Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ராசா அண்ணை

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, கிருபன் said:

ராசா அண்ணை போல இப்படி பலரும் இருக்கலாம். அவரைப் போல எதுவித நன்றிகளும் எதிர்பார்க்காமல் பிறருக்கு உதவுபவர்கள் இருப்பதால்தான் உலகம் இன்னமும் இயங்கிக்கொண்டு இருக்கின்றது.

ராசா அண்ணை புத்தகம் படித்தார் என்பது அவர் உங்களுக்கு படிக்கத்தந்த புத்தகங்களில் இருந்து தெரிகின்றது🙂. ஆனால் பட்டம், பதவி, சுயதம்பட்சம் இல்லாத எளிமையான மனிதர். அதனால்தான் எதையும் இலேசாக எடுத்து தன்னுடைய வாழ்க்கையை எதுவித பதட்டங்கள் இன்றி நடாத்துகின்றார்.

உண்மை கிருபன். ராசா அண்ணை போல் பலர் எமக்குள் இருக்கிறார்கள். பல்கலையோ, பட்டமோ ஏதுமற்ற மேதைகள். வாழ்வைப் பாடமாக வாழ்பவர்கள். இப்படியானவர்கள் போற்றுதற்குரியவர்கள். இவர்களில் ஒருவரான ராசா அண்ணையுடன் சிநேகம் கிடைத்ததில் பெருமைப்படுகிறேன்.

13 hours ago, Kadancha said:

புத்தக படிப்பு மற்றும் துறை சார்ந்த படிப்பு என்பது (விஞ்ஞானம் கூட) ஓர் reference framework.

அந்த frame work எவரின் சிந்தனை ஓட்டத்தில் பதிந்து விட்டால், அதை மீறி அவர்கள் வருவது கடினம்.

இதனால் தானோ, தமிழ் தலைவர்களால்  சிங்களத்தை கையாள முடியவில்லை என்று நான் அடிக்கடி எண்ணுவதுண்டு.

இதனாலேயே, இங்கு விஞ்ஞானம் என்றால் நாம் (அந்த விஞ்ஞானம் சொல்லும்) வரலாற்றை ஏற்கிறோம் என்பவர்களின் வாதம் தவறு  என்கின்றேன். 

இதை உங்களின் தனிப்பட்ட அனுபத்தில்  எழுதுவதற்கு மன்னிக்கவும்.

விஞ்ஞானம் ஒரு பகுதியாக இருக்க முடியுமே தவிர, அது சொல்லும் தரவு மட்டும்  வைத்து வரலாறு சொல்லப்பட முடியாது.

இயேசு பௌத்த துறவி எனும் திரியில் புதிய பதிவை ஐடா இருக்கிறேன். 

அது இதுவரைக்கும் இருக்கும் வரலாற்றை புரட்டிப் போடும்.

மற்றது, இந்த விஞ்ஞான ஆய்வுகள், வரலாற்றாய் பொறுத்தவரையில், ஏற்கனனவே இருக்கும் frame  work உடன் முரண்படும் கருதுகோள் என்றால், நிதி மறுக்கப்படுகிறது.

ஏட்டுச்சுரக்காய் கறிக்குதவாது என்பார்கள். சிலவேளைகளில் சில விடயங்களை ஏன்படிக்கிறோம் என்றுகூடத் தெரிவதில்லை. பரீட்சையின் பின்னர் அப்பாடத்தினை வாழ்நாளில் ஒருபோதுமே வாழ்க்கைக்குப் பாவித்திருக்க மாட்டோம். 

தமிழ்த் தலைமகள் பற்றி நீங்கள் கூறுவது சிந்திக்க வைக்கிறது. சட்டங்களைக் கரைத்துக் குடித்த தமிழ்த் தலைமகள், ஏதும் படிக்காத பாமரச் சிங்களத் தலைவர்களிடம் தோற்றுத்தான் போனார்கள். 

8 hours ago, உடையார் said:

எல்லாரும் ஒன்றாகதான் இருந்திருக்கின்றோம் எவ்வளவு சிறிய உலகம், அமுதனும் என் நண்பர்.... அவரின் கூட்டமும்..... கலையரசன் (உயரமானவன்).... தர்ஷனி.... 😂

அமுதனையும், கலையரசனையும் எனக்குத் தெரியும். பல்கலை முடியும்வரை அவர்களுடன் தொடர்பிலிருந்தேன். இவர்களுடன் தில்லை, சுரேஷ், சுரேஷன், சுரேஷலிங்கம், உமா, நரேன், யுதிஷ்ட்டன், ராஜேஷ் என்று ஒரு பெரிய அன்ரி கூறுப்பே இருந்தது. இனிமையானவர்கள். ஆரம்பக் காலத்தில் எனக்குப் பெருமளவு உதவிகளைப் புரிந்திருக்கிறார்கள்.

