Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விஜய் சேதுபதியை நடிக்க வேண்டாம் என்று கூறும் சீனு ராமசாமி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, பெருமாள் said:

விடுங்க உடையார் இவர்கள் வீரமெல்லாம் இங்குதான்  அங்கு நிலைமை கட்டுமீறி போய் கொண்டு இருக்கு 

#ShameOnVijaySethupathi என்று இணையமெங்கும் அதிருது 

முரளிதரன் ஒடுக்கப்பட்ட மக்களின் ஆட்களாம் இங்கு ஒருவர் சொல்கிறார் அவ்வளவுதான் அவரின் பார்வையின் தூரம் முரளிதரன் மேட்டுக்குடி வர்க்கம் என்பது அவர்கேள்விப்படவில்லையாக்கும் பிஸ்கட் கொம்பனி ஓனர் .இலங்கையில் பியர் தயாரிக்க என்று அனுமதித்த அளவை விட இந்த நாட்டின் சட்டத்தை மதிக்காமல் அதிக அளவு எதனால் இறக்குமதி செய்து பலமுறை தண்டப்பணம் கட்டியவர். 

 

இப்படித்தான் விசு வும் எங்களில்  சொரிந்து புண்ணாகியவர் .ஆனால் இம்முறை சேதுபதி விடயத்தில் எல்லா பார்ட்டியும் ஒன்றாய் நிக்கிறார்கள் அங்கு இங்கும் வழக்கம் போல் எடுத்ததுக்கெல்லாம் நீங்கள்  நான்கு கால் என்றால் இல்லை மூன்று கால் என்பார்கள் நீங்கள் சரியப்பா மூன்று கால்த்தான் என்று அமைதியானாலும் அவர்கள் விட மாட்டார்கள் இல்லை இரண்டைரை கால் என்று வருவார்கள் அவர்களுக்கு முதலில் மன ஆற்றுப்படுத்தல் செய்யணும் சேதுபதி விடயத்தில் என்ன நடக்கும் என்பது அவர்களுக்கு தெரியும் ஆனாலும் உண்மை அவர்களுக்கு சார்பாக இருக்காது எனும் காரணத்தினால் இங்கு கொள்ளுப்படுகினம் .

அசினும் இப்படித்தான் சொல்ல சொல்ல கெட்டு  குட்டி சிவரானவ.

சேதுபதி புத்திசாலி என்று அவருடன் அரபுலகில் வேலை செய்த நண்பர்கள் சொல்கிறார்கள் உண்மை பொய் கொஞ்ச நாளில் தெரிந்துவிடும் .

 

2 minutes ago, உடையார் said:

 

நன்றி மருதங்கேணி & பெருமாள்

 இதை சேதுபதி சீரியசாக எடுத்தால், நல்ல நடிகர் என்ற பெருமையடன் இன்னும் மிளிர்வார், பார்ப்போம்

அறம் பயில். ஆனால் அறத்தினை சூதுகளும் சூழ்ச்சிகளும் சேர்ந்து சூறையாட வந்தால், அறம் தவிர், வெகுண்டெழு. தூங்காதே. நீ இன்று தூங்கினால் உன் அடுத்த சந்ததிக்கு நாடே இல்லை.

  • Replies 215
  • Views 22.2k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நடிகர் விஜய் சேதுபதிக்கு ஒரு திறந்த மடல்!

1-1-696x392.jpeg

இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று படமான 800 படத்தின் மோஷன் போஸ்டர் வெளியானது. இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர் ஆகியவை   சென்னை சூப்பர் கிங்ஸ் – சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில் வெளியிடப்பட்டது.

இந்த நிகழ்வில் நடிகர் விஜய் சேதுபதி, கிரிக்கெட் விளையாட்டு வீரர் முத்தையா முரளிதரனை பாராட்டி உரையாற்றியிருந்தார்.

இந்நிலையில், “நீங்கள் இலங்கையின் கிரிக்கெட் விளையாட்டு வீரர் முத்தையா முரளிதரன் வேடத்தில் ஒரு திரைப்படத்தில் நடிப்பதாக ”முதல் தோற்ற விளம்பரங்கள்” (first look posters) வந்துள்ளன. இவையே கடைசித் தோற்ற விளம்பரமாகவும் இருந்து விட்டால் நல்லது. இதற்கு மேல் நீங்கள் இந்தப் படத்திலிருந்து விலகிய செய்தி தவிர வேறு எதுவும் வராமலிருக்க வேண்டும் என விரும்பும் தமிழர்கள் சார்பில் உங்களுக்கு இந்த மடல்.” என தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச் செயலாளர் தியாகு, நடிகர் விஜய் சேதுபதிக்கு ஒரு திறந்த மடல் ஒன்றை எழுதியுள்ளார்.

மேலும் தியாகு அவர்கள் வெளியிட்டுள்ள கருத்தில்

“அன்பிற்குரிய விஜய் சேதுபதி அவர்களே!
வணக்கம்.

நீங்கள் இலங்கையின் கிரிக்கெட் விளையாட்டு வீரர் முத்தையா முரளிதரன் வேடத்தில் ஒரு திரைப்படத்தில் நடிப்பதாக ”முதல் தோற்ற விளம்பரங்கள்” (first look posters) வந்துள்ளன. இவையே கடைசித் தோற்ற விளம்பரமாகவும் இருந்து விட்டால் நல்லது. இதற்கு மேல் நீங்கள் இந்தப் படத்திலிருந்து விலகிய செய்தி தவிர வேறு எதுவும் வராமலிருக்க வேண்டும் என விரும்பும் தமிழர்கள் சார்பில் உங்களுக்கு இந்த மடல். உங்கள் முகவரி எனக்குத் தெரியாது. ஆனால் எப்படியும் இந்த மடல் உங்கள் பார்வைக்குச் சென்று விடும் என்ற நம்பிக்கையுடன் எழுதுகிறேன்.

ஒரு நடிகர் என்ற முறையில் எந்தக் கதைமாந்தராகவும் நடிக்க உங்களுக்கு உரிமையுண்டு, அதுதான் உங்கள் ’தொழில் தர்மம்’ என்பதில் ஐயமில்லை. திரு முத்தையா முரளிதரனைப் பொறுத்த வரை உலக சாதனை புரிந்த ஒரு தலைசிறந்த கிரிக்கெட் வீர்ர் என்பதில் மறுப்புக்கே இடமில்லை. ஆக, அவராக நீங்கள் நடிப்பது உங்கள் இருவருக்குமே இயல்பாகப் பெருமை தரக் கூடியது என எடுத்த எடுப்பில் தோன்றத்தான் செய்யும்.

ஆனால், நீங்கள் நடிகர் என்பதோடு குறுகிய காலத்தில் தமிழ் மக்களின் அன்பைப் பெற்ற தமிழ்க் கலைஞராகவும் விளங்குவதற்கு உங்கள் நடிப்புத் திறன் மட்டுமே காரணமன்று. அறம் சார்ந்த முற்போக்குக் கண்ணோட்டமும் உடையவராகத் தமிழ் மக்களிடையே நீங்கள் கொண்டிருக்கும் படிமமும் சேர்ந்துதான் உங்களுக்குப் புகழ் சேர்த்துள்ளது எனக் கருதுகிறேன்.

நான் தயங்கினேன்.. முரளிதரன் ஒரு வார்த்தை சொன்னார்" விஜய் சேதுபதி உடைத்த  ரகசியம் | Muttiah Muralitharan said this is the quality I have to play him  in his biopic says Vijay Sethupathi ...

