Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடைபெற்றார் தல தோனி.. சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

விடைபெற்றார் தல தோனி.. சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு.. ஷாக்கிங் அறிவிப்பு!
 

இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரர் தோனி ஏற்கனவே டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துவிட்டார். அதன்பின் டி20மற்றும் ஒருநாள் போட்டிகளில் மட்டும் தோனி தொடர்ந்து விளையாடி வந்தார்.

கடைசியாக தோனி விளையாடிய ஒருநாள் போட்டி கடந்த வருடம் நடந்த உலகக் கோப்பை செமி பைனல் போட்டியாகும். இந்தியா கடும் போராட்டத்திற்கு பின் நியூசிலாந்துக்கு எதிரான இந்த போட்டியில் தோல்வி அடைந்தது.

கடைசி வரை

கடைசி வரை போராடிய தோனி, இந்த போட்டியில் ரன் அவுட் ஆனார். இதுதான் இவர் கடைசியாக விளையாடிய போட்டியாகும். அதன்பின் இந்திய அணியில் இருந்து தோனி எப்போது வேண்டுமானாலும் ஓய்வு பெறுவார் என்று செய்திகள் வந்தது. அவர் உலகக் கோப்பை தொடர் முடிந்ததுமே ஓய்வு பெறுவார் என்று செய்திகள் முதலில் வந்தது.

ஆனால் இல்லை

ஆனால் தோனி இன்னும் ஓய்வு குறித்து எதுவும் அறிவிக்காமல் காலம் தாழ்த்தி வந்தார். ஆனால் அதற்குள் கொரோனா காரணமாக இந்திய அணி விளையாட வேண்டிய போட்டிகள் எல்லாம் ரத்து செய்யப்பட்டது. கொரோனா லாக்டவுன் காரணமாக 6 மாதமாக எந்த விதமான கிரிக்கெட் போட்டிகளும் நடக்கவில்லை. அவர் இன்னும் சில நாட்கள் தொடர்ந்து அணிக்காக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

உலகக் கோப்பை

உலகக் கோப்பை தொடரில் பேட்டிங்கில் அவ்வப்போது தோனி சிரமப்பட்டார். மேலும் சில தடவை கீப்பிங்கிலும் தவறுகளை செய்தார். அதேபோல் டிஆர்எஸ் எடுப்பதிலும் தோனி சில நேரங்களில் தவறுகளை செய்தார். சில போட்டியில் இவரால் களத்தில் நீண்ட நேரம் நிற்க முடியவில்லை என்று பாதியில் வெளியேறி ஓய்வு எடுத்துவிட்டு மீண்டும் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐபிஎல் எப்படி

இதனால் தோனி விரைவில் ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் வீரர் தோனி சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார். இந்திய கிரிக்கெட் வீரர்கள் தற்போது ஐபிஎல் போட்டிக்காக தயார் ஆகி வருகிறது. அடுத்த மாதம் ஐபிஎல் போட்டிகள் நடக்க உள்ளது. இந்த நிலையில் தோனி சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார். இவர் ஐபிஎல் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவார் என்று கூறப்படுகிறது.

 

https://tamil.oneindia.com/news/delhi/mahendra-singh-dhoni-announces-retirement-from-international-cricket-394621.html

Edited by முதல்வன்

  • கருத்துக்கள உறவுகள்

ஆளாளுக்கு ருவிட் போட்டு கதற விடுகினம் ..

22050175_308792662927894_280631486680790

ஹே .. யு நோ தோனி.. ?

நம்மட சொந்த ஊரே அத்தானுங்..☺️..😊

  • கருத்துக்கள உறவுகள்

மகேந்திர சிங் தோனி குறித்த 10 சுவாரஸ்ய தகவல்கள்

15 ஆகஸ்ட் 2020
மகேந்திர சிங் தோனி

Jan Kruger-ICC / Getty

டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்ற பின்புகூட இந்திய கிரிக்கெட்டின் வெற்றிகரமாக வீரராக திகழ்ந்தவர் மகேந்திர சிங் தோனி. தற்போது சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்றுள்ளார்.

தோனி குறித்து சில சுவாரஸ்ய தகவல்களை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.