ஆனல், தர்ஷினியைத் தெரியவில்லை. தர்மினியைத் தெரியும், அது வேற கதை.

  • Replies 101
  • Views 10.9k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

ரஞ்சித், பொதுவாக நான்... கதைகள் படிப்பது குறைவு.
நேற்று, சும்மா ஒருக்கால் எட்டிப் பார்ப்போம் என்றுவந்து.. 
முதல் பந்தியை, வாசிக்க தொடங்கிய பின், அதனை விட்டு நகர முடியாமல்...
முழுப் பகுதியையும்... ஒரே மூச்சில் வாசிக்க வைத்து விட்டது உங்கள் எழுத்து. 👍

ராசா அண்ணை... பணக்கார குடும்பத்தில் பிறந்து,
திருமணவாழ்வு வரை... எத்தனையோ துன்பங்களை அனுபவித்த பின்பும்,
இன்று அவர்... பத்துப் பேருக்கு தொழில் வழங்கக் கூடிய நிலையில் இருக்கும்..
அவரது மனத் தைரியத்தை பார்த்து,  வியந்து போனேன். 🙏

உங்கள் கதையின் மூலம்... யாழ். களத்தில் மீண்டும், 
பழைய  நண்பர்கள் அறிமாகியுள்ளது.. இன்னும் சிறப்பு.  :)

எனது எழுத்தில அப்படி எதுவுமில்லை சிறி. என்னைப் பாதித்தவர்கள் பற்றி எழுதும்பொழுது உணர்ச்சிவசப்படுகிறேன், அதனால் சிலவேளைகளில் வாசிக்கும்படி வந்துவிடுகிறது.உங்க்களின் ஆதரவு மகிழ்ச்சியைத் தருகிறது. மிக்க நன்றி.

நீங்கள் சொல்வது மெத்தச்சரி. எனது பல்கலையின் பல நண்பர்களையும் இதால் அறிந்துகொண்டேன்.

24 minutes ago, Eppothum Thamizhan said:

நான் அப்போது Physics Lab இல் Instructor ஆக இருந்தேன். December 1995இல் வெளிநாடு வந்துவிட்டேன்.

உங்களை எனக்குத் தெரியும் அண்ணை. பெயர் மட்டும் கேட்காதேங்கோ. உங்களிட்ட கோஸ்வேர்க்கும் செய்து தந்திருக்கிறன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, சண்டமாருதன் said:

பதிவுக்கு நன்றி.

இறுதிப்போரும் தடைமுகாமும் துன்பங்களையும் கடந்து வாழ்வை தெடருவது ஒரு முன்னுதாரணம்தான். வாழ்க்கை குறித்த ஒரு புரிதலும் தேடலும் எப்போதும் ஒரு ஆரோக்கியத்தை எற்படுத்தும்

பணியிடத்தில் 35 வருடங்களாக வேலை செய்து இரண்டு மாதங்களுக்கு முன் ஓய்வுபெற்ற ஒருவர்  நேற்று காலை மரணித்து விட்டார் என்று  குறுஞ் செய்தி வந்தது. உடற் பருமனோ ஆரோக்கியக் குறைவோ அவருக்கு இருந்ததாக நான் கருதவில்லை.  தற்போதைய தொற்று நோயும் தாக்கவில்லை. எனது புரிதலின்படி வேலை அவரும் இயக்கும் சக்தியாக இருந்திருக்கலாம் அது முடிவுக்கு வந்ததும் அவரை பாதித்திருக்கலாம்.  குறைந்தது என்னுமொரு பத்து வருடம் ஒய்வூதியத்தில் வாழ்ந்திருக்காலம் என்று யோசித்தேன். 

ஒருவரின் வாழ்க்கை முறையும் இயல்பும் நல்ல ஒரு உணர்வை உங்களுக்கு ஏற்படுத்தியிருக்கின்றது. இங்கு பதிவதற்கு அதுவும் ஒரு காரணம். இங்கு பதிந்ததால் எமக்கும் ஒரு நல்ல உணர்வு அவரது அனுபவத்திலிருந்து கிடைக்கின்றது. 

