Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

புளாட் (PLOTE) வதை முகாமில் நான் - சீலன் ("வெல்வோம்-அதற்காக")

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்த திரியில் சம்பந்தப்பட்ட அமைப்பு புளட். இது கூட உங்களுக்கு புரியாது...😝😝😝

16 minutes ago, Justin said:

மிக ஆழமாக புளொட்டின் செயல்களை ஆராயும் தீவிரம் மிக நல்ல விடயம்! இதே தீவிரத்துடன் புலிகளின் ஏனைய இயக்கங்கள் மீதான நரபலி நடவடிக்கைகளையும் ஆராய்ந்தால் நல்லது

(அட, மறந்து விட்டேன், புலிகள் செய்த சகோதரப் படுகொலை இந்திய றோவின் சதியல்லவா? எய்தவனிருக்க அம்பை விமர்சிக்கவே கூடாது!😊)

36-E9-F015-BCF7-4-DF6-8-BF3-3985256645-C

  • Replies 101
  • Views 16.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, Justin said:

(அட, மறந்து விட்டேன், புலிகள் செய்த சகோதரப் படுகொலை இந்திய றோவின் சதியல்லவா? எய்தவனிருக்க அம்பை விமர்சிக்கவே கூடாது!

புலிகளே முடிவெடுத்தது. மாற்றுக் கருத்து இல்லை 

ஆனால், கிந்தியா, RAW மற்ற இயக்கங்கள் மூலமாக  தம்மையும் அழித்து விடுமோ என்ற சித்தப்பிரமையை ஏற்படுத்தியது  கிந்தியா, RAW. 

புலிகள் பாய்ந்திருக்கா விட்டால், புலிகள் மீது வேறு இயக்கங்கள்பாய்ந்து  இருக்கும் என்பதுவும் யதார்தமாகவே அந்த நேரத்தில் இருந்தது.

இதை வேறு வழியாக தீர்த்து  இருக்க கூடிய மன நிலையில், எந்த இயக்கங்களும் அந்த நேரத்தில் இல்லை என்பதே யதார்த்தம்.  

ஆனால், மற்ற இயக்கங்களை அழித்ததை நியப்படுத்தாது ஆயினும், புளொட் எந்த வழியிலோ தடுக்கப்பட்டது, தீமையிலும் பார்க்க, பரந்து பட்ட அளவில் நன்மை அளித்திருக்கிறது.

நீங்கள் khmer rouge செய்ததை வாசித்து விட்டு, plot செய்ததை ஒப்பிட்டு பாருங்கள்.  

  • கருத்துக்கள உறவுகள்

புளொட் ஐ மட்டும் வைத்து கதைத்தால், எந்த சரியான மன, மதி நிலையில் உள்ள தலைமைத்துவம், மாலை தீவை கைப்பற்ற்றும்  திட்டத்தை சாகசமாக செய்ய முற்பட்டு இருக்கும்?   

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, MEERA said:

இந்த திரியில் சம்பந்தப்பட்ட அமைப்பு புளட். இது கூட உங்களுக்கு புரியாது...😝😝😝

36-E9-F015-BCF7-4-DF6-8-BF3-3985256645-C

சகோதரப் படுகொலைகள் பற்றிய மையக் கரு கொண்ட திரி தானே? "அறையில் இருக்கும் யானையைப்" பற்றிப் பேசாமல் எவ்வளவு ஆழமான சித்தாந்த ஆய்வெல்லாம் நடக்குது.

 நானும் நீங்கள் உதாரணத்துக்குப் போட்டிருக்கும் உங்கள் படம் போல பானைக்குள் இருந்து தலையை எடுக்கக் கூடாதெண்டு நினைக்கலாமோ? 

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, Kadancha said:

புலிகளே முடிவெடுத்தது. மாற்றுக் கருத்து இல்லை 

ஆனால், கிந்தியா, RAW மற்ற இயக்கங்கள் மூலமாக  தம்மையும் அழித்து விடுமோ என்ற சித்தப்பிரமையை ஏற்படுத்தியது  கிந்தியா, RAW. 

