Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மகாவம்சத்தை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்ற விக்கியின் கருத்துக்கு, டயனா... கடும் எதிர்ப்பு.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அப்படி இருந்தும் (சிங்கம் -மனித பெண் இணைப் பெருக்கம் சாத்தியமல்ல), மகாவம்சம் ஆய்வு செய்யப்பட்டு இருக்கிறது.

அந்த ஆய்வின் அடிப்படையிலே, ஆங்கிலேயர் சிங்களத்துக்கு இது உங்களின் வீடு மட்டும் தான் என்று நம்பிக்கை வளர்த்து, சிங்கள அடையாளத்தை கட்டி எழுப்பினர்.

இது சுதந்த்திரத்துக்கு முதல் 1-2 வருடங்களில் செய்யக் கூடியது அல்ல.     
 
  • Replies 50
  • Views 4.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

The Mahāvaṃsa, Or, The Great Chronicle of Ceylon, 1912

The life & works of Buddhaghosa, B. C. Law 1923

On the Chronicles of Ceylon Book by Bimala Churn Law, 1947

இது நான் அறிந்தவற்றில் முக்கியமான ஆய்வுகள்.

ஓர் சிறு குறிப்பு சிங்களத்தை பற்றி இந்த ஆய்வில், எங்கே இவர்கள் சிங்களத்தை கொண்டு சென்று விட்டு இருக்கிறார்கள் என்பதை காட்டுவதற்கு. 

The identification of Lala by Geiger with Lata on the western coast of India above Gujarat does not wholly meet the situation. The oldest form of the Sinhalese language, as found in the early Brahmi inscriptions, appears as an Indo-Aryan dialect, which is very closely allied to the language of tho Mansehra version of Asoka’s Rock Edicts. In accounting for all these facts the historian cannot but think of Sirµhapura in the lower eastern Punjab. The change of the genitive suffix sya (Pali ssa) into ha is a distinctive characteristic of old Sinhalese, which is without its parallel in any of the earlier known inscriptions of India. This goes to connect the language with Old Persian in which we have hya for sya and the Dardic speech of Dardistan. It is near about Dardistan that there still dwell a people called Singhans, i.e. Simhalas (Pali Sihalas).

  • கருத்துக்கள உறவுகள்

நான் மகாவம்ச நிபுணர் அல்ல.

இவர்கள் எவ்வாறு வரலாற்று கதையை (narrative) ஐ உருவாக்குகிறார்கள் என்பதற்கு மட்டுமே.

இவை எல்லாம், நான் முன்பு சொன்னது போல, விஜயன் வந்து இறங்கியதாக கொள்ளப்படும் இன்றைய மன்னர் பிரதேசத்தில் ஓர் சிறு ஆய்வுகளையும் மேற்கொள்ளாமல்.

இதனால் தான் சொறி சிங்களம், பெரியமடு, செட்டி  குள குடியேட்டர்களை, கால ஆய்வு வரை முடித்து விட்டு மூடிவிட்டது.    

பின்பு பார்ப்போம் மிகுதியை. 

  • கருத்துக்கள உறவுகள்

Dayana வின் படம் பிளீஸ்.... 🙏

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, Kapithan said:

Dayana வின் படம் பிளீஸ்.... 🙏

spacer.png

இந்தாங்கோ... கபிதன். 
இது, காணுமா... இன்னும் வேணுமா... :grin:

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, தமிழ் சிறி said:

spacer.png

இந்தாங்கோ... கபிதன். 
இது, காணுமா... இன்னும் வேணுமா... :grin:

டாங்ஸ் சிறியர். 👍

but

உப்பும் காரமும் காணாது. விக்கியரை எதிர்க்கிற ஆளை நான் வடிவா பார்க்கோணும் .. 🙏

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

spacer.png

இந்தாங்கோ... கபிதன். 
இது, காணுமா... இன்னும் வேணுமா... :grin:

படம் போதும் 
கணவருடன் எவ்வாறு வாழ்க்கை போகிறது 
என்று ஏதாவது தகவல் தெரியுமா?