முத்தையா முரளிதரன் கிரிக்கெட்டில் சுழற்பந்து வீச்சாளர் மட்டும்தான் என்றால் இந்த மடல் எழுத வேண்டிய தேவையே எழுந்திருக்காது. 2009 மே மாதம் முள்ளிவாய்க்காலில் உச்சம் கண்டதே சிங்கள அரசின் தமிழர் இனவழிப்பு, போரின் இறுதிக் கட்டத்தில் மட்டும் சற்றொப்ப ஒன்றரை இலட்சம் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டார்களே, குடும்பத்துடன் சரணடைந்தவர்கள் உட்பட பல்லாயிரம் தமிழர்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டார்களே, இந்த உண்மைகள் எல்லாம் உங்களுக்குத் தெரியும், முத்தையா முரளிதரனுக்கும் தெரியும். ஆனால் இந்தக் கொடிய இனவழிப்பைத் தலைமையேற்று நடத்திய இராசபட்சேக்களுக்கு முரளி ஆதரவு தெரிவித்தவர் என்பது உங்களுக்குத் தெரியுமா? தமிழரான அவர் இனவழிப்பின் நிறைவை மகிழ்ந்து கொண்டாடி சிங்களப் பேரினவாதிகளுக்குத் தன் விசுவாசத்தைக் காட்டிக் கொண்டவர் என்பது உங்களுக்குத் தெரியுமா?

ஒன்றரை இலட்சம் உயிர்களை மாய்த்த கொலைகாரச் சாதனையை முத்தையா முரளிதரன் இரசித்துச் சுவைத்தார் என்பது தெரிந்த பின்னும் 800 விக்கெட்டுகளைச் சாய்த்த அவரது ’தூஸ்ரா’வை இரசிக்கவும் கொண்டாடவும் தமிழர்களுக்கு எப்படி மனம் வரும்? அருள்கூர்ந்து எண்ணிப்பாருங்கள் விஜய்!

ஈழத் தமிழர்களுக்கு எதிரான இனவழிப்புப் போர்க் காலத்தில் நடந்த போர்க் குற்றங்கள், மானிடப் பகைக் குற்றங்கள். மாந்தவுரிமை மீறல்கள் பற்றியெல்லாம் வந்துள்ள ஐநா அறிக்கைகள். மாந்தவுரிமைப் பேரவைத் தீர்மான்ஙகள், சேனல் நான்கின் ஆவணப் படங்கள்… இவை குறித்தெல்லாம் உங்களுக்குத் தெரியாமலிருக்காது என நம்புகிறேன். எவ்வளவு தரவுகள் தேவையானாலும் உங்களுக்கு அனுப்ப தமிழ் இளைஞர்கள் அணியமாய் உள்ளனர். உங்களைப் போன்றவர்களை இழந்து விடக் கூடாது என்ற அக்கறை தவிர வேறு நோக்கமில்லை.
நீங்கள் நினைக்கலாம், யாரோ சிலர் விடுக்கும் வேண்டுகோளை மதிக்க வேண்டுமா என. இல்லை, விஜய். இது உலகத் தமிழினத்தின் ஒன்றுபட்ட இதயத் துடிப்பு என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

இலங்கையில் நடந்தது இனக்கொலை என்று தமிழகச் சட்டப் பேரவையும் சிறிலங்காவின் வட மாகாண சபையும் ஒருமனதாக இயற்றிய தீர்மானங்களை நீங்கள் அறிந்திருப்பீர்கள். இலங்கையைப் புறக்கணிக்கும் கோரிக்கையின் தொடர்ச்சியாகத்தான் அப்போதைய முதலமைச்சர் மாண்புமிகு ஜெயலலிதா அவர்கள் சென்னையில் இலங்கை வீர்ர்கள் விளையாடும் ஐபிஎல் போட்டிகள் நடத்தத் தடை விதித்தார் என்பதை நினைவிற்கொள்ளுங்கள்.

இன்றளவும் சன் முதலாளி கலாநிதி மாறன் தனது ஐதரபாத் சன்ரைசர்ஸ் அணிக்குப் பந்துவீச்சுப் பயிற்சியாளராக விலைக்கு வாங்கி வைத்துள்ள முத்தையா முரளிதரனை அன்று தமிழகத்தின் சார்பில் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா உள்ளே விட மறுத்தார். இன்று அதே முரளிதரனின் படிமம் உங்கள் அரிதார வடிவில் தமிழ்நாட்டுக்குள்ளும் புலம்பெயர் தமிழுலகத்துக்குள்ளும் நுழையும் முயற்சி பத்துக் கோடித் தமிழர்களையும் இழிவுபடுத்துவதல்லவா?

விளையாட்டிலும் கலையிலும் அரசியல் கலக்கலாமா? என்று ஒரு கலப்படக் கும்பல் கிளம்பி வரும். அவர்களுக்கு நீங்கள் எடுத்துக்காட்ட வேண்டிய சில வரலாற்றுப் பக்கங்களை உங்கள் பார்வைக்குக் கொண்டுவர விரும்புகிறேன். “கொழும்புக் கொழுப்பைக் கரைக்கும் அரசியல் எது?” என்ற கட்டுரையில் தோழர் நலங்கிள்ளி புரட்டிக் காட்டும் அந்தப் பக்கங்கள் உங்கள் பார்வைக்கு,

தமிழகத்தில் அனைவரும் அறிந்த பெயர் மார்லான் பிராண்டோ. ஆலிவுட்டின் பெரும் நடிகர். சிவாஜி கணேசனைத் தமிழகத்தின் மார்லான் பிராண்டோ என்று தமிழ்த் திரைச் சுவைஞர்கள் போற்றிய போது, இல்லை, மார்லான் பிராண்டோதான் அமெரிக்காவின் சிவாஜி என்றார் அறிஞர் அண்ணா. மார்லான் பிராண்டோ நாயகனாக நடித்த ’காட்ஃபாதர்’ நீங்களும் பார்த்திருப்பீர்கள். இப்படிப்பட்ட நடிகர்தான் உலகத் திரைப்பட நடிகர்களுக்கும் இயக்குநர்களுக்கும் திரைக்கதை ஆசிரியர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் 1961இல் ஒரு கோரிக்கை விடுத்தார்.

ஒரு படத்துக்கு ஒப்பந்தமாகும் முன்பு அப்படத்தைத் தென்னாப்பிரிக்காவில் திரையிடக் கூடாதென ஒப்பந்தம் செய்து கொள்ளும்படி அவர்களைக் கேட்டுக் கொண்டார். ஏன் தெரியுமா? தென்னாப்பிரிக்க வெள்ளை நிறவெறி அரசு கறுப்பின மக்களை எதிர்த்து இனஒதுக்கலைக் கடைப்பிடித்து வந்ததால் அந்த அரசை எல்லா வகையிலும் உலகமே புறக்கணித்தது.

புறக்கணிப்பில் ஆலிவுட்டும் சேர்ந்து கொண்டது. ஆலிவுட் கலைஞர்களில் வெள்ளையர்கள் பெரும்பான்மையாக இருந்தும் அவர்களைத் திரட்டி தென்னாப்பிரிக்காவுக்குப் பாடம் புகட்டியவர் மார்லான் பிராண்டோ. அவ்வளவு பெரிய பாடம் இல்லையென்றாலும் முத்தையா முரளிதரன் போன்றவர்களின் இரண்டகத்துக்கு நீங்கள் சிறிய பாடமாவது புகட்டலாமே விஜய்?

இனஒதுக்கல் கோலோச்சிய காலத்தில் தென்னாப்பிரிக்கா சென்று இசை நிகழ்ச்சிகள் நடத்தி விட்டு வந்த தமிழக பக்திப் பாடகர் பித்துக்குளி முருகதாசை இந்திய அரசு நேரில் அழைத்துக் கண்டித்தது. விளையாட்டுத் துறைப் புறக்கணிப்பால் தலைசிறந்த தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீர்ர்கள் கிரயம் பொல்லாக், பேரி ரிச்சர்ட்ஸ் போன்றோர் தங்கள் கிரிக்கெட் வாழ்வையே இழந்தனர். தம் வாழ்நாளில் ஒரே ஒரு சர்வதேச ஆட்டம் கூட அவர்களால் ஆட முடியவில்லை.

