Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்பாணத் தமிழர் தெலுங்கு வந்தேறிகளே - ஆய்வாளர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Justin said:

ஊரவனின் வீடியோவில் இருக்கிற தம்பியா அந்த சீமானின் ஏதோ விவாத நட்சத்திரம் என்றார்கள்? தெரியாததால் கேட்கிறேன். 

ஏன் இவர்கள் இப்படி  தமிழ் நாட்டில் பிறந்த மக்களையே வந்தேறி வந்தேறி என்று அவமதித்து வன்மம் வளர்க்கிறார்கள்? இதனால் இது வரை விளைந்த நன்மைகள் என்ன, இனி விளையும் என எதிர்பார்க்கிற நன்மைகள் என்ன? இது புத்திசாலித்தனமான வீடியோ என்று சான்று கொடுத்தோரில் யாராவது விளக்குவீர்களா?

வந்தேறியை வந்தேறி என்று சொல்லாமல் பூர்வகுடியென்றா சொல்வார்கள், 😀

4 hours ago, goshan_che said:

ஆனா ஒண்டு,

நீங்க கேள்வி கேட்டா நாங்க மாங்கு மாங்குன்னு எழுதுறோம்

சில திரிகளில் - நாளைக்கு சாவகாசமா பேசுவோம்னுட்டு போய்டுறாங்க.

பின்னே — போய் விக்கி பீடியாவ நோண்ட டைம் ஆகுமா இல்லையா🤣

கேட்ட கேள்விக்கு பதில் எழுதினீர்கள், அதற்கு நன்றி, இதைதானே ஏதீர்பார்த்தீர்கள் 🤣😂

  • Replies 269
  • Views 26.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, Justin said:

ஏன் இவர்கள் இப்படி  தமிழ் நாட்டில் பிறந்த மக்களையே வந்தேறி வந்தேறி என்று அவமதித்து வன்மம் வளர்க்கிறார்கள்? இதனால் இது வரை விளைந்த நன்மைகள் என்ன, இனி விளையும் என எதிர்பார்க்கிற நன்மைகள் என்ன? இது புத்திசாலித்தனமான வீடியோ என்று சான்று கொடுத்தோரில் யாராவது விளக்குவீர்களா?

இவர்கள் வந்தேறி என்று சொல்லுவதுடன் நிற்கிறார்கள்.
ஆனால் அங்கே தாட்டு குத்துகிறார்களே.
சொல்ல வைத்ததே அவர்கள் தான்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

தெளிவா நாம் இருவரும் விவாதித்ததுதான்.

விக்ரமராஜசிங்கன் - நாயக்கன் என்பது ஊருக்கே தெரிந்த விசயம். இதை ஏதோ பெரிய கண்டுபிடிப்பு போல சொல்லிகிட்டு. அவன் ஏன் பெயர மாத்தினான்? மதுராந்தகன் ஏன் உத்தம சோழன் ஆனான்? அருண்மொழி வர்மன் ஏன் ராஜராஜ சோழன் ஆனான்? அதே காரணம்தான். அரசர்கள் இயற்பெயருடன் அரச கட்டில் ஏறுவதில்லை.

கண்டிய சிங்கள மன்னர்கள் 2 ம் ராஜசிங்கன் காலம் தொட்டு நாயக்க ராணிகளை மணம் முடிப்பது வழமை. நாயக்க ராணிகள் சிங்கள மன்னர்களை திருமணம் முடித்து, கடைசி கண்டிய சிங்கள மன்னன் பராகிரம நரேந்திர சிங்கன் இறந்த பின் அவனின் நாயக்க மனைவியின், நாயக்க தம்பி, விஜயராஜ சிங்கன் அரியாசனம் ஏறியது 1739 இல். கண்டிய நாயக்க வம்ச ஆட்சி 1739-1815 வரை.

ஆனால் இதற்கு பல நூறு வருடங்களுக்கு முன்பே பண்டார எனும் பெயர் சிங்கள மன்னர்களிடையேயும் மக்களிடையேயும் இருந்தது. கொனப்பு பண்டார, கெரலியத்த பண்டார, இப்படி பல. பண்டார என்பது ஒரு ராஜ இளவலை குறிக்கும் சொல். நாம் முன்னரே பார்ததை போல நாயக்க என்பது தலைவன். ஆக பண்டாரநாயக்க என்பது பண்டாராக்களில் முதன்மையானவன்.

தமிழ் செல்வநாயகமும் இதே போலத்தான். செல்வங்களின் தலைவன். ராசநாயகம் -ராசாக்களில் முதல்வன்.

கண்டிய நாயக்க ஆளுமை வெறும் 75 வருடம்தான். அதுவும் கூட கரைநாட்டில் இல்லை. பெயருக்கு மன்னன் மற்றும்படி மஹா அதிகாரம்களான சிங்கள பிரதானிகளே நாட்டை ஆண்டனர்.

நீங்களே சொன்னது - பிற்கால தஞ்சை/மதுரை நாயக்கர்கள் தெலுங்கர் என்பதற்கு ஒரு ஆதாரமும் இல்லை.

தமிழ் குடியான வன்னியர்களிடமும் நாயகம் எனும் பெயர் உள்ளது. பண்டார வன்னியன் கண்டியோடு திருமணம் பந்தம் செய்கிறான். போற போக்கில் பண்டாரவன்னியனும் நாயக்கன் என்று முடிப்பார்கள் இவர்கள்.

உண்மையில் பண்டாரநாயக்கவின் அடி நீலப்பெருமாள் எனும் ஒரு தமிழர் என்றும் கூறுவார்கள்.

ஆகவேதான் சொல்கிறேன் இது வெறும் உச்சரிப்பை மட்டும் வைத்து, இலங்கயின் சிக்கலான வரலாறு அறியாதவர்களால் கட்டபடும் மொக்கு தியரி. மிகவும் ஆபத்தான தியரி.

இதைத்தானே அவரும் சொல்கிறார் .....
அவர் சொல்லும்போது மட்டும் ஏன் மொக்கை என்கிறீர்கள்?

அவருடைய மெய்ன் பாய்ண்ட்  அதுவல்ல அது சப்போர்டிங் பாயிண்ட் 
மெய்ன் பாய்ண்ட் ஆங்கிலேயர்களின் பட்டியலில் இருந்த 200 மேற்பட்ட 
பணக்கார நாயுடுகள் என்ன ஆனார்கள் எனப்துதான். அரசர்கள் அரியணை ஏறும்போது 
பெயரை மாறியது ஓ கே ........ இவர்கள்  ஏன்? 

பார்ப்பான் உள்ளிருந்து எவ்வாறு தமிழ்  வரலாறுகளை அழித்தானோ 
தமிழ் மொழிக்கு உள்ளேயே சம்ஸ்கிருத கலப்பை உண்டுபண்ணினானோ 
அவ்வாறான சித்து வேலைக்கு இவர்களும் காரணிகள் தவிர இந்த பார்ப்பன கும்பல் 
உள்ளே வந்ததே வியநகர பேரரசின் எழுச்சியுடன்தான் 
ஆகவே தனக்கு சாதகமான நாயக்கரைகளை பார்ப்பான் சூழ்ச்சி செய்து 
ஆடசியில் வைத்திருக்க முயற்சி செய்திருப்பான் என்பதில் எனக்கு ஒரு வீத சந்தேகமும் இல்லை. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Maruthankerny said:

மருதர்,

1. நான் கேள்விபட்டது 1815 கண்டிய உடன்படிக்கை மட்டுமே. இந்த தம்பி கூறும் பட்டியல் எது? எந்த அருங்காட்சியக்கத்தில் அதன் மூலப்பிரதி வைக்கப்பட்டுள்ளது?

2. 200 “நாயுடுக்கள்” இந்த பட்டியலில் இருந்ததாக கூறுகிறார். அவர்கள் எல்லோரும் பண்டார,சேன, இத்யாதிநாயக்க ஆகினார்கள் என்பதற்கு, இவர்கள் கற்பனையை தவிர வேறு ஏது ஆதாரம்?

3.1815 வெறும் 200 பேரே சொத்துள்ள நாயுடு - சிங்களத்தில் எத்தனை மில்லியன் -நாயக்க என்று முடியும் பெயர்கள்? கணக்கு பிழைக்கிறதே.

4. சிங்கள தேசத்தில் மன்னனே தன் பெயரை மாற்றும் நிர்பந்தம் இருந்தது என கூறும் இவர்தான் 200 பேர் நாயுடு என்ற பெயருடன் சொத்து பத்துடன் வாழ்ந்தார்கள் என்றும் கூறுகிறார். ஆங்கிலேய ஆட்சியில் நாயுடுகளை ஆங்கிலேயர் அழிக்கவில்லை, ஆகவே 1815-1948 இடையில் இவர்கள் பெயர் மாற்ற வேண்டிய தேவை என்ன? பண்டரநாயக்க பிறக்கும் போதே அவர் குறைந்தது 3 தலைமுறைகளாகவே “பண்டாரநாயக்க” தான்.

5. தமிழகத்தில் இத்தனை ஆண்டுகளுக்கும் பின் பல மில்லியன் நாயக்கசாதி மக்கள், நாயுடு எனும் சாதி பெயரை தம்பின்னே சேர்கிறனர். கயானா போன்ற நாடுகளில் இன்றும் கிரிகெட் வீரர்கள் இந்த பெயரில் உளர். இலங்கை நாயுடுகள் மட்டும், ஆங்கிலே ஆட்சியில் ஏன் பெயரை மாற்றினர்.