புலிகள் பாய்ந்திருக்கா விட்டால், புலிகள் மீது வேறு இயக்கங்கள்பாய்ந்து  இருக்கும் என்பதுவும் யதார்தமாகவே அந்த நேரத்தில் இருந்தது.

இதை வேறு வழியாக தீர்த்து  இருக்க கூடிய மன நிலையில், எந்த இயக்கங்களும் அந்த நேரத்தில் இல்லை என்பதே யதார்த்தம்.  

ஆனால், மற்ற இயக்கங்களை அழித்ததை நியப்படுத்தாது ஆயினும், புளொட் எந்த வழியிலோ தடுக்கப்பட்டது, தீமையிலும் பார்க்க, பரந்து பட்ட அளவில் நன்மை அளித்திருக்கிறது.

நீங்கள் khmer rouge செய்ததை வாசித்து விட்டு, plot செய்ததை ஒப்பிட்டு பாருங்கள்.  

ஒரு குறிப்பிட்ட அமைப்பு மீது அபிமானம் வைத்திருப்பது பிழையில்லை, சகஜம். 

ஆனால், உங்கள் பகுப்பாய்வைச் செய்யும் போது உங்களுக்கு அபிமானமான அமைப்பின் apologist ஆக மாறிவிடுவது நடக்கிறது!

புலிகள் செய்த சகோதரக்கொலைகளுக்கு தூண்டுதலும், தனித்து முடிவெடுக்க முடியாத நிலைமைகளும் இருந்தன என்றால் ஏனைய இயக்கங்கள் செய்த படுகொலைகளுக்கும் அதே பின்னணி தான் என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டுமல்லவா? அதையே சுட்டிக் காட்டினேன்! 

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Justin said:

அமைப்பின் apologist ஆக மாறிவிடுவது நடக்கிறது!

எங்கே அப்போலோஜிஸ்ட் ஆக இருக்கிறேன்.
 
3 minutes ago, Justin said:

புலிகள் செய்த சகோதரக்கொலைகளுக்கு தூண்டுதலும், தனித்து முடிவெடுக்க முடியாத நிலைமைகளும் இருந்தன என்றால் ஏனைய இயக்கங்கள் செய்த படுகொலைகளுக்கும் அதே பின்னணி தான் என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டுமல்லவா? அதையே சுட்டிக் காட்டினேன்! 

புலிகள், தனித்த மனித கொலையாக செய்தார்களா என்பதே கேள்வி ?  

அதாவது, இன்நாரை கொலை செய்ய வேண்டும் என்று.

ஓர் அமைப்பை அளிக்கும் போது ஓர் தெரிவு கொலை, ஆனால் மறு வளமாக, அந்த இயக்கங்களில் இருந்து புலிகளுக்குகள் உள்வாங்கப்பட்டோர், அழுத்தமாக வெளியேற்றப்பட்டார் என்று பல விதமாக குறிப்பிட்ட அமைப்புகள் கலைத்து அழிக்கப்பட்டன.    

  • கருத்துக்கள உறவுகள்

 புலிகளுக்கும் அவர் எழுதியது மாதிரி கெடுக்க கேள்வி இன்றி, தலைமைகளின் விருப்பதித்திற்கு ஏற்ப கொலைகள் நடந்து அறிந்திருந்தால் சுட்டி காட்டவும்.  

மாறாக, புலிகளில் இருந்து எவரையாவது மற்ற இயக்கங்கள் உள்வாங்கி அல்லது அழுத்தத்தால் வெளியேற்றி இருந்தால் சுட்டிக் காட்டவும்.   
 
  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, Kadancha said:

எங்கே அப்போலோஜிஸ்ட் ஆக இருக்கிறேன்.
 
புலிகள், தனித்த மனித கொலையாக செய்தார்களா என்பதே கேள்வி ?  

அதாவது, இன்நாரை கொலை செய்ய வேண்டும் என்று.

