Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மகாவம்சத்தை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்ற விக்கியின் கருத்துக்கு, டயனா... கடும் எதிர்ப்பு.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மகாவம்சத்தை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்ற விக்கியின் கருத்துக்கு, டயனா கமகே கடும் எதிர்ப்பு

spacer.png
மகாவம்சத்தை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்ற நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரின் கருத்துக்கு, இன்று நாடாளுமன்றில் ஆளும் தரப்பு உறுப்பினரான டயனா கமகே கடும் எதிர்ப்பினை பதிவு செய்திருந்தார்.

நாடாளுமன்றில் அவர் மேலும் தெரிவிக்கையில், “நாடாளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரன் அன்மையில் தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு நேர்க்காணல் ஒன்றை வழங்கியிருந்தார். இதன்போது, மகாவம்சத்தை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்றதொரு கருத்தை அவர் கூறியிருந்தார்.

அத்தோடு, வடக்குக் கிழக்கில் பௌத்தர்கள் இல்லாத காரணத்தினால், புத்தர் சிலைகளை நிறுவி வழிப்படத் தேவையில்லை என்றும் அவர் தெரிவித்திருந்தார். இவரது இவ்வாறான கருத்தை நாம் கவணத்தில் கொள்ள வேண்டிய தேவையில்லை.

ஏனெனில், மகாவம்சத்தை பௌத்தர்கள் அனைவரும் ஏற்றுக்கொண்டுள்ளார்கள். இதனை உலகமே அங்கிகரித்துள்ளது. அத்தோடு, இது பௌத்த நாடு என்ற வகையில், புத்தர் சிலைகளை இலங்கையின் எந்த பாகத்தில் வைக்கவும், விகாரைகளை அமைக்கவும் எமக்கு உரிமையுள்ளது.

இது எமக்கான மத உரிமையாகும். பௌத்தத்திற்கு மட்டுமல்லாமல் ஏனைய மதங்களுக்கும் இதே உரிமை உள்ளது” என கூறினார்.

http://athavannews.com/மகாவம்சத்தை-ஏற்றுக்கொள்/

  • Replies 50
  • Views 4.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

டயானா தேவையில்லாமல் கதைச்சு நாறப்போறார்.

மாகாவம்சத்தை ஏற்பது என்றால், சிங்கத்துக்கும், மனிதப் பெண்ணுக்கும் பிறந்தது தான் சிங்கபாகு, சிங்கவல்லி..... அவர்களினால் வந்ததே சிங்களவர்கள் என்ற கதையை ஏற்றுக்கொள்வீர்களா என்றால்.... கதை கந்தல்...

  • கருத்துக்கள உறவுகள்

எந்த உலகம் மகாவம்சத்தை அங்கீகரித்துள்ளது?

எந்த உலகம் மகாவம்சத்தை அங்கீகரித்துள்ளது?

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, nunavilan said:

எந்த உலகம் மகாவம்சத்தை அங்கீகரித்துள்ளது?

எந்த உலகம் மகாவம்சத்தை அங்கீகரித்துள்ளது?

சும்மா எடுத்துவிடுறதுக்கெல்லாம் ஆதாரம்  தேடவோ, கேட்கவோ கூடாது. எழுபது வருடமாய் சொன்னதையே  இப்பவும் சொல்கிறோம்,  இன்று மட்டும் யாராவர், கேள்வி ஆதாரம் கேட்கிறது?

  • கருத்துக்கள உறவுகள்
On 9/9/2020 at 17:59, Nathamuni said:

சிங்கத்துக்கும், மனிதப் பெண்ணுக்கும் பிறந்தது தான் சிங்கபாகு, சிங்கவல்லி

பகிடி விடுகிறீர்கள் ஆதாரமில்லாமல்.

இதுக்கு அந்தக்கால  சிங்கத்தின் விந்தணுவை, அந்தக்கால ஓர் பெண்ணின் கரு முட்டையுடன் சேர்த்து என்ன வருகிறது (இல்லை வரவில்லை) என்பதை கண்டால் தான் நாங்கள் ஆதாரம் என்போம். 