6. அடுத்தது சாதி படிநிலை - நாயக்க சாதியினர் தம்மை உயர் சாதியாக கருதுபவர்கள். அவர்களே ஒரு தனிச்சாதி. தமிழ் நாட்டில், ஏன் உலகில் எங்கும் நாயக்கர், நாயுடு பெயரை நீங்கள் வேறு சாதிகளில் காண முடியாது. ஆனால் நாயக்க என்று முடியும் பெயர் இலங்கையில் அத்தனை சாதிகளிலும் உண்டு. 200 நாயுடுக்கள் பெயரும் மாறி, சாதியும் மாறினார்களா? இப்படி ஆங்கிலேய ஆட்சியில், சாதி தடிப்பு மிக்க நாயுடுக்கள் மாற என்ன வலுவான நிர்பந்தம்?

7. அடுத்தது பெயரீடு முறை, ராமசாமி நாயக்கர், GD நாயுடு என்று நாயக்க சாதியினர் சாதியை தம் பெயரில் surname போல சேர்ப்பதை போல இல்லை சிங்கள பெயரீட்டு முறை. முன்னோர், ஊர், வளவ்வ, இவற்றை குறித்துதான் சிங்கள பெயர்கள் இடப்படும். உதாரணத்துக்கு அப்புஹாமிகே எல்லாவள உடவள திசாநாயக்க. சிங்களத்தில் surname முறை இருந்ததில்லையே? அப்போ இந்த நபரின் மகன் அப்புஹாமிகே எல்லாவள உடவள திசாநாயக்ககே சமரவீர ஆகுவார். ஆங்கிலேய வருகையின் பின் இந்த வழக்கு மாறி இங்கே தந்தையை AEU திசாநாயக்க என்றும் மகனை AEU சமரவீர திசாநாயக்க என்றும்  அழைக்கும் முறை தோன்றியது. நான் ஒன்றும் பெயரீட்டு அறிஞர் இல்லை. ஆனால் நான் அறிந்தவரையில் இதுதான் சிங்கள பெயரீட்டு முறை. இது புரிந்தால் நாயக்க என்று பெயர் முடியும் மக்கள் எல்லாம் தெலுங்கு வழித்தோன்றல்கள் என்பது எவ்வளவு அபத்தமான எடுகோள் என்பது புரியும்.

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, உடையார் said:

வந்தேறியை வந்தேறி என்று சொல்லாமல் பூர்வகுடியென்றா சொல்வார்கள், 😀

கேட்ட கேள்விக்கு பதில் எழுதினீர்கள், அதற்கு நன்றி, இதைதானே ஏதீர்பார்த்தீர்கள் 🤣😂

உடையார், உங்களுடன் ஏற்கனவே கேள்விகள் கேட்டு உரையாடிய அனுபவத்தில் பயனுள்ள எதுவும் உங்களிடமிருந்து வராது என அறிவேன். ஆனாலும் முயற்சிப்போம்!

சரி , வந்தேறிகளை வந்தேறிகள் என்று அழையுங்கள்! நம்மவரின் வழித்தோன்றல்களையும் அவுசில், கனடாவில், பிரிட்டனில், அமெரிக்காவில் " அகதிக் குடியேறி" என்று அழைத்துக் கொள்ளுங்கள்! 

1. என்ன நன்மை இந்த அழைப்புகளால் இது வரை நிகழ்ந்தது? 
2. இனி என்ன நன்மை நிகழும்?

10 hours ago, ஈழப்பிரியன் said:

இவர்கள் வந்தேறி என்று சொல்லுவதுடன் நிற்கிறார்கள்.
ஆனால் அங்கே தாட்டு குத்துகிறார்களே.
சொல்ல வைத்ததே அவர்கள் தான்.

தமிழ் நாட்டிலா அண்ணை? எங்கே என்ன நடந்தது? சாதாரணமாக நடக்கிற ஏரியா சண்டைகளையெல்லாம் தமிழன் என்று அடிக்கிறான் என்று தூண்டி விட்டு வேடிக்கை பார்ப்பது அரசியல் தலைவர்களின்! இந்த வந்தேறி தியரியை அமெரிக்காவில் நடக்கிற குடியேற்றவாதிகளை வெறுக்க வைக்கும் செயல்களின் நடுவே இருந்து கொண்டு நீங்கள் நியாயப் படுத்துவது அதிசயம்! 

இதையே வெள்ளை அமெரிக்கனும் சுதேச அமெரிக்கனும் எங்கள் ஆசிய வழித்தோன்றல்களுக்குச் செய்தால் உங்கள் கருத்து இப்படியா இருக்கும்? 

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, goshan_che said:

இதில் ஒரு பகுதியை தெலுங்கு வந்தேறி என்றால் மறுபகுதியும் தெலுங்கு வந்தேறியே.

இது மறுக்கவரும், பெயரை மட்டும் வைத்து, தெலுங்கரோ அல்லது வேறு எவரோ என்ற முடிவை எடுக்க முடியாது எனும் ஆய்வை மறுப்பதாகவே உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Justin said:

உடையார், உங்களுடன் ஏற்கனவே கேள்விகள் கேட்டு உரையாடிய அனுபவத்தில் பயனுள்ள எதுவும் உங்களிடமிருந்து வராது என அறிவேன். ஆனாலும் முயற்சிப்போம்!

சரி , வந்தேறிகளை வந்தேறிகள் என்று அழையுங்கள்! நம்மவரின் வழித்தோன்றல்களையும் அவுசில், கனடாவில், பிரிட்டனில், அமெரிக்காவில் " அகதிக் குடியேறி" என்று அழைத்துக் கொள்ளுங்கள்! 

1. என்ன நன்மை இந்த அழைப்புகளால் இது வரை நிகழ்ந்தது? 
2. இனி என்ன நன்மை நிகழும்?

அட அடடா என்னைப்பற்றி இந்தளவுக்கு நீங்கள் ஆராய்ந்து வைத்திருப்பதற்கு நன்றி👍🤣😂,

ஆமா நீங்கள் மெத்த படிச்சவர், திரும்பவும் சீமானின் நாம் தமிழரின் கொள்கைகளை திரும்ப திரும்ப வாசியுங்கள் அப்ப விளங்கும் அவர்களின் எதிர் கால திட்டங்களை பற்றி 😋. இதுவரை செய்ததை நீங்கள் இந்த திரியில் பல காணோளியில் காணலாம் 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Kadancha said:

இது மறுக்கவரும், பெயரை மட்டும் வைத்து, தெலுங்கரோ அல்லது வேறு எவரோ என்ற முடிவை எடுக்க முடியாது எனும் ஆய்வை மறுப்பதாகவே உள்ளது.

இல்லையே கடஞ்ச்சா,

நான் உண்மையிலேயே நாயகம் என்று பெயர் முடியும் தமிழர் தெலுங்கர் என்பதற்கும், நாயக்க என்று பெயர் முடியும் சிங்களவர் தெலுங்கர் என்பதற்கும் உச்சரிப்பு ஒற்றுமையை தவிர வேறு ஆதாரம் இல்லை என்றே சொல்கிறேன்.

ஆனால் சிங்களவ “நாயக்க” மீது வைக்கும் எடுகோளை தமிழ் “நாயகம்” மீதும் வைக்கலாம் -ஆகவே இந்த தியரி சரியானால் (சரியில்லை என்பதே என் நிலை) அது தமிழருக்கும் பொருந்தும் என்பதே அந்த வசனத்தின் கருத்து.

பிகு: உங்களை கண்டது மிக்க சந்தோசம். இந்த தேர்தல் முடிவு, 13 ரத்து பற்றிய கதைகள் வரும்போது உங்களை நினைப்பேன். இந்திய நகர்வுகள் பற்றி ஏதும் உள்ளக தகவல்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
Just now, உடையார் said:

அட அடடா என்னைப்பற்றி இந்தளவுக்கு நீங்கள் ஆராய்ந்து வைத்திருப்பதற்கு நன்றி👍🤣😂,

ஆமா நீங்கள் மெத்த படிச்சவர், திரும்பவும் சீமானின் நாம் தமிழரின் கொள்கைகளை திரும்ப திரும்ப வாசியுங்கள் அப்ப விளங்கும் அவர்களின் எதிர் கால திட்டங்களை பற்றி 😋. இதுவரை செய்ததை நீங்கள் இந்த திரியில் பல காணோளியில் காணலாம் 

நான் விளங்கினதில ஏதும் பிழை இருக்கா உடையார்? இந்த சிம்பிள் விடயம் விளங்க பெரிய யோசனை தேவையா?

ஒரு நிலைப்பாட்டிற்கு என்ன நன்மை/தீமை என்றே பகுத்தறிந்து பார்க்காமல், சும்மா யூருயூப் முகனூலில் முங்கியெழும்பி விசிலடிக்க சொந்த மூளை அவசியமேயில்லை! இந்த லட்சணத்தில் இதை ஏனயோர் வேற வாசிக்க வேணுமாம் எண்டுறியள்! 

