக்கும் பொருள் உதவி செய்து ஏமாற்றம் அடைந்து மிகும் விரக்தி நிலையில் இருந்து விட்டு தானும்  அடியோடு  வேறு ஆளாக மாறிவிட்டார். முன்னர் செலவழித்த நேரம் முழுவதையும் இப்ப தனக்கு விருப்பமான இசைத்துறையில் செலவிடுகிரார் . இப்படி பல விதமாக தம்மை இயக்க கற்றுக்கொண்டார்கள். அதுதான் நடைமுறைக்கு சாத்தியமான, புத்தியுள்ள செயல். நாம் இங்கு வந்தது வாழ்வதட்கே. தினமும் நடந்தவைகளை நினைத்து சாவதற்கல்ல.  பொதுவில் நடக்கும் விடயங்கள் எல்லாம் நமது கட்டுப்பாட்டுக்குள் இல்லை. எமக்கு நடக்கும் முக்கால்வாசி விடயங்களே நமது கட்டுப்பாட்டில் இல்லை. பிறகு மற்றவைகளை பற்றி யோசித்து மனம் உடைவதில் என்ன பிரயோசனம்? 2009 ஆண்டுக்குப்பிறகு நான் அதைப்பற்றி கதைப்பதே இல்லை, யாரும் பழைய வீடியோக்களை பகிர்ந்தாலும் பார்ப்பதும் இல்லை. பார்க்கவோ, கேட்கவோ மன தைரியமும் இல்லை. ஆனால் நான் கதைக்கும் எல்லோரிடமும் எமது பிரச்சனை என்ன, எமக்கு நடந்தவை எல்லாவற்றையும் சொல்வேன். ஏனென்றால் தெரியாவர்களுக்கும் இதைப்பற்றி தெரியவேண்டும் என்பதற்காகத்தான். அமெரிக்கர்கள் நிறைய சிங்கள மக்களிடம் நீங்கள் ஏன்  தமிழர்களை அடக்குகிறீர்கள் , அவர்கள் உங்களை மேவி விடுவார்கள் என்று பயத்திலா  என்று கேட்கிறார்கள் என்று அவர்களே சொல்லியிருக்கிறார்கள். அத்துடன் எனக்கு எவ்வளவோ சிங்கள நண்பர்கள் இருந்தாலும் எல்லோருக்கும் எனது நிலைப்பாடு நன்றாக தெரியும். நான் ஒருபோது அவர்களிடம் அதை மறைத்ததில்லை. தெரிந்தும் நற்பாக இருந்தால் இருக்கட்டும். அல்லது போகட்டும் என்று நினைத்துதான் பழகுவேன். இது எனது வழி . அப்படி ஒவ்வருவரும் நாங்கள் இந்த நிலைமைக்கு இப்போது இருக்கும் சூழ்நிலையில் என்ன செய்யலாம் என்று செய்துவிட்டு அவர் அவருக்கு கிடைத்த வாழ்க்கையை , கடமைகளை சிறம்பட செய்துவிட்டு போகவேணும் என்பதே எனது கருத்து . 

Edited by nilmini

ரஞ்சித்

உங்களுக்கு ஏற்பட்ட கவலை தமிழர்கள் எல்லோருக்கும்  ஏற்பட்ட கவலை தான்.  தமிழராய் பிறந்த எல்லோரையும் வாட்டிய கவலை அது. மறப்பது கடினம் தான். ஆனால் எம்மால் முடியாத எமது சக்திக்கு அப்பாற்பட்ட விடயங்களுக்கு இப்படி ஆழமாக  கவலைப்படுவது  உங்கள் உடல் நலத்தை பாதிக்கும். அதுவும் எமது பிரச்சனை 2009 ல் மைனஸ் க்கு  பல நூறு இலக்கங்கள் கீழே உள்ளது. இதை நிவர்த்தி செயது  Zero  நிலைக்கு கொண்டு வரவே ஒரு தலைமுறை செல்லும். அதுவும் உலக ஜதார்த்த‍த்தை புரிந்து புத்திசாலிதனமாக செயற்பட்டால் மட்டும். இப்போது செயற்படுபவர்கள் போல் செயற்பட்டால் அதுவும் நடக்காது. 

எவரோ செய்த தவறுகளால் நடந்த இழப்புகளுக்கு நீங்கள் பொறுப்பாளியாக மாட்டீர்கள்.  ஆகவே அதை பற்றி கவலை படாமல்  உங்கள் திருப்திக்கு  செய்யும் சமூக பங்களிப்புடன் உங்கள் வாழ்க்கையையை அனுபவியுங்கள். அதை தான் உண்மையில் எல்லோரும் செய்கிறார்கள். ஆனால் சிலர் வீம்புக்குக்கு உசுப்பேற்றும் கதைகளை இங்கு கூறிவிட்டு தமது  வாழ்க்கைக்ககு சென்றுவிடுவார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, tulpen said:

ஆனால் சிலர் வீம்புக்குக்கு உசுப்பேற்றும் கதைகளை இங்கு கூறிவிட்டு தமது  வாழ்க்கைக்ககு சென்றுவிடுவார்கள். 