உண்மை,

இங்கு வெள்ளையர்களிடம் ஒரு பொதுவான கருத்து இருக்கிறது. முடிந்தவரை வேலை செய்வார்கள். ஓய்வுபெறும் வயதெல்லை 67 என்றாலும்கூட, தொடர்ந்தும் வேலைக்குச் செல்வார்கள். எப்போது வேலையை விட்டு நிற்கிறார்களோ, அத்துடன் அவர்களது வாழ்வும் அஸ்த்தமிக்கத் தொடங்கிவிடும். நோய்கள், தனிமை, சலிப்பு என்று சிறிதுகாலத்திலேயே மரணமடைந்துவிடுவார்கள். இது உண்மைதான். என்னுடம் வேலைபார்க்கும் ஒரு வெள்ளையருக்கு 67 வயது. கண்பார்வைகூட சரியாக இல்லை. ஆனால், இன்றும் வருகிறார். ஒன்றில் நேர்சிங் ஹோமுக்குக் கொண்டுபோய்விடுவார்கள், வீட்டிலிருந்தாலும் இறந்துவிடுவேன், அதனால் தொடர்ந்தும் வேலைக்கு வந்துகொண்டிருக்கிறேன்  என்று அடிக்கடி சொல்வார். எவ்வளவு உண்மை.

ராசா அண்ணை பற்றி பொதுவெளியில் நான் எழுதியது எனது எண்ணங்களைப் பகிரத்தான், ஆனால் பலரினதும் கருத்துக்களைக் கேட்கும்பொழுது, பலவிடயங்களைப் புரிந்துகொள்ள முடிகிறது. உங்களின் கருத்துப் பகிவிற்கு மிக்க நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, ரஞ்சித் said:

 

அமுதனையும், கலையரசனையும் எனக்குத் தெரியும். பல்கலை முடியும்வரை அவர்களுடன் தொடர்பிலிருந்தேன். இவர்களுடன் தில்லை, சுரேஷ், சுரேஷன், சுரேஷலிங்கம், உமா, நரேன், யுதிஷ்ட்டன், ராஜேஷ் என்று ஒரு பெரிய அன்ரி கூறுப்பே இருந்தது. இனிமையானவர்கள். ஆரம்பக் காலத்தில் எனக்குப் பெருமளவு உதவிகளைப் புரிந்திருக்கிறார்கள்.

ஆனல், தர்ஷினியைத் தெரியவில்லை. தர்மினியைத் தெரியும், அது வேற கதை.

ஆமா தர்மினிதான்.. இப்ப Melbourne இல்... 

இவர்கள் எல்லோரும் என் நண்பர்கள் கலையரசன் நேற்றும் வீட்டுக்கு வந்துவிட்டு போனவர், அடிக்கடி சந்திப்போம்

சுரேஸ் & அமுதன் தான் கூட பழக்கம் மற்றவர்களுடன் சும்மா பழக்கம்தான்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, உடையார் said:

ஆமா தர்மினிதான்.. இப்ப Melbourne இல்... 

இவர்கள் எல்லோரும் என் நண்பர்கள் கலையரசன் நேற்றும் வீட்டுக்கு வந்துவிட்டு போனவர், அடிக்கடி சந்திப்போம்

சுரேஸ் & அமுதன் தான் கூட பழக்கம் மற்றவர்களுடன் சும்மா பழக்கம்தான்

அமுதன் அமெரிக்காவில், சுரேஷ் கனடாவில் என்று நினைக்கிறேன். கலை பேர்த்தில் என்று தெரியும். ராஜேஷும், சுரேஷலிங்கமும் இங்கே, சிட்னியில்  இருக்கிறார்கள். உங்களை நன்றாகத் தெரியும் போல் இருக்கிறதே?!

3 minutes ago, உடையார் said:

ஆமா தர்மினிதான்.. இப்ப Melbourne இல்... 

அப்படியானால் காண்டீபனையும் நிச்சயமாகத் தெரிந்திருக்கும் உங்களுக்கு. அம்பேலா எனும் அம்பலவானர்தான் இவர்களுக்கெல்லாம் பாஸ்!!!

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, ரஞ்சித் said:

அமுதன் அமெரிக்காவில், சுரேஷ் கனடாவில் என்று நினைக்கிறேன். கலை பேர்த்தில் என்று தெரியும். ராஜேஷும், சுரேஷலிங்கமும் இங்கே, சிட்னியில்  இருக்கிறார்கள். உங்களை நன்றாகத் தெரியும் போல் இருக்கிறதே?!