We are damn freaking serious about. Are you kidding? 

அந்தக்கால  சிங்கத்தின் விந்தணுவை, அந்தக்கால ஓர் பெண்ணின் DNA உம்  இல்லை, மறு ஆக்கம் செய்து கூட பரிசோதனை  செய்வதற்கு. 

  • கருத்துக்கள உறவுகள்
On 9/9/2020 at 17:59, Nathamuni said:

சிங்கத்துக்கும், மனிதப் பெண்ணுக்கும் பிறந்தது தான் சிங்கபாகு, சிங்கவல்லி

கேள்வி, மகாவம்சம் சொல்வதை, விஞ்ஞானம் என்று வாய் கிழிய கத்தும் British Historians, மகாவம்சத்தை சிங்களவரின் வரலாறு என்று ஏற்றுக் கொண்டதை , இங்கு ஆதாரம் கேட்போரின் நிலைப்பாடு என்ன?

12 minutes ago, Kadancha said:

பகிடி விடுகிறீர்கள் ஆதாரமில்லாமல்.

இதுக்கு அந்தக்கால  சிங்கத்தின் விந்தணுவை, அந்தக்கால ஓர் பெண்ணின் கரு முட்டையுடன் சேர்த்து என்ன வருகிறது (இல்லை வரவில்லை) என்பதை கண்டால் தான் நாங்கள் ஆதாரம் என்போம். 

We are damn freaking serious about. Are you kidding? 

அந்தக்கால  சிங்கத்தின் விந்தணுவை, அந்தக்கால ஓர் பெண்ணின் DNA உம்  இல்லை, மறு ஆக்கம் செய்து கூட பரிசோதனை  செய்வதற்கு. 

🤔

  • கருத்துக்கள உறவுகள்
On 9/9/2020 at 18:12, nunavilan said:

எந்த உலகம் மகாவம்சத்தை அங்கீகரித்துள்ளது?

நீங்கள்  ஜேசு பௌத்த துறவி எனும் திரியை வாசிக்கவில்லை. அல்லது உங்களுக்கு புரியவில்லை.      

இங்கு ஆதாரம் கேட்பவர்கள் என்ன சொல்லுகிறார்கள்.

தமிழ் முதலில் வந்தது என்பதை நிரூபிக்க வேண்டும் (முதலில் வந்தா இல்லயா என்பதை விடுங்கள்). அது எஞ்ஞான வாதம் என்பதையும் விட்டு விடுங்கள்.

அதே வாதத்தின் படி, மகாவம்சத்தை மறுப்பவர்கள் தான் முதலில் நிரூபிக்க வேண்டும் அந்தக்கால சிங்கத்தின் விந்தணு, அந்த கால மனித பெண்ணின் கரு முட்டையுடன் சேர்ந்து, ஓர் உயிர்கருவை ஆக முடியாது என்று.

அவர்கள் சொல்லுகிறார்கள் அது விஞ்ஞானம் என்று. 

அது உண்மையானால், எதுக்கும் முதல், இந்தக்காலத்தில் இதை ( சிங்கத்தின் விந்தணு,  மனித பெண்ணின் கரு முட்டையுடன்) பரிசோதனை செய்வதற்கான சாத்தியத்தை ஆராய்வது ஆக  குறைந்தது வாதத்தை முன்னைநகர்த்த உதவும்.

நாம் ஆயுதப் போராடத்திற்கு செலவழித்த பணத்தில் மட்டும், ஓர் இம்மியான கடுகளவி கடுகான பணத்தை (மட்டும்), ஆப்பிரிக்காவில் உள்ள எதாவது ஓர் அரசுக்கு இலஞ்சம் கொடுத்தாவது இதை செய்து இருந்தால், இவ்வளவு இழப்பை  தாவிற்த்து இருக்கலாமோ என்று இந்த தோன்றுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

இதுதான் அரைவேக்காட்டுதனம்.

