Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் பயங்கர வெடி சம்பவம்

Featured Replies

4 ஆகஸ்ட் 2020, 16:53 GMT
புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர்
லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் குண்டு வெடிப்பு

பட மூலாதாரம், AFP

 

லெபனானின் தலைநகர் பெய்ரூட்டில் இன்று சக்திவாய்ந்த வெடி சம்பவங்கள் நிகழந்தன. 

2005ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் ரஃபீக் ஹரீரி கொல்லப்பட்ட வழக்கில் தீர்ப்புகள் வர இருக்கும் நிலையில் இந்த வெடிப்பு நிகழ்ந்துள்ளது.

முதல் வெடி சம்பவம் துறைமுக பகுதியில் நிகழ்ந்ததாகத் தகவல்கள் கூறுகின்றன. இரண்டாம் வெடிப்பு எங்கு நிகழ்ந்தது என தெரியவில்லை. 

இந்த வெடிப்பு குறித்த சேதங்கள் அல்லது உயிரிழப்புகள் பற்றிய அதிகாரபூர்வ அறிக்கைகள் எதுவும் வெளியாகவில்லை.

கொலை வழக்கு

2005ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் ரஃபீக் ஹரீரி கார் குண்டு வெடிப்பில் கொல்லப்பட்ட வழக்கை ஐ.நா தீர்ப்பாயம் விசாரித்தது. 

இதன் தீர்ப்பு வர இருக்கும் சூழலில் இந்த வெடிப்பு நிகழ்ந்துள்ளது. 

இந்த வழக்கில் இரான் ஆதரவு ஹிஸ்புல்லா அமைப்பைச் சேர்ந்த நான்கு பேர் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர். ஆனால், அவர்கள் தொடர்ந்து இந்த குற்றச்சாட்டை மறுத்து வருகின்றனர். 

இரண்டாம் வெடிப்பு ஹரீரி வீடு அருகே நிகழ்ந்திருக்கலாம்.

பலர் காயம் அடைந்துள்ளதாக, மோசமான சேதம் ஏற்பட்டுள்ளதாகக் கூறுகிறார் லெபனான் சுகாதார துறை அமைச்சர்.
 

https://www.bbc.com/tamil/global-53657095

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

50 பேருக்கு மேல் பலி எனவும் 3000 பேருக்கு மேல் காயம் எனவும் ஜேர்மன் ஊடகம் தெரிவிக்கின்றது.

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

  • கருத்துக்கள உறவுகள்

லெபனான் நாட்டை உலுக்கிய மிகப் பயங்கர வெடிப்பு! – பெருமளவானோர் பலி!

IMG_20200804_223611-960x549.jpg?189db0&189db0

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இன்று (04) சற்றுமுன் இடம்பெற்ற அதிபயங்கர வெடிச் சம்பவத்தில் இதுவரை 70 பேர் பலியாகியுள்ளதுடன் 3 ஆயிரம் பேர் படுகாயமடைந்துள்ளனர்.

 
 

 

பெய்ரூட் துறைமுகப் பகுதியில் சிறிய வெடிப்பு ஏற்பட்டதை தொடர்த்து சில நொடிகளில் பயங்கர சத்தத்துடன் பெரும் வெடிப்பாக இந்த வெடிப்பு சம்பவம் பதிவாகியுள்ளது.

இந்த அனர்த்தத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத போதிலும் துறைமுகத்துக்கு அருகே இருந்த பட்டாசு கிடங்கில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக இந்த வெடிப்பு ஏற்பட்டிருக்கும் என்று அந்நாட்டு அரச செய்தி தளம் தெரிவித்துள்ளது.

இப்பாரிய வெடிச்சம்பவத்தால் தேசிய கோதுமை குழிகள் பாரிய அழிவை சந்தித்திருக்கும் என்றும், பல மைல்கள் தூரம் வரை இதனால் ஏற்பட்ட சேதகம் காணப்படலாம் எனவும் அஞ்சப்படுகிறது.

பின்னிணைப்பு

சோடியம் நைட்ரேட் உள்ளிட்ட அதியுயர் வெடி பொருட்கள் சேமிக்கப்பட்ட கிடங்கில் ஏற்பட்ட வெடிப்பே இப்பாரிய அனர்த்தத்துக்கு காரணம் என்று கண்டறியப்பட்டுள்ளது.

சம்வம் தொடர்பில் பேசிய பெய்ரூட் ஆளுநர், “சேதத்தின் அளவு மிகப் பெரியது. ஹிரோஷிமா நாஹசாகி போன்ற அழிவை ஒத்தது” என்று கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.

