Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கட்சி தலைமையை கைப்பற்ற முயன்ற விவகாரம்; பகிரங்க மன்னிப்பு கோரிய சுமந்திரன், சிறிதரன்: தமிழ் அரசு கட்சி மத்தியகுழுவின் மேலும் சில தகவல்கள்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்திய குழு கூட்டத்தில் நேற்று நடந்த மேலும் சில சுவாரஸ்யமான சம்பவங்களை இதில் தொகுத்துள்ளோம்.

யாப்பு

கட்சி செயலாளரின் சதி நடவடிக்கையை விலாவாரியாக விபரித்து, அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டது. நம்பிக்கையில்லா பிரேரணையை முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் அ.பரஞ்சோதி வாசித்ததும், எம்.எ.சுமந்திரன் குறுக்கிட்டு, கட்சி யாப்பின்படி செயலாளரை மாற்றுவது பொதுச்சபையில், இங்கு மாற்றினால் நீதிமன்றம் செல்லலாம் என்றார்.

நீதிமன்றம் செல்லலாம் என அடிக்கடி கூறிக் கொண்டிருந்தார். நம்பிக்கையில்லா பிரேரணை, கூட்ட அட்டணையில் இல்லையென்றும் கூறினார்.

இருதரப்பிற்குமிடையில் வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றது.

இதன்போது, மாவை சேனாதிராசா, சுமந்திரனை பார்த்து- தம்பி… நீங்கள் சொல்லும் அந்த யாப்பில் கட்சி தலைவருக்கு தெரியாமல்- சொல்லாமல்- செயலாளர் ஒரு நியமனத்தை வழங்கலாம் என சொல்லப்பட்டுள்ளதா என கேட்டு சூடு வைத்தார்.

தேசியப்பட்டில் சதியை பின்னணியில் நின்று இயக்கியவர் சுமந்திரன், சதி செய்யும்போது யாப்பு நினைவிற்கு வரவில்லையா என்பதை குத்திக் கேட்கவே இந்த கேள்வி.

சுமந்திரன் மூச்சும்காட்டாமல் உட்கார்ந்திருந்தார்.

அப்போது, கிழக்கு முன்னாள் எம்.பி சீ.யோகேஸ்வரன் இன்னொரு விடயத்தை சுட்டிக்காட்டினார். தமிழ் அரசு கட்சியின் யாப்பின்படி 4 வருட அங்கத்தவரே தேர்தலில் போட்டியிடலாம். ஆனால், சிங்கள பின்னணியுடைய சாணக்கிய ராகுல வீரபுத்திரன் அந்த விதிகளை கணக்கிலெடுக்கப்படாமல் நியமனம் வழங்கப்பட்டவர். கூட்டமைப்பின் மும்மூர்த்திகளிற்கு புரியாணி வாங்கிக் கொடுத்து நியமனத்தை பெற்றார் என அப்பொழுதே அரசியல் வட்டாரத்தில் நகைச்சுவையாக பேசப்படுவதுண்டு. சாணக்கியனிற்கு நியமனம் வழங்கப்பட்டதை சுட்டிக்காட்டி, அப்போது சுமந்திரன் யாப்பை படிக்கவில்லையா என கேட்டார்.

சாணக்கியனிற்கு நியமனம் வழங்கியதிலும் சுமந்திரனே முன்னணியில் இருந்தார். யோகேஸ்வரனின் கேள்விக்கும், சுமந்திரன் கப்சிப்!

தோற்கடிக்க முனைந்தவர்கள் தோற்றார்கள்

எம்.ஏ.சுமந்திரன் பேசியபோது, தனக்கும் சிறிதரனிற்கும் எதிராக சதிகள் நடந்தது. எம்மை தோற்டிக்க பலர் முயன்றனர். எம்மை தோற்டிக்க முனைந்தவர்கள் தோற்றனர். நாம் வென்றோம் என்றார்.

பேச்சை ஆரம்பித்தபோது, எனது பெயரை தலைவர் மாவை சேனாதிராசா 32 தடவைகள் உச்சரித்தார், அதனால் பதிலளிக்கிறேன் என்றார்.

சிறிதரன் பேசும்போதும் இதையே பேசினார். தனது பெயரை மாவை 20 தடவைகள் உச்சரித்தார் என்றார். இதன்போது, கூட்டத்திலிருந்தவர்கள் 20 தடவைகள் உச்சரிக்கவில்லையே, இதுவும் 75 கள்ளவாக்கு மாதிரியான கதையா என கூச்சலிட்டனர்.

உடனே சிறிதரன், 20 தடவை இல்லாவிட்டாலும் பலமுறை உச்சரித்தார் என்றார்.