இது போல அவுஸ் காரன் nativism பேச வெளிக்கிட்டால் பிறகு பிளேட்டை மாத்திப் போட்டுட்டு "அய்யோ இனவாதம்" எண்டு கத்தவும் சொந்த புத்தி அவசியமில்லை! 
 
  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, goshan_che said:

மருதர்,

1. நான் கேள்விபட்டது 1815 கண்டிய உடன்படிக்கை மட்டுமே. இந்த தம்பி கூறும் பட்டியல் எது? எந்த அருங்காட்சியக்கத்தில் அதன் மூலப்பிரதி வைக்கப்பட்டுள்ளது?

2. 200 “நாயுடுக்கள்” இந்த பட்டியலில் இருந்ததாக கூறுகிறார். அவர்கள் எல்லோரும் பண்டார,சேன, இத்யாதிநாயக்க ஆகினார்கள் என்பதற்கு, இவர்கள் கற்பனையை தவிர வேறு ஏது ஆதாரம்?

3.1815 வெறும் 200 பேரே சொத்துள்ள நாயுடு - சிங்களத்தில் எத்தனை மில்லியன் -நாயக்க என்று முடியும் பெயர்கள்? கணக்கு பிழைக்கிறதே.

4. சிங்கள தேசத்தில் மன்னனே தன் பெயரை மாற்றும் நிர்பந்தம் இருந்தது என கூறும் இவர்தான் 200 பேர் நாயுடு என்ற பெயருடன் சொத்து பத்துடன் வாழ்ந்தார்கள் என்றும் கூறுகிறார். ஆங்கிலேய ஆட்சியில் நாயுடுகளை ஆங்கிலேயர் அழிக்கவில்லை, ஆகவே 1815-1948 இடையில் இவர்கள் பெயர் மாற்ற வேண்டிய தேவை என்ன? பண்டரநாயக்க பிறக்கும் போதே அவர் குறைந்தது 3 தலைமுறைகளாகவே “பண்டாரநாயக்க” தான்.

5. தமிழகத்தில் இத்தனை ஆண்டுகளுக்கும் பின் பல மில்லியன் நாயக்கசாதி மக்கள், நாயுடு எனும் சாதி பெயரை தம்பின்னே சேர்கிறனர். கயானா போன்ற நாடுகளில் இன்றும் கிரிகெட் வீரர்கள் இந்த பெயரில் உளர். இலங்கை நாயுடுகள் மட்டும், ஆங்கிலே ஆட்சியில் ஏன் பெயரை மாற்றினர்.

6. அடுத்தது சாதி படிநிலை - நாயக்க சாதியினர் தம்மை உயர் சாதியாக கருதுபவர்கள். அவர்களே ஒரு தனிச்சாதி. தமிழ் நாட்டில், ஏன் உலகில் எங்கும் நாயக்கர், நாயுடு பெயரை நீங்கள் வேறு சாதிகளில் காண முடியாது. ஆனால் நாயக்க என்று முடியும் பெயர் இலங்கையில் அத்தனை சாதிகளிலும் உண்டு. 200 நாயுடுக்கள் பெயரும் மாறி, சாதியும் மாறினார்களா? இப்படி ஆங்கிலேய ஆட்சியில், சாதி தடிப்பு மிக்க நாயுடுக்கள் மாற என்ன வலுவான நிர்பந்தம்?

7. அடுத்தது பெயரீடு முறை, ராமசாமி நாயக்கர், GD நாயுடு என்று நாயக்க சாதியினர் சாதியை தம் பெயரில் surname போல சேர்ப்பதை போல இல்லை சிங்கள பெயரீட்டு முறை. முன்னோர், ஊர், வளவ்வ, இவற்றை குறித்துதான் சிங்கள பெயர்கள் இடப்படும். உதாரணத்துக்கு அப்புஹாமிகே எல்லாவள உடவள திசாநாயக்க. சிங்களத்தில் surname முறை இருந்ததில்லையே? அப்போ இந்த நபரின் மகன் அப்புஹாமிகே எல்லாவள உடவள திசாநாயக்ககே சமரவீர ஆகுவார். ஆங்கிலேய வருகையின் பின் இந்த வழக்கு மாறி இங்கே தந்தையை AEU திசாநாயக்க என்றும் மகனை AEU சமரவீர திசாநாயக்க என்றும்  அழைக்கும் முறை தோன்றியது. நான் ஒன்றும் பெயரீட்டு அறிஞர் இல்லை. ஆனால் நான் அறிந்தவரையில் இதுதான் சிங்கள பெயரீட்டு முறை. இது புரிந்தால் நாயக்க என்று பெயர் முடியும் மக்கள் எல்லாம் தெலுங்கு வழித்தோன்றல்கள் என்பது எவ்வளவு அபத்தமான எடுகோள் என்பது புரியும்.

நீங்கள் இரு வேறு விடயங்களை கலக்கிறீர்கள் 
ஆதாரங்கள் எல்லாம் எழுத்தில் இருக்கிறது 
நானும் அதை முன்பு வாசித்து இருக்கிறேன் 
ஏங்குவாசித்தேன் என்பதே ஞாபகத்தில் இல்லை தேடி பார்க்கவேண்டும் 

நாயுடுகள் ஏன் மாறினார்கள் என்றால் சிங்களவர்களை 
ஏமாற்றத்தான் மாறினார்கள்.
ஏன் பார்ப்பான் முருகனை சுப்ரமணியாக்கினான்?
எப்படி முருகன் தமிழ் நாட்டில் மட்டும் பிள்ளையாரின் தம்பி ஆனார்?
அதுபோலவே இதுவும்.

இந்திய பாகிஸ்தான் போரை நாம் சிங்கள தமிழ் போராக 
1980களில் எவ்வாறு தொடர்ந்தோம்?

கண்டியை ஆண்ட தமிழ் மன்னர்களை விட இந்தியாவில் இருந்து 
அந்தணரை அழைத்து யாகம் வளர்த்து போருக்கு போன சிங்கள மன்னர்கள் அதிகம் 
இது மகாவம்சத்திலேயே இருட்டு அடிப்பு இல்லாமல் இருக்கிறது நீங்களும் வாசித்தது இருப்பீர்கள்.
இவர்களுக்கு இந்த வேத புத்தியை உள்ளிருந்து ஊட்டியது யார்?  

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, குமாரசாமி said:

பேச்சு வழக்குகளை பாத்தால் அப்பிடித்தான் தெரியுது...😂

17 hours ago, விளங்க நினைப்பவன் said:

இடியப்பம் புட்டு சாப்பாடுகளும் அப்படி தான் இருக்கிறது

17 hours ago, ஈழப்பிரியன் said:

மலையாளம் தோன்றியதே 500 வருடங்கள் என்கிறார்களே?

யாழ்ப்பாணத்தை பொறுத்தவரை சுத்த தமிழர்கள் இல்லை 
குறிப்பாக தீவுப்பகுதிகள் (நானும் நெடுந்தீவை சேர்ந்தவன்) 
இங்கு 90 வீதமும் மலையாளிகள்தான் அதுவும் பலகாலம் முன்பு அல்ல 
டச்சு காரர்கள் வந்தபோது இந்த தீவுகளில் மக்கள் குடியிருப்புகள் பெரிதாக இல்லை 
டச்சு காரர்கள்தான் கேரளாவில் இருந்து பல மலபாரிகளை ஏற்றிவந்து நெடுந்தீவு புங்குடுதீவு 
போன்ற பகுதிகளில் குடியேற்றினார்கள். நான் வன்னி  மருதங்கேணி யில் வாழ்ந்து இருக்கிறேன் 
நெடுந்தீவை நன் பிறக்கும் காலகட்ட்த்திலேயே விட்டு வன்னிக்கு வந்து விட்டார்கள் 
பின்பு போய்  வந்திருக்கிறோம் வாழ்ந்ததில்லை. நெடுந்தீவு பரபம்பரிய மக்களின் பாஷை 
சடங்குகள் செத்தவீடு  சாமர்த்திய வீடு எல்லாம் சற்று வித்தியாசமாகவே இருக்கும். 

  • கருத்துக்கள உறவுகள்

கோஸான் நேரம் கிடைக்கும்போது இதை வாசியுங்கள் 
இது ஒரு பரோபகாண்டா எழுத்து ..வாசிக்கும்போது புரிவீர்கள் 
இது வடக்கு கிழக்கு இணைப்பை செய்க்கூடாது என்ற சிந்தனையை சிங்களவர்களிடம் 
ஊடுவதுக்கு மூளைசலவைக்கா எழுதப்பட்டது என்பஹே வாசிக்கும்போதே புரியலாம் 

ஆனாலும் சிலவன உண்மைதான் 
சங்கிலியன் சாதிமுறைமையை ஏற்படுத்த்தினான் அதுக்கு ஆதரவாக 
இருந்தான் என்பது மறுபதுக்கில்லை. இந்த தேசவழமை முறைமையே சாதிய 
போக்கை தூண்டி வெள்ளால (வேளால) என்று ஒரு பிரிவை உருவாக்கியது என்பதை 
மறுக்கமுடியாது 

இதுக்கு மூலம் தெரியவில்லை நான் காப்பி பேஸ்ட் செய்து கார்டட்ரைவில் வைத்து இருக்கிறேன் 

Understanding Thesawalamai Law

During the Dutch period a very large number of South Indians slaves were brought to the country for tobacco cultivation. Most of them were from Kerala (mainly the Malabar coast) while a significant number were also brought from Tamil Nadu (mainly from Nagapattinam and Tanjore). Following the “ƒ”¹…”divide and rule’ colonial strategy, Dutch invaders codified it in 1706 and a hundred years later British colonial rulers legitimised it. Interestingly the Dutch commissioned the writing down of a Tamil version of Lankan history by the name of Yalpana Vaipavamalai to rival the already well established Mahavamsa based history. This is the only instance in the world where the history of a subject group was written down according to the fancies of a colonial ruler.