மஹாவம்சம் ஒரு வரலாற்று புரட்டு என்பதை நாம் இங்கே 2013 இல் இருந்து பல தடவை எழுதியாயிற்று.

மஹாவம்சத்தை போல் தாங்களும் தமிழர் தொன்மையை பற்றி அரைவேக்காட்டு ஆராய்சிகளை (ஒன்லைனில்) செய்து, அதை நாம் கேள்வி கேட்டால்?

நீ ஏன் மகாவம்சத்தை கேள்வி கேட்கல்ல என்று நம்மள பார்த்தே சிரிகாம சீரியஸ்சா கேள்வி கேட்கிறாங்க🤣

மஹாவம்சம், 

குமரி கண்டம்

15,000 ஆண்டு பழைய துறைமுகத்தை கண்டு பிடிச்சட்டோம். 

இது எல்லாமே “குபீர் சிரிப்பு” பகுதியில் சேர்கவேண்டிய விடயங்கள்.

கொஞ்ச காலம் - இந்திய வெளியுறவு துறை எனக்கு மட்டும் ரகசியமா சொன்ன செய்தியின் படி,

மோடி முடிவெடுத்திட்டர், ராஜபக்சேக்கு சேதி சொன்னார் என்ற டுபாக்கூர் கதைகளை அள்ளி விட்டார்கள்.

அதெல்லம் சப் என்றாகிவிட்டதால் இப்போ வரலாறு. 

கொடுமை.

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, goshan_che said:

மஹாவம்சம் ஒரு வரலாற்று புரட்டு என்பதை நாம் இங்கே 2013 இல் இருந்து பல தடவை எழுதியாயிற்று.

நீங்கள் சொன்னதின் படி, சிங்கத்துக்கும், மனித பெண்ணிற்கும் உயிரணு தோன்றமுடியாது என்பதை நிரூபிக்க வேண்டும்.

அதன் பின்பே,  அதை மறுக்க முடியும்.    

விஞ்ஞான அடிப்படை மாறாது. 

உங்களுக்கு மகாவம்சத்தை பற்றி மற்றவர்கள் செய்த ஆய்வு தெரியாது என்பதை இதன் மூலம் தெரியாமலே கூறி விட்டீர்கள். 

14 minutes ago, goshan_che said:

குமரி கண்டம்

நான் சொல்லவில்லை.

15 minutes ago, goshan_che said:

15,000 ஆண்டு பழைய துறைமுகத்தை கண்டு பிடிச்சட்டோம். 

மனிதர்கள் வாழ்ந்திருக்கலாம் என்பதற்கனா சுட்டி.
 
17 minutes ago, goshan_che said:

இது எல்லாமே “குபீர் சிரிப்பு” பகுதியில் சேர்கவேண்டிய விடயங்கள்.

கிந்தியாவின்  nio செய்த வயது ஆய்வை (7500) மறுப்பதற்கும் விடவா?

19 minutes ago, goshan_che said:

மஹாவம்சத்தை போல் தாங்களும் தமிழர் தொன்மையை பற்றி அரைவேக்காட்டு ஆராய்சிகளை (ஒன்லைனில்) செய்து, அதை நாம் கேள்வி கேட்டால்?

Online உசாத்துணையாக. ஆனால் அவற்றில் மூலம், எல்லாமே ஏதோ ஓர் விதத்தில் field research.

Cladwell இன் Dravidian முக்கியமான மைல் கல் தமிழின் வரலாற்றை திருப்பியதில், அது புறக்கணிகப்பட்டது.  

அதே போல, இலங்கை தீவில் நடந்து ஒருவருக்குமே (அதற்குள்  இருப்பவர்களை தவிர) தெரியாத விடயமும் தரப்பட்டது. 

ஆனால் உங்களின் உங்களின் அறிவுக்கு அப்பாமையால் என்பதால் கருத்தில் எடுக்கவில்லை.