சிறிதரன் சில சமயங்களில் மூளைக்கும் வாய்க்கும் தொடர்பில்லாமல் பேசுபவர் என சொல்லப்படுவதுண்டு. நேற்றும் அப்படித்தான். தமிழ் தேசிய கூட்டமைப்பின் தோல்விக்கு, புளொட்டை இணைத்ததுதான் காரணம் என்றார். (அவரது கொறடா பதவி பறிக்கப்பட்டு, புளொட் தலைவர் சித்தார்த்தனிற்கு வழங்கப்பட நடவடிக்கையெடுக்கப்படவதால், வெப்பியாரத்தில் பேசியிருக்கக்கூடும்)

சுமந்திரன், சிறிதரன் இரட்டையர்கள் பேசும்போது- கட்சி தலைமையை கைப்பற்றுவது தொடர்பாக வெளியான செய்தி விவகாரத்தை குறிப்பிட்டு பேசினார். இந்த விவகாரத்தில் மாவை சேனாதிராசா மனம் பாதிக்கப்பட்டிருந்தால் பகிரங்க மன்னிப்பு கேட்பதாக, இரட்டையர்கள் தெரிவித்தனர்.

வாயமடைத்த சம்பந்தன்

மன்னார் எம்.பி, சார்ள்ஸ் நிர்மலநாதன் பேசியபோது, கூட்டமைப்பின் அத்தனை சரிவிற்கும் இரா.சம்பந்தனே காரணமென முகத்திலறைந்தாற்போல சொன்னார். குறிப்பாக, தேசியப்பட்டியல் விவகாரத்தில் சதி நடந்துள்ளது. அதற்கு துணை போயுள்ளீர்கள்.

மாவை சேனாதிராசாவுடன் நீங்கள் தொலைபேசியில் பேசியபோது, நான் மாவை சேனாதிராசாவின் வீட்டில்- அவருக்கு பக்கத்தில் உட்கார்ந்திருந்தேன். நீங்கள் கேட்டு, தேசியப்பட்டியல் நியமனத்தை ஏற்க தயாராக இருப்பதாக அவர் உங்களிடம் சொன்னதை நான் எனது இரண்டு காதுகளாலும் தெளிவாக கேட்டேன் என திரும்பத்திரும்ப அழுத்தி சொன்னார்.

நிலைமை அப்படியிருக்க, மாவை தேசியப்பட்டியல் நியமனத்தை ஏற்க தயாராக இருந்தது தெரியாதென இப்பொழுது பொய் சொல்கிறீர்கள் என்றார்.

ஒரே குடும்பம்

சம்பந்தன் உரையாற்றிய போது, தமிழ் அரசு கட்சி ஒரு குடும்பத்தை போன்றது. அனைவரும் குடும்ப உறுப்பினர்களாக ஒற்றுமைாக செயற்பட வேண்டுமென்றார். இதன்போது ஒருவர் குறுக்கிட்டு- “இதுவரை நாம் அப்படித்தான் நினைத்து வந்தேன். ஆனால் தேசியப்பட்டியல் உள்ளிட்ட உங்களின் நடவடிக்கையை கவனித்தபோது, நீஙகள் கட்சி உறுப்பினர்களை குடும்ப அங்கத்தவர்களாக கருதாமல்- ஓரவஞ்சனையுடன் செயற்படுவது தெரிகிறது. நீங்கள் இப்படி நடந்து கொண்டு கட்சி ஒற்றுமையை எப்படி காப்பது என கேள்வியெழுப்பினார்.

பதவிவிலக தயாரான கலையரசன்

தேசியப்பட்டியல் விவகாரத்தில் இவ்வளவு குழுப்பம் நீடித்தால், அதை சரி செய்ய தேசியப்பட்டியல் நியமனத்திலருந்து விலகுவதாக அறவிக்க தயாராக இருப்பதாக கலையரசன் குறிப்பிட்டார்.

எனினும், இந்த சர்ச்சை அம்பாறைக்கு வழங்கியதால் உருவானதல்ல, ஒரு சதி நடவடிக்கையால் வழக்கப்பட்டதால் உருவானது என விளக்கமளிக்கப்பட்டது.

குட்டிக்கதை சொன்ன துரை

நேற்றைய மத்தியகுழு கூட்டத்தில் சிக்கி, சின்னாபின்னாமாகியது செயலாளர் துரைராசசிங்கம். வடிவேலு முட்டுச்சந்துக்குச் சிக்கியதை போல, பெரும்பாலான உறுப்பினர்களால் நையப்புடைக்கப்பட்டார்.