Thesawalamai Law is a personal law applicable to “ƒ”¹…”Malabar’ (people who came to the island from the Malabar Coast of South India who now call themselves Tamils) inhabitants of the “ƒ”¹…”Province of Jaffna’. The preamble of the Thesawalamai law says it is applicable to “Malabar inhabitants of Jaffna.” Interestingly, the Jaffna Tamil accent is closer to modern day Malabar coast Keralites than to Tamil Nadu Tamils though the language is Tamil. Thesawalamai, in its origin, was intended to serve the agricultural community. The agricultural community of the “ƒ”¹…”Malabars’ of the Jaffna district are Vellahlas. Dutch invaders were earning a fortune from slavery driven tobacco industry that was thriving in Jaffna. Hence they codified this law to benefit the agricultural workers (Vellalhlas). This was how caste discrimination has been cleverly engraved into this law which was introduced to divide and rule the island. Today it is not just a territorial law but also a personal law. The slavery element of the Thesawalamai Law was abolished by Regulation No 20 of 1844.

Decided case law inform us that, though Thesawalamai applies to Tamils in the Mannar area, it does not apply to the Tamils in the Trincomalee or to those in Batticaloa or to those Tamils of recent Indian origin resident in the Central Province. Again, Thesawalamai does not apply to all Jaffna Tamils but only to those Tamil Inhabitants of the Jaffna Province (Understanding Thesawalamai by Guiendran Tambiah).

The entire law is obsolete and irrelevant today and must be scrapped as soon as possible for the sake of coexistence, equal rights and peace.

It makes this doubly dangerous to coexistence, equal rights and peace. Since it is territorial as regards the north and personal as regards to Tamils from the north living in other parts of the country, the highly discriminative Thesawalamai law also applies to their properties in Colombo, etc.! While it holds the entire northern province under its territorial law arm, it extends to other parts of the country through its personal law arm like an invasive cancer. Reciprocal arrangements for Sinhalese, Muslims and non-Jaffna Tamils don’t exist.

Thesawalamai Law Prevents Sinhalese from Acquiring Land in the North

The north has turned into a mono ethnic Tamil only enclave today. Running away from this fact is not going to help in reconciliation. In fact this is the first problem that must be rectified for reconciliation. The law of pre-emption contained in Thesawalamai Law prevents Sinhalese and Muslims from acquiring land in the north.

Since Thesawalamai applies to the inhabitants from Jaffna and since all Sinhala and Muslim inhabitants from Jaffna have been untraceably wiped out by the Vadukodai resolution and subsequently by the LTTE, the foolish claim that any Sinhalese or Muslim can buy land in Jaffna does not hold water. As long as the Thesawalamai law is there, Sinhalese or Muslims will never be able to integrate into the Tamil only mono ethnic Jaffna peninsular because of the simple fact that there are no Sinhalese or Muslim “inhabitants of Jaffna”. Those who argue otherwise are cruel like the proverbial fox which offered a drink of soup to a crane on a flat plate!

In other words Tamil-only Thesawalamai law discriminates Sinhalese, Muslims and Tamils other than Jaffna Tamils even in Colombo. Thesawalamai law which is a personal law applies to a Jaffna inhabitant living in Colombo. This tragicomedy must be stopped by scrapping the Thesawalamai law.

Thesawalamai Mentality is the Root Cause of War

The Thesawalamai Law creates a sense of uniqueness around Jaffna and links Tamils with Jaffna. However, there is absolutely no such link and until the Dutch invaders, there is no evidence of any such connection. Thesawalamai Law was intended to complement the “ƒ”¹…”divide and rule’ strategy of the Dutch and British invaders which worked very well. In fact it worked too well and extended beyond the colonial era. Induced by the territorial and ethnic discrimination of the Thesawalamai Law, those who benefitted from it (South Indian Malabar immigrants who resided in Jaffna) developed an attitude of uniqueness and superiority whereas there was nothing unique or superior about them! It was this attitude that confronted with fellow Tamils and then with democratically elected governments of the country.

The Federal demand and the subsequent separate nation demand that led to bloodshed and violence were based on the Thesawalamai Law mentality of uniqueness of the north and uniqueness of Tamils linked to the north via the law. Thesawalamai Law created the false notion among Tamils that they are the “ƒ”¹…”chosen people’ of the north or the traditional inhabitants of the north.

Moulded by the Thesawalamai Law thinking, Tamils in the north saw Sinhalese people moving into the north as colonization. This attitude remains the biggest obstacle to peace even today. Once the Thesawalamai Law is scrapped, this unhealthy mentality will dissipate allowing ethnic integration and coexistence.

Interestingly a similar law to Thesawalamai Law as regards land is found in Palestinian territories. Quoted from Weiner, Justus Reid (2005), Human Rights Watch. 1997. p. 340, “Israel Investigates Death Of an Arab Land Dealer” – The New York Times and Wikipedia.

“Palestinian land laws are laws which relate to ownership of land under the Palestinian Authority (PA). These laws prohibit Palestinians from selling Palestinian territory lands to “any man or judicial body [corporation] of Israeli citizenship living in Israel or acting on its behalf.” These land laws were originally enacted during the Jordanian occupation of the West Bank (1948″”…”1967), and are deemed by the Palestinian Authority as being necessary to prevent further expansion of Israeli settlements in the Palestinian territories and to “halt the spread of moral, political and security corruption”. The law carries a sentence of the death penalty.”

This is exactly what happened within Sri Lanka under the Thesawalamai Law that artificially created a separate jurisdiction based on territory and ethnicity. Marginalisation from the society is seen among northern Tamils who sold their property to “ƒ”¹…”low caste’ Tamils or non-Tamils. Palestinian land laws predict where Sri Lanka will be unless this discriminatory law is scrapped forthwith.

To an extent the Thesawalamai Law is a twisted version of the Boomi Puthra law of Malaysia. The only difference being the latter positively discriminates the majority while the former discriminates against the majority. Both forms are bad and must be avoided.

Thesawalamai Law is an Obstacle to Equal Rights and Women’s Rights

International humanitarian organisations affiliated to the UN have found that Thesawalamai Law is discriminatory against women. Under Thesawalamai, the woman upon marriage, passes from the guardianship of the father to the guardianship of the husband who becomes the sole and irrevocable attorney of the wife (Understanding Thesawalamai by Guiendran Tambiah). She is merely a slave under the “guardianship” of either her father (until married despite being an adult of over 18 years) or the husband and cannot manage her own finances or land rights which is prohibited under the Thesawalamai Law. Total irrelevance of this law which was intended for slaves in the 17th century can be seen from the fact that Sri Lanka produced world’s first woman prime minister who not only managed finances of her own but of an entire nation.

Salvaging parts of this obsolete law is not the right approach to the problem. Time and again it has been proven that this is a totally irrelevant law to Sri Lanka which was imposed on the island by invaders. From time to time sections of this law have become obsolete. In today’s context, the entire Thesawalamai Law is obsolete and it must be scrapped.

The government of Sri Lanka must create a level playing field for every Sri Lankan irrespective of ethnicity, caste or place of origin. That is the only way to equal rights and reconciliation. Scrapping it also allows people to integrate well with each other right throughout the country. At the same time, other personal laws should also be reviewed and scrapped. At the moment not every man and woman is equal in from of law. Ethnicity and place of origin within the island determine the rights of citizens which is a clear violation of equality.

The Constitution allows enough protection of all the cultures of the country. There is no need for colonial laws today. This nation scrapped the colonial constitution in 1972 and after 40 years it is high time to scrap the Thesawalamai Law.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Maruthankerny said:

நீங்கள் இரு வேறு விடயங்களை கலக்கிறீர்கள் 
ஆதாரங்கள் எல்லாம் எழுத்தில் இருக்கிறது 
நானும் அதை முன்பு வாசித்து இருக்கிறேன் 
ஏங்குவாசித்தேன் என்பதே ஞாபகத்தில் இல்லை தேடி பார்க்கவேண்டும் 

நாயுடுகள் ஏன் மாறினார்கள் என்றால் சிங்களவர்களை 
ஏமாற்றத்தான் மாறினார்கள்.
ஏன் பார்ப்பான் முருகனை சுப்ரமணியாக்கினான்?
எப்படி முருகன் தமிழ் நாட்டில் மட்டும் பிள்ளையாரின் தம்பி ஆனார்?
அதுபோலவே இதுவும்.

இந்திய பாகிஸ்தான் போரை நாம் சிங்கள தமிழ் போராக 
1980களில் எவ்வாறு தொடர்ந்தோம்?