  • IMG_20200804_224554-1024x768.jpg?189db0&
  • IMG_20200804_224552.jpg?189db0&189db0
  • IMG_20200804_224550-1024x575.jpg?189db0&
  • IMG_20200804_224548.jpg?189db0&189db0
  • IMG_20200804_234932.jpg?189db0&189db0
  • IMG_20200804_233609-1024x683.jpg?189db0&
  • IMG_20200804_233606-1024x683.jpg?189db0&
  • IMG_20200804_233305.jpg?189db0&189db0
 
 
  • கருத்துக்கள உறவுகள்

bomb.jpg

லெபனானில் பாரிய வெடிப்பு சம்பவம்- உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

லெபனான் தலைநகர் பெயிரூட்டில் ஏற்பட்ட பாரிய வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 78 ஆக உயர்வடைந்துள்ளது.

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள துறைமுகத் தொழிற்சாலையொன்றில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இலங்கை நேரப்படி இரவு 08.30 மணியளவில் பாரிய வெடிப்பு சம்பவம் ஒன்று பதிவாகியது.

லெபனான் தலைநகரை உலுக்கிய குறித்த சம்பவத்தில் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 78 ஆக உயர்வடைந்துள்ளது.

மேலும் 4000 பேருக்கும் அதிகமானவர்கள் காயமடைந்திருப்பதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், மீட்பு பணியாளர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

கொரோனா வைரஸ் நெருக்கடி காரணமாக, ஏற்பட்ட பாரிய பொருளாதார நெருக்கடிக்குள் இருந்து படிப்படியாக மீண்டு வந்த லெபனானில் ஏற்பட்டுள்ள குறித்த சம்பவமானது, அந்நாட்டினை மீண்டும் நெருக்கடிக்குள் தள்ளும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

அதேவேளை,  இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அந்நாட்டின் ஜனாதிபதி மைக்கேல் ஒளன், குறித்த தொழிற்சாலைக்குள் பாதுகாப்பு ஏற்பாடுகள் எதுவுமற்று ஆறு ஆண்டுகளாக உர வகைகள் மற்றும் வெடிகுண்டுகள் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் அமோனியம் நைட்ரைட் வேதிப்பொருட்கள் ஏறக்குறைய 2750 டண் அளவில் சேமித்து வைக்கப்பட்டிருந்ததாக தெரிவித்துள்ளார்.

மேலும் குறித்த செயற்பாடானது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/லெபனானில்-பாரிய-வெடிப்பு/

  • கருத்துக்கள உறவுகள்

லெபனான் சம்பவத்தில் இரு இலங்கையர் காயமடைந்துள்ளனர்

 

 
 

லெபனானின் தலைநகரத்தில் துறைமுகத்தை அண்மித்த பகுதியில் நேற்று (4) இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் இலங்கையர்கள் இருவர் காயமடைந்துள்ளனரென, லெபனானிலுள்ள இலங்கைத் தூதரகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

அத்துடன் இலங்கைத் தூதரகமும் சிறிதளவு சேதமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

இந்த வெடிப்புச் சம்பவத்தில் 100 பேர் உயிரிழந்துள்ளதுடன், 4,000க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும் தூதரகம் தெரிவித்துள்ளது. 

 

image_632ade3cb5.jpg

 

http://www.tamilmirror.lk/செய்திகள்/லபனன-சமபவததல-இர-இலஙகயர-கயமடநதளளனர/175-253984

  • கருத்துக்கள உறவுகள்

லெபனானின் பெய்ரூட் நகரையே உருக்குலைத்த மிகப்பெரிய வெடிவிபத்து: 70 பேர் பலி, 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயம்: என்ன காரணம்?

massive-beirut-blast-kills-more-than-70-injures-thousands பெய்ரூட் நகரில் நடந்த வெடிவிபத்தில் நகரமே உருக்குலைந்து கிடக்கும் காட்சி: படம் உதவி | ட்விட்டர்.

பெய்ரூட்

லெபனான் நாட்டின் தலைநகர் பெய்ரூட் நகரில் நேற்று இதுவரை கண்டிராத வகையில் மிகப்பெரிய வெடிவிபத்து ஏற்பட்டு நகரையே உருக்குலைத்து, சின்னாபின்னமாக்கியது. இதில் 70 பேர் உயிரிழந்துள்ளனர், 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்று முதல்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பலி எண்ணிக்கை 78க்கும் மேல் என்றும் காயமடைந்தோர் எண்ணிக்கை 4000 என்றும் ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன

வெடிவிபத்தால் தலைநகரில் இருந்த வீடுகள், கடைகள், மருத்துவமனைகள், கட்டிடங்கள் இடிந்து உருக்குலைந்து காட்சியளிக்கின்றன. போரின்போது ஏதோ மிகப்பெரிய வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது போன்று நகரமே கோரமாக காட்சியளிக்கிறது.