கிரிக்கெட் விளையாட்டின் வரலாற்றில் ஒப்பாரும் மிக்காருமில்லாத மட்டையடி வீர்ராக விளங்கியவர் யார் என்று முத்தையா முரளிதரனிடமே கேட்டுப் பாருங்கள், டான் பிராட்மன் என்ற விடை கிடைக்கும். பிராட்மன் 1971ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்க அதிபர் ஜான் ஃபார்ஸ்டரைச் சந்தித்த போது, தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியில் கறுப்பின வீர்ர்களைச் சேர்த்துக் கொள்ளாமை குறித்துக் கேள்வி எழுப்பினார்.

அறிவில் பின்தங்கிய கறுப்பர்களால் எப்படி வெள்ளையர்கள் போல் அழகாகக் கிரிக்கெட் விளையாட முடியுமெனக் கிண்டலடித்தார் ஃபார்ஸ்டர். “நீங்கள் கேரி சோபர்ஸ் எனும் மாபெரும் கறுப்பினக் கிரிக்கெட்டர் பந்தடித்து ஆடும் ஒயிலையும் மிடுக்கையும் கண்டதில்லையா ஃபாஸ்டர்?” எனக் கேட்டார் பிராட்மன். நிறவெறியில் நீங்கள் முரண்டு பிடிக்கும் வரை ஆஸ்திரேலியக் கிரிக்கெட் அணி ஒருபோதும் தென்னாப்பிரிக்காவில் வாசல் மிதியாது என்று அறிவித்தார்.

மண்டேலா சிறையிலிருந்து மீண்டு வந்ததும், பிராட்மன் குறித்து அன்புடன் வினவினாராம்! விளையாட்டுத் துறையிலான இனஒதுக்கலைக் கைவிட்ட பிறகு தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியை நெல்சன் மண்டேலாவே இந்தியாவுக்கு அழைத்து வந்தார் என்பது உங்களுக்குத் தெரியுமா?

கிரகாம் கூச் தலைமையிலான இங்கிலாந்து அணி தடையை மீறி தென்னாப்பிரிக்கா செல்லலாம் என 1982இல் முடிவெடுத்தது. இந்தப் பயணம் கலகப் பயணம் என்றும், பயணம் சென்றோர் கலக அணியினர் என்றும் அழைக்கப்பட்டனர். ”ஆல்-ரவுண்டர்’ இயான் போதமைத் தவிர முழு வலிமையுடன் தென்னாப்பிரிக்காவில் களமிறங்கிய இந்த இங்கிலாந்து அணியினரை உலக ஊடகங்களும் அரசியல் தலைவர்களும் கடுமையாக எதிர்த்தனர். அவர்களைக் “கேவலமான பன்னிருவர்” என இங்கிலாந்து நாடாளுமன்றமே வண்ணித்தது. அது மட்டுமல்ல, அந்த அணியினர் பன்னாட்டுக் கிரிக்கெட்டிலிருந்து மூன்றாண்டுக் காலத்துக்கு விலக்கி வைக்கப்பட்டனர். இங்கிலாந்தின் தலைசிறந்த மட்டையாளர்களில் ஒருவரான ஜெஃப்ரி பாய்காட் உள்ளிட்டோரின் கிரிக்கெட் வாழ்க்கை அத்துடன் முடிவுக்கு வந்தது.

வரலாற்றில் ஒரே ஒரு முறைதான் இந்தியா டேவிஸ் கோப்பை டென்னிஸ் இறுதிப் போட்டி வரை முன்னேறியது. அது 1974ஆம் ஆண்டு. விஜய் அமிர்தராஜ் ஒற்றையர் ஆட்டத்திலும், விஜய் ஆன்ந்த் உடன்பிறப்புகள் இரட்டையர் ஆட்டத்திலும் வெளுத்து வாங்கிக் கொண்டிருந்ததால் கோப்பை இந்தியாவுக்கே என்று நம்பப்பட்டது. ஆனால் இந்த இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை எதிர்த்து விளையாட வேண்டிய கட்டாயம். என்ன செய்வது? புறக்கணிப்பது தவிர வேறு வழியில்லை என்று இந்திய அரசு சொல்லி விட்டது. பிற்காலத்தில் ஐநா துணைக்கூட்டம் ஒன்றில் விஜய் அமிர்தராஜ் இது பற்றிப் பேசினார். ”அப்போது ஏமாற்றமாக இருந்தாலும் இந்தப் புறக்கணிப்பு எவ்வளவு சரியானது என்பதைத் தெரிந்து கொண்ட போது பெருமைப்பட்டேன்” என்றார்.

விஜய் அமிர்தராஜுக்குக் கிடைத்த பெருமை சிறிதாவது விஜய் சேதுபதிக்கும் கிடைக்க வேண்டும் அல்லவா? ஒப்புக் கொண்டதிலிருந்து இப்போது பின்னெடுப்பது உங்களுக்கு சங்கடமாகத் தெரியலாம், ஆனால் எதிர்காலம் உங்களைப் போற்றும் என்பதை எண்ணிப் பாருங்கள்.

விஜய் சேதுபதி அவர்களே! முத்தையா முரளிதரன் பற்றிய படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு ஒப்பந்தம் செய்த பின் எப்படிப் பின்வாங்குவது? என்று நீங்கள் தயங்கத் தேவையில்லை. நம் காலத்தின் தலைசிறந்த பூதியல் (இயற்பியல்) அறிவியலர் ஸ்டீபன் ஹாக்கிங் 2013ஆம் ஆண்டு இசுரேலில் ஒரு கல்வி ஒன்றுகூடலுக்கு வந்த அழைப்பை ஏற்றுக் கொண்டிருந்தார். இசுரேல் நாட்டின் அதிபரும் அதில் கலந்து கொள்வதாக இருந்தது. ஆனால் பாலத்தீனர்களுக்கு எதிராக இசுரேல் நடத்தி வரும் கொடுமைகளைக் கண்டித்து அவர் இம்மாநாட்டைப் புறக்கணிக்க வேண்டும் என்று பல நண்பர்களும் கேட்டுக் கொண்ட போது அதை ஏற்று இசுரேல் செல்வதில்லை என்று அறிவித்தார்.

துயருற்ற பாலத்தீன மக்களுக்கு அவரால் முடிந்த ஒரு சிறு ஆறுதல்! உங்கள் சக தமிழர்களுக்கு சிங்களப் பகை புரிந்த கொடுமைகளை நியாயப்படுத்திய ஒருவராக நடிக்க மறுத்து, விஜய், நீங்களும் தரலாமே சிறு ஆறுதல்? அண்மையில் மறைந்த எஸ்.பி. பாலசுப்ரமண்யம் போன்ற தமிழ்நாட்டுத் திரை ஆளுமைகள் இலங்கை செல்ல ஒப்புக் கொண்டு பிறகு தமிழர்களின் வேண்டுகோளை ஏற்றுப் போகாமலிருந்த செய்தி தெரியுமா உங்களுக்கு? அமிதாப் பச்சன் போன்ற வேற்றுமொழி ஆளுமைகளும் கூட தமிழர்களின் உணர்வை மதித்து இலங்கை நிகழ்ச்சிகளைப் புறக்கணித்தார்கள் என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள். சர்வதேச இந்தியத் திரைப்பட விழா சொதப்பியதே. நினைவுள்ளதா? இந்தி நடிகர்கள் கூட தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்தார்கள். தமிழராகிய நீங்கள் என்ன செய்யப் போகின்றீர்கள்?

இனவழிப்புக்கு நீதி கோரித் தமிழினம் கடினமான நீண்ட போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கும் இக்காலத்தில் நீங்கள் எடுக்கும் முடிவு நீதியை மறுக்கும் இனக் கொலைக் குற்றவாளிகளுக்குத் துணைபோகும் இரண்டகருக்கு ஊக்கமளிப்பதாக இருந்து விடக் கூடாது என விரும்புகிறேன், விரும்புகிறோம்.” என்று தெரிவித்துள்ளார்.