மிகவும் உண்மை. 

  • கருத்துக்கள உறவுகள்

போராடினாலும் சாவோம் போராடலனாலும் சாவோம் , போராடினால் ஒரு வேலை வாழ்வதற்கு வாய்ப்பு உண்டு ( தேசிய‌த் த‌லைவ‌ர் சொன்ன‌து )

11 ஆண்டில் நாம் பெரிதாக‌ ஒன்றையும் சாதித்து விட‌ வில்லை , சும்மா கால‌த்த‌ ஓட்டின‌து தான் மிச்ச‌ம் ,

தூங்கி கிட‌ந்த‌ த‌மிழ‌க‌ ம‌க்க‌ளை த‌ன் பேச்சு மூல‌ம் விழிப்புண‌ர்வு அடைய‌ செய்தார் அண்ண‌ன் சீமான் ,

  • கருத்துக்கள உறவுகள்

ரஞ்சித் உண்மையில் சொல்லப்போனால் நன் கூட கடந்த 4 , 5 வருடங்களாக நமது போராட்ட முடிவு தொடர்பான நிகழ்வுகளால் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்தேன்.
ஏனோ தானோ என்று நாட்கள் போய்க்கொண்டிருக்க; அறிமுகமானது தியானம், மூச்சுப்பயிற்சி, ஸாம்பவி கிரியா, Inner Engineering அத்தோடு வாழ்க்கையின் திசையும் மாறி; மிகவும் அமைதியாக தெளிவாக போகிறதை  போல உணர்கிறேன். இப்போதெல்லாம் இயற்கை மீது ஒரு அபரீத நெருக்கம். 
மனிதர்கள், அவர்கள் செயல்கள் பேச்சுகள் எல்லாமே ஒரு 2 அடி தள்ளியே நிகழ்வதை போல உணர்கிறேன்.
எளிதில் சஞ்சலப்பட முடிவதில்லை.  

9 minutes ago, பையன்26 said:

போராடினாலும் சாவோம் போராடலனாலும் சாவோம் , போராடினால் ஒரு வேலை வாழ்வதற்கு வாய்ப்பு உண்டு ( தேசிய‌த் த‌லைவ‌ர் சொன்ன‌து )

11 ஆண்டில் நாம் பெரிதாக‌ ஒன்றையும் சாதித்து விட‌ வில்லை , சும்மா கால‌த்த‌ ஓட்டின‌து தான் மிச்ச‌ம் ,

தூங்கி கிட‌ந்த‌ த‌மிழ‌க‌ ம‌க்க‌ளை த‌ன் பேச்சு மூல‌ம் விழிப்புண‌ர்வு அடைய‌ செய்தார் அண்ண‌ன் சீமான் ,

பையன் 11 வருடத்தில் மட்டுமல்ல அதற்கு முதலும் நாம் ஒன்றும் பெரிதாக சாதித்து விடவில்லை.  

நீங்கள் சொன்ன அண்ணன் சீமானுக்கு விரைவில் முதலமைச்சர் பதவி கிடைக்க வேண்டும் என்று தான் நானும் விரும்புகிறேன். கிடைத்த பின்பாவது  சும்மா தொண்டை கிழிய கத்தி உசுப்பேற்றும்  பேச்சுகளை அவராகவே மறந்து  பொறுப்புணர்வோடு பேச கற்றுக்கொள்வார்.  ஆரம்பத்தில் அவரது பேச்சுகளையும் ரசித்தவன் தான் நான். 

  • கருத்துக்கள உறவுகள்

புலம் பெயர்ந்து வாழும் நாங்கள் தாயகத்திலிருக்கும் ஒருவரை வெளியில் எடுத்து விட்டால் பின் அவர்கள் தமது குடும்பங்களை வெளியில் எடுக்க விரைவில் இலங்கையில் தமிழர் பிரச்சனை முடிந்து விடும்.