ஓர் அமைப்பை அளிக்கும் போது ஓர் தெரிவு கொலை, ஆனால் மறு வளமாக, அந்த இயக்கங்களில் இருந்து புலிகளுக்குகள் உள்வாங்கப்பட்டோர், அழுத்தமாக வெளியேற்றப்பட்டார் என்று பல விதமாக குறிப்பிட்ட அமைப்புகள் கலைத்து அழிக்கப்பட்டன.    

கடஞ்சா, மேலே நீங்கள் கேட்டிருக்கும் கேள்வியே உங்கள் புலி apologist பாத்திரத்திடமிருந்து வந்ததல்லவா? "புளொட் தனி மனித கொலையாகச் செய்தார்களா?" என்று ஒரு புளொட் விசுவாசி (நான் அல்ல!) கேட்க முடியாதா?

Godfather படத்தில் வருவது போன்று "it's not personal, just business" என்ற ரீதியில் தானே எல்லா அரசியல் கொலைகளும் சகோதரக் கொலைகளும் நடந்தன? நீங்கள் எப்படி புலிகளின் கொலைகள் மட்டும் business தான் மற்ற அமைப்புகள் செய்தவை personal என்று பார்க்கிறீர்கள்? 

Edited by Justin
edits

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

மிக ஆழமாக புளொட்டின் செயல்களை ஆராயும் தீவிரம் மிக நல்ல விடயம்! இதே தீவிரத்துடன் புலிகளின் ஏனைய இயக்கங்கள் மீதான நரபலி நடவடிக்கைகளையும் ஆராய்ந்தால் நல்லது

ஈழத்தில் சகோதரப்படுகொலைகளை முதலில் தொடங்கியவர்கள் பிளட் சுழிபுரத்தில்  நீங்கள்  கூறும் ஆட்க்கள்  இப்போ இல்லை.

ஓம் நரபலி நடவடிக்கைகளை  சேர்ந்தே ஆராய்வோம் இல்லாத ஆட்களை விட்டு இப்போ இருக்கும் சுரேஷ் பிரேமச்சந்திரன் ,சித்தார்த்தன் ,வரதராஜபெருமாள் இன்னும் நரபலி ஆடிவிட்டு உயிருடன் கனடாவிலும் அவுஸிலும் கம்போடியாவில் பெயரை மாத்தி லாவோஸில் இருப்பவர் செய்த சகோதர நரபலியை பற்றி கதைப்பமா? தேடிவந்து வெட்டுவார்கள் இல்லாத புலியை  இழுப்பதில் தான் உங்களுக்கு பேரானந்தம் என்று எங்களுக்கு தெரியும் .

  • கருத்துக்கள உறவுகள்
Just now, பெருமாள் said:

எனக்கு பேரானந்தம் இல்லை! உங்களுக்கு ஒவ்வாமை வரும் என்பது தெரியும்! ☺️

  • கருத்துக்கள உறவுகள்

5 minutes ago, Justin said:

நீங்கள் எப்படி புலிகளின் கொலைகள் மட்டும் business தான் மற்ற அமைப்புகள் செய்தவை personal என்று பார்க்கிறீர்கள்? 

அமைப்புக்குள் இருப்பவர்களை, அவர் சொன்னது போலவே, அந்தந்த தலைமைகளின் விருப்புக்கு ஏற்ப கொலை செய்வதை எப்படி ஓர் அமைப்பு என்பது?   

8 minutes ago, Justin said:

கடஞ்சா, மேலே நீங்கள் கேட்டிருக்கும் கேள்வியே உங்கள் புலி பாத்திரத்திடமிருந்து வந்ததல்லவா?

புலிகள் கொலை செய்யவில்லை என்று நான் சாதித்தால் தான் இந்த கேள்வி சரி.  

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Kadancha said:

அமைப்புக்குள் இருப்பவர்களை, அவர் சொன்னது போலவே, அந்தந்த தலைமைகளின் விருப்புக்கு ஏற்ப கொலை செய்வதை எப்படி ஓர் அமைப்பு என்பது?   