42 minutes ago, goshan_che said:

கொஞ்ச காலம் - இந்திய வெளியுறவு துறை எனக்கு மட்டும் ரகசியமா சொன்ன செய்தியின் படி,

மோடி முடிவெடுத்திட்டர், ராஜபக்சேக்கு சேதி சொன்னார் என்ற டுபாக்கூர் கதைகளை அள்ளி விட்டார்கள்.

நான் அறிந்தவற்றை சொன்னேன் ஓர் நிபந்தனையுடன், கிந்தியா வெளிப்படையான கால எல்லை விதிக்காவிட்டால் ஒன்றுமே கருத்தில் எடுக்கப்பட முடியாது என்பது. 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

மஹாவம்சம் ஒரு வரலாற்று புரட்டு என்பதை நாம் இங்கே 2013 இல் இருந்து பல தடவை எழுதியாயிற்று.

விக்கி சொல்ல முதல் அத்தக்காதவை பற்றி நீங்கள் அறியவில்லை என்பது வெளிப்படை. இப்போதும் உங்களுக்கு தெரியாது என்பது உங்களின் பதிலில் தெரிகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் species (இனம்) என்றால் அதன் விஞ்ஞான வரைவிலக்கணம் என்ன என்பதை ஒரு ஆண்டு 10 புத்தகத்தில் படியுங்கள். சிங்கம் ஒரு இனம். மனிதன் இன்னொரு இனம். வேறு வேறு family. வேறு, வேறு phylum. இரெண்டும் இனகலப்பில் ஈடுபட்டு சந்ததி உருவாக முடியாது. இது அடிபடை விஞ்ஞானம். 

ஆண்டு 10 படித்தாலே மாஹாவம்சம் அம்புலிமாமா கதை என்பது விளங்கும். ஆராய்சி எல்லாம் தேவையில்லை.

15,000 ஆண்டுக்கு முன் மனிதர்கள் வாழ்ந்தார்கள் என்பதற்கு எதற்கையா ஆதாரம்- அது எல்லாருக்கும் தெரியுமே🤣

நான் அந்த திரியில் சொன்னது குமரி கண்டம் கடலில் அமிழ்ந்திருக்க கூடிய வாய்ப்புள்ள 12,000 ஆண்டுகளுக்கு முன் தமிழர், தமிழ் உருவாகி விட்டது என்பதற்கு ஆதாரம் இல்லை. என்பது மட்டுமே.

அதை மறுக்கிறேன் பேர்வழி என வெளிகிட்டு, எதை எதை எல்லாமோ இணைத்து கடைசியில் அந்த திரியை வாழைபழ காமெடி ஆக்கி விட்டீர்கள்.

மகாவம்சம் பற்றி விக்கி சொல்லமுதலே இதே யாழில் பலவாறு அலசபட்டாகிவிட்டது. தேவைபட்டால் பழைய திரிகளை பாருங்கள். 

அது சரி, நீங்கள் ரகசியமா இந்திய வெளியுறவு துறையிடம் கேள்வி பட்ட “மோடி ராஜபக்சேக்கு கடும் தொனியில் சொன்ன செய்தி” என்னாவாச்சு🤣

அதுவும் “குபீர் சிரிப்பு” வகையா🤣

இதற்கு மேல் இந்த திரியில் எழுதினால் தேவையில்லாமல் நான் bullying குற்றச்சாட்டுக்கு ஆளாக வேண்டும் என்பதால். 

இத்தோடு விடை பெறுகிறேன். 

பிகு: ஒரு திரியில் தர்க தோல்வி அடைந்தால் அதை இன்னொரு திரியில் தொடர்வது கள விதிக்கு முரணானது. நாகரிகமும் இல்லை.

39 minutes ago, Kadancha said:

நீங்கள் சொன்னதின் படி, சிங்கத்துக்கும், மனித பெண்ணிற்கும் உயிரணு தோன்றமுடியாது என்பதை நிரூபிக்க வேண்டும்.