கடந்த 2009ம் ஆண்டு பெரும் இனப் படுகொலையுடன் முள்ளிவாய்க்காலில் யுத்தம் முடிவுக்கு வந்தபிறகு, ‘அமைதியை நிலைநிறுத்திய ராஜபக்சே’ என்று முத்தையா முரளிதரன் மகிந்த ராஜபக்சே குடும்பத்தையும் இராணுவத்தினரையும் பாராட்டி இருந்தமை குறிப்பிடத்தக்கது. அத்தோடு போரில் ஈடுபட்ட இராணுவத்தினரின் குடும்பங்களிடம் சென்று அவர்களுக்கு தனது அறுதலையும் ஆதரவையும் தெரிவித்திருந்தார். மேலும் பல சிங்கள கிராமங்களையும் அவர் தத்து எடுத்துள்ளார்.

இந்த சூழலில்,ஒரு ஈழத் தமிழனாக இருந்தும், தமிழர்களை படுகொலை செய்த போர்க் குற்றவாளியான மகிந்த ராஜபக்சேவை ஆதரிக்கும் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வேடத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பது வரலாற்று தவறு என தமிழர்கள் மத்தியில் எதிர்ப்புக்கள் எழுந்துள்ளது.

https://www.ilakku.org/நடிகர்-விஜய்-சேதுபதிக்கு/

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, உடையார் said:

 

நன்றி மருதங்கேணி & பெருமாள்

 இதை சேதுபதி சீரியசாக எடுத்தால், நல்ல நடிகர் என்ற பெருமையடன் இன்னும் மிளிர்வார், பார்ப்போம்

ஒரு காலத்தில் ரஜனியை எதிர்த்தால் ரோட்டில்  நடமாட முடியாத நிலை அதே ரஜனி தமிழர்களுக்கு எதிரான வொய்ஸ் தமிழ் நாட்டில் தனியா நடந்து போனால் மெண்டலான் என்று கலைத்து  கலைத்து கல்லெறியும் வெறியில் தமிழ் நாட்டு சனம்கள் இது இன்றைய நிலை https://www.facebook.com/BBCnewsTamil

  • கருத்துக்கள உறவுகள்

இந்த பிபிசி முகநூலில் ரஜனியின் சேதிக்கு ஒருத்தர்கூட ரஜினிக்கு  கருத்திடவில்லை கவனியுங்கள் .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
Just now, பெருமாள் said:

இந்த பிபிசி முகநூலில் ரஜனியின் சேதிக்கு ஒருத்தர்கூட ரஜினிக்கு  கருத்திடவில்லை கவனியுங்கள் .

பெருமாள் - சரியாக சென்னீர்கள்👍

 பார்த்துக்கெண்டே பேகின்றேன் எல்லோரும் கிழிக்கின்றார்கள்😂, ஆதரவாக காணவில்லை,

நன்றி பகிர்வுக்கு

  • கருத்துக்கள உறவுகள்

முரளி படத்தை தயாரிப்பது ஒரு வட இந்தியன், கதை எழுதுவது ஒரு சிங்களவன்,விஜய் சேதுபதிக்கு மட்டும் தான் அங்க தமிழ் தெரியும். அவருக்கு தான் தமிழர்கள் உணர்வும் புரிந்திருக்க வேண்டும்.புரிந்திருந்தால், நடித்திருக்க மாட்டார்.புரியல அதனால் புறக்கணிக்கிறோம். #Tamils_Boycott_VijaySethupathi

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, உடையார் said:

பெருமாள் - சரியாக சென்னீர்கள்👍

 பார்த்துக்கெண்டே பேகின்றேன் எல்லோரும் கிழிக்கின்றார்கள்😂, ஆதரவாக காணவில்லை,

நன்றி பகிர்வுக்கு

தமிழ்நாட்டில் சாதி இருக்கலாம் பலகட்சிகள் இருக்கலாம் ஏற்ற தாழ்வு இருக்கலாம் கூடம் குளத்தில் நடந்த துப்பாக்கி சூட்டுக்கு ரஜினி சொன்ன பேச்சு  தமிழ் கதைக்கும்  அனைவருக்கும்  பகையாளியாக்கி விட்டது .

உண்மையை சொன்னால் இங்கு சிலருக்கு பிடிக்காது சினிமா சினிமா என்று  தான் உண்டு வேலை உண்டு என்று இருந்த சனத்தை இவ்வளவுக்கு மூர்க்கமாக்கிய பெருமை சீமானையே சேரும் சில நேரம்களில் சீமானின் பேச்சை தொடர்ந்து கேட்க்கமுடியாமல்  இருக்கும் அவ்வளவுக்கு தொப்பலா வேர்வையில் நனைந்தபடி சொதப்பலா கதைப்பார் அப்படியான கதைகூட மக்களை சென்றடைகிறது .

மெரினா கடற்கரையில் சமாதி ஆனவர்களின் வாரிசுகள் ஒருபோதும் தமிழ்நாட்டு முதல்வர் ஆகமுடியாது என்ற கட்டுக்கதையை கேட்டு ஸ்ராலின் கனிமொழியின் நடவடிக்கைகள் சிரிக்க வைக்கின்றான.

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, விளங்க நினைப்பவன் said:

அது நியாயமான மனிதர்கள் செய்து கொள்வது அப்படி தான்.

யாரைப் பற்றி படம் எடுக்கலாம் அந்த படத்தில் நடிக்கலாமா என்பதெல்லாம் ஹிற்லரிடமிருந் பாசிசம் கற்று கொண்டவர்களின் நடவடிக்கை.

நீங்கள் எந்த இனத்தை சார்ந்தவராகவும் இருங்கள் எங்கள் நாட்டில் எங்கள் இனத்திற்கு எதிராக நின்றால் எதிர்ப்போம்!!

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, உடையார் said:

அதை சிங்களவன் செய்தானா ?

 ஆவணப்படுத்திதான் இருக்கின்றார்கள் இவரின் சாதனைகளை.

ஏன் இப்ப இவரின் சாதனையை தமிழ் நாட்டில் செய்ய வேண்டும் படமாக எடுக்க வேண்டும் - தமிழருக்கு இவர் என்ன செய்தார்,

சிங்களத்துக்குதான் அள்ளி அள்ளி செய்கின்றார் இன்னும், அந்த சிங்களவன் இவரை கருவேப்பிலையாகதான் பாவிக்கின்றான். அவர்கள் ஏன் ஆவணபடமாக எடுக்க கூடாது

இவரைவிட தமிழ் நாட்டில் சாதனை செய்த அல்லது பல பெரியவர்களை ஆவணப்படமாக எடுக்கலாம்,

இப்ப இவரின் படத்தை எடுப்பதன் பின்னனி சிங்கள அரசியல்

 

10 hours ago, குமாரசாமி said:

 

வெரி சிம்பிள் கேள்வி..... முரளீதரன் தூக்கிப்பிடிக்கும் சிங்களத்துக்கும் ஒரு திரை உலகம் இருக்கிறதே.

அங்கே படத்தினை பிடித்து, சிங்களத்திலும், தமிழிலும் எடுத்து விட்டு போகலாம் தானே... எதுக்கு தமிழகம் வர வேண்டும். தமிழகத்தார் இளிச்ச வாயர்கள் என்ற எண்ணம் தானே.

முரளீதரன் ஒரு மெகா சுஜநலவாதி. தமிழகத்தின் சென்னையில் கலியாணம் செய்ததால், சென்னையில் உள்ள குடும்ப வியாபாரங்களுக்கு எதிர்ப்புகள் வரும் என்று, தனக்கு வந்த வாய்ப்பினை கொடுத்து, தனது சகோதரரை ராஜபக்ச மொட்டு பார்ட்டியில் தேர்தலில் நிக்க வைத்தார்.