புலிகள் கொலை செய்யவில்லை என்று நான் சாதித்தால் தான் இந்த கேள்வி சரி.  

தெளிவாக சொல்லியிருக்கிறேன்: சகோதரப் படுகொலைகள், ஏனைய இயக்கங்களின் உறுப்பினர்கள் புலிகளிடம் சரணடைந்த பின்னரும் கொலை செய்யப் பட்ட சம்பவங்கள்பல.  

தம் அமைப்புகளுக்குள்ளேயே இருந்தோரைக் கொலைசெய்யும் அளவுக்கு சித்தாந்தப் பிளவு புலிகளிடம் ஏற்படவில்லை. அப்படி ஏற்பட்டாலும் அது துரோகம் என்ற வரையறைக்குள் வந்தது (மாத்தையா, உதாரணம்).

இந்த சகோதரப் படுகொலைகள் அப்படியே மறைந்து விடவில்லை! இந்திய ராணுவ காலம் முதல் இன்று வரை புலிகள் இல்லாமல் போன பின்னர் கூட அதன் விளைவுகள் இருக்கின்றன அல்லவா? 

இதை நீங்கள் ஏற்றுக் கொண்டால் நீங்கள் சமதராசாக வரலாற்றைப் பார்ப்பவர் என்று கொள்ளலாம்! 

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Justin said:

புலிகளிடம் சரணடைந்த பின்னரும் கொலை செய்யப் பட்ட சம்பவங்கள்பல.  

அந்த பல சம்பவங்களில் ஒரு நாளை இங்கு சொல்லிட்டு போறதுதானே சார் ?

நமக்கு தெரிந்தவரை கந்தன் படுகொலை அதுவும் தன்னிஷ்ட்டபடி நடந்து கொண்ட முறையால் அவர் தலைமையால் தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டவர் .

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Justin said:

தெளிவாக சொல்லியிருக்கிறேன்: சகோதரப் படுகொலைகள், ஏனைய இயக்கங்களின் உறுப்பினர்கள் புலிகளிடம் சரணடைந்த பின்னரும் கொலை செய்யப் பட்ட சம்பவங்கள்பல.

இது புலிகளின் கொள்கையால் வந்ததா, அதாவது திட்டமிட்டு? 

இல்லை அந்த நேரத்தில், ஏற்பட்ட ஓர்மத்தால் வந்ததா?

நீங்களே சொல்கிறீர்கள் சம்பவங்கள் என்று. சாம்பவமாக (பல) இருபதற்கு வாய்ப்புகள் மிகவும் குறைவு.   

நான் அறிந்தவரையில், அந்தந்த நேரத்தில் உடனடி   ஓர்மத்தால்  இவை நடை பெற்றன.

அப்படி நடந்து, தண்டனை பெற்ற புலிகளின் மூத்த உறுப்பினர்கள் கூட உண்டு.

கொள்கையால்  வந்தது என்றால், மறு வளமாக, புலிகளுக்குள் மாற்றி இயக்க உறுப்பினர்கள் ஒருவருமே உள்வாங்கு பட்டு இருக்க முடியாது.

அதே போல, சில கால தடுப்பின் பின் விடுவிக்கப்பட்டவர்களும் இருக்க முடியாது.

இவர்கள் கொள்கையால்  கொள்ளப்பட வேண்டும் என்பது உண்மையில் (premeditated) சகோதரப் படுகொலை, குற்றம். 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, பெருமாள் said:

அந்த பல சம்பவங்களில் ஒரு நாளை இங்கு சொல்லிட்டு போறதுதானே சார் ?

நமக்கு தெரிந்தவரை கந்தன் படுகொலை அதுவும் தன்னிஷ்ட்டபடி நடந்து கொண்ட முறையால் அவர் தலைமையால் தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டவர் .

கந்தன் கருணை வெளியே தெரியவந்த ஒரு சம்பவம்! தனிபட்ட குடும்பங்களூடாக தெரியவந்த விடயங்களை இங்கே சொன்னால் நம்பும் நிலையிலா நீங்கள் இருக்கிறீர்கள்? அமீர் கொலையையே நம்பாதவர் அல்லவா?