அதன் பின்பே,  அதை மறுக்க முடியும்.    

விஞ்ஞான அடிப்படை மாறாது. 

உங்களுக்கு மகாவம்சத்தை பற்றி மற்றவர்கள் செய்த ஆய்வு தெரியாது என்பதை இதன் மூலம் தெரியாமலே கூறி விட்டீர்கள். 

நான் சொல்லவில்லை.

மனிதர்கள் வாழ்ந்திருக்கலாம் என்பதற்கனா சுட்டி.
 
கிந்தியாவின்  nio செய்த வயது ஆய்வை (7500) மறுப்பதற்கும் விடவா?

Online உசாத்துணையாக. ஆனால் அவற்றில் மூலம், எல்லாமே ஏதோ ஓர் விதத்தில் field research.

Cladwell இன் Dravidian முக்கியமான மைல் கல் தமிழின் வரலாற்றை திருப்பியதில், அது புறக்கணிகப்பட்டது.  

அதே போல, இலங்கை தீவில் நடந்து ஒருவருக்குமே (அதற்குள்  இருப்பவர்களை தவிர) தெரியாத விடயமும் தரப்பட்டது. 

ஆனால் உங்களின் உங்களின் அறிவுக்கு அப்பாமையால் என்பதால் கருத்தில் எடுக்கவில்லை.

நான் அறிந்தவற்றை சொன்னேன் ஓர் நிபந்தனையுடன், கிந்தியா வெளிப்படையான கால எல்லை விதிக்காவிட்டால் ஒன்றுமே கருத்தில் எடுக்கப்பட முடியாது என்பது. 

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்

மகாவம்சம் விக்கியார் இருவரையும் பிறகு பார்ப்போம் 

யார் இந்த டயானா ஆன்டி?
அறிமுக நாளே ...
அமர்க்களம் ஆனார் 

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Maruthankerny said:

மகாவம்சம் விக்கியார் இருவரையும் பிறகு பார்ப்போம் 

யார் இந்த டயானா ஆன்டி?
அறிமுக நாளே ...
அமர்க்களம் ஆனார் 

🤣

ஆளப் பார்த்தால்....இன்னும் 30 வருசத்தில ஹிரு அண்ணி இப்படித்தான் இருப்பா என யோசிச்சன். 

இந்தா நீங்கள் வந்துட்டியள் 🤣

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Maruthankerny said:

மகாவம்சம் விக்கியார் இருவரையும் பிறகு பார்ப்போம் 

யார் இந்த டயானா ஆன்டி?
அறிமுக நாளே ...
அமர்க்களம் ஆனார் 

அமர்களம் ஆவதற்கு இனவாதம் முக்கியம் என்பதை நன்கு அறிந்த ஆண்ரி.20 வருடத்தின் பின்பு இவர் தான் சிறிலங்கா மாதாவின் ஜனாதிபதி....‍ஹிரிணிக்கா அக்கா ஜனாதிபதியாக முடியாது

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, goshan_che said:

அதை மறுக்கிறேன் பேர்வழி என வெளிகிட்டு, எதை எதை எல்லாமோ இணைத்து கடைசியில் அந்த திரியை வாழைபழ காமெடி ஆக்கி விட்டீர்கள்.

பதில் இல்ல விட்டால் பகிடி.

12 minutes ago, goshan_che said:

முதலில் species (இனம்) என்றால் அதன் விஞ்ஞான வரைவிலக்கணம் என்ன என்பதை ஒரு ஆண்டு 10 புத்தகத்தில் படியுங்கள். சிங்கம் ஒரு இனம். மனிதன் இன்னொரு இனம். வேறு வேறு family. வேறு, வேறு phylum. இரெண்டும் இனகலப்பில் ஈடுபட்டு சந்ததி உருவாக முடியாது. இது அடிபடை விஞ்ஞானம். 