பெய்ரூட் நகரில் இருந்த ஒரு கோட்டை முற்றிலும் இடிந்து தரைமட்டமாகியுள்ளது. பெய்ரூட் நகரில் நடந்த இந்த வெடிவிபத்து நில அதிர்வில் 3.5 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது. மத்திய தரைக்கடல் பகுதி முழுவதும் இந்த வெடிவிபத்து சத்தம் கேட்டுள்ளது, ஏறக்குறைய 200 கி.மீ. தொலைவில் உள்ள சைப்ரஸ் நகரத்துக்கும் இந்த சத்தம் கேட்டு, அதிர்வு உணரப்பட்டுள்ளது.

1596596550756.jpg வெடிவிபத்துக்குப் பின் ஆரஞ்சு நிறத்தில் வானில் சென்ற புகை.

ஏற்கெனவே கரோனா வைரஸ் பிரச்சினை, பொருளாதாரச் சிக்கல் போன்றவற்றில் லெபனான் நாடு திண்டாடிவரும் நிலையில் இந்த வெடிவிபத்து பேரிடியாக அமைந்துள்ளது. இந்த வெடிவிபத்து நடந்தபின் ஏராளமான ஆம்புலன்ஸ்கள் வந்து சாலையிலும், வீடுகளிலும் கிடக்கும் உடல்களைக் கொண்டு சென்றவாறு இருந்தன.

சிறிது நேரத்தில் மருத்துவமனைகளில் அனைத்து இடங்களும் நிரம்பியதால், காயமடைந்தவர்களைச் சாலையில் வைத்து சிகிச்சையளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

1596596875756.jpg

பெய்ரூட் நகரில் நடந்தது வெடிவிபத்தா அல்லது இஸ்ரேல் நடத்திய தாக்குதலா என்ற கேள்வி வெடிச்சத்தம் கேட்டதும் மக்கள் மத்தியில் இருந்தது. ஆனால், தாங்கள் எந்தவிதமான தாக்குதலையும் நடத்தவில்லை, எங்கள் விமானம் அங்கு செல்லவில்லை என்று இஸ்ரேல் அரசு திட்டவட்டமாக மறுத்தது.

ஆனால், பெய்ரூட் நகரில் உள்ள பழையான கோட்டையில் இருந்து ஆரஞ்சு நிறத்தில் புகை மிகப்பெரிய அளவில் மேகக்கூட்டம் போல் வெடிச்சத்தம் கேட்டபின் மேலே எழுந்தது என்று அதைப் பார்த்த மக்கள் தெரிவித்தனர், பல்வேறு புகைப்படங்களும் எடுக்கப்பட்டுள்ளன.

1596596812756.jpg காயமடைந்த மக்கள் சாலையில் ஓடிய காட்சி.

இந்த வெடிச் சத்தம் கேட்டபின் நகரில் இருந்த வீடுகள், கட்டிடங்கள், மருத்துவமனைகள், கடைகள் ஆகியவற்றில் பொருத்தப்பட்டிருந்த கதவுகள், ஜன்னல்கள், கண்ணாடிக் கதவுகள் பல கி.மீ. தொலைவுக்குத் தூக்கி வீசப்பட்டன.

இந்த வெடிவிபத்துக்கு உண்மையான காரணம் இதுவரை அந்நாட்டு அரசால் முழுமையாகக் கண்டுபிடித்து வெளியிடப்படவில்லை.

ஆனால், முதல்கட்ட விசாரணையில் கிடைத்த தகவலின்படி, பெய்ரூட் நகரில் உள்ள பழமையான கோட்டையில் மிகப்பெரிய வெடிமருந்து கிட்டங்கியை அரசு செயல்படுத்தி வந்தது. சில ஆண்டுகளுக்கு முன் கடற்பகுதியில் ஒரு கப்பலை அதிகாரிகள் பறிமுதல் செய்தபோது, அதில் இருந்த ஏராளமான ஆபத்தான வெடிமருந்துகள் இந்தக் கோட்டையில் சேமித்து வைக்கப்பட்டன. இந்த வெடிமருந்து வெடித்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

1596596587756.jpg

பெய்ரூட்டில் உள்ள தொலைக்காட்சி சேனல் எல்பிசி வெளியிட்ட செய்தியில், “வெடித்தவுடன் மஞ்சள் நிறத்தில் புகை மேலே எழும்பியது. இது சோடியம் நைட்ரேட் போன்று இருந்தது. அதன் மணம் நச்சுத்தன்மை கொண்ட நைட்ரஜன் டைஆக்ஸைடு போன்று இருந்தது” எனத் தெரிவித்தது.

இஸ்ரேல், ஹிஸ்புல்லா கிளர்ச்சியாளர்களுக்கு இடையே தற்போது பெரும் பதற்றம் நிலவி வருகிறது. இந்த வெடிவிபத்து நடக்க சில நிமிடங்களுக்கு முன் வானில் ஒரு விமானம் பறந்து சென்றதால், இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்திவிட்டதாக மக்கள் பதற்றம் அடைந்தனர். ஆனால், இஸ்ரேல் இதை மறுத்துவிட்டது.

