Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முள்ளிவாய்க்காலில் உறுதிப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ள முன்னணி எம்.பிக்கள்.!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அவரின்  பிரார்த்தனையை சத்தியப்பிரமாணம் என்று மொழிபெயர்கிறார்கள், விபரம் கெட்டவர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, satan said:

அவரின்  பிரார்த்தனையை சத்தியப்பிரமாணம் என்று மொழிபெயர்கிறார்கள், விபரம் கெட்டவர்கள்.

அதைகூட விளங்காமல் இவ்வளவு துள்ளு துள்ளுகின்றார்கள், பிரார்த்தனை செய்வதில் என்ன பிழை 🤔

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, satan said:

அவரின்  பிரார்த்தனையை சத்தியப்பிரமாணம் என்று மொழிபெயர்கிறார்கள், விபரம் கெட்டவர்கள்.

காமாலை கண்ணனுக்கு... கண்டதெல்லாம் மஞ்சளாக தெரியுமாம். 🤓

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, satan said:

அவரின்  பிரார்த்தனையை சத்தியப்பிரமாணம் என்று மொழிபெயர்கிறார்கள், விபரம் கெட்டவர்கள்.

எல்லாவற்றையும் யூகித்துக்கொள்ளுங்கள் என்றா சொல்கிறீர்கள் 🤥

ஒருபக்கம் வாக்கு எண்ணிக்கையில் மோசடி என்று யூகிக்கச் சொல்லுகிறீர்கள், இன்னொருபக்கம் முள்ளிவாய்க்காலில் சத்தியப்பிரமாணம் என்கின்ற செய்தியை பிரார்த்தனை என்று யூகிக்கச் சொல்கிறீர்கள். 

என்னதான் நடக்கிறது இங்கே ☹️

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, Kapithan said:

எல்லாவற்றையும் யூகித்துக்கொள்ளுங்கள் என்றா சொல்கிறீர்கள் 🤥

இதில் யூகிப்பதற்கு என்ன இருக்கிறது? பிரார்த்திக்கிறேன், பிரார்த்தனையோடு என் பயணத்தை தொடங்குகிறேன் என்று தெளிவாக தமிழில்தானே சொல்லியிருக்கிறார். அரைகுறை  சிங்களம், ஆங்கிலம் எதுவும் பேசவில்லையே? 

1 hour ago, உடையார் said:

அதைகூட விளங்காமல் இவ்வளவு துள்ளு துள்ளுகின்றார்கள், பிரார்த்தனை செய்வதில் என்ன பிழை 🤔

தாங்கள் தோத்தாலும் விக்கினேஸ்வரன் தேர்தலில் வெல்லக்கூடாது என்று ஒரு கூட்டம் அலைந்தது பாருங்கோ! அவையள் தான் அவருக்கு பின்னால திரியிறதும் அல்லாமல்,  தாங்கேலாமல் குதிக்கினம்.

3 hours ago, Kapithan said:

பிழை அல்ல. வணங்கிச் செல்வது மனதுக்கு மகிழ்வானதுதான். ஆனால் சிங்களத்திற்கு பிழையான சமிஞ்ஞையைக் கொடுக்கவோ தமிழர்களுக்கு அதீத எதிர்பார்ப்பைக் கொடுக்கவோ கூடாது என்பதுதான் நலன் விரும்பிகளின் ஆதங்கம் 🤥

குறுசோ,

உங்கள் வயது  48-52 என்பதற்குள் வருமா 😜

இங்கு முள்ளிவாய்க்காலில் ஒரு அக வணக்கம் அல்லது வீழ்ந்த எமது மக்களுக்கு மரியாதை செலுத்திச்செல்லுவதில் ஒரு பிரச்சினயம் இல்லை. ஆனால் இங்கு எழுதப்பட்ட்து என்னவென்றால் உறுதிப்பிரமணம் எடுத்துக்கொண்டு சொல்கிறார்களாம். என்ன உறுதிப்பிரமானம் என்று கூறினால் விளக்கமாக இருக்கும்.