ஆண்டு 10 படித்தாலே மாஹாவம்சம் அம்புலிமாமா கதை என்பது விளங்கும். ஆராய்சி எல்லாம் தேவையில்லை.

18 minutes ago, goshan_che said:

மகாவம்சம் பற்றி விக்கி சொல்லமுதலே இதே யாழில் பலவாறு அலசபட்டாகிவிட்டது. தேவைபட்டால் பழைய திரிகளை பாருங்கள். 

அப்படி என்றால், ஏன் அத்தகைதாவுக்கு அவ்வளளவு வெளியார் ஆய்வு.

அதை பற்றி அலசப்பட்டு இருக்க வாய்ப்பில்லை என்பதே நீங்கள் சொல்வதை வைத்து ஊக்கி கூடியது.

அத்தகாதவும் அலசப்பட்டுள்ளது என்றால், ஒரேயொரு கேள்வி, அத்தக்காதவை  எந்த  அடைமொழியுடன்  அழைப்பார்கள்  என்பதை சொல்லுங்கள், ஓர் இடமும் தேடாமல்.

மிகுதிக்கு பதில் அளிக்கிறேன்.  

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Kadancha said:

மேலேயே எழுதிவிட்டேன்.

இதற்கு மேல் இந்த திரியில் எழுதினால் தேவையில்லாமல் நான் bullying குற்றச்சாட்டுக்கு ஆளாக வேண்டும் என்பதால். 

உங்களுக்கு பதில் அளிக்க என்னால் முடியவில்லை.

மருதர்,

முடிஞ்சளவு முயற்சிகிறேன் பாத்துகோங்க்கோ 😂

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

உங்களுக்கு பதில் அளிக்க என்னால் முடியவில்லை.

ஒரே ஓர் அடை சொல். இவ்வளவு நேரம் தேவை இல்லை.

அத்தக்கதவையும் சேர்த்து இரண்டு சொற்கள்.

எனவே இங்கு முறையாக அலசப்படவில்லை என்பதை ஊகிக்க முடிகிறது.

அது தெரியாமல் இவரு அலசப்பட்டதாக சொல்கிறீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Kadancha said:

ஒரே ஓர் அடை சொல். இவ்வளவு நேரம் தேவை இல்லை.

அத்தக்கதவையும் சேர்த்து இரண்டு சொற்கள்.

எனவே இங்கு முறையாக அலசப்படவில்லை என்பதை ஊகிக்க முடிகிறது.

அது தெரியாமல் இவரு அலசப்பட்டதாக சொல்கிறீர்கள்.

உங்கள் ஊகம் பிழை.

  • கருத்துக்கள உறவுகள்
Just now, goshan_che said:

உங்கள் ஊகம் பிழை.

சொல்லுங்கள் அந்த சொல்லை. அது தலைப்பு போன்றது. 
 
  • கருத்துக்கள உறவுகள்

அன்புள்ள கடஞ்சா, உங்களுக்கு விஞ்ஞானமுறையை விளக்குவது வீண் என்று வேறொரு இடத்தில் அறிந்தேன். எனவே  பதில் உங்களுக்கல்ல! ஏனையோருக்கு: சிங்கமும் மனிதனும் வேறு வேறு இனங்கள் (Species), எனவே கருக்கட்டல் நிகழ்ந்து சந்ததி வராது! அப்படியே வந்தாலும் அது மலடாக (sterile) இருக்கும் (எனவே சிங்கள வழித்தோன்றல்கள் பெருகியிருக்க இயலாது!) 

கடஞ்சாவுக்கு: சக்கரத்தை மீளக் கண்டு பிடிக்க ஆசையிருந்தால் எனக்கு ஒரு grant தாருங்கள்! நான் ஒரு வருடம் இதை ஆய்வு செய்து உங்களுக்கு அறிக்கை சமர்ப்பிக்கிறேன்! 😜

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் பழைய திரிகளில் தேடி பாருங்கள். சகலதும் எழுத்தில், தமிழில்தான் உள்ளது.