1. அனைத்து ஐசிசி கோப்பைகளையும் வென்ற ஒரே கேப்டன் மகேந்திர சிங் தோனி. தோனியின் தலைமையின் கீழ் இந்திய அணி, 2007ல் ஐசிசி உலக டி20 போட்டி, 2011ல் கிரிக்கெட் உலகக் கோப்பை மற்றும் 2013ல் ஐசிசி சேம்பியன்ஸ் கோப்பை ஆகிய 3 போட்டிகளிலும் இந்தியா வென்றது.

2. தோனிக்கு சிறு வயதில் முதலில் பிடித்தமான விளையாட்டு கால்பந்து. அவரது பள்ளி குழுவில் தோனி கோல் கீப்பராக இருந்தார். சென்னையின் எஃப்சி கால்பந்து அணியின் உரிமையாளர் தோனிதான். கால்பந்துக்கு பிறகு அவருக்கு பிடித்தமான விளையாட்டு பேட்மிண்டன்

3. விளையாட்டை தாண்டி மோட்டர் ரேசிங் அவருக்கு பிடித்தமான ஒன்று. மஹி ரேசிங் குழு என்ற குழு ஒன்றை அவர் சொந்தமாக வாங்கியுள்ளார்.

4. அவரது முடி அலங்காரத்திற்கு மிகவும் பெயர் போனவர் தோனி. ஒரு காலத்தில் நீண்ட முடி என்பது அவரது அடையாளமாக இருந்தது. பின்னர் அவர் பல முறை அவரது முடி அலங்காரத்தை மாற்றினார். பாலிவுட் நடிகர் ஜான் அபிரகாமின் தலைமுடி தோனிக்கு மிகவும் பிடிக்கும் என்று உங்களுக்கு தெரியுமா

தோனி

AFP

5. 2011ல் இந்திய ராணுவத்தில் லெஃப்டினன்ட் கர்னலாக கெளரவிக்கப்பட்டார். இந்திய ராணுவத்தில் சேருவது அவரது சிறுவயது கனவு என்று தோனி பலமுறை கூறியிருக்கிறார்.

6. ஆக்ராவின் இந்திய ராணுவத்தின் பாரா ரெஜிமெண்டில் இருந்து para jumps நடத்திய முதல் விளையாட்டு நபர் என்ற பெருமையை பெற்றவர் தோனி. அதற்கான பயிற்சி எடுத்துக் கொண்ட அவர், 15,000 அடி உயரத்தில் இருந்து 5 முறை குதித்தார். 

மோட்டர் பைக் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர் தோனி

MS DHONI / INSTAGRAM

7. மோட்டர் பைக் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர் தோனி. இரண்டு டஜன் நவீன மோட்டர் பைக்குகளை அவர் வைத்திருக்கிறார். அதோடு கார்களும் தோனிக்கு மிகவும் பிடிக்கும். ஹம்மர் போன்ற பல மிக விலை உயர்ந்த கார்கள் அவரிடம் உள்ளது.

8. பல பிரபல நடிகைகளோடு திருமணம் நடக்கப்போவதாக தோனி குறித்து பல செய்திகள் வெளியானது ஆனால் 2010ஆம் ஆண்டு டெஹ்ராடுனின் சாக்ஷி ராவத்தை அவர் திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஜிவா என்ற பெண் குழுந்தை உள்ளது.

9. முதலில் இந்திய ரயில்வேயில் டிக்கெட் கலெக்டராக தோனிக்கு வேலை கிடைத்தது. அதன்பிறகு அவர் ஏர் இந்தியா நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்தார்.

10. உலகளவில் மிகவும் அதிக ஊதியம் பெற்ற கிரிக்கெட் வீரர் தோனி. டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் முன் அவரது சராசரி ஆண்டு வருமானம் 150ல் இருந்து 190 கோடியாக இருந்தது. தற்போதும் இந்த ஊதியத்தில் பெரும் மாற்றம் இல்லை.

