Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மீண்டும் சாணக்கியன்

Featured Replies

அஞ்ஞாதவனவாசம் முடிந்து மீண்டும் களம் ஏகும் சாணக்கியன்.

போகும் போது தடுத்தவர்களுக்கு எனது நன்றிகளையும், தடுக்காதவர்களிடம் மன்னிப்பையும் தெரிவித்துக் கொண்டு, நாளுக்கு நாள் அதர்மம் அதிகரித்துச் செல்லும் நரகத்திலிருந்து எஞ்சிய சில நாட்களை மீண்டும் உங்களோடு பகிர விழைகிறேன்.

அன்புடன்,

வாருங்கள் அன்பு நண்பர் சாணக்கியணே உங்களை மீண்டும் காண்பது மிக்க மகிழ்ச்சி

உங்கள் மீள் பிரவேசம் சிறப்பாக அமையட்டும்

வாருங்கள் சாணக்கியன் மீண்டும் உங்கள் உறைப்பான கருத்துக்களை வழங்குங்கள்

அன்பான சாணக்கியா எப்படி நலமா, அறிமுக சிறையில் இருந்து முன்னாள் புலிப்பாசறை இந்நாள் 20 வது பிறப்பெடுத்து 21 ஆவதினை நோக்கி செல்வதற்காக காத்திருக்கும்......

பழையவைகள் ஒரு பாலத்தின் மேல் நின்று ஆத்தில் எறிந்த குப்பை போன்றது. அது போனது போனது தான் ஆக்வே எனி நடப்பவைதான் நிஜம் இல்லையா.... :icon_idea:

சாணக்கியனின் மீண்ட வரவால் கருத்துக்களமே மகிழ்ச்சியடைகிறது.

வணக்கம் சாணக்கியன்! நல்வரவு! :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

துணிக.. துணிந்த பின் துணிந்து தருக..! மீள் வருகைக்கு நன்றிகள்..! :P

  • தொடங்கியவர்

வாருங்கள் அன்பு நண்பர் சாணக்கியணே உங்களை மீண்டும் காண்பது மிக்க மகிழ்ச்சி

உங்கள் மீள் பிரவேசம் சிறப்பாக அமையட்டும்

நன்றி வானவில்! உங்கள் அனைவருடனும் கலந்து கொள்வதில் எனக்கும் மிக்க மகிழ்ச்சியே!

வாருங்கள் சாணக்கியன் மீண்டும் உங்கள் உறைப்பான கருத்துக்களை வழங்குங்கள்

நன்றி ஈழவன்! மீண்ட என் பயணம் அமைதியானதாக அமைய வேண்டும் என்பதே எனது வேணவா!

அன்பான சாணக்கியா எப்படி நலமா, அறிமுக சிறையில் இருந்து முன்னாள் புலிப்பாசறை இந்நாள் 20 வது பிறப்பெடுத்து 21 ஆவதினை நோக்கி செல்வதற்காக காத்திருக்கும்......

பழையவைகள் ஒரு பாலத்தின் மேல் நின்று ஆத்தில் எறிந்த குப்பை போன்றது. அது போனது போனது தான் ஆக்வே எனி நடப்பவைதான் நிஜம் இல்லையா.... rolleyes.gif

நன்றி சேக்கிளார் சுவாமிகள், நான் நலம், உங்கள் முயற்சிக்குப் பாராட்டுகள்! "பழையவைகள் நாம் நடந்து வந்த பாதை போன்றது" என்பதே என்கருத்து!

சாணக்கியனின் மீண்ட வரவால் கருத்துக்களமே மகிழ்ச்சியடைகிறது.

நன்றி லிசான்! உங்கள் வரவேற்பு உட்சாகத்தை தருகிறது!

வணக்கம் சாணக்கியன்! நல்வரவு!

நன்றி கலைஞன், எந்திரவியல் பட்டப்படிப்பு என்ற என் நிறைவேறாக் கனவை செல்வன் தொடர் மூலம் நிறைவேற்றி வைத்தமைக்கும் என் நன்றிகள்!