துரைராசசிங்கத்திற்கு அனைத்து உறுப்பினர்களும் துரைராசசிங்கத்தை சீரழித்துக் கொண்டிருந்தபோது, சுமந்திரன், சாணக்கியன் ஆகியோர் துரைராசசிங்கத்திற்கு பேச சந்தர்ப்பம் வழங்கும்படி கேட்டனர். இதையடுத்து கூட்டம் அவரை பேச அனுமதித்தது.

திருக்குறளில் ஒரு குறள் உள்ளது, ஔவையாரின் பாடலில் இப்படியுள்ளது, சிலப்பதிகாரத்தில் அப்படியுள்ளது என அந்த நூல்களில் உள்ளவற்றை குறிப்பிட்டு கொண்டிருந்தார்.

உடனே கே.வி.தவராசா எழுந்து- ஒரு பானை இருந்தது. காகம் கல்லை போட்டது. நீர் மிதந்தது. உடனே காகம் தண்ணீர் குடித்தது என கதை கேட்கவோ, வடை சுட்ட கதை கேட்கவோ இந்த கூட்டம் கூடவில்லை. இங்கே கட்சிக்குள் ஒரு சதி நடந்துள்ளது. அதை விவாதிக்க கூடியிருக்கிறோம். சதியில் செயலாளர் மட்டும் சம்பந்தப்படவில்லை. பின்னணியில் யார் இருந்தார்கள் என்பதெல்லாம் கண்டுபிடிக்கப்பட்டு, நடவடிக்கையெடுக்கப்பட வேண்டுமென சூடாக தெரிவித்தார்.

குட்டிக்கதை கூறுவதை விட்டவிட்டு உட்காருங்கள் என செயலாளரை சபை கூட்டாக குரல் கொடுக்க, செயலாளர் சத்தமின்றி உட்கார்ந்து விட்டார்.

இரண்டு கையையும் உயர்த்தி இளைஞரணி தலைவர்

செயலாளரை மாற்றுவதற்கு ஆதரவானவர்கள் கையை உயர்த்துங்கள் என திடிரென ஒருவர் கூற, கூட்டத்திலிருந்த சுமந்திரன், சாணக்கியன், குருநாதன், ப.சத்தியலிங்கம், மற்றும் வவுனியாவிலிருந்து வந்திருந்த இருவர் தவிர்ந்த மற்றையவர்கள் கையை உயர்த்தினர். மட்டக்களப்பிலிருந்த வந்திருந்த கட்சியின் இளைஞர் அணி தலைவர் கி.சேயோன் எழுந்த நின்று இரண்டு கைகளையும் உயர்த்தினார்.

பின்னர், செயலாளர் துரைராசசிங்கம், அம்பாறைக்கு தேசியப்பட்டியல் நியமனம் வழங்கியது பிழையென கருதுபவர்கள் கையை உயர்த்துங்கள் என்றார். உடனே கூட்டமே எழுந்து நின்று, பிரச்சனையை திசைதிருப்பாதீர்கள், இது அம்பாறைக்கு வழங்கப்பட்டது சரியா, தவறா என்பதல்ல விவகாரம். நீங்கள் செய்த சதி பற்றியதே விவாதம் என்றனர். அதன் பின்னர் கூட்டம் முடியும்வரை- இடையிடையே தண்ணீர் குடிப்பதற்கு தவிர, வேறெதற்கும் செயலாளர் வாயே திறக்கவில்லை.

https://www.pagetamil.com/142905/

  • கருத்துக்கள உறவுகள்

இது உண்மையிலே நடந்த விடயங்கள் என்றால் - சபாஷ் பேஜ்தமிழ் - அருமையான அரசியல் புலனாய்வு.

கற்பனை/கட்டுகதை என்றால் - சபாஷ் பேஜ்தமிழ் - சிறப்பான கற்பனை வளம்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

திருக்குறளில் ஒரு குறள் உள்ளது, ஔவையாரின் பாடலில் இப்படியுள்ளது, சிலப்பதிகாரத்தில் அப்படியுள்ளது என அந்த நூல்களில் உள்ளவற்றை குறிப்பிட்டு கொண்டிருந்தார்.

Screenshot-2020-08-30-17-06-28-855-org-m

அவரை விட்டு விடுங்கோ.. ☺️

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, goshan_che said:

இது உண்மையிலே நடந்த விடயங்கள் என்றால் - சபாஷ் பேஜ்தமிழ் - அருமையான அரசியல் புலனாய்வு.

கற்பனை/கட்டுகதை என்றால் - சபாஷ் பேஜ்தமிழ் - சிறப்பான கற்பனை வளம்.