 

https://www.bbc.com/tamil/sport-53794251

 

 

  • கருத்துக்கள உறவுகள்

டோனியின் முத‌ல் விளையாட்டிலும் ர‌ன் அவுட் , க‌ட‌சி விளையாட்டிலும் ர‌ன் அவுட் , இந்தியா அணியின் சிற‌ந்த‌ க‌ப்ப‌ட‌ன் , டோனிய‌ மாதிரி  ராசியான‌ க‌ப்ட‌ன் இனி இந்தியாவுக்கு கிடைக்காது , கோலி க‌ப்ட‌னா இருக்கும் வ‌ரை இந்தியா உல‌க‌ கோப்பை தூக்காது ஹா ஹா 😁😀

  • கருத்துக்கள உறவுகள்

என்ன இன்னும் வெள்ளன ஓய்வு பெற்றிருந்தால் இன்னும் கொளரவமாக இருந்திருக்கும்.

எல்லோரும் MS தோனி ஓய்வு பற்றி வருந்துகிறோம். அதிலும் பெரிய கொடுமை என்னவென்றால் இரு உலக கோப்பைகளை வென்ற நாயகனுக்கு ஒரு வழியனுப்பு போட்டி கூட இல்லாமல் ஓய்வு பெறுவது தான். இதற்கு பின்னால் உள்ள காரணம் மிக அதிர்ச்சிகரமானது.

2019 ஜூலை மாதம் நடந்த உலகக்கோப்பை அரையிறுதி போட்டி தான் தோனி விளையாடிய கடைசி ஒருநாள் போட்டி. அதற்கு பிறகு எந்த காரணமும் இன்றி தோனி அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்டார். ஒரு போட்டியில் கூட ஆட வாய்ப்பு அளிக்கப்படவில்லை.

ஜூலை - 2019உலகக்கோப்பை முடியும் தருவாயில் தோனியின் மாநிலமான ஜார்கண்டில் சட்டசபை தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்க தொடங்கியது. ஆளும் கட்சியான #பாஜக விற்கு மக்களிடம் பெரும் அதிருப்தி நிலவியது. #பாஜக'விற்கு வெற்றி வாய்ப்பு துளியும் இல்லை என்று கள நிலவரம் தெளிவாக உணர்த்தியது.

அந்த நேரத்தில் பாஜக'விற்கு தேவைப்பட்டதெல்லாம் ஒரு பிரபல முகம். ஆம்! இளைஞர்களில் இருந்து வெகுஜன மக்கள் வரை அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய ஒரு பிரபல முகம் தேவைப்பட்டது. #பாஜக உடனடியாக அணுகியது ஜார்க்கண்ட் மண்ணின் மைந்தன் தோனியை தான். பலமுறை கட்டாயப்படுத்தியும், ஆசை வார்த்தைகள் கூறியும் M.S.தோனியை தேர்தல் பிரச்சாரத்திற்கு அழைத்தது பாஜக. தோனி விடாப்பிடியாக மறுத்துவிட்டார். இதெல்லாம் பெரும்பாலான தேசிய ஊடகங்களிலும் வந்த ஆதாரப்பூர்வமான செய்திகள். சங்கிகள் எழுதுவது போல் கற்பனைக் கதை அல்ல. 

2019 அக்டோபர் மாதம் BCCI செயலாளராக #அமித்ஷாவின் மகன் #ஜெய்ஷாவை நியமித்து அவர்மூலம் மீண்டும் தோனிக்கு மிரட்டல் விடப்பட்டது. எந்த மிரட்டலுக்கு தோனி பணிவதாக இல்லை. தன்னுடைய திறமையால் கிடைத்த பிரபல்யத்தை யாருடைய அரசியல் ஆதாயத்திற்காகவும் கொடுக்க MSD தயாரில்லை.

இறுதியில் 2019 டிசம்பர் மாதம் நடந்த ஜார்கண்ட் தேர்தலில் முக்தி மோட்சா கூட்டணியிடம் பாஜக தோற்றுபோய் மண்ணை கவ்வியது. அவர்களின் கோபம் எல்லாம் தோனியின் மேல் திரும்பியது. BCCI தரப்பில் தோனியிடம் தெளிவாக சொல்லப்பட்டது இனிமேல் வழியனுப்பு விழாவிற்கு கூட எந்த போட்டியிலும் நீ தேர்ந்தெடுக்கப்பட மாட்டாய் என்று. 2020 ஆம் ஆண்டிக்கான BCCI ஒப்பந்த பட்டியலில் இருந்து செயலாளர் #ஜெய்ஷாவால் தோனி தூக்கி ஏறியப்பட்டார். இவ்வளவு பெரிய சீனியர் வீரருக்கு கிரேட்-A வீரருக்கு கண்டராக்ட் கூட வழங்கப்படாமல் நீக்கப்பட்டது BCCI வரலாற்றிலேயே தோனி ஒருவருக்கு தான். 