வயது எல்லாம் கேட்கக்கூடாது. எழுதுவதை வைத்து முடியுமென்றால் அனுமானித்துக்கொள்ளுங்கள். 

6 hours ago, nedukkalapoovan said:

உங்களிடம் வினவப்பட்ட வினா அப்படியே பதில் இன்றி இருக்குது. அதை விட்டிட்டு.. மீண்டும் மீண்டும்.. சிங்கள பெளத்த பேரினாவாதத்திற்கும் அதன் அடிவருடிகளுக்கும்.. அபிவிருத்தி என்ற போலி பிம்பத்துனூடு வக்காளத்துக்கு வாக்குவதை மட்டுமே செய்கிறீர்கள்.

இது சிங்கள பாராளுமன்றத்துக்கான சத்தியப்பிரமானம்.. கிடையாது. இது அவர்கள் கொண்ட கொள்கை மீதான உறுதிமொழி என்று எடுத்துக் கொள்ளலாம்.

சிங்கள பெளத்த பேரினாவதத்தை எதிர்கொள்ள தமிழ் மக்கள் கட்சி பேதமின்றி.. மீண்டும் ஒன்றிணைய வேண்டிய காலமிது. அபிவிருத்தி அதுஇதென்று போலி வாதங்களை முன் வைத்து சிங்கள பெளத்த பேரினவாதத்தின் ஆக்கிரமிப்பு வலுப்படுத்தலுக்கு உதவி நிற்பதை தவிர்க்க வேண்டும். 

நான் எழுதினத்துக்கு இன்னும் பதில் எழுதவில்லை. ஏதேதோ எழுதி பிதற்றுகிறீர்கள்.

முதலில் ஒற்றுமை தலைமைகளில் இருந்து தொடங்க வேண்டும். மக்களே ஒன்றிணையுங்கள் , தியாகம் செய்யுங்கள் எண்டு கூப்பாடு போடுவதில் பிரயோசனம் இல்லை. மக்கள் இப்போது விழிப்பாக இருக்கிறார்கள்.

இன்னும் ஐந்து வருடங்களில் இதையும்விட தீர்க்கமான முடிவை எடுப்பார்கள். சில வேளைகளில் மாகாண சபை தேர்தல் நடந்தால் அதிலும் அதன் தாக்கத்தை பார்க்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, satan said:

இதில் யூகிப்பதற்கு என்ன இருக்கிறது? பிரார்த்திக்கிறேன், பிரார்த்தனையோடு என் பயணத்தை தொடங்குகிறேன் என்று தெளிவாக தமிழில்தானே சொல்லியிருக்கிறார். அரைகுறை  சிங்களம், ஆங்கிலம் எதுவும் பேசவில்லையே? 

உற்றுக் கவனியுங்கள். உறுதிப்பிரமாணம் என்றுதான் எழுதப்பட்டுள்ளது. பதில்கள் அதற்குத்தான் கொடுக்கப்பட்டுள்ளன. வீடியோ பின்னர்தான் இணைக்கப்பட்டுள்ளது. அதுவும் முழுமையானவை அல்ல. தரப்பட்ட செய்தியையும் ஊகிக்கவெண்டும். தரப்படாததையும் ஊகிக்கவேண்டுமென்றால்........

முடிய்வில்லை 🤧

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Kapithan said:

தரப்பட்ட செய்தியையும் ஊகிக்கவெண்டும். தரப்படாததையும் ஊகிக்கவேண்டுமென்றால்.......

அது உங்கள் வேலையாக இருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, satan said:

அது உங்கள் வேலையாக இருக்கலாம்.