கற்பனை கட்டுக்கதை என்றால் எங்கள்  அண்ணன் சுமத்திரன் பார்த்துக்கொண்டு இருப்பாரா ? கனடா  காசு கணக்கு கேட்ட சொந்த கட்சி மகளிர் அணி தலைவி மீதே 100 கோடி மானநஷ்ட்ட வழக்கு போட்ட வழக்கு சிங்கம் இப்படியான இடத்தில் கொறட்டை  விட்டு தூங்குவரா ?  தூங்குவரா ? (வானத்தில் எட்டுப்பக்கமும் இருந்து தூங்குவரா எனும் கேள்வி வருவதைப்போல கற்பனை பண்ணிக்கொள்ளவும் )😁

5 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

அவரை விட்டு விடுங்கோ.. ☺️

தொடர்ந்து கதை சொல்லியிருந்தால் ...............................................😁

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

இது உண்மையிலே நடந்த விடயங்கள் என்றால் - சபாஷ் பேஜ்தமிழ் - அருமையான அரசியல் புலனாய்வு.

கற்பனை/கட்டுகதை என்றால் - சபாஷ் பேஜ்தமிழ் - சிறப்பான கற்பனை வளம்.

இவ்வளவு விடயங்களையும் செய்தியாளர் வரிக்குவரி தெளிவாக எழுதுபவராக உள்ளபடியால் அவரது நினைவாற்றல் / றெக்கோடிங் ஆற்றல் திறனைப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை. எனவே TNA யில் அவருக்கு செயளாளர் பதவி வளங்கப்பட்டு minutes எழுத விடவேண்டுமென்று சிபாரிசு செய்கிறேன் 😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Kapithan said:

இவ்வளவு விடயங்களையும் செய்தியாளர் வரிக்குவரி தெளிவாக எழுதுபவராக உள்ளபடியால் அவரது நினைவாற்றல் / றெக்கோடிங் ஆற்றல் திறனைப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை. எனவே TNA யில் அவருக்கு செயளாளர் பதவி வளங்கப்பட்டு minutes எழுத விடவேண்டுமென்று சிபாரிசு செய்கிறேன்

இப்பதானே உளவுக்கருவிகளின் விலை ஒரு நாளைய உணவுதேவைக்கான சிலவை விட குறைவாக உள்ளது .

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, Kapithan said:

இவ்வளவு விடயங்களையும் செய்தியாளர் வரிக்குவரி தெளிவாக எழுதுபவராக உள்ளபடியால் அவரது நினைவாற்றல் / றெக்கோடிங் ஆற்றல் திறனைப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை. எனவே TNA யில் அவருக்கு செயளாளர் பதவி வளங்கப்பட்டு minutes எழுத விடவேண்டுமென்று சிபாரிசு செய்கிறேன் 😂

38 minutes ago, பெருமாள் said:

இப்பதானே உளவுக்கருவிகளின் விலை ஒரு நாளைய உணவுதேவைக்கான சிலவை விட குறைவாக உள்ளது .

உளவுகருவியையும் உள்ளே கொண்டு போக ஆள் வேணுமெல்லோ?

சொல்லமுடியாது- ஒரு அதி விசேச கவனிப்புக்கு அதையும் செய்ய ரெடியான ஆக்களும் இருக்ககூடும்.

முந்தி சந்திரிகா காலத்தில் சண்டே டைம்ஸ் கபினெட்டில் நடப்பதை வரிக்கு வரி எழுதும்.

மகிந்த செய்த முதல் வேலை இந்த கசிவை தடுத்ததுதான்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, பெருமாள் said:

 சிங்கள பின்னணியுடைய சாணக்கிய ராகுல வீரபுத்திரன் 

இதோ அடுத்த வரலாற்று புனைவு!

இவர் முன்னாள் எம்பி இராசமாணிக்கத்தின் பேரன்.

இவரின் பெயர் சாணக்கியன் ராகுல் வீரபுத்திரன் இராசமாணிக்கம்.

இவரின் மனைவி ஒரு சிங்களவர் என அறிகிறேன்.

முன்னர் சு.கவில் போட்டியிட்டு தோற்றார்.

இதுதானே பிண்ணனி? 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

இதோ அடுத்த வரலாற்று புனைவு!

இவர் முன்னாள் எம்பி இராசமாணிக்கத்தின் பேரன்.

இவரின் பெயர் சாணக்கியன் ராகுல் வீரபுத்திரன் இராசமாணிக்கம்.

இவரின் மனைவி ஒரு சிங்களவர் என அறிகிறேன்.

முன்னர் சு.கவில் போட்டியிட்டு தோற்றார்.

இதுதானே பிண்ணனி? 

வாசகர்கள் சிறிது சிந்திக்காவிட்டால் தலையில் மிளகாய் அரைத்துவிடுவார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

இதோ அடுத்த வரலாற்று புனைவு!

இவர் முன்னாள் எம்பி இராசமாணிக்கத்தின் பேரன்.

இவரின் பெயர் சாணக்கியன் ராகுல் வீரபுத்திரன் இராசமாணிக்கம்.