இந்தியாவே கொண்டாடும் ஒரு வீரன், இரண்டு உலக கோப்பைகளை வென்றெடுத்தவன், ஒப்பந்தம் நிராகரிக்கப்பட்டு, வழியனுப்பு போட்டி, வழியனுப்பு விழா  கூட இல்லாமல் ஓய்வு பெறுவதற்கு பின்னால் இருக்கும் காரணம் இது தான். எந்த நாடும் தன்னுடைய வெற்றி வீரனுக்கு செய்யாத துரோகம் இழைக்கப்பட்டது  MSDக்கு.

Anyway... தோனிக்கான அங்கீகாரம் மக்களிடம் என்றுமே இருக்கும். கிரிக்கெட் ரசிகர்கள் நெஞ்சங்களில் என்றென்றும் தோனி வாழ்வான். சென்று வா தலைவா! 💙

 

Fb

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, சுவைப்பிரியன் said:

என்ன இன்னும் வெள்ளன ஓய்வு பெற்றிருந்தால் இன்னும் கொளரவமாக இருந்திருக்கும்.

இல‌ங்கை வீர‌ர்க‌ளுட‌ன் ஒப்பிடும் போது டோனி சீக்கிர‌மே ஓய்வை அறிவித்து உள்ளார் , 

எனக்கு தோனியை பெரிதாக பிடிக்காது நான் யுவராஜை நேசிப்பவன்

ஆனா இந்தியாவில் மிகவும் பின் தங்கிய குடும்பத்தில் இருந்து இன்னும் சொல்ல போனால் பின் தங்கிய மாநிலத்தில் இருந்து உச்சத்தை தொட்ட மனிதன் எனலாம். ஜார்கண்ட், பீகார் மாநிலத்தில் இருந்து இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பெற்றவர்கள்.

வரலாற்றில் உச்சத் தொட்ட மனிதன் யாருமே இல்லை என சொல்லலாம்

Born to lead னு சொல்லுவாங்கல்ல அந்த வார்த்தை எங்க இருந்து உதிச்சதுனு தெரியல ஆனா அந்த வார்த்தை தோனிக்காவே  கண்டுபிடிக்கப்பட்டதுனு சொல்லலாம்.

2005ம் ஆண்டு தோனி பாக்கிஸ்தான்க்கு எதிரான போட்டியில் அடித்த 148 ரன்கள்,

இலங்கையுடன் அடித்த 183 ரன்கள் அவரை புகழின் உச்சத்தில் அமர்த்தியது .

எந்த ரயில்வே நிர்வாகம் வேலையைவிட்டுத் தூக்கியதோ  அந்த நிர்வாகம் தோனியின் வீட்டு வாசலில் வந்து கைகட்டி நின்றது. 'நீங்கள் ரயில்வே வேலையில் தொடர வேண்டும் அது நாட்டுக்கே  கௌரவம். பணிக்கு வரத் தேவையே இல்லை. எந்த

நிபந்தனையும் இல்லை! தோனி சிறுபுன்னகையுடன் அவர்களை  திருப்பி அனுப்பிவைத்தார்.

2007ம் ஆண்டு உலகக்கோப்பை தோல்வி இந்திய அணியையும் ரசிகர்களையும் உலுக்கி விட்டது

ராஞ்சியில் கட்டிக்கொண்டிருந்த புதிய வீடு,ஜார்கண்ட் முக்தி மோட்சாவினரின் தாக்குதலுக்கு உள்ளானது.

களங்கங்களால் தோனி கலங்கவில்லை இனிமே தான் நாம் சாதிக்க போகிறோம் என்று இளம் படையை அழைத்து சென்றார் .

சச்சின் தோனி பெயரை டி-20 உலகக் கோப்பை அணிக்குக் கேப்டனாக பரிந்துரைக்க இந்திய அணியின் பெயர்  சாதனை புத்தகங்களில்  இடம் பெயர ஆரம்பித்தது .