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, tulpen said:

ரஞ்சித்

உங்களுக்கு ஏற்பட்ட கவலை தமிழர்கள் எல்லோருக்கும்  ஏற்பட்ட கவலை தான்.  தமிழராய் பிறந்த எல்லோரையும் வாட்டிய கவலை அது. மறப்பது கடினம் தான். ஆனால் எம்மால் முடியாத எமது சக்திக்கு அப்பாற்பட்ட விடயங்களுக்கு இப்படி ஆழமாக  கவலைப்படுவது  உங்கள் உடல் நலத்தை பாதிக்கும். அதுவும் எமது பிரச்சனை 2009 ல் மைனஸ் க்கு  பல நூறு இலக்கங்கள் கீழே உள்ளது. இதை நிவர்த்தி செயது  Zero  நிலைக்கு கொண்டு வரவே ஒரு தலைமுறை செல்லும். அதுவும் உலக ஜதார்த்த‍த்தை புரிந்து புத்திசாலிதனமாக செயற்பட்டால் மட்டும். இப்போது செயற்படுபவர்கள் போல் செயற்பட்டால் அதுவும் நடக்காது. 

எவரோ செய்த தவறுகளால் நடந்த இழப்புகளுக்கு நீங்கள் பொறுப்பாளியாக மாட்டீர்கள்.  ஆகவே அதை பற்றி கவலை படாமல்  உங்கள் திருப்திக்கு  செய்யும் சமூக பங்களிப்புடன் உங்கள் வாழ்க்கையையை அனுபவியுங்கள். அதை தான் உண்மையில் எல்லோரும் செய்கிறார்கள். ஆனால் சிலர் வீம்புக்குக்கு உசுப்பேற்றும் கதைகளை இங்கு கூறிவிட்டு தமது  வாழ்க்கைக்ககு சென்றுவிடுவார்கள். 

எம் போராட்ட‌த்தின் மீது தீராது ப‌ற்று கொண்ட‌வ‌ர்க‌ள் வெறித்த‌ன‌மாக‌ செய‌ல் ப‌ட‌க் கூடிய‌வ‌ர்க‌ள் ,

இங்கு யாரும் ம‌ற்ற‌வ‌ர்க‌ளை சும்மா உசுப்பேத்தி விடுவ‌தில்லை ,  இதே புல‌ம்பெய‌ர் நாட்டில் , த‌ன் ‌பிள்ளைக‌ளை  ப‌த்திர‌மாக‌ வைத்து கொண்டு அடுத்த‌வ‌ரின் பிள்ளைக‌ளை போருக்கு அனுபுகிறார் என்று  த‌லைவ‌ரை கேலி செய்த‌வ‌ர்க‌ளும் இருக்கின‌ம் 😡 

இந்த‌ யாழ் க‌ள‌த்தில் இருக்கும் முன்னால் போராளிக‌ளை கேலுங்கோ , 1995ம் ஆண்டு யாழ்ப்பாண‌த்தை சிங்க‌ள‌வ‌ன் ஒரு எதிர்ப்பும் இல்லாம‌ கைப்ப‌ற்ற‌ என்ன‌ கார‌ண‌ம் என்று ,

எம் போராட்டத்தில் போதுமான‌ அள‌வு போராளிக‌ள் இல்ல‌ அது தான் யாழ்ப்பாண‌த்த‌ சிங்க‌ள‌ ப‌டை ஈசியா கைப்ப‌ற்றின‌வ‌ங்க‌ள்  , 

பலாலி  முன் அர‌ங்கில் காவ‌லுக்கு நிக்கும் போராளிக‌ள் எத்த‌ன‌ பேர் தெரியுமா , உண்மைய‌ எழுதினா நீங்க‌ளே க‌ண்ணீர் விட்டு அழுவிங்க‌ள் , 

ப‌லாலியில் சிங்க‌ள‌ ப‌டை ப‌ல‌ ஆயிர‌ம் என்றால் ப‌லாலி க‌ள‌முனையில் 50துக்கும் குறைவான‌ போராளிக‌ள் தான் காவ‌லுக்கு  நிப்பார்க‌ள் ,இது எல்லாருக்கும் தெரிந்த‌ நித‌ர்ச‌ன‌ உண்மை 😉 

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, tulpen said:

பையன் 11 வருடத்தில் மட்டுமல்ல அதற்கு முதலும் நாம் ஒன்றும் பெரிதாக சாதித்து விடவில்லை.  

நீங்கள் சொன்ன அண்ணன் சீமானுக்கு விரைவில் முதலமைச்சர் பதவி கிடைக்க வேண்டும் என்று தான் நானும் விரும்புகிறேன். கிடைத்த பின்பாவது  சும்மா தொண்டை கிழிய கத்தி உசுப்பேற்றும்  பேச்சுகளை அவராகவே மறந்து  பொறுப்புணர்வோடு பேச கற்றுக்கொள்வார்.  ஆரம்பத்தில் அவரது பேச்சுகளையும் ரசித்தவன் தான் நான். 