அப்படியானால் காண்டீபனையும் நிச்சயமாகத் தெரிந்திருக்கும் உங்களுக்கு. அம்பேலா எனும் அம்பலவானர்தான் இவர்களுக்கெல்லாம் பாஸ்!!!

அம்பேலா திருகோணமலை - இவரைத்தெரியாமல்😂

அம்பேலாவின் முகம் இன்னும் மனதிலிருக்கு கண்ணாடி போட்டு நடக்கிற நடையே வேற

Edited by உடையார்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, உடையார் said:

திருகோணமலை - இவரைத்தெரியாமல்😂

மெத்தச்சரி.

2 minutes ago, உடையார் said:

திருகோணமலை - இவரைத்தெரியாமல்😂

நீங்களும் இவர்களது பட்ஜோ?

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ரஞ்சித் said:

மெத்தச்சரி.

நீங்களும் இவர்களது பட்ஜோ?

கௌசி எனக்கு நெருங்கிய உறவு, பத்து வருடமாக தொடர்பில்லை. ஆமா அதே பட்ஜ்

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி அனுபவ பகிர்வுக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

உமா, ஜில், சிவானந்தன் இவையை தெரியுமோ அண்ணைமார்.

பின்னுக்கு பொல்கொட வாவிக்கு பக்கத்திலை உடும்பு பிடிச்சு சாப்பிடற ஆட்கள் தானே நீங்கள்.

சிங்களவன் கபரகொய்யா அடிக்கமாட்டான் 🤣🤣🤣

பள்ளத்துக்கு சாப்பிட வாறனீங்களோ. 

எல்லாம் ஒண்டுக்கை ஒண்டுவேற ஆகிட்டீங்கள் இனி தீட்டவும் ஏலாது. 

C கண்டீனிலை கையை கமக்கட்டுக்குள்ளே சொறிஞ்சு சொறிஞ்சு 1  ரூபாய் பிளேன்ரீ போடுறவனையும் மறந்திருக்க மாட்டீங்க 🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரஞ்சித் said:

இப்புத்தகங்கள் பற்றி அடிக்கடி கேள்விப்பட்டிருக்கிறேன்.

 

இந்தப்புத்தகம் பற்றியும் அடிக்கடி பேசுவார். 

நன்றி. 

இநத புத்தகங்களுக்கு சிறு வரலாறு உண்டு. பெருமைக்காக சொல்லவில்லை.

இந்த புத்தகங்களுடன், பிரேம்நாத்திடம் எனது அம்மாவினால்  வழங்கப்பட்ட வேறு  கணித நூல்களும் எனது குடும்பத்தின் (அன்றைய நிலையில்) அழியாச் சொத்துக்கள். யாழில் இருந்து கொழும்பு வரும் போது, வேறு பல பொருட்களை தவிர்த்து, இந்த புத்தகங்களை காவி வந்தேன். அதனால், தப்பி விட்டன.  நான் பிரேம்நாத்திடம் tuition எடுக்கவில்லை.  சிறிது காலத்தில், நிலைமை காரணமாக நான் வெளிநாடு வர, எனது அம்மாவினால் (அவரும் கணித ஆசிரியர்) அவற்றை, பிரேம்நாத்தை அறிந்து, நூல்களை பற்றி கதைத்து கொடுத்ததாக சொன்னார்.        

எம்மவர்களில் பலருக்கு பிரேம்நாத் மூலம் அந்த நூல்கள் வாயிலாக  (கணிதக்) கலை கிடைத்திருந்தால் மகிழ்ச்சியே.
 
இப்பொது சில நினைவு வருகிறது, சந்திரசேகரம் எழுதிய கேத்திர கணிதம். இதை விட அரை இஞ்சி தடுப்பில் இரு கேள்விக்கோர்வை (இவை அன்றைய JMB, London examination board, Cambridge examination Board), சில நினைவில் இல்லை.  

இப் புத்தகங்களில் பல எனது அம்மா படித்த  காலத்தில் (1949- 1954) லண்டன் இருந்து  நேரடியாக வாங்கியது, இலங்கையிலும் வாங்கியது, பின்பு எனது அண்ணர்களுக்காக (அன்றைய நிலையில், 1972 -1975)) மிகுந்த செலவில் லண்டன் இருந்து நேரடியாகவும், இலங்கையிலும் வாங்கப்பட்டது.