அது சரி, கந்தன் கருணைக்காக புலிகள் கொடுத்த தண்டனை என்ன என்றும் சொன்னால் அது கண்துடைப்பா அல்லது நிஜமான தண்டனையா என்று வாசிப்போர் விளங்க உதவும் அல்லவா? 

Just now, Kadancha said:

இது புலிகளின் கொள்கையால் வந்ததா, அதாவது திட்டமிட்டு? 

இல்லை அந்த நேரத்தில், ஏற்பட்ட ஓர்மத்தால் வந்ததா?

நீங்களே சொல்கிறீர்கள் சம்பவங்கள் என்று. சாம்பவமாக (பல) இருபதற்கு வாய்ப்புகள் மிகவும் குறைவு.   

நான் அறிந்தவரையில், அந்தந்த நேரத்தில் உடனடி   ஓர்மத்தால்  இவை நடை பெற்றன.

அப்படி நடந்து, தண்டனை பெற்ற புலிகளின் மூத்த உறுப்பினர்கள் கூட உண்டு.

கொள்கையால்  வந்தது என்றால், மறு வளமாக, புலிகளுக்குள் மாற்றி இயக்க உறுப்பினர்கள் ஒருவருமே உள்வாங்கு பட்டு இருக்க முடியாது.

அதே போல, சில கால தடுப்பின் பின் விடுவிக்கப்பட்டவர்களும் இருக்க முடியாது.

இவர்கள் கொள்கையால்  கொள்ளப்பட வேண்டும் என்பது உண்மையில் (premeditated) சகோதரப் படுகொலை, குற்றம். 

🤣இப்பவும் உங்களுக்கு கண்ணாடியில் பார்த்தால் ஒரு apologist தெரியவில்லையா கடஞ்சா? றியலி??

சரி, மேலே பெருமாளுக்கு எழுதியதைப் பாருங்கள். அவரே பதில் சொல்வார் என்ன தண்டனை கொடுக்கப் பட்டதென்று!

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Justin said:

சரி, மேலே பெருமாளுக்கு எழுதியதைப் பாருங்கள். அவரே பதில் சொல்வார் என்ன தண்டனை கொடுக்கப் பட்டதென்று!

அவர், மாவீரர் ஆகியும், அவரின் பெயர் இடப்பட்ட/ இடப்படப்போகும் நிலையில் உள்ள  வீதியின் பெயர் மாற்றப்பட்டது. 

நான் அறிந்ததே.

இதை விட வேறு எந்த தண்டனை ஒருவருக்கு வேண்டும்.

கொலையிலும் கூடிய தண்டனையாக உங்களுக்கு தென்படவில்லையா? 

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Justin said:

தனிபட்ட குடும்பங்களூடாக தெரியவந்த விடயங்களை இங்கே சொன்னால் நம்பும் நிலையிலா நீங்கள் இருக்கிறீர்கள்?

அறிந்து தான் கதைக்கிறேன்.

அதனால் தான் சொல்கிறேன், புலிகள் இன்னாரை கொல்ல வேண்டும் என்ற கொள்கை இருந்ததை சிந்தித்து கூட நிறுவ முடியாமல் இருக்கிறது.

அமிர், யோகேஸ்வரன், ஆனந்த ராஜா  கூட எச்சரிக்கை கொடுத்த பின், புலிகளை பொறுத்த வரை, கொலை  வழியின்றிய தெரிவு.     
    
இவர்கள் எல்லோரும், சிங்கள போலீஸ் அல்லது ராணுவம் சொன்னால் கேட்டு தானே இருந்து இருப்பார்கள். அப்படி இல்லாவிட்டால், சட்டத்தின் மூலம் உள்ளே வைத்து இருப்பார்கள்.