இவர் சொல்வது.... அவரது நிலைப்பாட்டில் சரி. 150 வருங்க்ளுக்கு முன்னர் பிரிட்டிஷ்காரரால் கொண்டுவரப்பட்ட ஒரு சமூகத்தின் சிந்தனை அது.

சிங்களவர்கள் பெரும்பான்மை என்பது அவர்களது நாட்டில் வாழும் அவருக்கு சரியாக இருக்கும்.

நாம் பூர்வூக குடிகள், எமது நாட்டினை அடிமைப்படுத்தி வைத்துக் கொண்டு அந்த நாட்டில் நாம் சிறுபான்மை என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.

 

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
விளையாடடை விளையாட்டாக பாருங்கள் 
முரளிதரன் வீரவன்சவுடன் போலிங் போடுவதையும் 
வீரவன்ச சிக்ஸர் அடிப்பதுவும் ..... என்ன காடசி 
என்ன விளையாட்டு ....தயவு செய்து எல்லாவற்றிலும் 
இனவாதம் பேசாதீர்கள் 
Image
  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, Maruthankerny said:

முரளி படத்தை தயாரிப்பது ஒரு வட இந்தியன், கதை எழுதுவது ஒரு சிங்களவன்,விஜய் சேதுபதிக்கு மட்டும் தான் அங்க தமிழ் தெரியும். அவருக்கு தான் தமிழர்கள் உணர்வும் புரிந்திருக்க வேண்டும்.புரிந்திருந்தால், நடித்திருக்க மாட்டார்.புரியல அதனால் புறக்கணிக்கிறோம். #Tamils_Boycott_VijaySethupathi

நாமல் ராஜபக்ச தான் ஒரு பினாமி பெயரில் தயாரிப்பதாக கூறுகிறார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Justin said:

இப்ப இதில நா.த.க குரல்கள் ஓங்கி ஒலிப்பதால் மட்டும் கேட்கிறேன், யாராவது பதில் தெரிந்தால் தாருங்கள் (நாக்கை நீட்டாமல்!)

"எவனிடமும் இருந்து நல்ல விடயங்களை எடுத்துக் கொள்ள வேண்டும்" - இது சீமான் அவர்கள் ஹிற்லரின் வாசகமொன்றை மேற்கோள் காட்டிய பின்னர் சொன்னது. 

இலங்கையில், முன்னேறக் கஷ்டப் படும் ஒரு சமூகத்தில் இருந்து வந்து, உலக கிரிக்கெட்டில் சாதனை படைத்த ஒரு தமிழர்! சமாதான காலத்தில் புலிகளால் வரவேற்கப் பட்டு வன்னி போய் அவர்களது விளையாட்டு அபிவிருத்தி மீதான ஆர்வத்தை வெளியுலகுக்குக் காட்டியவர். இப்படி பல நல்ல விடயங்கள் இருக்க, இப்ப ராஜபக்ஷவின் நண்பன் என்பதால் மட்டுமே ஏன் இப்படி எதிர்ப்பு? 

இவர் ஹிற்லரை விட மோசமானவரா? 🤔 

 

படத்தை படமாக பாருங்க விளையாட்டை விளையாட்ட பாருங்க..

தமிழ் நாட்டு மீனவர்கள் கும்பிடுவது சொறிலங்கா வெல்ல வேண்டுமென்று...

கேள்வி கேட்கும் .....பார்க்கவும்

 

விஜய் சேதுபதிக்கு எச்சரிக்கை | உங்களை கொண்டாடியாடிய தமிழினம் குப்பையில் வீசிவிடும்

  • கருத்துக்கள உறவுகள்

***

முரளி விளையாட்டு வீரனா இருந்தால் இவ்வளவு எதிர்ப்பு வந்து இருக்காது அவர் சிங்கள இனவாதிகளை  குளிர்விக்க தமிழர்களின் மனம் புண்படும்படி பேசிய அரசியல் பேச்சுகளே  இன்று அவருக்கு எதிராக திரும்பி நிற்கின்றன .

ஆனால் சேதுபதி உடனே முடிவெடுக்க தெரியாமல் காலம் தள்ளுவது அவருக்கு மேலான எதிர்ப்பு கூடிக்கொண்டு உள்ளது போதாக்குறைக்கு கொரனோ நேரம் வீடுகளில் அடைபட்டு கிடக்கும் தமிழ் சகோதரர்கள் கண்டபடி மீம்ஸை உருவாக்கி தள்ளுகிறார்கள் .

  • கருத்துக்கள உறவுகள்

செய்தி வெளியில் வருவதற்கு  முன்பே 

முரளிதரனும் ராஐபக்ச குடும்பமும் விருந்துகளில்

விசத்தை விஜய் சேதுபதி க்கு ஊட்டியிருப்பார்கள்

அதைவிட  தற்பொழுது வேலை வெட்டி அற்று இருக்கும் விஜய் சேதுபதி

இதிலிருந்து வெளியில் வருவது  கடினம்

ஆனால் கடினமான  காலங்களில்

கடினமான சிக்கல்களுக்கு சிலர்  எடுக்கும் முடிவுகளே அவர்களை அடுத்த கட்டங்களுக்கு நகர்த்துகின்றன.

பார்க்கலாம்

  • கருத்துக்கள உறவுகள்

#ShameOnVijaySethupathi டுவிட்டரில்  நான்காவது இடத்துக்கு இந்த ஐ பி ல் நேரமே  வந்துவிட்டது அநேகமா நாளை காலை  முதலிடத்துக்கு வந்துவிடும் .

  • கருத்துக்கள உறவுகள்

ம்..நான் சொல்வார்கள் என்று நினைத்த மாதிரியே சொல்லிக் கொண்டு வழமையான "உசார் ரீம்" இறங்கி விட்டது. கூத்தாடிகள், கூலிக்கு மாரடிப்போர், வேற்று மொழிக்காரன்..இன்ன பிற

இது யாழ்.வாசகர்களுக்கு எழுதுவது.. 

இதே "கூத்தாடிகள்" கூட்டம் தான் 2009 இல் ஒன்று கூடி ஈழத்தமிழர் படுகொலையை எதிர்த்தது.

2009 இல் அந்தக் கூத்தாடிகளுக்கு முன்னணி வகுத்த ராதாரவியை வலதுசாரி நா.த.க வோடு சேர்ந்து வந்தேறி என்று விலக்கி வைத்தாயிற்று!

இயக்குனர் சேரனை , இன்னொரு பிரச்சினையில் திட்டி அவரை மௌனமாக்கியாயிற்று.

"கத்தி" பட நாயகன் ஈழ மருமகனாக இருந்ததால் தப்பினார்!😎

இப்போது சேதுபதிக்கு உருட்டல் மிரட்டல்! 

ஊரில் சில முட்டுச் சந்துகளில் மாலை வேளையில் வெறியைப் போட்டு விட்டு போற வாற எல்லாரையும் மல்லுக்கு இழுக்கும் ஊர் வெறிக்குட்டி போல எங்கள் "உசார் ரீம்"  நடந்து கொள்கிறது என நினைக்கிறேன். யாரும் கண்டு கொள்ளாமல் கடந்து போவதே அந்த ஊர் வெறிக்குட்டிக்கு இருக்கும் மரியாதை. அது போலவே ஆகப் போகிறதா இவர்களுக்கும்? 

இதைப் பற்றி இவ்வளவு தான் சொல்ல முடியும்!  

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Justin said:

ம்..நான் சொல்வார்கள் என்று நினைத்த மாதிரியே சொல்லிக் கொண்டு வழமையான "உசார் ரீம்" இறங்கி விட்டது. கூத்தாடிகள், கூலிக்கு மாரடிப்போர், வேற்று மொழிக்காரன்..இன்ன பிற

இது யாழ்.வாசகர்களுக்கு எழுதுவது.. 