பெய்ரூட்டில் இதற்கு முன் பல்வேறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளன. உள்நாட்டுப் போர், தற்கொலைப்படைத் தாக்குதல்கள் , இஸ்ரேல் தாக்குதல் என பல நடந்துள்ளன. ஆனால், அனைத்தையும் மிஞ்சும் வகையில் இந்த வெடிவிபத்து இருக்கிறது என்று நகர மக்கள் தெரிவிக்கின்றனர்.

1596596779756.jpg காயமடைந்த மக்கள் சாலையில் கிடத்தப்பட்டுள்ள காட்சி.

சாலையில் சென்றோர், வாகனத்தில் சென்றோர், வீடுகளில் ஓய்வு எடுத்தோர், கடைகளில் குழுமி இருந்த மக்கள் அனைவரும் இந்தத் தாக்குதலில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். கட்டிட இடிபாடுகளில் இன்னும் ஏராளமானோர் சிக்கியுள்ளனர். ரத்தமும், சதையுமாகவும், உடைந்த கை கால்களுடன், சாலையில் மக்கள் கிடத்தப்பட்டுள்ளது பரிதாபத்தை ஏற்படுத்துகிறது.

சுகாதாரத்துறை அமைச்சர் ஹசன் ஹமாத் கூறுகையில், “இந்த வெடிவிபத்து குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். இந்த விபத்தில் 70 பேர் உயிரிழந்தனர், 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பல்வேறு அவசர மீட்புக் குழுக்கள் பெய்ரூட்டுக்கு வந்து கொண்டிருக்கின்றன. காயமடைந்தவர்கள் வேறு நகரங்களில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படுகின்றனர். ராணுவ ஹெலிகாப்டர்களும் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளன” எனத் தெரிவித்தார்.

1596596849756.jpg

இந்த மோசமான வெடிவிபத்தால் பெய்ரூட்டில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளும் மோசமாகச் சேதமடைந்தன. இதனால் காயமடைந்தவர்களை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சையளிக்க முடியாத நிலையில் வேறு நகரத்துக்குக் கொண்டு செல்லப்படுகின்றனர்.

பெய்ரூட் கடற்கரையில் கரோனா வைரஸ் சூழலில் உதவுவதற்காக ஐ.நா. அமைதிக்குழுவின் கப்பல் ஒன்று நிறுத்தப்பட்டு இருந்தது. அந்த வெடிவிபத்தில் அந்தக் கப்பலும், கப்பலில் இருந்த ஏராளமான பணியாளர்களும் மோசமாகக் காயமடைந்துள்ளனர் .

https://www.hindutamil.in/news/world/568240-massive-beirut-blast-kills-more-than-70-injures-thousands-4.html

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 hours ago, தமிழ் சிறி said:

bomb.jpg

லெபனானில் பாரிய வெடிப்பு சம்பவம்- உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

உந்த வெடி விசயத்திலை பக்கத்து கடுகு நாட்டின்மேலை எனக்கு ஒரு சிமோல் டவுட்😎

  • கருத்துக்கள உறவுகள்
Just now, குமாரசாமி said:

உந்த வெடி விசயத்திலை பக்கத்து கடுகு நாட்டின்மேலை எனக்கு ஒரு சிமோல் டவுட்😎

 நிச்சயமாக அவர்கள் தான்

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, குமாரசாமி said:

உந்த வெடி விசயத்திலை பக்கத்து கடுகு நாட்டின்மேலை எனக்கு ஒரு சிமோல் டவுட்😎

 

3 minutes ago, உடையார் said:

 நிச்சயமாக அவர்கள் தான்

இஸ்ரேல்... தான், இதனை செய்திருக்கும் என்பதில், மாற்றுக்  கருத்து இல்லை.  😎

  • கருத்துக்கள உறவுகள்

அதென்ன வெடி சம்பவம். வெடிப்பு சம்பவம் என்பதுதான் சரியானது

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, வாதவூரான் said:

அதென்ன வெடி சம்பவம். வெடிப்பு சம்பவம் என்பதுதான் சரியானது

திணறடிக்கும் தீபாவளி பட்டாசு விலை ...

விலை குறைந்த பசுமைப் பட்டாசுகள் ...

வாதவூரான்... 
இண்டைக்கு இரவு, இலங்கைத் தேர்தல் முடிவுகள் வர இருக்கும் போது...
யார் தோற்றது.. யார் வெண்டது... என்று,  வெடி கொளுத்துற  பிளானில் இருக்கும் போது...
வெடி சம்பவம் என்று, எழுதியதில்... தப்பே இல்லை.  :grin:

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, தமிழ் சிறி said:

திணறடிக்கும் தீபாவளி பட்டாசு விலை ...

விலை குறைந்த பசுமைப் பட்டாசுகள் ...