கோசான்தான் கேட்க சொன்னார். 

Diana.jpg?resize=260%2C390&ssl=1

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, Maruthankerny said:

படம் போதும் 
கணவருடன் எவ்வாறு வாழ்க்கை போகிறது 
என்று ஏதாவது தகவல் தெரியுமா?

கோசான்தான் கேட்க சொன்னார். 

Diana.jpg?resize=260%2C390&ssl=1

வெறி..சொறி...  நான், "மாமா"  வேலை பார்க்க மாட்டேன்.  :grin:  😂

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, தமிழ் சிறி said:

வெறி..சொறி...  நான், "மாமா"  வேலை பார்க்க மாட்டேன்.  :grin:  😂

கோசானுக்கு சொல்லிவிடுங்கோ 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Maruthankerny said:

படம் போதும் 
கணவருடன் எவ்வாறு வாழ்க்கை போகிறது 
என்று ஏதாவது தகவல் தெரியுமா?

கோசான்தான் கேட்க சொன்னார். 

Diana.jpg?resize=260%2C390&ssl=1

இப்படித் தான் காலம்,காலமாய் பெண்களை வளர விடாமல் தடுக்கிறார்கள்  

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, ரதி said:

இப்படித் தான் காலம்,காலமாய் பெண்களை வளர விடாமல் தடுக்கிறார்கள்  

50க்கு 50 என்பதுக்கு நாம் எப்போதும் குரல்கொடுத்து வருகிறோம் 
இப்படி ஒரு குற்றச்சாட்டை எந்த மன சாட்ச்சியும் இல்லாமல் வைக்கிறீர்கள்?

பல பெண்களுக்கு குடும்ப வாழ்கை பொதுவாழ்க்கைக்கு தடையாக 
இருப்பதால் அவர்கள் குடும்ப வாழ்க்கை சுமூகமாக இருக்கிறதா?
பொதுவாழ்க்கை தொடருமா? என்று ஒரு கேள்வி வருவது தவறா? 
 
  • கருத்துக்கள உறவுகள்

சிஹல  அத்தக்காதா என்பது பாளி மொழியில் உள்ள  வன்சத்தப்பகாசினி ( மகாவம்ச-திக்க இல், இது ஆய்வாளர் கொடுத்த பெயரா அல்லது உண்மையிலேயே வன்சத்தப்பகாசினி என்பதற்கு மறு பெயரா என்பதை காண முடியவில்லை)  குறிப்பிடப்படுகிறது என்றே சொல்லி இருந்தேன்.

காரணம், சிஹல  அத்தக்காதா (அதாவது  சிஹல பாஷாவில் அத்தக்காதா) எழுதப்பட்ட எனும் நூல் இல்லை. ஏனெனில், எல்லாமே  பாளி மொழியில்.

வன்சத்தப்பகாசினி  (மகாவம்ச-திக்க) என்பது  மகாவம்சத்தின் வர்ணனைகள் (commentaries) பாளி மொழியில். இதுவே  சிஹல  அத்தக்காதா ஐ பற்றி கதைக்கிறது.

இரண்டு கதைகள் உள்ளது. இரண்டுக்குமே ஆதராம் இல்லை. இங்கு சுருக்கமாகவே சொல்கிறேன். 

 சிஹல  அத்தக்காதாவே முதல் சிஹல பாஷாவில் எழுதப்பட்டதாகவும் ( அதாவது பாளியில் உள்ள  வன்சத்தப்பகாசினி,  மகாவம்ச-திக்க) , அதன் பாளியிலான மொழிபெயர்ப்பே (வெளியூருக்கு அறிவிப்பதத்திற்காக) மஹாவம்சம் என்பது ஒன்று.

அப்படியானால், சிஹல  அத்தக்காதா எவ்வாறு இல்லாமல் போனது பல நூற்றாண்டுகளாக நூல்களை கட்டிக்காத்த மஹாவிகாரை (அனுராதபுரம்) இல் இருந்து. 