எனக்கு கொஞ்சமாவது மூளை வேலை செய்வதால் யூகிக்கும் வேலைக்கெல்லாம் போகமாட்டேன். அதனால் இதை பொருத்தமானவர்களிடம் கூறுங்கள். 😀

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Robinson cruso said:

முதலில் ஒற்றுமை தலைமைகளில் இருந்து தொடங்க வேண்டும். மக்களே ஒன்றிணையுங்கள் , தியாகம் செய்யுங்கள் எண்டு கூப்பாடு போடுவதில் பிரயோசனம் இல்லை. மக்கள் இப்போது விழிப்பாக இருக்கிறார்கள்.

இன்னும் ஐந்து வருடங்களில் இதையும்விட தீர்க்கமான முடிவை எடுப்பார்கள். சில வேளைகளில் மாகாண சபை தேர்தல் நடந்தால் அதிலும் அதன் தாக்கத்தை பார்க்கலாம்.

கனவு காண்பது அவரவர் உரிமை.

மக்கள் அங்கு விழிப்பாகவும் இல்லை தெளிவாகவும் இல்லை. போதையூட்டப்பட்டு இருக்கிறார்கள். சோத்துக்கு வழியில்லாமல் ஆக்கப்பட்டு இருக்கிறார்கள். புலம்பெயர் தமிழர்களின் காசின்றேல்... சிங்களவன் பிச்சையும் போடான்.. தமிழர்களுக்கு.. என்பதையும் தெரிந்து கொண்டுதான் இருக்கின்றனர். 

ஆயுத சனநாய் அக.. ஒட்டுக்குழு ஒரு காலத்தில் 11 எம் பிக்களை வைச்சிருந்ததும்.. யு என் பி  வடக்கில் வென்றதும்.. சந்திரிக்கா அம்மையாரை பொங்கல் வைச்சு கொண்டாடி வரவேற்றதும்.. இதே சனம் தான். இது நடந்தது போர் காலத்தில் தான். சிங்கள பெளத்த அரச அடிவருடிகளிடம்... மாநகர சபைகளும்.. உள்ளூராட்சி சபைகளும் ஒருதலைப்பட்சமாக கையளிக்கப்பட்ட வரலாறுகளையும் கண்டு வந்துவிட்டோம். 

நீங்கள் காலம் கடந்து அபிவிருத்தி வகுப்பெடுப்பது.. மக்களில் முட்டாள்களை ஏமாற்றலாம்.. என்பதற்கு ஒட்டுக்குழு தலைவர் புலம்பெயர் தமிழ் மக்களின் முதலீட்டுகளுக்கு முதலைக் கண்ணீர் வடிப்பதில் தெரிகிறது.

தமிழனுக்கு ஒரு நாடு இல்லை. இதில்.. தாயகத்தில் முதலீடு செய்ய வரட்டாம். யாற்ற தாயத்தில்.. சிங்கள இராணுவ ஆக்கிரமிப்பு தாயகத்தில்.. சிங்கள பெளத்த மேலாதிக்க ஒட்டுக்குழு அரசியலின் கீழ் ஒரு தமிழனும்.. உருப்படியான முதலீட்டுக்குத் தயார் இல்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Kapithan said:

எல்லாவற்றையும் யூகித்துக்கொள்ளுங்கள் என்றா சொல்கிறீர்கள்

எனக்கு கொஞ்சமாவது மூளை வேலை செய்வதால் யூகிக்கும் வேலைக்கெல்லாம் போகமாட்டேன். அதனால் இதை பொருத்தமானவர்களிடம் கூறுங்கள். 😀

உங்களுக்கே சமர்ப்பணம் 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, satan said:

எனக்கு கொஞ்சமாவது மூளை வேலை செய்வதால் யூகிக்கும் வேலைக்கெல்லாம் போகமாட்டேன். அதனால் இதை பொருத்தமானவர்களிடம் கூறுங்கள். 😀

உங்களுக்கே சமர்ப்பணம் 

உந்த வேலையெல்லாம் நான் பார்க்கிறதில்லை சாத்தான். 😂😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்க்காலில் சத்தியப்பிரமாணம் செய்தது த.தே.ம.முன்னணி.!

