Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆகஸ்ட் ஐந்தாம் திகதிக்கு பின்னர் சுமந்திரனின் பெயரை உச்சரிக்கவேண்டிய தேவை ஏற்படாது- கஜேந்திரகுமார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஆகஸ்ட் ஐந்தாம் திகதிக்கு பின்னர் சுமந்திரனின் பெயரை உச்சரிக்கவேண்டிய தேவை ஏற்படாது- கஜேந்திரகுமார்

July 20, 2020

ஆகஸ்ட் ஐந்தாம் திகதிக்கு பின்னர் சுமந்திரனின் பெயரை உச்சரிக்கவேண்டிய தேவை ஏற்படாது என தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

சுமந்திரன் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் என்ற தகுதியை இழந்து வெறுமனே ஒரு சட்ட ஆலோசகராகவே இருக்கின்றார் இதன் காரணமாக அவ்வாறான ஒருவருடன் நாம் விவாதிக்கவேண்டிய தேவையுமில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நேற்று முன்தினம் கட்சிகளுக்கு இடையிலான விவாதமொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது இந்நிலையில் இந்த நிகழ்வு  இரத்துச்செய்யப்பட்டது என்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

gajendrakumaredited-300x225.jpg

எமது கட்சியின் சார்பில் சட்டஆலோசகர்களான சுகாஸ் மற்றும் காண்டீபன் ஆகியோர் இந்த விவாதத்தில் கலந்துகொள்ளவிருந்தனர் என தெரிவித்துள்ள கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எனினும் நான் கலந்துகொள்ளவில்லை என தெரிவித்து சுமந்திரன் அந்த நிகழ்வில் கலந்துகொள்ளவில்லை என ஊடகங்கள் மூலம் அறிந்தேன் என குறிப்பிட்டுள்ளார்.

சுமந்திரன் ஒன்றை புரிந்துகொள்ளவேண்டும், நான் ஒரு கட்சியின் தலைவராகயிருக்கின்றேன்,அப்படியாயின் இன்னொரு கட்சியின் தலைவருடனேயே நான் விவாதத்துக்கு செல்லவேண்டும் அதனாலேயே எனது சட்ட ஆலோசகர்களை விவாதத்துக்கு அனுப்பதீர்மானித்தேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ்தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் என்ற பதவியை இழந்து வெறுமனே சட்ட ஆலோசகராக தற்போது செய்யப்படுகின்ற சுமந்திரன் இவர்களுடன் விவாதம் செய்வதற்கு பயந்து அந்த நிகழ்வில் கலந்துகொள்ளவில்லை என கஜேந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

suma-300x189.png

சுமந்திரன் பொதுவெளிகளில் தெரிவித்து வரும் கருத்துக்களை கணக்கிலெடுக்கவேண்டாம் என கூட்டமைப்பின் தலைவரே தெரிவித்துவருகின்றார் அது மட்டுமல்லாது சுமந்திரனின் கருத்துக்களை கணக்கிலெடுக்க தேவையில்லை எனவும் தெரிவித்து வருகின்றார் என கஜேந்திரகுமார் தெரிவித்துள்ளார்.
அப்படியாயின் சுமந்திரன் வெறும் சட்ட ஆலோசகராகவே செயல்பட்டு வருகின்றார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

http://thinakkural.lk/article/56487

  • கருத்துக்கள உறவுகள்

இவர் ஒழுங்காய் இருந்து இருந்தால் சுமத்திரனே அரசியலை  விட்டு ஓடி ஒதுங்கி இருப்பார் இவர் கேட்க்க வேண்டிய கேள்விகளை முகநூலில் பொதுசனம்  கேட்டு துளைக்குது .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
33 minutes ago, பெருமாள் said:

இவர் ஒழுங்காய் இருந்து இருந்தால் சுமத்திரனே அரசியலை  விட்டு ஓடி ஒதுங்கி இருப்பார் இவர் கேட்க்க வேண்டிய கேள்விகளை முகநூலில் பொதுசனம்  கேட்டு துளைக்குது .

எனது கருத்தும் அதே.

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, குமாரசாமி said:

எனது கருத்தும் அதே.