பேராசிரியர். சி. நடராசர் (இவரை அநேகமானவர்களுக்கு  பெயரளவிலாவது தெரிந்திக்கும் என்று நினைக்கிறன்) எழுதிய தூய கணிதம் எனது அண்ணரால் பிரதியேயமாக வாங்கப்பட்டது.        

கருமையான சாம்பல் நிறை உறையுள்ள Algebra  நூலை கொண்டு, complex numbers பிரேம்நாத் படிப்பித்து இருப்பார் என்று நம்புகிறேன். இந்த நூலில் தான், complex numbers பற்றிய மனப் பரிசோதனை (mind experiment) என்ற ஒரு முறை இருக்கிறது. இதுவரையில்  வேறு எந்த நூலிலும் complex numbers பற்றிய மனப் பரிசோதனை (mind experiment) இது வரை காணவில்லை  

பிரேம்நாத், complex numbers பற்றிய மனப் பரிசோதனை (mind experiment) உங்களுக்கு அறிமுகப்படுத்தினாரா?

இப்போதும் complex  numbers பற்றி குழம்புவோருக்கு இந்த  னப் பரிசோதனையை  (mind experiment) உபயோகிக்கிறேன்.

இப்படி நூல்கள்  இருந்ததால், ஏறத்தாழ வீட்டிலேயே தூய / பிரோயக  கணிதபாடங்களை முடித்து வீடாக கூடியதாக இருந்தது, அம்மாவின் உதவி உடன். 

ஆயினும், சிலர் சொல்லி, வெக்டர் வேலாயுதம் இடம் படிக்க  சென்றேன், பாரீட்சியில் எப்படி புள்ளிகள் வழங்குகிறர்கள், மற்றும் தவிர்க்கப்பட வேண்டுய நுணுக்கங்களை அறிவதத்திற்கு. அனால், விதி அனுமதிக்கவில்லை, இலங்கையில் பரிட்சை எடுப்பதற்கு.   

  • கருத்துக்கள உறவுகள்

ஆம், எனது அம்மா நூல்களை பிரேம்நாத்திடம்  கொடுத்து விட்டு, கடிதத்தில் எழுதியதை குறிப்பிட மறந்து விட்டேன்.

இன்று எது  உன்னுடையதோ, அது நாளை வேறு ஒருவரின் உடமை ஆகியதை தான் நேரடியாக உணர்ந்ததாக, அம்மா கடிதத்தில் எழுதி இருந்தார்.

நான் நேரடியாக இல்லாதால், ஓர் விதமான இழப்பை உணர்ந்தேன் (ஒப்பிட்டளவில் இள வயது காரணமாக இருக்கலாம்), ஆனால் திருப்தியுடன்.  

ஆனால், இப்பொது இழப்பு என்ற உணர்வில்லை, திருப்தி மட்டுமே.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, முதல்வன் said:

உமா, ஜில், சிவானந்தன் இவையை தெரியுமோ அண்ணைமார்.

பின்னுக்கு பொல்கொட வாவிக்கு பக்கத்திலை உடும்பு பிடிச்சு சாப்பிடற ஆட்கள் தானே நீங்கள்.

சிங்களவன் கபரகொய்யா அடிக்கமாட்டான் 🤣🤣🤣

பள்ளத்துக்கு சாப்பிட வாறனீங்களோ. 

எல்லாம் ஒண்டுக்கை ஒண்டுவேற ஆகிட்டீங்கள் இனி தீட்டவும் ஏலாது. 

C கண்டீனிலை கையை கமக்கட்டுக்குள்ளே சொறிஞ்சு சொறிஞ்சு 1  ரூபாய் பிளேன்ரீ போடுறவனையும் மறந்திருக்க மாட்டீங்க 🤣

உமா, ஜில், சிவானந்தன் என்னுடைய பட்ஜ். ஜில் பிறிஸ்பேனில இருக்கிறார், அடிக்கடி கதைப்போம். சிவானந்தனும், உமாவும் ஊரில. அதுசரி, நீங்கள் எந்த பட்ஜ் முதல்வன்?

பள்ளத்தில சாப்பிட வாறனாங்கள். அந்த மனுசன் வீட்டில வைச்சுச் சாப்பாடு தரும். கட்டை, கறுவல், மீசை, முகம் இன்னும் ஞாபத்தில இருக்கு.

c கண்டீனில தேத்தண்ணி ஞாபகம் இருக்கு. ஆனால், கம்பஸுக்கு வெளியில, ஆர்தர் சி கிளாக் சென்டருக்குப் பின்னால இருக்கிற அங்கிள் வீட்டுத் தேத்தண்ணிய அடிக்க ஏலாது. அந்தமாதிரி.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, முதல்வன் said:

உமா, ஜில், சிவானந்தன் இவையை தெரியுமோ அண்ணைமார்.