உங்க‌ளுக்கு அண்ண‌ன் சீமானை சொறியாட்டி தூக்க‌ம் வ‌ராது அது என‌க்கு தெரிந்த‌ ஒன்று  ,

அண்ண‌ன் சீமான் கூட‌ சிறு வ‌ய‌தில் இருந்து ப‌ழ‌கின‌வ‌ர்க‌ளை கேலுங்கோ சீமான் எப்ப‌டி ப‌ட்ட‌வ‌ர் என்று ,

2006ம் ஆண்டு பேசும் போது கூட‌ உண‌ர்ச்சி பொங்க‌  பேசினார்  ,

த‌மிழ் நாட்டில் நாம் த‌மிழ‌ர் க‌ட்சியை விட்டால் ஈழ‌ த‌மிழ‌ர்க‌ளுக்கு குர‌ல் கொடுக்க‌ வேறு யாரும் இல்ல‌ , 

அப்ப‌டி திராவிட‌ க‌ட்சிக‌ள் குர‌ல் கொடுத்தாலும் அது உண்மையான‌ குர‌லா இருக்காது அவ‌ர்க‌ளின் சில்ல‌ர‌ அர‌சிய‌லுக்காக‌ கொடுக்கும் குர‌லா இருக்கும் ,

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டுக்காக‌ வீட்டுக்கு ஒரு பிள்ளைய‌ தாங்கோ என்று த‌லைவ‌ர் 1990க‌ளில் கேக்கும் போது என‌க்கு 4வ‌ய‌து , 

இப்போது புல‌ம்பெய‌ர் நாட்டில்  இருந்து கொண்டு ம‌ற்ற‌வ‌ர்க‌ள் எழுதுவ‌த‌ பார்த்து உசுப்பேத்துவ‌து என்று எழுதுப‌வ‌ர்க‌ள் , புல‌ம்பெய‌ர் நாட்டுக்கு ஓடி வ‌ர‌மா கையில் ஒரு ஏக்கே துப்பாக்கிய‌ கையில் தூக்கி இருந்தா , த‌மிழீழ‌ நில‌ம்ப‌ர‌ப்பில் நூற்றுக்கு 75 நில‌ப்ப‌ர‌ப்ப‌ 2002 ச‌மாதான‌ கால‌த்திலே வைத்து இருந்து இருக்க‌லாம் ,

ச‌மாதான‌ கால‌த்தில் யாழ்பாண‌த்தில் நிக்கும் சிங்க‌ள‌ ஆமிய‌ வெளி ஏற்ற‌னும் என்று , ஜ‌யா அன்ர‌ன் பால‌சிங்க‌ம் எத்த‌ன‌ த‌ட‌வை குர‌ல் கொடுத்தார் தெரியுமா ,  

யாழ்ப்பாண‌த்த‌ 1995ம் ஆண்டு நாம் இழ‌க்காம‌ல் இருந்து இருக்க‌னும் , 1996 முல்லைதீவை கைப்ப‌ற்றின‌ கையோடு ஆனையிற‌வையும் கைப்ப‌ற்றி இருந்தா , பிற‌க்கு திருகோன‌ம‌லை ம‌ட்ட‌க்க‌ள‌ப்பு அம்பாறை இந்த‌ மூன்று இட‌ங்க‌ளும் தான் பிடிக்க‌ இருந்த‌து , 

த‌மிழீழ‌ வ‌ரை ப‌ட‌த்தில் இருக்கும் எல்லா இட‌ங்க‌ளையும் பிடித்து இருந்தா ச‌மாதான‌ கால‌த்தில் ஆதாவ‌து 2006ம் ஆண்டு போர் செய்யும் சூழ் நிலை வ‌ந்து இருக்காது  , 
பேச்சு வார்த்தை ந‌ட‌ந்து கொண்டு தான் இருந்து இருக்கும் , 

இப்ப‌த்த‌ விஞ்ஞான‌ தொழில் நுட்பத்த‌ வைச்சு எம்ம‌வ‌ர்க‌ளும் த‌ங்க‌ளை வேறு வித‌மாய் த‌யார் ப‌டுத்தி இருப்பார்க‌ள் , 

எம் போராட்ட‌த்தில் எத்த‌னையோ  திற‌மையான‌வ‌ர்க‌ள் இருந்தார்க‌ள் , அவ‌ர்க‌ளின் அறிவை ப‌ய‌ன் ப‌டுத்தி ப‌ல‌த‌ க‌ண்டு பிடித்து இருப்பின‌ம் , 

க‌ண் கெட்ட‌ பிற‌க்கு எத‌ற்கு சூரிய‌ ந‌ம‌ஸ்கார‌ம் 😉

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எனது கவலை என்னவென்றால், லட்சக்கணக்கான எமது உறவுகள் கொல்லப்பட்டுள்ளபோதும், எமக்கு நீதி இதுவரை கிடைக்கவில்லையென்பதும், அது ஒருபோதுமே கிடைக்கப்போவதில்லையென்பதும்.

