Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பார்திபன் கனவு

எங்கள் பார்திபனுக்கும் ஒரு கனவிருந்தது,
அவன் மனதில் அனல் குடி இருந்தது.

உறையூரான் கனவு சோழத்தை ஒட்டியது, 
எங்கள் ஊரெழுவான் கனவு ஈழத்தை பற்றியது. 

சோழப் பார்தீபன் கனவு வளர்த்தது வம்சத்தை,
எங்கள் ஈழப் பார்தீபன் நகர்வு,
சிதைத்தது பாரத வஞ்சத்தை.

பழுவேட்டையர்கள் உடம்பு பல தழும்புகள் கொண்டதாம்.
போங்கடா போங்கள், எங்கள் பார்தீபன் உடம்பே தழும்பில்தான் இருந்தது.

அவனுக்கு பொருத்தப் பட்டது ஆட்டு ஈரலாம்.
இருக்கட்டும்,
அவன் இதயம் வேங்கையினது.

அவன் ஒரு சாரம் கட்டிய பொடியன். 
ஆனால்,
பாரதத்துக்கே காந்திய சாரம் புகட்டிய வலியன்.

மருத்துவனாய் வந்திருக்கவேண்டியவன்,
இனத்தின் ரணத்திற்கு தானே மருந்தாய் வந்தான். முடிவில் மருத்துவகல்விக்கு உடலை விருந்தாயும் தந்தான்.

தடை போடலாம் அவன் நிகழ்வுகளுக்கு,
எம் மனதில் தினம் ஏந்தும் நினைவுகளுக்கு?

பார்திபன் இன்னும் பசியோடுதான் இருக்கிறான். அவன் கனவும் .....

—கோஷான்—

 

large.EAC95CF2-29E6-45A8-BBC9-350FBCF722DA.jpeg.d5f8076091df109a62b61f4e4054b60a.jpeg

  • கருத்துக்கள உறவுகள்

ஆழமான கவிதை. திலீபன் அண்ணையின் வரலாறை உணர்வு பூர்வமாக பதிந்திருக்கிறீகள்.

நன்றி கோஷான்

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

பார்திபன் இன்னும் பசியோடுதான் இருக்கிறான்.

பார்த்திபன் மட்டுமா?
ஒட்டு மொத்த தமிழினமும் இருக்கிறது.
நன்றி கோசான்.

  • கருத்துக்கள உறவுகள்

காந்தி தேசமென்று சொல்ல வெட்கம்கெட்ட இந்தியா, திலீபன் & மாவீரர்களின் கனவு ஒருநாள் மெய்படும், அப்போ எம் தெய்வகளை கோவில் கட்டி கூம்பிடுபோம் எந்த தடையுமின்றி.

நன்றி கவிதைக்கு

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, goshan_che said:

பார்திபன் கனவு

எங்கள் பார்திபனுக்கும் ஒரு கனவிருந்தது,
அவன் மனதில் அனல் குடி இருந்தது.

உறையூரான் கனவு சோழத்தை ஒட்டியது, 
எங்கள் ஊரெழுவான் கனவு ஈழத்தை பற்றியது. 

சோழப் பார்தீபன் கனவு வளர்த்தது வம்சத்தை,
எங்கள் ஈழப் பார்தீபன் நகர்வு,
சிதைத்தது பாரத வஞ்சத்தை.

பழுவேட்டையர்கள் உடம்பு பல தழும்புகள் கொண்டதாம்.
போங்கடா போங்கள், எங்கள் பார்தீபன் உடம்பே தழும்பில்தான் இருந்தது.

---

—கோஷான்—

 

119553136_3295922650491103_6706926746953841407_n.jpg?_nc_cat=110&_nc_sid=8bfeb9&_nc_ohc=Crf07Jl3jgMAX9_P209&_nc_ht=scontent-frx5-1.xx&oh=db616f5dcd5f0637f2767d0c9ad7b863&oe=5F878BBC

நெஞ்சை நெகிழ வைக்கும்... அருமையான கவிதை. 
வார்த்தைகளை... மிக அழகாக தெரிந்தெடுத்து உள்ளமை...
நன்றாக இருந்தது,  கோஷான். 👍

Edited by தமிழ் சிறி

நன்றி கோஷான், கண்ட கனவுக்கு விடிவு பிறக்கும்

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான கவிதை

  • கருத்துக்கள உறவுகள்

திலீபன் நினைவு எம் இதயத்தில் இருக்கும்வரை இந்திய ஆதிக்க வர்க்கம் அழியவேண்டும் என்ற எண்ணமும் எம்மனத்தில் இருந்துகொண்டே இருக்கும். கவிதைக்கு நன்றி கோஷான்.