பின்னுக்கு பொல்கொட வாவிக்கு பக்கத்திலை உடும்பு பிடிச்சு சாப்பிடற ஆட்கள் தானே நீங்கள்.

சிங்களவன் கபரகொய்யா அடிக்கமாட்டான் 🤣🤣🤣

பள்ளத்துக்கு சாப்பிட வாறனீங்களோ. 

எல்லாம் ஒண்டுக்கை ஒண்டுவேற ஆகிட்டீங்கள் இனி தீட்டவும் ஏலாது. 

C கண்டீனிலை கையை கமக்கட்டுக்குள்ளே சொறிஞ்சு சொறிஞ்சு 1  ரூபாய் பிளேன்ரீ போடுறவனையும் மறந்திருக்க மாட்டீங்க 🤣

அந்த பள்ளகடைக்கு முன்னால் ஒரு லயன் இருந்த து ஞாபகமிருக்கா - சங்கரி கூட்டம் 😂🤣

எல்லாம் ஒண்டுக்கை ஒண்டுவேற ஆகிட்டீங்கள் இனி தீட்டவும் ஏலாது. - இல்லையில்லை அது வேற வாய் இது வேற வாய் 😊

உமா, ஜில், சிவானந்தன் இவையை தெரியுமோ அண்ணைமார்.

தெரியுமோ😁

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kadancha said:

பிரேம்நாத், complex numbers பற்றிய மனப் பரிசோதனை (mind experiment) உங்களுக்கு அறிமுகப்படுத்தினாரா?

Complex numbers அருமையாகப் படிப்பித்தார். ஆனால், அதை மனதினால் சரிபார்க்கும் முறை சொல்லிக்கொடுத்தாரா என்பது தெரியவில்லை. அவரிடம் படித்த விடயங்களில் எனக்குச் சற்றுக் கடிணமானதாகத் தெரிந்தது Permutation & combination மட்டும்தான். ஆனால், பரீட்சையில் அவற்றைத் தவிர்த்தே எழுதினேன். 

  • கருத்துக்கள உறவுகள்

வாவிக்கு பக்கதில் இருந்த கடை அன்ரி வீட்டில் இருந்த குறுப்பா? 😁

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, உடையார் said:

உமா, ஜில், சிவானந்தன் இவையை தெரியுமோ அண்ணைமார்.

தெரியுமோ😁

உடையார், நீங்கள் யாரென்று ஒரே புதிராய் இருக்கு. என்னுடைய நெருங்கிய நண்பர்களையெல்லாம் தெரிந்து வைத்திருக்கிறீர்கள். 

1 minute ago, உடையார் said:

வாவிக்கு பக்கதில் இருந்த கடை அன்ரி வீட்டில் இருந்த குறுப்பா? 😁

ஓம் ஓம் ஓம். சூட்டி அன்ரி, பதா அன்ரி, அங்கிள்....எப்பிடித் தெரியும்? 

6 minutes ago, உடையார் said:

அந்த பள்ளகடைக்கு முன்னால் ஒரு லயன் இருந்த து ஞாபகமிருக்கா - சங்கரி கூட்டம் 😂🤣

கஜதேவ சங்கரி !!! பெயருக்கு ஏற்ற்மாதிரி ஆளும் சிங்கன். பல்கலையில் அடித்த லூட்டிக்கு அளவேயில்லை. இப்போது, இங்கிலாந்திலும் போய்க் கலக்குவதாகக் கேள்வி. 

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ரஞ்சித் said:

உடையார், நீங்கள் யாரென்று ஒரே புதிராய் இருக்கு. என்னுடைய நெருங்கிய நண்பர்களையெல்லாம் தெரிந்து வைத்திருக்கிறீர்கள். 

ஓம் ஓம் ஓம். சூட்டி அன்ரி, பதா அன்ரி, அங்கிள்....எப்பிடித் தெரியும்? 

நானே ஒழிந்திருக்கின்றேன்😁 பழைய ஞாபகங்களை மீட்டிய உங்களுக்குதான் நன்றி, சிட்னி வரும்போது நேரில் சந்திப்போம் அதுதான் திரில்.. உங்களை நான் கண்டுபிடித்ததுவிட்டேன் ர....