வாதவூரான்... 
இண்டைக்கு இரவு, இலங்கைத் தேர்தல் முடிவுகள் வர இருக்கும் போது...
யார் தோற்றது.. யார் வெண்டது... என்று,  வெடி கொளுத்துற  பிளானில் இருக்கும் போது...
வெடி சம்பவம் என்று, எழுதியதில்... தப்பே இல்லை.  :grin:

சிறி அண்ணா,
அதுக்கு வெடி சம்பவம் என்று எழுதினால் சரி தான்

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரதி said:

 

பயங்கரமாக இருக்கு... அப்படா

 

பெய்ரூட் வெடி விபத்து; 3 இலட்சம் பேருக்கு வீடில்லை!

568355.jpg?189db0&189db0

லெபனான் – தலைநகர் பெய்ரூட்டில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்து காரணமாக சுமார் 3 இலட்சம் பேர் வீடற்றவர்கள் ஆகியுள்ளதாக லெபனான் அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பெய்ரூட் நகர ஆளுநர் அப்பவுட் கருத்து தெரிவித்தபோது, “பெய்ரூட் துறைமுகத்தில் ஏற்பட்ட வெடி விபத்து காரணமாக 3 இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் வீடற்றவர்களாகியுள்ளனர். மேலும் இந்த வெடி விபத்து காரணமாக 3.5 பில்லியன் டொலர் சேதம் ஏற்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நேற்று துறைமுகக் கிடங்கில் சுமார் 6 ஆண்டுகளாக வைக்கப்பட்ட 2,750 டொன் மதிப்பிலான அமோனியம் நைட்ரேட் மருந்து வெடித்தது. இந்த விபத்தில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. இதில் 100 பேர் உயிரிழந்துள்ளனர், 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

1596590618595128-0-1024x1024.jpg?189db0&

வெடி விபத்தால் தலைநகரில் இருந்த வீடுகள், கடைகள், மருத்துவமனைகள், கட்டிடங்கள் இடிந்து உருக்குலைந்து காட்சியளிக்கின்றன.

தொடர்ந்து பாதிக்கப்பட்ட இடங்களில் மீட்புப் பணிகள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் இந்த வெடி விபத்தில் தீயணைப்பு வீரர்கள் உட்பட பலர் மாயமாகி இருப்பதாக லெபனான் அரசு தெரிவித்துள்ளது.

லெபனான் ஏற்கெனவே பெரும் பொருளாதாரச் சரிவைச் சந்தித்துள்ளது. இந்த வெடி விபத்து லெபனான் பொருளாதாரத்தை மேலும் பாதித்துள்ளது. இந்த நிலையில் கட்டார் உள்ளிட்ட அரபு நாடுகள் மருத்துவ உதவிகளை லெபனானுக்கு வழங்கியுள்ளன.

 

https://newuthayan.com/பெய்ரூட்-வெடி-விபத்து-3-இல/

 

  • கருத்துக்கள உறவுகள்

EenmPEzUMAATuwD_571_855-720x450.jpg

பெயிரூட் வெடிப்பு சம்பவம்: 3.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவு!

லெபனான் தலைநகர் பெயிரூட்டில் ஏற்பட்ட பாரிய வெடிப்பு, 3.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தை தூண்டியுள்ளது என்று ஜேர்மனியின் புவி அறிவியல் மையம் தெரிவித்துள்ளது.

மத்தியதரைக் கடலில் 200 கிலோமீட்டர் (180 மைல்) தொலைவில் சைப்ரஸ் வரை இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

நகரின் துறைமுகத்தில் சுமார் 2,700 டன் என மதிப்பிடப்பட்ட ஒரு பெரிய அம்மோனியம் நைட்ரேட், சேமித்து வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகின்றது. இந்த இடத்திலேயே இந்த வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இந்த வெடிப்பு சம்பவத்தில் குறைந்தது 78 பேர் உயிரிழந்ததோடு, சுமார் 4,000 பேர் காயமடைந்தனர்,

https://athavannews.com/பெயிரூட்-வெடிப்பு-சம்பவம/

7 hours ago, ரதி said:

 

ஒரு அணுகுண்டு வெடித்த மாதிரி... காளான் வடிவில், புகை மேலே எழும்புகின்றது. 😮

  • கருத்துக்கள உறவுகள்

லெபனான் தலைநகர் பெய்ரூட் வெடிப்பு: 2750 டன் வெடி மருந்து, 240 கி.மீ தொலைவில் கேட்ட சத்தம், என்ன நடந்தது? - விரிவான தகவல்கள்

5 ஆகஸ்ட் 2020
லெபனான் தலைநகர் பெய்ரூட் வெடிப்பு

EPA

லெபனான் மீட்பு பணியாளர்கள் செவ்வாய்க்கிழமை பெய்ரூட் துறைமுகம் அருகே நடந்த வெடிப்பில் காணாமல் போன நூற்றுக்கணக்கான மக்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த வெடிப்பில் குறைந்தது 100 பேர் பலியாகி உள்ளனர்; 4 ஆயிரம் பேர் காயம் அடைந்துள்ளனர்.