இதே "கூத்தாடிகள்" கூட்டம் தான் 2009 இல் ஒன்று கூடி ஈழத்தமிழர் படுகொலையை எதிர்த்தது.

2009 இல் அந்தக் கூத்தாடிகளுக்கு முன்னணி வகுத்த ராதாரவியை வலதுசாரி நா.த.க வோடு சேர்ந்து வந்தேறி என்று விலக்கி வைத்தாயிற்று!

இயக்குனர் சேரனை , இன்னொரு பிரச்சினையில் திட்டி அவரை மௌனமாக்கியாயிற்று.

"கத்தி" பட நாயகன் ஈழ மருமகனாக இருந்ததால் தப்பினார்!😎

இப்போது சேதுபதிக்கு உருட்டல் மிரட்டல்! 

ஊரில் சில முட்டுச் சந்துகளில் மாலை வேளையில் வெறியைப் போட்டு விட்டு போற வாற எல்லாரையும் மல்லுக்கு இழுக்கும் ஊர் வெறிக்குட்டி போல எங்கள் "உசார் ரீம்"  நடந்து கொள்கிறது என நினைக்கிறேன். யாரும் கண்டு கொள்ளாமல் கடந்து போவதே அந்த ஊர் வெறிக்குட்டிக்கு இருக்கும் மரியாதை. அது போலவே ஆகப் போகிறதா இவர்களுக்கும்? 

இதைப் பற்றி இவ்வளவு தான் சொல்ல முடியும்!  

சீமான் இந்த விடயத்தில் அமைதிகாக்கிறார் என்று அதை நக்கலடித்து மீம்ஸ்கள் வந்தவண்ணம் உள்ளன அது உங்களுக்கு தெரியுமா ?

இதனால் இலங்கை தமிழ் மக்களும் இப்படத்திற்கு பெரிய எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.https://www.cineulagam.com/actors/06/185913

கவனியுங்கள் தமிழக ஊடகம் ஒன்று சொல்லும் விதத்தை .

நாங்கள் எதோ சொல்லித்தான் அங்கு எதிப்பு நடைபெறுவது போல் உங்கள் கதை சும்மா ஏதவாது எதிர்ப்பு கருத்து போடணும் என்பதுக்காக நிலவரம் தெரியாமல் எழுத வேண்டாம் .

அங்காலை  மீனவ சங்கங்களும் ஒன்று கூடி எதிர்ப்பில் நிக்கின்றன .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாங்கள் இறைவனை சுமந்திருக்கக்கூடிய பல்லக்கையும் தூக்குவோம்.
பிணத்தை சுமந்திருக்கக்கூடிய பாடையையும் தூக்குவோம்.
ஊர்வலம் முடிந்த பின் தான் தெரியும் எது வணக்கப்படும்  எது எரிக்கப்படும் என்று...

  • கருத்துக்கள உறவுகள்

`விஜய் சேதுபதி இனப் பற்றாளர்தான்... ஆனா?!''

வருண்.நா

Published:Today at 5 AMUpdated:Today at 5 AM

விஜய் சேதுபதி, முத்தையா முரளிதரன்

விஜய் சேதுபதி, முத்தையா முரளிதரன்

`` `ராஜபக்‌ஷே ஒரு நெல்சன் மண்டேலா' என்று சொல்லி நெல்சன் மண்டேலாவைக் கொச்சைப்படுத்தியவர் முத்தையா முரளிதரன்...'' - வன்னிஅரசு

இலங்கையைச் சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில், அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற சாதனைக்குச் சொந்தக்காரர். டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே 800 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் இவர். இதன் காரணமாக இவரின் பயோபிக் திரைப்படத்துக்கு `800' என்று தலைப்பிடப்பட்டுள்ளது. முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை மையாக வைத்து எடுக்கப்படும் இப்படத்தை எம்.எஸ்.ஶ்ரீபதி இயக்குகிறார். முரளிதரன் கதாபாத்திரத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கவிருக்கிறார்.

முரளிதரன்

 

முரளிதரன்

 

கடந்த ஆண்டு இந்தப் படத்தில் முரளிதரனாக விஜய் சேதுபதி நடிக்கவிருக்கிறார் என்ற செய்திகள் வெளியானபோதே கடும் எதிர்ப்புகள் கிளம்பின. வி.சி.க, பெரியாரிய அமைப்புகள் உள்பட பல்வேறு தமிழ் அமைப்புகளும் `தமிழினத் துரோகி ராஜபக்‌ஷே-வின் ஆதரவாளரான முரளிதரனின் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்கக்கூடாது' எனக் கோரிக்கை வைத்தனர். ஈழத் தமிழர்கள் பலரும் அந்தச் சமயத்தில் விஜய் சேதுபதிக்கு எதிராகப் போர்க் கொடித் தூக்கினர்.

முத்தையா முரளிதரன், விஜய் சேதுபதி

 

முத்தையா முரளிதரன், விஜய் சேதுபதி

 

``முத்தையா முரளிதரனுக்கு ஆளுநர் பதவியா?''- கொதிக்கும் தமிழ் மக்கள்!
இதையடுத்து, ``என் மீது அன்பு வைத்துள்ள யாரையும் நான் இழக்க மாட்டேன். அதுபோன்ற ஒரு காட்சியும் என் படத்தில் இருக்காது. என்னை நேசிப்பவர்களைக் காயப்படுத்தும் சுயநலவாதியாக நான் இருக்கவே மாட்டேன். அதையும் மீறி யாரையாவது காயப்படுத்தினால் மன்னிப்பு கேட்கவும் தயங்க மாட்டேன்'' என்று ஒரு பேட்டியில் விளக்கம் அளித்திருந்தார் விஜய் சேதுபதி.

அதன் பிறகு இந்தப் படம் குறித்து எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை என்பதால் இது குறித்த பேச்சுகள் அடங்கிப் போயிருந்தன. தற்போது மீண்டும் இந்தப் படம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் ``முத்தையா முரளிதரன் கண்டியில் பிறந்த தமிழர் என்றாலும் அவர் சிங்களர்களின் பக்கமே நிற்கக் கூடியவர். எனவே அவரின் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்கக் கூடாது'' என்கிற குரல்கள் மீண்டும் எழத் தொடங்கியிருக்கின்றன.

800 motion poster

 

800 motion poster youtube screen shot

 

இந்நிலையில், `800' படத்தின் மோஷன் போஸ்டர் நேற்று வெளியாகி உள்ளது. கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் இந்த மோஷன் போஸ்டரை ஷேர் செய்து வருகின்றனர். அதே நேரத்தில், `ஈழத் தமிழர்களையும் தமிழக மீனவர்களையும் கொன்று குவித்த நாடான இலங்கையின் தேசியக் கொடி கொண்ட கிரிக்கெட் ஜெர்ஸியை எப்படி விஜய் சேதுபதி அணிந்து கொண்டு நடிக்கலாம்?' என்று கேள்விகளை எழுப்பி நெட்டிசன்கள் பலரும் கடுமையான விமர்சனங்களையும் எதிர்ப்பையும் ட்விட்டரில் பதிவு செய்து வருகின்றனர்.

இந்த படம் குறித்த செய்திகள் வெளியானதை அடுத்து, இரண்டு நாள்களுக்கு முன்பாக ட்விட்டரில் ஒரு கருத்தைப் பதிவிட்டிருந்தார் விஜய் சேதுபதியின் நண்பரும் இயக்குநருமான சீனு ராமசாமி.

``விஜய் சேதுபதியின் இதயம் உலகத்தமிழர்கள். விஜய் சேதுபதி நடிக்கும் `யாதும் ஊரே யாவரும் கேளீர்' திரைப்படம் அதற்கு சான்று. ஈழத்தமிழர் உள்ளத்திற்கு அருமருந்து. உள்ளங்கைக்கு முத்தம். மக்கள் செல்வா... நீரே எங்கள் தமிழ் சொத்து அய்யா நமக்கெதற்கு மாத்தையா? மாற்றய்யா?'' என்று சீனு ராமசாமி பதிவிட்டுள்ளார்.