இந்த தமிழனைதான் முடியவில்லை🥱

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
Just now, உடையார் said:

உங்களை நான் கண்டுபிடித்ததுவிட்டேன் ர....

அடக் கடவுளே, ஆரப்பா நீங்கள்?

1 minute ago, உடையார் said:

இந்த தமிழனைதான் முடியவில்லை🥱

எனக்கு அவருடைய முகம் ஞாபகமிருக்கு, பெயர் தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரஞ்சித் said:

உமா, ஜில், சிவானந்தன் என்னுடைய பட்ஜ். ஜில் பிறிஸ்பேனில இருக்கிறார், அடிக்கடி கதைப்போம். சிவானந்தனும், உமாவும் ஊரில

உமா திருகோணமலையில், சிவானந்தன் யாழ்ப்பாணம் டெலிக்கொமில் இருந்த ஞாபகம். மானிப்பாய் பிரபா எங்கே என்று தெரியவில்லை. 

புஸ்பா - கல்ப்பனா கனடாவில் என்று நினைக்கிறேன்.

ஆனால் நான் யாரெண்டு மட்டும் சொல்லமாட்டேன்.

சொன்னால் உங்கள் ஒருத்தரையும் திட்ட முடியாது.

 

இந்திரலிங்கமாக கூட இருக்கலாம். 🤣🤣🤣

நாடக மன்னன் லீலாவாகவும் இருக்கலாம் 🤣🤣🤣

Edited by முதல்வன்

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ரஞ்சித் said:

ஆனல், தர்ஷினியைத் தெரியவில்லை. தர்மினியைத் தெரியும், அது வேற கதை.

அதுசரி தர்மினியை யாருக்கும் தெரியாமல் இருக்குமே!!😜 Groundக்குள்ளை இறங்கினாலே பெரிய கூட்டம் நின்று விசிலடிக்கும்??

  • கருத்துக்கள உறவுகள்

நான் இனி பெயரை மாத்திக்கொண்டு வந்து தான் உங்களையெல்லாம் திட்டவேணும். 

சரி ஏதாவது பழைய பெயர்கள் இல்லாமலா போகும். 

குறுக்ஸ் தான் வழி 🤣🤣🤣

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ரஞ்சித் said:

அடக் கடவுளே, ஆரப்பா நீங்கள்?

எனக்கு அவருடைய முகம் ஞாபகமிருக்கு, பெயர் தெரியவில்லை.

அப்போ உங்களுக்கு NDT கோஷ்டிகள் ஆட்டோ (சங்கர்), குரு , நிமலன் , அவனுடைய வுட்பி (பாடகி) எல்லோரையும் தெரிந்திருக்க வேண்டுமே!!

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, Eppothum Thamizhan said:

அப்போ உங்களுக்கு NDT கோஷ்டிகள் ஆட்டோ (சங்கர்), குரு , நிமலன் , அவனுடைய வுட்பி (பாடகி) எல்லோரையும் தெரிந்திருக்க வேண்டுமே!!

இப்ப உங்களையும் தெரியும் நண்பா - தங்கமே தங்கம்; கலையும் உங்கு சில வருடமிருந்திருக்கின்றார் சந்தித்திருப்பீர்கள் என நினைக்கின்றேன்

  • கருத்துக்கள உறவுகள்
On 15/9/2020 at 11:53, ரஞ்சித் said:

ராசா அண்ணையின் திருமணமோ அல்லது திருமண முறிவோ அல்லது வன்னிக்கு அவர் திரும்பிச் சென்றதோ நான் அங்கிருக்கும் வரையில் அறியாதது.

நான் சிட்னிக்கு வந்து 5 வருடங்களின் பின்னர் எனது நண்பனின் சகோதரியை காணும் சந்தர்ப்பம் கிடைத்தது. அப்போதுதான் எனது நண்பன் பற்றியும், ராசா அண்ணை பற்றியும் அறிந்துகொண்டேன். சில நாட்களிலேயே எனது நண்பனுடன் தொலைபேசியில் நீண்டநேரம் உரையாடினேன், ராசா அண்ணைபற்றிக் கேட்டபோது, "அவர் வன்னியில மச்சான், பொடியளோட இருக்கிறார் எண்டு நினைக்கிறன்" என்று சொன்னான். 