லெபனான் தலைநகர் பெய்ரூட் வெடிப்பு

Reuters

அந்த வெடிப்பின் பெய்ரூட் நகரமே குலுங்கியது. காளான் கொடை வடிவத்தில் புகை மேலே எழுந்தது.

கிடங்கில் உரிய பாதுகாப்பு இல்லாமல் வைக்கப்பட்டிருந்த 2,750 டன் அமோனியம் நைட்ரேட்டின் காரணமாகவே இந்த வெடிப்பு சம்பவம் நிகழ்ந்ததாகக் கூறுகிறார் அந்நாட்டு அதிபர் மைக்கேல் ஆன்.

விவசாயத்தில் உரம் தயாரிக்கவும், வெடி மருந்து தயாரிக்கவுமே அமோனியம் நைட்ரேட் பயன்படுகிறது.

லெபனான் தலைநகர் பெய்ரூட் வெடிப்பு

Reuters

இன்றிலிருந்து (புதன்கிழமை) நாடு முழுவதும் மூன்று நாட்களுக்குத் துக்கம் அனுசரிக்கப்படும் என லெபனான் அதிபர் ஆன் தெரிவித்துள்ளார்.

"நேற்று இரவு பெய்ரூட் எதிர்கொண்ட பேரச்சத்தை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை. இது பெய்ரூட்டை பேரழிவு தாக்கிய நகரமாக மாற்றிவிட்டது," என்று அவசர அமைச்சரவை கூட்டத்தில் அதிபர் ஆன் தெரிவித்தார்.

புகை, இடிபாடுகள் அனைத்தையும் கடந்து பாதிக்கப்பட்டவர்களுக்காகச் சம்பவ இடத்திற்கும், மருத்துவமனைக்கும் உதவ சென்ற மக்களை நான் பாராட்டுகிறேன் என்றும் அவர் தெரிவித்தார்.

 

என்ன நடந்தது?

 

இந்த வெடிப்பு உள்ளூர் நேரப்படி செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்கு துறைமுக பகுதியில் நடந்தது.

லெபனான் தலைநகர் பெய்ரூட் வெடிப்பு

Reuters

தான் நெருப்பை நேரில் பார்த்ததாகவும், ஆனால் வெடிப்பு சம்பவத்தை எதிர்பார்க்கவில்லை என்றும் சம்பவத்தை நேரில் கண்ட ஹதி நஸ்ரல்லா கூறுகிறார்.

அவர், "நான் கேட்கும் திறனை சில நிமிடங்களுக்கு இழந்துவிட்டேன். ஏதோ தவறாக நடக்கிறது என்று புரிந்தது. என் அருகே இருந்த காரின் கண்ணாடிகள், கடைகள், வீடுகளின் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின," என்று பிபிசியிடம் தெரிவித்தார்.


 

 

பிபிசி நிருபரின் அனுபவம்

 

பெய்ரூட் வெடிப்பு சம்பவத்தின் போது பிபிசி அரபு சேவையின் செய்தியாளர் மரியம் ஒரு காணொளி பேட்டி எடுத்துக் கொண்டிருந்தார். அந்த காணொளியில் இந்த வெடிப்பினால் ஏற்பட்ட அதிர்வு பதிவாகி உள்ளது.

பிபிசியில் பணியாற்றும் லினா சின்ஜாபும் இந்த வெடிப்பினால் ஏற்பட்ட அதிர்வை உணர்ந்து இருக்கிறார். துறைமுக பகுதி அருகே ஐந்து நிமிட பயண தொலைவில் அவர் வீடு இருக்கிறது. 

அவர், "எங்கள் கட்டடம் கீழே சரிந்து விழுவது போல அதிர்ந்தது. எல்லா ஜன்னல்களும் திறந்தன," என்கிறார்.

ஹெலிகாப்டரை கொண்டு தீ அணைக்கப்படுகிறது

Getty Images

 

ஹெலிகாப்டரை கொண்டு தீ அணைக்கப்படுகிறது

இந்த வெடிப்பு, 240 கி.மீ தொலைவில், கிழக்கு மத்திய தரைக்கடலில் உள்ள சைப்ரஸ் தீவிலும் உணரப்பட்டு இருக்கிறது.

நிலநடுக்கம் என்று கருதியதாக சைப்ரஸ் தீவு மக்கள் கூறுகிறார்கள்.

இதனை மாபெரும் பேரழிவு என வர்ணிக்கிறார் லெபனான் செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைவர் ஜார்ஜ். "எங்கும் பாதிக்கப்பட்டவர்களை, காயமடைந்தவர்களைக் காண முடிகிறது," என்கிறார் அவர்.