1597471649_Munnai.jpg

நாடாளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ள இலங்கை தமிழ்க் காங்கிரஸ் கட்சி (த.தே.ம.முன்னணி) உறுப்பினர்கள் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் இன்று முள்ளிவாக்காலில் சுடரேற்றி வணக்கம் செலுத்தியுள்ளனர்.

பதவி ஏற்பு நிகழ்வினை முள்ளிவாய்க்காலில் நிகழ்த்துவதாக அறிவித்திருந்த அவர்கள் இன்று ஆதரவாளர்களுடன் முள்ளிவாய்க்கால் சென்றிருந்தனர்.

இந்நிலையில் சற்று முன்னர் முள்ளிவாய்க்காவில் உள்ள சுடர் ஏற்றும் தூபியில் சுடரேற்றி வணக்கம் செலுத்தியுள்ளனர்.

அதன் பின்னர் சத்தியப்பிரமாணமும் இடம்பெற்றது.

http://aruvi.com/article/tam/2020/08/15/15602/

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்க்காலில் படையெடுத்துள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர்

தமிழ் தேசிய மக்கள் முன்னணியிலிருந்து பாராளுமன்றுக்கு தெரிவாகிய பாராளுமன்ற உறுப்பினர்களின் பாராளுமன்ற அரசியல்  பயணம் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நடந்த மண்ணிலிருந்து இன்றையதினம் ஆரம்பமாகவுள்ளது.

இந்நிலையில் தற்போது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் திடலில் நூற்றுக்கணக்கான ஆதரவாளர்கள் , பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ,செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட முன்னணியின்  அரசியல் தலைவர்கள்  என தற்போது ஒன்றுகூடியுள்ளனர் .

IMG_4742.jpg

IMG_4731.jpg

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு வருகை தந்த மக்கள் கூட்டத்தை விட அதிகளவான மக்கள் பிற பிரதேசங்களிலிருந்து பேருந்துகளில் அழைத்து வரப்பட்டுள்ளதை அவதானிக்க முடிந்தது.

IMG_4741.jpg

IMG_4738.jpg

IMG_4739.jpg
 
https://www.virakesari.lk/article/88084

On 14/8/2020 at 11:14, nedukkalapoovan said:

கனவு காண்பது அவரவர் உரிமை.

மக்கள் அங்கு விழிப்பாகவும் இல்லை தெளிவாகவும் இல்லை. போதையூட்டப்பட்டு இருக்கிறார்கள். சோத்துக்கு வழியில்லாமல் ஆக்கப்பட்டு இருக்கிறார்கள். புலம்பெயர் தமிழர்களின் காசின்றேல்... சிங்களவன் பிச்சையும் போடான்.. தமிழர்களுக்கு.. என்பதையும் தெரிந்து கொண்டுதான் இருக்கின்றனர். 

கதை எண்டால் பெரிசாகத்தான் இருக்குது. ஆனால் நடைமுறையில் அப்படி ஒன்றும் நடப்பதாக தெரியவில்லை. பாவம் அப்படியாவது எழுதி மன ஆறுதல் அடையுங்கோ. ஏன் சுந்திரனைப்பற்றி எழுதவில்லை. நல்ல கனவு

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Robinson cruso said:

கதை எண்டால் பெரிசாகத்தான் இருக்குது. ஆனால் நடைமுறையில் அப்படி ஒன்றும் நடப்பதாக தெரியவில்லை. பாவம் அப்படியாவது எழுதி மன ஆறுதல் அடையுங்கோ. ஏன் சுந்திரனைப்பற்றி எழுதவில்லை. நல்ல கனவு

எமக்காக மடிந்த மக்களை வீரர்களை வணங்கி  மதித்துச் செல்வது எமது தலைமுறைக் கடமை. அவர்கள் சுமந்த கனவை நனவாக்குவது எமது உரிமை. அதைக் கூட எதிரிக்காக உதாசீனம் செய்யும் ஆட்கள் தான் உங்களுக்கு பருத்தித்துறையில் துறைமுகமும்..  கொழும்பில்.. அதிகாரமும் தரப்போகினம். நீங்கள் காணும் கனவை விட எங்கள் கனவு எமது உரிமைக்கானது... எவ்வளவோ மேல்.