வன்னியில் இறுதியுத்தக் காலத்தில் ராசா அண்ணை தமிழீழ தொல்பொருள் அமைப்பில் இருந்திருந்தார். அவர் கைதுசெய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டதைக் கண்ணுற்றவர்கள் அவரது பெற்றோருக்கு அறியத் தந்திருந்தார்கள். அவர் கொல்லப்பட்டிருக்கலாம் என்றே நண்பனின் வீட்டார் நம்பிக்கொண்டிருந்தார்கள். 

ஆனால், தெய்வாதீனமாக, தடுப்பு முகாமிலிருந்து வெளியேற அவருக்குச் சந்தர்ப்பம் கிடைத்தது. தான் வெளியேறிவிட்டதை நண்பனுக்கு அறிவித்துவிட்டு மீண்டும் அக்கராயனுக்கே சென்றுவிட்டார். அவர் தப்பிவிட்ட செய்தி அவரது தங்கைமூலம் எனக்கு அறியக் கிடைத்தது. அவரது உடல்நலம் பற்றிப் பேசிவிட்டு, "தலைவர் பற்றித் தெரியுமா" என்று கேட்டபோது, "அதைப்பற்றி பேசுவதற்கு ஒன்றுமில்லை" என்று சொல்லிவிட்டு அமைதியானார்.

சுமார் 16 வருடங்களுக்குப் பின்னர் தாயகம் திரும்ப எனக்குச் சந்தர்ப்பம் கிடைத்தது. நான் அங்குசென்று சந்திக்கப்போகும் மனிதர்களில் ராசா அண்ணை முக்கியமானவர் என்று நான் எனக்குள் சொல்லிக்கொண்டேன். ஆரியகுளத்திற்கு அருகிலிருக்கும் மோட்டார் சைக்கிள் திருத்தும் நிலையம் ஒன்றினை நடத்திக்கொண்டிருந்த ராசா அண்ணையை இரவு 8 மணிக்குச் சந்தித்தேன். அதே புன்முறுவல், அதே உபசரிப்பு, அதே கனிவு, ஆனால் உடல்மெலிந்து, வயதானவர் போன்று தெரிந்தார். "எப்படி இருக்கிறியள் அண்ணை" என்று கேட்டபோது, "ஏதோ இருக்கிறம், வாழ்க்கை எனக்கெண்டு என்ன வைச்சிருக்கிதோ, அதைச் செய்துகொண்டிருக்கிறன்" என்று சொன்னார். அவருடன் பேசிக்கொண்டே அவரின் மோட்டார் சைக்கிள் நிலையத்தைப் பார்வையிட்டேன். பல இளைஞர்கள், படித்துவிட்டு வேலையில்லாமல்த் திண்டாடியவர்களை தன்னுடன் சேர்த்து தன்னால் முடிந்த வேலைகளைக் கொடுத்திருந்தார். குறைந்தது 8 அல்லது 10 பேர் வரையில் இருக்கும், சுறுசுறுப்பாக  , மகிழ்வுடன் வேலைசெய்துகொண்டிருந்தார்கள். கட்டைக்கை சேர்ட்டும், வேட்டியும் அணிந்து, மிகச் சாதாரண வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருந்த  அவரைப் பார்க்கும்போது அனுதாபமும், கூடவே கவலையும் ஏற்பட்டது. ஆனால், அதுதான் அவரது வாழ்க்கை. வாழ்வைத் தொலைத்து, பிள்ளைகளைப் பிரிந்து, மனைவியாலும் உறவுகளாலும் ஒதுக்கப்பட்டு, ஊரில் உதவி தேவைப்பட்டவர்களை அரவணைத்து இன்று வாழ்ந்துகொண்டிருக்கிறார். 

எனக்குக் கிடைத்த அந்த 30 நிமிட நேரத்தில் அவருடனான எனது பழைய நினைவுகளில் சிலவற்றைப் பகிர்ந்துவிட்டு மனமில்லாமல் பிரிந்து வந்தேன்.

நான் எனது வாழ்நாளில் சந்தித்த அற்புதமான மனிதர்களில் ராசா அண்ணைக்கு என்றும் ஓரிடம் இருக்கும். புத்தகப் படிப்பே அறிவெனும் மாயையினைக் களைந்து, மனிதனின் அனுபவங்களும், அவனது சிறப்பான குணாதிசயங்களும் உயரிய மனிதர்களைத் தோற்றுவிக்கும் என்பதற்கு ராசா அண்ணை ஒரு உதாரணம். 

அனுபவங்கள் நல்ல பாடங்கள். நல்ல கதைகளுக்கும் மூலமாக அமைகின்றன.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.