கண்டியை ஆண்ட தமிழ் மன்னர்களை விட இந்தியாவில் இருந்து 
அந்தணரை அழைத்து யாகம் வளர்த்து போருக்கு போன சிங்கள மன்னர்கள் அதிகம் 
இது மகாவம்சத்திலேயே இருட்டு அடிப்பு இல்லாமல் இருக்கிறது நீங்களும் வாசித்தது இருப்பீர்கள்.
இவர்களுக்கு இந்த வேத புத்தியை உள்ளிருந்து ஊட்டியது யார்?  

மன்னிக்க வேண்டும் மருது,

நான் முன் வைப்பது மிகவும் சிம்பிளான ஒரு வாதம்.

இதற்குள், இல்லாத பட்டியல், பெயர் மறந்து போன புத்தகம், மஹாவம்சம், அந்தணர், இந்தியா பாகிஸ்தான் எதையும் நாம் இழுத்து வர வேண்டியது இல்லை.

கீழே நான் சொன்னவைதான் வாத/பிரதிவாதம்

1. வாதம் நாயக்கர்கள் கண்டிய மன்னர்களாய் இருந்தார்கள். ஆகவே நாயக்கர் இலங்கையில் குடியேறினார்கள். சிங்களவர்களாக மாறினார்கள். இலங்கையில் இருக்கும் நாயக்க என்று முடியும் சிங்கள பெயர்களே இதற்கு சாட்சி.

2. எதிர்வாதம் : இது உச்சரிப்பை மட்டும் வைத்து தமிழக அரசியல் காரணங்களுக்கா கட்டபடும் ஒரு புனைவு வரலாறு. நாயக்க என்ற பெயர் தெற்காசியா முழுவதும் நாயக்கர் அல்லாத மக்களால் பாவிக்க படுவது. இந்த சொல்லின் சமஸ்கிருத அர்த்தம் தலைவன், முதல்வன் என்பது. நாயக்கர்கள் கண்டியை படை எடுத்து ஆளவில்லை. ஒரு சிங்கள மன்னனின் வாரிசாக ஒரு நாயக்க இளவரசன் வருவிக்கபட்டு அரசனாகி 75 வருடம், கரையோரம் நீங்கலாக கண்டியை ஆண்டார்கள்.  அப்போதும் சிங்கள பிரதானிகளிடமே அதிகாரம் இருந்தது. ஆட்சி மொழியாக தமிழே இருந்தது. ஆகவே மன்னரை தவிர பெரும் எடுப்பில் நாயக்க வரவு இலங்கையில் இருக்கவில்லை.  பண்டார எனும் பெயர் நாயக்கர் வருகைக்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்னனே இலங்கையில் உண்டு. தமிழிலும் சிங்களத்திலும் ஏதாவது ஒன்றின் தலைவர் அல்லது முதல்வர் என பொருள்படும் விதமே இந்த பெயர்கள் உருவாகின.

இந்த வாததுக்கு உதவும் முகமாக - பின்வரும் விடயங்களையும் சமர்பிக்கிறேன்.

சிங்கள பெயரிடும் முறையும், சாதிய கட்டமைப்பும். தெலுங்கு நாயக்கர் உயர் குடிகள். ஆண்ட இனம் என மார்தட்டுபவர்கள். நாயக்க மன்னருடன் அவர்கள் இலங்கைக்கு வந்து முண்ணனி பதவிகளை பெற்றார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. கண்டிய ஆட்சியில் முண்ணனியில் இருந்தவர்கள் பெரும்பாலும் எஹலபொலகளும், அலுவிகாரகளும், ரத்வத்தை போன்ற குடும்பங்கள். அடுத்து இந்த நாயக்க பெயர், கராவா சாதியில்தான் அதிகம். ஆண்ட குடி நாயக்கர், பெயரையும் மாற்றி, சாதியிலும் தம்மை ஏன் தாழ்திக்கொள்ள வேண்டும்? சிங்களவரை ஏமாற்ற என்றால்? ஒரு நாயக்கர் மன்னர் எனும் போது ஏன் இந்த அவசியம். ஆங்கிலேயர் ஆட்சியில் ஏன் இப்படி பெயரையும் மாற்றி, சாதியிலும் தாழ்ந்தனர்?

அடுத்தது நாயக்க என்ற பெயரின் பரம்பல். 75 வருடம் நாயக்க மன்னர்கள் சிங்கள பிரதானிகளின் கைபாவையாக ஆண்டதனால், இலங்கையின் கண்டிய ஆட்சிக்குள் வராத பிரதேசம் எங்கும் இந்த நாயக்க பெயர், பல மில்லியன் கணக்கில் பரவும் என்பது நடைமுறைசாத்தியமற்றது. அடுத்து பல நாயக்க எனும் பெயர் முடியும் மக்கள் அன்றாடம் காய்சிகள். இன்று மட்டும் அல்ல. SWRD குடும்பம் கூட கல்வி ஊக்கதொகை பெறும் அளவுக்கு வாரிய குடும்பம்.

எனவே - மேலே முன்வைக்க பட்டவாதம் கற்பனையாக, எழுந்தமானமாக எந்த ஆதாரமும் இன்றி எழுந்த புனைவு.

அப்படியானால் தெலுங்கர் இலங்கைக்கு வரவில்லையா? ஏன் இல்லாமல் இப்போது “ராஜு” “ராயுடு” “செட்டி” கள் சிங்கள பகுதியில் வாழ்கிறாகள். தமது பெயர், இன தனிதுவத்துடன்.

ஆனால் நாயக்க என்ற பெயர் உள்ளவர்கள் தெலுங்கர் என்பது கற்பனை.

இவ்வளவுதான் மேட்டர்.

  • கருத்துக்கள உறவுகள்

அங்கதமாகத் தொடங்கப் பட்டாலும் எங்கள் சமூகத்தில் இருக்கும் ஒரு முக்கியமான பலவீனத்தை சுட்டிக் காட்டிய திரி இது: நுனிப்புல் மேய்தல் மூலம் தேடலில் முதலில் அல்லது இலகுவில் கிடைக்கிற ஒன்றை ஆய்வேயின்றி நம்பி அதைப் பரப்பவும் செய்கிற அலட்சியம் தான் எங்கள் பலவீனம்! இதை சமாந்தரமாக நகரும் உரிய திரியில் ஒரு குவோரா பதிவொன்றின் திரிப்பை மூலத்தை ஆராய்ந்து சுட்டிக் காட்டியிருக்கிறேன். 

இணையக் குப்பையில் தகவல்களுக்கு தரக்கட்டுப்பாடு இல்லை! தகவலைத் தேடும் நாம் தான் தரக்கட்டுப்பாடாகவும் வடிகட்டியாகவும் இருக்க வேண்டியிருக்கிறது. இல்லா விட்டால் அரசியல், மத, சமூக நோக்கங்களுக்காக எம்மை ஏமாற்றும் தகவல்களை நாமே பெருப்பித்து சமூகத்திற்குத் தீமை இழைப்போராக மாறி விடுவோம்! 

இந்த திரியின் அடிநாதம் இது தான்!   

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Justin said:

நன்றி அண்ணா,

விக்கிபீடியா என்பது சுவரில் கிறுக்குவதை விட ஒரு படி மேல். குஓரா -சுவரில் கிறுக்குவதேதான்.

மலசலகூடத்து சுவரில் எழுதபடுவதை வைத்து வரலாற்று கட்டுரை எழுதுவதை போன்ற செயல் இது. 

என்றைக்கு இப்படியான குப்பைகளில், முகபுத்தக, யூடியூப் வீடியோக்களில் இருந்து வெளியே வந்து, சொல்லபடும் ஒரு கருத்தின் மூலத்தை தேடி, ஆராய்கிறோமோ அன்றைக்குத்தான் நாம் உண்மையான தகவல்களை அடையமுடியும்.

எல்லா இணையதள மூலங்களும் பொய் இல்லை. ஆனால் எங்கே எதை எடுக்கிறோம், எடுக்கும் இடம் நம்பகமானதா என்பது முக்கியம்.

ஆனால் இங்கே? யாழில் ஒரு  dumbing down effect இருப்பது மறுக்கவியலாதது. அரிதாக நானே சில சமயம் விக்கிபீடியா இணைப்பை கொடுத்து உள்ளேன். ஒரு விக்கியை இன்னொரு விக்கியால்தான் எதிர்கொள்ள வேண்டும் என்ற கடுப்பில்🤣.

பின்னர் நானே “சே” என்று உணர்ந்துள்ளேன்.

உங்களது பின்லாந்து கட்டுரை, ஆக்ஸ்போர்ட் முறை கோட்டேசன், பிலிலியோகிராபி எல்லாம் கொண்டு இருந்தது-அப்படியே ஷாக் ஆகிட்டேன்🤣. இதைதான் கர்மசிரத்தை என்பது.

ஆனால் இதை எல்லாரிடமும் எதிர்பார்பதும் தவறுதான்.

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, goshan_che said:

மன்னிக்க வேண்டும் மருது,

நான் முன் வைப்பது மிகவும் சிம்பிளான ஒரு வாதம்.

இதற்குள், இல்லாத பட்டியல், பெயர் மறந்து போன புத்தகம், மஹாவம்சம், அந்தணர், இந்தியா பாகிஸ்தான் எதையும் நாம் இழுத்து வர வேண்டியது இல்லை.