முதல் பாளியில் எழுதப்பட்ட நூலில் (வன்சத்தப்பகாசினி) , பிற்கலத்தில் (வேண்டுமென்றே)  'சிஹல  அத்தக்காதா' மஹாவிகாரை (அனுராதபுரம்) ஆல்  புகுத்தப்பட்டதாக இருப்பது இன்னொமொரு கதை.

சிங்களம் இரண்டாவதை மாறுகிறது, அத்தக்காத வேறு தேரவாத மையங்களிலும் இருக்கிறது அவற்றிலும்  சிஹல  அத்தக்காதா குறிப்பிடப்படுகிறது என்பதை மேற்கோள் காட்டி.

இவையெல்லாம் தெரியவேண்டியதில்லை. இவற்றை விட இன்னும் இருக்கிறதோ என்றும் எனக்கு தெரியாது.

அலசப்பட்டதாயின், சிஹல  அத்தக்காதா என்பது வரலாற்று சுருக்கமாக வந்து இருக்க வேண்டும் என்பதே நான் சொல்ல வருவது.

மற்றும் படி, ஒன்றுமில்லை. முடிக்கிறேன் அத்தகாதவை பற்றிய பதிவை. 

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Maruthankerny said:

50க்கு 50 என்பதுக்கு நாம் எப்போதும் குரல்கொடுத்து வருகிறோம் 
இப்படி ஒரு குற்றச்சாட்டை எந்த மன சாட்ச்சியும் இல்லாமல் வைக்கிறீர்கள்?

பல பெண்களுக்கு குடும்ப வாழ்கை பொதுவாழ்க்கைக்கு தடையாக 
இருப்பதால் அவர்கள் குடும்ப வாழ்க்கை சுமூகமாக இருக்கிறதா?
பொதுவாழ்க்கை தொடருமா? என்று ஒரு கேள்வி வருவது தவறா? 
 
ஆம் தவறு தான் ...காலம் ,காலமாய் பெண்களை அடக்க கணவர் இருக்காரா.குடும்பம் இருக்கா என்று கேட்டு அவர்களை அடக்குவதே வேலையாய் போயிட்டுது 

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Kadancha said:

சிஹல  அத்தக்காதா என்பது பாளி மொழியில் உள்ள  வன்சத்தப்பகாசினி ( மகாவம்ச-திக்க இல், இது ஆய்வாளர் கொடுத்த பெயரா அல்லது உண்மையிலேயே வன்சத்தப்பகாசினி என்பதற்கு மறு பெயரா என்பதை காண முடியவில்லை)  குறிப்பிடப்படுகிறது என்றே சொல்லி இருந்தேன்.

காரணம், சிஹல  அத்தக்காதா (அதாவது  சிஹல பாஷாவில் அத்தக்காதா) எழுதப்பட்ட எனும் நூல் இல்லை. ஏனெனில், எல்லாமே  பாளி மொழியில்.

வன்சத்தப்பகாசினி  (மகாவம்ச-திக்க) என்பது  மகாவம்சத்தின் வர்ணனைகள் (commentaries) பாளி மொழியில். இதுவே  சிஹல  அத்தக்காதா ஐ பற்றி கதைக்கிறது.

இரண்டு கதைகள் உள்ளது. இரண்டுக்குமே ஆதராம் இல்லை. இங்கு சுருக்கமாகவே சொல்கிறேன். 

 சிஹல  அத்தக்காதாவே முதல் சிஹல பாஷாவில் எழுதப்பட்டதாகவும் ( அதாவது பாளியில் உள்ள  வன்சத்தப்பகாசினி,  மகாவம்ச-திக்க) , அதன் பாளியிலான மொழிபெயர்ப்பே (வெளியூருக்கு அறிவிப்பதத்திற்காக) மஹாவம்சம் என்பது ஒன்று.

அப்படியானால், சிஹல  அத்தக்காதா எவ்வாறு இல்லாமல் போனது பல நூற்றாண்டுகளாக நூல்களை கட்டிக்காத்த மஹாவிகாரை (அனுராதபுரம்) இல் இருந்து. 