இவரின் மனைவி ஒரு சிங்களவர் என அறிகிறேன்.

முன்னர் சு.கவில் போட்டியிட்டு தோற்றார்.

இதுதானே பிண்ணனி? 

கவனம்! ஏதாவது நேச்சர் பேப்பரைக் கொண்டு வந்து இணைத்து விட்டு "இங்கே பார், அங்கே பார், மேலே பார், கீழே பார்" என்று சாமி பட வில்லன் மாதிரி பேசி  காதில் பூந்தோட்டம் வைத்து விடுவார்கள்!😇

  • கருத்துக்கள உறவுகள்

விசுகர், ஏன் இந்த வேதனை முகம்? யாழில் தேர்தல் நேரமும் சரி இப்போதும் சரி பிடிக்காத அரசியல் வாதிகளைப் பற்றி பொய்யான தகவல்களைப் பெருப்பித்துப் பரப்பியதையே குறிப்பிட்டேன்! இன்னொரு சந்தர்ப்பத்தில் பத்திரிகை தர்மம் பற்றிய உங்கள் அக்கறையைக் கவனித்தேன்! இந்த செய்திகள் வெளிவந்த விதம் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என சொல்லுங்கள்?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

உளவுகருவியையும் உள்ளே கொண்டு போக ஆள் வேணுமெல்லோ?

இன்னும் பழைய காலத்தில் தான் இருக்கிறியள் உங்கள் போன் மொடல் தெரிந்தால் காணும்  உளவு மென்பொருள் நிறுவுகிறார்கள்  கூலிக்கு உங்கள் போனை தொடாமலே உங்களுக்கு தெரியாமலே போனின் மைக் கமரா என்பன தொலைவில் இருந்து கட்டுப்படுத்தலாம் .

கடைசி  நேர யுத்த காலகட்டத்திலே இலங்கையிலே பொன்னர் ராணுவ கலந்துரையாடலுக்கு சிமார்ட்  போனை கொண்டுவரக்கூடாது என்று தடையே போட்டவர்  பத்து வருடத்துக்கு முன்பே சிங்களவர்கள் அலெர்ட் இப்ப கூட இங்கு அதி முக்கியமான கூட்டம்கள்  நடக்கும்போது மல்டி ஜாமர் இல்லாமல் மேல் நாடுகளில்  நடப்பதில்லை . விக்கி பிடியாவையும் கூகிளையும்  நம்புறதை விட்டு ரிவேர்ஸ் சேர்ச் செய்யுங்க . 

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, பெருமாள் said:

ஓம் பாருங்கோ,

நீங்கள் மட்டும்தான் உதெல்லாம் அறிஞ்சு வச்சிருக்கிறியள். நாங்கள் இன்னும் விரலால சுழட்டுற போந்தான் 🤣

உந்த விசயங்கள் நியூசில வந்தாலும் படிக்கிறேல்ல.

எங்கட சிமார்ட் போன்ல கொம்புயூட்டர்ல spyware அனுப்பி செய்ய கூடிய ஆபத்துகள் பற்றி நாங்கள் வேலை செய்யுற நிறுவனங்ளும் எங்களுக்கு சொல்வதில்லை.

பேசாம லண்டன்ல யூனிவர்சிட்டி, நிறுவனக்களில் வேலை எண்டு அலையாம ஒரு கடையை போட்டிருந்தா இண்டைக்கு கொஞ்சம் IT knowledge ஆவது வளர்ந்திருக்கும். 

தவறவிட்டுட்டம்.

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, goshan_che said:

பேசாம லண்டன்ல யூனிவர்சிட்டி, நிறுவனக்களில் வேலை எண்டு அலையாம ஒரு கடையை போட்டிருந்தா இண்டைக்கு கொஞ்சம் IT knowledge ஆவது வளர்ந்திருக்கும். 

தவறவிட்டுட்டம்.

இன்னும் காலம் போகேல்லை! இப்ப நினைத்தாலும் கொஞ்சம் பொது அறிவை வளர்த்துக்கொள்ளலாம்! நான் சொன்னது கடை வச்சு!!

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Eppothum Thamizhan said:

இன்னும் காலம் போகேல்லை! இப்ப நினைத்தாலும் கொஞ்சம் பொது அறிவை வளர்த்துக்கொள்ளலாம்! நான் சொன்னது கடை வச்சு!!

உண்மைதான். நானும் செய்யலாம் எண்டுதான் நினைக்கிறன். நானும் சொன்னது கடை வைக்கிறததான்.