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 1 person

தன்
மானுடத்தின் மீது
முழு நம்பிக்கை வைத்தவன்..
நாளை 
ஒரு மாற்றத்தை 
தனது மரணம் கொண்டு வரும்
என்பதன் சாட்சி தான்
இவளின் தரிசனம்..!

திலீபன்
நம்பிய கனவு மெய்படும்
என்பதை
காட்டி நிற்கிறது
இச் சின்னவளின் கரிசனம்..!

போரளிகள் மடியலாம்
அவர்கள்
இலட்சியங்கள் எண்ணங்கள்
தியாகங்கள் அழியாது
பல வடிவங்களில் 
அவை 
உருவெடுத்து  நிற்க்கும்
காட்சிதான் 
அவன் நாமம் சொல்லி
தலை வணங்கி நிற்கிறாள்
இக் குழந்தை...!

அவள் பூ கரம்
பூக்கள் சொரிந்து
அவன் எண்ணங்களை
அணைத்துக் கொள்கிறது..
நாம் 
உன்  உணர்வுகளை சுமந்து 
செல்வோம் என்ற
உறுதியை கூறி நிற்கிறாள்..!

வெளிச்சத்தின் 
வீரியம் ஒன்று
பிரகாசம் கொடுகிறது..
வசந்த காலத்திற்காய்
வயிறு வலிக்க பிரவசம்
இருந்தான்
தமிழீழ குழந்தையை
பெற்று எடுக்க..
முன்னே அவன் கனவு
விரிந்து கிடக்கிறது...!
 
நாளைய சந்ததிகளின்
  வாழ்க்கை புத்தகம்
      திலீபன்..!

   பல ஆயிரம் பேரின்
 கனவுகளின் இருப்பிடம் 
        திலீபன்!

மனங்களை வென்ற 
  காதல்..!
   
            என்றும்
           காதலுடன்
            -சந்திரிகா-
              (கண்மணி)

  • கருத்துக்கள உறவுகள்
120100585_10207732339544367_7693536854641610994_n.jpg?_nc_cat=100&_nc_sid=0debeb&_nc_ohc=gIBp6_QsGz0AX_l2y-e&_nc_ht=scontent-lht6-1.xx&oh=cbf024fbc6d1ba6a69efe4e8af46b88c&oe=5F928258
9ம் நாள்
அவயங்கள் செயல் இழக்க
அருமந்த பிள்ளை
தமிழ் இன நோய்க்கு
தானே மருந்தாகினான்
பகலிரவாய் துடி துடித்தவன்
துடி துடிக்க பலமின்றி
துவண்டு கிடக்கிறான்
இந்தியத் தூதுவன்
தீக்சித்தும் குப்தாவும்
கூடியே வந்தனர்
தீர்வேதும் சொல்லாமல்
திரும்பியே போயினர்
பாருக்கே அகிம்சை
படிப்பித்த தேசம்
பாராமுகம் கொண்டு நின்றதே
தீயிட்ட புழுவென
தமிழ் மக்கள் துடித்தனர்
திரும்பும் திசை எங்கும்
அறப்போர்கள் வெடித்தன
படைமுகாம் முன்றலில்
புயலெனக் குவிந்தனர்
அரச இயந்திரம்
செயலிழத் தொடங்கியது
மன்னார் மண்ணிலும்
மக்கள் திரண்டனர்
மாதோட்ட மாநகர்
போராட்ட களமானது
படையினர் சுட்டதில்
பாமரன் பலியாக
தேரோடும் நல்லை வீதி
திரண்ட மக்களால்
திணறித் தவித்தது
பல்லாயிரம் மக்கள்
பதிந்தனர் தம் கருத்தை
பள்ளி மாணவர்களும்
திரள் திரளாய் வந்தனர்
பல நூறு பிள்ளைகள்
புலியாக இணைந்தனர்
திலீபனை காத்திடும்
கடைசிச் கணமும்
கை நழுவிப் போக
கலங்கிச் சாய்ந்தான்
கதிரவனும் மேற்திசை
அனலாடும் மனதோடு
திலீபனின் தியாகப் பயணத்தின்
ஒன்பதாம் நாள் நகர்ந்து
முப்பத்துமூன்று ஆண்டுகள் ஆனதின்று...
  • கருத்துக்கள உறவுகள்

Partheepan Pasi (Poem) | பார்த்தீபன் பசி 33 (கவியோசை) Filmed by OsaiFilms

 

  • கருத்துக்கள உறவுகள்

 

 

  • 5 years later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

லைக்கியதன் மூலம் தியாகதீபம் திலீபன் பற்றிய கவிதையை நினைவு மீட்டிய ரதனுக்கு நன்றி.

வீர வணக்கம்.

  • கருத்துக்கள உறவுகள்

வீரவணக்கங்கள். . .

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.