அந்த நாட்களிலிருந்தே எமது அரசியற் தலைவர்கள் தூர நோக்குடனும் இராசதந்திரத்துடனும் ச்யற்பட்டிருந்தால் இந்த அவல நிலை ஏற்படிருக்காது. இந்த அரசியல்வாதிகளின் செயற்திறனற்ற தன்மை என்பது இன்று நேற்று ஏற்பட்ட ஒன்றல்ல. காலங்காலமாக இதுதான் எங்கள் அரசியல்வாதிகளின் நிலை. இதில் மாற்றம் என்பது முயற் கொம்புதான். ☹️

  • கருத்துக்கள உறவுகள்

இப்போ எல்லோருக்குமே பொது எதிரி சுமந்திரன்தான். சிங்களவனல்ல. 😂

காலக் கொடுமை சரவணா காலக் கொடுமை 😀😀😀

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Kapithan said:

இப்போ எல்லோருக்குமே பொது எதிரி சுமந்திரன்தான். சிங்களவனல்ல. 😂

காலக் கொடுமை சரவணா காலக் கொடுமை 😀😀😀

சம்பந்தன்... "கழுவுற மீனில்... நழுவுற மீன்"   போல தப்பி விட்டார்.  :grin:

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kapithan said:

இப்போ எல்லோருக்குமே பொது எதிரி சுமந்திரன்தான். சிங்களவனல்ல. 😂

காலக் கொடுமை சரவணா காலக் கொடுமை 😀😀😀

உண்மைதான் சிங்களவன் ஐநாவில் போய்  தமிழ் அமைப்புக்கு எதிராக பேசினால் அது கவனிக்கப்படாது ஏனென்றால் அடிபடுபவர்களின் வாதம் எனும் நிலை அதற்கு பதிலாக சுமத்திரனை  தமிழ் மக்கள் வாக்கெடுப்பில் வெல்லவைத்து மேற்குலகில் இருந்து நீதி  நியாயம் என்று துள்ளிக்கொண்டுவரும் ராஜதந்திரிகளை வாயை  அடக்கி கொண்டு போகவும் ஐநாவில் எழும் சில்லறை பிரச்சனைகளை சமாளிக்கவும் சிங்களத்துக்கு தமிழர்களில் விசுவாசமான .......போன்ற  ஒன்று தேவை. அது சுமத்திரனே 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

சம்பந்தன்... "கழுவுற மீனில்... நழுவுற மீன்"   போல தப்பி விட்டார்.  :grin:

முகநூல் பக்கம் எட்டிப்பாருங்க படு தோல்வி என்ற கோசத்தை நோக்கி ஓடுது .

இம்முறை தேர்தலில் சமூக வலை ஊடகங்களின் பங்களிப்பு முக்கியமானதாக கருதப்படுகின்றது .அதனால் சுமத்திரன் தனக்கு எதிராக எழுதும் கருத்துக்களை ரிமூவ் பண்ணவதில்லை அப்படியே விடுகின்றார் அது அவரின் புத்திசாலித்தனம் என்று எண்ணுகிறார் ஆனால் அதுவே படுகுழி என்பது தேர்தல் முடிய தெரியும் .

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பெருமாள் said:

முகநூலிலா தேர்தல் இடம்பெறுகிறது ? 😀

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Kapithan said:

முகநூலிலா தேர்தல் இடம்பெறுகிறது ?

இம்முறை கொரனோ  நேரத்தில் சமூகவலைதளம்களின் பங்கு இன்றியமையாதது அதனால்த்தான் அங்கஜன் டக்கியரும்  சுமத்திரன்  பெரும் செலவில் முகநூலில் பரப்புரை செய்கின்றனர் இன்னும் இரண்டு கிழமைதானே பொறுங்க .

அப்படியே டுவிட்டர் போன்ற குறுந்தகவல் எரியப்பக்கமும்  உங்க ஆளை சுமத்திரனை  வரச்சொல்லுங்க கடிச்சு குதறிடுவார்கள் அன்றோடு அரசியலுக்கும் முழுக்க போட்டுவிடுவார் அவ்வளவுக்கு பெரிய கடிக்கூட்டம் அங்கு உண்டு .

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பெருமாள் said:

உண்மைதான் சிங்களவன் ஐநாவில் போய்  தமிழ் அமைப்புக்கு எதிராக பேசினால் அது கவனிக்கப்படாது ஏனென்றால் அடிபடுபவர்களின் வாதம் எனும் நிலை அதற்கு பதிலாக சுமத்திரனை  தமிழ் மக்கள் வாக்கெடுப்பில் வெல்லவைத்து மேற்குலகில் இருந்து நீதி  நியாயம் என்று துள்ளிக்கொண்டுவரும் ராஜதந்திரிகளை வாயை  அடக்கி கொண்டு போகவும் ஐநாவில் எழும் சில்லறை பிரச்சனைகளை சமாளிக்கவும் சிங்களத்துக்கு தமிழர்களில் விசுவாசமான .......போன்ற  ஒன்று தேவை. அது சுமத்திரனே 

அதேதான், சிங்களம் எல்லாப் பக்கமும் அகலக்கால் விரித்து காய் நகர்த்துது பாப்போம் ஜெயிக்குமா என்று.