அது சரி யாழ் களத்தில் நீங்கள் அடிகடி கொடுக்கும் அட்வைஸ் -

1. தனிமனித தாக்குதல் - கூடாது 

2. மற்றையவருக்கு ஒரு விசயம் தெரியாது என்று மட்டம் தட்டி எழுத - கூடாது

3. திரிக்கு சம்பந்தமில்லாமல் எழுதுவது -அறவே கூடாது

ஆனால் இது என் போன்ற சிலருக்கு மட்டும்தானோ? அல்லது பெருமாள் போன்ற உங்கள் நண்பர்களுக்கும் உங்களுக்கும் கூட பொருந்துமோ?

ஏன் கேட்கிறன் எண்டா இப்படியான அட்வைஸை நீங்கள் அவர்களுக்கு கொடுப்பது மாரியும் தெரியவில்லை நீங்களே பின் பற்றுவதுமாரியும் தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

விசுகர், ஏன் இந்த வேதனை முகம்? யாழில் தேர்தல் நேரமும் சரி இப்போதும் சரி பிடிக்காத அரசியல் வாதிகளைப் பற்றி பொய்யான தகவல்களைப் பெருப்பித்துப் பரப்பியதையே குறிப்பிட்டேன்! இன்னொரு சந்தர்ப்பத்தில் பத்திரிகை தர்மம் பற்றிய உங்கள் அக்கறையைக் கவனித்தேன்! இந்த செய்திகள் வெளிவந்த விதம் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என சொல்லுங்கள்?

வேதனை முகம் போட்டதற்கு காரணம் வேறு திரிகளில் நடப்பதை எல்லாம் எல்லா இடத்திலும் காவுவதற்காக... 

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, goshan_che said:

உண்மைதான். நானும் செய்யலாம் எண்டுதான் நினைக்கிறன். நானும் சொன்னது கடை வைக்கிறததான்.

அது சரி யாழ் களத்தில் நீங்கள் அடிகடி கொடுக்கும் அட்வைஸ் -

1. தனிமனித தாக்குதல் - கூடாது 

2. மற்றையவருக்கு ஒரு விசயம் தெரியாது என்று மட்டம் தட்டி எழுத - கூடாது

3. திரிக்கு சம்பந்தமில்லாமல் எழுதுவது -அறவே கூடாது

ஆனால் இது என் போன்ற சிலருக்கு மட்டும்தானோ? அல்லது பெருமாள் போன்ற உங்கள் நண்பர்களுக்கும் உங்களுக்கும் கூட பொருந்துமோ?

ஏன் கேட்கிறன் எண்டா இப்படியான அட்வைஸை நீங்கள் அவர்களுக்கு கொடுப்பது மாரியும் தெரியவில்லை நீங்களே பின் பற்றுவதுமாரியும் தெரியவில்லை.

கோஷான், நீங்கள் கேட்ட கேள்வி "உளவுகருவியையும் உள்ளே கொண்டு போக ஆள் வேணுமெல்லோ?" என்பது. அதற்கு பெருமாள் கூறிய விளக்கத்தில் எந்தவித பிழையும் இருப்பதாக தெரியவில்லையே! இப்போதைய தொழில்நுட்ப வசதியில் இது மிக சுலபமானது என்று எழுதியதாகவே எனக்கு விளங்கியது! நீங்களும் நையாண்டியாக எழுதினால்  பதிலும் அப்படித்தானே வரும்??

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

ஓம் பாருங்கோ,

நீங்கள் மட்டும்தான் உதெல்லாம் அறிஞ்சு வச்சிருக்கிறியள். நாங்கள் இன்னும் விரலால சுழட்டுற போந்தான் 🤣

உந்த விசயங்கள் நியூசில வந்தாலும் படிக்கிறேல்ல.

எங்கட சிமார்ட் போன்ல கொம்புயூட்டர்ல spyware அனுப்பி செய்ய கூடிய ஆபத்துகள் பற்றி நாங்கள் வேலை செய்யுற நிறுவனங்ளும் எங்களுக்கு சொல்வதில்லை.

பேசாம லண்டன்ல யூனிவர்சிட்டி, நிறுவனக்களில் வேலை எண்டு அலையாம ஒரு கடையை போட்டிருந்தா இண்டைக்கு கொஞ்சம் IT knowledge ஆவது வளர்ந்திருக்கும். 

கூல் கூல் நீங்களும் கபித்தனும்  ஒன்றா கபித்தனுக்கு எழுதிய கருத்துக்கு நீங்கள் ஏன்  கஞ்சி  பானைக்குள் தலையை குடுத்து மாட்டின  ஆடு போல் சுவர் வேலிஎல்லாம் இடித்துக்கொண்டு துள்றியல் .

உங்கடை கற்பனையில் உள்ள கதைகளை இங்கு எழுதி விட்டு ஆதாரம் கேட்டால் ஓடி  ஒளியும் உங்களை போல் நானில்லை .