2007 T20 உலககோப்பை :
உலகக்கோப்பை  பைனல் ஓவர் ஒரு தலைசிறந்ததலைவனை இந்தியாவிற்கு அளித்தது . ஜோகிந்தரை அழைத்த தோனி தோத்தோம்னா  நான் பொறுப்பு ஏத்துக்கிறேன்  நீ ரிலாக்ஸா பவுலிங் போடு நம்மால் முடியும் என்று  பந்தை கையில் கொடுத்தார் முதல் 2 பந்துகளில் 7 ரன் வந்துவிட வெற்றிக்கு தேவை  6 ரன்கள் என இருக்க தோனி மீண்டும் ஜோகிந்திரிடம் வந்து பந்தை

அவுட் சைடு ஆப் ஸ்டம்ப்பை பந்தை வீச சொல்ல அந்த அதிசயம் நடந்தது .The perfect trap delivery laid in last over என்று இன்றுவரை கிரிக்கெட் பண்டிட்களால் அழைக்கப்படுகிறது .

2011 உலககோப்பை :

முயற்சி என்பது முடிந்தவரை செய்வது அல்ல எடுத்த காரியம் முடியும் வரை செய்வது.
அதை 2011 பைனலில்சரியாக செய்தார் தோனி . 114 ரன்களுக்கு 3 விக்கெட்கள் போய்விட அடுத்து யுவராஜ் வருவார் என்று அனைவரும் நினைத்து கொண்டு இருக்க யாரும் எதிர்பாராவிதமாக மகேந்திர சிங் தோனி உள்ளே வந்தார் . ஸ்பின்னர்கள் பவுலிங் போட்டுகொண்டு இருக்கும்போது Left /Right hand காம்பினேஷன் சரியாக இருக்கும் என்று

யுவிக்கு முன்னால் களம் கண்டார் .  எடுத்த காரியத்தை காம்பிர் உடன்  சேர்ந்து கச்சிதமாக செய்தார். அவர் அடித்த வின்னிங் ஷாட் சிக்ஸ் தான். இந்திய கிரிக்கெட்டில் சாதிக்க துடிக்கும் இளைய சமுதாயத்துக்கு ஒரு driving force. சாகும் தருவாயில் கூட நான் கடைசியா பாக்க ஆசைபடுவது தோனி அடித்த

சிக்ஸ் தான் என்று கவாஸ்கரையே சொல்ல வைத்தது .

 “Dhoni finishes off in style. A magnificent strike into the crowd! India lift the World Cup after 28 years! இப்பகூட இந்த கமெண்டரியோட அந்த வீடீயோவை பாத்தா ஒவ்வொரு இந்தியனுக்கும் பெருசா சாதிச்ச சந்தோசத்தை அடிமனசுல இருந்து உணர முடியும்.

2013 சாம்பியன்ஸ் டிராபி :

பைனல்ல டாஸ்ல இந்தியா தோக்க சோதனை ஆரம்பமாச்சு இந்தியா கொடுத்த டார்கெட் வெறும் 129 ரன்கள். பீல்டிங் செய்ய இறங்கிறதுக்கு முன்னாடி வீரர்களுக்கு தோனி சொன்ன அறிவுரை "God is not coming to save us" நம்ம தான் போராடி ஜெயிக்கனுமுனு பேசி உள்ள அழைத்து சென்றார்...

 

2007கு ஜோகிந்தர் ஷர்மானா 2013கு இஷாந்த் ஷர்மா. இஷாந்த் சர்மா ஏற்கனவே 15வது ஓவரில் ரன்களை வாரி இறைக்க அவர் மீது நம்பிக்கை வைத்து மீண்டும் 18வது ஓவரை அவர் கைகளில் கொடுத்து  அதிசயத்தை நிகழ வைத்தார். இந்தியா வெறும் 3ரன்களுக்கு 4விக்கெட்கள் எடுத்து இறுதியில்  5 ரன்கள் வித்தியாசத்தில்

வெற்றி பெற்றது.