துணிக.. துணிந்த பின் துணிந்து தருக..! மீள் வருகைக்கு நன்றிகள்..!

நன்றி நெடுக்காலபோவான், உயிரைத் துறக்கத் துணிவது ஒன்றே துணிவை தரும் என்ற நிலையில், துணிவென்பது இன்னமும் எட்டாக் கனியே!

Edited by சாணக்கியன்

சாணக்கியன் உங்களினை கண்ட மாத்திரத்தில் நலமா என்று கேட்டுவிட்டேனே ஒழிய வாருங்கள் என்று கூறவில்லையே என்று இப்போது கவலைப்படுகிறேன். இங்கே யாழில் நின்று உங்களுக்கு நலம் சொல்லியதாகவே நான் சத்தியமாக நினைக்கவில்லை. எனக்கே யாழ் என்றா அறிமுகபகுதிமட்டும் தான் தெரியும். மற்ற பகுதிகளினை கிளிக் பண்ணவே வசதி செய்து தரப்படவில்லை ..ஆக்வே நானும் பார்க்க எத்தனிப்பதில்லை....

இப்போது கூறுகிறேன்....யாழின் சாட்டை நீங்கள்...சும்மா லூசுத்தனமாக யாரும், எழுதினால் ரஜனியின் சண்டைக்காட்ச்சிகளுக்கு கைதட்டுவது போல....இம்முறை உங்கள் தமிழ் சொற்களினால் சுழ் என்று வலிக்க அடி கொடுங்கள்....

வாழ்த்துக்கள். வந்து உங்கள் பாஸ் போலை போடுங்கள்...( நெடுக்ஸ் உண்மையிலேயே கவலைபட்டவர் ஆக்வே அவருக்கு கொஞ்சம் சுலோவாக போடவும்...பண்டிதருக்கு கட்டாயம் பிறட்லி மாதிரி போடவும். அப்ப தான் அவர் கெல்மட்டோட வருவார் பயந்த படி.... :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் சாணக்கியா.மீண்டும் கண்டதில் மிக்க மகிழ்ச்சி.என்ன வரும் போதே பெரிய குண்டைப் போடுகிறீர்கள்?எஞ்சிய சில நாட்கள் என்றால்

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாங்கோ வாங்கோ சாணக்கியனே. சுகமா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாருங்கள் சாணக்கியன்..

  • கருத்துக்கள உறவுகள்

சாணக்கியன் அவர்களே!

சாணக்கியமாக வாங்கோ, உங்கள் வரவு நல்வரவு.

அட உங்களுக்கு உண்மையில் அப்படி ஒரு ஆசை இருந்ததா? சரி அப்ப கதையில் சின்ன மாற்றம் கொண்டுவரவேணும்... நான் விரைவில் உங்களை குடும்பத்துடன் அமெரிக்காவுக்கு அனுப்ப போவதாக கதை போகின்றது... அப்ப உங்கள் படிப்பு முடியும்வரை நீங்கள் மட்டும் கொழும்பில் இருப்பதாக கதையை கொண்டு செல்லவேண்டும்... கதையிலாவது உங்கள் படிப்பையும், வேண்டுமானால் காதலையும் வெற்றிகரமாக முடித்துவைக்கின்றேன்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மீண்டும் வணக்கம் சாணக்கியன் அவர்களே!மீண்டும் யாழை மீட்டிப்பார்க்க வந்திருக்கின்றீர்களென நினைக்கின்றேன்.உங்களப்போன்ற

அஞ்ஞாதவனவாசம் முடிந்து மீண்டும் களம் ஏகும் சாணக்கியன்.

போகும் போது தடுத்தவர்களுக்கு எனது நன்றிகளையும், தடுக்காதவர்களிடம் மன்னிப்பையும் தெரிவித்துக் கொண்டு, நாளுக்கு நாள் அதர்மம் அதிகரித்துச் செல்லும் நரகத்திலிருந்து எஞ்சிய சில நாட்களை மீண்டும் உங்களோடு பகிர விழைகிறேன்.

அன்புடன்,

அன்பு நண்பர்...

சாணக்கியா....