புலிகளுக்கும் அந்த வசதி இருந்தால் அதை செய்து இருப்பார்கள் என்று  நம்புகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Justin said:

தனிபட்ட குடும்பங்களூடாக தெரியவந்த விடயங்களை இங்கே சொன்னால் நம்பும் நிலையிலா நீங்கள் இருக்கிறீர்கள்?

உங்களைப்பற்றியும் யாரும்  தப்பு தப்பாய் யாரும் வந்து சொன்னால் உடனே மூளையை முழம் காலுக்குள் வைத்துக்கொண்டு நம்பும் ஆள் கிடையாது தீர  விசாரிக்கனும்  என்ற அறிவாவவது இல்லையா ?

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, Justin said:

இப்பவும் உங்களுக்கு கண்ணாடியில் பார்த்தால் ஒரு apologist தெரியவில்லையா கடஞ்சா? றியலி??

ஆனால், ஓர் இலக்கை அடைவதற்கு, கொள்கையை நடைமுறை படுத்துவதற்கு, புலிகள் கொலை என்ற அணுகுமுறை  அல்லது  தெரிவு சரியா, பிழையா என்பது வேறு கேள்வி.

என்னை  பொறுத்த வரையில், அமிர், யோகேஸ்வரன், ஆனந்த ராஜா போன்றவர்களுக்கு, கொலை என்பது மிகையான (disproportionate) தெரிவு.   

ஆயுதம் தரித்த மற்ற இயக்கங்களோடு, இடத்துக்கிடம் வேறுபட்டு இருக்கும். ஆயுதம் தரித்த மற்ற இயக்கங்களோடு, இடத்துக்கிடம் வேறுபட்டு இருக்கும். இதனாலேயே சொல்கிறேன், கொலை ஓர் தெரிவு மற்ற இயக்கங்களை கலைத்து அழிப்பதத்திற்கு. 

.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

(மாத்தையா, உதாரணம்)

மாத்தையாவை அடையாளம் காட்டியது, signal intelligence என்பதே நான் அறிந்தது.

இங்கு நடைபெறும் இந்த விவாதங்களை வாசிக்கும் சாதாரண மக்கள் சிரிக்கப் போகிறார்கள். ஏனென்றால் புலிகள் உட்பட எல்லா இயக்கங்களுமே தனக்கு உடன்படாத அப்பாவி மக்கள் பலரை துரோகி என்று போட்டு தள்ளியது எல்லா ஈழத்தில் வாழ்ந்த அனைத்து  மக்களும் நன்கு தெரியும்.  இந்த விடயத்தில் எந்த இயக்கத்தவரும் புனிதர்கள் அல்ல. தனியே எந்த இயக்கத்தையும் குற்றம் சாட்ட முடியாது.  இயக்க விசுவாசத்தின் காரணமாக, இயக்கங்கள் அது எந்த இயக்கமானாலும், அவை செய்த மனித‍‍தன்மை அற்ற கொலைகளுக்கு வக்காலத்து வாங்குவது தேவையற்றது. இப்போது ஒருவர் உயிருடன் இல்லை என்பதற்காக அவர் வாழ்ந்த காலத்தில் செய்த கொலைகளை  நியாப்படுத்த முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

ஓ இப்ப இந்த வீதியிலா கச்சேரி நடக்குது.நடக்கட்டும் நடக்கட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, tulpen said:

இங்கு நடைபெறும் இந்த விவாதங்களை வாசிக்கும் சாதாரண மக்கள் சிரிக்கப் போகிறார்கள். ஏனென்றால் புலிகள் உட்பட எல்லா இயக்கங்களுமே தனக்கு உடன்படாத அப்பாவி மக்கள் பலரை துரோகி என்று போட்டு தள்ளியது எல்லா ஈழத்தில் வாழ்ந்த அனைத்து  மக்களும் நன்கு தெரியும்.  இந்த விடயத்தில் எந்த இயக்கத்தவரும் புனிதர்கள் அல்ல. தனியே எந்த இயக்கத்தையும் குற்றம் சாட்ட முடியாது.  இயக்க விசுவாசத்தின் காரணமாக, இயக்கங்கள் அது எந்த இயக்கமானாலும், அவை செய்த மனித‍‍தன்மை அற்ற கொலைகளுக்கு வக்காலத்து வாங்குவது தேவையற்றது. இப்போது ஒருவர் உயிருடன் இல்லை என்பதற்காக அவர் வாழ்ந்த காலத்தில் செய்த கொலைகளை  நியாப்படுத்த முடியாது.