ஒரு பார்சல் சோத்துக்கு.. கொள்ளை அடிக்க..  உரியவனை காட்டிக்கொடுத்து கொன்ற கூட்டத்தை விட சொந்த மண்ணைக் காப்பாற்றப் போராடி இறந்தவர்கள்.. கோடி மடங்கு மேல். 

Edited by nedukkalapoovan

Just now, nedukkalapoovan said:

எமக்காக மடிந்த மக்களை வீரர்களை வணக்கி  மதித்துச் செல்வது எமது தலைமுறைக் கடமை. அதைக் கூட எதிரிக்காக உதாசீனம் செய்யும் ஆட்கள் தான் உங்களுக்கு பருத்தித்துறையில் துறைமுகமும்..  கொழும்பில்.. அதிகாரமும் தரப்போகினம். நீங்கள் காணும் கனவை விட எங்கள் கனவு எமது உரிமைக்கானது. 

வாழ்த்தி வணங்கி செல்வதில் பிரச்சினை இல்லை. சத்தியப்பிரமாணம், உறுதிப்பிரமணம் எண்டு மக்களை ஏமாத்தக்கூடாது. பின்னர் சிங்களத்திடம் உறுதிப்பிரமணம். நல்ல இருக்குது உங்கட தமிழ் தேசியம்.

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Robinson cruso said:

வாழ்த்தி வணங்கி செல்வதில் பிரச்சினை இல்லை. சத்தியப்பிரமாணம், உறுதிப்பிரமணம் எண்டு மக்களை ஏமாத்தக்கூடாது. பின்னர் சிங்களத்திடம் உறுதிப்பிரமணம். நல்ல இருக்குது உங்கட தமிழ் தேசியம்.

தமிழ் தேசியம் எங்களது கிடையாது. அது எமது பிறப்பியல் தேசியம். அது பிறப்பால் வந்திருக்கனும். வராதததன் விளைவே.. சிங்களவனின் கூலிக்காசுக்கும்.. கொள்ளைக் காசுக்கும் சிங்கி அடிக்கும் டக்கி கூட்டங்கள் பெருகக் காரணம். அவை தான் எம் மக்களின் மண்ணின் இந்த நிலைக்கு காரணமும் ஆகும். நிச்சயம் எம் மண் மக்கள் டக்கி கும்பலின் சுயநல தேவைகளுக்கு எதிரிகளுக்காக பயன்படுத்தடும் நிலை முழுமையாக மாற வேண்டும். அவர்கள் செய்வது அபிவிருத்தி அரசியல் அல்ல.. கடந்து 30 ஆண்டுகளாகச் செய்வது காட்டிக்கொடுப்பு.. அபகரிப்பு அரசியல் மட்டுமே. 

இப்படி சொல்லி சொல்லியே தமிழனை பிச்சைக்காரனாக மாற்றிய தேசியம்தானே உங்களது பிறப்போடு வந்த அந்த மண்ணாங்கட்டி தேசியம். தேசியம் பேசினவன் எல்லாம் பணக்காரனாகவும், வசதி வைப்புக்களுடனும் வாழ்கிறான். அதை நம்பி பின்னல் போனவன் எல்லாம் நாடு ரோட்டில்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Robinson cruso said:

இது  100% மும் உண்மை. 

☹️☹️

👍 நடந்த உண்மையை மிகச் சரியாக சொன்னீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.