அடுத்த கவலை, இப்போது தங்கு தடையின்றி சிங்களத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுவரும் எமது தாயகம். இதை எம்மால் இப்போதுள்ள அரசியல் பலத்தினை வைத்தோ, சர்வதேச உதவிகளை (அது என்னவென்று மாவையோ சுமந்திரனோ சொன்னால்த்தான் புரிந்துகொள்ள முடியும்) கொண்டோ தடுக்க முடியாதென்பது.

நடந்த அவலங்களைக் காலங்கள் மாற்றும் என்று நாம் சொன்னாலும்கூட, இன்றும் நடக்கும் ஆக்கிரமிப்புக்களை கண்முன்னேயே கண்டுகொண்டும் எப்படி கடந்துபோக முடியும் என்பது எனக்குள் இருக்கும் ஒரு கேள்வி.

இதற்கு ஒரேயொரு வழிதான் இருக்கிறது. அதாவது, தாயகம் பற்றிய எமது கனவை நாம் இப்போதே கலைத்துவிட வேண்டும். அதுபற்றிய முயற்சிகளையும் எண்ணங்களையும் நாம் இப்போதே முற்றாக கைவிட்டு வேறு வேலைகளைப் பார்க்கச் செல்லவேண்டும். இது என்னால் முடியாதது. உங்களின் இதுபற்றிய கருத்துக்களை அறிந்துகொள்ள விரும்புகிறேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Justin said:

 மன உளைச்சல் தரும் அளவுக்கு நாம் பொதுப் பிரச்சினைகளைப் பற்றி மண்டை காயக் கூடாது எனக் கருதுகிறேன்! எங்கள் பிரச்சினையை "பொதுப் பிரச்சினை" என்று குறிப்பிட்டதற்காக எனக்கு வசவு விழலாம், ஆனால் எந்த வழியில் பார்த்தாலும் எமது கட்டுப்பாட்டில் இல்லாமல் நிகழ்ந்த விடயங்களே எங்கள் இனப் பிரச்சினை! ஒரு பொதுப் பிரச்சினையை நாம் தீர்க்க வேண்டும் என்று நினைக்கும் போது விரைவில் helplessness உம் ஆயாசமும் வருவது இயல்பு! 

ஹசன் மின்ஹாஜ் என்ற நகைச்சுவையாளர் தனது நிகழ்ச்சியொன்றில் இதைப் பற்றிப் பேசியிருந்தார்.  எல்லா பிரச்சினைகளையும் தீர்க்க வேண்டுமென்று முயலாமல் ஒரு அல்லது இரண்டு விடயங்களை எடுத்துக் கொண்டு முயலும் போது நாம் முன்னேற வாய்ப்புண்டு என்கிறார் (divide & conquer).  இன்றைய தமிழர் நிலை என்கிற பிரச்சினையில், இளையோரின் கல்வி நிலையை உயர்த்துவதற்கு உதவுவது என்பது நான் இலக்கு வைக்கும் சிறு பகுதி! அது போல நீங்களும் ஏதாவது ஒரு சிறு பகுதியைத் தெரிவு செய்தால் பலனும் கிடைக்கும், இப்படியான  வெறுமையுணர்வும் வராது! 

நடந்த அழிவுகளிலிருந்து மனதை ஆறுதல்ப்படுத்தி, திசைதிருப்ப இந்த முயற்சிகள் உதவலாம். ஆனால், இன்றும் தொடர்ந்து நடைபெறும் திட்டமிட்ட அழிவுகள் பற்றி என்ன செய்யலாம்? நாம் அதுபற்றி வேண்டுமென்றே எண்ணாதுவிட்டாலும், அது நடக்கத்தானே போகிறது? நடப்பது நடக்கட்டும், எமக்கென்ன என்று இருப்பது எப்படிச் சாத்தியம்? நடப்பதற்கும் எமக்கும் மிக நெருங்கிய தொடர்பொன்று இருக்கும்போது, அவ்வளவு இலகுவாகக் கடந்தும், மறந்தும் போகமுடியும் என்று நினைக்கிறீர்களா? 

நீங்களெல்லாம் இந்த ஆக்கிரமிப்புப் பற்றியோ, பெளத்த, சிங்கள கலாசார திணிப்புப்பற்றியோ ஏதாவது செய்கிறீர்களா? உண்மையாகத்தான் கேட்கிறேன். அதாவது, தளங்களில் எழுதுவதால் பலர் அதுபற்றி அறியும் நிலையினை உருவாக்குவது, முறைப்பாடுகள் செய்வது (அண்மையில் அவுஸ்த்திரேலிய பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு ஆதரவான ஒரு லட்சம் கையெழுத்துக்கள்) என்று ஏதாவது நடக்கிறதா? இவை எல்லாமே எதையும் தரப்போவதில்லையென்பது உண்மையானாலும் கூட, ஏதோ ஒரு சிறு நம்பிக்கை என்று சொல்வார்களே, அதுபோல, ஏதாவது செய்யப்படுகிறதா? அப்படி இருந்தால் சொல்லுங்கள், முயன்று பார்க்கலாம். 