நான் களத்துல நொழஞ்ச காலத்துல, உங்கள பத்தி களத்தில நெறைய பேச்சு..

பலபேர் திட்டினாங்கன்னு கூட காதுல வந்து விழுந்துச்சு...

பலபேர் உங்க கருத்தால படபட - ன்னுன் பாதிக்கப்பட்டிருக்காங்கன்ன

  • தொடங்கியவர்

சாணக்கியன் உங்களினை கண்ட மாத்திரத்தில் நலமா என்று கேட்டுவிட்டேனே ஒழிய....

துயரம் வேண்டாம் நண்பரே, "காலம் ஒரு நாள் மாறும் நம் கவலைகள் யாவும் தீரும்!!!" என்ற நம்பிக்கை ஒன்றே இன்று மக்களை ஈழத்தில் வாழவைத்துக் கொண்டிருக்கிறது!

வணக்கம் சாணக்கியா.மீண்டும் கண்டதில் மிக்க மகிழ்ச்சி.என்ன வரும் போதே பெரிய குண்டைப் போடுகிறீர்கள்? எஞ்சிய சில நாட்கள் என்றால்

நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொடுமைகள் மத்தியில் வாழ்வு இன்னமும் எத்தனை நாளைக்கு என்ற கேள்வியே நம்மிடமும்!

வாங்கோ வணக்கம்

நன்றி சஜீவன்!

வணக்கம் வாங்கோ வாங்கோ சாணக்கியனே. சுகமா?

நன்றி கறுப்பி, சுகமாக இருக்கிறோம் (இன்று வரை)!

வாருங்கள் சாணக்கியன்..

நன்றி பண்டிதர், யாழில் தாங்கள் செயற்பாடுகள் குறைவடைந்து காணப்படுகிறதே?

சாணக்கியன் அவர்களே!

சாணக்கியமாக வாங்கோ, உங்கள் வரவு நல்வரவு.

நன்றி வல்வை மைந்தன், சாணக்கியனாக அன்றி சாமானியனாக வரவே நான் பிரியப்படுகிறேன்!

அட உங்களுக்கு உண்மையில் அப்படி ஒரு ஆசை இருந்ததா? சரி அப்ப கதையில் சின்ன மாற்றம் கொண்டுவரவேணும்... நான் விரைவில் உங்களை குடும்பத்துடன் அமெரிக்காவுக்கு அனுப்ப போவதாக கதை போகின்றது... அப்ப உங்கள் படிப்பு முடியும்வரை நீங்கள் மட்டும் கொழும்பில் இருப்பதாக கதையை கொண்டு செல்லவேண்டும்... கதையிலாவது உங்கள் படிப்பையும், வேண்டுமானால் காதலையும் வெற்றிகரமாக முடித்துவைக்கின்றேன்...

மாப்பு, எனக்காக கதையை மாற்ற வேண்டாம் சுவாரசியமாக கொண்டு செல்லுங்கள், காதலில் நான் ஏற்கனவே வென்றவன்தான்!

மீண்டும் வணக்கம் சாணக்கியன் அவர்களே!மீண்டும் யாழை மீட்டிப்பார்க்க வந்திருக்கின்றீர்களென நினைக்கின்றேன்.உங்களப் போன்றர்கள் யாழ்களத்திற்கு நிச்சயம் தேவை! வாருங்கள். இதயபூர்வமாக வரவேற்கின்றேன். முன்பு உங்கள் பதில் கருத்துக்களினால் உளரீதியாக பாதிக்கப்பட்டவர்களில் நானும் ஒருத்தன்.

பாதிப்பு கருத்துக்கு எதிர்மறையானதா அல்லது சார்பானதா?

...ஆயிரம் மனிதர்கள் சாணக்கியனின் கருத்துக்களால் பாதிக்காது வளர்ச்சி அடையும் போது, .....

உங்கள் எழுத்துக்களில் சிறந்து முன்னேற்றத்தை அவதானிக்க முடிகிறது, அதில் எனக்கும் பங்கு உள்ளது என்றால் பெருமையே!

அன்பு நண்பர்...

சாணக்கியா....