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Eppothum Thamizhan said:

கோஷான், நீங்கள் கேட்ட கேள்வி "உளவுகருவியையும் உள்ளே கொண்டு போக ஆள் வேணுமெல்லோ?" என்பது. அதற்கு பெருமாள் கூறிய விளக்கத்தில் எந்தவித பிழையும் இருப்பதாக தெரியவில்லையே! இப்போதைய தொழில்நுட்ப வசதியில் இது மிக சுலபமானது என்று எழுதியதாகவே எனக்கு விளங்கியது! நீங்களும் நையாண்டியாக எழுதினால்  பதிலும் அப்படித்தானே வரும்??

எ பொ த,

எனது கேள்வி அதுதான், ஆனால் இன்றைய உலகில் ஒரு கோவில் கூட்டத்தில் கூட smart phone ஐ ரிசப்சனில் கொடுத்து விட்டு வாருங்கள் என்பதுதானே நடைமுறை?

அப்படி இருக்க சுமந்திரன் போன்றவர்கள், ஒரு காரசாரமாக நடக்கும் என எதிர்பார்கப்பட்ட கூட்டத்தில் இந்த அடிப்படை பாதுகாப்பு நடவடிக்கையை கூடவா எடுக்க மாட்டர்கள்?

என்னதான் ஒரு smart phone ஐ பேஜ்தமிழ் hack பண்ணினாலும், அந்த smart phone ஐ ரிசப்சன் லாக்கரில் வைத்து பூட்டினால் ஒன்றும் செய்ய முடியாதே?

ஆகவே எதோ ஒரு கருவியை அல்லது போனை உள்ளே கொண்டுபோக ஒருவரின் உதவி தேவைப்படும். இதைதான் நான் சொன்னேன்.

 இதை விளங்கிகொள்ளாமல் -பெருமாள் பதில் எழுதினார்.

அதை எப்படி எழுதினார்?  

பழைய காலத்தில் இருக்கிறீர்கள் (யாழில் எழுதுபவரில் என்னை விட வயசு குறைந்தவர் ஒரு சிலரே), கூகிள், விக்கிபீடியாவை நம்பாமல் ரிவேர்ஸ் சேர்ச் செய்யுங்கள் என்று.

ஆனால் ஏனோ இவை ஏதும் உங்கள் கண்ணுக்கு புலப்படவே இல்லை.

பெருமாளுக்கு என்னில் பழைய கறள் என்பதும் அதை அவர் ஒவ்வொரு திரியில் கொட்டுவதும் கடந்த 2 நாள்களாக அவர் பதிவதை பார்தோருக்கு புரியும்.

யாழில் குழுவாதம் மிகைபட்ட நாள்கள் இருந்தன. இப்போ பெரும்பாலான கருத்தாளர் ஒரு conscious effort எடுத்து இதை தவிர்கிறார்கள். சகல பக்கங்களிலும்.

இது ஒரு நல்ல மாற்றம். ஆனால் பெருமாள் இன்னும் பழைய பிரச்சினைகளை விட்டு வெளியே வரவில்லை.

அவரும் வருவார். காத்திருப்போம்.

ஆனால் நீங்கள் அடிக்கடி உரிமையாக சில விடயங்களை சுட்டுவதால் - இவை தனியே ஒரு சிலருக்கு மட்டுமான அட்வைஸா என்ற சந்தேகம் எழுந்தது - அதுதான் கேட்டேன்.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, goshan_che said:

கூல் கோஷான். இப்போது புலனாய்வு கருவிகளை இப்படியான மண்டபங்களில் பொருத்துவது அவ்வளவு கஷ்டமில்லை. ஆனால்  ஒருவரின் உதவி கட்டாயம் இருந்திருக்கும். யாரந்த கறுப்பாடு!!

இந்த சின்னவிஷயத்துக்கே கோபப்பட்டால், உங்கள் அமெரிக்கா நண்பர் எழுதும் கருத்துக்களுக்கு மற்றவர்களுக்கு எப்படி கோபம் வருமென்று கொஞ்சம் யோசித்து பாருங்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Eppothum Thamizhan said:

கூல் கோஷான். இப்போது புலனாய்வு கருவிகளை இப்படியான மண்டபங்களில் பொருத்துவது அவ்வளவு கஷ்டமில்லை. ஆனால்  ஒருவரின் உதவி கட்டாயம் இருந்திருக்கும். யாரந்த கறுப்பாடு!!

இந்த சின்னவிஷயத்துக்கே கோபப்பட்டால், உங்கள் அமெரிக்கா நண்பர் எழுதும் கருத்துக்களுக்கு மற்றவர்களுக்கு எப்படி கோபம் வருமென்று கொஞ்சம் யோசித்து பாருங்கள். 