தோனியின் தனித்துவங்கள் :

9 விக்கெட் போயிருக்கும் கூட டெய்ல்எண்டர் தான் நிப்பான் தோனி கொஞ்சம்கூட பொருட்படுத்தாம லாங்ல அடிச்சுட்டு ஓடாம நிப்பார் . அப்படி அவர்  நிக்கும்போதெல்லாம் டிவி கேமரா எதிர் டீம் கேப்டன தான் focus பண்ணும். அவனுக முகத்துல மரணபயம் இருக்கும்

அந்த பயம்தான் தோனி வெதச்சது.

2013 கடைசி ஓவர்ல இலங்கை கூட சேஸ் பண்ணப்ப இயன் பிஷப் பின்வருமாறு சொன்னாரு
"If 15 runs are needed off the last over, pressure is on the bowler… not on MSDhoni – Ian Bishop

DRS Method a  - DHONI REVIEW SYSTEMனு பேச வச்சவர் அந்த அளவுக்கு Accuracy

prediction தோனியோடது

ஐபில்ல பொல்லார்ட்க்கு straight mid-off and straight long-off combo field set பண்ணது எல்லாம் யாரும் கனவுலயும் நினைச்சு பாக்காதது  Sourav Ganguly once remarked that “once Dhoni retires, he should write a book on field placements.” .

இஷாந்த் சர்மாவை லார்ட்ஸ்ல

தொடர்ந்து short பால் போட வைச்சு இங்கிலாந்து கூட 7 விக்கெட்  எடுத்தது எல்லாம் rare piece செட்டியார் மொமெண்ட்கள் .

வெற்றியை பகிர்வதும் தோல்வியை தன் தோளில் மட்டும் சுமப்பது மட்டுமே ஒரு  தலைவனின் சிறந்த தகுதி. அதை தான் கேப்டனாக இருந்த காலம் முழுவதும் செய்தவர் தோனி.

உதிக்கும் போது மறையும் போதும் ரசிக்கும் உலகம்:
உச்சிக்கு வந்தால் தீட்டிதிர்க்கும் சூரியனை மட்டும் அல்ல மனிதனின் வளர்ச்சியையும் தான்.
தோனி மட்டும் என்ன விதி விலக்கா அவரை வசை பாடாத  வாய்கள் இல்லை  ஆனால் அவர் எக்காலத்திலும் அதை  பொருட்படுத்தியதும் இல்லை.

நன்றி ட்விட்டர் -@aram_GJ

 

 

 

 

 

 

மிகவும் மிகைபடுத்தப்பட்ட ஒரு வீரர், அதாவது overrated. தன்னைத்தானே விளம்பரபடுத்துவதில் கில்லாடி.சுய விளம்பரப்பிரியர்.எது செய்தாலும் அதை சமூக. வலைத்தளங்களில் போட்டு விடுவார். இவரை விட எத்தனையோ மடங்கு திறமை வாய்ந்த டெண்டூல்க்கர்,டிராவிட்,லக்‌ஷ்மன், கங்குலி போன்றவர்கள் இவரை போல் சுய தம்பட்டம் அடிப்பவர்கள் இல்லை. இவர் இந்தியாவின் திறமையான தலைவர் என்றெல்லம் சொல்வது சரியில்லை, இந்தியாவின் தற்போதைய மேன்மை நிலைக்கு வித்திட்டவர்கள் கங்குலி,John Wright,Greg Chappell போன்றோர் தான். எவனோ மரத்தை நட்டு தண்ணி ஊத்த இவர் அந்த நிழலில் ஓய்வெடுத்தார். இவர் டெஸ்ட் போட்டியில் அடித்த சதங்கள் 6 மட்டுமே. இது ஒன்றே போதும் இவரது திறமை என்ன என்று எடை போட. 

இவர் மீது இன்னுமொரு குற்றச்சாட்டு இருக்கு தன்னை எப்போதும் இந்தியா ஒரு நாள் போட்டிகளில் வெல்லும் தருவாயில் வந்து ஏதோ தான் வென்றது போல் தன்னை finisher என்ற பெயரையும் சூட்டிக் கொண்டார். ஆனால் உண்மையான finisher அவுஸ்த்திரேலியாவின் Michael Beven என்ன இக்கட்டான நிலையில் வந்தாலும் போட்டியை அவுஸ்த்திரேலியாவுக்கு சார்பாக மாற்றி விடுவார். ஆனால் டோனியோ 50 பந்துகளில் 25 ஓட்டங்கள் பெற வேண்டிய நிலையில் வந்து அந்த பட்டத்தை தனக்கு தானே சூட்டி கொண்டார்.