கீழே நான் சொன்னவைதான் வாத/பிரதிவாதம்

1. வாதம் நாயக்கர்கள் கண்டிய மன்னர்களாய் இருந்தார்கள். ஆகவே நாயக்கர் இலங்கையில் குடியேறினார்கள். சிங்களவர்களாக மாறினார்கள். இலங்கையில் இருக்கும் நாயக்க என்று முடியும் சிங்கள பெயர்களே இதற்கு சாட்சி.

2. எதிர்வாதம் : இது உச்சரிப்பை மட்டும் வைத்து தமிழக அரசியல் காரணங்களுக்கா கட்டபடும் ஒரு புனைவு வரலாறு. நாயக்க என்ற பெயர் தெற்காசியா முழுவதும் நாயக்கர் அல்லாத மக்களால் பாவிக்க படுவது. இந்த சொல்லின் சமஸ்கிருத அர்த்தம் தலைவன், முதல்வன் என்பது. நாயக்கர்கள் கண்டியை படை எடுத்து ஆளவில்லை. ஒரு சிங்கள மன்னனின் வாரிசாக ஒரு நாயக்க இளவரசன் வருவிக்கபட்டு அரசனாகி 75 வருடம், கரையோரம் நீங்கலாக கண்டியை ஆண்டார்கள்.  அப்போதும் சிங்கள பிரதானிகளிடமே அதிகாரம் இருந்தது. ஆட்சி மொழியாக தமிழே இருந்தது. ஆகவே மன்னரை தவிர பெரும் எடுப்பில் நாயக்க வரவு இலங்கையில் இருக்கவில்லை.  பண்டார எனும் பெயர் நாயக்கர் வருகைக்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்னனே இலங்கையில் உண்டு. தமிழிலும் சிங்களத்திலும் ஏதாவது ஒன்றின் தலைவர் அல்லது முதல்வர் என பொருள்படும் விதமே இந்த பெயர்கள் உருவாகின.

இந்த வாதம் விஜயநகர ஆடசிக்குள் இலங்கை இல்லாமல் இருந்து இருந்தால் 
ஏற்றுக்கொள்ளலாம். 14ஆம் 15ஆம் நூற்றாண்டுகளில் மத்திய இலங்கை நேரடி விஜயநகர 
நாயக்கர்கள் ஆட்ச்சிக்குள்தான் இருந்தது. நேரடியாகவே நாயக்கர்கள்தான் சிங்களவர்களை ஆண்டார்கள் 

தமிழகத்தை பொறுத்தாதவரை 14ஆம் நூற்றாண்டிலேயே தென்காசி பாண்டியர்கள் எழுச்சி கொள்கிறார்கள்
தென்காசி பாண்டியர்கள் வரலாற்று பதிவுகளில் இதை காணலாம் மதுரையை பொறுத்தவரை நாயக்கர்கள் காலம் மிக சிறியது 

இந்த வாததுக்கு உதவும் முகமாக - பின்வரும் விடயங்களையும் சமர்பிக்கிறேன்.

சிங்கள பெயரிடும் முறையும், சாதிய கட்டமைப்பும். தெலுங்கு நாயக்கர் உயர் குடிகள். ஆண்ட இனம் என மார்தட்டுபவர்கள். நாயக்க மன்னருடன் அவர்கள் இலங்கைக்கு வந்து முண்ணனி பதவிகளை பெற்றார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

14ஆம் நூற்றாண்டு பூராகவே இந்த வரலாறுதானே உண்டு 

கண்டிய ஆட்சியில் முண்ணனியில் இருந்தவர்கள் பெரும்பாலும் எஹலபொலகளும், அலுவிகாரகளும், ரத்வத்தை போன்ற குடும்பங்கள். அடுத்து இந்த நாயக்க பெயர், கராவா சாதியில்தான் அதிகம். ஆண்ட குடி நாயக்கர், பெயரையும் மாற்றி, சாதியிலும் தம்மை ஏன் தாழ்திக்கொள்ள வேண்டும்? சிங்களவரை ஏமாற்ற என்றால்? ஒரு நாயக்கர் மன்னர் எனும் போது ஏன் இந்த அவசியம். ஆங்கிலேயர் ஆட்சியில் ஏன் இப்படி பெயரையும் மாற்றி, சாதியிலும் தாழ்ந்தனர்?

இதுக்கான பதில் தற்போதைய தமிழகத்திலேயே உண்டு 
திராவிட கொள்கை என்று  ஆந்திரா கர்நாடக கேரளாவில் இல்லாத ஏற்றுக்கொள்ள படாத 
ஒரு மாயை ஏன்  தமிழகத்தில் உருவானது? 

கிட்டதட்ட 15ஆம் நூற்றாண்டின் இறுதியில் இருந்து 19ஆம் நூற்றாண்டுவரை ஆண்ட 
வெள்ளைக்காரர்கள் எமது சமூகத்துடன் ஏன் கலக்கவில்லை? 

இலங்கையில் யுத்தம் முடிந்தவுடன் ஏன் புலம்பெயர் தமிழர்கள் திரும்பவில்லை? 
எல்லாமே பொருளாதார அடிப்படையும் அதுக்கான ஏமாற்று வேலையும்தான் 

காலனியாதிக்கத்தில் கால்பிடிக்கவும் கை பிடிக்கவும் ஒரு ஆளை வைத்திருந்த 
பல வெள்ளைக்கார பிரபுக்கள் ஜவான்கள்  பிரிட்டிசுக்கு சாதாரண வாழ்வுக்கு திரும்ப விரும்பி இருக்க மாட்டார்கள்... அனாலும் அவர்கள் தோல் நிறம் ஒரு கலப்பை உருவாக்க இலகுவாக இடம் கொடுக்கவில்லை.

அதே நேரம் ஆப்ரிக்காவில் நிலவுடமை பெற்ற வெள்ளைக்காரர்கள் யாரும் திரும்பவில்லை 
ஆப்ரிக்க மக்களை எளிதாக ஏமாற்றிக்கொள்ள கொள்ள முடிந்தது  எனபதே முக்கிய காரணம். 

பலவீனமாக இருக்கும்போது வவ்வுவதும் 
கொஞ்சம் பலம் ஆனால் பாய்வதும் இவர்கள் வாடிக்கை 
ராதாரவிக்கு இந்த புது கொழுப்பு எங்கிருந்து வருகிறது? 

அடுத்தது நாயக்க என்ற பெயரின் பரம்பல். 75 வருடம் நாயக்க மன்னர்கள் சிங்கள பிரதானிகளின் கைபாவையாக ஆண்டதனால், இலங்கையின் கண்டிய ஆட்சிக்குள் வராத பிரதேசம் எங்கும் இந்த நாயக்க பெயர், பல மில்லியன் கணக்கில் பரவும் என்பது நடைமுறைசாத்தியமற்றது. அடுத்து பல நாயக்க எனும் பெயர் முடியும் மக்கள் அன்றாடம் காய்சிகள். இன்று மட்டும் அல்ல. SWRD குடும்பம் கூட கல்வி ஊக்கதொகை பெறும் அளவுக்கு வாரிய குடும்பம்.

எனவே - மேலே முன்வைக்க பட்டவாதம் கற்பனையாக, எழுந்தமானமாக எந்த ஆதாரமும் இன்றி எழுந்த புனைவு.

அப்படியானால் தெலுங்கர் இலங்கைக்கு வரவில்லையா? ஏன் இல்லாமல் இப்போது “ராஜு” “ராயுடு” “செட்டி” கள் சிங்கள பகுதியில் வாழ்கிறாகள். தமது பெயர், இன தனிதுவத்துடன்.

ஆனால் நாயக்க என்ற பெயர் உள்ளவர்கள் தெலுங்கர் என்பது கற்பனை.

இவ்வளவுதான் மேட்டர்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Maruthankerny said:

1. இலங்கையில் விஜய நகர அரசு நேரடி ஆட்சி நடத்தியது என்பதை இன்றுதான் நான் கேள்விபடுகிறேன். நீங்கள் சொல்லும் காலம் இலங்கையின் தம்பதெனிய, கம்பொள, கோட்டே ராசதானிகாலங்கள். சோழருக்கு பின் அதாவது 1055 க்கு பின் இலங்கையில் எந்த தென்னிந்திய நேரடி ஆட்சியும் இல்லை என்பதுதான் இலங்கை மட்டும் அல்லாமல் இந்தியாவினதும் ஏற்றுகொள்ளபட்ட வரலாறு. இலங்கையில் எங்கும் விஜயநகர அரசு இருந்த தடயம் இருக்கிறதா? எந்த அடிபடையில் இதை சொல்கிறீர்கள்?

2.நீங்கள் மறுபடியும் ராதாரவியை பல தேவையற்றதை இதில் கலகிறீர்கள். இலங்கையில் நாயக்க் என்று முடியும் பெயர் உள்ள குடும்பங்கள் தாழ்தபட்ட சாதிகளில் உண்டு. உலகில் எங்கும் ஆட்சியாளர்களா வந்தவர்கள் அடிமட்ட சாதியை/அமைவை வேண்டி அடைந்ததில்லை. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கூடவே 13-14 நூற்றாண்டில் விஜயநகரம் ஆண்டது என்றாலும் கூட அது தமிழ் பகுதியையும் சேர்த்துதானே?

அப்போ பண்டாரநாயக்கவுக்கு பொருந்தும் அதே அளவிடை செல்வநாயகத்துக்கும் பொருந்தி வருகிறதே?