10 hours ago, Kapithan said:

அந்த நாட்களிலிருந்தே எமது அரசியற் தலைவர்கள் தூர நோக்குடனும் இராசதந்திரத்துடனும் ச்யற்பட்டிருந்தால் இந்த அவல நிலை ஏற்படிருக்காது. இந்த அரசியல்வாதிகளின் செயற்திறனற்ற தன்மை என்பது இன்று நேற்று ஏற்பட்ட ஒன்றல்ல. காலங்காலமாக இதுதான் எங்கள் அரசியல்வாதிகளின் நிலை.

 சிங்களத்துக்காக வாதாட சென்ற சேர் பொன் இராமநாதன், வழி வந்தவர்கள்;  சிங்களவர் தமிழரை அடக்கியாளும்போது வாய் பொத்தி நின்றதேனோ? சிங்களத்துக்கு ஓடியோடி உழைத்த கதிர்காமர் தன் இனத்தை மறந்ததேனோ? இஸ்லாமியருக்கும், சிங்களவருக்கும் வக்காலத்து வாங்கும் சின்னக் கதிர்காமர்- இனத்தின் பெயரால்  பதவி பெற்றுக்கொண்டு, ஏற்றி விட்டவர்களை பழிவாங்குவதன் காரணம் என்ன? சிங்களவன் இந்த ஆட்டம் ஆடுறான் என்றால்; தமிழனின் குடுமிப் பிடி அவன் கையில். யாரை நோவது? நம்ப வைத்து  ஏமாற்றுபவர்களையா? நம்பி  ஏமாந்த எம்மையா?  

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

இம்முறை கொரனோ  நேரத்தில் சமூகவலைதளம்களின் பங்கு இன்றியமையாதது அதனால்த்தான் அங்கஜன் டக்கியரும்  சுமத்திரன்  பெரும் செலவில் முகநூலில் பரப்புரை செய்கின்றனர் இன்னும் இரண்டு கிழமைதானே பொறுங்க .

அப்படியே டுவிட்டர் போன்ற குறுந்தகவல் எரியப்பக்கமும்  உங்க ஆளை சுமத்திரனை  வரச்சொல்லுங்க கடிச்சு குதறிடுவார்கள் அன்றோடு அரசியலுக்கும் முழுக்க போட்டுவிடுவார் அவ்வளவுக்கு பெரிய கடிக்கூட்டம் அங்கு உண்டு .

மறவன் புலவு சச்சியர் உங்கள் எசமானாகவும், RAWவுக்கு நீங்கள் அடியாளாகவும்  இருக்கும் வரைக்கும் சுமந்திரனும், செல்வம் அடைக்கலநாத்னும், ஆனோல்டும் எனது ஆட்கள்தான். 😀

(இனிமேல் குத்துது குடையுது என்று குழறிப் பிரயோசனம் இல்லை. அதை எழுத முன்னர் யோசித்திருக்க வேண்டும் 😜

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kapithan said:

மறவன் புலவு சச்சியர் உங்கள் எசமானாகவும், RAWவுக்கு நீங்கள் அடியாளாகவும்  இருக்கும் வரைக்கும் சுமந்திரனும், செல்வம் அடைக்கலநாத்னும், ஆனோல்டும் எனது ஆட்கள்தான். 😀

(இனிமேல் குத்துது குடையுது என்று குழறிப் பிரயோசனம் இல்லை. அதை எழுத முன்னர் யோசித்திருக்க வேண்டும் 😜

மறவன்  புலவு என்னிக்கு வேட்டியை அவுட்டு நாடகம் ஆடினாரோ அன்றுடன் அவருக்கு மரியாதை இல்லை அவரையும்  யாழில் பலதடவை  திட்டி எழுதுவது உங்களுக்கு தெரியாதாக்கும் சும்மா ரா வுடன் உறவு சுமத்திரன்  நானல்ல 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

மறவன்  புலவு என்னிக்கு வேட்டியை அவுட்டு நாடகம் ஆடினாரோ அன்றுடன் அவருக்கு மரியாதை இல்லை அவரையும்  யாழில் பலதடவை  திட்டி எழுதுவது உங்களுக்கு தெரியாதாக்கும் சும்மா ரா வுடன் உறவு சுமத்திரன்  நானல்ல 