On 16/8/2020 at 11:24, பையன்26 said:

டோனியின் முத‌ல் விளையாட்டிலும் ர‌ன் அவுட் , க‌ட‌சி விளையாட்டிலும் ர‌ன் அவுட் , இந்தியா அணியின் சிற‌ந்த‌ க‌ப்ப‌ட‌ன் , டோனிய‌ மாதிரி  ராசியான‌ க‌ப்ட‌ன் இனி இந்தியாவுக்கு கிடைக்காது , கோலி க‌ப்ட‌னா இருக்கும் வ‌ரை இந்தியா உல‌க‌ கோப்பை தூக்காது ஹா ஹா 😁😀

குருட்டு லக்கில் எல்லாம் வென்றவர். ஆங்கிலத்தில் சொல்வார்கள் right place at the right time.அது தான் நடந்தது.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Dash said:

மிகவும் மிகைபடுத்தப்பட்ட ஒரு வீரர், அதாவது overrated. தன்னைத்தானே விளம்பரபடுத்துவதில் கில்லாடி.சுய விளம்பரப்பிரியர்.எது செய்தாலும் அதை சமூக. வலைத்தளங்களில் போட்டு விடுவார். இவரை விட எத்தனையோ மடங்கு திறமை வாய்ந்த டெண்டூல்க்கர்,டிராவிட்,லக்‌ஷ்மன், கங்குலி போன்றவர்கள் இவரை போல் சுய தம்பட்டம் அடிப்பவர்கள் இல்லை. இவர் இந்தியாவின் திறமையான தலைவர் என்றெல்லம் சொல்வது சரியில்லை, இந்தியாவின் தற்போதைய மேன்மை நிலைக்கு வித்திட்டவர்கள் கங்குலி,John Wright,Greg Chappell போன்றோர் தான். எவனோ மரத்தை நட்டு தண்ணி ஊத்த இவர் அந்த நிழலில் ஓய்வெடுத்தார். இவர் டெஸ்ட் போட்டியில் அடித்த சதங்கள் 6 மட்டுமே. இது ஒன்றே போதும் இவரது திறமை என்ன என்று எடை போட. 

இவர் மீது இன்னுமொரு குற்றச்சாட்டு இருக்கு தன்னை எப்போதும் இந்தியா ஒரு நாள் போட்டிகளில் வெல்லும் தருவாயில் வந்து ஏதோ தான் வென்றது போல் தன்னை finisher என்ற பெயரையும் சூட்டிக் கொண்டார். ஆனால் உண்மையான finisher அவுஸ்த்திரேலியாவின் Michael Beven என்ன இக்கட்டான நிலையில் வந்தாலும் போட்டியை அவுஸ்த்திரேலியாவுக்கு சார்பாக மாற்றி விடுவார். ஆனால் டோனியோ 50 பந்துகளில் 25 ஓட்டங்கள் பெற வேண்டிய நிலையில் வந்து அந்த பட்டத்தை தனக்கு தானே சூட்டி கொண்டார்.

குருட்டு லக்கில் எல்லாம் வென்றவர். ஆங்கிலத்தில் சொல்வார்கள் right place at the right time.அது தான் நடந்தது.

ஜ‌பிஎல் கோப்பையில் இருந்து ச‌ர்வ‌தேச‌ அனைத்து கோப்பையும் டோனி தூக்கி விட்டார் , நான் பார்த்த‌ ம‌ட்டில் டோனி த‌ன்னை பெரிய‌ ஆள் போல் காட்டின‌து கிடையாது , 

த‌மிழ‌க‌த்து வீர‌ர் அஸ்வின் இந்தியா அணியில் க‌ட‌ந்த‌ கால‌ங்க‌ளில் விளையாட‌ டோனியே கார‌ன‌ம் , இதே வேறு யாராய் இருந்தா த‌மிழ‌க‌த்து வீர‌ர்க‌ளை ஓர‌ம் க‌ட்டி இருப்பின‌ம் , டோனி த‌ல‌மையில் அஸ்வின் ந‌ல்லா விளையாடினார் , எல்லாம் டோனி கொடுத்த‌ ஊக்க‌ம் 😁😀

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.