நான் உங்கள் காரியதரிசி அல்ல. இங்கே எனக்கு முதலே பலர் பலவிதமாக மஹாவம்சத்தை பற்றி எழுதி உள்ளார்கள். பல வருடங்களுக்கு முன்.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, goshan_che said:

உங்கள் ஊகம் பிழை.

  நேரம் பொதும்.  மறக்க கூடிய சொல்ல அல்ல.  நான் சொல்கிறேன்.

அந்த அதைச் சொல் சிஹல.

Just now, goshan_che said:

யாழில் பழைய திரிகளில் தேடி பாருங்கள். சகலதும் எழுத்தில், தமிழில்தான் உள்ளது.

நான் உங்கள் காரியதரிசி அல்ல. இங்கே எனக்கு முதலே பலர் பலவிதமாக மஹாவம்சத்தை பற்றி எழுதி உள்ளார்கள். பல வருடங்களுக்கு முன்.

ஹல  அத்தக்காதா.

1 minute ago, goshan_che said:

யாழில் பழைய திரிகளில் தேடி பாருங்கள். சகலதும் எழுத்தில், தமிழில்தான் உள்ளது.

நான் உங்கள் காரியதரிசி அல்ல. இங்கே எனக்கு முதலே பலர் பலவிதமாக மஹாவம்சத்தை பற்றி எழுதி உள்ளார்கள். பல வருடங்களுக்கு முன்.

சிஹல  அத்தக்காதா.

மறக்க கூடிய சொல்ல அல்ல.

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Kadancha said:

சிஹல  அத்தக்காதா.

இதன் பின்னே ஓர் வரலாறே உள்ளது. 

உங்கள் மகாவம்ச  புலமையை அல்லது நினைவை சோதிப்பது எனது நோக்கமல்ல.

மகாவம்சம் முறையாக அலசப்படத்தியின், இது வந்து இருக்க வேண்டும்.

ஆனால் அத்தகாதவில் அது குறிப்பிடப்படவில்லை.

அது வன்சத்தப்பகாசினி இல் குறிப்பிடப்படுகிறது.    

14 minutes ago, Justin said:

அன்புள்ள கடஞ்சா, உங்களுக்கு விஞ்ஞானமுறையை விளக்குவது வீண் என்று வேறொரு இடத்தில் அறிந்தேன். எனவே  பதில் உங்களுக்கல்ல! ஏனையோருக்கு: சிங்கமும் மனிதனும் வேறு வேறு இனங்கள் (Species), எனவே கருக்கட்டல் நிகழ்ந்து சந்ததி வராது! அப்படியே வந்தாலும் அது மலடாக (sterile) இருக்கும் (எனவே சிங்கள வழித்தோன்றல்கள் பெருகியிருக்க இயலாது!) 

சில வேளைகளில் நான் கற்க முடியாத என்று நினைக்கலாம், தவறு அல்ல.

நான் கற்றுக்  கொள்ள முடியாத நபர் என்று நினைபதே தவறு.

  • கருத்துக்கள உறவுகள்

எனது பரிசோதனை கருத்தில் இருந்து நீங்கள் முடிவை எடுத்தால், உங்கள் படித்த வட்டதிட்ற்குள் சிந்தனை குறுகிவிட்டது என்று அர்த்தம் என்றே நான் புரிந்து கொள்ள வேண்டி உள்ளது. 

21 minutes ago, Justin said:

கடஞ்சாவுக்கு: சக்கரத்தை மீளக் கண்டு பிடிக்க ஆசையிருந்தால் எனக்கு ஒரு grant தாருங்கள்! நான் ஒரு வருடம் இதை ஆய்வு செய்து உங்களுக்கு அறிக்கை சமர்ப்பிக்கிறேன்!

  • கருத்துக்கள உறவுகள்

large.3B976374-763C-44F5-BC93-1FF618C624D4.jpeg.de6f3c2ad20ac533494b945eeb219f5f.jpeg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.