தனக்கு தனக்கென்றால் சுழகு படக்கு படக்கென்று அடிக்குமாம். 😀

  • கருத்துக்கள உறவுகள்

கொள்கை சார்ந்த ஆரோக்கியமான விவாதமொன்றை முன்னெடுப்பதற்குத் தயாராக இருக்கின்றேன். அதற்காக சுமந்திரன் உள்ளிட்ட சில்லறைகளுடன் விவாதத்தில் ஈடுபட முடியாது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் விக்னேஸ்வரன் ஆகியோர் பொதுவெளியில் விவாதிப்பதற்கு முன்வருவார்களாயின் தாயகத்தின் எந்தப் பகுதியிலும் அதனை நடத்தினாலும் பங்குகொள்வதற்குத் தயாராக இருக்கின்றேன் எனவும் அவர் கூறியுள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

தமிழ் தேசியக் கொள்கை சார்ந்து விவாதம் ஒன்றுக்கு நான் எப்போதுமே தயாராக இருக்கின்றேன். என்னுடன் விவாதம் செய்பவர்கள் பொறுப்புக்கூற வல்லவர்களாக இருக்க வேண்டும். அவர்களின் நிலைப்பாடுகளுக்கும் கட்சியின் நிலைப்பாடுகளுக்கும் மாறுபட்ட நிலைமை இருக்கக்கூடாது.

அவ்வாறு இரண்டு வேறுபட்ட தரப்பினருடன் பொதுவெளியில் விவாதம் நடத்துவது பொருத்தமற்றது சுருங்கக்கூறின் சில்லறைகளுடன் விவாதிப்பதில் எவ்விதமான பயனுமில்லை.

சுமந்திரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளராக இருந்தாலும் கூட்டமைப்பின் ஏனைய தலைவர்கள் சுமந்திரன் வெளியிடும் கருத்துக்கள் அவரின் தனிப்பட்ட கருத்துக்கள் என்றே தெரிவித்து வருகின்றனர் என்றும் தெரிவித்துள்ளார்.

https://www.tamilwin.com/politics/01/251846?ref=home-latest

  • கருத்துக்கள உறவுகள்

அட்றா சக்கை... நச்செண்டு,  கஜேந்திரகுமார் சொல்லியுள்ளார். :)

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரன் போன்ற.... சில்லறைகளுடன், பேசத்  தயாரில்லை, என்று... 
கஜேந்திரகுமார் சொன்னது... இன்னும் சிறப்பு. :)

  • கருத்துக்கள உறவுகள்

😂😂

ஆடத்தெரிந்தவன் எந்த மேடையிலும் ஆடுவான். 😫

சம்பந்தருக்கு மைக் பிடித்து பேசுவதற்குரிய உடல் நிலை இல்லை என்று எல்லோருக்குமே தெரியும். அவருடன் மட்டுமே விவாதிப்பேன் என்பது தன்னையும் சம்பந்தருக்கு ஈடாகக் காட்டும் முயற்சி. 😜

சம்பந்தர் தனக்கு ஈடான ஒருவருடன்தான் தன்னால் விவாதிக்க முடியும் என்று கூறினால் கஜேந்திரகுமாரின் நிலை என்னாகும் 😛

சம்பந்தருடன்  ஒப்பிடுவதற்கு  கஜேந்திரகுமார் தகுதியானவரா 😂😂

முதிரை மரத்துடன் பப்பாமரத்தை ஒப்பிடும் முயற்சி 😅😅

  • கருத்துக்கள உறவுகள்
On 20/7/2020 at 18:48, கிருபன் said:

ஆகஸ்ட் ஐந்தாம் திகதிக்கு பின்னர் சுமந்திரனின் பெயரை உச்சரிக்கவேண்டிய தேவை ஏற்படாது- கஜேந்திரகுமார்

தவளையும் தன் வாயால் கெடும்.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Kapithan said:

😂😂

ஆடத்தெரிந்தவன் எந்த மேடையிலும் ஆடுவான். 😫

சம்பந்தருக்கு மைக் பிடித்து பேசுவதற்குரிய உடல் நிலை இல்லை என்று எல்லோருக்குமே தெரியும். அவருடன் மட்டுமே விவாதிப்பேன் என்பது தன்னையும் சம்பந்தருக்கு ஈடாகக் காட்டும் முயற்சி. 😜

சம்பந்தர் தனக்கு ஈடான ஒருவருடன்தான் தன்னால் விவாதிக்க முடியும் என்று கூறினால் கஜேந்திரகுமாரின் நிலை என்னாகும் 😛

சம்பந்தருடன்  ஒப்பிடுவதற்கு  கஜேந்திரகுமார் தகுதியானவரா 😂😂

முதிரை மரத்துடன் பப்பாமரத்தை ஒப்பிடும் முயற்சி 😅😅

சம்பந்தருக்கு..... மேடையிலேயே... மைக் பிடிச்சு, பேச முடியாது எண்டால்.... 
என்ன... இழவுக்கு, திரும்பவும்,  போட்டி போடுறார். 