நான் களத்துல நொழஞ்ச காலத்துல, உங்கள பத்தி களத்தில நெறைய பேச்சு..

பலபேர் திட்டினாங்கன்னு கூட காதுல வந்து விழுந்துச்சு...

பலபேர் உங்க கருத்தால படபட - ன்னுன் பாதிக்கப்பட்டிருக்காங்கன்ன.

உங்க சொந்தில (கருத்து) எதோ உண்மை இருக்குதுன்னு அர்த்தம்....

எப்ப ஒருத்தன் சொந்தியால பல பேர் பாதிக்கப்படுறாங்களோ..அப்ப அவன் சொந்தில உண்மை இருக்கணும்....

எப்படி இருந்தாலும்....உங்களை மனதார வரவேற்கிறேன்...

நன்றிங்க யாழ்போக்கிரி, நீங்க போறதா சொன்னப்போ நான் ரொம்பவும் நொந்து போயிட்டேன், நல்லவேளை திரும்பி வந்திட்டீங்க...உங்ககிட்டே கதைக்க நிறைய இருக்கு, அதுதாங்க அந்த மொழியாராச்சி மட்டர்....அதை அப்புறமா வைச்சுக்கலாம். ஆமாங்க நீங்க சொன்னமாதிரி நான் எனக்கு உண்மையின்னு பட்டதை படக் படக்கின்னு சொன்னேன், அதுல பாதி சரியாயும் இருக்கலாம் மீதி தவறாயும் இருக்கலாம். அதை தெரிஞ்சுக்கத்தானே நாம இங்க வாரோம்!

ஆமா உங்க கிட்ட ஒரு விசயம் சொல்லனும், எனக்கென்னவோ உங்க பெயரிலதான் குற்றம் இருக்கிறதா படுகுது, அது தான் சாமி உங்களை ஏத்துக்குதில்லை போல. பேசாம யாழ்பொன்னுச்சாமி என்று மாத்திப்பாருங்களேன்?

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் மறுபடியும் வந்ததற்கு நன்றிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

சாணக்கியனின் மீள்வருகை கள உறவுகள் பலருக்கு "உசார்" குளிசையாக அமையட்டும்!

நன்றிங்க யாழ்போக்கிரி, நீங்க போறதா சொன்னப்போ நான் ரொம்பவும் நொந்து போயிட்டேன், நல்லவேளை திரும்பி வந்திட்டீங்க...உங்ககிட்டே கதைக்க நிறைய இருக்கு, அதுதாங்க அந்த மொழியாராச்சி மட்டர்....அதை அப்புறமா வைச்சுக்கலாம். ஆமாங்க நீங்க சொன்னமாதிரி நான் எனக்கு உண்மையின்னு பட்டதை படக் படக்கின்னு சொன்னேன், அதுல பாதி சரியாயும் இருக்கலாம் மீதி தவறாயும் இருக்கலாம். அதை தெரிஞ்சுக்கத்தானே நாம இங்க வாரோம்!

ஆமா உங்க கிட்ட ஒரு விசயம் சொல்லனும், எனக்கென்னவோ உங்க பெயரிலதான் குற்றம் இருக்கிறதா படுகுது, அது தான் சாமி உங்களை ஏத்துக்குதில்லை போல. பேசாம யாழ்பொன்னுச்சாமி என்று மாத்திப்பாருங்களேன்?

சாணக்கியன்..

இதோ நான் புலிப்பாசறை அண்ணா சொல்லிக்கொடுத்த சுவையான மெக்ஸிகன் மட்டன் கறி வடைகளை சிட்னியில் செஞ்ச சட்னியுடன் சேர்த்து ப்ழாக்..ப்ழாக்..என்று விழுங்கி விட்டு வருவதற்காக "பிரியா"விடை சொல்லிப்போனேன்..

எப்போதுமே நான் யாழை விட்டு பிரிய மாட்டேன்....என்னை உள்ளே விடாமல் டமால் டமால் எண்டு அடித்துத்துரத்தினாலும் கூட யாழைச்சுற்றி சுற்றியே வருவேன்...