கொலைகளை யார் நியாயப்படுத்துகிறார்கள்?

ஓர் இலக்கை அடைவாதத்திற்கு, கொலைகள் மட்டுமே தெரிவாகவும், கொள்கையாகவும் இருந்தது இல்லை என்பதே  நான் சொல்வது.

அப்படி இருந்து இருந்தால், ஓர் எச்சரிக்கையா அல்லது அறிவித்தலுமின்றி, கொலைசெய்யப்பட்டவர்கள் தட்டுத்தடுமாறி சுதாகரிப்பதற்குள் கொலை செய்வதே நடைபெற்று இருக்கும், கொலையே ஓர் தெரிவாகவும் கொள்கையாகவும் இருக்கும் பொது.

புலிகள் எவரின் மீதோ அப்படி நடந்து இருந்தால், சுட்டிக் காட்டவும்.

துரையப்பாவை பிரபாகரன் சுட்ட போது, தமிழ் புதிய புலிகள்  என்ற அமைப்பே இருந்தது.

ஆயினும், அது செய்யப்பட்ட முறை தவறு. துரையப்பாக்கு எச்சரிக்காய்கள் விடுக்க பட்டு இருக்க வேண்டும்.  

அனால், தர்மலிங்கம், ஆலால சுந்தரம் போன்றவர்களை, அமைப்பு அடிப்படையில் நாராக ஊன்றி விட்டு இருந்த போதும், டெலோ தனது RAW எசமானாரின் விசுவாசத்துக்காக சகோதர படு கொலை செய்தது, ஓர் அறிவித்தாலும் இன்றி.

அதே   ஆலால சுந்தரம், புலிகளால் காலில் மட்டுமே சுடப்பட்டார், பல எச்சரிக்கைகளின்  பின்பு. இங்கே சுட்டது சரியா அல்லது பிழையா என்பது கேள்வி அல்ல.

அதே போல, புலி உறுப்பினரின் சகோதரம் ஒருவர் சிறு திருட்டுகள் தொடர்ச்சியாக செய்த பொது, அந்த புலி உறுப்பினரே, ஓர் எச்சரிக்கையும் இன்றி, மிகவும் உக்கிரமாக அடித்து தண்டனை வழங்குமாறு பணிக்கப்பட்டார். அந்த புலி உறுப்பினர், அவரின் தம்பியை வீட்டிலேயே பூட்டி வைத்து விட்டு,  ஓலம் கேட்கும் வரையிலும் அடித்தார். தம்பி 10-11 மாதமாக எழும்ப முடியவில்லை.

இதுவே ஓர் உதாரணம், புலிகள் இலக்கை அடைவதற்கு கொலை முதல் தெரிவு அல்ல.

ஜனநாய நாடுகளிலும், இதுவே law fully administering death என்ற சட்டக் கோட்பாடு  இந்த அடிப்படையில் செய்யப்படுகிறது.

அடிப்படையாக, ஓர் இலக்கை அடைவதற்கு, அதை நடைமுறைப்படுத்தும் தெரிவுகளை (கொலையோ அல்லது வேறு எதுவோ) மேற்கொள்வதற்கு விதிகள் விதிக்கப்பட்டு, அவை பின்பற்றப்பட வேண்டும்.         

நான் முன்பே சொல்லி இருக்கிறேன், புலிகள் அவர்களை அறியாமலேயே நியாயாதிக்கத்தையும் (legitimacy), இயற்கை நீதியையும் (natural justice) பல படிகளில், மிகவும் சீரியஸ் ஆக எடுத்து கொண்டார்கள்.  