மேற்கண்ட ட்விட்டர் பதிவின் மூலம், முத்தையா முரளிதரன் படத்திலிருந்து விலகிக் கொள்ளுமாறு அன்புடன் வேண்டுகோள் வைத்திருக்கிறார் இயக்குநர் சீனு ராமசாமி. அதேவேளை, ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சே, விஜய் சேதுபதிக்கு ட்விட்டரில் வாழ்த்துத் தெரிவித்திருப்பது, தமிழ் உணர்வாளர்கள் மத்தியில் மேலும் கொந்தளிப்பை உண்டாக்கியிருக்கிறது.

இந்தநிலையில், '800' படத்தில் விஜய் சேதுபதி நடிக்கக் கூடாது என்ற கருத்தை ஆரம்பத்திலிருந்தே வலுவாக முன் வைத்துக் கொண்டிருந்தவர்களுள் முக்கியமானவர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் வன்னிஅரசு. தற்போது மீண்டும் இந்தப் படம் குறித்த செய்திகளை வெளியானதை அடுத்து வன்னிஅரசைத் தொடர்பு கொண்டு பேசினோம்.

``இனப்படுகொலை குற்றவாளி ராஜபக்சே. அரை நூற்றாண்டுக்கு மேலாகத் தமிழர்களின் உரிமைகளுக்காக விடுதலைப் புலிகளும் பொதுமக்களும் இணைந்து போராடினார்கள். ஒட்டு மொத்தமாகச் சிங்கள, பௌத்த பேரினவாதமானது தமிழர்களின் உரிமைகளைப் பறித்துக் கொண்டு, சொந்த மண்ணிலே அவர்களை நான்காம் தரக் குடிமக்களாக மாற்றியது. அவர்களை எதிர்த்துப் போராடிய விடுதலைப் புலிகளையும் மக்களையும் கொன்று குவித்தது ராஜபக்சே அரசு.

2009-ம் ஆண்டு ஈழத் தமிழர்களின் இனப்படுகொலை நிகழ்த்தப்பட்ட முள்ளி வாய்க்கால் நாளன்று, `இன்றைக்குத்தான் நான் மகிழ்ச்சியாகத் தூங்குவேன். இதுதான் என்னுடைய மகிழ்ச்சியான நாள்' என்று பேசியவர் முத்தையா முரளிதரன். `ராஜபக்‌ஷே ஒரு நெல்சன் மண்டேலா' என்று சொல்லி நெல்சன் மண்டேலாவைக் கொச்சைப்படுத்தியவர் முத்தையா முரளிதரன். காணாமல் ஆக்கப்பட்டோருக்காக அமைப்புகள் தொடங்கப்பட்டு இன்றைக்கும் அவர்களுக்காகப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். அப்படிப் போராடுபவர்களைப் பார்த்து `நாடகமாடுகிறார்கள்' என்று சொன்னவர் முத்தையா முரளிதரன். ராஜபக்‌ஷே-வின் மகன் நமல் ராஜபக்‌ஷேவும் கோத்தபய ராஜபக்‌ஷேவும் `எல்லோரும் முரளிதரன் போல இருந்துவிட்டால் இங்கே இனப் பிரச்னையே இருக்காது' என்று சொல்கிறார்கள். இனத் துரோகத்தைச் செய்த முரளிதரனை `தமிழர்' என்கிற அடையாளத்தை மட்டும் வைத்துக் கொண்டு, சிங்கள, பௌத்த பேரினவாதம் அவரைத் தூக்கிப் பிடிக்கிறது. ஆனால், லண்டனில் ஒருமுறை தமிழில் பேசுங்கள் என்று சொன்னதற்கு, `எனக்குத் தமிழ் தெரியாது' என்று சொல்லிவிட்டுப் போனவர் அவர்.

வன்னியரசு

 

வன்னியரசு

 

ஜெகன் மோகன் Vs. நீதிபதி: `100 திட்டங்களுக்கு எதிரான உத்தரவுகள்' - 8 பக்கக் கடிதப் பின்னணி!

இனத் துரோகியான முரளிதரனின் கதாபாத்திரத்தில், தமிழ் மக்களால் பெரிதும் நேசிக்கப்படும், மிகச் சிறந்த நடிகரான விஜய் சேதுபதி நடிக்கக் கூடாது என்பதுதான் எங்கள் கோரிக்கை. இங்கு நடக்கும் சாதி ஆணவக் கொலைகளுக்கு எதிராகவும் தமிழர்களின் உரிமைகளுக்காகவும் குரல் கொடுத்தவர் விஜய் சேதுபதி. தமிழர்களின் அடையாளங்களைப் பாதுகாக்க வேண்டும் என்கிற கருத்திலும் உறுதியாக இருப்பவர் விஜய் சேதுபதி. அப்படித் தமிழ்ப் பற்றாளரான விஜய் சேதுபதி அவருக்குச் சற்றும் பொருத்தமில்லாத கதாபாத்திரத்தில் நடிப்பது வேதனையையும் வலியையும் ஏற்படுத்துகிறது. முத்தையா முரளிதரன் ஒரு இனத் துரோகி, விஜய் சேதுபதி ஒரு இனப் பற்றாளர். எனவே, அவர் முரளிதரன் கதாபாத்திரத்தில் நடிப்பது ஏற்புடையதல்ல.

விஜய் சேதுபதி, முரளிதரன் கதாபாத்திரத்தில் நடிப்பதென்பது இன துரோகத்துக்கு ஆதரவாக, உறுதுணையாக இருக்கக்கூடும் என்பதனாலும் அவர்மீது உள்ள அக்கறையினாலும்தான் நாங்கள் இந்தப் படத்தில் அவர் நடிக்கக் கூடாது என்கிற கோரிக்கையை வைக்கிறோம். அதுமட்டுமல்லாமல் இந்தப் படம் வெளியாவதன் மூலம், இனப் படுகொலை நடந்த ஒரு மண்ணில், `இப்படிப்பட்ட தமிழரை நாங்கள் அடையாளப்படுத்தியுள்ளோம்' என்று இனப்படுகொலையில் ஈடுபட்டவர்கள் தங்களுக்கான பரப்புரையாக இதனை மாற்றிக் கொள்வார்கள். அவர்களின் பரப்புரைக்கு விஜய் சேதுபதி ஆதரவாக இருக்கிறாரா என்பதுதான் எங்கள் கேள்வி.

`விஜய் சேதுபதியை எச்சரிக்கிறோம்' என்றெல்லாம் நாங்கள் சொல்லவில்லை. சகோதரர் விஜய் சேதுபதியிடம், `இந்தப் படத்திலிருந்து விலகிவிடுங்கள்' என்று அன்பான வேண்டுகோளைத்தான் முன் வைக்கிறோம். இது வி.சி.க-வின் கோரிக்கை மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழர்களின் கோரிக்கை. வெளிநாடுகளில் உள்ள தமிழர்கள்கூட இது தொடர்பாக என்னிடம் பேசினார்கள். அவர்களின் கோரிக்கையும் இதுவாகத்தான் உள்ளது. ஒருவேளை இந்தப் படம் வெளியானால், அதனை வெளிநாடுகளில் நாங்கள் திரையிடமாட்டோம் என்றுகூடக் கூறினார்கள். தமிழ் மக்களின் உணர்வுகளையும் வலியையும் புரிந்துகொண்டு, விஜய் சேதுபதி எங்கள் கோரிக்கைக்குச் செவி சாய்ப்பார் என நம்புகிறோம்'' என்கிறார் வன்னிஅரசு.