 

லெபனான் தலைநகர் பெய்ரூட் வெடிப்பு

Reuters

பிணவறை அமைக்கும் பணியில் லெபனான் சுகாதார அமைச்சகத்துடன் இணைந்து ஈட்டுப்பட்டிருப்பதாகச் செஞ்சிலுவைச் சங்கம் கூறுகிறது. காணாமல் போன 100 பேரை தேடி வருவதாகவும் அந்த அமைப்பு கூறுகிறது.

லெபனானில் காயமடைந்தவர்களைக் குணப்படுத்த போதுமான படுக்கை வசதிகள், மருத்துவ உபகரணங்கள் இல்லை என பொதுச் சுகாதார அமைச்சர் ஹமத் ஹசன் கூறினார்.

ஏராளமான குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளனர். ஆனால் அதே நேரம் பலியானவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என அச்சமாக உள்ளது என அவர் கூறினார்.

 

எதனால் அமோனியம் நைட்ரேட் வெடித்தது?

 

2013ஆம் ஆண்டு ஒரு கப்பலிலிருந்து அமோனியம் நைட்ரேட் தரையிறக்கப்பட்டதாகவும், கடந்த ஏழு ஆண்டுகளாக அந்த கிடங்கில் இருப்பதாகவும் கூறும் விசாரணை அதிகாரிகள், எப்படி வெடித்தது என்பதை விசாரித்து வருவதாகக் கூறுகின்றனர்.

லெபனான்

Reuters

பிபிசியிடம் பேசிய பிரிட்டனின் முன்னாள் உளவுத்துறை அதிகாரி பிலிப் இன்கிராம், குறிப்பிடத்தக்க சில சூழ்நிலைகளில்தான் அமோனியம் நைட்ரேட் வெடிப் பொருளாக மாறும் என தெரிவித்தார்.

எரிபொருளுக்கான எண்ணெய் ஆகியவையுடன் கலக்கும் போது இது வெடிக்கலாம் என தெரிவித்தார்.

இதற்குக் காரணமானவர்களுக்கு உச்சபட்ச தண்டனை வழங்கப்படும் என லெபனான் பாதுகாப்பு அமைப்பின் அதிகாரி கூறினார்.

 

லெபனான் நிலை

 

ஏற்கெனவே லெபனான் கொரோனாவுடன் போராடி வருகிறது. 

லெபனான் மருத்துவமனைகள் கோவிட் 19 நோயாளிகளால் நிரம்பி உள்ளன. 

இதற்கு மத்தியில் அங்குப் பொருளாதார பிரச்சனைகளும் நிலவி வருகின்றன. 

தங்களது உணவு தேவையை பெரும்பாலும் லெபனான் இறக்குமதியே செய்கிறது. அவை துறைமுக பகுதியில் உள்ள கிடங்குகளில்தான் சேமித்து வைக்கப்பட்டிருந்தன. இப்போது ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தில் அவையும் அழிந்திருக்கலாம் என்ற அச்சம் நிலவுகிறது. 

இந்த வெடிப்பினால் பாதிக்கப்படாத பகுதிகளில் வசிக்கும் மக்கள் சமூக ஊடகங்களின் மூலமாக உதவிக்கரம் நீட்டி வருகிறார்கள்.
 

https://www.bbc.com/tamil/global-53667885

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு சேதங்களைப்  பார்க்கும் போது.... 
100 பேர் உயிரிழந்தார்கள் என்று செய்திகள் வருவது நம்பும் படியாக இல்லை.
பல ஆயிரக் கணக்கில்... உயிர்ச் சேதம் ஏற்பட்டிருக்கும் என நினைக்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

பேரழிவுகள் எந்த ரூபத்தில் எப்படி வரும் என்று தெரியாது.....இந்த வருடம் அதிக அழிவுகளைக் கொண்ட வருடமாக வந்திருக்கின்றது......!   

  • கருத்துக்கள உறவுகள்

பெய்ரூட் வெடிவிபத்து; பலி எண்ணிக்கை 135 ஆக அதிகரிப்பு!

568355.jpg?189db0&189db0

 

லெபனான் தலைநகர் பெய்ரூட் வெடி விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 135 ஆக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து லெபனான் சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவிக்கும்போது,

“லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் துறைமுகக் கிடங்கில் சுமார் 6 ஆண்டுகளாக வைக்கப்பட்ட 2,750 டொன் மதிப்பிலான அமோனியம் நைட்ரேட் மருந்து வெடித்தது.

இந்த விபத்தில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த விபத்துக்கு நேற்று(05) வரை 70 பேர் உயிரிழந்திருந்தனர். இந்த நிலையில் பலி எண்னிக்கை 135 ஆக அதிகரித்துள்ளது. 5 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் காயமடைந்து உள்ளனர்” என்று தெரிவித்தது.

1596590618595128-0-1024x1024.jpg?189db0&

இந்த நிலையில் துறைமுக கிடங்கில் அமோனியம் நைட்ரேட் வைத்திருந்தது தொடர்பாக அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பெய்ரூட் நகர அரசு தெரிவித்துள்ளது.