தாயகத்து அரசியல் எனக்குத் தெரியாது. இந்த ஆக்கிரமிப்புக்கள் பற்றியோ, மக்களின் அவலங்களுக்கான நீதிபற்றியோ அவர்கள் செய்துவரும் செயற்பாடுகள் பற்றியும் நான் அறியேன். நிச்சயமாக அவர்களும் இதுபற்றிச் சிந்தித்திருப்பார்கள், ஆனால் தடுக்கும் பலம் அவர்களிடமில்லை. வெறும் பாராளுமன்ற ஆசனங்கள் மட்டுமே இவற்றினைத் தீர்க்கும் என்று நாம் நம்பவில்லை. ஆனால், இப்போதைய எமது தாயக அரசியல் பாரளுமன்ற ஆசனங்களை முன்வைத்தே நடத்தப்படுவதாக நான் நினைக்கிறேன். அரசியல்த் தீர்வோ அல்லது போர்க்குற்ற விசாரணைகள், நீதிவழங்குதல் என்பதோ மூன்றாவதாகவோ அல்லது நான்காவதாகவோதான் போய்விட்டது. விரைவில் அவையும் மறக்கப்பட்டு விடும். 

இன்று ஈழத்தமிழினம் மிகக் கேவலமான கைய்யறு நிலையில், மிகப் பலவீனமாக, காப்புச் சக்தி ஒன்றில்லாமல், ஆக்ரோஷமான சிங்கள பெளத்த ஆக்கிரமிப்பிற்கு முகம்கொடுத்துக்கொண்டு நிராதரவாக நிற்கிறது என்பதே எனது எண்ணம். 

  • கருத்துக்கள உறவுகள்

ர‌குநாத‌ன் அண்ணா , சொறில‌ங்கா அர‌சிய‌ல் ம‌ற்றும் அந்த‌ நாட்டு ச‌ட்ட‌ திட்ட‌ம் என‌க்கு ஒன்றும் தெரியாது தெரிந்து கொள்ள‌வும் ஆசைப் ப‌ட்ட‌து இல்ல‌ ,

2009ம் ஆண்டுக்கு முத‌ல் அங்கு ந‌ட‌ந்த‌ அனைத்து அர‌சிய‌லையும் பின் தொட‌ர்ந்தேன் , 2009க்கு பிற‌க்கு போதும்டா சாமி என்று ஒதுங்கி விட்டேன் ,

சிங்க‌ள‌வ‌ன் கூட‌ த‌மிழ‌ர்க‌ள் க‌தைச்சு ஒரு தீர்வையும் ஒரு  போதும் பெற‌ முடியாது , நாம் ப‌ல‌மாய் இருந்த‌ போது குள்ள‌ ந‌ரி ர‌னில் எவ‌ள‌வு சூழ்ச்சி செய்து எம் போராட்ட‌த்தை உடைத்தான் , 

2002 அசுர‌ ப‌ல‌த்தோடு இருந்த‌ எம‌க்கு அப்ப‌ எங்க‌ளுக்கு ஒரு தீர்வும் த‌ர‌ விருப்பாத‌ சிங்க‌ள‌ம் இனி த‌ருமா , 

புல‌த்தில் புலி வேச‌ம் போட்டு விட்டு பின் க‌த‌வால் போய் எலி வேச‌ம் போட‌க் கூடிய‌வ‌ர்க‌ளும் எங்க‌ள் இன‌த்தில் இப்போது இருக்கின‌ம் , 

கொஞ்ச‌ம் பொறுமைய‌ க‌டை பிடியுங்கோ , ஒரு நாள் உண்மையான‌ ஆட்ட‌ம் ஆர‌ம்ப‌ம் ஆகும் , அப்போது த‌மிழீழ‌ கோரிக்கையை த‌மிழ‌ர்க‌ள் கைவிட‌ வில்லை என்று மீண்டும் ச‌ர்வ‌தேச‌த்துக்கு தெரிய‌ வ‌ரும் ,

2001ம் ஆண்டு க‌ட்டு நாய‌க்கா தாக்குத‌லின் போது சிங்க‌ள‌ தேச‌த்துக்கு பேர் இழ‌ப்பை கொடுத்த‌து , 