முடிவாக இன்னொன்றையும் சொல்கிறேன். உங்கள் நிலைபாடே, தஞ்சை நாயக்கர் தெலுங்காராக தஞ்சை வந்தாலும் பின்னாளில் அவர்களும் தமிழர் என்பதுதானே?

அப்போ - இலங்கை வந்த நாயக்கரும் தமிழர்தானே? அப்போ பண்டரநாயக்க தமிழன் அல்லவா? செல்வநாயகமும் தமிழன் அல்லவா? நாம் யாருமே தெலுங்கர் இல்லை அல்லவா?

அப்போ தெலுங்கு பண்டாரநாயக்க இலங்கை தமிழனை காவு கொண்டான் என, இன்றைய தெலுங்கின மக்கள் மீது போடுவது அபாண்டம் இல்லையா?

இப்போ எப்படி பட்ட ஒரு circular argument இல் சிக்கி கொண்டீர்கள் என்பது விளங்குகிறதா?

ஒரு வழியில் அணுகினால் பாண்டாரநாயக்க, செல்வநாயகம் இருவரும் தெலுங்கர்.

இன்னொரு வழியில் அணுகினால் இருவரும் தமிழர். 

நான் சொல்லும் வழியில் அணுகினால் ஒருவர் தமிழர் மற்றையவர் சிங்களவர் இருவருக்கும் தெலுங்கு நாயக்கருக்கும் ஒரு தொடர்புமில்லை.

இதைதான் முதல் பதிவில் இருந்து சொல்கிறேன்.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, goshan_che said:

விஜயநகர பேரரசு க்ரிஷ்ணதேவராய காலத்தில் பேருளுச்சி பெற்று 
தெற்கில் இலங்கை வரையும் மேற்கே ஒரிசா வரையும் விரிந்தது 

கிருஸ்ணதேவராய காலத்தை நீங்கள் வாசித்தால் தெரியம். 
இவர்கள் தற்போதைய தெலுங்கர்கள் என்பதில் எனக்கு இப்போதும் சந்தேகம் உண்டு 
இவர்கள் காம்பி பெனுகொண்டாவை (கர்நாடக) வை மையப்படுத்தியே அரசமைத்து இருக்கிறார்கள் 
இவர்கள் பல்லவர்களின் தொடர்ச்சி என்பதே எனது எண்ணம். 
நாம் தமிழ் தமிழ் என்று ஒரு சிறிய வட்டத்துக்குள் சுற்றுவதால் எமை சுற்றியிருக்கும் 
பலவற்றையும் இதுவராவ் அறிய முடியாமல் ஆராய முடியாது இருந்தது. 

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, goshan_che said:

2 hours ago, Maruthankerny said:

நீங்கள் இரு வேறு விடயங்களை கலக்கிறீர்கள் 
ஆதாரங்கள் எல்லாம் எழுத்தில் இருக்கிறது 
நானும் அதை முன்பு வாசித்து இருக்கிறேன் 
ஏங்குவாசித்தேன் என்பதே ஞாபகத்தில் இல்லை தேடி பார்க்கவேண்டும் 

நாயுடுகள் ஏன் மாறினார்கள் என்றால் சிங்களவர்களை 
ஏமாற்றத்தான் மாறினார்கள்.
ஏன் பார்ப்பான் முருகனை சுப்ரமணியாக்கினான்?
எப்படி முருகன் தமிழ் நாட்டில் மட்டும் பிள்ளையாரின் தம்பி ஆனார்?
அதுபோலவே இதுவும்.

இந்திய பாகிஸ்தான் போரை நாம் சிங்கள தமிழ் போராக 
1980களில் எவ்வாறு தொடர்ந்தோம்?

கண்டியை ஆண்ட தமிழ் மன்னர்களை விட இந்தியாவில் இருந்து 
அந்தணரை அழைத்து யாகம் வளர்த்து போருக்கு போன சிங்கள மன்னர்கள் அதிகம் 
இது மகாவம்சத்திலேயே இருட்டு அடிப்பு இல்லாமல் இருக்கிறது நீங்களும் வாசித்தது இருப்பீர்கள்.
இவர்களுக்கு இந்த வேத புத்தியை உள்ளிருந்து ஊட்டியது யார்?  

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Maruthankerny said:

விஜயநகர பேரரசு க்ரிஷ்ணதேவராய காலத்தில் பேருளுச்சி பெற்று 
தெற்கில் இலங்கை வரையும் மேற்கே ஒரிசா வரையும் விரிந்தது 

கிருஸ்ணதேவராய காலத்தை நீங்கள் வாசித்தால் தெரியம். 
இவர்கள் தற்போதைய தெலுங்கர்கள் என்பதில் எனக்கு இப்போதும் சந்தேகம் உண்டு 
இவர்கள் காம்பி பெனுகொண்டாவை (கர்நாடக) வை மையப்படுத்தியே அரசமைத்து இருக்கிறார்கள் 
இவர்கள் பல்லவர்களின் தொடர்ச்சி என்பதே எனது எண்ணம். 
நாம் தமிழ் தமிழ் என்று ஒரு சிறிய வட்டத்துக்குள் சுற்றுவதால் எமை சுற்றியிருக்கும் 
பலவற்றையும் இதுவராவ் அறிய முடியாமல் ஆராய முடியாது இருந்தது. 

மன்னிக்க வேண்டும் மருதர் இப்படி எழுதுவதற்கு.

கிருஸ்ணதேவராயர் காலத்திலும் இலங்கையில் விஜயநகர நேரடி ஆட்சி இருந்தது அல்லது இலங்கை மன்னர்கள் விஜயநகரத்துக்கு கப்பம் கட்டும் நிலையிலாவது இருந்தனர் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

நீங்கள் எழுதுதியபின் மீண்டும் ஒரு தடவை எனது தரவுகளை சரி பார்த்தேன். குச் நஹி.

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, goshan_che said:

கூடவே 13-14 நூற்றாண்டில் விஜயநகரம் ஆண்டது என்றாலும் கூட அது தமிழ் பகுதியையும் சேர்த்துதானே?

அப்போ பண்டாரநாயக்கவுக்கு பொருந்தும் அதே அளவிடை செல்வநாயகத்துக்கும் பொருந்தி வருகிறதே?

முடிவாக இன்னொன்றையும் சொல்கிறேன். உங்கள் நிலைபாடே, தஞ்சை நாயக்கர் தெலுங்காராக தஞ்சை வந்தாலும் பின்னாளில் அவர்களும் தமிழர் என்பதுதானே?

அப்போ - இலங்கை வந்த நாயக்கரும் தமிழர்தானே? அப்போ பண்டரநாயக்க தமிழன் அல்லவா? செல்வநாயகமும் தமிழன் அல்லவா? நாம் யாருமே தெலுங்கர் இல்லை அல்லவா?

அப்போ தெலுங்கு பண்டாரநாயக்க இலங்கை தமிழனை காவு கொண்டான் என, இன்றைய தெலுங்கின மக்கள் மீது போடுவது அபாண்டம் இல்லையா?

இப்போ எப்படி பட்ட ஒரு circular argument இல் சிக்கி கொண்டீர்கள் என்பது விளங்குகிறதா?

ஒரு வழியில் அணுகினால் பாண்டாரநாயக்க, செல்வநாயகம் இருவரும் தெலுங்கர்.

இன்னொரு வழியில் அணுகினால் இருவரும் தமிழர். 

நான் சொல்லும் வழியில் அணுகினால் ஒருவர் தமிழர் மற்றையவர் சிங்களவர் இருவருக்கும் தெலுங்கு நாயக்கருக்கும் ஒரு தொடர்புமில்லை.

இதைதான் முதல் பதிவில் இருந்து சொல்கிறேன்.

கோஷன் உங்கள் கொன்ஸ்பியரி தியரிகளுக்குள் என்னை தயவு செய்து இழுக்காதீர்கள் 
பண்டாரநாயக்கா 
செல்வநாயகம் 
இது ஒரு தேவையற்ற ஆதாரமற்ற வாதம் இதுக்கு நான் பதில் எழுத ஒருபோதும் முனையவில்லை.

நாயக்கர்கள் சிங்களவர்களை ஏமாற்றினார்கள் 
சிங்கள ஆடசியாளருக்குள் ஊடுருவினார்கள் 
என்பதுதான் எனது காணிப்பும் ... அதுக்கான ஆதாரங்களித்தான் நான் தேடிக்கொண்டு இருக்கிறேன்.

தர்க்கம் செய்து வெல்வது 
வீண் வாதங்களை பல நேரம் வீணடித்து 
இங்கே செய்திருக்கிறேன் இப்போது ஆக்கபூர்வமான கருத்தாடல்களில் மட்டுமே 
ஈடுபட விரும்புகிறேன் ... உங்களிடம் இருக்கும் தகவல்களை அறியவும் வாசிக்கவும் தான் 
முயறசிக்கிறேன்.