முதல் பாளியில் எழுதப்பட்ட நூலில் (வன்சத்தப்பகாசினி) , பிற்கலத்தில் (வேண்டுமென்றே)  'சிஹல  அத்தக்காதா' மஹாவிகாரை (அனுராதபுரம்) ஆல்  புகுத்தப்பட்டதாக இருப்பது இன்னொமொரு கதை.

சிங்களம் இரண்டாவதை மாறுகிறது, அத்தக்காத வேறு தேரவாத மையங்களிலும் இருக்கிறது அவற்றிலும்  சிஹல  அத்தக்காதா குறிப்பிடப்படுகிறது என்பதை மேற்கோள் காட்டி.

இவையெல்லாம் தெரியவேண்டியதில்லை. இவற்றை விட இன்னும் இருக்கிறதோ என்றும் எனக்கு தெரியாது.

அலசப்பட்டதாயின், சிஹல  அத்தக்காதா என்பது வரலாற்று சுருக்கமாக வந்து இருக்க வேண்டும் என்பதே நான் சொல்ல வருவது.

மற்றும் படி, ஒன்றுமில்லை. முடிக்கிறேன் அத்தகாதவை பற்றிய பதிவை. 

கடஞ்சா வீண் விரண்டா வாதங்களுக்கு 
உங்களின் நேரத்தை வீணாக்குகிறீர்கள் என்று எண்ணுகிறேன் 

ஒரு படிக்குமேலே பேசாமல் போய்விட வேண்டும். 

திருவள்ளுவர் திருக்குறள் எழுதியத்துக்கு 
உங்களிடம் சட்ட்லைட் வீடியோ ஆதாரம் இருக்குதா?
விஞ்ஞான பூர்வ ஆதாரம் இருக்கா?
எனும் இடங்களில் எல்லாம் பேசாமல் போவதுதான் சிறப்பு. 

சில கருத்துக்களின் மனோ  நிலையை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். 

நீங்கள் பாட்டு எழுதிக்கொண்டு இருந்தால்தான் 
சிலர் அதில் சொல்பிழை பிடித்து புலவர் ஆகிக்கொண்டு இருப்பார்கள்.

புலவர் என்றால் எதையாவது ஒரு பாட்டு எழுதுங்கள் என்று நீங்கள் போய் 
10-15 வருடம் கழித்து வந்தாலும் இந்த திரி வெறுமையைத்தான் இருக்கும் 

ஆக்கப்பூர்வமான எந்த ஒரு விவாத்துக்கும் வழி விடாத 
இடங்களில் தார்க்கம் பண்ணுவது என்பதும் தவறு 

  • கருத்துக்கள உறவுகள்

திருவள்ளுவர் திருக்குறள் எழுதவில்லை 
அதுக்கு எந்த விஞ்ஞான ஆதாரமும் இல்லை ஒரு விசர் கருத்தை 
நான் பதித்துவிட்டு போவேன்.

நீங்கள் உங்கள் நேரத்தில் எவ்வளவு நேரத்தை வீணடிப்பீர்கள் 
எனது விசர் கருத்து பொய் என்று நிரூபிக்க? 

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Maruthankerny said:

கடஞ்சா வீண் விரண்டா வாதங்களுக்கு 
உங்களின் நேரத்தை வீணாக்குகிறீர்கள் என்று எண்ணுகிறேன் 

ஒரு படிக்குமேலே பேசாமல் போய்விட வேண்டும். 

இதை சொல்வது ஏன் என்றால், இந்த மகாவம்சத்தில் ஆய்வை, முக்கியமாக anglo-saxon நாடுகளில் உள்ள அரசு மட்ட வரலாற்றுத் துறைகள், முழு ஆய்வும் இல்லாத புனையப்பட்ட வரலாறு, பொதுவாக நம்புகின்றன, ஏற்கின்றன.