பிற‌க்கு சொறில‌ங்காவுக்கு எம்ம‌வ‌ர்க‌ளே அதிக‌ம் ப‌ய‌ண‌ம் செய்து சிங்க‌ள‌ தேச‌த்த‌ ச‌ரிவில் இருந்து மீட்டு விட்ட‌வை ,

இந்த‌ வ‌ருட‌ம் கொரோனா இல்லை என்றால் எம்ம‌வ‌ர்க‌ள் இப்ப‌வே சொறில‌ங்கா நோக்கி கில‌ம்பி இருப்பின‌ம் , 

இப்ப‌டி ப‌ட்ட‌ இன‌த்தில் இருந்து கொண்டு நாம் ஒரு செய‌லில் இற‌ங்க‌ முத‌ல் ப‌ல‌ வாட்டி யோசிக்க‌னும் ,

  • கருத்துக்கள உறவுகள்

இங்கிருந்து அதாவது வெளி நாட்டிலிருந்து கொன்டு ஆக்கிரமப்பை பற்றி கதைப்பது சின்னப்பிளைத்தனம்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரஞ்சித் said:

நடந்த அழிவுகளிலிருந்து மனதை ஆறுதல்ப்படுத்தி, திசைதிருப்ப இந்த முயற்சிகள் உதவலாம். ஆனால், இன்றும் தொடர்ந்து நடைபெறும் திட்டமிட்ட அழிவுகள் பற்றி என்ன செய்யலாம்? நாம் அதுபற்றி வேண்டுமென்றே எண்ணாதுவிட்டாலும், அது நடக்கத்தானே போகிறது? நடப்பது நடக்கட்டும், எமக்கென்ன என்று இருப்பது எப்படிச் சாத்தியம்? நடப்பதற்கும் எமக்கும் மிக நெருங்கிய தொடர்பொன்று இருக்கும்போது, அவ்வளவு இலகுவாகக் கடந்தும், மறந்தும் போகமுடியும் என்று நினைக்கிறீர்களா? 

நீங்களெல்லாம் இந்த ஆக்கிரமிப்புப் பற்றியோ, பெளத்த, சிங்கள கலாசார திணிப்புப்பற்றியோ ஏதாவது செய்கிறீர்களா? உண்மையாகத்தான் கேட்கிறேன். அதாவது, தளங்களில் எழுதுவதால் பலர் அதுபற்றி அறியும் நிலையினை உருவாக்குவது, முறைப்பாடுகள் செய்வது (அண்மையில் அவுஸ்த்திரேலிய பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு ஆதரவான ஒரு லட்சம் கையெழுத்துக்கள்) என்று ஏதாவது நடக்கிறதா? இவை எல்லாமே எதையும் தரப்போவதில்லையென்பது உண்மையானாலும் கூட, ஏதோ ஒரு சிறு நம்பிக்கை என்று சொல்வார்களே, அதுபோல, ஏதாவது செய்யப்படுகிறதா? அப்படி இருந்தால் சொல்லுங்கள், முயன்று பார்க்கலாம். 

தாயகத்து அரசியல் எனக்குத் தெரியாது. இந்த ஆக்கிரமிப்புக்கள் பற்றியோ, மக்களின் அவலங்களுக்கான நீதிபற்றியோ அவர்கள் செய்துவரும் செயற்பாடுகள் பற்றியும் நான் அறியேன். நிச்சயமாக அவர்களும் இதுபற்றிச் சிந்தித்திருப்பார்கள், ஆனால் தடுக்கும் பலம் அவர்களிடமில்லை. வெறும் பாராளுமன்ற ஆசனங்கள் மட்டுமே இவற்றினைத் தீர்க்கும் என்று நாம் நம்பவில்லை. ஆனால், இப்போதைய எமது தாயக அரசியல் பாரளுமன்ற ஆசனங்களை முன்வைத்தே நடத்தப்படுவதாக நான் நினைக்கிறேன். அரசியல்த் தீர்வோ அல்லது போர்க்குற்ற விசாரணைகள், நீதிவழங்குதல் என்பதோ மூன்றாவதாகவோ அல்லது நான்காவதாகவோதான் போய்விட்டது. விரைவில் அவையும் மறக்கப்பட்டு விடும். 

இன்று ஈழத்தமிழினம் மிகக் கேவலமான கைய்யறு நிலையில், மிகப் பலவீனமாக, காப்புச் சக்தி ஒன்றில்லாமல், ஆக்ரோஷமான சிங்கள பெளத்த ஆக்கிரமிப்பிற்கு முகம்கொடுத்துக்கொண்டு நிராதரவாக நிற்கிறது என்பதே எனது எண்ணம். 