பாராளுமன்றத்தில்  🏛️  விடுகிற... குறட்டை,  கொட்டாவியை... 
🏡  வீட்டில் இருந்தும்...   விட்டு, ஜாலியாய் இருக்கலாம் தானே...  🤩

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, zuma said:

தவளையும் தன் வாயால் கெடும்.

சிறு திருத்தம் (பொறுத்தருள்க); நுணலையும் தன் வாயால் கெடும். 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பெருமாள் said:

சுமந்திரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளராக இருந்தாலும் கூட்டமைப்பின் ஏனைய தலைவர்கள் சுமந்திரன் வெளியிடும் கருத்துக்கள் அவரின் தனிப்பட்ட கருத்துக்கள் என்றே தெரிவித்து வருகின்றனர்

கூட்டங்களில் கேள்வி கேட்பவர்களுக்கு தான் அளிக்கும் பதில்கள்கூட யாருக்கும் புரியுதில்லை என்று சுமந்திரன் புலம்புகிறார்.
ஒருவருக்கு புரியவில்லை என்றால் சம்பந்தப்பட்ட அந்த ஒருவரின் குறைபாடு என கருதலாம்.
ஆனால் எவருக்கும் புரியவில்லை என்றால் அது கூறுபவரின் குறைபாடு என்பதை சுமந்திரன் புரிந்து கொள்ள வேண்டும்.
 
  • கருத்துக்கள உறவுகள்

கட்சித் தலைவரால் நிராகரிக்கப்பட்டவருடன் நான் எப்படி விவாதிக்க முடியும்? – கஜேந்திரகுமார்

IMG_20200725_094221-960x720.jpg?189db0&189db0

சுமந்திரனின் பொய் காரணமாக அவரை மக்கள் நிராகரிப்பர்கள் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திர குமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

அம்பாறை – பாண்டிருப்பு பகுதியில் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வேட்பாளர்களை ஆதரித்து நேற்று (24) இரவு இடம்பெற்ற பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு கூறினார்.

மேலும்,

“தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்டு சுமந்திரன் தோல்விடைவார். இவர் கட்சியின் தலைவரினால் கூட நிராகரிக்கப்பட்டவர். இவருடன் நான் எப்படி விவாதத்திற்கு சென்று மக்கள் மத்தியில் அங்கீகாரத்தை பெற்றுக்கொடுக்க முடியும்.

நான் ஒரு கட்சியின் தலைவர். சுமந்திரன் என்னுடன் விவாதிப்பதற்கு தகுதியற்றவர். இவருடன் பல இடங்களில் விவாதித்துள்ள நிலையில் தனது முகத்தை தற்போது ஒளித்துக்கொண்டு திரிகின்றார். அத்துடன் தப்புவதற்கான சில வழிகளை தேடி வருகின்றார்” – என்றார். (ஷி)

https://newuthayan.com/கட்சித்-தலைவரால்-நிராகரி/

  • கருத்துக்கள உறவுகள்

நான் நினைக்கின்றேன், கடந்த தேர்தல் நேரம் சுமந்திரனை பகிரங்க விவாதத்திற்கு அழைத்த போது ஓடி ஒழித்துவிட்டார். இப்போது தானாகவே பகிரங்க விவாதத்திற்கு முயற்சிக்கிறார். 

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, தமிழ் சிறி said:

சம்பந்தருக்கு..... மேடையிலேயே... மைக் பிடிச்சு, பேச முடியாது எண்டால்.... 
என்ன... இழவுக்கு, திரும்பவும்,  போட்டி போடுறார். 

பாராளுமன்றத்தில்  🏛️  விடுகிற... குறட்டை,  கொட்டாவியை... 
🏡  வீட்டில் இருந்தும்...   விட்டு, ஜாலியாய் இருக்கலாம் தானே...  🤩

 இயலாத ஒருவரை மேடைக்கு அழைத்து கொலை செய்த குற்றத்திற்கு கஜேந்திரகுமார் ஆளாகலாமா என்பதுதான் என் கவலை. வேறென்ன ? 😂

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.