அவர்கள் சொல்வது, legitimate aspiration. இதன் கருத்து, தமிழர்கள் கிந்தியாவின் 13 அல்லது அப்படிப்பட்ட பேச்சுக்கு சொல்லப்படும் அதிகார பரவலாக்கலோடு திருப்தி பட வேண்டும். அதுவரைக்குமே, தமிழர்களின் வரலாறு இலங்கைத் தீவில் உள்ளது.

US congress அல்லது senate library இல் மகாவம்சத்தின் மொழிபெயர்ப்பும், அதன் மூலமான இலங்கைத்  தீவின் வரலாறும் உள்ளது. அதன் தொனி, சிங்கலாக்கர் அளவிற்கு தமிழருக்கு இலங்கைத் தீவில் பூர்விகம் இல்லை என்பது.

ஆம், இதற்கு மேல் நேரம் வீண் என்றே நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

கடைசிவரை பின் லேடனின் விலாசத்தை கண்டுபிடிக்கவே இல்லை.

இந்த துணிவு யாருக்கு வரும் 

  • கருத்துக்கள உறவுகள்

இது மகாவம்சம் பற்றிய திரி.

எனவே தமிழின் தொன்மை பற்றி இதில் புகுத்த வேண்டிய அவசியம் இல்லை.

எனவே பகிடியாக எவர் முயன்றார்கள் என்பதை ஏனையோர் முடிவு செய்யலாம் 

சிகல, மற்றும் சிஹல இரு சொற்களையும் தேடியதில்,  அந்த சொற்கள் இருக்கும் ஆதியான திரி 2018 பதியப்பட்டது.  

ஆக குறைந்தது,  மகாவம்சம்  அலசப்பட்டு(மகாவம்சம் என்ற பதத்தில்) இருந்தால் அதில் (சிங்களத்தை பொறுத்தவரை) உள்ள மிக முக்கிய வரலாற்று அலகு  உள்ளடக்கப்படவில்லை என்பது தெரியாதோர், தமிழின் தொன்மை வரலாற்றை தேவை கூட இல்லாமல் புகுத்தி இருக்கின்றனர்.

புனையப்பட்ட கதைப்புத்தகத்தை வரலாறாக ஏற்க முடியுமா.. விக்கி விக்கிதான்

  • கருத்துக்கள உறவுகள்

யாருக்காவது தெரியுமா.... மகாவம்சத்தில் 2009ல் புலிகளை வென்று தமிழர்களை ஒடுக்கிய மகிந்தா வரலாறு இணைக்கப்பட்டு புதிய பதிப்பு வெளியானது என்று.

இந்த மகாவம்சத்தினை விக்கி தவறானது என எதிர்ப்பதால், சிங்களம் பதில் சொல்ல முடியாமல் விக்கிக்கொண்டு நிக்கிறது. 

  • கருத்துக்கள உறவுகள்

தங்களை கதாநாயகர்களாக மகா வம்சத்தில் புகழப்பட வேண்டும் என்னும் ஆசை இவர்களுக்கு உண்டு. அதனாலேயே தமிழரை அடக்குபவர்களாக தங்களை சிங்கள மக்களிடம் காட்டிக்கொள்கிறார்கள். மகிந்தவை இரண்டாம் துட்ட கைமுனு என்றும் புகழ்ந்தார்கள், விடுதலைப்போர் மௌனிக்கப்பட்ட பின். தன்னை அரசனாக சித்தரித்து  பதாதைகளும் வெளியிட்டார்கள். அரசு மாறியதால் நின்று போனது, இப்போ தொடருகிறார்கள். எனக்கென்னவோ இவர்களின் பேராசை எதிர்பாராத  இழப்பை இவர்களுக்கு கொடுக்கும் என்று தோன்றுகிறது. 

28 minutes ago, Nathamuni said:

சிங்களம் பதில் சொல்ல முடியாமல் விக்கிக்கொண்டு நிக்கிறது. 

அதனாற்தான் பயமுறுத்துகிறார்கள்.   

  • கருத்துக்கள உறவுகள்

இங்கிலாந்து போரின் மூலமாகவே அயர்லாந்து, வேல்ஸ் ஆகிய நாடுகளை தன்னுடன் இணைத்தது.