நான் தவறாக உங்கள் பதிவைப் புரிந்து கொண்டு விட்டேன் என்று நினைக்கிறேன்! இது ஒரு அரசியல் திரி என்று எனக்கு உடனே விளங்கவில்லை, இப்போது புரிகிறது! 

மற்றபடி, நான் இந்த கையெழுத்து வேட்டை போன்ற எதிலும் பங்கு பற்றுவதில்லை! இதனால் பயன்கள் இல்லை என்ற என் அபிப்பிராயம் தான் காரணம். தாயக மக்களே தங்கள் அரசியலை தங்களுக்குத் தெரிந்த வழிகளில் பார்த்துக் கொள்வார்கள் என்ற நம்பிக்கையினால், அது பற்றியும் நான் அதிகம் அலட்டிக் கொள்வதில்லை! 

  • கருத்துக்கள உறவுகள்

ரஞ்சித் இன்னும் நீங்கள் 2009 ம் ஆண்டின் நினைவுகளுடனேயே வாழ்கின்றீர்கள். அதனால் இந்தப் பயனும் இல்லை. ஏதாவது நீங்கள் பிறந்து வளர்ந்த ஊருக்கு, மக்களுக்குச் செய்யவேண்டும் என்று எண்ணினால் முதல்ல நாட்டுக்குப் போய் இருந்து என்ன செய்யலாம் என்று பாருங்கோ. அங்கு போகும் துணிவு இருக்கும் துணிவு இல்லை என்றால் ஒரு உளவியல் மருத்துவரை அணுகுவது முக்கியமானது. அதை விட்டு ஈபிடிபி பதிவுபோட்டு நாலுபேர் வந்து எழுதினால் இந்தத் தீர்வும் நாட்டுக்கும் கிடைக்காது. மக்களுக்கும் கிடைக்காது. உங்களுக்கும் கிடைக்காது.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ரஞ்சித் said:

மன உளைச்சல்.

சில வருடங்களாகவே இது இருக்கிறது. வெளியே சொல்லவும் முடியாமல், உள்ளே வைத்திருக்கவும் முடியாமல், வேதனையும், இயலாமையும், வெறுப்பும், கையாலாகத்தனமும், கோபமும்....இப்படியே நேரத்திற்கொன்றாக மாறும் உணர்வுகளுடன் கழிகிறது பொழுது.

வணக்கம் ரஞ்சித்
        முதலில் ஒரு மாவீரன் குடும்பத்தவராக உங்களைப் பார்ப்பதில் பெருமையடைகிறேன்.தலை வணங்குகிறேன்.
        சாதாரணமாக இனவிடுதலை போராட்டம் என்று கீழ்மட்ட உதவிகள் செய்தவர்களில் இருந்து எல்லோருக்குமே இன்னமும் நம்ப முடியாமல் என்ன ?எப்படி ? உண்மையா என்று தெரியவில்லை.தெளிவில்லை.
        உங்களை மாதிரி எனக்கும் பல நேரங்களில் இப்படியான சிந்தனைகள்.எங்காவது அடி வளவிற்குள் போய் நின்று ஐயோ என்று கத்தி குளற வேண்டும் போல இருக்கும்.
        ஊரிலே நடப்பதைப் பார்க்க விடுதலை வேட்கை இன்னும் இன்னும் கூடுகிறது.
இன்னும் இவ்வளவு கஸ்டம் துன்பம் சித்திரவதைகளையும் தாண்டி நல்ல தலைமை இருந்தால் போராடக் கூடியவர்களையும் கண்டேன்.நடைமுறைக்கு சாத்தியமில்லாது போனாலும் மிகவும் அதிர்ச்சியாக இருந்தது.
       பரந்தனைச் சேர்ந்த ஒரு எனது வயதை ஒத்தவர் முதலாவது பிள்ளை மாவீரன்.கடைசி நேரத்தில் இருந்த இரு பிள்ளைகளையும் கட்டாயமாக கூட்டிக் கொண்டு போனார்கள் இன்னும் உடலம் கூட கிடைக்கவில்லை என்று கடுப்பானார்.சிறிது மெளனத்தின் பின் என்ன தான் சரிபிழை இருந்தாலும் அவங்கள் தான் சரி வேறு எவராலும் இந்த மண்ணை ஆளவோ கட்டுக் கோப்பாக வைத்திருக்கவோ முடியாது.அழிந்திருக்கவே கூடாது என்றார்.
          எனவே எமக்கு மட்டுமல்ல புலிகளுக்கு எதிராக நின்றவர்களுக்கும் இன்றைய நிலையில் அவங்கள் இருந்திருக்க வேண்டும் என்போரும் இருக்கிறார்கள்.
          என்னைப் பொறுத்த வரை சாகும்வரை இந்த நினைவுகள் விட்டுப் போகாது.
 
Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.