லெபனான் ஏற்கெனவே பெரும் பொருளாதாரச் சரிவைச் சந்தித்துள்ளது. இந்த வெடி விபத்து லெபனான் பொருளாதாரத்தை மேலும் பாதித்துள்ளது. இந்த நிலையில் கட்டார் உள்ளிட்ட அரபு நாடுகள் மருத்துவ உதவிகளை லெபனானுக்கு வழங்கியுள்ளன.

இதற்கிடையில் ஐக்கிய நாடுகள் சபையும் லெபனான் அரசுக்கு உதவ முன்வந்துள்ளது.

https://newuthayan.com/பெய்ரூட்-வெடிவிபத்து-பல/

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

  • கருத்துக்கள உறவுகள்

லெபனான் தலைநகர் பெய்ரூட்-ல் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க மத்திய-மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

லெபனான் தலைநகர் பெய்ரூட்-ல் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க மத்திய-மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்! - சீமான் வலியுறுத்தல்

லெபனான் தலைநகர் பெய்ரூட்-ல் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க மத்திய-மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

நேற்று (04-08-2020) இரவு மத்திய கிழக்கு நாடான லெபனானின் தலைநகர் பெய்ரூட் துறைமுகம் அருகே இருந்த இரசாயணக் கிடங்கு ஒன்றில் ஏற்பட்ட மிகப்பெரிய இரண்டு வெடிப்புகள் உலகத்தையே உலுக்கி உள்ளது.  25 கிமீ  சுற்றளவு வரை அதிர்வலைகளை ஏற்படுத்திய  இந்த விபத்தின் சத்தம் 250 கிமீ வரை உணரக்கூடியதாய் இருந்திருக்கிறது. உள்ளத்தை நடுநடுங்க செய்யும் வெடிப்புக் காட்சிகள் பார்த்த அதிர்ச்சியிலிருந்து மனம் மீளவில்லை.

விபத்து ஏற்பட்ட இரசாயணக் கிடங்கில் ஏறத்தாழ 3000 டன் நிறையுள்ள அதிக ஆபத்தை விளைவிக்கக் கூடிய அம்மோனியம் நைட்ரேட் இரசாயணத்தைப் பாதுகாப்பற்ற முறையில், பராமரிப்பு இன்றி 6 வருடமாக வைத்து இருந்ததுதான் விபத்திற்கான காரணம் என்கிறார்கள். இந்த மோசமான விபத்தில் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியாகிவிட்டதாகவும் 4 ஆயிரம் பேர்வரை காயம் அடைந்துள்ளதாகவும் வெளியாகும் செய்திகள் மனதை கணக்கச்செய்கிறது.

விபத்தில் பலியானவர்களின் குடும்பத்திற்கு எனது ஆறுதலைத் தெரிவித்து, காயமடைந்துள்ளவர்கள் விரைந்து குணமாக வேண்டும் என்று உளமாற விழைகிறேன். கொரோனா காலத்தில் ஏற்பட்டுள்ள இந்த இக்கட்டான சூழ்நிலையிலிருந்து லெபனான் விரைந்து மீண்டு வரவேண்டும்.

மேலும் தமிழகத்திலிருந்து பணிபுரிவதற்காக லெபனான் சென்ற நூற்றுக்கணக்கான தமிழர்களின் நிலை என்னவானதென்று இதுவரை தெரியவில்லை. குறிப்பாக வெடிவிபத்து நிகழ்ந்த தலைநகர் பெய்ரூட்-ல் வசித்துவந்த தமிழர்களைத் தொடர்புகொள்ளவே முடியவில்லை என்று அவர்களது குடும்பத்தினர் நேற்றிரவு முதல் பெரும் பயத்துடனும், பதற்றத்துடனும் உள்ளனர்.

எனவே தமிழக அரசு, மத்திய வெளியுறவுத்துறை மூலம் லெபனானில் உள்ள இந்தியத் தூதகரத்தை உடனடியாகத் தொடர்புகொண்டு அங்குச் சிக்கியுள்ள தமிழர்களை விரைந்து மீட்க வேண்டும். மேலும் அவர்களது நிலை தற்போது எவ்வாறு உள்ளதென்பதனை கண்டறிந்து அது குறித்தான தகவல்களை அவர்கள் குடும்பத்தினருக்கு தெரிவிக்கவும்,  குடும்பத்தினருடன் தொலைபேசியில் தொடர்புகொள்ள வழிவகைச் செய்துதரவும் விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

– சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

https://www.naamtamilar.org/central-and-state-govt-should-take-swift-action-to-rescue-tamils-trapped-in-beirut/

 

  • கருத்துக்கள உறவுகள்

லெபனான் தலைநகர் பெய் ரூட்டில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க வேண்டும் | சீமான் கோரிக்கை

 

  • கருத்துக்கள உறவுகள்

நவீன மனுதர்மம் தான் மோடி அரசின் திட்டம்

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.