ஸ்காட்லாந்தினை ஒரு போதுமே போரில் வெல்ல முடியவில்லை.

பின்னர் 1707, இரு நாட்டுக்கும் ஒருவரே மன்னராக இருந்த காலத்தில் ஒன்றிணைவு ஒப்பந்தத்தினை செய்தே இங்கிலாந்துடன், ஸ்காட்லாந்து இணைந்து கொண்டது.

இப்போது பிரிய வேண்டும் என்று நினைத்த போது, துப்பாக்கி ஏந்தாமல், கோரிக்கையினை நியாயமாக வைக்க, குடியொப்பம் நடத்தி, மக்கள் நிராகரித்து விட்டனர். பின்னர் இன்னோரு குடியொப்பம் வேண்டும் என்று சொல்லிக்கொண்டிருக்கின்றனர்.

கனடாவில், இதே நிலை தான் கியூபெக் மாநிலத்துக்கும் நடந்தது, நடக்கின்றது.

இலங்கையில், தமிழர் பகுதி ஒரு போதும் சிங்களவர் கீழ் இருக்கவில்லை.

ஐரோப்பியர்கள் தமிழர்கள் ராசதானியை பிடித்து ஆண்டு, சிங்களவர்கள் கையில் கொடுத்து போனார்கள். கடந்த 73 வருடமாக எமக்குரிய உரிமைகளை வழங்க சிங்களம் தாயரில்லை.

விபரம் இல்லாத காலத்தில் துப்பாக்கி தூக்கினோம்.

இனி, இந்த ஸ்காட்லாந்து, கியூபெக் உதாரணத்துடன் தான் அரசியல் செய்து குடியொப்பம் வேண்டும் என்று சொல்ல வேண்டும்.

இவ்வாறு விடுதலை அடைந்த நாடுகள், கிழக்கு திமோர், கொசாவா, தென் சூடான்.

புலிகள் எமது சுமையாக இருந்த காலம் 2005 - 2009. 

அதேபோல யுத்த குற்றவாளிகளின் அரசு சிங்களவர்களின் சுமையாக இருக்கப்போகின்றது. கொரோனா காரணமாக தாமதமானாலும்.... அடுத்த வருடத்தில் இருந்து இது உணரப்படும்.

அந்த வேளையில் எமது அரசியலை சரியாக செய்யவேண்டும்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

யாருக்காவது தெரியுமா.... மகாவம்சத்தில் 2009ல் புலிகளை வென்று தமிழர்களை ஒடுக்கிய மகிந்தா வரலாறு இணைக்கப்பட்டு புதிய பதிப்பு வெளியானது என்று.

அந்த புதிய, பிறிம்பான புகுதியாக  இணைக்கப்பட்டு, மகாவம்சம் மீண்டும் அச்சிடப்பட்டது எல்லோருக்கும் தெரியும். 

இதற்கான வர்த்தகமானி அறிவிப்பும் செய்தியாக கண்டதாக நினைவு.

ஆனால், அதை நேரடியாக காணவில்லை.     

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, satan said:

தங்களை கதாநாயகர்களாக மகா வம்சத்தில் புகழப்பட வேண்டும் என்னும் ஆசை இவர்களுக்கு உண்டு. அதனாலேயே தமிழரை அடக்குபவர்களாக தங்களை சிங்கள மக்களிடம் காட்டிக்கொள்கிறார்கள். மகிந்தவை இரண்டாம் துட்ட கைமுனு என்றும் புகழ்ந்தார்கள், விடுதலைப்போர் மௌனிக்கப்பட்ட பின். தன்னை அரசனாக சித்தரித்து  பதாதைகளும் வெளியிட்டார்கள். அரசு மாறியதால் நின்று போனது, இப்போ தொடருகிறார்கள். எனக்கென்னவோ இவர்களின் பேராசை எதிர்பாராத  இழப்பை இவர்களுக்கு கொடுக்கும் என்று தோன்றுகிறது. 

அது தமிழருக்கு சார்பான அறுவடையாக இருக்கனும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.