என்னுடைய ஆரம்ப பதிவிலேயே நான் கூறி இருக்கிறேன் சிங்களவர்கள்தான் உண்மையான தமிழர்கள் 
நாங்கள் கலப்பினம் என்று சிங்களவர்கள் ஆளுமை கொண்ட பாண்டியர்கள். நாங்கள் பல்லவர் வழிவந்த  சேர  சோழ பாண்டிய கலப்பில் கலந்தவர்கள். சங்ககாலத்து புத்தமத்தை எவ்வாறு சிங்களவர்கள் காத்துக்கொண்டார்கள்? நாம் தொலைத்தோம்? என்பதை பற்றி ஆராய்ந்தால் அது தெரியும் 

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, goshan_che said:

மன்னிக்க வேண்டும் மருதர் இப்படி எழுதுவதற்கு.

கிருஸ்ணதேவராயர் காலத்திலும் இலங்கையில் விஜயநகர நேரடி ஆட்சி இருந்தது அல்லது இலங்கை மன்னர்கள் விஜயநகரத்துக்கு கப்பம் கட்டும் நிலையிலாவது இருந்தனர் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

நீங்கள் எழுதுதியபின் மீண்டும் ஒரு தடவை எனது தரவுகளை சரி பார்த்தேன். குச் நஹி.

இது கொஞ்சம் அகந்தை மாதிரி உங்களுக்கு தெரியவில்லையா?

14 நூற்றாண்டில் எந்த நூலில்..... குறிப்பில்......வரலாற்றில் 
இது இல்லை என்று நீங்கள் ஒப்பிக்க முனைகிறீர்கள் என்பது புரியவில்லை.

போர்த்துக்கீசர்  செய்து கொண்ட ஒப்பந்தம் பூராக விஜயநகர பேரரசின் 
அரசுகளுடனான ஒப்பந்தங்கள் இன்றும் எழுத்தில் இருக்கிறது. 
போர்த்துக்கீசர் மத்திய இலங்கையில் யாருடன் வணிக ஒப்பந்தம்கள்  செய்தார்கள்?  

மலபார்கள் அடிமைகள்போல ஏற்றிபறிக்க முடிந்தத்துக்கு என்ன காரணம்?
அவர்கள் ஆடசி இழந்து இருந்ததுதான் முதல் காரணம் 
போர்த்துக்கீசர் யுத்தம் செய்து ஆடசி செய்யவில்லை தந்திரமான வணிக ஒப்பந்தங்கள் 
ஏமாற்று வேலைகளைத்தான் அப்பபோதைய ஆட்ச்சியாளருக்கு கப்பம் கொடுத்து செய்துவந்தார்கள் 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, Maruthankerny said:

கோஷன் உங்கள் கொன்ஸ்பியரி தியரிகளுக்குள் என்னை தயவு செய்து இழுக்காதீர்கள் 
பண்டாரநாயக்கா 
செல்வநாயகம் 
இது ஒரு தேவையற்ற ஆதாரமற்ற வாதம் இதுக்கு நான் பதில் எழுத ஒருபோதும் முனையவில்லை.

நாயக்கர்கள் சிங்களவர்களை ஏமாற்றினார்கள் 
சிங்கள ஆடசியாளருக்குள் ஊடுருவினார்கள் 
என்பதுதான் எனது காணிப்பும் ... அதுக்கான ஆதாரங்களித்தான் நான் தேடிக்கொண்டு இருக்கிறேன்.

தர்க்கம் செய்து வெல்வது 
வீண் வாதங்களை பல நேரம் வீணடித்து 
இங்கே செய்திருக்கிறேன் இப்போது ஆக்கபூர்வமான கருத்தாடல்களில் மட்டுமே 
ஈடுபட விரும்புகிறேன் ... உங்களிடம் இருக்கும் தகவல்களை அறியவும் வாசிக்கவும் தான் 
முயறசிக்கிறேன்.

என்னுடைய ஆரம்ப பதிவிலேயே நான் கூறி இருக்கிறேன் சிங்களவர்கள்தான் உண்மையான தமிழர்கள் 
நாங்கள் கலப்பினம் என்று சிங்களவர்கள் ஆளுமை கொண்ட பாண்டியர்கள். நாங்கள் பல்லவர் வழிவந்த  சேர  சோழ பாண்டிய கலப்பில் கலந்தவர்கள். சங்ககாலத்து புத்தமத்தை எவ்வாறு சிங்களவர்கள் காத்துக்கொண்டார்கள்? நாம் தொலைத்தோம்? என்பதை பற்றி ஆராய்ந்தால் அது தெரியும் 

அண்ணா இந்த தர்கத்தில் பங்குபெற விருப்பமில்லையாயின் பரவாயில்லை. இன்னொரு திரியில் நாம் எமது பொது வரலாறு பற்றி உரையாடலாம்.

ஆனால் நான் இந்த திரியை ஒரு வரலாற்று புனைவை போட்டுடைக்கும் நோக்கத்திலேயே எழுதினேன். திரி அதை தொடக்கதிலேயே சொல்லி விட்டது.

அது சார்பாக நீங்கள் உட்பட யார் கேட்ட கேள்விக்கும் தர்க, ஆதார ரீதியாக பதிலும் சொல்லி உள்ளேன்.

நான் முன்வைத்த வாதம் இன்னும் முறியடிக்கபடாமல்  அப்படியே இருக்கிறது. இது எனது திறமை அல்ல. உண்மையின் வலிமை.

9 minutes ago, Maruthankerny said:

இது கொஞ்சம் அகந்தை மாதிரி உங்களுக்கு தெரியவில்லையா?

14 நூற்றாண்டில் எந்த நூலில்..... குறிப்பில்......வரலாற்றில் 
இது இல்லை என்று நீங்கள் ஒப்பிக்க முனைகிறீர்கள் என்பது புரியவில்லை.

போர்த்துக்கீசர்  செய்து கொண்ட ஒப்பந்தம் பூராக விஜயநகர பேரரசின் 
அரசுகளுடனான ஒப்பந்தங்கள் இன்றும் எழுத்தில் இருக்கிறது. 
போர்த்துக்கீசர் மத்திய இலங்கையில் யாருடன் வணிக ஒப்பந்தம்கள்  செய்தார்கள்?  

மலபார்கள் அடிமைகள்போல ஏற்றிபறிக்க முடிந்தத்துக்கு என்ன காரணம்?
அவர்கள் ஆடசி இழந்து இருந்ததுதான் முதல் காரணம் 
போர்த்துக்கீசர் யுத்தம் செய்து ஆடசி செய்யவில்லை தந்திரமான வணிக ஒப்பந்தங்கள் 
ஏமாற்று வேலைகளைத்தான் அப்பபோதைய ஆட்ச்சியாளருக்கு கப்பம் கொடுத்து செய்துவந்தார்கள் 

இந்த திரியில் வேண்டாம். ஏனென்றால் நீங்களே இந்த தர்கத்தில் நீங்கள் தலையிடவில்லை என்று சொல்லி விட்டீர்கள்.

ஆனால் இப்படி ஊகம்களில் அல்லாமல், தனியாக ஒரு திரி திறந்து அதில் விஜயநகர அரசின் நேரடி ஆட்சியில் இலங்கை இருந்தது என்பதற்காக ஆதாரங்களை இணையுங்கள். தொடர்ந்து பேசுவோம்.

இது அகந்தை அல்ல மீண்டும் சொல்கிறேன் என்னை திருத்தி கொள்ளவும் தயார் ஆனா நான் அறிந்த மட்டில் போர்துகேயர் இலங்கை சம்பந்தமாக டீல் பண்ணியது இலங்கை சுயாதிக்க அரசுகளுடனேயே.

இந்த திரியை பொறுத்தவரை அப்படி இருந்தாலும், அது தனியே பண்டாரநாயக்க தெலுங்கன் ஆனால் செல்வநாயகம் தெலுங்கன் இல்லை எனும் புரட்டை ஆதரிக்காது.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, goshan_che said:

அண்ணா இந்த தர்கத்தில் பங்குபெற விருப்பமில்லையாயின் பரவாயில்லை. இன்னொரு திரியில் நாம் எமது பொது வரலாறு பற்றி உரையாடலாம்.

ஆனால் நான் இந்த திரியை ஒரு வரலாற்று புனைவை போட்டுடைக்கும் நோக்கத்திலேயே எழுதினேன். திரி அதை தொடக்கதிலேயே சொல்லி விட்டது.

அது சார்பாக நீங்கள் உட்பட யார் கேட்ட கேள்விக்கும் தர்க, ஆதார ரீதியாக பதிலும் சொல்லி உள்ளேன்.

நான் முன்வைத்த வாதம் இன்னும் முறியடிக்கபடாமல்  அப்படியே இருக்கிறது. இது எனது திறமை அல்ல. உண்மையின் வலிமை.

இதை வேறும்  அகந்தையாகவே நான் பார்க்கிறேன் 
நீஙகள் விஜயநகர பேரரசின் ஆடசியே இலங்கையில் இல்லை என்று 
ஒரு முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்துத்கொண்டு 
நாயக்கர்கள் நாயக்கர்கள் இல்லை என்பது ஒரு தர்க்கம் இல்லை.

சிங்களம் தமிழ் இரண்டிலுமே நாயக்கர்கள் வருகையும் 
ஆடசியும் தெளிவாக இருக்கிறது. 

காய் என்று முடிவதால் பூசணிக்காயும் தேசிக்காயையும் ஒன்று என்ற 
உங்கள் கான்ஸ்பிரசிக்குள் நான் வரவில்லை என்றே எழுதினேன்  

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.