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, tulpen said:

இங்கு நடைபெறும் இந்த விவாதங்களை வாசிக்கும் சாதாரண மக்கள் சிரிக்கப் போகிறார்கள். ஏனென்றால் புலிகள் உட்பட எல்லா இயக்கங்களுமே தனக்கு உடன்படாத அப்பாவி மக்கள் பலரை துரோகி என்று போட்டு தள்ளியது எல்லா ஈழத்தில் வாழ்ந்த அனைத்து  மக்களும் நன்கு தெரியும்.  இந்த விடயத்தில் எந்த இயக்கத்தவரும் புனிதர்கள் அல்ல. தனியே எந்த இயக்கத்தையும் குற்றம் சாட்ட முடியாது.  இயக்க விசுவாசத்தின் காரணமாக, இயக்கங்கள் அது எந்த இயக்கமானாலும், அவை செய்த மனித‍‍தன்மை அற்ற கொலைகளுக்கு வக்காலத்து வாங்குவது தேவையற்றது. இப்போது ஒருவர் உயிருடன் இல்லை என்பதற்காக அவர் வாழ்ந்த காலத்தில் செய்த கொலைகளை  நியாப்படுத்த முடியாது.

இதை நீங்கள் ஏன் ஆதாரங்களோடு எழுத்துவதில்லை?
உங்களை யார் எழுத வேண்டாம் என்று சொல்கிறார் அல்லது அப்படி சொன்னால் 
போல நீங்கள் எழுதாமல் இருக்கிறீர்களா? நாங்கள்  நீதிமான்கள் போன்ற ஒரு வேஷம் போடுகிறீர்ளே  தவிர 
உங்களால் உண்மைகளை சகிக்க முடியாது. ****. நீங்கள் 80 வீதம்  புலிகளுக்கு எதிராகத்தான் எழுதுகிறீர்கள் இதில் எதோ யாழ் களம் எதோ சர்வாதிகார போக்கில் இருப்பதுபோல சிணுங்குகிறீர்கள் இது சுத்த வேஷம் இல்லையா?
எழுதுவது எந்த ஆதாரமும் எழுதும் நீங்கள் முதலில் திருந்தி கொள்ளுங்கள் பின்பு மற்றவர்கள் குளிப்பது பற்றி யோசிக்கலாம்.

ஆசிரியர் அனந்தராஜா படுகொலை 
பல்கலைகழக  மாணவன் விஜிதரன் படுகொலை  என்று 
இன்னமும் இருக்கலாம் ... இந்த இரண்டிலும் பக்கம் பக்கமாக இந்த யாழ்களம் நிரம்பி இருக்கு
இருந்தாலும் இனமும் ஒன்று கெட்டு விடவில்லை 
ஆதரங்களுடன் புலிகள் இன்னாரை இதனால் இங்கு சுட்டார்கள் என்று எழுதுங்கள்.

சும்மா சந்தடி  சாக்கில் கம்பு சுத்திகொண்டு எமக்கு விடுதலை போரை பற்றி பாடம் எடுக்காதீர்கள் என்றுதான் எழுதவேண்டி இருக்கிறது .. உங்களுக்கு அதிகம் தெரிந்து இருந்தால் எழுந்துங்கள் 
தனி திரி திறந்து எழுதுங்கள் ....... மகான்கள் மாதிரி நீங்ககள் ஊருக்கு உபதேசம் செய்துகொண்டு 
உங்கள் பொய்களுக்கு எதிர் கருத்து யாரும் எழுத் கூடாது என்று சர்வாதிகார போக்கை முதலில் கைவிடுங்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, Maruthankerny said:

சந்தடி சாக்கில் தலைமையை ஒரு சில திரிகளில் தமிழ்  மக்களை கொன்றவர்கள் என்றவாறும் எழுதிவிட்டு செல்கிறார் அதுக்கு கூட்டமாக பச்சை  வேறு குத்துகினம் .

துல்பன்  நிறைய படித்தால் மட்டும் காணாது கொஞ்சமாவது தமிழ் உணர்வோடு இருக்க பழகுங்க .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.