🤣

கறுப்பாடு - உந்த கூட்டமே கறுப்பாட்டு மந்தைதானே🤣

அமெரிக்க நண்பர் - 🤣 🤣🤣 அவரென்ன என்ர சம்பந்த குடியே 🤣🤣🤣. எனக்கு எல்லாரையும் போல அவரும் ஒரு கள உறவுதான். அவருக்கும் அப்படித்தான்.

எம்மிடையே கருத்து ஒற்றுமை உண்டு - அதனால் இயல்பாக சில சமயம் we feed off each other. 

தவிரவும் அவரது கருத்துகள் என் பார்வையில் மேலானவையாக தெரிவதால் - இயற்கையாக எழும் மரியாதையும் இருக்கிறது.

தவிரவும் இங்கே நாம் (நான் என்னை பற்றித்தானே சொல்ல முடியும்) ஒரு agenda வோடு இயங்கவெல்லாம் இல்லை ஐயா🤣.

நாம் ஏதோ சிங்களவனிடம் காசு வாங்கி எழுதுகிறோம், தேசியத்தை அழிப்பதே எம் குறிக்கோள் என்பதெல்லாம் மிகு கற்பனைகள்.

தமிழை விட்டால் எமக்கு ஏது அடையாளம்?

தமிழ் தேசியத்தை விட்டால் எமக்கு ஏது வேறு புகலிடம்?

என்ன எமது அணுகுமுறை வேறாக இருக்கிறது. அவ்வளவுதான்.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, goshan_che said:

உளவுகருவியையும் உள்ளே கொண்டு போக ஆள் வேணுமெல்லோ?

சொல்லமுடியாது- ஒரு அதி விசேச கவனிப்புக்கு அதையும் செய்ய ரெடியான ஆக்களும் இருக்ககூடும்.

முந்தி சந்திரிகா காலத்தில் சண்டே டைம்ஸ் கபினெட்டில் நடப்பதை வரிக்கு வரி எழுதும்.

மகிந்த செய்த முதல் வேலை இந்த கசிவை தடுத்ததுதான்.

சாணக்கியனும் ,சும் ஒரு இடத்தில் அமர்ந்து இருந்தார்கள். போட்டோ பார்த்தேன்  ...சாணக்கியரின் கையில் போன் இருந்தது ...போன் கொண்டு போகக் கூடாது என்று யார் சொன்னது?

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, ரதி said:

சாணக்கியனும் ,சும் ஒரு இடத்தில் அமர்ந்து இருந்தார்கள். போட்டோ பார்த்தேன்  ...சாணக்கியரின் கையில் போன் இருந்தது ...போன் கொண்டு போகக் கூடாது என்று யார் சொன்னது?

இதுக்குத்தான் அக்காச்சி வேணும் எண்டுறது.

எல்லாம் ஊகத்தில அடிச்சு விடுறதுதான் அக்காச்சி.

போட்டோ எடுத்த பிறகு போனை வெளில வையுங்கோ எண்டு சொல்லலாம். ஆகவே மீடிங் தொடங்க முதல் எடுத்த போட்டோவை வச்சிம் சொல்லேலா.

இதையே உப்பிடி நவரசம் சொட்ட எழுதற பேஜ்தமிழ், ஓடியோ கிளிப் கிடச்சா விட்டிருப்பாங்களே?

இன்னேரம் யூடியூப் லைக்கை அள்ளி இருப்பங்கள்.

நாளைக்கு வெளியிடுறாங்களோ தெரியா🤣

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

தமிழை விட்டால் எமக்கு ஏது அடையாளம்?

தமிழ் தேசியத்தை விட்டால் எமக்கு ஏது வேறு புகலிடம்?

என்ன எமது அணுகுமுறை வேறாக இருக்கிறது. அவ்வளவுதான்.

இவை  உங்களின் அடிமனதில் இருந்துவந்த சொற்களென்றால் மிகுந்த சந்தோசமே!🙏

Edited by Eppothum Thamizhan

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, Eppothum Thamizhan said:

இவை  உங்களின் அடிமனதில் இருந்துவந்த சொற்களென்றால் மிகுந்த சந்தோசமே!🙏

தமிழ் தேசியத்தை நேசிக்கும் அனைவரும் அதை ஒரே சீருடைப் பாணியில் நேசிக்கமாட்டார்கள் என்பதும், அப்பரும் சுந்தரரும் போல தமிழ் தேசியத்துக்கு தொண்டரடிகளும், நண்பரடிகளும் இருப்பார்கள் என்ற வீசாலமான பார்வை வாய்க்கப்பெற்றால், இந்தவார்தைகள் என் அடிமனதில் இருந்தே வந்தன என்பது புரியும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.