விஜய் சேதுபதி

 

விஜய் சேதுபதி

 

இது குறித்து `800' படத்தின் இயக்குநர் தரப்பிடம் பேசினோம், ``சர்ச்சை நோக்குடன் விஜய் சேதுபதி எந்த படத்திலும் நடித்ததில்லை. நடிக்கவும் மாட்டார். இந்த படமும் அப்படியே. படம் வெளிவந்தால் அனைத்து கேள்விகளுக்கும் பதில் கிடைத்துவிடும்'' என்று சுருக்கமாக முடித்துக் கொண்டனர்.

https://www.vikatan.com/social-affairs/controversy/controversies-on-vijay-sethupathi-acting-in-muthaiah-muralitharans-biopic-flim-800

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, பெருமாள் said:

சீமான் இந்த விடயத்தில் அமைதிகாக்கிறார் என்று அதை நக்கலடித்து மீம்ஸ்கள் வந்தவண்ணம் உள்ளன அது உங்களுக்கு தெரியுமா ?

இதனால் இலங்கை தமிழ் மக்களும் இப்படத்திற்கு பெரிய எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.https://www.cineulagam.com/actors/06/185913

கவனியுங்கள் தமிழக ஊடகம் ஒன்று சொல்லும் விதத்தை .

நாங்கள் எதோ சொல்லித்தான் அங்கு எதிப்பு நடைபெறுவது போல் உங்கள் கதை சும்மா ஏதவாது எதிர்ப்பு கருத்து போடணும் என்பதுக்காக நிலவரம் தெரியாமல் எழுத வேண்டாம் .

அங்காலை  மீனவ சங்கங்களும் ஒன்று கூடி எதிர்ப்பில் நிக்கின்றன .

அது தான் முதல் கருத்திலேயே சுட்டிக்காட்டி விட்டேனே பெருமாள்? 

"கொலைஞன் ஹிற்லரிடமிருந்து கூட நல்லதை எடுப்போம், ஆரஞ்சுப் பழத்தை பிழிந்து சாறெடுத்துக் குடிப்போம்!" என்ற சீமான் அவர்கள் எப்படி பகிரங்கமாக எதிர்ப்பது? 

எனவே கள்ள மௌனம் தான் அவரைப் பொறுத்த வரை நல்ல தெரிவு, ஆனா தம்பிகள் அப்படி இல்லையே? 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Justin said:

அது தான் முதல் கருத்திலேயே சுட்டிக்காட்டி விட்டேனே பெருமாள்? 

"கொலைஞன் ஹிற்லரிடமிருந்து கூட நல்லதை எடுப்போம், ஆரஞ்சுப் பழத்தை பிழிந்து சாறெடுத்துக் குடிப்போம்!" என்ற சீமான் அவர்கள் எப்படி பகிரங்கமாக எதிர்ப்பது? 

எனவே கள்ள மௌனம் தான் அவரைப் பொறுத்த வரை நல்ல தெரிவு, ஆனா தம்பிகள் அப்படி இல்லையே? 

ஏன் திரியை வலிந்து சீமான் மீது கொண்டு போகிறீர்கள் கள விதி இடம் கொடுக்குதா ? பதில் சொல்லுங்க ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 minutes ago, Justin said:

அது தான் முதல் கருத்திலேயே சுட்டிக்காட்டி விட்டேனே பெருமாள்? 

"கொலைஞன் ஹிற்லரிடமிருந்து கூட நல்லதை எடுப்போம், ஆரஞ்சுப் பழத்தை பிழிந்து சாறெடுத்துக் குடிப்போம்!" என்ற சீமான் அவர்கள் எப்படி பகிரங்கமாக எதிர்ப்பது? 

எனவே கள்ள மௌனம் தான் அவரைப் பொறுத்த வரை நல்ல தெரிவு, ஆனா தம்பிகள் அப்படி இல்லையே? 

இங்கு சீமான் பற்றி எதுவும் பேசப்படவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
Just now, பெருமாள் said:

ஏன் திரியை வலிந்து சீமான் மீது கொண்டு போகிறீர்கள் கள விதி இடம் கொடுக்குதா ? பதில் சொல்லுங்க ?

உங்கள் களவிதி பற்றிய கரிசனையை மெச்சினோம்!

நான் பதில் தந்த உங்கள் ஒரிஜினல் கருத்தில் "சீமான்" இல்லையோ?🤔

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முத்தையா முரளிதரனின் பழைய வரலாறு தெரியாதவர்கள் மட்டும் வாசிக்க காண.....

அரசியலில் பிரவேசிக்க முயற்சிக்கும் முரளிதரன் : காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் விசனம்

சிறிலங்கா கிறிக்கட் அணியின் முன்னாள் நட்சந்திர சுழல்பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரன் அண்மையில் வெளியிட்டிருந்த கருத்துக்கள் மிகவும் கீழ்தரமானவை என தெரிவித்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் கிளிநொக்கி மாவட்ட சங்கம் கடும்ஆதிரம் வெளியிட்டிருக்கின்றது.

கொழும்பில் தற்போது ஏற்படுத்தப்பட்டிருக்கும் குழப்பமான அரசியல் சூழ்நிலையை பயன்படுத்தி நேரடி அரசியலில் பிரவேசிக்கும் எண்ணத்திலோ அல்லது அரசாங்கத்திடம் சன்மானம் பெறும் எண்ணத்திலோ முத்தையா முரளிதரன் இவ்வாறான கருத்தை கூறியிருக்கலாம் என்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர் சங்கம் கேள்வி

முத்தையா முரளிதரனின் கருத்தினால் மன உழைச்சலுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கும் கிளிநொச்சியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் இனிவரும் காலங்களிலாவது முரளிதரன் ஒரு தமிழனாக சிந்திக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

பி.பி.சி க்கு வழங்கியிருந்த செவ்வியில் கருத்து வெளியிட்டிருந்த நட்சத்திர சுழல் பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரன் வடக்கின் அரசியல்வாதிகள் உரிமைகள் மற்றும் ஜனநாயகம் தொடர்பில் பேசுகின்ற போதிலும் மக்களின் அடிப்படை பிரச்சினைகள் குறித்து கரிசனை கொள்வதில்லை என்று குற்றம் சுமத்தியிருந்தார்.

மக்கள் தமது பிரதிநிதிகளை நாடாளுமன்றம் அனுப்புவது அடிப்படை பிரச்சினைகளை தீர்ப்பதற்கே அன்றி ஜனநாயகத்தை நிலைநிறுத்துவதற்கு அல்லவென்றும் முரளிதரன் கூறியிருந்தார்.

இந்நிலையில் முத்தையா முரளிதரனின் கருத்திற்கு தமிழ் மக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கண்டனம் வெளியிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் தமது உறவுகளை கடந்த 9 வருடங்களாக தொலைத்து நடு வீதியில் நிர்கதிக்குள்ளாகியுள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களும் தமது எதிர்ப்பினை பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரனிற்கு வெளிப்படுத்தியுள்ளனர்.

கோடிக்கணத்தில் பணம் சம்பாதிக்கும் முத்தையா முரளிதரன் யுத்ததினால் பாதிக்கப்பட்ட வடகிழக்கு தமிழர்களுக்கு என்ன உதவிகளை செய்தார் எனவும் கேள்விகளை எழுப்பினார்கள்.

முத்தையா முரளிதன் தமிழ் மக்கள் தொடர்பாக வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என வவுனியாவில் 625 நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் வவுனியா காணாமல் ஆக்கப்பட்டோர் சங்க தலைவி கா. ஜெயவனிதா வலியுறுத்தியுள்ளார்.

உலக தமிழர்களுக்கே அபகீர்த்தியை ஏற்படுத்திய முதலாவது தமிழன் முத்தையா முரளிதரன் என இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள முதியவர் ஒருவர் குறிப்பிட்டார்.

அதேவேளை, தமிழர்கள் கண்ட வலிகளை உணராதவன் தமிழனல்ல என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்தார்.

 

 

https://www.ibctamil.com/srilanka/80/108954

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.