இப்போது உங்களது வருகையும் எனக்கு "வளரும் பையன் இவன் உயர உயரவே துள்ளுபவன்" எண்டு போன்விட்டா சாப்பிட்ட உற்சாகம்.... :lol::lol:

என்னோட பெயரில் குத்தம் இருக்கறதா சொன்னீங்க...

நானும் மொதலாளிங்கள்ட்ட கேட்டுப்பாத்துட்டேன்...

பொருள் குத்தமா இல்ல சொல் குத்தமா எண்டு..

ஒரு பதிலையும் காணோம்... :P :P

சாணக்கியன்!

இங்க என்ன நடக்குதுன்னா...

நல்லா சுளீர் னு மண்டைல போடுற ஒரு வெயில் காலத்துல,

வீட்டுல பசங்க தப்பு செஞ்சா அம்மா வெளக்கமாத்த எடுத்து

வ்வ்ர்ர்ர்ச்ச்ச் வ்வ்ர்ர்ர்ச்ச்ச் எண்டு சத்தம் வர சாத்து போடுவாங்க...

சாத்து வாங்கிட்டு ஒரு அளவுக்கு மேல அடி தாங்க முடியாம

வீட்டு வாசலுக்கு வெளியே வந்து சத்தமா "போடி" ன்னு சொல்லிட்டு (அப்பல்லாம் ஒரு விதமான கட்டுக்கடங்காத கோபம்தான் இருக்கும் வயசு)

பின்னக்காலோட உள்பதாம் நெத்தில பட்டு பட்டையடிக்க நாலு தெருவத்தாண்டி

ஓடிபோய் ஒரு மரநிழல்ல ஒதுங்கி ரெஸ்ட் எடுப்போம்...

அதுக்கப்புறம் சட்டைப்பாக்கெட்ல இருக்க முந்தா நாள் திருடின ஒரு ரூபாய் நாணயத்தை

நோண்டி எடுத்து அதுல கைமுறுக்கும் தேன் முட்டாயும் வாங்கி சாப்பிட்டு

மீதி இருக்க 50 காசுக்கு ரெண்டு எலுமிச்சை போட்ட பதனி குடிச்சிட்டு

எங்கவாவது எவனாவது வெளையாடுறானான்னு பாத்து வேர்க்க விறுவிறுக்க வெளியாடிட்டு

ராத்திரி ஒரு 7 மணிக்கு வீட்டுக்கு பக்கத்துல வந்து நெலமை எப்படின்னு நோட்டம் விட்டுட்டு

திரும்பி அப்படியே கோயில் பக்கம் திரிஞ்சுட்டு ஒரு 11 மணி சுமாருக்கு மெதுவா பூனைக்குட்டி போல

வீட்டுப்பக்க்கம் அப்பா வந்தபிறகு எட்டிப்பாப்போம்....

அது போல..அப்பப்ப யாழ் களம் அறஞ்சு அனுப்பிச்சாலும்...

இப்ப சாணக்கியன் எண்ட அப்பா உள்ளே நொழஞ்ச பிறகு எட்டிப்பாக்குறோம்..

பாப்போம்..இப்பவாவது விடுவாங்களான்னு!!!! :P :P

சாணக்கியன் அண்ணாவை மீண்டும் கண்டதில் மகிழ்ச்சி ! :lol:

யாழ் போகிரி...நாங்கள் நினைத்தபடி கங்காதரன் ஒரு போலி ஆசாமி...வேறு ஒரு பெயரில் நடமாடும் ஒரு உளவு அதிகாரி....ஆளைக்கொஞ்சம் நோட்பண்ணுவோம்.....எழுதின கருத்துகளின் மொத்த எண்ணிக்கை ஆக 40...இப்படிப்பட்ட சாணக்கியனையினையே துணிந்து கேட்க்கும் இந்த ஆசாமி நிச்சயமாக ஒரு பாதிக்கப்பட்ட ஆளாகத்தன் இருக்கும்....நான் துப்பறிந்து இவரையும் பிடிக்கவா....? :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாங்கோ சாணக்கியன் அண்ணா! உங்களை மகிழ்வுடன் வரவேற்கின்றேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.